Thursday, February 19, 2015

மதுரை, சில காட்சிகள். அழகர் கோவில்

மதுரை க்ளிக்ஸ்.  படங்களை மட்டும் போடுகின்றேன். ஒரே ஒரு இடுகையாப் போடலாமுன்னா அடங்கமாட்டேங்குதே (என்னைப்போல!)

இதில் அழகர் கோவில்  படங்களைப் பார்க்கலாம்.

நூற்றியெட்டு திவ்யதேசக் கோவில்களின் வரிசையில் இதுக்கு  நாற்பத்தியோராவது இடம்.
















மூலவர்  சுந்தரராஜன்.  பெயருக்கேத்தமாதிரி  அழகோ அழகு!  அதான் அழகனின் கோவில் இப்படி அழகர்கோவிலாக  ஆகி இருக்கு:-)

இந்தக்கோவிலில் ஒருவிசேஷம் என்னன்னா  நம்மஆண்டாளம்மா, உக்கார்ந்துக்கிட்டு இருப்பாங்க.

அழகனுக்கு நூறு தடா வெண்ணெயும் நூறுதடா அக்காரவடிசலும் செஞ்சு தரேன்னு சொல்லிட்டு, சமையலை நினைக்கும்போதே.... பிரமிச்சுப்போய் உட்கார்ந்துட்டாள்னு நான்  சொல்வேன்:-)

சமைச்சாளோ?  ஊஹூம்....  நம்ம ராமானுஜர்தான் பல ஆண்டுகளுக்குப்பின்  'தன்னுடைய தங்கையாகத் தான் நினைக்கும்' ஆண்டாளுக்காக சமைச்சுக்
கொடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றினாராம்!

நாம் போன தினம் முஹூர்த்த நாள் என்பதால்  கல்யாணக்கூட்டம்  மண்டபம் முழுசும்!  ஒரு முப்பத்தியேழு  கல்யாணம் கேரண்டீ!

வழக்கம் இல்லாத வழக்கமா தேங்காய் பழம் பூவோடு அர்ச்சனைச் சீட்டு வாங்கிக்கிட்டுப் பெருமாளிடம் போனோம்.  பட்டர்  ரெண்டு ஸ்லோகம் சொல்லித் தீபம் காமிச்சுட்டு  அடுத்த பக்கம்னு சந்நிதிக்கு வெளியே  கை காட்டினார்.

இவருடைய வேலை  தீபம் காமிப்பது(மட்டும்)தானாம். தேங்காய் உடைப்பது இல்லையாம்!  (அட!)

சந்நிதிக்கு வெளியே   இடப்பக்கம்  ஒரு பட்டர் முன்னால் ஒரு பெஞ்சு. நம்ம பெயர், நக்ஷத்திர விவரங்கள் எல்லாம்  கேட்டு, தேங்காயை உடைச்சுட்டு பாதி அவருக்கும் மீதி நமக்குமாகப் பிரசாதம் தந்தார்.  கோவிலில் பராமரிப்பு வேலைகள் நடக்குது.  விமானத்தைப் பாருங்ககோன்னு அவருக்கு பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக் காமிச்சார்.
 





















ஹைய்யோ!!  நுங்கு!!!!  பார்த்து எத்தனை வருசமாச்சு!   கொஞ்ச நேரம் நின்னு வேடிக்கை பார்த்துட்டுக் கொஞ்சம் நுங்கு வாங்கி வந்து அறையில்  வைத்துத்தின்னோம்.


பெருமாளே காப்பாத்து!

31 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புகைப்படங்கள் அருமை. முன்னர் பல முறை சென்றுள்ளபோதிலும் தற்போது தங்கள் பதிவு மூலமாக மறுபடியும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நாங்களும் ஒரு ரவுண்டு போயிட்டு வந்துட்டோம் - அழகான படங்கள் மூலம்...

"நுங்கு என்று ஒன்று இருக்கிறதா...?" வருங்கால கேள்வி....!

ஜோதிஜி said...

இது வரை நீங்கள் எடுத்த படங்களில் இந்த படங்கள் சற்று சுமாராக இருப்பது என் எண்ணம். எனக்கு மட்டும் தானா?
லென்ஸ் பிரச்சனையா?

G.Ragavan said...

எங்க சொந்தக்காரங்களுக்கு அழகர் கோயில்தான் குலதெய்வம். அதுனால மாமா பசங்களுக்கு.. அவங்க பசங்களுக்குன்னு மொட்டை எடுக்கப் போனதுண்டு. அதுனால அழகர் கோயில் நல்லாவே தெரியும்.

அழகர் கோயில்ல அந்தப் பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு ஒரு கதை சொல்வாங்க. அதாவது.. ஏன் அந்தக் கோயில் பூட்டியே இருக்குன்னு. கேட்ட அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் என்னால ஏற்றுக்கொள்ளவே முடியாத கதை.

அழகர் மலைக்குப் பின்னால நிறைய அரசியல் உண்டு. இன்னைக்கு அதெல்லாம் எதுக்கு.

ஒரு காலத்துல சோழர்கள் தொல்லை தாங்காம இங்க வந்து இருந்திருக்காரு இராமானுஜர்னு சொல்றாங்க. பொதுவாகவே பாண்டியர்கள் சமய நல்லிணக்கம் உள்ளவர்களாகவோ.. அல்லது சாமின்னு சொன்னாலே பயந்துக்குறவங்களாகவோ இருந்திருக்கலாம்.

மலைக்கு மேலதான் பழமுதிர்ச்சோலை. அதுக்குப் பக்கத்துலயே சிலப்பதிகாரம் சொல்லும் சிலம்பாறு. இன்னைக்குப் பேரு நூபுரகங்கை.

பழமுதிர்ச்சோலைக்கு ஒரு மலைப்பாதை போகும்.அதுலதான் முந்தி நடந்து போவோம். கார்ல போனாலும் நடந்து வர்ரோம்னு சொல்லிருவோம்.

அழகர் மலைல தண்ணி ரொம்ப நல்லாருக்கும். இப்பயும் அப்படியிருக்கான்னு தெரியல.

நுங்கு விக்குற பையன் முகத்துல இருக்கும் செயல் தீவிரத்தைப் பாருங்க. நல்லா வருவான் பையன்.

குரங்குகள் என்னதான் சேட்ட செஞ்சாலும் பாத்தா ஒரு மகிழ்ச்சி வந்துருதுல்ல.

RAMA RAVI (RAMVI) said...

//நம்ம ராமானுஜர்தான் பல ஆண்டுகளுக்குப்பின் 'தன்னுடைய தங்கையாகத் தான் நினைக்கும்' ஆண்டாளுக்காக சமைச்சுக்
கொடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றினாராம்!//

ஆம், “பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே” என்று ஆண்டளுக்கு வாழித் திருநாமம் சொல்வது வழக்கம்.

மிக அழகிய படங்கள். சிறப்பான பகிர்வு..

Anuprem said...

ராமானுஜர் வைபவனத்தில் அப்பா அடிக்கடி கூறுவது இந்த அக்காரவடிசல்
நிகழ்ச்சியை தான் ...அனைத்து படங்களும் அழகு .......

ADHI VENKAT said...

அனைத்துப் படங்களுமே அழகு. நம்ம முன்னோர்கள் கலக்கறாங்க!

அழகர் கோயில் தோசை பிரபலம் தானே??

நுங்கு இங்கு ஏப்ரல் மேயில் வர ஆரம்பிச்சிடும். கொளுத்தற வெய்யிலுக்கு அது தான் தேவாமிர்தம்...:)

தொடர்கிறேன் டீச்சர்.

yathavan64@gmail.com said...

சகோதரி!
நல்வணக்கம்!
தங்களது இந்த பதிவு இன்றைய
"வலைச்சரம்" பகுதியில்
சகோதரி மேனகா சத்யா அவர்களால்,
சிறந்த பதிவு என சிறப்பு தேர்வாகி உள்ளது.
வாழ்த்துக்கள்

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
( சகோதரி "குழலின்னிசை" உறுப்பினராக இணைய வேண்டுகிறேன். நன்றி)

ஸ்ரீராம். said...

அட, நம்ம அழகர் கோவில்! வாசலில் உடைந்திருந்தலும், பிளந்திருந்தாலும் நிமிர்ந்து நிற்கும் மரத்தைப் புகைப்படமெடுக்கவில்லையா! :))))))))))))))))

G.M Balasubramaniam said...

இந்தக் கோவிலுக்கு வெளியே தானே கருப்பண்ண சாமி அதிக முக்கியத்துவத்துடன் இருப்பார். படங்களில் காண வில்லையே. நம் முன்னோர்களின் அடாவடித்தனத்துக்கு ஆளாகவில்லையா.

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா. :)

துளசி கோபால் said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பலமுறைகளா!!!! ஆஹா!!!!

துளசி கோபால் said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அட! அருமையான கேள்வி!

துளசி கோபால் said...

வாங்க ஜோதிஜி.

காரணம் சொல்லணுமுன்னா...

1.அது மூணரைவருசப் பழையது:-)

2. அப்போ வேற கெமரா. (இப்ப அது போய் நாலாவது வந்துருக்கு)
3. ஜூன் மாசம் என்பதால் கடும் வெயில். ஓவர் எக்ஸ்போஷர் ஆகி இருக்கலாம்.

4. அப்போ அனுபவம், இப்போதுள்ளதுக்கு மூணரை வருச்சக்குறைச்சல்.

5. ம்ம்ம்ம்..... யோசிச்சுச் சொல்லணும்:-)

துளசி கோபால் said...

வாங்க ஜிரா.

ஆஹா.... அது என்ன கருப்பண்ணசாமி கதை? சொல்லுங்க, சொல்லுங்க. உங்க பதிவில் எழுதினாலும் சரி.

நுங்கு பையனை விடமுடியலை! அதான் ஏழெட்டு படங்களை எடுத்துட்டேன். கத்தி கையைப் பதம் பார்க்காமக் கவனமாச் செய்யணும் இல்லே?
நூபுர கங்கை போய்வந்ததை முன்பே இங்கே எழுதி இருக்கேன். அது ஆச்சு 9 வருசம்!
http://thulasidhalam.blogspot.co.nz/2006/04/blog-post_03.html

துளசி கோபால் said...

வாங்க ரமாரவி.

சொன்னது சரிதான்!

துளசி கோபால் said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ரசிப்புக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க ரோஷ்ணியம்மா.

முன்னோர்கள் அழகை ரசித்துக்கொணே இருக்கலாம்....அவை ஒரே இடத்தில் நின்னால்:-))))

தொடர்வதற்கு நன்றீஸ்.

துளசி கோபால் said...

வாங்க யாதவன் நம்பி.

தகவலுக்கு மிகவும் நன்றி.

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீராம்.

மரம்....எடுத்த நினைவு இல்லை:(

பழைய ஆல்பத்தில் பார்க்கணும்.

துளசி கோபால் said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆமாங்க. கருப்பண்ணசாமியைக் கும்பிட்டுக்கிட்டபின்தான் கள்ளழகரை ஸேவிக்கணும்.

முன்னோர்கள், சாப்பிடுவதில் பிஸி. நம்மைக் கண்டுக்கலை:-))))

துளசி கோபால் said...

வாங்க குமரன் தம்பி.

இன்னும் படங்கள் (முக்கியமா பந்தடி) வரும் செவ்வாய் விசேஷ பதிவாக வரும்.

மறக்காமல் வாங்க.

G.Ragavan said...

டீச்சர்... பதிவாகவே போட்டுர்ரேன் :)

Unknown said...

உங்கள் தளத்தைப் பற்றி ,பழனி.கந்தசாமி அய்யா அவர்கள் தனது'மனஅலைகள் 'தளத்தில் குறிப்பிட்டுள்ளார் ,படித்தீர்களா மேடம் ?

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா நுங்கு! பார்க்கும்போதே திங்கணும்னு தோணுதே!

மற்ற படங்களையும் ரசித்தேன்.

naanani said...

எல்லாம் நல்லாருக்கு..எனக்கு அந்த விசிறியில் வரிசை கட்டி நுங்கியிருக்கும் நுங்கு மட்டும்தான் தெரிகிறது. சம்மர் வருகிறது.

Unknown said...

very Nice ! feel as though wehave travelled along !!:)) thankyou Thulasi .Karuppanna saami kadhai eagerly waitng to hear .

துளசி கோபால் said...

வாங்க பகவான் ஜி.

பார்த்தேன். அவருடைய கருத்தை அவர் சொல்லி இருக்கார்!

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கோடைக்கு ஏற்ற குளிர் தரு அந்த நுங்குதான். முகத்தில் பூசினால் ஜில் ஜில். சருமத்துக்கும் நல்லது!

துளசி கோபால் said...

வாங்க நானானி.

இந்தமுறை நுங்கு பார்த்தவுடன் என்னை நினைக்கணும், கேட்டோ:-)))

துளசி கோபால் said...

வாங்க சசி கலா.

கூடவே வருவதற்கு நன்றீஸ்.

நானும் கதையை எதிர்நோக்கி.....