Wednesday, January 03, 2018

எண்ணம் முழுதும் கண்ணன் தானே!! (இந்திய மண்ணில் பயணம் 97)

இவனுக்கும் இவருக்கும் என்னவோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருக்கும் போல!  வேத்து முகம் இல்லாமல் ரொம்பவே அன்னியோன்யமா  (இயல்பாக?) இருக்காங்க பாரேன்னு எப்பவும் எனக்குத் தோணுவது உண்மை :-)

சரவணபவனில் சாப்பாடு ஆனதும்  கொஞ்சூண்டு நேரம் விஜயா ஸ்டோரில் சுத்தி, சில அலங்காரப்பொருட்கள் (எனக்கில்லைப்பா.... நம்மூட்டு சாமிகளுக்கு!) வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பிக் கொஞ்சம் ஓய்வு.

நாம் பிற்பகல் சந்திக்கப்போகும் மக்கள்ஸிடம் அவுங்களுக்கு(ம்) தொந்திரவு இல்லாத நேரமாப் பார்த்து  முடிவு செஞ்சுக்கணும்தானே?  தோழி சொன்ன நேரத்துக்கு அங்கே போய்ச் சேர்ந்தோம். தோழியின் கணவர் வீட்டிலிருக்கும் நேரமானால் இன்னும் மகிழ்ச்சிதான்!  உண்மையில் தோழியின் கணவர்தான் எனக்கு ஏற்கெனவே அறிமுகமான நண்பர்!!

பலத்த வரவேற்பு!  கண்ணு, மூஞ்சியெல்லாம் அப்படி ஒரு சிரிப்பும் பூரிப்பும்!  போன சந்திப்பில் விட்ட இடத்தில் இருந்து பேச்சைத் தொடர்ந்தோம்!  சொல்லணுமா என்ன?  :-)
கண்ணனும், நம்மவரும் அவுங்க வேலையை அவுங்க பார்க்க ஆரம்பிச்சாச்!நான் ஒரு விளக்கமும் சொல்லத் தேவையே இல்லை.... படக்கதை பாருங்க:-)


 போனமுறைக்கு இப்போ இன்னும் உயரமா வளர்ந்துருக்கான்.
பாலா & லக்ஷ்மி வீட்டில் இன்னொரு எழுத்தாளரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது!  சரவணன் பார்த்தசாரதி!  இவருடை புத்தகம் ஒன்னு   வரப்போகும் புத்தகத் திருவிழாவில் வெளியாகுதாம்!    திருவிழாவை நாம் எப்படியும் மிஸ் பண்ணப்போறோமேன்னு.........  ஏக்கம் வந்தாலும் நொடியில் சமாளிச்சுக்கிட்டேன் !

பதிவர் சந்திப்புகளிலே ஒரு சமாச்சாரம்தான் எல்லோருக்கும் பொது....   நேரம் எப்படிப் பறந்துருச்சுன்னு  வாய் பிளக்கறது :-)  இல்லையோ!!

அங்கிருந்து நேரா நாம் தாம்பரம் போறோம்.  எங்க அத்தை, எங்க வீட்டு வேளுக்குடி !
திவ்யதேச யாத்திரையை நல்லபடி முடிச்சதைப் பற்றிப்  பேசவேணமா?  பேசினோம், பேசினோம்.... 

எங்க அத்தையின் மருமகள், இன்னொரு சின்ன வேளுக்குடியா உருவாகிக்கிட்டு இருக்காங்க!  கோவில் விவரங்கள் எல்லாம்  மனப்பெட்டியில்!   அதுவும் அடுக்கடுக்கா, அழகா.....  என்னைப்போல  கொட்டிவச்சுட்டுத் தேட மாட்டாங்க....  நாக்கு நுனியில்!  (விரல்நுனின்னு எத்தனைநாள்தான் சொல்லிக்கிட்டு இருக்கறது? )
அங்கேயே நமக்கான ராச்சாப்பாடு ஆச்சு!  சுடச்சுட ஆவி பறக்கும் இட்லி:-)

லோட்டஸ் திரும்பும்போது மனசு பூரா மகிழ்ச்சி!
இனிய சந்திப்புகள் இன்னும்  வரும்...... நாடு வந்து சேரும்வரை.... இன்னும் சிலநாட்கள் பாக்கி இருக்கே!

தொடரும்.........:-)16 comments:

said...

பதிவை ரசித்தேன். இவர்களைப் பற்றி உங்கள் இடுகைகளில் படித்திருக்கிறேன். தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி.

said...

இனிக்கும் நட்புகள்.

said...

நினைத்தாலே இனிக்கும்

said...

எங்கள் வீட்டில் சந்திச்சது எல்லாமே அரக்கப் பரக்க என்றிருந்ததுபோல் இருக்கிறது

said...

இப்படி குழந்தைகளோடு குழந்தையாய் மாறி விளையாடுவது தனி சுகம் ..மிகவும் இயல்பாக இருக்கு படங்கள் எல்லாம் கண்ணனும் கண்ணனின் மாமாவும் சுற்றுப்புறத்தையே மறந்து தனி உலகில் இருக்காங்க :) .கொடுத்தவைத்த கண்ணன் :)
அந்த ஆவி பறக்கிற இட்லியையும் காட்டியிருக்கலாம் :)

said...

தொடரும் சந்திப்புகள் இனிமை. தொடர்கிறேன்.

said...

உங்கள் பதிவில் எனக்குப் பிடித்த விஷயம் அலங்கார வார்த்தைகள் எதுவும் இல்லாமல் நேரே உட்கார்ந்து பேசுவது போல் மிகவும் இயல்பாக எழுதுவதுதான். வாழ்க வளமுடன்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தொடர்வதற்கு நன்றி!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றீஸ்!

said...

வாங்க ஸ்ரீராம்.

நட்பை எப்பவும் பேணி வளர்க்கணும்தானே!

said...

வாங்க ராஜி.

உண்மைதான்ப்பா..... அடுத்தமுறை சந்திக்கும் வரை அசைபோட்டு மகிழ்வதே வாடிக்கை. நினைச்சால் போய் வரும் தூரமா இடையில்?

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உங்க வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கறதில் நிறைய நேரம் போயிருச்சு. அடுத்த முறை இன்னும் பேசுவோம்:-)

said...

வாங்க ஏஞ்சலீன்.

எதோ கெமிஸ்ட்ரி இருக்குப்பா!!!!

ஆவி அடங்குமுன் உள்ளே தள்ளிட்டோமே.... சாப்பாட்டைக் காக்க வச்சால் எங்கபாட்டிக்குப் பிடிக்காது. நாம்தான் உணவுக்காக காத்திருக்கணும்னு சொல்வாங்க. உறவினர் வீடு என்பதால் நானும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பேன்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வருகைக்கு நன்றி!

said...

வாங்க பானுமதி!

அடிப்படையில் நான் ஒரு கதை சொல்லிதானேப்பா... அதான் சொல்லிக்கிட்டே போறேன். அலங்காரம் எல்லாம் புனைவுக்குத்தான், இல்லையோ!!!!