Monday, May 11, 2020

ஆஃப்ரிகா(வில்) சாப்பாடு..... (பயணத்தொடர் 2020 பகுதி 50 )

ஊருக்கு வெளியே  நைல்நதியின்  மேற்குப் பகுதியில் இருக்கும் சமாதிகளையும் கோவில்களையும்  பார்த்து முடிச்சுட்டோம். இப்போ லஞ்ச் முடிச்சுக்கிட்டு அடுத்த இடத்துக்குப் போகலாமுன்னார் இதிஹாப்.




ஊருக்குள் நுழையறோம் இப்போ. நல்ல அழகான ஊராகத்தான் இருக்கு. ரெஸ்ட்டாரண்ட்டுக்குள் நுழைஞ்சு மாடி ஏறிப்போகணும். மொட்டை மாடியில் பாலிகார்பொனேட் ஷீட்ஸ் போட்டு வச்சுருக்காங்க.  உள்ளே நுழையும் இடத்தில் ஒரு ஆர்ட்டிஸ்ட், படம் வரைஞ்சுக்கிட்டு இருக்கார்.

முந்தி ஒரு காலத்துலே  இயற்கைக் காட்சிகளை வரையணுமுன்னா அங்கே அதே இடத்துக்குப்போய் உக்கார்ந்து வரையணும்.  காலம் எல்லாம் இப்போ மாறிப்போச்சுல்லே ?  அந்த இடங்களை ஒரு ஃபோட்டொ பிடிச்சுட்டு வந்துட்டால்....  அதை வச்சே ரொம்ப அழகா வரைஞ்சு கொடுக்கறாங்க.  ரொம்பவும் நோகாம நோம்பு கும்பிட்டால் தப்பா ? ஊஹூம்...


எனக்குள்ளே இருந்த 'கலையரசி' முழிச்சுக்கிட்டாள்.  ஏற்கெனவே வரைஞ்சு வச்சப்  படங்களைப் பார்த்துட்டு, 'ரொம்ப நல்லா வரைஞ்சுருக்கீங்க'ன்னு பாராட்டுனதும்   கலைஞருக்கு  முகம் பூராவும் மகிழ்ச்சி !    எழுத்தோ, படமோ, பாட்டோ, நடனமோ  எதுவானாலும்  இந்த  மாதிரி பாராட்டுகள்தான்  கலைஞர்களை எப்பவும் உயிர்ப்புடன்  வைக்கும்.

ஆஃப்ரிகா பணியாளர்  ஹத்தீம், சிரிச்ச முகத்தோடு  நம்மைக் கூட்டிப்போய் உக்கார வச்சார்.  பூரா ரெஸ்ட்டாரண்டும் காலியாக்கிடக்கு. இன்னும் லஞ்சு டைம் வரலை போல....  மணி பனிரெண்டரைதான் ஆகுது.
ஆர்டர்  எடுக்க வந்த ஹத்தீமுக்கு,  ரெண்டு வெஜ் ஃபுட்ன்னதும்  நம்ம இதிஹாபும் தனக்கும் வெஜ் ன்னார். டிரைவர் மொஹமத், வேறெங்கியோ போய் சாப்பிடுவாராம்....

ஏன் இதுக்கு இப்படி ஆஃப்ரிகான்னு பெயர் வச்சுருக்காங்கன்னு 'நம்மவர்' கூட ஸ்மால் டாக்கில்  கேட்டேனா.... அதுக்கு அவர் இது ஆஃப்ரிகாவில்தானே இருக்குன்னார். ஒரு நிமிட் ஙேன்னு முழிச்சதும்....  அவர்  'ஈஜிப்ட் இருப்பது ஆஃப்ரிகா கண்டம்தானே'ன்னு சொன்னதும்..... அடராமான்னு இருந்துச்சு :-)

அட ! ஆமாம்லெ ?  அப்போ உலகின் அஞ்சு கண்டங்களிலும் கால் வச்சாச் !  பாக்கி ரெண்டுலே ஒன்னு நம்ம வீட்டாண்டைதான் இருக்குன்னாலும்....  ஃபிட்னஸ் இல்லாததால்  அங்கே போய் வர வாய்ப்பே இல்லை...ப்ச்....
முதலில் சூப்  வந்தது.  பருப்பாம். ஏம்ப்பா.... துளி மஞ்சளை அதன் கண்ணில் காமிக்கப்டாதோ ?

(சமையலில் மஞ்சள் சேர்க்கறது  நாம்தான் போல !  அதான்  டூமரிக் சாப்ட்டா சகல வியாதிகளும் (கொரோனா நீங்கலாக)  போயிருமுன்னு சொல்லிக்கிட்டு வெள்ளைக்காரன் கொள்ளையடிக்கிறான் !)


அப்புறம் கத்தரிக்காய் வதக்கியது, பீட்டா ப்ரெட், பஜ்ஜி போல ஒன்னு, காய்கறி  ஸாலட்,  உருளைக்கிழங்கு கறி (!)  அதே பாதி வெந்த வகைதான். அது ஏன் உருளைக்கும் ஈஜிப்ட்டுக்கும் இப்படி ஒரு சண்டைன்னு தெரியலையே... ஒத்துப்போக மாட்டாங்க போல !
இப்ப இன்னொரு நாலைஞ்சு பேர் சாப்பிட வந்தாங்க. அநேகமா எல்லா டூர் கம்பெனிகளும்   பயணிகளை இங்கேதான் அனுப்பறாங்களாம். நல்ல ரிவ்யூ இருக்கு இதுக்குன்னார் இதிஹாப்.  எல்லாம் செட் மெனுதான்.  ட்ரிங்க்ஸ் மட்டும் தனியா நாம் காசு கொடுத்துடணும். ஓக்கே.... 'கொண்டு வா ஒரு தண்ணி பாட்டில்' :-)
சோறும் வந்தது.... அதே டெலிகஸியோடு !   வெண்ணையில் வறுத்த சேமியா!  கொஞ்சம் பாலும் சக்கரையும் சேர்த்தால் பாயஸமாயிரும் :-) 

எல்லாம் விளம்பியது மண்பாத்திரங்களில்தான்.  'ஆச்சு என் லஞ்சு'ன்னு  நான்  எழுந்துபோய் அந்த நைல் வியூவை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.


சாப்பாட்டைப் பொறுத்தவரை நான் அட்வெஞ்சரிஸ்ட் இல்லை.  என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது.......     நம்மவரும் இதிஹாபும் பேசிக்கிட்டே நிதானமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.
சாலைகள் எல்லாம் நல்லா சுத்தமா அழகா இருக்கு! நைல்நதியின்  விஸ்தாரமோ.... இன்னும் அழகு!  படகில் ஏறி நைலில் ஒரு சுத்து போயிட்டும் வரலாம். ஃபெர்ரி டெர்மினல் அதோ.....





சில பல க்ளிக்ஸ் ஆச்சு.  கிளம்பி படிகளாண்டை வரும்போது  வரைஞ்சுக்கிட்டு இருந்தவருக்குக் கொஞ்சம் அன்பளிப்பு கொடுத்தார் நம்மவர்.  கீழே தரைத்தளத்தில் ரெஸ்ட்ரூம், பரவாயில்லை. மாடிப்படித் திருப்பங்களில் பாபிரஸ் செடிகள் !
கிளம்பின முக்கால் மணியில்  'உண்மையான கோவில்' வாசலுக்கு வந்துருந்தோம் !

தொடரும்........ :-)


9 comments:

said...

ஐந்து கண்டங்களிலும் கால் வைத்தாகிவிட்டது....மிகவும் மகிழ்ச்சி...உங்கள் அனுபவங்கள் மூலமாக பல புதிய செய்திகளை அறிகிறோம்.

said...

ஓவியர் வரைந்த ஓவியம் அழகு. அவர்களைப் பாராட்டும்போது அவர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி பார்க்க நமக்கும் மகிழ்ச்சி.

உணவு - வெளி இடங்களில் ரொம்பவே ரிஸ்க் எடுக்க முடிவதில்லை. :) சுவைப்பதுண்டு என்றாலும் அதிகம் தெரியாத, கேள்விப்படாத உணவு வகைகளை நானும் தவிர்த்துவிடுவேன்.

தொடர்ந்து பயணிப்போம்.

said...

அருமை சிறப்பு நன்றி

said...

அட..ஊர்லாம்/ரோட்லாம் கல்ஃப் தேசத்தில் இருப்பது போலவே இருக்கே (அதைத்தான் இவங்க காப்பி அடிச்சிருக்காங்களோ?)

உணவு ஒன்றும் சுகமானதாக இல்லையே.

லூவர் மியூசியத்திலும் நிறைய ஓவியர்கள், அந்த ஓவியங்களைப் பார்த்து அங்கேயே வரைவதைப் பார்த்திருக்கிறேன். போட்டோக்கள் வந்த பிறகு, ஓவியர்களின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதோ?

லெமூரியாக் கண்டத்தில் நீங்க கால் வைத்ததுபோலத் தெரியலையே. ஹா ஹா

said...

அட... இதுதானா பாப்பிரஸ் செடி... நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் பெயர்தான் தெரியவில்லை.

said...

ரெஸ்ட்டாரண்ட் உள்ளேயும் அழகிய படங்கள்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா !

வெறுங்கால்தான்..... எக்ஸ்ப்ளோர் செஞ்சால்தான் திருப்தி :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பயணத்துலே வாயைக் கட்டுவதுதான் பெஸ்ட். வேற வழி இல்லை !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !