கோட்டையிலிருந்து கார்பார்க் வரும்போது செல்லம் ஒன்னு எந்தபயமும் இல்லாம நடு ரோடுலே நிதானமா நடந்து போகுது ! இங்கே(யும்) இதுக்கு தான் ஒரு சாமின்னு தெரிஞ்சுருக்கும்போல ! கொஞ்ச தூரத்துலே யாரோ பூனைக்கான பிஸ்கெட்ஸ் வச்சுட்டுப் போயிருக்காங்க.! புண்ணியவான் நல்லா இருக்கட்டும் !
இப்பவே மணி ஒன்னரை தாண்டியாச்சு. லஞ்சு முடிச்சுக்கலாமான்னு ரெய்னா கேட்டாங்க. இங்கே ஒரு 'Sea Food Restaurant' ரொம்ப நல்லா இருக்குமாம். ஆனா... உங்களுக்கு வெஜ் கிடைக்குமான்னு தெரியலை. வேற இடம் பார்க்கலாமுன்னு சொன்னாங்க.
"எங்களுக்குப் பிரச்சனை ஒன்னும் இல்லை. நீங்க உங்க விருப்பப்படியே Sea Food போங்க. எப்படியும் எனக்கு See Food தானே?"
ரெஸ்ட்டாரண்டுக்குப் போன் போட்டுக் கேட்டாங்க. வெஜ் செஞ்சு தர்றதாச் சொன்னாங்களாம். ' பாஸ்த்தா பரவாயில்லையா'ன்னாங்க.
"தாராளம். "
அங்கேயே போகலாமுன்னு முடிவாச்சு.
கோட்டையில் இருந்து ரொம்பவே பக்கம். ஒரு ஒன்னரை கிமீ தூரம்தான்.
வளாகத்துக்குள் நுழையும்போதே 'சமாதி' இருக்கு :-)
இடம் கிடைக்கும்வரைக் காத்திருக்கணுமாம். உக்கார்ந்த அடுத்த நிமிட், டேபிள் ரெடின்னு ஒருத்தர் வந்து கூப்புட்டுப்போனார்.
அட்டகாசமான வியூ ! இதையும் கண்ணால் தின்னால் ஆச்சு ! இப்போ நாம் பார்த்துட்டு வந்த கோட்டை, செல்லம்போல் தெரியுது !
ரெய்னா போய் (நமக்கு) என்ன வேணுங்கறதைச் சொல்லிட்டு வந்தாங்க.
மேசையில் எலுமிச்சம்பழம் 'டூட்டு' போட்டுக்கிட்டு இருந்துச்சு. ஐடியா வெரி குட் ! பிழியும்போது கொட்டை சாப்பாட்டில் விழாது !
(மேலே : சுட்ட படம். நன்றி )
ரெஸ்ட் ரூம் தேடிப்போனப்ப, சமைக்க வச்சுருந்த கவுன்ட்டரைப் பார்த்தேன். நல்லவேளை ஒன்னும் 'நெளியலை'...... சீனா மாதிரி அவ்ளோ மோசம் இல்லை.... அங்கே தேளும் பாம்புமா.... ஐயோ...
ஊறுகாய் மாதிரி வினிகரில் போட்ட வெள்ளரிக்காய், பீட்ரூட், ஸாலட், தயிர், ஹம்மஸ், கூடையில் 'அட்டை' ரொட்டி எல்லாம் முதலில் வந்துச்சு.
அப்புறம் நம்ம ரெய்னா, இஸ்லாம் ரெண்டு பேருக்கும் ஃபிஷ் அன்ட் ப்ரௌண் ரைஸ், நமக்கு பாஸ்த்தா அண்ட் சிப்ஸ்.
வேகவச்ச கேரட் அண்ட் ப்ரோக்கொலி. சேம்பு இலைக்குள் கேபேஜ் வச்சுச் சுருட்டி ஆவியில் வச்செடுத்த சமாச்சாரம் ஒன்னு.... Dolma Kadhabaனு பெயராம். திராக்ஷை இலையில் உள்ளே சேமியா, வெங்காயம், தக்காளி எல்லாம் வச்சு உருட்டுவாங்களாம். வெஜ் ஸ்பெஷல் !!! எல்லாத்துலேயும் ஒரு சேமியா..... சொல்ல மறந்துட்டேனே.... நம்ம ஸோமாஸ் மாதிரி ஒரு இனிப்பு வேற ! உள்ளே என்ன இருந்ததுன்னு தெரியலை..... தின்னு பார்க்கலை.... கேட்டோ !
நம்ம கூட வந்து உக்காரத் தயங்குன இஸ்லாமை, இங்கேதான் உக்காரணுமுன்னு கண்டிப்பாச் சொன்னதும் உக்கார்ந்தார். மரியாதை எல்லாம் மனசுலே இருந்தால் போதாதா ?
சாப்பாட்டை முடிக்கும்போது ரெண்டரை மணி போல ஆகிருச்சு. கிளம்பி இன்னொரு சமாச்சாரம் பார்க்கப்போனோம். ஒரு அஞ்சரை கிமீதூரம்.
ரெய்னா டிக்கெட் வாங்கப் போயிருந்தாங்க. நான் வளாகத்தைக் க்ளிக்கிக்கிட்டு இருந்தேன்.
கல்லூரி மாணவிகள் போல் ஒரு இளம்பெண்கள் கூட்டமா இருந்தாங்க. அதுலே ஒரு பெண், என்னிடம் வந்து 'இண்டியாவா?'ன்னு கேட்டுட்டு 'ஆமாம்'னதும் 'ஐ லவ் யூ'ன்னு சொல்லிக் கை குலுக்கிட்டுப் போனாங்க......!!
ஹிந்தி சினிமா நிறைய பாப்பாங்களாம்.....
தொடரும்..... :-)

ஃபிஷ் மார்கெட்னு ஒரு கட்டடம் அடுத்தாப்லே இருக்கு. இந்தாண்டை க்ராண்ட் கஃபே ! அந்தாண்டை முதல் மாடியில் சிக்கன் டிக்கா. ரெண்டாவது மாடியில் நமக்கான ஃபிஷ் மார்கெட் ரெஸ்ட்டாரண்ட். பெயருக்கேத்தபடி ஃபிஷ் அன்ட் சிப்ஸ் இங்கே ஃபேமஸ்! அப்புறம் நிறைய கடலுயிர்கள் வச்சுருக்காங்க. நீங்க என்ன வேணுமுன்னு சொன்னால், ஆக்கித் தருவாங்க.
இடம் கிடைக்கும்வரைக் காத்திருக்கணுமாம். உக்கார்ந்த அடுத்த நிமிட், டேபிள் ரெடின்னு ஒருத்தர் வந்து கூப்புட்டுப்போனார்.
அட்டகாசமான வியூ ! இதையும் கண்ணால் தின்னால் ஆச்சு ! இப்போ நாம் பார்த்துட்டு வந்த கோட்டை, செல்லம்போல் தெரியுது !
ரெய்னா போய் (நமக்கு) என்ன வேணுங்கறதைச் சொல்லிட்டு வந்தாங்க.
மேசையில் எலுமிச்சம்பழம் 'டூட்டு' போட்டுக்கிட்டு இருந்துச்சு. ஐடியா வெரி குட் ! பிழியும்போது கொட்டை சாப்பாட்டில் விழாது !
(மேலே : சுட்ட படம். நன்றி )
ரெஸ்ட் ரூம் தேடிப்போனப்ப, சமைக்க வச்சுருந்த கவுன்ட்டரைப் பார்த்தேன். நல்லவேளை ஒன்னும் 'நெளியலை'...... சீனா மாதிரி அவ்ளோ மோசம் இல்லை.... அங்கே தேளும் பாம்புமா.... ஐயோ...
ஊறுகாய் மாதிரி வினிகரில் போட்ட வெள்ளரிக்காய், பீட்ரூட், ஸாலட், தயிர், ஹம்மஸ், கூடையில் 'அட்டை' ரொட்டி எல்லாம் முதலில் வந்துச்சு.
அப்புறம் நம்ம ரெய்னா, இஸ்லாம் ரெண்டு பேருக்கும் ஃபிஷ் அன்ட் ப்ரௌண் ரைஸ், நமக்கு பாஸ்த்தா அண்ட் சிப்ஸ்.
வேகவச்ச கேரட் அண்ட் ப்ரோக்கொலி. சேம்பு இலைக்குள் கேபேஜ் வச்சுச் சுருட்டி ஆவியில் வச்செடுத்த சமாச்சாரம் ஒன்னு.... Dolma Kadhabaனு பெயராம். திராக்ஷை இலையில் உள்ளே சேமியா, வெங்காயம், தக்காளி எல்லாம் வச்சு உருட்டுவாங்களாம். வெஜ் ஸ்பெஷல் !!! எல்லாத்துலேயும் ஒரு சேமியா..... சொல்ல மறந்துட்டேனே.... நம்ம ஸோமாஸ் மாதிரி ஒரு இனிப்பு வேற ! உள்ளே என்ன இருந்ததுன்னு தெரியலை..... தின்னு பார்க்கலை.... கேட்டோ !
நம்ம கூட வந்து உக்காரத் தயங்குன இஸ்லாமை, இங்கேதான் உக்காரணுமுன்னு கண்டிப்பாச் சொன்னதும் உக்கார்ந்தார். மரியாதை எல்லாம் மனசுலே இருந்தால் போதாதா ?
சாப்பாட்டை முடிக்கும்போது ரெண்டரை மணி போல ஆகிருச்சு. கிளம்பி இன்னொரு சமாச்சாரம் பார்க்கப்போனோம். ஒரு அஞ்சரை கிமீதூரம்.
ரெய்னா டிக்கெட் வாங்கப் போயிருந்தாங்க. நான் வளாகத்தைக் க்ளிக்கிக்கிட்டு இருந்தேன்.
கல்லூரி மாணவிகள் போல் ஒரு இளம்பெண்கள் கூட்டமா இருந்தாங்க. அதுலே ஒரு பெண், என்னிடம் வந்து 'இண்டியாவா?'ன்னு கேட்டுட்டு 'ஆமாம்'னதும் 'ஐ லவ் யூ'ன்னு சொல்லிக் கை குலுக்கிட்டுப் போனாங்க......!!
ஹிந்தி சினிமா நிறைய பாப்பாங்களாம்.....
தொடரும்..... :-)
10 comments:
இளம் பெண் ஐ லவ் யூ சொன்னது உங்களிடமா கோபால் சாரிடமா?
உணவுப் பிரச்சனை பெரும் பிரச்சனை போல. ஜூஸ் ஏதும் கிடைக்கலையா? இல்லை சாதம் தயிர்
வெஜி என்றாலே உணவு பிரச்சினை :)
கடைசிப் படம் சிறு வள்ளம் அழகாக இருக்கிறது.
அருமை நன்றி,
வெஜிடேரியன் என்றால் பல இடங்களில் பிரச்சனை தான். வடகிழக்கு மாநிலங்கள் போனபோது நானும் சில சமயங்களில் கண்ணால் மட்டுமே சாப்பிட்டேன்!
ஹோட்டலில் இருந்து வ்யூ செமயா இருக்கு!
ஐ லவ் யூ! :) பாலிவுட் சினிமா மோகம்! :)
மியாவ் சத்தம் கேட்டு வந்தேன்க்கா :) புஸுபுஸுன்னு அழகா இருக்கு .
நீங்க சார் ரஜ்ஜூ அனைவரும் நலம்தானே .
வாங்க நெல்லைத்தமிழன்,
கோபால் சார்..... இன்னொரு பக்கத்தில் 'படம்' எடுத்துக்கிட்டு இருந்தார் னு நினைக்கிறேன் :-)
தயிருமே அவ்வளவு பாதுகாப்பான சமாச்சாரம் இல்லை..... அதுவும் பயணங்களில் கவனமா இருக்க வேணும் இல்லையோ.....
சூடா எதாவது சாப்பிடுவதுதான் நல்லது......
வாங்க மாதேவி,
ரொம்ப க்யூட்டா ரெண்டு கொம்பு வச்சுக்கிட்டு இருக்குல்லே !!!!
வாங்க வெங்கட் நாகராஜ்,
பயணத்துலே இந்தக் கஷ்டத்தைப் பொறுத்துக்கறதுதான் நமக்கு நல்லது..... எதையாவது தின்னு வச்சு.... அதுவே ஒரு கஷ்டமாப் போயிருச்சுன்னா...... கண்ணால் தின்னு, வயித்தை இறுக்கக் கட்டிக்கணும் :-)
இங்கேயுமே பாலிவுட் என்ற பதம் எல்லா வெள்ளைக்காரர்களுக்கும் அத்துபடி ஆகிருச்சு. முந்தி எல்லாம் நிறைய படப்பிடிப்பு நடக்கும். நிலநடுக்கத்தில் நகரம் அழிஞ்சு போனதுலே அதுவும் நின்னு போச்சு.
பாலிவுட் டான்ஸ் ஸ்டுடியோன்னு நண்பரின் மகன் ஆரம்பிச்சு நடத்தும் வகுப்புகளில் ஏகப்பட்ட அம்மிணிகள் ! முக்கால்வாசிப்பேர் கொஞ்சம் வயதானவர்கள் ! உடற்பயிற்சின்னு வர்றாங்களாம் !
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க ஏஞ்சல்,
அப்பப்பப் பூனைப்பதிவு போடப்போறேன் !!! உங்களை இங்கே வரவழைக்க வேற வழி தெரியலை :-)
எல்லோரும் நலமே..... லாக்டௌனில் இருக்கான் ரஜ்ஜூ :-)
வரவர சேட்டை அதிகமாப் போயிருக்கு !
விசாரிப்புக்கு நன்றிப்பா ! நீங்கள் எல்லாம் நலம்தானே ?
Post a Comment