Monday, March 14, 2016

அதியமான் மட்டும்தான் நெல்லிக்கனி கொடுப்பாரா, என்ன? ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 6)

இந்திய நேரத்துக்கு  உடல் இன்னும் பழகலை. இடையில் ஏழரை என்பதால் நேரங்கெட்ட நேரத்தில் முழிப்பு வந்துருது.  சட்னு தூக்கம் கலைஞ்சதும், மணி பார்க்க கை நீட்டி செல்ஃபோனை எடுத்தால்  அது பத்தரைன்னு சொன்னதும் பதறிப் போயிட்டேன்.  மணி மூணுதான் ஆகுது . தூங்குன்னார் நம்மவர். என்னென்னவோ யோசனைகளுடன் இன்னும் ரெண்டு மணி நேரம் போக்குனதும் 'செந்தமிழ்நாடென்னும் போதினிலே' பார்த்துட்டு, கூடவே பெருமாளையும் தரிசனம் பண்ணினதும் எங்க ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் தோணுச்சு,  காலையில் கோவிலுக்குப் போயிட்டு வரலாமேன்னு.

'ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு அப்படியே கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாமா'ன்னார். கோவிலுக்குப் போய் வந்து  சாப்ட்டால் ஆகாதான்னேன். அதுவுஞ்சரின்னு  கிளம்பி கீழே வந்தோம்.

பெருமாள்தான். ஆனால்  திருப்பதி தேவஸ்தானம் வேணாம். இதே சீனிவாசனை  சிவா விஷ்ணுவில் நிம்மதியா தரிசிக்கலாமுன்னு சொன்னேன்.  நமக்கு  வண்டி காலை ஒன்பதுக்கு வந்தாப்போதுமுன்னு  சொல்லி வச்சுருப்பதால் இப்ப ஒரு ஆட்டோ பிடிச்சால் ஆச்சு.

ஓட்டுனருக்கு பயங்கரக் களைப்பு.  நல்ல உறக்கம். எதுக்கு எழுப்புவானேன்னு கொஞ்சதூரம் நடந்துபோய் ஆட்டோ பிடிச்சுக் கோவிலுக்குப் போனோம். நாற்பது ரூபாய். காலை நேரத்து தி நகர் நல்லாதான் இருக்கு.
கோவிலில் நிம்மதியான தரிசனம். வாசலில் வாங்கிப்போன துளசியை  ஸ்வாமியின் தோளில் சாத்தினார் பட்டாச்சாரியார். அடுத்த சந்நிதியில் இருக்கும் தாயாரையும் தீபஆரத்தியில் தரிசனம் செஞ்சு வச்சார். ஏகாந்த தரிசனம்தான்.  எதிரே ராமர் சந்நிதி, ஆஞ்சியின் சந்நிதி வலம் வந்து கும்பிட்டு,  பெருமாள் மண்டபத்தில் பத்து நிமிசம் உக்கார்ந்துட்டு,  சிவன், பார்வதி, முருகனையும் கும்பிட்டுக் கோவிலை வலம் வந்து நவகிரகங்களைச் சுத்தி, புள்ளையாரை நமஸ்கரிச்சு நிம்மதியோடு வெளியே வந்தோம்.

சின்னக்கோவிலாக இருந்தாலும் நல்லாவே இருக்கு. கோபுரச் சிற்பங்களைப் படம் எடுத்துக்கொண்டே திரும்பினால்  தாயார் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க.




திரும்பிப்போக ஆட்டோ கிடைக்குமான்னு பார்த்துக்கிட்டே இடதுபக்கம் நடக்க ஆரம்பிச்சோம். மூடிய கடைவாசல்களில் பூ கட்டிக்கிட்டு இருக்காங்க சிலபெண்கள். கனகாம்பரம் பார்த்ததும்  உடனே வாங்கிக்கிட்டேன். கூடவே கொஞ்சம் மல்லியும் சேர்த்து வச்சால்தான் அழகுன்னு பூக்காரம்மா அபிப்ராயப்பட்டதால்  கொஞ்சூண்டு மல்லியுமா தலையில் ஏறுச்சு.



இப்படிப் பார்த்தால் இது என்ன தெருன்னே அடையாளம் இழந்து  போகும் தெருவுக்கு  வந்துருந்தோம்.  காலியா இருக்கு!   இன்னும் நேரமிருக்கு கடைகளை திறக்க. இப்பதானே  மணி எட்டாகப் போகுது! காலை பத்து மணிக்குப்பிறகு உள்ளே நுழைஞ்சு வெளிவர தனி சாமர்த்தியம் வேண்டி இருக்கும்!

கண்டுபிடிக்க முடியுதா, ரங்கநாதன் தெருவை?


ராவோட ராவா தெருவை இன்னும் நல்லா சுத்தப்படுத்தி இருக்கலாம். கற்கள்  பாவி சீர்படுத்தினால் கூட நல்லாத்தான் இருக்கும். பூனைக்கு யார் மணி கட்டுவதுன்னு இருக்காங்க போல:-(  வண்டிகளுக்கு அனுமதி  இல்லாம  பாதசாரிகளுக்கான தெருவாக அமைச்சாலும் நல்லதுதான்.

ஆட்டோ கிடைச்சு லோட்டஸுக்குத் திரும்பி  ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சு இன்றைய  உலாவுக்குத் தயாரானோம். இன்றைக்கும் அடையார்தான் போகணும். முதலில் நம்ம நைன்வெஸ்ட் நானானி வீடு.  வீட்டு வாசல்கிட்டே போனதும்  அவுங்களுக்கு ஃபோன் செஞ்சு வரலாமான்னு கேட்டேன். 'வாங்க. ஆப்பம் ரெடியா இருக்கு'ன்னாங்க. ஐயோ... காலையிலேயே கேட்காமப் போயிட்டோமேன்னு  கவலைதான்......
கணவன் & மனைவி இருவரும் உபசரிப்பதில் எல்லோரையும் மிஞ்சிருவாங்க. போன பயணத்தில் பாதியில் விட்டுப்போன பேச்சுகளை ஆரம்பிச்சுப் பேசி முடிக்க முடியாமல், இப்பவும் விட்டு வச்சுட்டு வந்துருக்கோம்:-)
அதியமான் மட்டும்தான் நெல்லிக்கனி கொடுப்பாரா என்ன? நம்ம நானானியும்தான் கொடுத்தாங்க. கூடவே அபூர்வமான நாகலிங்கப்பூ!


 உள்ளங்கை நெல்லிக்கனி!
ஸ்வாமி அலமாரியில் இருந்த நைவேத்யம்! இதோடு,  'வச்சுக் கொடுக்கும் வழக்கப்படி' சின்னதா ஒரு வெள்ளித்தட்டு. கிடைச்சதையெல்லாம் சுருட்டிக்கிட்டு  கிளம்பி நேரா நம்ம அநந்தபத்மநாபன் கோவில். தரிசனம் முடிச்சுக்கிட்டு நேரு நகர் போகணும். போனோம். வர்றதாச் சொல்லி இருந்ததால் ஹோப் மலர்விழி (Director-Women and Children Program) நமக்கு முன்னேயே ஆஃபீஸுக்கு வந்துருந்தாங்க.
 சென்னை வெள்ள நிலவரம், அப்போ ஹோப் செஞ்ச வேலைகள் பற்றி விவரமாச் சொன்னாங்க. உதவி செய்யப்போய்  மூணுநாட்கள் வீடு திரும்பமுடியாமல் போனதைக் கேட்டபோது......  சமூகசேவை சாதாரண சமாச்சாரம் இல்லைன்னு புரிஞ்சது.
பிள்ளைகளுக்கு ஒரு டின் முட்டாய்கள் நியூஸியில் இருந்து. எல்லோரும் நல்லா இருக்காங்களாம். எனக்குத்தான் போய்ப் பார்க்கணுமுன்னு நினைச்சாலும் ஒவ்வொருமுறையும் எதாவது தடங்கல் வந்துக்கிட்டு இருக்கு.  பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக ஒரு தொகையைக் கொடுத்துட்டு,  மலருடன் கொஞ்சநேரம் பள்ளிக்கூட விவரங்களைப் பேசிட்டுக் கிளம்பினோம். பள்ளிக்கூட ரிப்போர்டை  மறக்காமல் ஒவ்வொரு மூணு மாசத்துக்கும் அனுப்பி வைக்கிறதால் நடப்பு சமாச்சாரங்கள் நமக்குத் தெரிஞ்சுருது.
கண்ணகிநகர் பள்ளிக்கூடம் இப்போ சொந்தக் கட்டடத்தில் நடக்குது. என் தோழிதான் ( நளினி சந்தோஷ் ) அங்கே  தலைமை ஆசிரியர். இவுங்க முதலில் புதுப்பட்டினத்தில் ஹோப் நடத்தும் சுநாமி ஸ்கூலில்தான் இருந்தாங்க. அந்தப் பள்ளியைப் பற்றி எழுதுனது இங்கே!

நேரு நகரில் வாடகைக் கட்டடத்தில் இவுங்க ஆஃபீஸ் இருக்கு. நிறையப்பேர் அங்கே வேலை செய்யறாங்க. அதிகமா சம்பளம் ஒன்னும் இல்லைன்னாலும் ஆத்மதிருப்திக்கு இத்தனை இளம் வயதினர் அங்கே சேவை செய்வதைப் பார்த்தால்.....  வியப்பாத்தான் இருக்கு.

இளைஞர் சமூகத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருப்பதுக்கு இவுங்களைப் போல இருப்பவர்களே காரணம்!

தொடரும்.........:-)



20 comments:

said...

சமீபத்தில்தான் சிவா விஷ்ணு கோவில் சென்று வந்தேன். முதல் முறையாக!

said...

அருமையான சந்திப்பு , சிவா விஷ்ணு கோவில் தரிசனம்

said...

தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது.

said...

இங்கியாவது துளசியை மாலவன் தோளில் சேர்ப்பிச்சாரே.. அருமை.

said...

பாராட்டப்பட வேண்டிய பணிகள் ... வாழ்த்துக்கள்

said...

ரங்கநாதன் தெரு தெரிந்துவிட்டதே!!! பின்ன நாம அடிக்கடி விசிட் அடிக்கற தெருவாச்சே..

ஆட்டோ "ஓட்டுநர்" தூங்குவது...அழகாக இருக்கிறாரே!!!!

said...

ஹோப் செய்வதைப் பாராட்ட வேண்டும்...

said...

அறுபதுகளின் கடைசியில் சிவாவிஷ்ணு கோயில் கட்டின புதுசிலே பார்த்தது தான். ஹோப் என்றாலே நம்பிக்கை தானே! அதென்ன நெல்லிக்காய்? வீட்டிலே காய்ச்சதா? பார்க்கவே அருமையா இருக்கே. காலையிலே வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம் தினம் தினம்! வீட்டில் மரம் இருந்தால்

said...

சென்னை தரிசனம் இனிமை. எங்க அப்பாவுக்குப் பிடித்த கோபவில். ஆடிப்பூரத்துக்கு தாயாருக்கு சர்க்கரைப் பொங்கலும் ,புதுப்புடவையும்,பெருமாளுக்கு வேஷ்டியும் ஏற்பாடு.

வெங்கட் ராமன் ஸ்ட் ரீட் ஆட்டோ ஓட்டுனர்கள் சுகமே தனி.

நானானி நெல்லியும்,நாகலிங்க்ப்பூவும் அருமை.
இருவரின் உள்ளமும் நெல்லியைப் போல் இனிமை.

said...

கோவில்ல ஒரு குட்டி நரசிம்ஹர் இருப்பா ரே.கனகாம்பரம் மல்லி அழகுதான்.இளைஞர்கள் இன்று பல பெரிய விஷயங்களை just like that செஞ்சுட்டு அத ஒரு விஷயமா சொல்லிக்கறது கிடையாது.

said...

நம்ப மாட்டேன். நம்பவே மாட்டேன். அது ரங்கநாதன் தெருவே இல்ல. ஆளில்ல. கூட்டமில்ல. கடையில்ல. குப்பையும் குறைவா இருக்கு. இது வேற எதோவொரு தெரு :)

சிவா விஷ்ணு கோயிலுக்குப் போயி ஒரு 16 வருடமாச்சும் இருக்கும். அதுக்கப்புறம் போகல.

உள்ளங்கை நெல்லிக்கனிக்கு அற்புதமான விளக்கம்.

சமூக சேவை செய்யும் நல்ல உள்ளங்கள் வாழ்க. வளர்க. ஆண்டன் துணை எப்போதும் இருக்கட்டும். அன்ன யாவினும் புண்ணியஞ் செய்தல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். அதுக்கு நீங்களும் உதவியது மிகச் சிறப்பு.

said...

வாங்க ஸ்ரீராம்.

கொஞ்சம் அதிகக்கூட்டம் இருக்கும் பகுதி என்றாலும் கோவிலுக்குள் அமைதியா நல்லாத்தான் இருக்குல்லே?

said...

வாங்க கோமதி அரசு.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

said...

வாங்க சாந்தி.

தோளில் மாலையா விழுந்தால் நல்லாத்தான் இருக்கு:-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றி.

said...

வாங்க துளசிதரன்.

மேலே போட்டுக்கொடுங்கன்னு கூடக் கேக்கமாட்டாரு அந்த ஆட்டோ ஓட்டுனர்:-)

ஹோப்புக்கும் நமக்கும் ஒரு 14 வருசமாத் தொடர்பு இருக்கு. எனக்குத் தெரிஞ்சவரை நல்லாவே நடத்தி வர்றாங்க.

said...

வாங்க கீதா.

இந்த அம்பது வருசங்களில் கோவில் நல்லாவே வளர்ந்துருக்கு. அன்றும் இன்றும் எப்படின்னு ஒரு முறை வாய்ப்பு கிடைச்சால் போய் வந்து சொல்லுங்க.

நெல்லி மரம் நானானி வீட்டில் இல்லைன்னுதான் நினைக்கிறேன். கடையில் வாங்குனதாக இருக்கலாம். ஆனால் அவுங்க வீட்டில் நாகலிங்க மரம் இருக்கு!

said...

வாங்க வல்லி.

ஆஹா.... ஆடிப்பூரமா!!!

வெங்கட்ராமன் தெருவைப்பற்றிச் சொல்ல உங்களைவிட்டால் வேறு யாருக்குப் பொருத்தம்:-)

said...

வாங்க சசி கலா.

இளைஞர்களைப்பற்றிச் சொன்னது ரொம்பச்சரி. நம்பிக்கை நக்ஷத்திரங்கள்!

said...

வாங்க ஜிரா.

முந்தியெல்லாம் ரங்கநாதன் தெரு ஷாப்பிங் போக எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கும், இப்போ அப்படி இல்லை :-(

அம்பிகா அப்பளத்துக்காகவே போவோம். ஸ்டேஷன் பக்கம் போனால் காய்கறிகள் ரொம்பவே ஃப்ரெஷாக் கிடைக்கும்! அப்புறம் அம்பிகா அப்பளம் கடைக்குப் பின்பக்கம் புடவைகளுக்கு சாயம் ஏற்றும் கடை ஒன்னு இருந்துச்சு. ப்ளெய்ன் நைலக்ஸ் புடவைகளைக் கொண்டுபோய் நிறம் மாற்றி ப்ரிண்ட் போட்டு வாங்கிவர்றதுக்குன்னு பலமுறை பயணம்.