Tuesday, January 23, 2018

விட்டு வைப்பதாக இல்லை :-) சமையல் குறிப்பு !

வீட்டாண்டை இருக்கும் கறிகாய்க் கடையில் பக்கெட் ப்ளம் அஞ்சு டாலர்னு போட்டுருந்தாங்க. பழம் பார்க்கறதுக்கு, நம்ம பழைய வீட்டு மரத்துப் பழம்போல நிறம்.  அந்த ப்ளம்.... சும்மா சொல்லக்கூடாது..... ஸ்ஸ்ஸ்ஸ்   அப்படி ஒரு இனிப்பு! நம்ம   இங்கத்து நண்பர்கள் இன்னும்கூட அந்த  டேஸ்ட்டை மறக்கலைன்னா பாருங்க!
"நல்லா இல்லைன்னு என்னம்மா  செய்வே?"

ஙே......   "தின்னு பார்த்துட்டு நல்லா இருக்கா இல்லையான்னு  பேசலாம். நான் வாங்கறேன்"  (ஃபைனல் வேர்ட்!)

பக்கெட்டுன்னா.... பக்கெட்டோடு இல்லையாக்கும்.  பையிலே போட்டு பக்கெட்டுக்குள்ளே வச்சுருப்பாங்க.  பையை மட்டும் அப்படியே தூக்கிக்கிட்டு வந்துடலாம்!

வீட்டுக்கு வந்ததும் எடை போட்டுப் பார்த்தேன்.  அஞ்சு கிலோவுக்கு 30 கிராம் கம்மி.  கிச்சன் மேடையில்  எடை பார்க்கும் மெஷீன்(!) வச்சுருப்பதால்....   எல்லாத்தையும் அளந்து பார்த்தே ஆகணும் எனக்கு :-)  ஆத்துலே போட்டாலும் அளந்து போடணுமுன்னு பெரியவங்க சொல்லி வச்சதை மறக்கலாமா?

சிலது பழுத்தும் சிலது ரெண்டு மூணு நாளில் பழுக்கும் நிலையிலுமா  இருக்கு. ஒரு பழத்தைத் தின்னு பார்த்தேன். ஓக்கே....  (ஆனாலும் நம்மூட்டு  பழத்துக்கு ஈடு இல்லை !) அடி நாக்குலே லேசா புளிப்பு தட்டுது!

கைவசம் அஞ்சு கிலோ...... என்றதால் எதாவது யோசிக்கத்தான் வேணும்.....
ப்ளம் ஸாஸ்! இதுவரை பண்ணலை. அதுக்காக? அப்படியே  விட்டுடறதா?  நெவர்....

முதல்லே நல்லாவே பழுத்தது, இன்னும் கொஞ்சம் பழுக்க வேண்டியதுன்னு தரம்  பிரிச்சு வச்சேன்.
பழுத்ததைக் கழுவிட்டு,  ஒரு 3 லிட்டர் குக்கரில் போட்டு,  முக்கால் டம்ப்ளர்  தண்ணீர் சேர்த்து  நாலு விஸில்.  இங்கெதான் ஒரு  தப்பு பண்ணிட்டேன்.  அந்த முக்கால் டம்ப்ளர் தண்ணி அதிகம் போல........ குக்கர் மூடியில் விஸிலின் கூடவே.....   ஜூஸ்.... பெருகி வந்து அந்தச் சூட்டில் அப்படியே சொய்ங் னு  காய்ஞ்சு போயிருச்சு.
எல்லா ஸ்டீமும் போனதும் குக்கரைத் திறந்தால் இப்படி இருந்துச்சு :-)
பொடேட்டோ மேஷர் இருக்கு பாருங்க.... அதால்  நாலைஞ்சு முறை  அமுக்கிவிட்டுட்டு,  ஜல்லிக் கரண்டியால் கிளறிக் கொட்டைகளை எடுத்தேன்.
ஒரு நான்ஸ்டிக் வாணலியில் குக்கரில் வெந்து மசிஞ்சு கிடக்கும் சமாச்சாரத்தை ஊத்தி, மிதமா எரியும் அடுப்பில் வச்சுக் கிளறணும்.  புளிப்பு சுவையா இருப்பதால் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்தேன்.

அப்புறம் லேசாக் கொதிச்சு வர ஆரம்பிச்சதும், ஒரு டீஸ்பூன் பட்டை பொடி, ஒரு டீஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து இன்னும் கெட்டியா வர ஆரம்பிச்சதும்  ரெண்டு கப் சாஃப்ட் ப்ரவுன் ஷுகர் சேர்த்தேன்.  நல்லாக் கொதிச்சு  ஸாஸ் பதம் ஆனதும் அடுப்பை அணைச்சாச்.

மகள்  ஸ்பைஸ் ஐலேண்ட் ( Caribbean Cruise )  போய்வந்தப்ப,  தாய்க்காக வாங்கி வந்த மஸாலா........





பரிசோதனை எலியின் டின்னரான  ரவாக்கிச்சடிக்கு (உப்புமாவா?  ஹேய்.... அதெல்லாம் இல்லையாக்கும்..... ) ஒரு அரை ஸ்பூன் தொட்டுக்க சைட் டிஷ்ஷாக்  கொடுத்தேன்.  ரொம்ப நல்லா இருக்காமே!

நாக்குலே துளி வச்சுப் பார்த்தேன்....  அட!  கட்டாமீட்டா சட்னி!  ஓ.... சூப்பர்!

ஆறியதும் எடுத்து வைக்கலாமுன்னா... கெட்டியா இருக்கு.  ஸாஸ்ன்னா ஊத்தும் பதம் வேணாமோ?  இது சட்னி !

துளசிவிலாஸின் வழக்கம் அனுசரிச்சு, கொஞ்சம்  எடுத்துக் கிண்ணத்தில் வச்சுட்டு மீதியை ஐஸ் க்யூப் ட்ரே யில் நிரப்பி ஃப்ரீஸரில் வச்சுருக்கேன்.
பாக்கிப் பழத்தை இன்னும் ரெண்டுநாளில் ஸாஸாவே பண்ணிப்பிடலாம்.  இப்ப செஞ்ச தப்பையெல்லாம் திருத்திக்கணும். ஓக்கே!

ஒருநாள் ப்ளம்மோதரை செஞ்சு பார்க்கணும் :-)


7 comments:

said...

சுவையான குறிப்புகள்.

said...

வெல்லிங்டன் கூனூரில் இருந்தபோது ப்ளம் பழங்களை அப்படியே சாப்பிட்டுதான் வழக்கம் அதிகம் வாங்கினால் இப்படி ஏதாவது செய்து பார்க்கத் தூண்டும்

said...

ஆஹா...அருமையா இருக்கு...

said...

என்ன கொடுமை சரவணன் இது...

கண்ணைப் பறிக்கும் ப்ளம்ஸ். படங்கள் பார்த்து மயங்கிவிட்டேன். அதை அழகா தின்னு தீர்க்காம (நானா இருந்தால், 1 வாரம், 2 பக்கெட் காலி பண்ணியிருக்கலாம்), அதைவைத்து இப்படி அநியாயமா சாஸ் செய்துட்டீங்களே. விட்டா, ப்ளம்ஸை வைத்து ரசம் வைத்தேன் என்று சொல்லுவீர்கள் போலிருக்கிறதே.

தாய்வான்ல, ரொம்ப அட்டஹாசமான லிச்சியும், பைனாப்பிளும், பன்னீர் திராட்சை (விலை ஜாஸ்தி) கிடைக்கும். அதுமாதிரி நான் எங்கேயும் சாப்பிட்டதில்லை. அங்க போனா, 1 வாரம், மூன்று வேளையும் அனேகமா பழங்கள்தான். நாக்குக்கு காரம் வேணும்னு தோணும்போது, கொண்டுபோயிருக்கும் கார ஊறுகாய் + ப்ரெட் ஸ்லைஸ். தாய்லாந்திலும் ரம்பூட்டான். இந்தப் பழங்களெல்லாம் அவ்வளவு சுவையா இருக்கும்.

ம்ம்ம்ம்... காலையிலேயே ப்ளம்ஸ் படத்தைப் போட்டு என் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.

said...

விதையில்லாத திராட்சை 2.10 டாலர்னு போட்டிருக்கு. எனக்கு farm fresh திராட்சை ரொம்பப் பிடிக்கும்... எந்த ஊர் போனாலும், அங்க பார்க்கிறது, என்ன புதிய பழங்கள் இருக்கு, எங்க கிடைக்கும் என்பதுதான். இதை எழுதும்போதே,உங்கள் வீடு கட்டியிருக்கும் இடத்தில் இருந்த 6-7 ஆப்பிள் மரங்களும், இப்போது இருக்கும் பச்சை ஆப்பிள் மரமும் (பழங்களோடு) ஞாபகம் வருது

said...

அருமையான பழக்குறிப்பு மேடம்.

said...

ஜூப்பரு துள்சிக்கா.