Tuesday, April 26, 2005

ஓரியண்டல் பாஸ்தா!!!!!!

ஓரியண்டல் தெரியும், இத்தாலியின் பாஸ்த்தாவும் தெரியும்! இது என்னா ரெண்டும் சேர்த்து?

சொல்றேன், சொல்றேன்.

நம்ம வீட்டுலே எப்பப் பார்த்தாலும்,சோறு, சாம்பார், கறி, சப்பாத்தின்னு செய்யறது மகளுக்குப் பிடிக்கலையாம்!
இது ரொம்ப வருசத்துக்கு முன்னாலே நடந்தது. இப்ப இதே மகள், சப்பாத்தியானாலும் சரி, சோறானாலும் சரி,
அவ்வளவா முணுமுணுக்காம திங்கறது வேற விஷயம் (வாரம் ஒரு நாள் அம்மா கை பக்குவம்ன்றதாலேயோ?)சைனீஸ் சாப்பாடு வீட்டுலே செஞ்சு தருவேன். சில சமயம் இத்தாலியன் பாஸ்த்தா! எனக்குத்தான் எந்த ரெஸிபியையும்
ஒழுங்காக் கடைப்பிடிக்கணுமுன்னா தலைவலி வந்துருமே! அப்படி ஒரு நா செஞ்சதுதான் இது. இது என்னான்னு
மகள் கேட்டப்ப, ஜம்பமா 'ஓரியண்டல் பாஸ்த்தா'ன்னு சொல்லிவச்சேன். நல்லா இருக்குன்னு பேர் வந்துட்டதாலே
இது நம்ம வீட்டுலே நிலைச்சிடுச்சு!

இதை நான் வெஜ் சேர்த்தும், சேர்க்காமலும் செய்யலாம்ன்றது இன்னும் விசேஷம்!

சரி. செய்முறையைப் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

பாஸ்த்தா 500 கிராம் பேக்.( எந்த வித டிஸைனா இருந்தாலும் ஓக்கே! )

சிக்கன் போன்லெஸ் & ஸ்கின்லெஸ் 500 கிராம் ( சின்னத்துண்டுகளா ஒரு அங்குல க்யூப் சைஸுலே இருக்கணும்)

மிக்ஸட் வெஜிடபுள் 500 கிராம் பேக்.( ஃப்ரோஸென் வெஜி இஸ் ஒக்கே)

பிரியாணி மசாலா/ இறைச்சி மசாலா 2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைச்ச விழுது 1 டேபிள் ஸ்பூன்( துளசி ஸ்டைல்ன்னா ஃப்ரீஸரில்,
ஏற்கெனவே அரைச்சு ஐஸ் க்யூப் செஞ்சு வச்சதுலே ஒரு க்யூப்)

உப்பு தேவைக்கு

ஆனியன் சூப் மிக்ஸ் 2 டேபிள் ஸ்பூன்( இது இல்லைன்னா ஒரு பெரிய வெங்காயம், பொடியா நறுக்கியது)

டொமேட்டோ பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்( இல்லைன்னா 2 தக்காளி நறுக்கியது அல்லது கொஞ்சம் கெச்சப்/சாஸ்
கூடப் போதும்)

சோயா சாஸ் ஒரு டீஸ்பூன் ( இஷ்டம் இருந்தால்)

எண்ணெய்/ மார்ஜரீன்/ நெய் + கொஞ்சம் எண்ணெய் இப்படி ஏதாவது 4 டேபிள் ஸ்பூன்.

கொத்தமல்லி இலை கொஞ்சம். (ச்சும்மா அலங்கரிக்கவும், வாசனைக்கும்!)

எல்லாம் ரெடியா? சரி. சமைக்க ஆரம்பிக்கலாம்!

பாஸ்த்தாவை, ஒரு பெரிய பாத்திரத்திலே தண்ணியைக் கொதிக்க வச்சு அதுலே போட்டு வேகவையுங்க. கொஞ்சம்
எண்ணெயும்(ச்சும்மா ஒரு டீஸ்பூன்) கொஞ்சம் உப்பும் சேர்த்து வேகவிட்டு எடுத்து வடிகட்டி வச்சுகுங்க. இது எப்படின்னு
அந்த பேக்கெட்டுலேயே இருக்கும். அதையே பார்த்துச் செய்யலாம்! ரெண்டு மூணு பர்னர் இருக்கறவுங்க ஒரு அடுப்புலே
இதை வேகவச்சுக்கிட்டே அடுத்த அடுப்பிலே மத்ததை தயாரிச்சா, ச்சும்மா ஒரு அரைமணியிலேயே செஞ்சுரலாம்!

இப்ப இன்னொரு அடுப்பிலே ஒரு பெரிய கடாய்/ ஃப்ரையிங் பேன் வச்சுச் சூடானதும் எண்ணெய்/ மார்ஜரீன்/ நெய் + கொஞ்சம்
எண்ணெய் இப்படி ஏதாவது ஊத்திக் காய்ஞ்சதும் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைச்ச விழுதும், ச்சிக்கன்
துண்டுங்களையும் போட்டு வதக்கணும். கூடவே மஞ்சப் பொடியை சேர்க்கணும்( இல்லைன்னா ஒரு நீச்ச வாசனை
இருக்குமே!) வதங்கறப்பவே முக்காவாசி வெந்துரும். நிறம் மாறி கொஞ்சம் வெள்ளையா வரும். இப்ப பிரியாணி
மசாலாவைச் சேர்த்து இன்னும் கொஞ்சம் வதக்கணும். வெங்காயம் நறுக்கி வச்சவுங்க அதையும் போட்டு வதக்கணும்.
ஆச்சா, இப்ப மிக்ஸட் வெஜிடபுள்ஸை சேர்த்து வதக்கணும். எல்லாம் ஒரே வதக்கல்தான்:-)

தண்ணி சேர்க்க வேணாம். ச்சிக்கன்லேயும், ஃப்ரோஸன் வெஜிலேயும் இருக்கற தண்ணியே போதும். தக்காளிப்பழம்
நறுக்கி வச்சவுங்க அதையும் போட்டுடுங்க. மத்தவங்க கொஞ்சம் நேரம் வதக்கிக்கிட்டே இருங்க. உப்பும் சேர்த்துருங்க.
அடுப்பு நிதானமா எரியட்டும். எல்லாம் வெந்துருச்சுன்னா, டொமேட்டொ சாஸ்/ சோயா சாஸ் சேர்க்கறவங்க அதையும்
போட்டுக் கிளறுங்க. ஆனியன் சூப் மிக்ஸை ரெண்டு டேபிள் ஸ்பூன் தண்ணியிலே கலக்கி ஊத்துங்க.

ரெடியா வெந்து இருக்கற பாஸ்த்தாவை ( சைடு பை சைடா செய்யறவங்களுக்கு: இப்ப பாஸ்த்தா சரியான பதமா
வெந்து இருக்கும். தண்ணியை வடிச்சுடுங்க) இதுலே சேர்த்து மறுபடி கொஞ்ச நேரம் ஒரு நாலைஞ்சு நிமிஷம்
வதக்குனாப் போதும்!

இப்பக் கொத்துமல்லித்தழையை நறுக்கித் தூவுங்க. அவ்வளவுதான். விருப்பம் இருக்கறவங்க ரெண்டு டேபிள் ஸ்பூன்
நெய்/ மார்ஜரீன் மேலாகச் சேர்த்துக்குங்க. ஒரு பளபளப்பாவும், ஒண்ணோடு ஒண்ணு ஒட்டாமயும் இருக்கும்.
ஹெல்த் கான்ஷியஸ்ன்னா இது வேணாம்!

செவிக்குணவு இல்லாதபோது சாப்புடுங்கன்னு வள்ளுவரே சொல்லிட்டாரே!

சாப்பிட்டுப் பார்த்துட்டு ஒரு வரி எழுதுங்க! லெஃப்ட் ஓவரை ஸ்கூல்/ஆஃபீஸ் லஞ்சாவும் கொண்டு போலாம். மறக்காம
ஒரு ஃபோர்க்/ ஸ்பூன் கொண்டு போங்க!

பி.கு: வெஜிடேரியன்ங்க ச்சிக்கனைச் சேர்க்கவேணாம்:-)))))))))

4 comments:

said...

சூப்பரான பியூசன் பதார்த்தம்ன்னு சொல்லுங்க. விட்டா மீ பொங்கல், இகான்பிளிஸ் சூசி, இட்லி லக்சா, கெய்தியோ உப்புமா எல்லாம் தயாரிப்பீங்க போல.

said...

அட! இது நல்ல ஐடியாவா இருக்கே!

இட்லி லக்சா செஞ்சுரணும்!

said...

//பி.கு: வெஜிடேரியன்ங்க ச்சிக்கனைச் சேர்க்கவேணாம்:-)))))))))//

குசும்பு ??

துளசி உங்கள் ஈ-மெயில் விலாசம் bounce ஆகுதே !!
மாறிவிட்டதா?

said...

//

பி.கு: வெஜிடேரியன்ங்க ச்சிக்கனைச் சேர்க்கவேணாம்:-)))))))))
//

அப்பாடா மொதல்ல இத கவனிக்கலை

இப்பதான் மூச்சு வந்தது.