Wednesday, January 11, 2017

கழுத்துலே ஹேர்லைன் ஃப்ராக்ச்சர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 117 கடைசிப்பகுதி)

கோவிலில் விசேஷம்!  உற்சவர் அம்மன்  கஜ வாகனத்தில்! அப்படிப்போடு!    அலங்காரம் நடந்து கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான். பூசாரி ஐயா மாலைகளைச் சரிப்படுத்திக்கிட்டு இருந்தார். மூலவர்  வீரமாகாளியை  கம்பிக் கதவினூடாகப் பார்த்துக் கும்பிட்டுக்கிட்டோம்.


மாசிமகம் ப்ரம்மோத்ஸவம்  ஆரம்பிச்சு இன்றைக்கு அஞ்சாம்நாள். தினமும் ஒரு வாகனத்தில் அம்மன் அலங்காரம்!  நேத்து சிம்மமாம். நாளை ரிஷபம். எல்லா வாகனங்களும் வெள்ளியில்தான்!  அம்மனுக்கென்ன குறை?
அமோகமா இருக்காள். கோவில் காசு கோவிலுக்கு மட்டுமே செலவாகுது. தட்டில் போடும்   தக்ஷிணையைப் பார்த்துட்டுப் பிரஸாதம் தர்றதில்லை பூசாரி ஐயா.  யாரும் தட்டில் போடறதில்லைன்றது வேற!  எதா இருந்தாலும் உண்டியலுக்குள்ளேதான்.  அயல்நாட்டுக்காரர்களும் வந்து அம்மனை 'தரிசனம்' செஞ்சுக்கிட்டு, கேமெராவில் க்ளிக்கிட்டுப் போறாங்க. ஒவ்வொரு க்ளிக்கிற்கும் அவள் சக்தி ஏறிக்கிட்டேதான் போகுது!
இந்த ப்ரம்மோத்ஸவம்  23 தேதிக்கு முடிஞ்சதும் ரெண்டு நாள் அம்மனுக்கு ரெஸ்ட். 26க்கு மஹாசிவராத்ரி விழா ஆரம்பிச்சு பதினொரு நாட்கள்  நடக்கப்போகுது!  அன்னதானமும் அலங்காரமுமா அமர்க்களம்தான்  இங்கே!  என்னதான் கூட்டம் இருந்தாலும் சாமியை நிம்மதியா தரிசிக்க முடியும் என்பது சிங்கை ஸ்பெஷல்!
ரொம்பநாளா நான் தேடிக்கிட்டு இருந்த டிஸைனில் சாமிக்கு தீபாராதனை காட்டும்     வால்கரண்டி அங்கே பூஜைக்கு ரெடியா ஒரு தட்டில்.  இதைத்தான் விவரிச்சு விவரிச்சு ஒவ்வொரு பாத்திரக் கடைகளிலும் சொல்லித் தேடிக்கிட்டு இருந்தேன். எங்கேயுமே கிடைக்கலை..:-(  இப்பப் படம் காமிச்சுத் தேடலாம்.....
படத்தைப் பார்த்த தம்பி மகர்  ஸ்ரீதர், 'நகைக்கடையில் வெள்ளிப் பாத்திரப் பிரிவில் கிடைக்குது'ன்னார்.  நான் ஒருத்தி..... வெங்கலக் கடையில் தேடிக்கிட்டு இருந்தேன்.....

பொடிநடையில் பார்க் ராயல் வந்து சேர்ந்து, கொடுத்துவச்சதை வாங்கிக்கிட்டு டாக்ஸி பிடிச்சு நேரா சாங்கிதான்!   லவுஞ்சுக்குப் போய்  செல்போனை சார்ஜரில் போட்டுட்டுக் கேமெரா  பேட்டரியை மாத்தினதும்தான் நிம்மதி ஆச்சு. லேப்டாப்பில் கொஞ்சநேரம் மேய்ஞ்சுட்டு நேரம் ஆச்சுன்னு  நமக்கான கேட்டுக்குப் போயிட்டோம்.

சரியான நேரத்துக்குக் கிளம்பி அதே பத்துமணி நேரப் பயணம் ஆரம்பிச்சது. இரவுப்பயணம் என்பதால் நோ வேடிக்கை. நூத்துக்கணக்கான கப்பல்களின்  துணையோடு  கார்த்திகை கொண்டாடிக்கிட்டு இருக்கு கடல் !
ஃப்ளைட் பாத்தின் துணையோடு பொழுது போச்சு எனக்கு. நம்மவர்? அதான் இருக்கவே இருக்கெ.... சினிமா..சினிமா.... சினிமா.... இடைக்கிடை கொஞ்சம் தூக்கம்.   கண்டம் தாண்டிருச்சுன்னா (அஸ்ட்ராலியா ) ஆசுவாசம்தான் எனக்கு. ஊர் நெருங்க நெருங்க, வீட்டில் காத்திருக்கும் கடமைகளின் பட்டியல் போட ஆரம்பிச்சது மனசு.

சதர்ன் ஆல்ப்ஸில் பனியைக் காணோம். உருகி ஓடியிருக்கு! இந்த வருசம் நல்ல வெயில் போல!  அதான் க்ளோபல் வார்மிங்னு  சிங்கையில் படம் காட்டுனாங்களே...
வண்டி நின்னதும் நம்ம பொட்டிகளை எடுத்துக்கிட்டு, 'நாட்டுக்குள் கொண்டு வந்த  சாமான்களை' டிக்ளேர் செஞ்சுடணும்.  இந்த முறை  சுண்டைக்காய் வத்தல் பறிபோனது:-(  இது போனாப் போகட்டும்.... கோபாலின் ஃபேவரிட். ஆனால் போனமுறை உப்பு நார்த்தங்காய் குப்பையில் போனதுதான்.... இன்னும் மனசு ஆறலை:-(




வீட்டுக்கு வந்ததும், சாமி விளக்கேத்தி, கும்பிடு போட்டுட்டுத் தோட்டத்துக்குப் போனேன். மகளின் பொறுப்பில் விட்டுப்போனதில்    ஓரளவுக்குச் செடிகள் தப்பிப் பிழைச்சுருந்தது.  காய்ஞ்சு போகத்தொடங்கிய  மிளகாய்ச்செடியில் ஏகப்பட்ட  மிளகாய்கள்!  நல்ல வெயிலுதான் போல!  நான் இல்லைன்னா சூரியனுக்குக் கூடக் கொண்டாட்டம்,பாருங்க !
அடுக்களை மேடையில் எனக்கு ஒரு பரிசு வச்சுட்டுப் போயிருக்காள் மகள். பெர்ஃப்யூம். ஹேப்பி பர்த்டே அம்மா!

சுருக்கமா ஒரு சமையல் . நாலு மணி ஆனதும் போய் நம்ம ரஜ்ஜுவை ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்குக் கூட்டியாந்தோம். வீட்டுக்கு வந்ததும் கோச்சுக்கிட்டுத் தோட்டத்தில் போய்  சுத்திக்கிட்டு இருந்தான் அவன்:-)

ஆத்திரத்தோடு போனவன் கையில்  அகப்பட்டு உசுரை விட்டுருந்ததை அப்புறமாப் பார்த்தேன்.....பாவம்....  குட்டி... கெட்ட ரஜ்ஜு....
பொட்டிகளைத் தொறந்து  அன்பேக் பண்ணிட்டு இருக்கும்போது சந்தேகக்கண்ணுடன் பக்கத்தில் வந்து  பார்த்துக்கிட்டு இருந்தான். இன்னும் மனசு சமாதானமாகலை.....


அதை முடிச்சுட்டு, ரங்கனின் அட்டைப்பெட்டியைத் திறந்தார் நம்மவர்.  உள்ளே பொதியே என்னமோ போல் இருக்கு. ரொம்பவே கவனமாப் பிடிச்சு எடுத்தால்...... கட் கட்....  கழுத்து கட் :-(  சேஷன் கழுத்து வெட்டப்பட்டது!

கெட்டதுலே ஒரு நல்லது என்னன்னா இது க்ளீன் கட்.  ஏற்கெனவே  ஆதிசேஷனை ரங்கனுடன் சேர்க்கும்போது  தலைகளைத் தனியாச் செய்துதான் இணைச்சுருக்காங்க போல.  அடடான்னு  கவனமாத் திரும்பத் தலைகளைச் சேர்த்து வச்சுட்டேன்.  ஆனாலும் இதை ரிப்பேர் செஞ்சாகணும்.   கழுத்தாண்டை  ஹேர்லைன் ஃப்ராக்ச்சர் இருக்கு. 
என்ன செய்யலாமுன்னு யோசிச்சு  ஒரு ப்ளாக் நெயில் பாலிஷ் வாங்கியாந்தேன்.  சரியான இடத்தில் பொருத்தி  கறுப்புப் பாலீஷ் போட்டவுடன்  சரியான மாதிரி இருந்தது.  இன்னும் காயவச்சுக் காயவச்சு மூணு கோட்டிங் கொடுத்ததும்  வெற்றி!  படமெடுக்கும் தலைகளுக்கு மட்டும்  தங்க நிறம் பூசி இருந்தது கொஞ்சம்  பழசா டல்லா இருக்குன்னு  அந்த இடங்கள் மட்டும் வெளியே தெரியறதுமாதிரி  மூடிட்டு, கோல்ட் ஸ்ப்ரே செஞ்சேன்.

இப்பப் புதுத்தலைகள்  &  புதுப்பாம்பு!

ரங்கனும் தனக்கான இடத்தைப் பிடிச்சுக்கிட்டான்!  நியூஸி வரணுமுன்னு பிடிவாதம் பிடிச்சவன் அவந்தானே!
ஒவ்வொரு பயணங்களும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள்தான். அனுபவங்களால் நிறைந்ததுதானே வாழ்க்கை!   வாழ்க்கையை முழுசுமா அனுபவிக்கணும்.

 பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும். ஆனா ஒன்னு.... உடலில் கொஞ்சம் வலு இருக்கும்போதே போய் வந்தால் நல்லது. முட்டிவலி, முழங்கால் வலி, தலை சுத்தல் இப்படி  வலிகள்   வர்ற வயதான காலம்வரை  தள்ளிப்போடாதீங்க.....


ஆதலினால் பயணம் செய்வீர்! 



PIN குறிப்பு:  இந்தத் தொடர் ஒருவழியா முடிவுக்கு வந்ததேன்னு  யாரும் கொண்டாட வேண்டாம். அடுத்த பயணமும்  இது முடியுமுன் அதுன்னு  ஆச்சு.

 வேற  துணிமணிகளை அடுக்கி வச்சுப் பொட்டியை ரெடி பண்ணுங்க.  நடுவில் ஒருநாள்  ரெஸ்ட் எடுத்துக்கிட்டு பயணத்தைத் தொடங்குவோம்!

நமக்கு முற்றிலும் புதிய இடம் இப்போ போகப்போறது.  எங்கேன்னு எனி ஐடியா? :-)


14 comments:

said...

சிங்கை ஸ்வாமியை தரிசித்துக்கொண்டேன். ரஜ்ஜுவின் கோபம் வேடிக்கையாக இருந்தது. பள்ளிகொண்ட பெருமாளுக்கு நமஸ்காரங்கள்.

said...

Itha matumthan padichen aunty..unga writeup super...meethi ella partum padikkanum...

said...

ஆதிசேஷனுக்கு உயிர் அளித்த அபூர்வ தம்பதிகள். உபய நாச்சிமார் இல்லாமல் கொஞ்சம் வெறுமைதான். ஏகாந்த சயனம். ஏன்னான்னு கேட்க ஆளில்லையே. நன்றி துளசி.

said...

அம்மன் கஜ வாகனத்தில்..அழகு...


பயணங்கள் என்றுமே மனத்திற்கு மகிழ் உட்டுபவை....

said...

ஆகவே பயணம் செய்வீர்

said...

நன்றி.
அடுத்து ... ஒருவேளை .... நேரா நார்த் போவீங்கலோ ?

said...

ஒரு பயணம் இனிதாய் முடிய அடுத்த பயணம் தொடங்கியாயிற்று! நல்ல விஷயம்......

என்னுடைய பயணத்தொடரும் இன்னும் பத்து பதிவுகளில் முடிக்க வேண்டும்! அதன் பிறகு நான்கு பயணங்கள் சென்று வந்திருக்கிறேன் - எதைப்பற்றி எழுத வேண்டும் என இன்னும் முடிவு செய்யவில்லை! :)

ஆதலினால் பயணம் செய்வோம்! :)

said...

வாங்க ஸ்ரீராம்.

நம்ம மொழியில் பேசத்தெரியலையே தவிர உணர்ச்சிகளை அப்படியே முகத்தில் காட்டுவதில் இதுகள் குறைஞ்சதே இல்லை. பலசமயம் ரஜ்ஜுவின் முகத்தில் சிரிப்பைப் பார்த்துருக்கேன்:-)

நன்றி.

said...

வாங்க சங்கீதா.

நோ ஒர்ரீஸ்ப்பா. எப்ப நேரம் கிடைக்குதோ அப்போ படிக்கலாம். ஊசியாப் போயிடப்போகுது ? :-)))

said...

வாங்க வல்லி.

ஆஹா.... உபய நாச்சியார் பிடுங்கல் வேணாமுன்னுதானே அரங்கத்தில் தனியாக் கிடக்கறான்!!!

ரெங்கனைப் பரிசளித்ததுக்கு நன்றிப்பா. கொஞ்சம் படுத்திட்டான்.... இல்லை ? :-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்குமார்.

எந்த வாஹனம் என்றாலும் உற்சவர் அலங்காரம் எப்போதுமே பிரமாதம்தானே!!!!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உங்க வாய் முஹூர்த்தம்... அடுத்த பயணம் தொடங்கியாச்சு :-)

நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

அதே அதே.... இமயமலை சலோ :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணம் சின்னதா இருந்தாலுமே... நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளமாச்சே! அதான் எழுதி முடிக்கறதுக்குள் அடுத்தடுத்துப் பயணங்கள் அமைஞ்சு, எப்ப எல்லாத்தையும் எழுதி முடிக்கப்போறோமுன்னு மலைப்புதான்!

அனுபவங்களை எங்கேயாவது பதிவு செஞ்சு வைக்கணும் என்பதே முக்கியம்!

எழுதலாம். எழுதலாம்... எழுதி முடிக்கலாம் !!!