Friday, May 22, 2020

சுத்திச்சுத்தி இறங்கணுமே.... நிலவறைக்குள்ளே போகணுமே.... (பயணத்தொடர் 2020 பகுதி 55 )

 உலக அதிசயம்னு   இப்ப  ஏழு சொல்றாங்களே..... இதுலே இப்போதையக் காலகட்ட அதிசயம் தவிர  ஆதிகாலத்து (!) அதிசயங்கள்னு கூட ஒரு தொகுப்பு இருக்கு!  அந்த ஆதிகாலத்துச் சமாச்சாரம் ஒன்னுதான் இப்போ பார்க்கப்போறோம்.  எல்லாம் ரெண்டாயிரத்து முன்னூத்துச் சொச்சம் வருஷத்துது.....  Catacombs....
இப்படி ஒன்னு இருக்குன்னு கேள்விப்பட்ட பல ஆராய்ச்சியாளர்கள் 1892 ஆம்  வருஷம் முதல்   தேடிக்கிட்டு  இருந்துருக்காங்க.

எட்டு வருஷமா மனுசங்க தேடிக்கிட்டு இருந்த இடத்தை, ஒரு கழுதை கண்டுபிடிச்சுக் கொடுத்துருச்சு !  1900 செப்டம்பர் 28 ஆம் தேதி..... கழுதை வண்டி ஒன்னு வந்துக்கிட்டு இருக்கு. இழுத்துவந்ததில் நாலு காலும் சரியாப் பதியலையோ என்னவோ, தடுமாறி ஒரு பள்ளத்துக்குள் காலை வச்சு விழுந்துருக்கு. மாட்டிக்கிட்டக் காலை விடுவிக்கக்  கழுதையின் உடமஸ்த்தன்,  பள்ளத்தைப் பெருசாக்கினப்ப, அடியில் விஸ்தாரமா இன்னும் பெருசா  பள்ளம்  இருப்பதைப் பார்த்து சனம் கூடிப்போய் உதவி செய்ய,   ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டது !
அப்புறம் ?  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டிப்பார்க்கும்போது   மூணு அடுக்கில் இருக்கும் நிலவறைச்சமாதி அங்கே!

நாம் வளாகத்துக்குள் நுழையும் போதே  புக்‌ஷெல்ஃப். இலவசம்தான்....   எடுத்துக்கோன்னு ...   நாலைஞ்சு மொழிகளில் இருக்கு.......
ரெய்னா போய் டிக்கெட் வாங்கிவந்தாங்க.

 
 வளாகத்தின் ஒரு பக்கம்  கூரையும், வேலியும் போட்ட  கிணறு போல ஒரு வட்ட அமைப்பு ரொம்ப சாதுவா உக்கார்ந்துருக்கு. நாம் அங்கேதான் போகணும்....
  இங்கத்துக் காரியங்களுக்கெல்லாம் அமெரிகா நிதி உதவி செய்யுது..... ரொம்ப நல்லது...

சுழல் படிக்கட்டுகளில் இறங்கிப்போறோம். வட்டவட்டமா கிணத்தைச் சுத்திப்போகுது பாதை.

நமக்கு வலதுபக்கம் இருக்கும் சுவரில் அங்கங்கே பொந்து போல  ....   ஜன்னலா ?  இருக்காது.... வெளிச்சம் இல்லையே  ....  இருட்டா இருக்கே...
கொஞ்சம் ஒரு நூறு அடி தூரம் கீழே  இறங்கியதும்  ஒரு  பெரிய  ஹால் .  இது முதல் தளம். இங்கிருந்து படிகள்  நேரா இறங்கும் விதத்தில்....

ரெண்டு முகப்புத்தூண்களுக்குப்பின்னால் வாசல். வாசலுக்கு ரெண்டு பக்கங்களிலும்   தலையில் ஒரு வட்டத்தை ஏந்தி நிற்கும் ஸர்ப்பதேவதை.....  தலை வட்டம்தான்  இந்த மக்களின் பழங்கால தெய்வம்....  யாருன்னு தெரிஞ்சதும்  ரொம்ப சந்தோஷப்பட்டேன். கண்ணுக்குத் தெரிஞ்ச சாமி... நம்ம சூரியன்!


கட்டட அமைப்புகள் வெவ்வேற நாடுகளின் கலைகளை ஒன்னாச் சேர்த்ததுபோல் கலந்துகட்டியா இருக்கு. முக்கியமாக, ரோமானியர், க்ரேக்கர் ஸ்டைல்ஸ். சாமிகளும் அப்படியே....


சுருள்முடித் தலையோடு ஒரு சிலை! இதைத்தவிர இன்னும் ஒரு பெண்ணின் சிலை! இன்னும் சில புடைப்புச் சிற்பங்களுமா இருக்கு.

சுவர்சிற்பங்களில் ஒரு இடத்தில் மம்மிஃபை பண்ணறாங்க. நரித்தலை முகமூடி போட்டுக்கிட்டுத்தான் இதைச் செய்யணுமாம்.  மம்மி கிடக்கும் கிடக்கைக்குக்கீழே பாருங்க, அதெல்லாம் ஜாடிகள். Canopic jars. 
அதுக்குள்ளேதான்....  உள்ளிருக்கும் அவயவங்களை எடுத்து வைப்பாங்களாம்.  இதயத்தைத் தவிர மற்றதெல்லாம்  ஜாடிக்குள்ளே. இதயம் மட்டும்  உடலில் விட்டு வைப்பாங்க. அப்பதான் அடுத்த பிறவி எடுக்கும்போது பயன்படும் !  மம்மியாக்கம் மொத்தம்  படிப்படியா ஏழு அடுக்கு சமாச்சாரம்.
ஜாடின்னதும் ஞாபகத்துக்கு வருது..... இந்த இடத்துக்கு   Kom Al Shoqafa இப்படி ஒரு பெயர் வந்ததுக்கும்  ஒரு காரணம் இருக்கு.  இந்த  பெயருக்கு மண்பாண்டக்குவியல் (Mound of shards of terra cotta ) என்றுதான் பொருளாம் !!!!  ஏனாம்? எதுக்காம்?

இங்கே கிடக்கும் சொந்தபந்தத்தைப் 'பார்க்க'  அந்தந்தக் குடும்பம் வந்து போகுமாம்.  வெறுங்கையாப் போகாம,  எதோ பிக்னிக் போறமாதிரி  திராக்ஷை ரஸத்தைக் குடுவைகளிலும் தின்பண்டங்களைப் பாண்டங்களிலும் கொண்டு வந்து சொந்தங்களுக்குப் படையல் போட்டுட்டு,  அதையெல்லாம்  தின்னு, குடிச்சு முடிச்சதும் பாண்டங்களை ஒடைச்சுப் போட்டுட்டுப் போயிருவாங்களாம். ஏன் ?

சுடுகாட்டுக்குக் கொண்டுபோனதை திரும்பவும் வீட்டுக்குள் சேர்க்கக்கூடாதுன்னுதான்.  தீட்டு ?  இப்படி 1900 ஆம் வருஷத்து  ஆரம்பநாட்களில் இந்த இடத்தைக் கண்டுபிடிச்சு உள்ளே வந்து பார்த்தால் மலை மலையா மண்பாண்டக்குவியல்களே !
ஆரம்பகாலத்தில் ஒரே ஒரு குடும்பத்துக்கானக் கல்லறையாத்தான் இதைக் கட்டி இருக்காங்க.  எப்படியோ காலப்போக்கில் அந்த வம்சம்  முழுசும் முடிஞ்சு போனதும், மற்றவர்கள் இந்த இடத்தைப் பயன்படுத்திக்கிட்டு,  அவுங்கவுங்க  வீட்டாளுங்க 'சாமியாண்டை போனதும்' இங்கே கொண்டுவந்து 'வைக்க' ஆரம்பிச்சு அப்படியே வளர்ந்துக்கிட்டுப் போயிருக்கு.  பேங்க் லாக்கர் மாதிரி  அடுக்கடுக்காக் கல்லில் வெட்டி  வச்சுருக்காங்க.  அறைக்குக் கதவா ஒரு  கல்பலகை கூட சிலதில் இருக்கு.
(இப்ப ஒரு உடலும் அங்கே இல்லை.  காலி அறைகள்தான் !  தேவைப்பட்டா ஸ்லீப்பர் கம்பார்ட்மென்ட்டா உள்ளே ஏறிப் படுத்துக்கலாம். கால் நீட்ட நீளம் போதாது. கொஞ்சம் மடக்கி வச்சுக்கிட்டால் ஆச்சு ! )




பேரரசர், காளைக்கு   மரியாதை செய்யறாராம்.    பழைய மதத்தின்படி  காளை இவுங்க கடவுளர்களில் ஒன்னு !  (ரிஷபம், நந்தி !!!  )

இப்ப ரெண்டாவது நிலையில் இருக்கோம்.இன்னும் கீழே மூணாவது நிலை  இருக்குன்னாலும், நைல் நதித் தண்ணீர் ஊடுருவி,  வெள்ளம் வந்து வந்து போறதால் அங்கே  போக யாருக்கும் அனுமதி இல்லைன்னு ரெய்னா சொன்னாங்க.
அந்தத் தண்ணீரால் பாதிப்பு இன்னும் அதிகமா ஆகாமல், தண்ணீரின் மட்டத்தைக் கீழிறக்கும் வேலைகள் நடந்துருக்குன்னு தகவல். அமெரிகாதான் நிதி உதவியை தாராளமாக் கொடுத்துருக்காம்.  அஞ்சு மில்லியனுக்கு மேலே!  (வாவ்! )

அகழ்வாராய்ச்சியில் என்னென்ன பார்த்தாங்கன்ற விவரமும் வெளியில்  போட்டு வச்சுருக்காங்க.

திரும்ப அந்த சுழல்படிகளில் ஏறி மேலே வந்தோம்.  வளாகம் நிறைய  கல் சவப்பெட்டிகள்தான்.....  இங்கேயும்  சில சமாதிக் கட்டடங்கள் சின்ன அளவில் இருக்கு.

 இதைக் கண்டுபிடிச்சது 1952 ஆம்  வருஷத்திலாம்.  தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி சமாச்சாரங்களை  அகழ்ந்தெடுத்துக்கிட்டு இருந்த சமயம் கண்ணில் பட்டுருக்கு!
ஒரு சமாதிக் கட்டடம்....  Tigrene Tomb

அதுக்குள்ளே போனால்..... சின்னதா வீட்டுக்குள் போறமாதிரியே இருக்கு. சுவர்களில் அந்தக் காலத்து ஓவியங்கள். அப்போதைய கலைகலாச்சாரத்தைச் சொல்லுது !   அதில் இவுங்களோட பழைய மதத்துக் கடவுளர்கள் இருக்காங்க.
அதுலே  Osiris என்னும் கடவுள்/மன்னர்  இறந்துபோயிடறார். அடடா....      இவருடைய கதை  நம்ம  பூனைச்சாமி பதிவில் இருக்கு :-)  இவரை மம்மிஃபை பண்ணிக் கட்டிலில் கிடத்திட்டு,  இவருடைய மனைவி ISIS கணவனை உயிர்ப்பிக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க.   இறந்தவரின் தலைமாட்டில்   மனைவியின் தங்கை Nephthys  ஈச்சமரக்கிளைகளைக் கையில் வச்சு விசிறிக்கிட்டு இருக்காங்க.  காலாண்டை மனைவி நின்னு  உயிர்மூச்சு வரவழைக்கத் தன்னுடைய பெரிய நீண்ட  சிறகுகளால்  காற்றை உடம்புக்குள் தள்ளறாங்க.
இன்னொரு சித்திரத்தில், Osiris  உயிர்த்தெழுந்துட்டார்.  

  இந்தச் சித்திரத்தில்  Osiris  எழுந்து நின்னாச்சு.  ஒரு ஜோடி  நாய்கள், இவர் உத்திரவுக்காகக் காத்து நிக்கறதுகள்.  Anubis  என்னும் சாமிகள்தான் இந்த நாய்கள். மம்மிஃபிகேஷன், எம்பாமிங் இதுக்கெல்லாம்  இவுங்கதான்  இன்சார்ஜ்.
காளையும் இவுங்களுக்குக் கடவுளே !   Apis  என்னும் பெயர்!
இந்தச் சித்திரங்கள் எல்லாம் கொஞ்சம் பழுதடைஞ்சுதான்  இருக்கு. ஆனால் ரிப்பேர் வேலைகளும் நடக்குதுதான்.

இன்னொரு சமாதிக் கட்டடம்....    Wardian Tomb.. இதை இன்னும் சரி செய்யலைன்னு மூடி வச்சுருக்காங்க.
நல்ல சுத்தமான பெரிய வளாகம் . அங்கங்கே பழங்காலப்பொருட்கள், கல்லால் ஆன சவப்பொட்டிகள், பாத் டப் போல தொட்டிகள்னு  இருக்கு.



கண்ணைச் சுழட்டிப் பார்க்கும்போது...... ஹா..... எனக்கான ஒரு இடம் !  எப்படி இங்கே ?
கிளிக்குச் சேவகியா இருந்தது நெசமோ என்னவோ !   ஹாஹா....

இனி அடுத்துப் போவது....


தொடரும்............:-)


10 comments:

said...

என்ன என்னவோ புதுப்புது இடங்கள். அனேகமா எல்லாமே சமாதிகள்தாம்.

இங்க பிறைகளில் இருந்த ம்ம்மிகள் என்னவாயிற்று? நகைத் திருடர்கள் கையில் மாட்டிக்கொண்டுவிட்டதா?

said...

எத்தனை விதமான சமாதிகள்...

புதுப் புது விஷயங்களை உங்களின் இந்தப் பயணம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

said...

படங்கள் போதும்,அத்தனையும் சொல்லிடுது.

said...

அட எகிப்தில் துளசி மாடம் 2000 வருடத்திற்கு முந்தையது. ஆச்சர்யம். சிவலிங்கத்துக்கு பூஜை பண்ணுவது போல் ஒரு fresco இருந்ததே? 

 Jayakumar

said...

நினைக்கும் போது எல்லாமே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வட்டக் கிணத்தினுள்ளே இவ்வளவும் அடங்கியுள்ளது.

படங்களும் தகவல்களும் சிறப்பு.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

எல்லா உடல்களையும் மம்மிஃபைடு பண்ணி இருப்பாங்களான்னு தெரியாது. ரொம்ப செலவு பிடிக்கும் சமாச்சாரமாம். அதனால் பல உடல்களை அப்படியே கொண்டு வந்தும் வச்சுருக்கலாமுன்னு ஒரு தகவல்.

ஆனால் எப்படியோ 'போனதை' டிஸ்போஸ் செஞ்சுக்க என்னென்ன யோசனை பண்ணி இருக்காங்க பாருங்க....

வெவ்வேற நாடுகளில் இருக்கும் மம்மிகள் ஒரு சமயம் வியாபாரமாத்தான் இருந்துருக்கு. நியூஸியிலேயே ரெண்டு மம்மீஸ் இருக்கே !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எல்லாம் டிஸ்போஸல் டெக்னிக்தான் இல்லையோ !

said...

வாங்க குமார்,

ரொம்பச் சரி !

said...

வாங்க ஜயக்குமார்,

அப்போவே 'நான்' இருந்துருக்கேன் :-)

said...

வாங்க மாதேவி,

பயணத்தில் இது புது அனுபவம் இல்லையோ !!!!