Friday, January 06, 2017

நம்ம குபேரன், இவுங்களுக்கு Caishen !!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 115)

பயணங்களில் ஒரு சௌகரியம் என்னன்னா.... காலையில் கண்ணைப்பிட்டுக்கும்போதே.....  மூளையில்  இன்றைக்கு என்ன சமைக்கணும் என்ற கவலை வர்றதே இல்லை.  எழுந்தோமா, குளிச்சு ரெடி ஆனோமாதான்.  எப்பப் பார்த்தாலும் போன இடத்துக்கே ஏன் திரும்பத்திரும்பப்  போறோமுன்னு கூட நினைச்சுக்குவேன்.  அதுக்கு பதிலும் கூடவே வந்துரும்......   இனி எப்போ இதெல்லாம் வாய்க்கப்போகுதோ..... இப்பக் கிடைக்கும்போது  வுட்டுறக்கூடாது.  பார்த்துக்கோ.....  அதுவும் கோயில்ன்னா......   ஊஹூம்... இங்கே சான்ஸே இல்லை.....
சென்னைன்னாக் கூட  கார் வேணும், இல்லே ஆட்டோ பிடிக்கணும் .... இந்தக் கவலை  ஒன்னுமில்லாமல்  காலாற நடந்தே கோவிலுக்குப் போகலாம். நடைபாதை என்பது நடக்க மட்டுமே!  கண்டமாதிரி  கூட்டமா  வண்டிகள் மோதித் தள்ளறமாதிரி  வராது.  பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது  தைரியமாக் கடந்து போகலாம். சாலைவிதிகளை எல்லோரும் கடைப்பிடிப்பதால் பிரச்சனையே இல்லை.
எதானாலும்  முதலில் சீனுன்னு போனப்பக் கோவிலில் கூட்டமே இல்லை. புன்முறுவலுடன் சீனூஸ் இருவரும்:-) தரிசனம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் வாசித்தல், வலம் வருதல், கூடவே க்ளிக்ஸ்ன்னு எல்லாமே  ஆச்சு. அலுக்கவே அலுக்காத ருட்டீன்:-)

சாயந்திரம் கிளம்பும்போது  வந்து சொல்லிக்க முடியுமான்னு தெரியலை. அதனால் இப்பவே டாடா, பைபை எல்லாம்  பெருமாள் அண்ட் கோ வுக்குச்   சொல்லிக்கிட்டு வெளியே வந்து  சாலையைக்கடக்கும்போது நேத்து காலை ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட இடம் நம்ம ராஜ்யலக்ஷ்மியோடது....ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மன் ரெஸ்ட்டாரண்டுன்னு தெரிஞ்சது.  இன்றைக்கு லீவோ என்னவோ....  ஒருவேளை எட்டுமணிக்குத் திறக்கறாங்க போல.....  ஆனால் ஒன்னு ராஜ்யலக்ஷ்மின்ற பெயரைப் பார்த்ததும் 'நம்ம ரஜ்ஜு எப்படி இருக்கோ.. குழந்தை' ன்னு  மனசுக்குள் பரிதாபம் வரத்தான் செஞ்சது.  ரஜ்ஜுவின் முழுப்பெயர் தெரியுமோ? ராஜலக்ஷ்மி !
மூடி இருக்கும் கடைகளின் முன் காலியா இருக்கு நடைபாதையில் கால்வீசி நடந்து போய்  செராங்கூன் சாலையின்  ஆரம்பத்துலே இருக்கும் கோமளவிலாஸ் போய்ச் சேர்ந்தோம். எதிரில் இருக்கும் வீரமாகாளியம்மனுக்கு  இந்தாண்டை இருந்தே ஒரு கும்பிடு. "அம்மா....  எஞ்சினுக்குப் பெட்ரோல் போட்டுட்டு வரேன்...."
வடைகள் வாவான்னு கூப்பிட்டதே. அதே ரெண்டு இட்லி. ஆனா மசால்வடை, மெதுவடைன்னு ரெண்டு வாங்கி  நமக்குள் பாகம் பிரிச்சுக்கிட்டோம். விலைவாசி இங்கேயும் ஏறிக்கிட்டே போகுது. அதே மெனுதானே.....  வேற வேலை இல்லை போ.... பக்கத்துலே புது விலைகளை மட்டும் புதுப்பிச்சு இருக்காங்க. காஃபி ஆனதும்... வெயில் ஏறுமுன் வேணுகோபாலனைக் கண்டுக்கலாமான்னு  தோணல்.  அப்படியே  ஸிம்லிம்  ஸ்கொயர் வழியா நீண்ட நடை போகலாமுன்னு  மெயின் ரோடு வழியாப் போகாம கேம்பெல் லேன் வழியாப்  போறோம். இதுக்கும் ஒரு காரணம் இருக்கு!  கண்ணால் திங்கணுமே.....
தெருமுனையில் இருக்கும் காய்கறிக் கடையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, காய்கறிகளைக் கண்ணால் தின்னு, நமக்கு இதெல்லாம் கிடைக்கலை பாருன்னு ....  கொஞ்சம் பொறாமைப் பட்டுட்டு, போகட்டும். இவுங்களாவது நல்லா இருக்கட்டுமுன்னு  பெருமாளை வேண்டிக்கிட்டே  நடந்தால்தான் எனக்குப் பிடிக்கும்.
ஹைய்யோ.... முருங்கைக்கீரை! இது நான்.  ஆஹா.... பாவக்காய் .... இது நம்மவர் :-)
 பசுமாடும் கன்னுகளுமா நமக்காகக் காத்திருந்தாங்க:-) இப்படிப் பார்த்தால்தான் உண்டு.... தெருவில் குறுக்கே நெடுக்கே நடந்து போக இதுகளுக்கு ரைட் இல்லை ....
அடுத்துள்ள புஷ்பக்கடையில் எனக்கு ஒரு  டாலருக்கு மல்லிப்பூ:-)

சுத்தமா இருக்கும் ஊரில் நடையின் அலுப்பு தெரியறதில்லை. நியூஸியும் சுத்தம்தான் ஆனால்.... எப்பப்பார்த்தாலும் ஒரு குளிர்....  ஸ்வெட்டரோ, ஜாக்கெட்டோ இல்லாம  நடக்கக்கிடைக்கும் நாள் அபூர்வம். அதுவுமில்லாமல்.... வீட்டுக்கடமைகள் காலையில் நடக்க விடுதா என்ன? ஒன்னு மாத்தி ஒன்னு.....
மெயின்ரோடுலே போய்ச் சேர்ந்து...     ஆல்பர்ட் கோர்ட்  வழியா ஷார்ட் கட். .
வெளியே  ட்ரிஷா அங்கிள் தனிப்பகுதி. டூரிஸ்ட்  அட்ராக்‌ஷன்!


சீனர்களின்  காசுக்கடவுள் Caishen  சிலையில்  மேடையைச் சுத்தி  பனிரெண்டு சீன ராசிகளுக்கான பலன்கள் எழுதிவச்சுருக்காங்க. இப்பதானே அவுங்க புத்தாண்டு வந்துபோச்சு ஃபிப்ரவரி 8 (2016 இல்) நம்ம தை அமாவாசைதான் இவுங்களுக்கு புது வருசம், தெரியுமோ!

நம்ம குபேரன்  சீனர்களுக்கு Caishen !  கேசவனைச் சுருக்கிக் கூப்புடறமாதிரி இருக்கே!

ஒவ்வொரு   பனிரெண்டு வருசத்து  இடைவெளியில் பிறந்த  எல்லோருக்குமே ஒரே பலன்தான். குரங்கில் பிறந்தவங்க இப்படி இருப்பாங்களாம். எப்பவும் இப்படி என்றதால்  அவ்வளவா பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்:-)

ஆச்சு...  வரப்போகும் புது வருச விழா அவுங்களுக்கு ஜனவரி 28 , 2017 !  இன்னும்   மூணு  வாரம்தான் இருக்கு......குரங்கிலிருந்து சேவலுக்குப் போறாங்க :-)

அடக்கடவுளே....  நம்ம பதிவு  இந்தப் பயணத்துக்கானது  வருசம் பூராவும் இழுத்துக்கிட்டுப் போயிருக்கே.... இதுக்கிடையில் இன்னொரு பயணமும் போயிட்டு வந்துருக்கோம். எப்ப எல்லாத்தையும் எழுதி முடிக்கப்போறேன்?  நினைச்சாலே மலைப்பா இருக்கே!

சீன அம்மன் கோவிலும் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலும்  அடுத்தடுத்து இருக்கு. இங்கேயும் அங்கேயுமாப் போய்க் கும்பிட்டுக்கிட்டோம். கோவில்களுக்கு வெளியே நிறைய ஊதுபத்திகளும் வச்சுருக்காங்க. நாமே எடுத்துப் பக்கத்தில் இருக்கும் விளக்கில் கொளுத்தி  சாமிக்கு ஆராதனை செஞ்சுக்கலாம். இதுலே இந்தியர் சீனர்னு ஒரு  பாகுபாடும் இல்லே....  அந்தக் கோவிலுக்குப் போறவங்க இந்தக் கோவிலுக்கும் வர்றாங்க. இங்கத்து சனம் அங்கெயும் போகுது!


தாய்லாந்துக்காரர்கள் தனியா  ஒரு கூடாரத்தில் பிரம்மனுக்குக் கோவில் வச்சுட்டாங்க. பஞ்சமுகப் புள்ளையார் , எரவான் கோவில் ப்ரம்மான்னு சூப்பர்! பெரிய பிள்ளையாருக்குத் தங்க ரேக் வாங்கி ஒட்டிட்டுப்போகுது சனம். புத்தரும் ஒரு கையை உயர்த்தி ஒன்னுன்னு காமிச்சுக்கிட்டு இருக்கார். நாம் அபிஷேகம் செய்யும் வகையில்  புள்ளையாரும், புத்தரும்  பாத்டப்பில் நிக்கறாங்க. கரண்டியில் தண்ணீரை மொண்டு தலையில் அபிஷேகம் செய்யலாம்.


வெளியே  சதுக்கத்தில் கோலாகலம்! என்ன விதவிதமான சாமான்கள்!  அதிலும் பூச்செடிகள் விற்கும் கடைகள்தான் பிடிச்சு இழுக்குது.  ஒன்னும் இங்கே நாட்டுக்குள் கொண்டு வரமுடியாதே....   கண்ணால் அனுபவிச்சதோடு சரி.   என்னமோ புதுசா பழவகை ஒன்னு  பார்த்தேன். எப்படி இருக்குமுன்னு  தெரியாதே....  ப்ச்.  ஒன்னு வாங்கியிருக்கலாம்.  பெயர் என்னன்னுகூடக் கேட்டு வச்சுக்கலை. இப்ப கூகுளில் கேட்டால்....   வெஜிடபுள்னு சொல்லுச்சு :-)))))
அப்படியே  நடந்து போய் பூகி ஜங்ஷன். மாலுக்குள் நுழைஞ்சு ஒரு சுத்து. சம்ப்ரதாயம் அனுசரிக்கலைன்னா... சாமி கண்ணைக்  குத்திரும், ஆமா:-)

மெது நடையில் திரும்பி  செராங்கூன் ரோடில் இருக்கும் கடைகளொன்னில்  ஆளுக்கொரு இளநீர். சிங்கப்பூர் சூடு, பகல் நேரத்தில் உக்ரம்தான்.  ஹொட்டேலுக்கு வந்து சேரும்போது மணி பனிரெண்டரை. நமக்கு  செக்கவுட் செஞ்சுக்க ஒரு மணி நேரம் கூடுதலாக் கொடுத்துருந்தாங்க.
கொஞ்சம் ப்ரெஷப் பண்ணி உடை மாற்றிக்கிட்டு எங்க கேபின் பைகளைக் கீழே கொடுத்துட்டு, ஒரு டாக்ஸி பிடிச்சோம். இது,  இதுவரை நாம் போகாத இடம்!

தொடரும்........:-)

PIN குறிப்பு:  235 படங்களை  ஜஸ்டிஃபை செய்யணுமுன்னா ஆல்பம் போட்டுத்தானே ஆகணும்!   இதுதான் சுட்டி கொடுக்கலாமுன்னா...  ஆல்பத்தையே இங்கே காமிக்குதே கூகுள்!  உரிச்ச சாத்துக்குடி. அப்படியே திங்கலாம் :-)


17 comments:

said...

அப்பா, ஊரே எவ்வளவு சுத்தமா இருக்கு? எழுதுங்க, எழுதுங்க...

said...

இந்தச் சுத்தம் என்று நம் ஊரில் வரும் என்ற ஏக்கம் மனதுக்குள்!

தொடர்ந்து பயணிப்போம்....

said...

புள்ளையாரும், புத்தரும் பாத்டப்பில் ...சூப்பர்..

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம்...அதனால் நீங்க எழுத்திட்டே இருங்க....நாங்க படிக்க ரெடி...

said...

சீனச்சாமியா இருந்தா என்ன? சீனிச்சாமியா இருந்தா என்ன? எல்லாம் ஒன்னுதான். _/|\_

இந்தக் காய்கனிகள் நியூசியில் கிடைக்காதா? இந்தியக் கடைகள்ள கிடைக்கும்னு நெனச்சேன்.

சிங்கை நல்ல துப்புரவான ஊர்தான். நடந்து போகவும் நல்லா இருக்கும்.

கடைசி படத்துல விரல் விரலா இருக்கும் காய் என்னது?

said...

நாடு நல்லாயிருக்கு ன்னா நாட்டை ஆளுரவங்க நல்லவங்க. நமக்குத்தா, I mean, எங்களுக்குத்தா அந்த கொடுப்பினை இல்லியே;

said...

கோவில் இல்லா ஊரில் குடி யிருக்க வேண்டான்னுதான் இங்கிருந்து அங்கு போய் சம்பாதிக்கும் பணத்தில் நம்மவர்கள் கோவில் கட்டினார்களோ

said...

பயணத்தைத் தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன். Time Gapதான் ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு. கிட்டத்தட்ட ஒரு வருஷம் முன்பு நடந்தது. டீச்சர்.. போன வருஷத்துப் போர்ஷனை இந்த வருஷம் நடத்தறது நியாயமா?

கோமளவிலாஸ் மெனுவை மெனக்கெட்டு போட்டிருக்கீங்க.. சாப்பாட்டு மெனுவை விட்டுட்டீங்களே.. "சீன அம்மன்"- நன்கு ரசித்தேன்.

நியூசிலாந்துல நம்மூர் காய்லாம் (வாழைக்காய், புடலை போன்றவை) கிடைக்காதா?

said...

அங்கு கோயில்களைக் கண்டதும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

said...

வாங்க கார்த்திக் சரவணன்.

ஹைய்யோ!!!! இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்.... பதிவுகள் வளர்ந்துக்கிட்டே போகுது :-)

யாரும் அடிக்கவராமல் இருக்கணும்.... :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஏக்கம்தான்......... அரசியல்வாதிகள் சென்னையை சிங்கை ஆக்குவோமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனால்..... கூவத்தைவிடக் கேவலமா இருக்கே......

said...

வாங்க அனுராதா ப்ரேம்குமார்.


அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கையே! வாழ்க்கை முழுசும் அனுபவங்களே!

ஆதரவுக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

இங்கே இருக்கும் இந்தியக் கடைகளில் இறக்குமதிக்கு நிறையக் கட்டுப்பாடு இருக்கு.

தூரமும் அதிகம் என்பதால் காய்கறிகள் இறக்குமதி சரியா இருக்காது. நம்மூரில் ஃப்ரெஷ் காய்கறிகளைக் கவனமெடுத்து அனுப்பமாட்டாங்க. ஆர்டர் எடுக்கும் வரை அம்மா அம்மா.... அனுப்பும்போது சும்மா சும்மா..... ரெஃப்ரிரெஷன் சரி இல்லாமக்கேட்டுப்போய் வந்து சேரும்....:-(

ஆனால் ஃபிஜியில் இருந்து சில காய்கள் குறிப்பா கத்தரிக்காய், வெண்டைக்காய், லாங்க்பீன், முருங்கைக்காய் வரும். விமானத்துலேயெ அனுப்பிருவாங்க. 3 மணி நேர ஃப்ளைட்.

கடைசிப்படம்....என்ன பெயருன்னு இன்னும் தெரியலை :-(

said...

வாங்க விஸ்வநாத்.

இதுலே அரசும் மக்களும் சேர்ந்தே உழைக்கணும். இதே சிங்கை ஒரு காலத்துலே குப்பையாத்தான் இருந்தது. செராங்கூன் ரோடில் ஓப்பன் சாக்கடைகளை நானே பார்த்துருக்கேன்!

சுத்தம்னு ஆரம்பிச்சப்ப.... தண்டனை கடுமையா இருந்தது. அதான் எல்லோருமா ஒரு வழிக்கு வந்துட்டாங்க. சட்டம் எல்லோருக்கும் ஒன்னுன்னு இருந்தால் எல்லாம் சரிப்படும். நம்மூரில் அப்படியா? :-(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எங்கே போனாலும் அவுங்கவுங்க சாமியைக் கையோடு கூட்டிப்போகத்தானே வேணும்! அதான்... ஃபிஜியில் கோவில்களும் வந்த விபரம் எழுதி இருக்கேன் ஒரு சமயம்.

தமிழன் போகுமிடத்துலே முருகனும் போகணும் :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

டைம் கேப் நிறைய இருந்தால்தானே...சரித்திரம்! இல்லையோ!

ஜோக்ஸ் அபார்ட்.... நிறைய நடந்துருது ஒவ்வொரு பயணங்களிலும். வாரம் மூணு பதிவு என்பதால்.... முடிக்கவே நாளாகிருது. இதுலே இடைக்கிடை வேலைகள், மற்ற பயணங்கள், உடல்நலக்குறைவுன்னு.... காரணங்களா இல்லை !!!

வாழை புடல் எல்லாம் இருக்கே! கனவில் அப்பப்ப வந்துரும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

சிங்கைக்கோவில்களைப் பற்றி முந்தி கூடக் கொஞ்சம் எழுதி இருக்கேன். ஒரு நாலைஞ்சு பதிவுகள் இருக்கும். நேரம் இருந்தால்பாருங்க. நூல் பிடிச்சுப் போகணும்:-)

http://thulasidhalam.blogspot.co.nz/2011/09/blog-post_27.html

said...

என்ன அழகு ஒவ்வொன்னும்....புகைப்படங்களும் சூப்பர்..

கீதா : சிங்கை பார்த்தப்ப அந்தச் சுத்தம், ஒழுங்கு, கஷ்டம் இல்லாம அலுப்பில்லாம பயணம் சுற்றல் எல்லாம் இங்கு நம் ஊரில் அழகும் பார்க்க வேண்டிய இடங்களும் கொட்டிக் கிடக்க,,,ஆனால் அலுப்பு வருதேனு தோணிச்சு...