Monday, February 09, 2015

இந்தியாவிலேயே இவர்தான் பெரியவராம் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 20)


அஞ்சு  நிலைக் கோபுரத்தோடு இருக்கும் கோவில்வாசலுக்கு வந்து சேர்ந்து,  முன்னே  பார்த்த பூக்காரம்மாவிடம் 'துளசி'வாங்கிக்கிட்டு இருக்கும்போது  கோவில் கதவுகளைத் திறக்க ஒருத்தர் வந்தார்.  ரெண்டு வெள்ளையர்களும் வந்து காத்துக்கிட்டு இருந்தாங்க.






 'ஹோ'ன்னு பரந்து விரிஞ்சு போகும் முன்மண்டபம். முதல் பிரகாரமா என்ன?  சுற்றிவர வழி இல்லை.  ரெண்டு பக்கமும் திண்ணை போல உயர்த்திக் கட்டிய இடத்தில் வரிசையா சந்நிதிகள். நேரெதிரா இன்னொரு பெரிய வாசல் கதவுகள். ஸ்ரீராமஜெயம்!  இதைத் திறக்கப் பட்டர் வரணுமாம். அதுவரை?








முன்மண்டபத்துச் சிற்பங்களையும் சந்நிதிகளையும் க்ளிக்கோ க்ளிக்ஸ்.
பெரிய  வட (கை)முறுக்கு!






ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹன்,  ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ கிருஷ்ணன், அப்புறம்  நம்ம ஆண்டாள்.  வழக்கம்போல்  அவளுக்கு 'தூமணி மாடம்' கள்ளக்குரலில் பாடினேன்.  சின்ன  உருவம்தான். கட்டி இருக்கும் புடவையை எங்கோ பார்த்த நினைவு! எங்கே?  நிமிஷநேரத்தில் பிடிபட்டது.  என் தீபாவளிப்புடவை! ஆனால் இதுக்கு அரக்குக் கலர் பார்டர் சூப்பர்!  நம்மதோ.... மஞ்சள். போயிட்டுப்போறது. இப்ப என்ன செய்ய முடியும்?  அவசரப்பட்டு வாங்கிட்டோமோ?  நானெங்கே வாங்கினேன். இவருடைய செலக்‌ஷனாச்சே!  செலக்‌ஷன் திறமை?  கொஞ்சம் போறாதுதான்..... என்னைப் பார்த்தால் தெரியாதோ:-))))







மண்டபத்தூண்களில் நெடுநெடுன்னு உசரமான  மனிதர்களின் சிற்பங்கள்.  நளினமான போஸ்களில் ஒவ்வொன்னும்  கண்ணைப் பிடிச்சு நிறுத்துனது  உண்மை!  ஒரு மனிதரின் காலண்டை நீண்ட விரல்களோடு  இறைஞ்சும் பாவனையில் இருந்த குரங்கன், ஜோர்!



கூப்பிய கைகளுடன் அனுமனும் ஒரு தூணில்.


நாலரை மணி போல சாவிக்கொத்துடன் வந்த பட்டர் ஸ்ரீராமஜெயம் வாசலைத் திறந்தார்.  கண்முன் பலிபீடமும் கொடிமரமும்.



இடப்பக்கம் தூரத்தில்  கருடவாகனங்கள் சின்னதும் பெருசுமா   காத்து நிக்குது.  இந்தப்பக்கம் கம்பி அறையில்  ஆழ்வார்கள், கோவில் பவர்  சப்ளைக்கு இன்சார்ஜ்!

இனி படம் எடுக்கக்கூடாது என்ற உணர்வில் கேமெராவைப் பைக்குள் வைத்தேன்.  கண்களைச் சுழற்றியபடியே பட்டர் போன திசையில்  போனால் தாயார் சந்நிதி முதலில்.  நாலைஞ்சு படி ஏறிப்போகணும். உஜ்ஜீவன தாயார்.  உய்யவந்த  நாச்சியார்.  நம்மை உய்விக்க வந்த தேவி! கை அசைத்துக் கூப்பிட்ட பட்டர், குங்குமப்ரசாதம் கொடுத்தார்.

பட்டரைப்பின் தொடர்ந்தோம்.....  அடுத்து சத்திய மூர்த்திப்பெருமாள் சந்நிதி.  நின்ற திருக்கோலம்.  லேசாத் திருப்பின கையில் ப்ரயோகச் சக்கரம்.  ரெடியா இருக்கு  பாய்ஞ்சு  கிளம்ப!

கோபால் கைகளில் இருந்த  துளசி இப்போ பெருமாள் கழுத்தில்.  தீப ஆரத்தி முடிஞ்சு துளசியும் தீர்த்தமும் கிடைச்சது. சந்நிதியின் கம்பிக்கதவைச் சார்த்தின கையோடு  நம்மை நோக்கித் தலையாட்டியபடியே  விடுவிடுன்னு முன்னால் போன பட்டரைத் தொடர்கின்றோம்.  இடப்பக்கம் திரும்பி   உள்ளெ போய்  இன்னொரு  இருட்டான வழியில் போறோம்.  குகை போல இருக்கேன்னால்....


சடார்னு கண் முன்னால்  சினிமாஸ்கோப் திரை போல  லேசா வளைஞ்சு இருக்கும்  அகலமான  இடத்தில் எம் பெருமான் கிடக்கிறார்!  இந்தச் சுவத்துக்கும் அந்தச்சுவத்துக்கும் இடையே இடைவெளி இல்லாமல் .....  அடடா.....  அம்பது அறுபதடி  நீளம் இருக்குமோ!


மூணு படிகள் ஏறிப்போனால் இன்னும் கிட்டக்கப் பார்க்கலாம்.  மேலே வா ன்னு கைகாமிச்சார் பட்டர். ஹைய்யோ.... என்னன்னு சொல்வேன்!

தீபச்சுடரால்  ஆரத்தி காமிச்சவர்,  ஒன்னும் சொல்லாமலே எங்களை அங்கே விட்டுட்டு மடமடன்னு  படி இறங்கி  வந்தவழியே போயிட்டார்.

 ஏகாந்தசேவை! நமக்கா.....  கண்களை அகல விரிச்சு  பெருமாளையும்  அவர் பின்புலத்துலே இருப்பவர்களையும் கண்ணால்  க்ளிக்கி  மனசில் சேமிக்க முயற்சிக்கிறேன்.  ஊஹூம்.....   ஹைய்யோ ஹைய்யோ!


ஆதிசேஷன் ஏழுதலைகளுடன் குடைபிடிச்சு உடம்பைச் சுருட்டி மெத்தை போட்டுருக்க  எம்பெருமாள் போகசயனத்தில் இருக்கார்.  திருமெய்யர் இவரே!  ரெண்டே கைகள்.  'ஆழ்ந்த உறக்கம்'  காலடியில்  பூதேவி உக்கார்ந்துருக்காங்க. . நாபியில் இருந்து முளைச்ச கமலத்தில் பிரம்மன்.  கால்பக்கம் ரெண்டு அரக்கர்கள் வேகமா ஓடுறாங்க. விரைவு கண்ணுக்குத் தெரியும் வகையில் கால்கள்!

ஏன் ஓடுறாங்க?  தீக்கனல்கள்   பாய்ஞ்சு வருது அவர்களை விரட்டிக்கிட்டு!   அக்னி அம்புகள்!  பாய்ச்சுவது யாராம்?  ஆதிசேஷனின் தலைகள்தான்.
பெருமாள் தூங்கற நேரமாப் பார்த்து,  மது , கைடபர் என்ற அரக்கர்கள் பூமாதேவியை கிட்நாப் செய்ய நைஸா வந்துருக்காங்க.  முழிச்சுக்கிட்டு குடைபிடிச்சுக்கிட்டு இருக்கும் ஆதிசேஷனுக்குக் கோபம் வந்துருது.  தூங்கும் எஜமானைத் தொல்லைப்படுத்த வேணாம். நாமே அரக்கர்களை ஓட்டிப்பிடலாமுன்னு  தீச்சுவாலையை அனுப்பிக்கிட்டு இருக்காங்க. அரக்கர்கள் பதறி ஓடும்போது  பெருமாள் 'அறிதுயிலில்' இருந்து  முழிச்சுக்கிட்டுக் கண்ணைத் திறக்கிறார்.

ஐயோ....  (பெருந்) தலை இருக்க, நம் தலைகளை ஆட்டிட்டோமேன்னு  ஒரு பயத்துலே  சீறும் தலைகளைப் பின்வாங்கிப் பதுங்க நினைக்கும்போது ,'சபாஷ் பசங்களா. நல்ல வேலை செஞ்சீங்க'ன்னு பாராட்டும்விதமா வலது கையால் கைக்கு எட்டின தலையை வருடிக்கொடுக்கிறார் எம்பெருமாள்!

'தலைகளைச் சுருக்கி இழுத்துப் பதுங்கும்  சேஷனைப் பார்க்காமல் விடாதே'ன்னு  அண்ணி சொன்ன கதையை,  நம்ம வகையில் கொஞ்சூண்டு விஸ்தரிச்சு  கோபாலிடம் அப்போ சொன்னதே உங்களுக்கும் சேர்த்துதான்:-)
பின்புலத்தில் ஏகப்பட்ட தேவர்களும் ரிஷி முனிவர்களும்  இருக்காங்க. யார் யார் யாருன்னு  சொல்லக்கூட அங்கே யாருமில்லை!

முன்பக்கம் உற்சவர்களை வைக்க ஒரு காங்க்ரீட் மேடை போட்டுருக்காங்க. ஐயோ.... Eyesore என்றுதான் சொல்லணும். தாய்ச்சுண்டு இருக்கும் பெருமாளின் வயிற்றுப்பக்கம் சரியா  இருந்து  மறைக்குது:(


குடைவரைக்கோவில். மலையை அப்படியே குடைஞ்சு அதில் புடைத்து நிற்கும் வகையில் செதுக்கி வச்சுருக்கும் அற்புத சிற்பங்களால்  ஆன சந்நிதி. கோபால் படி இறங்கிப்போறார்.  நானோ, நின்ன இடம் விட்டு  நகராமல்  முழு சீனையும் கண் வழியா மனசுக்கு அனுப்பிக்கிட்டே மாய்ஞ்சு நிக்கறேன்.   அஞ்சு நிமிசம்  இருக்குமோ? காலடிகள் சப்தம் கேட்டுத் திரும்பினால்  ஒரு நாலைஞ்சு பேர் வந்துக்கிட்டு இருக்காங்க.


இன்னொருக்கா 'அவனை' சேவிச்சுக்கிட்டு மனசில்லா மனசோடு படி இறங்கிப்போனேன்.  விவரம் கேட்டுக்கணுமேன்னு பட்டரைத் தேடினேன்.  முன்மண்டபத்தில் நாங்க காத்திருக்கும் சமயம்  எதிரில்  வந்து உட்கார்ந்து எங்களோடு பேசிக்கிட்டு இருந்த   பெண்மணியிடம்  சைகையில் என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தார் பட்டர். ஓ......  அதுதானா?   ஏண்டா பெருமாளே.... இப்படிப் பண்ணிட்டே?


அப்புறம் பயணம் முடிஞ்சு வீடு திரும்பினதும்  வலைவீசுனதில் சில சமாச்சாரங்கள் கிடைத்தன. அனந்த சயன பெருமாள் முப்பதடி நீளமாம்.  நம்ம ரங்கனைவிடக் கூடுதல் . இந்தியாவிலேயே பெரிய பெருமாள் இவர்தான்னு  தெரியவந்துச்சு. கிபி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட கோவில்.  ஸோ.... முதலில் கோவில்.  அப்புறம் கோட்டை!

திருமங்கை ஆழ்வார்  வந்து பாடிவச்சுட்டுப் போயிருக்கார். 108 வைணவ திவ்ய தேசங்களில்  திருமெய்யத்துக்கு 43 வது இடம். ( இந்த  ஊருக்கு பழைய பெயர் திரு மெய்யம்தான். அதை  காலப்போக்கிலோ என்னவோ திருமயம் என்று ஆக்கிட்டாங்க.) எல்லாம் சிவமயம் என்பதுபோல் எல்லாம் திருமயம் என்று ரைமிங்கா இருக்கட்டுமேன்னா?

தேசபக்தர்  சத்தியமூர்த்தி இங்கேதான் பிறந்துருக்கார். பொதுவா ஊரில் இருக்கும் கோவில்களின் மூலவர்கள் பெயரையே குழந்தைகளுக்கு வைக்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்துருக்கே!  அதன்படி மெய்யப்பன் என்ற பெயருக்கும் கூட மூலம் நம் திருமெய்யர்தான்:-)

கோட்டை இருக்கும் குன்றின்கீழே இருக்கும்  இந்தப்பெருமாள் கோவில் போலவே ஒரு சிவன் கோவிலும் இருக்கு. ரெண்டுமே குடைவரைக் கோவில்கள். குகைக்கோவில்கள்.  ரெண்டு ராஜகோபுரங்களிலும் உயர வித்தியாசம் இருக்கோ? . ஒன்னு அஞ்சும் ஒன்னு மூணுமா  நிலைகள். சட்னு பார்க்கவும் ஒன்னு போலவே.  கவனிச்சுப் பார்த்தால்தான்  வெவ்வேற டிஸைன் என்று தெரியும்.

சைவம், வைணவம் ரெண்டுமே ரெண்டு கண்கள் என்று சொல்வதைப்போல்  சிவனும் விஷ்ணுவும் சைடு பை சைடாத்தான் இருக்காங்க. இவர் சத்திய மூர்த்தி, அவர் சத்திய கிரீஸ்வரர்.  சத்தியம் எல்லோருக்கும் பொது!  சத்தியம்= உண்மை=மெய். சரியா வருதோ?
நேரம் இல்லை என்பதால்  சிவனை தரிசிக்காமல் கிளம்ப வேண்டியதாப் போச்சு:(


பெருமாள் கோவில் சந்நிதித்தெருவில் ஒரு வீட்டில் 'இங்கு காபி கிடைக்கும்' என்ற  போர்டு.  கிளம்புமுன் ஒரு காபி  இருக்கட்டுமேன்னு பார்த்தால்.... நம்ம நேரம், 'இன்றைக்கு அந்த மாமி எங்கியோ போயிருக்காங்க'ன்னு  வீட்டு வாசலில் பூஜைப்பொருட்கள் தேங்காய் பழக்கடை  வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருந்தவங்க சொன்னாங்க.

'என்னைப் பார்க்கலை அதான் உனக்கு காஃபி இல்லை'ன்னு  சிவன் சொல்லிட்டாரு போல!

போகட்டும். ஒரு வேளை காஃபி இல்லைன்னா என்ன?  வாங்க  ... நம்ம நூத்தியெட்டில் அடுத்த  கோவிலுக்குப் போகலாம்.

தொடரும்...........:-)



PINகுறிப்பு:   நம்ம பத்ரியிடம் சுட்ட ஒரு படம் அந்த சினிமாஸ்கோப்பு.   அவருக்கு நம் நன்றிகள்.

42 comments:

said...

அழகிய படங்கள்...

அட...! பெயர்க்காரணம் இது தானோ...?

said...

நல்ல ஆன்மீகப் பயணம்.அத்துடன் பெரியவர் பற்றிய நல்ல விவாதம். பாராட்டுகள்.

said...

துளசி அம்மாவிற்கு வணக்கம்!
உங்கள் பயண பதிவுகள் அனைத்தையும் ரசித்து வாசிக்கிறேன்..உங்கள் எழுத்து நடை பிரமாதம். நீங்கள் எழுதியதை கொண்டு, ஸ்ரீரங்கம் கோபுர தரிசனம்,திருவானைக்காவல் உச்சி வேளை பூஜை என பல அறிய காட்சிகள் காண கிடைத்தது. நன்றி அம்மா

ரம்யா

said...

கண்ணுல கொண்டு வந்து நிறுத்திட்டீங்க ரங்கனை :)))))(திருமெய்யர் ) விளக்கங்கள் அருமை !!! நன்றிகள் பல பல .

said...

இந்தக் கோயிலுக்கு அருகிலுள்ள பெரிய நகரம் மதுரையா அல்லது திருச்சியா? அந்தக் கோட்டை மதிலை பார்த்த நினைவிருக்கிறது. ஆனால் இந்தக் கோயிலைத் தவற விட்டு விட்டேன். அடுத்தமுறை போகலாம். எப்படிப் போவது? நன்றி.

said...

எல்லா சிலைகளை விட, எனக்குப் பிடித்த படம்..

கோபால் சார் கையிலே துளசியை வச்சுகிட்டு
நிற்கிறார் பாருங்க.. அது தான்.

அவரு நிற்கிற இருக்கிற போஸ் பார்த்து சிலை கூட,
நம்மாலே போட்டி போட முடியாது, நம்ம ஓடிப்போயிடுவோமா என்று ஒரு காலை முன் எடுத்து வைத்தது போல் இருக்கிறது.

சுப்பு தாத்தா.

said...

ஆஹா.. உங்க தயவில் நாங்களும் பெரிய பெருமாளை தரிசித்தோம்.

படங்கள் அனைத்தும் அற்புதம்.

said...

எல்லாப் படங்களும் ஜோர். அதில் ஒரு படத்தில் துளை வழியே கசியும் சூரிய வெளிச்சம் அழகு.

சினிமாஸ்கோப் பெருமாள் - நல்ல வர்ணனை. அப்படித்தான் தெரிகிறார்.

//ஓ...... அதுதானா? ஏண்டா பெருமாளே.... இப்படிப் பண்ணிட்டே?//

:((((( ம்ம்ம்...

கோவில் படங்கள் அசத்துகின்றன.

said...

அன்பு துளசி 50 அடிப் பெருமாளா. நினைக்கவே புல்லரிக்கிறது பெரிய கோவில் .உங்கள் பயணத்துக்கு மகா பெரிய புண்ணியம். எங்களுக்கும் சேர்த்துக் கொண்டு பயணிக்கிறீர்கள்.

said...

Before going to any temple, I check up their opening & closing hours to avoid agonising disappointments. Sometimes, they differ from temple to temple. For e.g if you go to Nava Thirupathikal in Srivaikuntam Tuticorin Dist., you will know that the temples close at 7 pm sharp to proect their jewels. Ironically, the God is named Kallar piran. As the story goes, he helped a Kallan escape; hence that name. It is in that Temple Nammaazhvaar was found sitting in a big hole of a Tamarind tree. The temples close at 7 pm. as per the orders of TN Government passed after a priest was murdered by a robber at 8 pm. It happened in 70s.

Also, a humble request to you:

Whenever you go to any Divya Desam, you may kindly reproduce at least one passuram of the Alvar who sang on the temple deity. In this present DD, Thirumangaialvar sang, as you wrote. But it is only one passuram which you could have quoted it in full (just four lines only - can get on line)

//திருமங்கை ஆழ்வார் வந்து பாடிவச்சுட்டுப் போயிருக்கார்.//

Irreverent way of saying, isn't? I am pained to read that. It sounds as if the Alwar did it mechanically.

//திருமங்கையாழ்வார் இத்திருப்பதி பெருமாளின் மீது மங்களாசாசனம் பண்ணியிருக்கிறார். அப்பாசுரம் வாசகர்களுக்காக இங்கே:

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,

கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட

மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்

கையானை, கைதொழா கையல்ல கண்டாமே.//


என்று திருத்திக்கொண்டு நீங்கள் எழுதிய வரியை நீக்கினால நன்றி.

நீங்கள் பள்ளிகொண்ட பெருமாளைப்பார்த்து அசந்தேனென என எழதியது மகிழ்ச்சி. ஆனால் அப்பெருமாளில் சிறப்பு கரிய நிறத்தில். அதைப்பற்றி நேரில் கண்ட நீங்கள் ஓர்சொல் கூட சொல்லவில்லை. ஆனால் பாருங்கள் ஆழ்வார் பெருமாளின் அந்நிறத்துக்குச் செய்யும் சிறப்பை.

I beg your pardon if I have written anything amiss.

said...


படங்கள் அனைத்தும் அருமை பூக்கார அம்மாவிடம் ''துளசி,, வாங்கியதை ரசித்தேன் ஹி ஹி ஹி எனது ''நகை,,ச்சுவை பதிவுக்கு வரலாமே,,,,,

said...

அடடா! திருமெய்யன் என்றும் சொல்லலாமே. திருமகளை மெய்யில் கொண்டவன் தானே அவன். இதயம் மெய்யில் சேர்த்திதானே.

அந்தப் பள்ளி கொண்டான் அழகு. அதுவும் தனியே தன்னந்தனியே உங்களைச் சந்தித்திருக்கிறான். அதுதான் குடுப்பினை.

சிவனும் அபிஷேகப்பிரியர்னு தெரியும். காப்பிப் பிரியர்னு இப்பத்தான் தெரிஞ்சது. கடையவே மூடிட்டாரே.

said...

உங்கள் பதிவைப் படித்தபோது மனதில் எழுந்த எண்ணங்கள் திரு குலசேகரன் எழுதிய கருத்துரையைப் படித்ததும் காணாமல் போய்விட்டன.
மங்களாசாசனம் என்கிற வார்த்தைகள் எல்லாம் மறைந்தே விட்டன. அவரது வருத்தம் ரொம்பவும் நியாயம்.
அவர் சொல்லுவதுபோல நான் எந்த திவ்ய தேசம் போனாலும் அந்தப் பாசுரங்களை எழுதி எடுத்துக் கொண்டு போவேன். சந்நிதியில் உட்கார்ந்து அவற்றை சேவிப்பது மனசிற்கு திருப்தியான விஷயம்.

said...

மேடம், படங்களைப் பார்த்தாலே, கோவிலுக்கு வந்த திருப்தி வந்திடுது. ஒரு சந்தேகம். எப்படி கேமராவோட இவ்வளவு கோவில்லயும் புகுந்து படம் எடுத்துடறீங்க? நாங்கெல்லாம், மொபைல் கேமராவுல படம் எடுத்தாக்கூட சண்டைக்கு வாரங்களே?

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்பு நன்றிகள்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க ரம்யா.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

பயணங்கள் ஏராளம். ரசித்து வாசிப்பதற்கு மீண்டும் என் நன்றிகள்.

said...

வாங்க சசி கலா.

இந்த முறை கிட்டிய போனஸ்களில் இந்த ரங்கனும் ஒருவர்!

said...

வாங்க வியாசன்.

திருச்சியில் இருந்து திருமயம் போகலாம். நீங்க புதுக்கோட்டை வந்துட்டால் அங்கிருந்து வெறும் 20 கிமீதூரமே!

மதுரையில் இருந்து என்றால் மேலூர், திருப்பத்தூர் கடந்து திருமயம்.

சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடாதீர்கள்.

said...

வாங்க சுப்பு ஐயா.

ஆனாலும் கோபால்,ரொம்பத்தான் துளசியைக் கையில் தாங்கறார், இல்லெ:-)

said...

வாங்க ரமாரவி.

தள்ளுமுள்ளு இல்லாமல் தரிசனம் கிடைத்ததோ!!!

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசித்து அனுபவித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

பெருமாளின் சயனகோலம் மட்டுமே முப்பது அடிகள்.

இடதும் வலதுமா இருக்கும் குகைச்சுவர் ஒரு அம்பதடி நீளம் இருக்கும்.

முப்பதுன்னா முப்பது இல்லையோ!!!!

said...

வாங்க குலசேகரன்.

நாலாயிரப்ரபந்தங்களில் இவ்வளவு ஆழ்ந்த அறிவு எனக்கில்லை. மனசு முழுசும் பெருமாளோடு ஒரு அன்பு மட்டுமே! அந்த அன்பின் காரணமே அவனைத் தேடிக்கொண்டு ஓடுகிறேன்.

நீங்கள் சொல்வது சரியே. ஆனால் எந்தக் கோவிலுக்கு எந்தப்பாடல் என்று தெரிய வேணாமா?

திருநின்றஊர் கோவிலில் பாசுரங்களை எழுதிப் போட்டிருப்பது போல் மற்ற கோவில்களில் இருந்தால் என்னைப் போன்றவர்களுக்குப் பயனாக இருக்கும். அறநிலையத்துறையோ, இல்லை கோவில் அதிகாரிகளோ ஏற்பாடு செய்யலாம். பூனைக்கு யார் மணி கட்டுவது?

மற்ற கோவில்களை விட இந்த நவ திருப்பதிகளின் டைமிங் வேறமாதிரி என்பதால் கோவில் நேரங்களை துளசிதளத்தின் நவதிருப்பதிப் பயணக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன்.

பாசுரங்களைத் தேட நீங்கள் உதவி செய்வீர்கள்தானே?

said...

வாங்க கில்லர்ஜி.

திருநெல்வேலிக்கே அல்வா, திருப்பதிக்கே லட்டு!

said...

வாங்க ஜிரா.

இப்படித்தான் எதிர்பாராத சமயங்களில் ஏகாந்தமா தரிசிக்க விடறான். இதே கருணையை திருப்பதியில் காமிக்கப்டாதோ?

அங்கே விநாடிக்கும் குறைவா தரிசனமுன்னு எதோ ஒன்னு கொடுத்து, அப்படியே தூக்கி வெளியில் கடாசிப்பிட்டானே:(

இன்னொருக்கா போகணும் என்ற நினைப்பு இருக்கு. அப்போ சிவனையும், அந்த காஃபியையும் விடப்போறதில்லை:-)

said...

வாங்க ரஞ்ஜனி.

எனக்கு அவ்வளவெல்லாம் பக்தி இல்லைப்பா. பெருமாளைப் பார்க்கும்போது பல சமயங்களில் மனசு முழுசும் சட்ன்னு வெறுமையா எந்த சிந்தனைகளுமே இல்லாமல் போயிரும்.

கோவிலுக்குள் நுழையும்போது மட்டும் பனிரெண்டு நாமங்களைச் சொல்வது வழக்கம். மிஞ்சிப்போனால் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ரெண்டு மூணு ஸ்லோகம். அம்புட்டுதான். ஆனால் இது எதுவுமே 'அவன்' முன்னில் இல்லை!

கண்ணோடு கண் நோக்குங்கால்....

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

பத்திரிகைக்காரரே இப்படிச் சொன்னால் எப்படி?

நான் பொதுவாக கோவில் அலுவலகத்திற்குப் போய் , அனுமதி வாங்கிக்குவேன். கோவிலைப் பற்றி எழுதப்போறேன் என்ற உண்மையைச் சொன்னால் பெரும்பாலான இடங்களில் அனுமதி கிடைச்சுரும்.

கேமெராவுக்கு தனிச்சார்ஜ்ன்னு இருக்கும் இடங்கள் எனக்கு லட்டு தின்பது போல. பிரச்சனையே இருக்காது. அதிலும் நம்ம கேமெராவைப் பார்த்தவுடனே சீட்டு வாங்கியாச்சான்னு கேட்டுப் பதறி ஓடிவரும் கடைநிலை ஊழியர்களைப் பார்த்தால் பாவமாத்தான் இருக்கும்.

மூலவரை எடுக்காதவரை பிரச்சனையே இல்லை. சிங்கை, மலேசியா மட்டும் விதிவிலக்கு. இஷ்டம்போல தாளிக்கலாம்.

படம் எடுப்பதால் சாமிக்குப் பவர் குறைவதில்லைன்னு அவுங்க மட்டுமே நம்பறாங்க.

said...

இதற்கும் பக்திக்கும் சம்மந்தமே இல்லை. ஒரு சின்ன மெனக்கெடல். அவ்வளவுதான். பெருமாளை சேவிக்கப் போகிறோம். நமக்கு எத்தனை எத்தனை கொடுத்திருக்கிறான், இன்றுவரை எனக்கு ஒரு குறை இல்லாமல் வைத்திருக்கிறானே நான் கேட்காமலேயே எல்லாம் கொடுத்திருக்கிறானே, அவனுக்கு நம் நன்றியை நம் வாயால் சொல்லாமல் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கும் ஆழ்வார்களின் ஈரச் சொற்களால் மங்களாசாசனம் செய்யலாமே என்று ஒரு மெனக்கெடல்தான்.
பெருமாளை சேவிக்கும்போது மனம் குழைவது போலவே இந்த தமிழ் பாசுரங்களை சேவிக்கும்போதும் மனம் குழையும். அந்த அனுபவத்தையும் ஒரு முறை பெறலாமே.

உங்களைப் போல 'ஹையோ ஹையோ என்று பெருமாளைப் பார்த்து உருகுவதுதன் நிஜமான பக்தி.

said...

ஓக்கே ரஞ்ஜனி.

நீங்கள் சொன்னால் சரி!

said...

108 திவ்ய தேசங்கள் அனைத்தும் தமிழகத்தில் இல. சிலபல வடநாட்டிலும், மலைநாடெனவழைக்கப்படும் கேரளாவிலும் உள்ளன. வெளி மாநிலங்களில் இருக்கும் திவ்ய தேசங்களில் ஆழ்வார் பாசுரங்கள் (அக்கோயிலையொட்டியவை) கல்லிலோ, பலகையிலோ அல்லது சுவரிலோ எழுதி வைத்திருக்க மாட்டார்கள். தமிழ் தெரியாதவர்கள் எனவே அவர்களுக்கு ஆழ்வார்களில் சிறப்புத் தெரியாது.

அதே சமயம், தமிழகத்து திவ்ய தேசங்களில் கண்டிப்பாக அப்பாசுரங்கள் கல்வெட்டில் அல்லது சுவரில் எழுதிப்போடப்பட்டிருக்கும். ஒருவேளை, ஆழ்வார் 100க்கும் மேலாக அக்கோயிலைப்பற்றிப் பாடியிருந்தால், அனைத்தையும் போடவியலாது. (திருக்கண்ணபுரம் -128; திருமாலிருஞ்சோலை - 128; திருவரங்கம்- 247; திருவேங்கடம் 202; திருநறையூர் - 110 - இவை 100க்கு மேற்பட்ட பாசுரங்களைக்கொண்ட ஐந்திருப்பதிகள்) ஆனால் ஒரு சில கண்டிப்பாகப் போடப்பட்டிருக்கும்.

நீங்கள் சென்ற திவ்ய தேசத்திலும் திருமங்கையாழ்வாரின் பாசுரம் போடப்பட்டிருக்கிறது. ஆனால் பள்ளிகொண்ட பெருமாள் அருகில் அன்று. சத்யமூர்த்திப்பெருமாள் சன்னதியருகில். ஓர் பாசுரம் மட்டுமே. அதைப்போலவே திருநின்றவூருக்கும் ஓர் பாசுரமே. அங்கு அப்பாசுரம் வெகுசிறப்பை அடையக்காரணம் ஒன்று உண்டு. எனவே அங்கு எல்லோருக்கும் நன்கு தெரியும்படி போட்டிருப்பார்கள். (அடுத்த மடலைப்படிக்கவும்)


இனி ஒன்று செய்யுங்கள்: திவ்ய தேச தமிழ்நாட்டுக்கோயிலுக்குச் சென்று வணங்கியவுடன், அங்குள்ள அர்ச்சகரிடம் இங்கு ஆழ்வார் பாசுரத்தை எங்கு எழுதிவைத்திருக்கிறார்கள் என்று கேட்டுவிடவும். அவருக்கு மிகவும் குதூகலமாக இருக்கும். இப்படியும் ஒரு ஆழ்வார் பக்தையை இன்று நான் காணப்து பெருமாளின் அருளே என்று. அவர் காட்டியவுடன், அதை அங்கு நின்று உரத்த குரலில் பாடுங்கள். அப்போதுதான் அக்கோயிலுக்குச் சென்றுவந்த முழுபுண்ணியமும் கிட்டும். ஆழ்வாரகளின் பாசுரங்களைக் கேட்டுமகிழ பெருமாள் காத்துக்கிடக்கிறார் எனபது வைணவர்களின் நம்பிக்கை. எனவே கண்டிப்பாக பக்தர்கள் அவற்றைப்பாட, அல்லது வாசிக்க வேண்டும். ஆழ்வார்கள் பாடியதனாலேயே ஒரு கோயில் திவ்ய தேசமாகிறது. இல்லாவிட்டால் இல்லை. குருவாயூர் இல்லை. திருமுஷணம் இல்லை. குணசீலம் இல்லை. அவைகள் சிறப்பான பெருமாள் கோயில்களாக இருந்தாலும் திவ்ய தேசங்கள் ஆகா எனவே திவ்ய தேச வழிபாடு ஆழ்வார்ப் பாசுரம் இல்லாமல் வராது.

This is for Ranjani Narayanan

மெனக்கெடல் - என இழிவுபடுத்தமுடியாது. பெருமாளுக்கு முதலில் வேண்டியவர்கள் ஆழ்வார்கள் என்பதனை வைணவ கோயிலில் பூஜைக்கப்பறம் நமக்குத் தரப்படுபவை முதலில் ஆழ்வார்களுக்கே சாற்றப்படும். சந்நதியில் பெருமாளுக்கருகில் அமர்ந்து அவர்கள் இருப்பார்கள். நாம் என்றாவது ஓர் நாள் செல்கிறோம். வழிபடுகிறோம். ஆனால் ஆழ்வார்கள் எக்காலத்திலும் என்னேரமும் பெருமாளே என்றிருப்பர்.

ஆயினும் வைணவர் அல்லாதவருக்கு இஃதெல்லாம் தேவையில்லையென்ற கருத்து தமிழரல்லாதோருக்குச் சரி.. தமிழருக்கு ஏன் வைணவ வழிபாடு அந்நியமாக வேண்டும்? பெருமாள் பக்தையாவது ஒன்றும்குறைவான செயலன்று. If a thing is worth doing, it is worth doing well!


கோபால் என்ற பெயருடன் கணவன்; துளசி என்ற பெயருடனே வாழ்க்கை. விலகி நின்றால் எப்படி? ஆழ்வார் பக்தையாவது எப்போது?

said...

//அப்புறம் பயணம் முடிஞ்சு வீடு திரும்பினதும் வலைவீசுனதில் சில சமாச்சாரங்கள் கிடைத்தன. அனந்த சயன பெருமாள் முப்பதடி நீளமாம். நம்ம ரங்கனைவிடக் கூடுதல் . இந்தியாவிலேயே பெரிய பெருமாள் இவர்தான்னு தெரியவந்துச்சு. கிபி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட கோவில். ஸோ.... முதலில் கோவில். அப்புறம் கோட்டை!//

நாங்க இரண்டு கோயிலுக்கும் போனோம். படங்களும் எடுத்தோம். பட்டாசாரியாரிடம் கேட்டதுக்குத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை நிர்வகிப்பதால் படங்கள் எடுப்பதில் பிரச்னை இல்லை என்றார். ஆனால் பதிவு தான் எழுத முடியவில்லை. ஏனோ புரியவில்லை. பெருமாளைப் பார்த்ததும் பிரமித்தது உண்மைதான். ஶ்ரீரங்கம் பெருமாளை விட அளவில் மட்டுமல்ல, வயதிலும் பெரியவர் என்றார். சிவன் கோயிலிலும் அழகான சிற்பங்கள். ஆனால் காமிராவை எடுத்தால் நம்ம முன்னோர்கள் துரத்துவாங்களே, உங்களுக்கு அந்த அனுபவம் கிட்டலை போல!:) அவங்களுக்குப் பயந்தே படம் எடுக்க வேண்டி இருந்தது. :)))

said...

திரு மலரன்பன் அவர்களுக்கு,
மெனக்கெடல் என்று நான் எழுதியதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்று புரியவில்லை. பெருமாளுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு பாசுரங்களைத் தேடி எடுப்பதை தான் நான் மெனக்கெடல் என்று சொன்னேன். இதில் இழிவு படுத்தல் எங்கே வந்தது என்று புரியவில்லையே! நமக்கு எத்தனையோ நன்மை செய்யும் பெருமாளுக்காக கொஞ்சம் மெனக்கெடலாமே என்று தான் சொன்னேன்.

said...

துளசி நீங்கள் பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து பெருமாளைத் தரிசிக்கவே வந்து இருக்கிறீர்கள். உங்கள் அயராத உழைப்பு எப்படிப் பட்டது என்று எனக்குத் தெரியும். உள்ளூரிலிருந்து கொண்டே சம்சாரம்,வீட்டிலிருக்கும் பெருமாள் சந்நிதி என்று சுற்றி வருபவள் நான். இப்பொழுது அதுவும் இல்லை . இங்கிருந்து மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனைப் படங்களில் காண்பதே என் பேறு.உங்கள் எழுத்து அந்தந்த திவ்ய தேசங்களுக்கும் என்னை அழைத்துப் போகின்றன. அந்த வகையில் புனிதமான தம்பதிகள் நீங்கள்.கோடி நமஸ்காரம். உங்கள் இருவருக்கும். என் நன்றி.

--
அன்புடன்,
ரேவதிநரசிம்ஹன்

said...

எங்க கோபால் சார் சாய்ஸை மட்டம் தட்டும் ரீச்சரை வன்முறையாகக் கண்டிக்கிறோம்.

said...

Naanum naanum Koths.

said...

வாங்க மலரன்பன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//அதை அங்கு நின்று உரத்த குரலில் பாடுங்கள். அப்போதுதான் அக்கோயிலுக்குச் சென்றுவந்த முழுபுண்ணியமும் கிட்டும்.//

என் பாட்டைக் கேட்டு பெருமாள் எழுந்து ஓடாமல் இருக்கணுமேன்னு இப்போ புதுக் கவலை:(

said...

வாங்க கீதா.

இந்த ஒரு கோவில் மட்டும்தான் போனோம். சிவன் கோவிலைக் கோட்டை விட்டாச்சு:(

ஆமாம்.... அங்கே முன்னோர்கள் யாருமே கண்ணில் படலையே...கோட்டைக்குள் சுற்றும்போது கூட!

படம் எடுக்க அனுமதி கேக்கலாமுன்னு நினைக்கும்போதுதான் பட்டர் 'பேசுனதை' பார்த்து பேசாம இருந்துட்டேன்ப்பா:(

said...

வாங்க வல்லி.

சயன கோலம் இருக்கும் படத்தில் பின்புலத்தில் இருக்கும் தேவர்கள் ரிஷிகளில் நாரதரும் இருக்கார்!

இப்பதான் இன்னொருக்கா அந்தப் படத்தைப் பார்த்தபோது கண்ணில் பட்டார். கையில் மஹதி கூட இருக்கு!

எப்படியோ நாரதர் கலகம் நல்லபடியா முடியும்தானே:-)

said...

வாங்க கொத்ஸ் & வல்லி,

எங்கே போச்சு ஸ்மைலி?

ஒய் மிஸ்ஸிங்:(

said...

As smiley is missing.I have to copy paste it Thulasima.>}}}}}}}}}}}}}}

said...

அப்பாடி எத்தனை எத்தனை சிற்பங்கள்.....

ஒவ்வொன்றும் அழகு.

திருமயம் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கூடவே கோட்டையையும் சிவன் கோவிலையும் ரசிக்க வேண்டும்.