Monday, January 15, 2018

அர்பன் விவசாயிக்கு இதைவிட வேறெது மகிழ்ச்சி தரும்?

அறுவடைகளில் சில!

தேவைப்படும் நேரம் பறிச்சுக்கிட்டு வர்றதுதான்  :-)

கோடைகாலத்தில் சரிபாதி போயிருச்சு. இன்னும்  ஒன்னரை மாசத்துக்குள்   விதைக்க வேண்டியதையும், அறுக்க வேண்டியதையும் முடிச்சுக்கணும் :-)













































10 comments:

said...

அபார உழைப்பின் பலன் அழகிய படங்களில் தெரிகிறது.

said...

தோட்டத்தில் விளைந்த காய்கனிகள் சூப்பர். காரணகர்த்தா படத்தையும் போட்டுட்டீங்க. கத்தரிக்காய் மட்டும் ரொம்ப வாடி இருக்கு.

said...

மிக அருமை

said...

வாவ் !!சூப்பர்க்கா .எனக்கு அந்த மணத்தக்காளி வேணும் :)
எங்க ஊர்ல ரொம்ப மழைக்கா போன வருஷம் உருளை மட்டுமே போட்டேன் மணத்தக்காளி தானே வளர்ந்து செழித்தது

said...

வாங்க ஸ்ரீராம்.

உண்மையிலேயே வேலை நெட்டி முறிக்குது! சம்மர் வந்தவுடன் வேலையும் ரெட்டிப்பாகிருதே..... கோபாலுக்கு இப்போ தோட்டவேலை ரொம்பப்பிடிச்சுப்போச்சாம் :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தோட்டத்துக்கு இன்சார்ஜ் கோபால்தான் :-)

அந்தக் கத்தரிக்காய் நிறமே அப்படித்தான். பாவாடை நிறைய முள். அதான் உரிச்சு எடுத்துட்டேன். வாடிப்போகலை. அப்பதான் பறிச்சு வந்தேன். உள்ளே பார்த்தீங்களா.... மின்னலடிக்கும் வெண்மை :-)

இன்னும் வேற மூணு விதக் கத்தரிக்காய் செடிகளும் வச்சுருக்கோம். இன்னும் காய்க்க ஆரம்பிக்கலை!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !

said...

வாங்க ஏஞ்சலீன்.

இங்கேயும் மணித்தக்காளிச்செடிகள் தானே முளைச்சு வந்தவைதான். கீரை விதை (ச்சுரையா பாஜி!) நிறைய போட்டு நல்லா முளைச்சு வந்துருக்கு. எடுத்து சுத்தம் செஞ்சு ஃப்ரீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்:-) புது ஃப்ரீஸர் இன்னொன்னு வாங்கியாச்:-)

இன்றைக்கு எடுத்த ஒரு ஸுக்கினி , ஒன்னேகால் கிலோ எடை !

said...

ஹை.. ராஸ்பெர்ரி.

ஸூக்கினி மேல முள்ளா இருக்கே, இது வேற வகையோ?

said...

சாந்தி,

இது கெர்க்கின். சின்னதா இருக்கும்போது நம்மூர் கோவில்பட்டி நாகர்கோவில் பிஞ்சு வெள்ளரிக்காய் (ஓலைப்பெட்டியில் கிடைக்குமுல்லே!) அதைப்போல இருக்கும். அப்படியே இங்கே பறிச்சு வினிகரில் போட்டு ஊறுகாய் போடுவாங்க, வெள்ளைக்காரர்கள்.

நாம் அப்படிப் பறிக்காமல் விட்டு வச்சது பெருசானதும் முள்வீரனா ஆகிரும். தோல் சீவறாப்போல மெல்ல முள்ளை மட்டும் கத்தியால் தேய்ச்சால் எல்லா முள்ளும் போய் மழமழன்னு ஆகிரும். அப்புறம்? வெட்டித்திங்கறதுதான், வெள்ளரிக்காய் போல :-)