Wednesday, January 17, 2018

சென்னை மெட்ரோவில் ஒருமுறை போய்வரலாமா? (இந்திய மண்ணில் பயணம் 102)

நம்ம பயணங்களில் வெவ்வேற நாடுகளில் பலதரப்பட்ட ரயில்களில் போய்வந்திருந்தாலும் கூட  சென்னையில்  புதுசா ஆரம்பிச்சு இருக்கும் மெட்ரோரயிலில் போகலையேன்னு ஒரு மனக்குறை இருந்துச்சு.
வாழ்க்கை நியூஸியில் இருந்தாலும்.... சென்னையில் புதுசு புதுசா என்னென்ன   மாற்றங்கள் வருது, முன்னேற்றம் எப்படிப்போகுதுன்னு  ஒரு பக்கம் பார்த்துக்கிட்டே இருக்கொமுல்லெ....




இப்படித்தான்  பறக்கும் ரயில் வந்துருக்குன்னதும்,  நினைச்சுக்கிட்டே இருந்து  தோழிகளுடன் சேர்ந்து ஒருமுறையும் (2009)   மகள் வந்துருந்தப்ப (2010)   அவளுடன்  ஒருமுறையுமா பறந்துட்டு வந்தோம் :-)

இப்ப மெட்ரோ ரயில் வேலைகள்  சிலபகுதிகளில் முடிஞ்சு போக்குவரத்து ஆரம்பிச்சுருக்கு ரெண்டு வழிகளில் மட்டும்தானாம். ஒன்னு  கோயம்பேடு டு ஆலந்தூர்.  நெருங்கிய தோழி வீட்டுக்குப் போயிருந்தப்ப, அவுங்க வீட்டு ஜன்னல், பால்கனியில் இருந்து  (நாலாவது மாடி!) கைக்கெட்டும் தூரத்தில் ஓசைப்படாமல் ரயில் நகர்ந்து போறதைப் பார்த்தால் ஒரு நிமிட், வெளிநாட்டில் இருக்கறதைப்போல் இருந்துச்சுன்றதையும் ஒத்துக்கத்தான் வேணும்!
இன்னொன்னு  ஏர்ப்போர்ட்லே இருந்து ஆலந்தூர் வரை.  நாம் இப்போ பரங்கிமலையில் இருந்து கிளம்பறோமே.... கிட்டக்க இருப்பது  விமானநிலையம்தான்.  இன்றைக்கு  இந்த ஏரியாவுக்குன்னே அரைநாள் ஒதுக்கியாச் :-)  பக்கத்துப்பேட்டையில்தான் நமக்குப் பகல் சாப்பாடு.... அண்ணன் வீட்டில்!!


ஏர்ப்போர்ட்டு வளாகத்துக்குள் நுழைஞ்சு போய் பார்க்கிங் தேடிக்கிட்டு இருக்கும்போது.... ரயில் ஸ்டேஷனுக்கான பார்க்கிங் கொஞ்சம் தள்ளி அந்தாண்டை இருக்குன்னு ஒருத்தர் சொன்னார்.  நம்ம சீனிவாசனும் இதுவரை மெட்ரோ ரயிலில் போகலையாம்.  அதான் இடம் தெரியலை....

நாங்க அங்கே போய் வண்டியை நிறுத்துனதும்,  நேரம் மட்டும் ப்ரிண்ட் செஞ்சு சின்னதா ஒரு சீட்டு கொடுத்துட்டு நூறு ரூபான்னு சொன்னார் ஒருவர்.  வேற ஒரு விவரமும் அதுலே இல்லை.  நாங்க  கட்டடத்துக்குள்ளே நுழைஞ்சு  லிஃப்ட் வழியா மேலே போனோம்.  ஸ்டேஷன் கட்டடத்தோடு சேர்த்து ரயில்பாதைக்கு மட்டுமா கூண்டு கூண்டா  கட்டி இருக்காங்க. நல்லாதான் இருக்கு!
வெளிநாடுகளில் இருக்கும் அதே விதத்தில் டிக்கெட் வாங்கிக்க  மெஷீன்ஸ் இருக்கு. (தானியங்கி) அருமையான அமைப்பு!  ரிட்டர்ன் டிக்கெட் இல்லையாம். சிங்கிள் டிக்கெட்டாத்தான் வாங்கிக்கணும். சரின்னு ஆலந்தூருக்கு மூணு டிக்கெட் வாங்கிக்கிட்டு, ப்ளாட்ஃபார்ம் போனோம்.  90 செமீ வரை உயரம் இருக்கும் பிள்ளைகளுக்கு இலவசம்தான்!  ரொம்ப நல்லது....   முந்தியெல்லாம் அஞ்சு வயசு  வரை டிக்கெட் இல்லைன்னு  பஸ் பயணத்தில் இருக்கும். அப்போ பார்த்தீங்கன்னா  அப்பா அம்மாக்கள் பிள்ளைகளை வளரவே விடமாட்டாங்க!   டிக்கெட் கொடுக்கவரும் கண்டக்ட்டருக்கும், மேற்படிப் பெற்றோர்களுக்கும்  சண்டையான சண்டை (வாக்கு வாதம்) நடக்கும்.  அப்பெல்லாம் ஃபேஸ்புக், செல்ஃபோன் கெமெரா, இண்ட்டர்நெட் எல்லாம் இல்லாமப் போச்சே  :-)


இந்த டிக்கெட் கவுன்டர்களை கீழே கட்டடத்தின் ஆரம்பத்துலேயே வச்சுருந்தால்... பயணிகளைத்தவிர வேற யாரும் உள்ளே வர வாய்ப்பில்லாம இருக்கும்.
ப்ளாட்ஃபார்ம்  படுசுத்தமா இருக்கு. ரயில்வண்டி ஒன்னு நிக்குது. கதவுகள் எல்லாம் மூடி இருக்கு, புறப்படும் நேரத்தில் மட்டும் திறக்கும்படி!  நேரமும் வந்துச்சு. அவ்வளவாக் கூட்டமில்லை..... சென்னையா இது?  அட!

காமணியில் ஆலந்தூர் வந்தாச். இறங்கிப்போய் திரும்ப டிக்கெட் வாங்கிக்கிட்டு அடுத்த வண்டிக்குக் காத்திருந்தோம்.   இங்கேயும் படு சுத்தம்!   என்னால் நம்பவே முடியலை.....     அப்ப நம்ம மக்களுக்குச் சுத்தமா இடங்களை வச்சுக்கத் தெரிஞ்சுருக்குதான்!   இதே ஒழுங்கை  சாலைகளிலும் தெருக்களிலும், குடியிருப்பு வாசல்களிலும் ஏன்  கடைப்பிடிக்கக்கூடாதாம்?
ஙே.....




எஸ்கலேட்டர் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க!   இங்கே நம்ம வாகனங்களை  நிறுத்திக்க பார்க்கிங் ஏரியா இருக்கு. பார்க்கிங் சார்ஜ் கூட  ரொம்ப நியாயமான அளவுதான்.  சென்னை மால்களில்  முக்கியமா எக்ஸ்ப்ரெஸ் மால் பார்க்கிங் போல ஒரு கொள்ளை நான் பார்த்ததே இல்லை.....   ஒரு காமணி இப்படி  வேடிக்கை பார்த்தேன்....   நாலு நிமிட்லே வண்டி வருதாம்!

ஏர்ப்போர்ட் போகும் வண்டி வந்ததும் அதில் ஏறி கிளம்புன இடத்துக்கேப் போய்ச் சேர்ந்தோம். இது நமக்கான ஸ்பெஷல் போல.....  ஆரம்பத்தில்   நோ  மற்ற ஆட்கள்!!! ரெண்டாவது ஸ்டேஷன் நங்கநல்லூர் ரோடு. அங்கே சிலர் ஏறுனாங்க  :-)


கீழே பார்க்கிங் போனால்..... பார்க்கிங் அட்டெண்டர் யாருமே இல்லை.  நம்மவரும், சீனிவாசனும் நாலா பக்கமும் போய்ப் பார்த்துட்டு வந்தாங்க. ஒரு ஈ காக்காய் காணோம்!  மொத்த இடமும் விரிச்சோன்னு கிடக்கு!  சிஸ்டம் சரி இல்லேப்பா.... 

குறைஞ்சபட்சம்  நம்ம  வண்டி எண், உள்ளே வந்த நேரம் எல்லாம்  ப்ரிண்ட் செஞ்ச கார்டு ஆரம்பத்துலே கொடுக்கணும். வெளியேறும் வழியில் அந்தக் கார்டைக் காமிச்சால்  கேட் திறக்கற மாதிரி அமைக்கணும். அப்போ வெளியேறும் நேரம் உள்ளே ரெக்கார்ட் ஆகிருச்சுன்னா....  வண்டி ஓனருக்கு  பில் அனுப்பி  பணம் வசூலிக்கலாம்.    இப்ப  கட்டணம் எங்கே  செலுத்தணுமுன்னு தெரியலையே.....   ஒருவேளை வெளியே சாலைக்குப் போகும் இடத்தில் பூத்  இருக்குமுன்னு நினைச்சு  வண்டியை ஓட்டிக்கிட்டுப் போனோம். கடைசியில்  மெயின் ரோடில் போய் சேர்ந்துருச்சு  அந்த வழி.....   ப்ச்.... சிஸ்டம் சரி இல்லைன்றதை ஒத்துக்கத்தான் வேணும்!




அண்ணன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  பேச்சு, சாப்பாடு, சாப்பாடுடன் பேச்சு, சாப்பிட்டபின்னும் பேச்சுன்னு  'போயிட்டு வர்றோம், க்ளிக் க்ளிக், பைபை'  எல்லாம் ஆச்சு. மூணரைக்குக் கிளம்பி   நாலுமணிக்கு லோட்டஸ்.


நாளைக்கு சென்னையை விட்டுக்கிளம்பிடணும். அதுக்கு முன்னால்  வேறெதாவது கோவிலுக்குப் போகணுமான்னார் நம்மவர்.  'அநேகமா எல்லாம் ஆச்சு. சின்ன ஓய்வுக்குப்பின்  அடையார் அநந்த பதுமனை தரிசிக்கப் போகணும்'  என்றேன்.


சொல்ல மறந்துட்டேனே....   ரெண்டு நாளைக்கு முன்னால்   பெஸன்ட்நகர், அறுபடை வீடு கோவிலுக்கும் போய் வந்தாச்சு.  இவர் ஒரு முருகபக்தர்!  கந்தசஷ்டி சமயம் அப்போ! நாங்க ஒரு நாலுமணி வாக்கில் போயிருந்தோம்.  ஒரு சிலர்தான் கோவிலில் இருந்தாங்க. சாயரக்ஷை பூஜைக்குக் கூட்டம் வந்துருமாம்!  இன்றைக்கு (5 ஆம் தேதி) போக முடியாது. கூட்டம் அம்மும் அங்கே!






ஆறு படை வீடுகளின் எல்லா சந்நிதிகளிலும்  போய்க் கும்பிட்டுக்கிட்டு, இந்த ஆறில் எனக்கிஷ்டமான  பழமுதிர்ச்சோலையில் கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டுக் கிளம்பினோம். கோவில்பூனை நல்ல உறக்கத்தில்!

தொடரும்........  :-)


14 comments:

said...

பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில் - அடுத்தமுறை சென்னை போகும்போது போகணும், மூளையில் ஒரு மூலையில் முடிச்சி - நன்றி

said...

வாங்க விஸ்வநாத்.


அங்கேதான் ஒரு பக்கம் அஷ்டலக்ஷ்மி கோவிலும் இருக்கு! ரெண்டு கோவில்களையும் சேர்த்தே கவர் பண்ணிக்கலாம்.

said...

பெசன்ட் நகர் கோவிலுக்குப் போகவேண்டும்.

மெட்ரோ இன்னும் சென்றுபார்க்கலை.(சென்னையில்). அதுவும் பார்க்கணும்.

said...

March 2018 they will connect till Central stretch then the system will be OK. :-)

said...

சென்னை அடிக்கடி வந்துபோனாலும் இன்னும் மெட்ரோ ஏறலை உங்க பதிவைப்பார்த்ததும் ஏறனும் தோணுகிறது என் வழிக்கு பயனில்லை என்றாலும்.

said...

இத்தனை நாட்களுக்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் - அதுவும் புத்தகக் கண்காட்சிக்கு - மற்றொ ரயிலில் சென்றேன். உயரத்திலும், பூமிக்கு அடியிலும் சென்று வந்த அனுபவம் நன்றாக இருந்தது. நான் ரிட்டர்ன் டிக்கெட் எடுத்திருந்தேன்.

கடைசிப் படம் - தூங்கும் பூனை அழகு.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ரெண்டு கோவில்கள் (அஷ்டலக்ஷ்மி, அறுபடை வீடு) அங்கே, கூடவே அடையார் அநந்த பத்மநாபன் கோவிலையும் சேர்த்துக்குங்க !

பெருமாள் ரொம்பவே அழகா இருப்பார் அடையாறில்!

said...

வாங்க குமார்.

ஆஹா... தகவலுக்கு நன்றி. இன்னொரு சென்னைப் பயணம் இருக்கு இந்த வருஷம். இன்னொரு சுத்து சுத்திவரணும்:-)

said...

வாங்க ரமணி.

பயன், பயனில்லைன்னு பார்த்துப் பார்த்து ஒன்னும் செஞ்சுக்க முடியாது பயணங்களில்.

ஆசைக்கு ஒரு முறை போய் வரலாம் :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

ரிட்டர்ன் டிக்கெட் வசதி வந்துருச்சா!!! பேஷ் பேஷ்! இன்னொருக்கா போய் வரணும் :-)

பூனைக்கு பயங்கரத்தூக்கம்.

said...

இப்போ எல்லாம் பெங்களூர் நம்ம மெட்ரோவில் கூட்டம் பின்னித் தள்ளுதாம்

said...

அடையார் அநந்த பத்மநாபன் கோவிலையும் - அதுதான் எங்க தெருவின் கடைசியில் இருக்கிறதே. ஊர் செல்லும்போதெல்லாம் நான் போய் சேவித்துவருவேன் (உண்மையா... கோவிலில் ஒரு நாள் உங்களையும் கோபால் சாரையும் பார்ப்பேன் என்றும் நினைத்துக்கொள்வேன்)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,

நிறைய மக்கள் பயன்படுத்தினால் நல்லதுதான்! சிங்கையிலும் கூட்டம் அம்மும் பல வேளைகளில்.... ஆஃபீஸ் நேரங்களில் சொல்லவே வேணாம்....

said...

@ நெல்லைத் தமிழன்.

அடையாறில் வீடா!!! ஆஹா.... இனி அங்கே கோவிலுக்குள் போகும்போது உங்களைத் தேடுவேன் :-)

சென்னையில் கொஞ்ச நாள் இருந்தப்ப, ரெகுலர் விஸிட்டில் கோவிலிலேயே நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. ஒரு நாள் போகலைன்னா, மறுநாள் என்ன ஏதுன்னு விசாரிப்பெல்லாம் உண்டு :-)