மகளுடன் பேசி, இன்னும் ஏதாவது கடைசி நிமிஷத் தேவை இருந்தால் உடனே சொல்லச் சொன்னோம். 'இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு, எனக்கு யோசிக்க'ன்னு கேக்கறாள்! அஞ்சு நிமிட்னு சொல்லலாமா?
வேணாம்...பாவம்.... அரைநாள்னு சொன்னேன். இந்தியாவுக்கும் நியூஸிக்கும் நடுவிலே ஏழரை இருக்கு! நான் மணியைச் சொல்றது மணியை....
'ஓடிக்கிட்டே இருக்காதே... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு'ன்னு சொல்லிக்கிட்டே நம்மவர் பதற்றமா இருக்கார் :-) எல்லாம் எடைப் பிரச்சனைதான்..... அடங்குமா, அடங்கிடுமா, இல்லே கூடுதல் காசு அழணுமான்னு அவரவருக்கு ஆயிரம் எண்ணங்கள் !!!
இன்றைக்குத் தோழிகள் சிலர் என்னை சந்திக்க வர்றாங்க. அண்ணிக்கும் அண்ணனுக்கும் இவுங்க எல்லோரும் தெரிஞ்சவங்கதான்:-) பதினொரு மணின்னு முடிவு செஞ்சு அப்படியே ஆச்சு. சிலசமயங்களில் கீழே இருக்கும் ரெஸ்ட்டாரண்டிலேயே பகல்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு பேசிக்கிட்டு இருப்போம். நாங்க லேடீஸ் ஒரு இடத்துலேயும், நம்மவரையும் அண்ணனையும் வேறொரு இடத்திலேயும்னு உக்கார்த்தி வச்சோமுன்னாதான் எங்களுக்கு ஜாலி. நாங்க நாங்களாவே இருக்கணுமுல்லையா?
'இந்த முறை வெளியே போய் சாப்பிடும் ப்ளான் இருக்கா'ன்னு நம்மவர் கேட்டதுக்கு 'இல்லை... பேசணும். டைம் வேஸ்ட் பண்ண முடியாது'ன்னேன்:-)
கீழே ரெஸ்ட்டாரண்டு புது மேனேஜ்மென்ட்டுன்னு ஆனது முதல் வாசப்பக்கமும் ஒரு வழி வச்சு திருப்பிப்போட்ட 'ட' வடிவில் டைனிங் ஹால் அமைஞ்சுருக்கு. வெவ்வேற மூலை சரியான்னதுக்கு, நாங்க வெளியே போய் சாப்பிடப்போறோம். நீங்க இங்கேயோ இல்லை எங்கேயோ போய் சாப்பிட்டாலும் பிரச்சனை இல்லைன்னு பதில் வருது! ரொம்ப சத்தம் போட்டுடறோமோ?
ஒரு மணி ஆனதும் கீழே ரெஸ்ட்டாரண்ட் போய் சாப்பிட்டோம். திரும்ப அறைக்கு வந்து எங்கள் பேச்சைத் தொடர்ந்தோமுன்னு தனியாச் சொல்லணுமா?
வெளியே போனவங்க, தைக்கக் கொடுத்துருந்த பேண்ட்ஸ், ஷர்ட்ஸ் எல்லாம் வாங்கிக்கிட்டு, 'எங்கேயோ' போய் சாப்ட்டுட்டு, கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுக்கிட்டு மூணரை மணிவாக்கில் திரும்பி வந்தாங்க. நம்மவர் (நான் சொல்லாமலேயே) பூ வாங்கி வந்துருந்தார்! 'அட! 'ன்னு தோழிகள் மெச்சினவுடன், எப்படி நம்ம ட்ரைய்னிங்னு ஒரு பார்வை பார்த்தேன்:-)
கூடிப்பேசி கூடிப்பேசியே நாலரை மணி ஆகிருச்சு. ரொம்ப ட்ராஃபிக் ஆரம்பிக்குமுன் வீட்டுக்குப் போயிடணுமுன்னு அண்ணன் எப்பவும் போல சொல்லிட்டுக் கிளம்பிப்போனார் அண்ணியுடன். அடுத்த பத்தே நிமிட்டில் பறவைகள் எல்லாம் பறந்து போயாச்சு!
நாங்களும் நம்ம கபாலியைக் கண்டுக்கிட்டு வரலாமுன்னு கிளம்பிப்போனோம்.
ஒரு தெருமுனையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான எழுச்சி விளக்கக்கூட்டம் னு ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. இஸ்லாம் மத சம்பந்தப்பட்டதுன்னு தெரிஞ்சது. என்ன ஏதுன்னு எனக்குத் தெரியலை....
ஆனா.... ஆளாளுக்கு ஒரு சட்டம்னு இருக்கும் நாடாச்சே...... ஏழைக்கொன்னு,
பணக்காரனுக்கொன்னு, அரசியல்வியாதிக்கொன்னு, சாதாரணனுக்கொன்னுன்னு இருக்கறது போதாமல் ஒவ்வொரு மதத்துக்கும் ஒன்னுன்னா..... ப்ச்
சாயரக்ஷை பூஜைக்கு முன்னே கோவிலுக்குப் போய் சேர்ந்து, புள்ளையார் , முருகன் தொடங்கிக் கற்பகாம்பாள், கபாலி தரிசனம் ஆச்சு. மறுநாள் கந்த சஷ்டி ! வாகனங்கள் எல்லாம் பெயின்ட் அடிச்சுக் கோவிலே பளிச்ன்னு இருக்கு!
பிரகாரத்தில் வலம் வந்து பசுக்கன்றுகளையும் பார்த்துட்டு இருக்கும்போது , அங்கே இங்கேன்னு ஒவ்வொரு பூனைகளா வர ஆரம்பிச்சது....
ஒரு பெண்மணி, பாட்டிலில் கொண்டு வந்துருந்த பாலை அங்கங்கே சின்னத் தட்டுகளில் ஊத்தி வைக்கிறாங்க. ஆஹா....... அருமை! கடவுளுக்குப் பிரியமான செயல்! அவுங்களோடு கொஞ்சம் பேசுனப்ப, ஆழ்வார்பேட்டையில் இருந்து தினமும் வர்றாங்களாம்.
கோவிலுக்கு வந்த புண்ணியமும், பசிச்ச வயித்துக்குப் பால் கொடுக்கும் புண்ணியமுமா டபுள் புண்ணியம் உங்களுக்குன்னு சொல்லி வாழ்த்தினேன்!
கோவிலுக்கு அப்பா அம்மாவுடன் வந்த சில சின்னப் பசங்க பூனைகளை அடிச்சு விரட்டுதுங்க....... ப்ச்.... என்ன வளர்ப்போ? அந்தப் பெற்றோர்களும்.... என்னவோ தன் பிள்ளை இவ்ளோ வீரனா இருக்கானேன்னு அகமகிழ்ந்து மயங்கி நிக்கறாங்க..... ச்சே.... உயிர்களிடத்தில் அன்பு வேணும் பாப்பான்னு இதுகளுக்குத்தான் முண்டாசு பாடி வச்சுட்டுப்போயிருக்கார்!
வெளியே வந்து வடக்கு மாடவீதிப் பக்கம் நடந்தப்பக் கண்ணில் பட்டது நம்மாத்துக் காஃபி. என்னமாத்தான் இருக்குன்னு பார்க்க வேணாமோ? பரவாயில்லை. நாட் பேட்!
நம்ம ஆதிகேசவனையும் தரிசனம் பண்ணிக்கலாமேன்னு போய்க் கும்பிட்டுட்டு திரும்பும்போது, வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலுக்குள் (ரெண்டு கோவில்களும் ஒரே தெருவில்தான், ஒரு இருவது மீட்டருக்குள்)போனோம்.
நம்ம கேஷவ், (பூனா சாரி மாமா பேரன்) ஆஃபீஸ் முடிஞ்சு வந்ததும் குளிச்சுட்டு நேராக் கோவிலுக்கு வந்து இங்கே வாலண்டியரா பெருமாள் ஸேவை செஞ்சுக்கிட்டு இருப்பதை நம்மவரிடம் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே..... நம்மைப் பார்த்துட்டுக் கேஷவே வந்தாச்சு.
இந்த முறை சென்னைப் பயணத்தில் பார்க்கவே முடியலை என்ற குறை(யும்) தீர்ந்தது :-) இப்பெல்லாம் இளைஞர்கள் ஏராளமாப் பெருமாள் ஸேவையில் தங்களை ஈடுபடுத்திக்கிறாங்க! பார்க்கவே சந்தோஷமா இருக்கு!
வரும் வழியில் அப்படியே சரவணபவனில் ராச்சாப்பாடு (ஆப்பம் & தேங்காய்ப்பால்) முடிச்சுக்கிட்டு லோட்டஸ் வந்து சேர்ந்தோம்.
மகளிடமிருந்து இதுவரை லிஸ்ட் வரலை. நம்மவரும் பெட்டிகளை பேக் பண்ண ஆரம்பிச்சார். காலையில் பார்க்கலாம். கடைக்குப் போகணுமா இல்லையான்னு...... :-)
தொடரும்.......:-)

15 comments:
நட்புகளுடன் சந்திப்பு இனிமை. கபாலி கோவில் பூனைகள் அழகு.
வாங்க ஸ்ரீராம்.
நட்பு என்பதே இனிப்புதானே!
கோவில் பூனைகள் அழகு. ஆனால் எல்லாம் ஒல்லிப்பிச்சானா இருக்குதுகள் :-( ப்ச்.... பாவம்....
இப்படியான சந்திப்புகள் தான் ஒரு Refreshment Package நமக்கு. தினம் தினம் ஓடிக் கொண்டிருப்பதில் இருக்கும் அலுப்பு எல்லாம் இப்படியான சந்திப்புகளில் தீர்ந்து விடுகிறதே....
தொடரட்டும் பதிவுகள். தொடர்கிறேன்.
நட்புகளுடன் சந்திப்பு, கோயில் உலா, பூனைகளின் வரவு...ரசனையான பதிவு.
ஊருக்குக் கிளம்பும் நாள் (இந்தப் பயணத்தில்... இது மகளின் திருமணத்துக்கு முந்தைய பயணம்தானே) வந்துவிட்டதா? அனைத்தையும் படித்தேன்.
'எப்படி நம்ம டிரெயினிங்' - ஆண்களுக்கு கிரெடிட் கொடுக்க இந்தத் தாய்க்குலங்களுக்கு மனம் வராதே. அவ்வளவு அலைச்சலிலும் அவர் மறக்கலை.
கேசவ் பற்றி முன்பே படித்தது ஞாபகம் வந்தது. உங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்துவந்தால், நீங்கள் சந்திப்பவர்கள் எல்லோரும் எங்களுக்கு வேற்றுமுகமாக இல்லை.
எத்தனை முறையோ கபாலீசுவரர் கோவிலுக்குப் போனாலும் உங்கள் அவதானம் எங்களுக்கு இல்லை என்பதே உண்மை
உங்கள் பயணக் கதை முடியப் போகிறதா? அடடா!
அழகிய மகளிர் ஒன்றுகூடல். உஷா மேடமும் இருக்காங்க இல்லையா படத்தில்
//ப்ச்.... என்ன வளர்ப்போ? அந்தப் பெற்றோர்களும்.... என்னவோ தன் பிள்ளை இவ்ளோ வீரனா இருக்கானேன்னு அகமகிழ்ந்து மயங்கி நிக்கறாங்க..... ச்சே.... உயிர்களிடத்தில் அன்பு வேணும் பாப்பான்னு இதுகளுக்குத்தான் முண்டாசு பாடி வச்சுட்டுப்போயிருக்கார்!//
ட்ரூ அக்கா ..சில பேரன்ட்ஸ் எங்கே தொட விட்டா அன்பு கூடி வீட்டில் வளக்க கேப்பாங்களோன்னும் நினைக்கிறாங்க .
சில குணங்கள் பெற்றோரால் பிள்ளைகளுக்கு சொல்லி தரப்பட்டு வளர்க்கப்படணும் .அடிச்சி துரத்தும் பழக்கம் சில பெரிசுங்களுக்கும் இருக்கு :(
இதெல்லாம் வீரம் இல்லை அவமானம் தன்னிலும் எளிய பூனையயை அடிச்சு அது ஓடறதை பார்த்து ஆனந்தபடுவது என்ன குணமோ .
ஒல்லி வந்து நம்மூர் பூனைகள் வெரைட்டிக்கா வெளிநாட்டதாய் பூனைஸ் கொஞ்சம் மொழுக் கொழுக் வெரைட்டி :).
பால் கொண்டாந்து தரும் அந்த ஆன்ட்டி வாழ்க ..ஆனா இங்கே பால் கொடுக்க கூடாதுன்னு சொல்றாங்க டாக்டர்ஸ் லாக்டோஸ் இண்டாலரன்ஸ் வருமாம் .ஆனா நான் எப்பாச்சும் மல்ட்டி ஜெசிக்கு குடுப்பேன் :)
வாங்க வெங்கட் நாகராஜ்.
ரொம்பச்சரியாச் சொன்னீங்க! புத்துணர்வு இப்படித்தான் கிடைக்குது! அதை நினைச்சே அடுத்த பயணம் வரை நாட்களைத் தள்ளறேன் !
வாங்க ஜம்புலிங்கம் ஐயா!
எல்லாம் நடந்தது நடந்தபடி :-)
வாங்க நெல்லைத்தமிழன்.
ஆமாம். மகள் திருமணத்துக்கு முந்திய பயணம்தான் இது!
தொடர் வாசிப்பால் விளையும் நன்மைகளில் இதுவும் ஒன்று! வேத்து முகம் கிடையாது, கேட்டோ:-)
கேஷவ்க்கு இன்னும் நாலுநாளில் நிச்சயதார்த்தம் ! செப்டம்பரில் கல்யாணம் வச்சுருக்காங்க. நேத்துதான் சேதி அனுப்பினார் கேஷவின் அப்பா!
வாங்க ஜிஎம்பி ஐயா.
இந்தக் கோவில் கொஞ்சம் சிம்பிளான கோவில்தான். ஒரே ஒரு பிரகாரம்தான்! கபாலி, கற்பகாம்பாள் சந்நிதிகளில் உட்பிரகாரங்கள் உண்டு! அதுவே ரொம்ப நாளைக்குப்பிந்தான் தெரியவந்தது!
வாங்க பானுமதி.
இந்தப் பயணக்கதைதான் முடியப்போகுதே தவிர பயணங்கள் முடிவதில்லைதானே :-)
பயணக்கதைகள் விருப்பம் என்றால் துளசிதளத்தில் ஏகப்பட்டவை உண்டு !
வாங்க ஏஞ்சலீன்.
இங்கேயும் பால் தரவேண்டாம்னுதான் சொல்றாங்க. ஆனால் ஃப்ரிட்ஜ் திறந்து பால் கேன் வெளியே எடுத்தால் ரஜ்ஜு ஓடி வந்து கிச்சனில் நிக்கும். ஒரு டீஸ்பூன் பால் விட்டால் ரெண்டு நக்கு :-)
நம்ம பக்கங்களில் பூனை பால் குடிக்கும் என்றுதானேப்பா சொல்லித் தர்றாங்க !
இந்தியப்பூனைகள் வேற வகைதான்.
மகளிர் ஒன்று கூடலில் அடுத்த வருஷம் உஷா இருக்க வாய்ப்பில்லை. சென்னையை விட்டுட்டுப்போயிட்டாங்கப்பா!
Post a Comment