Monday, January 29, 2018

நடத்திக் கொடுத்தான்.......நாராயணன்! ..... (இந்திய மண்ணில் பயணம் 107)

தூக்கத்துக்கும் எனக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம்தான். தூங்கணுமுன்னு நினைச்சா தூக்கம் வரவே வராது. இந்த விஷயத்தில்  நம்ம ரஜ்ஜு  கெட்டிக்காரன். கொடுத்துவச்ச மகராசா......

'கண்ணை மூடிக்கிட்டு அப்படியே இரு. தூக்கம் வந்துரும்'  நம்மவர் சொல்றார். ஆமாம்.... வந்துட்டாலும்.....  ப்ச்.  ஃப்ளைட் பாத்  மட்டுமே என் ஒரே பொழுதுபோக்கு.  எதாவது படிக்கலாமுன்னா , நாம் லைட் போட்டுக்கிட்டால் மத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லையோ.....
நிமிச நிமிசமா... நேரத்தைத் தள்ளி, ஒருவழியாப் பொழுது விடிஞ்சது. வீட்டுக்குப்போனவுடன் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல்களை நினைச்சுப்பார்த்தாலே கதி கலங்குது...
 அண்டைநாடான அஸ்ட்ராலியாவைக் கடக்கவே அஞ்சு மணி நேரம் ஆகும்.     நியூஸியை நெருங்கறோமாம்.  சிங்கைக்கும் எங்களுக்குமே அஞ்சு மணி நேர வித்தியாசம் இருக்கு.
சதர்ன் ஆல்ப்ஸ் சிகரங்கள் மேலே இன்னும் பனி இருக்கு.  கோடைகாலம் இன்னும் மூணு வாரத்துலே ஆரம்பம்..... என்ன கோடையோ...... எப்பவாவது  ஒரு முப்பதைத் தொடும்....   (இந்தப் பதிவு எழுதும் இன்று இங்கே முப்பது. நேத்தும்  முப்பதே. இந்த வருசம்தான் கோடை இங்கே சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருக்கு.... பயங்கரச் சூடு....  ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... இட்லிக்கு அரைச்சு வச்சது நாலரை மணி நேரத்துலே அப்படியே பாத்திரம் நிறைய பொங்கிருச்சுன்னா பாருங்க....! )


கேன்ட்டர்பரி ப்ளெய்ன்ஸ் கண்ணில் பட்டதும்  ஊர் வருதுன்னு ஒரு மகிழ்ச்சி. ப்ரேக்ஃபாஸ்ட்ன்னு  ஒரு பாடாவதி மறுபடியும். காலங்கார்த்தாலே குல்ச்சா (நார்த் இண்டியன் ஐட்டம்) திங்க முடியுதா என்ன?  காஃபியோ கேக்கவே வேணாம்... யக்....  சுடுதண்ணின்னு நினைச்சுக்கிட்டு ஒரு டீயைக் குடிச்சு வச்சேன்.

ஊர் வந்தாச்.  கொஞ்ச நேரம் நமக்கு ஊரைச் சுத்திக் காமிச்சுட்டு  அப்புறமா இறக்கி விட்டார் பைலட். உள்ளூர் நேரம் காலை பத்து.
பொட்டிகளையெல்லாம் எடுத்து,   ரெட் பாத்லே போய்  தீனிகள் இருக்கும் பையைத் திறந்து காமிச்சு, மற்ற பொட்டிகளை ஸ்கேனருக்குள் அனுப்பின்னு  எல்லா சாங்கியங்களையும் முடிச்சு, டாக்ஸி பிடிச்சு வீட்டுக்குப் போய்ச்  சேரும்போது  பதினொன்னே கால்!

முதல் வேலை முதலில்னு சாமி விளக்கு ஏத்திட்டு,  அவசரத் தேவைகளுக்கு ன்னு வச்சுருக்கும்  லாங்க் லைஃப்   பாலை  காய்ச்சி,  சாமிக்குப்  படைச்சாச். கூடவே கேபின் பேகில் இருந்த ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பில் கொஞ்சம். பாவம்....  ஏழு வாரமாப் பட்டினி....
நல்லதா ஒரு காஃபி போட்டுக் குடிச்சதும்தான் உயிர் வந்துச்சு.  அப்புறம் குளியல், சமையல்னு பரபரன்னு  வேலைகள். பயணம் போய்த் திரும்பும் நாளுக்குன்னே ஒரு செட் மெனு வச்சுருக்கேன்.  தால் பாத்,   பாயில்டு பீன்ஸ்.   வயித்தைக் கஷ்டப்படுத்தக்கூடாது....  அப்புறம்  இத்தனை நாள் சமைக்காம இருந்து சுகம் கண்ட உடம்பை, திடீர்னு  வருத்திக்கக்கூடாது,  இல்லையோ?

ஒன்னே காலுக்குக் கண் டாக்டரைப் பார்க்கணும்.  சென்னையில் இருக்கும்போதே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கியாச்.
பரிசோதனைகள் எல்லாம் செஞ்சு,  இன்னொரு கண்ணில் ரெட்டினாவில் ஓட்டைகள் இருப்பதைக் கன்ஃபர்ம் செஞ்சாங்க. இதை லேஸர் மூலம் சரிப் படுத்தணும். அதுக்கான ஸ்பெஷலிஸ்ட் நாளன்னைக்கு வருவார்.   வேற ஊரில் இருந்து வர்றாராம்.  அவருக்கான   அன்றைய வேலைகளை முடிச்சுக்கிட்டு வரணும். அதனால்  மாலை ஆறரைக்கு டைம் கொடுத்தாங்க. பொதுவா  வேலைநேரத்துக்குப்பின்னால் (அஞ்சு மணி)  வேலை செய்யறதில்லைன்னாலும்.... இது ஒரு வகை எமெர்ஜன்ஸின்னு....  இப்படி ஒரு ஏற்பாடு.
வீட்டுக்கு வந்து சின்ன ஓய்வுக்குப்பின்  மூணே முக்காலுக்குக் கிளம்பிப்போறோம் நம்ம ரஜ்ஜுவை, கேட்டரியில் இருந்து கூப்பிட்டு வர்றதுக்கு. நாலு மணிக்குத்தான் திறப்பாங்க. ரஜ்ஜுவின் கூண்டு,  மகள் வீட்டுலே இருக்கு. அங்கே போய் எடுத்துக்கிட்டுப் போகணும். மகளின் செல்லம்  ஜூனோ  ஃபென்ஸ் கட்டை மேல் உக்கார்ந்துருந்தது. தடவிக்கொடுத்துட்டு ஓடுனோம்.  ( ஜூனோ இப்ப   நவம்பர்  20 ,  தெருவைக் கடந்து போகும்போது  வண்டியில் அடிபட்டு சாமிகிட்டே போயிருச்சு.  ப்ச்.... பாவம்....  )
மேலே கம்பி வலை அடிச்சு இருக்கும் வெளிப்பகுதியில் இருந்தான். நம்ம குரலைக் கேட்டதும்  முகத்தில் ஒரு மகிழ்ச்சியும் கோபமுமா ஒரு பார்வை.  வீட்டுக்கு வந்ததும்  கூடத்தில் போட்டு வச்சுருக்கும் பெட்டிகளை   மோந்து பார்த்துட்டு, அலட்சியமாத் தோட்டத்துக்குப் போயிட்டான்.   கொஞ்ச நேரம் ஆகும் சமாதானமாக....  :-)  வீட்டுலேயும் வெளியேயும் எதாவது மாறுதல் இருக்கா? யாராவது (!!) பூனைப்பசங்க , தான் இல்லாத நேரத்துலே வந்து  போனாங்களா? எல்லாம் செக் பண்ணனும் இல்லையோ.... :-)


நமக்குக்  களைப்பா இருந்தாலும் இப்போ ரெண்டுங்கெட்டான் நேரம் என்பதால் தூங்க முடியாது.  ஒன்னு ரெண்டு பெட்டிகளையாவது திறந்து  சாமான்களை வெளியே எடுக்கலாம்.  முதலில் நம்ம தசாவதாரங்கள்  எப்படி இருக்கோ?  ஒவ்வொன்னையும் துப்பட்டாவில் சுத்திப் பத்திரமாத்தான்  வச்சுருந்தார் நம்மவர். ஆனாலும்.... எந்த கதியில் இருக்குமோன்னு ஒரு பயம்தான்...

பெருமாள் அருளால் சேதம் ஒன்னும் இல்லை.... சாமி அறை ஷெல்ஃபில் மேல் தட்டில்  அடுக்கினேன்.  என்னமோ இதுக்குன்னே இடம் பண்ணி வச்சாப்லெ சரியா அடங்கிருச்சு!
அப்புறம் நம்ம காத்மாண்டு புட்டா நீல்கந்தா ..... அவரையும் ஏளப்பண்ணியாச் !
போதும் இன்றைக்கான வேலைகள்.  ரஜ்ஜுவை சமாதானப்படுத்தி  சாப்பாடு கொடுக்கலாம்.....

எப்படியோ   இந்த நூத்தியெட்டு திவ்யதேசக் கோவில்களின் தரிசனங்களை நல்லபடியா முடிச்சுக் கொடுத்த எம்பெருமாளுக்கு  மனம் நிறைஞ்ச நன்றியைச் சொல்லாமல்  இருக்க முடியலை.....  நடத்திக் கொடுத்தான்.......நாராயணன்!

வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமாத் தூங்கி, வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்தும் ஆச்சு. இன்றைக்குத் தேதி  நவம்பர் ஒன்பதுன்னு,   செப்டம்பர் 18ன்னு தேதி காமிச்சுக்கிட்டு இருந்த தினக்காலண்டரில் பழசையெல்லாம் கொத்தாகக் கிழிச்சுட்டு இருக்கும்போது,  அடுக்களைக்கு வந்த நம்மவர் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்..........

ஐநூறு ரூபாய் நோட்டு  செல்லாதாம் !!!!!!!  

ஐயோ.................

தொடரும்........ :-)

PINகுறிப்பு: பயணம் முடிவுக்கு வந்தே வந்துருச்சு,  இல்லே!!!  சாளகிராமம் கொண்டு வந்துருக்கோமே..... அதைப் பற்றிக் கொஞ்சம் அடுத்த பதிவில் எழுதிட்டு  முடிச்சுக்கலாம்.  ஓக்கே?

தமிழ் மணத்துக்கு என்ன ஆச்சு?  அங்கே ஒரு வாரமா எதையும் இணைக்க முடியலையே.......

இப்பப் பார்த்தா.... அந்த ஓட்டுப் பட்டையையே  காணோம்!!   கிடைக்கிற ஒரு ஓட்டும் போச்சு  :-(   ( அதுவே என் ஓட்டுதானாக்கும் :-)


11 comments:

said...

தமிழ்மணம் கவலை உங்களுக்கு
ஐநூறு கவலை அண்ணனுக்கு
இனி அடுத்தக் கோவிலை எப்போ தரிசிக்கப்போறோம்னு கவலை (எதிர்பார்ப்பு) எங்களுக்கு

அருமை நன்றி

said...

காட்மன்ட் புத்த நீல்கண்ட் சிற்பத்தைப் பார்த்தபிறகுதான், அட, இது முக்தினாத் பயணம் மற்றும் தென் இந்தியப் பயணம் சேர்ந்த பெரிய பயணமாச்சே என்பது ஞாபகம் வருகிறது. இதில்தானே இடையில் சென்னையில் கோபால் சார், கண்ணை டாக்டரிடம் காட்டவேண்டாம், நியூசிக்கே சென்று காட்டிக்கொள்ளலாம் என்று வந்தது என்பதெல்லாம் ஞாபகம் வருகிறது (நைமிசாரண்யத்தில் சாப்பாடு கிட்டத்தட்ட ரெடியாகும்போதும் சாப்பிடவேண்டாம் என்று தீர்மானித்து அங்கிருந்து கிளம்பியதும் மனதில் ஓடுகிறது).

என்ன இருந்தாலும் நம் யதாஸ்தானத்துக்குச் சென்று சேரும்போது கிடைக்கும் நிம்மதியே தனிதான்.

said...

மெனக்கெட்டு தமிழ்மண வாக்கு நிறைய இடுகைகளுக்கு அளிக்காதது வேறு மனதில் தோன்றவச்சுட்டீங்க. இனி தமிழ்மணம் சரியானபிறகு, கண்டிப்பாக வாக்களிக்கிறேன்.

said...

காத்மாண்டு புட்டா நீல்கந்தா ...

தசாவதாரங்கள் ....ஆஹா அழகு...

said...

உங்களுக்காக ஒரு தகவல். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில், திருப்பதி லட்டு, அவங்களோட மைசூர்பா, சாக்லேட் சோன்பஃப்டி போன்றவைதான் நல்லா இருக்கும். அல்வா, பாதுஷா, சந்த்ரகலா/சூர்யகலா (நீங்க வாங்கிக்கொண்டு சென்றது) நல்லாவே இருக்காது. அதுபோல் அடையாறு ஆனந்தபவனில், கோவாவையும் ஜீனியையும் வைத்துச் செய்யும் தோடா பர்ஃபி, பனீர் ஜாமூன், ஸ்வீட் பன்-உங்களுக்குப் பிடிக்காதுன்னு நினைக்கறேன், ஆகியவை நல்லா இருக்கும். கிராண்ட் ஸ்வீட்ஸ்ல, அப்பம், அதிரசம், தேங்காய் பர்பி போன்ற டிரெடிஷனல் ஐட்டம்ஸ் நல்லா இருக்கும். சுஸ்வாதில், தஞ்சை மனோகரம் நல்லா இருக்கும். யாருமே இனிப்பு சீடையை உருண்டையா செய்யறதே இல்லை.

said...

ஹைதராபாத் பற்றிய என் பதிவுக்கு உங்கள் பொஇன்னூட்டமேதும் இல்லைஅபோதான் நினௌவுக்கு வந்தது ஹைதை ஒருதிவ்ய தேசனில்லையே என்று விஷ் கோபால் எ நைஸ் டைம்

said...

உலகெலாம் சுத்தினாலும் நம்ம வீட்டுக்கு வந்து ஒரு கப் ரசம் சாதம் குடிச்சாலும் அதன் மகிமையே தனி :) சாவதாரங்கள் பத்திரமா சேர்ந்தாங்களே சந்தோஷம் .ரஜ்ஜு grumpy லுக் விடறான் :) எனக்கு தூக்கம் வரணும்னா மல்ட்டி இருக்கா அவளை பக்கத்தில் வச்சா போதும் முதுகை மசாஜ் தலை மசாஜ்லாம் இலவசமா கிடைக்கும் தூக்கத்தோட :)

இதுவரைக்கும் தமிழ்மணம் உங்கள் வாக்கை கூட நான் பார்த்ததில்லைக்கா இனிமே குத்திருவோம் வரட்டும் தமிழ்மணம் இப்போ எதோ பராமரிப்பு நடக்குதுன்னு படிச்சேன் .
பாவம்ம்க்கா ஜுனோ .பிரபு கூட என்னை தேடி மூணாவது தெருவில் இருந்து வரான் ஆனா கேடி கவனமா ரோட் க்ராஸ் செய்வானாம் கணவர் ரெண்டுமூணுடைம் பார்த்திருக்கார் .எங்க பிள்ளைங்க வீட்டுக்கு பின் பக்கம் மரத்தில் ஆடுறதோட சரி ரோட் தெரியாதது .

said...

வழக்கம்போல நிறைவான சுற்றுலா சென்ற உணர்வு.

said...

//பயணம் போய்த் திரும்பும் நாளுக்குன்னே ஒரு செட் மெனு வச்சுருக்கேன். தால் பாத், பாயில்டு பீன்ஸ். வயித்தைக் கஷ்டப்படுத்தக்கூடாது.... அப்புறம் இத்தனை நாள் சமைக்காம இருந்து சுகம் கண்ட உடம்பை, திடீர்னு வருத்திக்கக்கூடாது//

நான் தால்பாத்தோட அப்பளம் பொரிச்சுக்குவேன். கூடவே ஊர்லேந்து கொண்டாந்த வெங்காய பக்கோடா மற்றும் மிளகுத்தூள் தூவிய சிப்ஸ். நைட் எட்டு மணிக்கு வந்திறங்கி ஒன்பது மணிக்கு அடுப்பைப் பத்த வெச்சா இதான் முடியும் :-).

said...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை திடீர்ன்னு காணோம். இப்ப அளி அளின்னு அளிச்சுட்டிருக்கேன். ஏத்துக்குது.

said...

Akka sorry for the mistake. Usually i type my comments in google. Its தசாவதாரங்கள்//