எங்கூரில் இருந்து சிங்கைக்குப் போறோம். இந்த மாதிரி ஒரு மஹா போரிங் ஃப்ளைட் உலகத்தில் இருக்குமா என்ன?
ரெட்டைஸீட் வேணுமுன்னு சொல்லிக் கிடைச்சுருச்சுன்னு என்ற மகிழ்ச்சி ஜன்னலாண்டைபோய் உக்கார்ந்ததும் பொசுக்ன்னு போயிருச்சு. நீங்களே பாருங்க... இந்த றெக்கையை பார்த்துக்கிட்டே பத்தரை மணி நேரம் உக்கார்ந்துருக்கணும் என்றால் எப்படி?
நான் கேட்ட ரெட்டை வாலாண்டை. கிடைச்சது இடுப்பாண்டை....
இந்த அழகில் நாட்டை விட்டு வெளியேற அரைமணி. எங்க சதர்ன் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களும், மூக்கு முறிஞ்சு போன மவுண்ட் குக்கும், இன்னும் படர்ந்திருக்கும் பனித் துகள்களுமா கண்ணில் ரொம்ப தூரத்தில் பட்டு, உடனே கோஸ்ட் லைன் வந்துருச்சு. பஸிபிக் சமுத்திரத்துக்கு மேலே மூணு மணி நேரம், அஸ்ட்ராலியாவின் மேலே வறண்ட செம்மண் பூமியை அஞ்சு மணி நேரம் 'வேடிக்கை' பார்த்துக்கிட்டுப் போனபின், இன்னும் ரெண்டு மணி நேரம் கடலும் தீவுகளுமா கலந்து கட்டி வந்தபிறகு சிங்கை சாங்கியில் இறங்கணும்.
எனக்கு சினிமா பார்க்கும் வழக்கம் ஒழிஞ்சு போனதால் 'ஃப்ளைட் பாத் சினிமா'வைப் பார்த்துக்கிட்டேப் பொழுதை விரட்டினேன். நம்மவர்.... சினிமாவோ சினிமாதான். க்ரிமினல் என்றொரு படத்தை அனுபவிச்சுப் பார்க்கிறார். 'இனம் இனத்தை.... ' சொல்லப்டாதோ :-)
தமிழ்ப் படங்களில் ரெண்டு. இறுதிச்சுற்று, தூங்கவனம். (அப்படித்தான் போட்டுருக்காங்க. தமிழ், ஆட்சிமொழிகளில் ஒன்று இங்கே! )
தூங்கவனத்தை ஏற்கெனவே பார்த்தாச். மலையாளமும் ஒன்னும் சரி இல்லை. 'இதுதாண்டா போலீஸ்....' போட்டே....
ஃப்ளைட்டிலும் வழக்கத்துக்கு மாறா ரொம்ப சீக்கிரம் சோத்தைப் போட்டுட்டாங்க. ஸ்பெஷல் மீல்ஸ் என்பதால் ஊருக்கு முன்னே வரும் என்றாலும் கூட இது ரொம்பவே முன்னே! பத்து அம்பதுக்குக் கிளம்புன விமானத்தில் பன்னெண்டுக்கு சோறு வந்துருச்சு. இதுக்கிடையில் வழக்கமாக் கொடுக்கும் தீர்த்தங்களும், குரங்நட்ஸும் கொடுத்தாச்.
மேற்கே பயணமென்பதால் வெயில் பளிச். றெக்கையில் பட்டுக் கண் கூசுது. பந்த் நமக்கும்.
சிங்கையில் போய் இறங்குனதும், கேபின் பேக்ஸை, லாக்கரில் போட்டுட்டுப் பெருமாளைத் தேடி ஓடணும். நெருங்கிய தோழி எப்போ சந்திக்கலாமுன்னு கேட்டாங்க. இன்றைக்கு கிழமை ஞாயிறு. பெருமாள் இருக்கும் ஏரியாவில் 'சிங்கையில் உழைக்கும் நம்மக்கள் செராங்கூன் ரோடுக்குக் கடல்மணல் என்ற கணக்கில் திரண்டு வருகை தர்றது தெரியும்' என்பதால் , முடிஞ்சா பெருமாள் கோவிலில் ஏழு மணி வாக்கில் சந்திக்கலாம். ஆனால் தொழிலாளர் ஞாயிறு என்பதை நினைவில் வச்சால் கூட்டத்தில் மாட்டிக்கிட்டு அவஸ்தைப் படவேண்டாம். திரும்பி வரும் பயணத்தில் சந்திக்கலாமென்று சொல்ல வேண்டியதாப் போச்சு. அவுங்களும் 'அதுதான் சரி'ன்னாங்க.
வாரத்தில் ஆறு நாட்கள் உழைப்பு. ஏழாம்நாள் குட்டி இந்தியாவில் வந்து கூடுவது ஒன்னுதான் பாலைவனப் பசுஞ்சோலை. நண்பர்களை சந்திக்க, கோவிலுக்குப் போக, நம்ம சாப்பாடை ரசிச்சுச் சாப்பிட, முக்கியமா சம்பளப் பணத்தை வெஸ்டர்ன் யூனியன் மூலம் ஊரில் காத்திருக்கும் குடும்பத்துக்கு அனுப்பி வைக்கன்னு எல்லாத்துக்கும் ஞாயிறு மட்டுமே அவுங்களுக்கு. வேலை செய்யும் கம்பெனிகளே இங்கே பகல் 10 மணி போலக் கொண்டு வந்து விட்டுட்டு, ராத்திரி மறுபடியும் இவுங்களைப் பிக்கப் செஞ்சுக்கிட்டுப் போறாங்க.
இப்பெல்லாம் நாங்க ஊருக்குப் போகும்போது சிங்கையில் தங்கிட்டுப் போகாம, கனெக்டிங் ஃப்ளைட் புடிச்சுப் போயிடறோம். அதான் எல்லா சீனப்பொருட்களும் இந்தியாவிலேயே கிடைக்குதே! இங்கிருந்து வாரிக்கிட்டுப் போகணுமா என்ன? முந்தி மாதிரி, இங்கே ஷாப்பிங் ஒன்னும் அவ்வளவு மஜா இல்லை. முஸ்தஃபா சென்ட்டர் 24 மணி நேரம் திறந்து வச்சுருந்தாலும் நமக்கு வாங்கிப்போகும் பொருட்கள் ஒன்னும்தான் இல்லை.
தங்கிப் போகலாமுன்னா ஹொட்டேல் அடிக்கும் கொள்ளை, சொல்லி மாளலை. கொள்ளைன்னதும் இன்னொன்னும் சொல்லிக்கறேன். இந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் ஏஸியா கிட்டே இருந்து சில கெட்ட சமாச்சாரங்களைக் கத்துக்கிட்டு இருக்கு. நாம் முந்தி காசிக்குப்போனபோது, ஸ்பைஸ் ஜெட்டில் காலை நீட்டிக்க ஆளுக்கு 500 ரூ வாங்குனாங்கன்னு சொன்னேன் பாருங்க அதுவே தேவலைன்னு ஆகி இருக்கு. சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் 'கொஞ்சம் வசதியாக் காலை நீட்டி உக்கார்ந்துக்க, வெறும் 75 யூஎஸ் டாலர் மட்டும்தான், துளசி. உனக்கும் உங்கூட்டுக்காரருக்கும் ரெண்டு இடம் போட்டுறவா'ன்னு அன்பா மெயில் அனுப்பி இருந்தாங்க போனவாரம். அந்த 500க்கே (அப்ப அதுக்கு வெறும் 10$தான்) அழுதுக்கிட்டுக் கொடுத்தவள் நான். எங்கிருந்துதான் இப்படி அல்ப்பமா விலையை ஏத்திக்கிட்டுப் போக ஐடியா புடிக்கிறாங்களோ..... போதாக்குறைக்கு எங்கூரில்( கிறைஸ்ட்சர்ச்) இருந்து டைரக்ட்டா சிங்கை போறதுக்கு வேற எந்த ஏர்லைனும் கிடையாது என்பதால் ஏகபோக உரிமை வேற...
இந்தக் காசுக்கு இப்ப நாம் போகுமிடத்தில் ரெண்டு நாளைக்கு ஹொட்டேலில் தங்கிக்கலாம். எங்கே போறோம் இப்ப? நேபாள். காத்மண்டுவில் காலு குத்தணும். 'சிங்கையில் இருந்து நேபாள் போக கனெக்டிங் ஃப்ளைட் காலை 9 மணிக்குத்தான். காசு போகட்டுமுன்னு செராங்கூன் ரோடில் ஹொட்டேல் எடுத்தாலும் காலை ஏழுக்குக் கிளம்பினால்தான் சரியாக இருக்கும். அப்போ அஞ்சரை,ஆறுக்கு எழுந்துக்கணும். பேசாம ஏர்ப்போர்ட் ட்ரான்ஸிட் ஹொட்டேலில் தங்கிக்கலாமா'ன்னு கேட்ட கோபாலிடம், வாதமே பண்ணாம 'எஸ்' என்றேன்! பாவம்... நம்மவருக்கு ஒரே ஷாக். :-)
முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒரு சார்ஜ். அதுக்குப்பிறகு ஒவ்வொரு மணிக்கும் கூடுதல் சார்ஜ் என்ற கணக்கில் ஏழு மணி நேரத்துக்கு புக் பண்ணிட்டார். கோவிலுக்குப் போயிட்டு, அப்படியே முஸ்தாஃபா நகைக்கடையில் மகளுக்காக ஒரு சமாச்சாரம் தேடணும். நின்னு நிதானமாப் பார்த்தாலும் ஏர்ப்போர்டில் இருந்து செராங்கூன் ரோடுவரை போய், பெருமாளை தரிசனம் செஞ்சுட்டு, நமக்கு வேண்டிய விவரங்களைத் தேடிப் பார்த்து, மறுபடி ஏர்ப்போர்ட் திரும்பிவர மூணு மணி நேரம் வேணும்தான். பத்து மணிக்கு ஒரு டாக்ஸி பிடிச்சோ, இல்லை ரயில் எடுத்தோ ஏர்ப்போர்ட் வந்துட்டோமுன்னா படுத்துத் தூங்கிட்டுக் காலையில் எழுந்து ரெடியாகி அப்படியே நேபாள் போகும் விமானத்தில் ஏறிக் குந்திக்கலாம். திட்டம் ஓக்கே!
இந்தப் பதிவை விமானத்தில் உக்கார்ந்துதான் எழுதிக்கிட்டு இருக்கேன். மெல்பெர்ன் தாண்டி அடிலெய்ட் பக்கமாப் போகுதாம். ஃப்ளைட் பாத் சொல்லும் சேதி. இன்னும் ஆறரை மணி நேரம் பறக்கணும் :-(
பதிவுலக நண்பர் விஸ்வநாத், குறுநாவல் ஒன்னு எழுதி அனுப்பி வச்சுருந்தார். 47 பக்கங்கள். பெயர் 'காதல்மழை.' கவிதையும் காதலுமா இருக்கு. எப்படி இருந்ததுன்னு அவருக்கு ஒரு மெயில் அனுப்பணும். இதுலே நான் வேற கவிதை விரும்பா ஜென்மம்! ஆனாலும் கஷ்டப்பட்டு இந்தக் காலத்துக் காதலைக் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி செஞ்சேன் என்பதையும் சொல்லிக்கறேன். பதினோராயிரம் மீட்டர் உசரத்துலே பறந்துக்கிட்டே படிச்ச கதை இது!!
இதுக்குள்ளே... கேரமல் ஆல்மண்ட் மஃப்பின்னும் சிப்ஸும், ஜூஸும் வந்துருச்சு. வாங்கிவச்சுட்டுக் கொஞ்சநேரம் தூங்கிப் பார்க்கலாமுன்னு இருக்கேன். ஓக்கே?
கண்டம் தாண்டுவதே ஒரு கண்டமா இருக்கே. அஸ்ட்ராலியாவின் மேல் பறந்துக்கிட்டே இருக்கோம். ஆலிஸ் ஸ்ப்ரிங்ஸ் இப்பதான். செம்மண்பூமி. பாலைவனம்.... தூங்கலாமுன்னு நினைச்சாத் தூக்கம் வர்றதுல்லேபா.....
ஜகர்த்தா, பாலி கடந்து சிங்கையில் இறங்கும்போது அஞ்சரை.
டெர்மினல் மூணில் இருந்து டெர்மினல் இரண்டுக்கு சின்ன ரயில். கேபின் பைகளை லக்கேஜ் ரூமில் வச்சுட்டு ($ 6) சாங்கி ச்சும்மாக் கொடுக்கும் $ 80 வாங்கிக்கிட்டு, இமிகிரேஷன் முடிச்சுட்டு வெளியில் வந்து டாக்ஸி எடுக்கலாமுன்னு பார்த்தால் இப்ப டாக்ஸி வாடகை எல்லாம் தறுமாறா ஏறிக்கிடக்கு. 35$ நகரத்துக்குள் வர அதிகமா இருக்கே:-( பேசாம ரயிலு எடுக்கலாம். சாங்கியில் இருந்து ஃபேரர் பார்க் ஸ்டேஷனுக்கு $10.20தான் ரெண்டு பேருக்குமான ரிட்டர்ன் டிக்கெட்.
தனமேர, ஊட்ரம் பார்க்ன்னு ரெண்டு இடங்களில் ரயில் மாறி ஃபேர்ரர் பார்க்கில் இறங்கி , பெருமாள் கோவிலுக்குப் போறோம். செராங்கூன் சாலை முழுசும் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்குது! தீபாவளிக்கு ரெடியா இருக்காங்க.
கோவிலுக்குள் நுழைஞ்சால் ஊஞ்சலில் பெருமாள் தாயார்களுடன் கல்யாண மாப்பிள்ளை வேஷங்கட்டி இருக்கார். ஹோமம் வளர்த்துத் தாலி கட்டும் நேரத்துக்கு டான்னு போயிருக்கோம். சாஸ்த்திரப்படி நடக்குது எல்லாமும். தேங்காய் உருட்டி விளையாடுவது உட்பட. ஆன்னு நிக்கறேன் என் கெமராவை மறந்துட்டு! நம்மவர்தான் நினைவு படுத்தினார். அப்புறம் க்ளிக்கோ க்ளிக்ஸ்தான்.
ஹோமம் வளர்த்துக்கிட்டு இருந்த நம்ம சீனிவாசன் பட்டர் ஸ்வாமிகளுக்கு, என்னைக் கண்டதும் கண்ணில் ஒரு சின்ன வியப்பு :-)
கல்யாணம் முடிஞ்சு ஊர்வலம் சிவிகையில். பிரகாரத்தில் ஒவ்வொரு சந்நிதியாப்போய் புள்ளையார் முருகர் சுதர்ஸனர் மஹாலக்ஷ்மித் தாயார் ( புருஷன் புதுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து காமிச்சால் எப்படி இருக்கும்! ) அப்படியே வலம் தொடர்ந்து நம்ம ஆண்டாளுக்கு நேரெதிரே இல்லாமல் பக்கவாட்டில் நின்னு கொஞ்சநேரம் நாதஸ்வரக் கச்சேரி நடக்க ('ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்' பாட்டு, அட்டகாசம் போங்க!) நடுவில் சந்நிதிச் சுவர் தடுப்பு இருக்கே! அவளுக்கு நடக்கும் சமாச்சாரங்கள் தெரிய வாய்ப்பில்லை. அதுக்காக நான் சும்மா இருக்கலாமா? கொஞ்சம் போட்டுக் கொடுத்துட்டு தூமணி பாடி வச்சேன்.
ஆஞ்சிக்குக் கல்யாணக்கோலம் காமிச்சபின் முன்மண்டபத்தில் மூலவருக்கு முகம் காட்டி தீபாரதனைகள் நடத்தி, அங்கிருந்து மணமக்களைத் தோளில் சுமந்து போய் அர்த்தமண்டபத்தில் கொஞ்சம் ஆடிமுடிச்சு திரும்ப ஊஞ்சலில் உக்கார்த்தியதும் முகமெல்லாம் சிரிப்பு. மணி ஒன்பதே கால். பிரஸாதம் ரெடி!
சுடசுட கேஸரி, சாம்பார் சாதம், ததியன்னம். நான் போய் வரிசையில் நிக்கும்போது ஆஞ்சி சந்நிதியில் உக்கார்ந்துருந்த நம்மவர் ரெண்டுன்னு கை காமிக்கிறார். ரெண்டு தட்டுகளை வாங்கினவள், தட்டில் விளம்பிய சாம்பார் சாதத்தின் அளவைப் பார்த்துட்டு ஒரு தட்டே போதுமுன்னுட்டு, ததியன்னம் கொஞ்சமா வாங்கிக்கிட்டேன்.
மெள்ள சாப்பிட்டு முடிச்சு, நமக்குத் தெரிஞ்ச 'சீனிவாசன் பட்டர் ஸ்வாமி'களிடம் ரெண்டு நிமிட் பேச்சு.. என்னைப் பார்த்ததும் கண்களில் சின்னக் கேள்வி.
"நீர் எப்படி இங்கே !!!!!"
" இப்பதான் வந்திறங்கினோம். முதல் வேலை பெருமாள் தரிசனம். பெருமாள் திருக்கல்யாணம் பார்த்தது மன நிறைவு. என்ன விசேஷம்? "
'புரட்டாசி' என்றார்.
'
"இந்தியாவுக்குப் போறேளா?"
" இல்லை. நேபாள் போறோம். முக்திநாத். "
"டில்லி போய்த்தானே போகணும்?"
' இங்கிருந்தேயும் போகலாம். திரும்பிவரும்போது பார்க்கலாம்'னு சொல்லிட்டுப் பெருமாளிடமும் பயணவிவரம் சொல்லிக் 'கூடவே வந்து காப்பாத்தணும்' என்ற கோரிக்கையையும் வச்சேன்.
தொடரும்............:-)
நண்பர்கள் அனைவருக்கும் போகிப் பண்டிகைக்கான வாழ்த்து(க்)கள்!

21 comments:
//றெக்கையில் பட்டுக் கண் கூசுது. //
ஓ.. இப்படி வேறு ஒரு பிரச்சனை!
//பதிவுலக நண்பர் விஸ்வநாத், குறுநாவல் ஒன்னு எழுதி அனுப்பி வச்சுருந்தார்//
நான் குறுநாவல் எல்லாம் எதிர்பார்க்கலை. சிறுகதை. ஒன்லி சிறுகதை!!
படங்கள் வழக்கம்போலவே சிறப்பு.
super beginning. enakku rekkaiyoda paranthE vazhakkamaayiduchchu Thulasi.
காலை நீட்டிக்கிறதுக்கு 75 டாலரா? இது பயங்கரமான கொள்ளையா இருக்கே!
சிங்கப்பூர் வந்தாச்சு. அப்புறம்? வெயிட் பண்றேன்.
//தனமேர// தானா மேரா அல்லவோ? தானா-நிலம்/பூமி மேரா- சிகப்பு. விளக்கம் தெரியாதவர்களுக்காக.
வாங்க ஸ்ரீராம்.
சிறுகதை.....நத்தையில் ஏறி வந்துக்கிட்டே இருக்கு :-)
தாமதம் செய்வதற்கு மன்னிசு.... ப்ளீஸ்.
வாங்க வல்லி.
றெக்கையோடு பறந்தால் பிரச்சனை இல்லையேப்பா. அதைப் பார்த்துக்கிட்டே பறப்பதுதான் கஷ்டமாப் போச்சு :-)
வாங்க கார்த்திக் சரவணன்.
அநியாயம் பண்ணறாங்க.....
வேற ஏர்லைன்ஸ் எங்க ஊரில் இருந்து நேரடியா சிங்கை போறதில்லை. அதான் இவுங்களுக்குக் கொண்டாட்டமா இருக்கு :-(
வாங்க குமார்.
அச்சச்சோ... கால்களை உடைச்சுட்டேனே........... :-(
விளக்கத்துக்கு நன்றி.
புத்தன் பிறந்தது நேபாளம்
அந்த நாட்டுக்குப் பயணம். அருமை. அனுபவங்களைத் தெரிஞ்சிக்கக் காத்திருக்கேன். எனக்கும் நேபாளம் போக ஆசையாத்தான் இருக்கு. ஆசைக்கு அளவேது.
இப்பல்லாம் இந்தியாவுக்குள்ள போற பிளைட்கள்ளயும் காலை நீட்டுறதுக்கு கூடுதல் காசு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. இனிமே கை வைக்க, தலை தட்டாம இருக்கன்னு ஒவ்வொன்னுக்கும் காசு வந்துரும் போல.
சிங்கை எப்பவுமே விலை கூடிய ஊருதான். வரவர ரொம்பக் கூடுது போல. நீங்க சொன்ன மாதிரி முந்தி சிங்கைலதான் பொருட்கள் நிறையவே கிடைக்கும். இப்பல்லாம் ஊரூருக்குக் கிடைக்குதே.
போன பதிவுல சொன்ன மாதிரி... பத்திரகாளியை எல்லாரும் போட்டோ எடுத்தாலும் அவளுக்கு தீட்டோ கீட்டோ வரலை. இந்த வாட்டி பெருமாளுக்கு. இதை நம்மாளுக எப்பப் புரிஞ்சிக்கப் போறாங்களோ தெரியல.
//பதிவுலக நண்பர் விஸ்வநாத், குறுநாவல் ஒன்னு எழுதி அனுப்பி வச்சுருந்தார்.// ஹிஹிஹி
// எப்படி இருந்ததுன்னு அவருக்கு ஒரு மெயில் அனுப்பணும்// இன்னும் அனுப்பலை. ஹிஹிஹி
//ஆனாலும் கஷ்டப்பட்டு இந்தக் காலத்துக் காதலைக் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி செஞ்சேன் என்பதையும் சொல்லிக்கறேன்// நன்றி நொம்ப கஷ்டப்படுத்திட்டேனோ ?
//பதினோராயிரம் மீட்டர் உசரத்துலே பறந்துக்கிட்டே படிச்ச கதை இது!!// தன்யனானேன்.
//கொஞ்சம் போட்டுக் கொடுத்துட்டு தூமணி பாடி வச்சேன்// இதுதா குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுறதோ ?
என்னதான் செலவு பிரச்சனை என்றாலும் அவை உங்களுக்குப் பெருமாளைப்பார்த்த உடன் போயிருக்குமே ஆழ்வார்கள் யாரும் அங்கு போய் பாடவில்லையா
இந்த பயணத்திலும் தொடர்கிறேன்.... இந்த முறையும் உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
றெக்கை கட்டி பறந்து இருக்கிறீர்கள்.பெருமாள் தரிசனம் தமிழ்நாட்டு கோயில் தரிசனம் போலவே இருந்தது. வழக்கம் போல சூப்பரான வண்ணப் படங்கள்.
தங்களது தீபாவளி பதிவுக்கு எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
அங்கு நம் கடவுளர்களைக் கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.
வாங்க ஜிரா.
உலகத்தில்தான் எத்தனையெத்தனை இடங்கள்! ஒரு வாழ்நாளில் முழுசும் பார்த்து அடங்குமா என்ன?
உங்க நேபாள ஆசை சீக்கிரம் நிறைவேற வாழ்த்துகின்றேன்.
வாங்க விஸ்வநாத்.
ஆஹா.... எதுக்கும் வேளை வரணுங்கறது இதுக்கும்தான். அனுப்பணும். அனுப்பறேன். எப்போ? க்யா மாலும்.......
வாங்க ஜிஎம்பி ஐயா.
இது 1885 லே கட்டப்பட்ட கோவில். ஆழ்வார்கள் காலம்தான் ஒன்பதாம் நூற்றாண்டுலேயே முடிஞ்சு போச்சே.
அந்தக் காலத்தில் கடல்கடந்து போகத்தடை இருந்ததே. இப்ப என்னன்னா...பெருமாளே கடல் கடந்து போய் உலகத்தையே சுத்தி வர்றாரே! நியூஸிக்குக்கூட வந்துட்டார்ன்னா பாருங்க:-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
இந்தப் பயண சந்திப்பு சட்னு நடந்ததும் நல்லாத்தான் இருந்தது :-)
வாங்க தமிழ் இளங்கோ!
பறக்காம அவரைப் பார்க்க இயலுமோ?
உங்கள் பொங்கல் வாழ்த்துகளுக்கு நன்றி. வரப்போகும் புத்தாண்டுக்கு எங்கள் வாழ்த்துகளும் உங்களுக்கு !
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
நாம் எங்கோ, அங்கே நம் சாமிகளும்!
வருகைக்கு நன்றி.
Post a Comment