இதிஹாப், அவருடைய டைரக்டருக்குப் ஃபோன் செஞ்சார். அவர் லைனில் வந்ததும் 'நம்மவர்' கய்ரோ திரும்ப வேற ஃப்ளைட் இருக்கான்னு விசாரிச்சதில், 'இருக்கு.... ஆனால் இல்லை'ன்னார் ! வேற ஏர்லைன்ஸ் இருக்கு. ஆனால் நம்ம டிக்கெட் போட்டுருக்கும் நைல் ஏர் இல்லை. வேற ஏர்லைன்ஸில் போகணுமுன்னா நாம் தனியா அதுக்கு டிக்கெட் வாங்கிக்கணும். கடைசி நிமிஷத்தில் கேக்கறதால் விலையும் கூடுதல். ரெண்டு பேருக்கு ஐநூறு யூ எஸ் வரை ஆகுதாம்.
என்ன செய்யலாம் ஏது செய்யலாமுன்னு யோசிச்ச 'நம்மவர்' பேசாம இங்கே லக்ஸரில் ஒரு ஹொட்டேல் ரூம் எடுத்துக்கிட்டு ஒரு அஞ்சாறு மணி நேரம் ஓய்வெடுத்துக்கலான்னு என்னாண்டை கேட்டார்.
அதுவுஞ்சரிதான். காலையில் மூணரைக்கு எழுந்தோம். இதுவரை ஒரே ஓட்டம்தான்....
டூர் டைரக்டர் அஹமத் மொஹமத் அஹமத், நம்ம கைட் இதிஹாப்பிடம் பேசி, ஒரு ஹொட்டேல் பெயரைச் சொல்லி நம்மை அங்கே கூட்டிப்போகச் சொன்னார். அவரும் அங்கே வந்து நம்மை சந்திப்பாராம்.
நாம் இப்போ நகரத்துக்குள் இருக்கும் கோவிலில்தானே இருக்கோம் என்பதால் இதிஹாப் கொண்டு போன இடம் அவ்ளோ தூரமில்லை. அஞ்சே நிமிட் . ஒரு கி மீ தூரத்துக்குக் கொஞ்சம் கூடுதல்.
எமிலியோ ஹொட்டேல். மூணரை நக்ஷத்திரமாம். அஹமத் மொஹம்மத் அஹமத் வந்துட்டார். உள்ளே போய் விசாரிச்சுக்கிட்டு வந்தார். அது என்னன்னா.... இந்த மாதிரி ஒரு பிரச்சனையை இவர் சந்திச்சதே இல்லையாம். எந்த மாதிரி ? ஒரு ஆறேழு மணி நேரத்துக்குத் தங்க ஓர் அறை வேணுங்கறதுதான்...
(ஏன் ? டே ரூம் எல்லாம் இருக்குதானே ? )
ஒரு நாளுக்கான வாடகை கொடுக்கணும். பரவாயில்லை..... ஆனால் அவருக்கு அது அதிகமுன்னு தோணி இருக்கு.... கொஞ்சம் பேரம் பேசினாரு போல..... கொஞ்சம் குறைச்சுக்கிட்டாங்க. அறையைப் பார்க்கலாமான்னு கேட்டுட்டு, நம்மவரும் அஹமதும் போய்ப் பார்த்துட்டு வந்தாங்க. செக்கின் ஆச்சு. ஃப்ரீ வைஃபை தரேன்னாங்க.
ஆஹா....
'ஏர்ப்போர்ட் போகும்வரை ரெஸ்ட் எடுத்துக்குங்க'ன்னு சொல்லிட்டு அவுங்கெல்லாம் போனாங்க. நமக்கான அறை நாலாவது மாடியில். நல்லவேளை லிஃப்ட் இருக்கு. ரொம்ப சுமாரான அறைதான். தொலையட்டும்.... ஒரு அஞ்சாறு மணி நேரத்துக்குத்தானே ..... அலங்காரத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை :-) ரெண்டு கட்டில்கள். ரொம்ப நல்லதாப் போச்சு.
ரெண்டு பாட்டில் தண்ணீர் மட்டும் வாங்கி வரச் சொல்லிட்டு, 'நம்மவர்' படுத்துத் தூங்க ஆரம்பிச்சார். நான் செல், கேமெரா பேட்டரி எல்லாம் சார்ஜரில் போட்டேன். வைஃபை இருக்கே.... அதை விடலாமோ? நிறையத் தண்ணீர் குடிச்சேன். .... தூக்கம் வரலைன்னு நினைச்சுக்கிட்டே இருந்த நான் எப்படித் தூங்கினேன்னே தெரியலை.
மூணு மணி நேரம் தூங்கி எழுந்ததும் கொஞ்சம் ஃப்ரெஷா இருந்தது உண்மை. பால்கனி இருந்தாலும் அங்கே போகும் கதவை அடைச்சு வச்சுருக்காங்க.
இப்படி எல்லாம் இருக்காம டூர் முடிஞ்சதும் கய்ரோ திரும்பி இருந்தால் நல்லா இருந்துருக்கும். இதுலே யாரைக்குத்தம் சொல்றதுன்னு தெரியலை.... முதலாவது தப்பு நம்ம மேலேதான். ஒவ்வொரு இடத்தையும் நின்னு நிதானமா (டூர் கைடுக்குக் கொதிப்பு வர்ற அளவுக்கு ) நேரஞ்செலவழிச்சுப் பார்த்துருக்கணும். அதென்னமோ எல்லா இடங்களுக்கும் போனோம், பார்த்தோம், ரசிச்சோம் என்ற அளவில் இருக்கோம்.
இங்கேன்னு இல்லை..... எல்லாப் பயணங்களிலும் இப்படித்தான். டூரில் போகும்போது அததுக்கு அவுங்க அலாட் செய்யும் நேரத்துக்குள் முடிச்சுட்டு வண்டிக்குத் திரும்பி வந்துருவோம். ஒரு நாள் கூட லேட்டாக, மத்தவங்களைக் காக்க வச்சுட்டு ஆடி அசைஞ்சு வந்ததே இல்லை.....
இப்படி நேரம் போக்கி இருந்தால் ஒரு எட்டு மணி போல ஒரு ரெஸ்ட்டாரண்டுக்குப் போய் சாப்பிட்டு முடிச்சு ஏர்ப்போர்ட்க்கு பத்துமணி வாக்கில் போயிருக்கலாம்.
இன்னும் வேறென்ன இடங்கள் பாக்கி இருக்குன்னு விசாரிச்சுட்டு அங்கெல்லாம் கூடப் போய் வந்துருக்கலாம்.
ஆனால் 'செட்' டூர்லே வர்றவங்க என்ன செய்வாங்க ? நமக்குமே ஐட்டிநரியில் இல்லாத இடங்கள் எவைன்னு தெரியாதில்லையா ?
ரெண்டாவது தப்புன்னா.... நம்ம Viator Tours கம்பெனியைச் சொல்லலாம். அவுங்களுக்கும் இந்த நைல் ஏர்லைன்ஸுக்கும் எதாவது ஒப்பந்தம் இருக்கலாம். நல்ல டிஸ்கவுண்ட்லே டிக்கெட்ஸ் கொடுக்கறாங்க போல ! எல்லாம் பிஸினஸ் தானே ? வேற ஏர்லைன்ஸ் டிக்கெட் கொடுத்துருக்கலாம்.... என்னவோ போங்க......
மூணாவதா... இந்த மூன் அண்ட் ரிவர் டூர்ஸ், இப்படி இடைப்பட்ட நேரங்களுக்கு வேறெதாவது பொழுது போக்கு ஏற்பாடு செஞ்சு இருக்கலாம். இப்பச் சொல்லி என்ன செய்யறது ? நமக்கும் இது ஒரு பாடம். அடுத்த முறை இப்படி டூர் கம்பெனியில் புக் பண்ணினால் இன்னும் கொஞ்சம் விலாவரியா விசாரிச்சுக்கணும்.
நம்மவரும் ஒரு எட்டு மணி போல தூங்கி எழுந்தார். பேக் பேக்கில் கைவசம் இருந்த சில சிறுதீனிகளை முடிச்சதும் கொஞ்சம் தெம்பு வந்தாப்ல..... ஒரு காஃபி இருந்தால் கொள்ளாம். ஆனாலும் இங்கே எல்லாம் நம்ப முடியாது..... வேணாம்....
கொஞ்ச நேரம் வலை மேயல் ஆச்சு. எட்டரை ஆகும்போது 'காருக்குச் சொல்லவா? கிளம்பிப்போய் எங்கியாவது சாப்பிட்டுப் போலாமா?' ..... மத்யானம் சாப்பிட்டது என் நினைவுக்கு வந்து இம்சை பண்ணது.
"அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஏர்ப்போர்ட் போனதும் அங்கே எதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம்"
"ஒரு ஒன்பதரைக்குக் கிளம்பலாம். டூர் டைரக்டருக்குச் சொல்லிருங்க"
அதே போல ஆச்சு. வந்துட்டோம்னு தகவல் வந்ததும் போய் செக்கவுட் ஆச்சு. இதிஹாபும், அஹமத் மொஹம்மத் அஹமதும் வரவேற்பில் காத்திருந்தாங்க. அங்கே இருந்த இன்னொரு குடும்பத்துப்பிள்ளைகள் (எல்லாம் மூணு நாலு வயசுதான்) என்னைப்பார்த்து முழிச்சாங்க. வேற்று நாட்டு மனுஷி. குழந்தைகள் கொள்ளை அழகு. அம்மாக்கள் எல்லாம் இண்டியன் சினிமா பார்ப்பாங்களாம். ரொம்பப்பிடிக்குமாம். ( என்னவோ நானே சினிமாவில் நடிக்கிறமாதிரிதான்...... வில்லி மாமியார் வேஷமோ ? )
இதிஹாப் நம்மகிட்டே சொல்லிட்டுக் கிளம்பிட்டார். அவருக்குக் கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தோம். டூர் டைரக்டருக்கு ஃபீட் பேக் வேணுமாம். உங்க மனசுக்குப்பிடிச்சுருந்ததா எங்க சர்வீஸ்னு பலமுறை கேட்டுக்கிட்டே இருந்தார். அவருக்கும் நல்லபடி எழுதிக் கொடுத்தாச்சு. கூடவே இந்த வெயிட்டிங் நேரத்துக்கு ஏதாவது செய்யச் சொல்லியும் எழுதினோம்.
'இதுவரை இப்படி ஒரு பிரச்சனை வந்ததே இல்லை. நாங்க வழக்கமா ஆறு மணிக்குக் கொண்டு போய் ஏர்ப்போர்ட்டில் விட்டுருவோம்'னு சொன்னார்.
ஒரு எட்டரை கிமீதூரம். இருவது நிமிட் . ஏர்ப்போர்ட் 2020 வருஷத்தை வரவேற்க ரெடியா இருக்கு. இன்னும் பத்துநாள்தான்!
டூர் டைரக்டர் கூடவே வந்து செக்கின் பண்ணி போர்டிங் பாஸ் வாங்கிக் கையில் கொடுத்துட்டு, அஞ்சு நிமிட் பேசிட்டுக் கிளம்பினார். நமக்கு ஏகப்பட்ட நேரம் இருக்கு. ச்சும்மா சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கோம்.
செஞ்சிலுவைச் சங்கம்னுதான் எப்பவும் பரிச்சயம். ரெட் க்ராஸ். அது இங்கே ரெட் க்ரஸன்ட் !!!
ஒரு டீக்கடையில் டீ ஆச்சு. ட்யூட்டி ஃப்ரீ கடைகளில் ஒன்னும் சுவாரஸ்யப்படலை. கடைகளில் யாருமே இல்லை....... பாவம்.... அங்கே வேலை பார்க்கிறவங்க......
ஒரு வழியா பதினொன்னே காலுக்கு போர்டிங். பஸ்ஸுலே கொண்டு போய் விட்டாங்க. நல்ல கூட்டம்..... ப்ளேன் ஃபுல் !
சொன்ன நேரத்துக்குப் பத்து நிமிட் கழிச்சுக் கிளம்பினாங்க. கீழே நக்ஷத்திரக்கூட்டம் எல்லா நகரங்களையும் போல !
ஈஜிப்ட்டில் கய்ரோவுக்கு அடுத்த ரெண்டாவது பெரிய நகரம் லக்ஸர்தான் !
இவ்ளோ பெரிய ஊரான்னு வியப்புதான். வேறெங்கிருந்தோ வரும் இன்ட்டர் நேஷனல் ப்ளைட் இது. சாப்பாடு கிடைச்சது. ஸ்நாக்ஸ். ப்ரெட் ரோல் அண்ட் ஜூஸ். ரொம்ப சுமார்.... போகட்டும்....
காமணி முன்னதாகவே கய்ரோவில் இறங்கியாச் ! ஆஹா...... நம்மகிட்டே லக்கேஜ் ஒன்னும் இல்லையே நேரா வெளியில் வந்துட்டோம்.
அஸீஸுக்குப் போன் பண்ணினால் வெளியே இருக்கோமுன்னு சொல்றாங்க. எங்கே ?
நம்மோடு வந்தவங்க எல்லாரும் போனபிறகும் நாங்க வெளியே நின்னுக்கிட்டு இருக்கோம். காமணி முன்னால் வந்த சந்தோஷம் இப்படி தேவுடு காத்ததில் கதம்.....
செல்லில் கூப்பிட்டால்..... டொமஸ்டிக் டெர்மினலில் வெளியில் நிக்கறாராம். வா இந்தப் பக்கம்னதும் இன்னொரு பத்து நிமிட் கழிச்சு ஓடி வர்றாங்க. வழக்கமா அங்கேதான் இறங்குவோமாம். ஆனால் .... இன்றைக்கு இப்படி..... காத்திருந்த நேரத்தில் ஆர்மி வந்து கேக்குது.... உங்களுக்கு டாக்ஸிக்குச் சொல்லணுமான்னு..... பயணிகள் இப்படிக் காத்திருந்தால் அவுங்களுக்குப் பிடிக்காது கேட்டோ.....
இஸ்லாம் வண்டியை விரட்டுனதில் ஒன்னரைக்கு ஹில்ட்டன் வந்துட்டோம்.
இனி.....
நாளைக்கு இன்னொரு டூர் இருக்கு என்பதால்..... ஒரு அஞ்சு மணி நேரம்தான் இருக்கு. ஓடிப்போய் கிடந்ததுதான் தெரியும்......
குட்நைட்.

தொடரும்........ :-)
10 comments:
திட்டமிடல் கொஞ்சம் சில சமயங்களில் சொதப்பி விடும். நீண்ட நேர காத்திருப்பு கொஞ்சம் அலுப்பு தரும் விஷயம் தான்.
வில்லி கேரக்டர் - ஹாஹா... உங்களுக்குப் பொருந்தாது! :)
அடுத்த பயணம் எங்கே? தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
லக்ஸர் பயணம் அருமை. இன்னும் ஈஜிப்ட்தானே
அருமை நன்றி
பயணங்களில் காத்திருப்பு என்பதுதான் பொறுமையை சோதிக்கும்.
அடுத்த டூர் இன்னும் ரொம்ப நாளாகும் என்று தோன்றுகிறது. கோரோனோ பயம் ஒன்று. இரண்டாவது எங்கே போவது என்பதும். உங்களுக்கு பொருந்தியது மாமியார் வேடம் தான் (எடுப்பு பல் + வட்ட முகம் + சீரியஸ் பார்வை). இன்றைய பதிவில் உங்கள் படம் ஒன்று கூட இல்லையே.
Jayakumar
வாங்க வெங்கட் நாகராஜ்,
வில்லிதான் சரியா இருக்குமுன்னு 'இன்னொருத்தரும்' பின்னூட்டி இருக்கார்.
பின்னூட்டமிடாமல் இதையே நேரில் சொன்னவரும் இருக்கார் 'நம்ம வீட்டில்' :-)
அடுத்த பயணம் இங்கே அடுத்துதான். அலெக்ஸாண்ட்ரியா ....
வாங்க நெல்லைத்தமிழன்,
இன்னும் ரெண்டு நாள் இங்கே ஈஜிப்ட்டில்தான் !
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க மாதேவி,
ஆமாம்ப்பா.... ரொம்பவே போரடிக்கும்.....
வாங்க ஜயகுமார்,
இன்னும் ரெண்டு வருஷத்துக்குப் பயணம் கிடையாதாம்..... அண்டை நாட்டுக்கு மட்டுமே போகலாமுன்னு சொல்லி இருக்கு நியூஸி. அதுவும் இப்போதைக்கு இல்லை. கொரோனா முற்றிலுமாகக் கிளம்பிப்போனாட்டுதான்.....
வில்லி இல்லைன்னா கதை ஓடாது ! மேலும் நல்ல நல்ல புடவைகள் நகைநட்டுன்னு ஜொலிக்கலாம் :-)
படம் ? அதென்னவோ சில சமயம் இப்படித்தான் நான் 'காணாமல்' போயிருவேன் :-)
Post a Comment