இந்தப் பயணத்தின் நோக்கமான 108 வேலை முடிஞ்சது, ஆனால் மகள் கல்யாணத்துக்குன்னு இன்னும் சில பொருட்கள் வாங்க வேண்டியது பாக்கி இருக்கே. அதுக்காகக் கொஞ்சம் சுத்தல் ..... சின்னதா ஒரு இண்டியன் டச் இருக்கணும், இல்லையா? தாம்பூலப்பை சமாச்சாரம். பேர்தான் சம்ப்ரதாயமா இருக்கே தவிர உள்ளே வைக்கும் பொருட்கள் ஒரு நினைவுப் பரிசுதான்.
முதல்வேலை முதலில்னு நம்ம சாந்திநாதர் கோவிலுக்குப்போய் கும்பிட்டுட்டுக் கிளம்பினோம். நல்ல அமைதியான கோவில்!
அழகான சின்னச் சின்ன பைகள் கிரியில் ஆப்ட்டது. என்ன ஒன்னு எதுவுமே நூறு என்ற எண்ணிக்கையில் கிடைக்கலை..... ஸ்டாக் வைக்கறதில்லையாமே..... இவ்ளோ சனம் இருக்கும் நாட்டுலே இப்படி இருந்தால்......
பொண்ணோட அப்பாவுக்கு கல்யாண ரிஸப்ஷனுக்குப் புது உடுப்பு ஒன்னு வாங்கிக்கணும். இதுவும் இண்டியன் ஸ்டைலில் வேணுமுன்னு பொண்ணு சொல்லிட்டாள்.
இப்பெல்லாம் ஆடைபாதி, அதுக்குண்டான ஆக்ஸஸரீஸ் பாதின்னு ஆகிப்போனதால்..... கல்யாணப்பொண்ணுக்காக சண்டிகரில் நாம் வாங்குன 'கூரைக் காக்ரா'வுக்குப் பொருத்தமா 'நகைநட்டு' வாங்கிக்கணும். நீங்க என்ன சொல்லுங்க...... அசல் தங்க நகைகளில் கூட இவ்ளோ அழகழகான டிஸைன்கள் கிடைக்கறதில்லைப்பா... போனது நாராயணா பேர்ள்ஸ். பாண்டிபஸார் ஆரம்பத்தில் புது ஷோ ரூம் அட்டகாசமா இருக்கு!
நடுவிலே கொஞ்ச நேரம் சந்திப்புகளுக்கு நேரமும் ஒதுக்கணும். பாலாஜி ஏறக்கொறைய தினமும் எப்போ வீட்டு வர்றீங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்கார். இவரை நாம் முதல்முதலா முக்திநாத் கோவிலில் சந்திச்சோம்.
ஒருநாள் மாலை கொஞ்சம் இடைவெளி கிடைச்சப்ப, போனோம். சைதாப்பேட்டைதான். ஆனால் அந்தப் பகுதிகளுக்கெல்லாம் இதுவரை நாம் போனதே இல்லை. வீட்டைக் கண்டுபிடிச்சுபோனா வாசலில் அறிவிப்பு.
அட! என்னென்னவோ பேசுன பாலாஜி, ஜெர்ரியைப் பத்தி ஒரு கோடி காமிச்சுறக்கூடாதோ..... அப்பவே போயிருப்போமே.....
பாலாஜியின் மனைவி டீச்சர். வீட்டுலே பசங்க நிறைய இருந்தாங்க. ட்யூஷனுக்கு வந்த பிள்ளைகள்தான். கூடவே நம்ம ஜெர்ரியும் :-) இப்ப பாலாஜி நம்ம துளசிதளத்தின் வாசகராவும் ஆகி இருந்தாரே.... பயணப்பேச்சுதான்! முக்கியமா முக்திநாத்.
சாளக்ராமம் பத்திப் பேச்சு வந்தப்ப அப்படியே என்னை அவுங்க சாமி அறைக்குக் கூட்டிப்போய் காமிச்சாங்க. எனக்கும்தான் சாளக்ராமம் வச்சுப் பூஜிக்கும் நியமங்கள் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. நாமும் வாங்கி வந்துருக்கோமே...... எப்படியும் இடும்பி, தனக்குத் தோணுறமாதிரிதான் செய்யப்போறாள்னாலும்..... பேஸிக் தெரிஞ்சுக்கிட்டால் நல்லது தானே!
அப்போதான் அவுங்க ஒரு சின்ன அட்டைப்பொட்டியைத் தொறந்து காமிச்சாங்க. உள்ளே சாளக்ராமம். கூடவே கொஞ்சம் அரிசியும். ஙேன்னு முழிச்சதைப் பார்த்து, தினமும் நைவேத்தியம் செய்யணும். அதுதான்னு விளக்கம் சொன்னாங்க...... பாலாஜியின் தங்கஸ்.
(உனக்கு வேணுமுன்னா நீயே சமைச்சுச் சாப்பிட்டுக்கோ... இந்தா அரிசி!)
அட ராமா..... எப்படியும் நமக்கு வீட்டுலே தினமும் சமைக்கத்தானே போறோம். மஹாநைவேத்யமாக் கொஞ்சம் கை காமிக்கப்டாதோ? துளி நெய்யும் பருப்பும் அதன்மேல் விட்டால் போதுமே! ஜஸ்ட் ஒரு ஸ்பூன் சாதம்...... போகட்டும்..... மனசுலே அன்பு இருந்தால் பெருமாள் நாம் செய்யறதையெல்லாம் அனுசரிச்சுத்தான் போறார்..... வேண்டுதல் வேண்டாமை இலன் ஆச்சே....
ஆமாம்... இவ்ளோ அளக்கிறேனே (மனசுக்குள்தான்) நான் ஊர் திரும்பி என்ன செய்யப்போறேன்..... அவனுக்கே வெளிச்சம். எதாவது வழி காண்பிப்பான்...... அப்போ என்ன தோணுதோ.... அது.....
மறுநாள் அண்ணன் வந்து லஞ்சுக்குக் கூட்டிப்போனார். சாப்பாட்டுக்குப்பிறகு நாங்க சந்தியா பதிப்பகம் போனோம். நிர்வாகி சௌந்திரராஜன் அவர்களுடன், அன்றைக்கு சந்தியா நடராஜனும் இருந்தார். போனமுறை விட்ட இடத்தில் இருந்து பேச்சு ஆரம்பிச்சது. எனக்கு ரொம்பப் பிடிச்சது இதுதான். தினமும் பார்த்துக்கறதைப் போலத்தான் நம்ம நண்பர்கள் நடந்துக்கறாங்க :-)
பயணக்கட்டுரைகளைப் பதிப்பிக்கும் சம்பந்தமா சில திருத்தங்கள் செஞ்சு அனுப்பச் சொன்னார். எல்லாம் நடை சமாச்சாரம்தான். ஒரு சில இடங்களில் எழுத்து நடை வந்துருக்காம்..... நானே ஒரு சோம்பேறி..... எப்படி வந்ததோ அது அப்படியே இருந்தால் என்னன்னு தோணல்தான்....
நம்ம பாரா சொன்னதுபோல //வடிவமற்ற வடிவமே ஏன் இதன் வடிவமாக இருந்துவிட்டுப் போகக்கூடாது?//
சென்னைப் பயணத்துலே நம்ம கோபால் கட்டாயம் ஒரு இடத்துக்குப் போகும் சம்ப்ரதாயம் உண்டு. கேரளா முடி திருத்தகம், பாண்டி பஸார். ரொம்பப் பழைய நிறுவனம்! இன்றைக்கு நிறுவனத்தின் ஓனர் (ஸ்தாபகர் பேரன்) இருந்தார். தாத்தாவைப் பற்றிச் சில நினைவுகள்! அடிக்கடி அவர் கண் படத்துக்குப் போனது உண்மை! அதான் மாலை போட்டு மேலே மாட்டி இருக்குல்லே!
ஏற்கெனவே எழுதுனது இங்கே! இந்த வருசம் கடைக்கு வயசு 77 !
நம்ம டி ஆர் சியின் மகனுடைய கல்யாண ரிஸப்ஷனுக்குப் போனோம். நம்ம பதிவுலக நண்பர்கள் சிலரையாவது சந்திக்கும் வாய்ப்பு இருக்குன்னு நினைச்சேன். வெவ்வேற தளத்துலே வரவேற்பும், டின்னருமா இருந்ததில் கோட்டை விட்டாச்:-(
மேலே படம்: நம்ம டிஆர்சியின் மூத்த மகன் அருண் & நம்ம கோபால்.
சாப்பிடப்போனப்ப.... எனக்கு ரொம்பத் தெரிஞ்சவரா ஒரே ஒருவர், நம்ம கோபால்தான் :-)
ஒரே லௌகீகமா இருக்கேன்னு நினைக்காதீங்க..... இன்றைக்கு ஒரு கோவில் விஸிட்டும் ஆச்சு. கச்சேரியை அடுத்த பதிவில் வச்சுக்கலாமா?
ஹிஹி....
தொடரும்....... :-)

10 comments:
கோயிலுடன், பிற அனுபவங்களும்.. அருமை.
அருமை நன்றி
தாம்பூலப்பை potli பாக்ஸ் பெங்களூர்காரங்க கொடுத்தாங்க அழகு .இப்போ ஜூட் பைகளை வாங்கி பிரிண்ட் டெகரேட் பண்ணிடறாங்க ..
ஜெரி அழகா இருக்கான் :) படமெடுக்கும் நீங்களும் படத்துக்குள்ள :)
ஹாஹ்ஹா கூரை காக்ரா செம :) அந்த ப்ளூ கலர்தானே ..
நகையெல்லாம் இப்போ தங்கமே வேண்டாம் விதவிதமா பெர்ல்ஸ் ஸ்வரோஸ்கி எல்லாம் அழகா கிடைக்குதே .புத்தக பதிப்பகம் படம் பார்க்கும்போதே புக்ஸ் வாசனை மூக்கை எட்டுது .
அருமை. நன்றி.
தொடர்கிறேன்.
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வாழ்க்கை முழுசும் அனுபவங்களே! அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை !
வாங்க விஸ்வநாத்.
நன்றீஸ்!
வாங்க ஏஞ்சலீன்.
இந்தியாவில் இந்த மாதிரி சமாச்சாரங்களில் எல்லாம் புதுமை வந்தாச்சுப்பா!
தங்கத்தில்கூட இவ்வளவு வேலைப்பாடு இல்லைப்பா ! ஆனால் எதையும் நான் என் விருப்பத்துக்கு வாங்க முடியாது! மகளுக்கு அனுப்பி அவள் அனுகிரஹிக்கணும்:-)
ஜெர்ரி க்யூட் பாய்!
வாங்க வெங்கட் நாகராஜ்.
தொடர்வதற்கு நன்றிகள்!
வாங்க ஸ்ரீராம்.
வருகைக்கு நன்றி.
Post a Comment