Friday, February 13, 2015

ஒலகக்கோப்பை ஓப்பனிங் ஸெரிமனி!

நம்மூரில் நடக்கும் விழாவுக்கு நாமே போகலைன்னா நல்லாவா இருக்கும்?  எத்தனை மணிக்கு ஆரம்பம், என்னென்ன  நடக்கப்போகுதுன்னு கொஞ்சம் ஆராய்ஞ்சோம். உள்ளூர் மீடியா  வேறெதுக்கு இருக்கு:-)

எட்டரைமணிக்கு  நிகழ்ச்சிகள் ஆரம்பமுன்னு சொல்லி இருந்தாங்க. ஸ்கை ஸ்போர்ட்ஸ் சானலில் லைவா காமிக்கிறாங்களாம். ஆனால்  ஆறரைக்கு ஆரம்பிக்குமாம்!  அப்போ அந்த ரெண்டு மணி நேரம்?

அதெல்லாம் ஒன்னுமில்லை. பிரபலங்கள்  பலர், பேக்யார்ட் க்ரிக்கெட்ன்னு சின்னப்புள்ளைகளோடு ஜஸ்ட்  ச்சும்மா   கொஞ்ச நேரம் விளையாடுவாங்க!  அதுக்கெல்லாம் நாம் போக வேணாம்.  டாண்னு எட்டரைக்கு அங்கே இருந்தாப் போதும்.  கலைநிகழ்ச்சிகள் முடிஞ்சு வானத்தில் வாணவேடிக்கை (ஃபயர் ஒர்க்ஸ்)  இருக்கும். இந்த முறை ரொம்ப அட்டகாசமா இருக்கப்போகுதாம். நிறைய நேரம் பட்டாஸ் என்றார் கோபால்.

எத்தனை மணிக்கு?  இப்பதான் சம்மர் சீஸன்.  இருட்டாகவே நேரஞ்செல்லும். டே லைட் ஸேவிங்ஸ் வேற இருக்கே!

பத்தோ பத்தரையோ....  சரியான நேரமொன்னும் போடலைன்னார் இவர்.
நம்ம இந்தியன் கலை கலாச்சாரக் குழுக்கள் எல்லோரும் ஆறரைக்கு  வந்துருங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

வியாழன் வேலைநாளா இருக்கே.....வேலை முடிஞ்சு வரவே  அஞ்சே முக்கால் ஆச்சு.  டின்னர் சாப்பிட்டுட்டுக் கிளம்பலாம்.  திரும்பி வர பதினொன்னு ஆகிருமுன்னார். ஏழுமணிக்கு சாப்பாட்டைமுடிச்சுக்கிட்டு ஏழரைக்குக் கிளம்பிடலாம்.   2$ பார்க்கிங்  இருக்குன்னு மகள் சொல்லி இருந்தாள்.

மூணு இட்லி, வெங்காய சாம்பார், கொஞ்சம் தயிர் சாதம் கோபால், ரெண்டு இட்லி தயிர், ஒரு பிடி ரசஞ்சாதம்  துள்சினு முடிச்சுட்டு  ரெண்டு கேமெரா, எக்ஸ்ட்ரா பேட்டரி,  பைனாகுலர், குளிருக்கு  ஜாக்கெட்ஸ் சகிதம்  ஏழு பத்துக்கு ரெடி.  உன்  ஃப்ரெண்ட்ஸ்க்கு  ஓப்பனிங் ஸெரிமனி பார்க்கப்போறேன்னு வாட்ஸ்ஸப்பில் போட்டுட்டுவான்னார். பிறந்தநாள் பரிசாக ஒரு சாம்ஸங் S5,  4G  வாங்கிக்கொடுத்துருக்காரே! அதுவும் ஆச்சு.


பத்து நிமிச ட்ரைவ்தான் நம்ம ஹேக்ளி பார்க். நம்மூர் ஸ்டேடியம் நிலநடுக்கத்தில் போயிருச்சு பாருங்க. அதனால்  இதே பார்க்கில் தென்பகுதிக்கு  உள்ளேதான் தாற்காலிகமா ஒரு  ஏற்பாடுன்னு 'பிட்ச்' தயார் செய்து  இந்த உலகக்கோப்பை ஆட்டத்துக்குன்னு நேர்ந்து விட்டுருக்காங்க.  ஹேக்ளி ஓவல் என்று இதுக்கு பெயரும் வச்சாச்சு!


ஓப்பனிங் ஸெரிமனியை  க்ரிக்கெட் க்ரவுண்டில் வச்சா  இடம் பாழாகிருமேன்னு,  பார்க்கின் வடக்குப்பகுதியில் இன்றைய விழா நடக்குது. க்றிஸ்மஸ், சைனீஸ் நியூ இயர்,  ஈஸ்டர் சமயம் வரும் ஸர்க்கஸ்  இப்படி ஊர்ப் பொது கொண்டாட்டங்கள் எல்லாம் எப்பவும் இங்கேதான்.

எல்லோருக்கும் ஒரு வழின்னா இடும்பர்களுக்கு வேற வழி இல்லையோ? அதன்படி  நேர் ரோடில்  போக்குவரத்து அதிகம் இருக்குமுன்னு  தாமாய் நினைச்சுக்கிட்டு  சுத்துவழியில் போய்க்கிட்டு இருந்தோம். நம்மைப் போலவே யோசிக்கும் பலரும் இருக்காங்கதான் உலகில்:-)))

பார்க்கிங் ஏற்பாடு இருக்கும் இடத்தில் நுழையும்போதே...காவல்துறை  இங்கே நிறைஞ்சு போச்சு. அந்தப்பக்கம் பாருங்கன்னு  (அன்பாய் ) விரட்டினாங்க. அப்படியாவது  நேராப்போனோமோ? ஊஹூம்.....   சட்ன்னு   ரைட் டர்ன் எடுத்து  சிலபல தெருக்களைச் சுற்றி (பார்க்கிங் இருக்கான்னு தேடறோமாம்!)  ஒருவழியா  அந்த ரெண்டு டாலர் பார்க்கிங் உள்ளே போறோம்.  டென்னிஸ் கோர்ட்டுக்கும், கோல்ஃப் கோர்ஸுக்கும் இடையில் அமைச்சுருக்காங்க. அதுலே ஏபிசிடின்னு ஆரம்பிச்சு நமக்கு எல் வரிசையில் இடம் கிடைச்சது.

ராமனும் சீதையும் வனவாசம் போனபோது, சீதையின் நாற்காலியையும் ராமனே சுமந்தானாமே!

நிகழ்ச்சி மேடைக்கு நடந்து போகணும். இந்தப்பக்கம் போ, நடப்பவர்களுக்கு மட்டுமேயான பாதை  என்றெல்லாம்  ஸைன்போர்டு வச்சுருக்காங்க. நடந்து நடந்து  (ஒரு ரெண்டு கிலோ  மீட்டர் தூரம் இருக்கலாம்)  போறோம்.  நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சமீபிக்கும் சமயம் நம்ம நண்பர்கள் சிலர் எதிரில் வந்துக்கிட்டு இருக்காங்க.

என்ன கிளம்பிட்டீங்கன்னா.....  நம்ம ஸ்டைல் நடனங்கள் எல்லாம் முடிஞ்சுருச்சாம்! மெய்யாலுமா?

அட ராமா......  நாமும் திரும்பிடலாமான்னா.... வந்தது வந்தோம்.  கொஞ்சநேரம் நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டே போகலாம். உனக்குப்பிடிச்ச  ஃபயர் ஒர்க்ஸ் இருக்கே! (கொக்கி!)

நாம் போகும்பாதை மைதானத்துக்குள் நுழையும் இடத்திலேயே(!)  ஒரு மேடை (காலியா) இருக்கு. Spicy  As என்ற பேனருடன். (ஒரு எஸ் மிஸ்ஸிங்கோ?) மேடைக்குப் பின்பக்கம் ஒரு நாலைஞ்சு   சாப்பாட்டுக் கடைகள்!

இங்கேதான் ஆறரைக்கு ஆரம்பிச்சு நம்ம கலைநிகழ்ச்சிகள் நடந்துருக்காம்.   ஒருமணி நேரம் நடந்துச்சுன்னு சொன்னாங்க.  தில்லானா மோகனாம்பாள் படத்துலே நம்ம மனோரமா சொல்லும் வசனம்தான்.  "அந்த மோகனாங்கி  ஆடுனா என்ன? ஆடட்டுமே! அவுங்க ஒரு பக்கம் ஆடுனா  நான் ஒரு ஓரமா  ஆடிட்டுப்போறேன்.  எனக்குக் கைதட்ட நாலுபேர் இருக்கமாட்டாஹளா? "

அலங்கரிச்ச மெயின் மேடை அதோ  ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்!  நடையைக் கட்டறோம் அதை நோக்கி.  மேடைக்கு ரெண்டு பக்கத்திலும்  டவர்கள். டனேடின்,  நேப்பியர், ஹேமில்டன்  இப்படி நியூஸியில் க்ரிக்கெட்  போட்டிகள் நடக்குமிடங்களின் பெயர்களில்  வச்சுருக்காங்க. இதைத்தவிர ஏராளமான  பிக் ஸ்க்ரீன்கள்  சுத்திவர!  பேசாம ஒன்னு ரெண்டை அந்த கார்ப்பாக்கிலே வச்சுருந்தால்  அங்கேயே இருந்து பார்த்துட்டுப் போயிருக்கலாம்!

மேடைக்கு முன் உக்கார்ந்து இருந்த கூட்டத்தின் கடைசியில் நாமும்  அமர்ந்தோம்!  இன்னும் ஏழு நிமிசம் இருக்கு அந்த  எட்டரைக்கு.   அதுவரை கூட்டத்தை ஆட்டுவிச்சுக்கிட்டு இருந்தவர் சொல்றார் ஹெலிகாப்டர் வருது இங்கே!  மொத்த சனமும் மேலே பார்த்துக் கையாட்ட  .....மேடையைக் கிளிக்கிட்டு இருந்த கோபால், ஷான் அங்கே இருக்கான் என்றார்.  அஞ்சு வயசுமுதல்நாம் பார்த்து வளர்ந்த பிள்ளை. கிறைஸ்ட்சர்ச் சல்மான் கான் என்று பேர் வச்சுருக்கேன்.  ஆடும்போது அதை அப்படியே அனுபவிச்சு ஆடுவான். தமிழ்ச்சங்கத்தில் நான் கலைகலாச்சார ஒருங்கிணைப்பாளரா (பத்து வருசம் ) இருந்த சமயம்  ஷானை நடனமாடக் கூப்பிட்டால்,  செய்தோளாம்  ஆண்ட்டின்னு  சொல்வது மட்டுமே வழக்கம். அப்போதான்  மேடையில்   கிறைஸ்ட்சர்ச் சல்மான் கான்  என்ற பட்டம் அளித்து கௌரவப்படுத்தியது.

கேரளா சங்கத்தின்  மெயின் டான்ஸரே ஷான்தான்.
உள்ளூரைப் பொறுத்தவரை  பல பாலிவுட் ப்ரொக்‌ஷன்களை  தயாரிச்சு தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன்  ஆடுவது  பிரபலம்.  அரங்கு நிறைந்த  ஆட்டம்தான்.  வயசு இப்போ 21  யூனியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு. ரெண்டு குறும்படம் இயக்கி நடிச்ச அனுபவம்கூட!

எட்டிப் பார்த்தால் அந்தக் குழு நிக்குது.  சரி. நடனம் உண்டு. ரிப்பீட்டாக இருக்கலாமுன்னு நினைச்சேன்.


எட்டரைக்கு  நிகழ்ச்சி ஆரம்பிச்சது.  மைக் பிடிச்சவர்கள் மேடைக்கு வர முதலில் வரவேற்பு  ஐட்டமா  எல்லா நாட்டுக்காரர்களுக்கும்  ஒவ்வொரு நிமிஷம். ஸ்ரீலங்கா சிங்களவர்களின்  நடனம், ஸ்காட்லாந்து  பேக் பைப்பர், இந்திய நடனம்,  இப்படி  ஒவ்வொன்னா.....

மேயரம்மா வந்து  எல்லோருக்கும்  வாழ்த்து சொல்லிட்டுப் போனாங்க. நாப்பது வருசம் கழிச்சு நடக்கும் பெரிய கொண்டாட்டம் இது. அதுவும் அவுங்க ஆட்சி நடக்கும் நேரத்தில்!  பதவி வந்ததும் தோரணை தானே வந்து ஒட்டிக்குது இல்லே!


அப்புறம்  போட்டி நடக்கப்போகும் வெளியூர்களில் உள்ளவர்களை  இங்கிருந்தே பேட்டி.  இதுக்கு முன் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் பங்கெடுத்த ஆட்டகாரர்களிடம் அவுங்க அனுபவம் பற்றிக் கேட்டாங்க.  உண்மையைச் சொன்னால்.... இதையெல்லாம்  சாதாரண ஒரு டெலிவிஷன் ஷோவில் செஞ்சுருக்கவேண்டியது. ஸர் ரிச்சர்ட் ஹேட்லீ  மேடைக்கு வந்தார்.  ரொம்பதான் வயசாகிப் போச்சு!

மக்கள்ஸ்க்கு போரடிக்க ஆரம்பிச்சதுன்னு அவுங்க நடமாட்டம் பார்த்தே தெரிஞ்சது. குளிர்காற்று வேற கொடுமையை ஆரம்பிச்சதும்  காஃபி வாங்கியாந்து குடிக்கும் கூட்டம் அதிகமாச்சு. எல்லாம் என்னைச்சுத்தியேதான்.

எங்களுக்கு முன்னால் குழந்தைகுட்டிகளுடன் உக்கார்ந்திருந்த ஆஃப்ரிக தம்பதிகள் தம் பிள்ளைகளுடன்  பேசிக்கிட்டே  அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமா இருந்தாங்க. பிள்ளைகள்  சைஸுக்கேத்த  நாற்காலி பிடிச்சுருந்துச்சு.

அட்டகாசமான ஒரு ட்ரம்  முடிஞ்சு பாட்டு ஆரம்பிச்சது. கூடவே குளிர் காற்றும். நாப்பது மினிட்டுக்கு மேல் அங்கிருக்க முடியலை.  காதுலே இயர்ப்ளக் வச்சும் கூட.....ப்ச்


நிகழ்ச்சிகளும் அவ்ளோ  ரசிக்கும்படியா இல்லை  எனக்கு என்பதும் உண்மை.  போதும் பார்த்ததுன்னு  மீண்டும் விக்டோரியா லேக் (இதுவும் பார்க்குக்கு உள்ளேதான் இருக்கு) வழியா போன மாதிரியே வந்து  காருக்குள் உக்கார்ந்தபடி பாட்டைக் கேட்டுக்கிட்டு இருந்தோம்.

மவொரி நிகழ்ச்சி நல்லா இருந்துச்சு . நடந்துக்கிட்டே பெரிய திரையில் பார்த்ததுதான். வழியில் நடாஷாவைப் பார்த்தேன். பாங்க்ரா ஆடும் குழுவில் ஆடுனாங்களாம். ஒரிஜினல் பஞ்சாபி:-)

எனக்கென்னமோ இவ்ளோ சொதப்பலான ஓப்பனிங் ஸெரிமனி வேறெங்கும் பார்த்த நினைவே இல்லை. பேசாம பொறுப்பை சீனர்கள் வசம் கொடுத்திருந்தால் ஜாமாய்ச்சு இருப்பாங்க.

நேற்றைய ஒட்டைச்சிவிங்கிப் பதிவில் இந்தியக்கொடியை தலைகீழாய் வரைஞ்சு வச்சுருக்காங்களேன்னு பொருமினால்.... இன்றைக்கு இங்கே  உன் சகோவுக்கும் அதே கதின்னு  இப்படி:(

இந்த கலாட்டாவில்   அங்கே ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருந்தபோது 5 லேப்டாப் திருடு போயிருச்சாம்.அந்த அழகில் இருந்துருக்கு எங்க செக்யூரிட்டி.  எங்க ஜனங்க  கொஞ்சம் அப்பாவிங்கதான்.  டெர்ரரிஸ்ட் யாரோ  கொண்டு போயிட்டாங்கன்னு பயந்து அவன் திரும்ப வந்தாப்பிடிக்கணுமுன்னோ என்னவோ  போலீஸைக் கொண்டுவந்து ரொப்பி இருந்தாங்க!!!

180  மனித இனம் இருக்கும் ஊரில்  அந்தந்த கலாசாரக்குழுவை வச்சு நிகழ்ச்சி நடத்தி இருக்கலாம். மல்டி கல்ச்சுரல்  லிவிங்ன்னு சொன்னால் மட்டும் ஆச்சா?

கோட்டு சூட்டு:  எங்க  ப்ரதமர்  ஜான் கீ

பத்து இருபத்தி மூணுக்கு  பட்டாஸ் ஆரம்பிச்சது. காருக்குள் இருந்தே ஒரு வீடியோ க்ளிப். அம்புட்டுதான். நேரா வீடு.


 எங்க  பத்தரை மணிக்கு அங்கே அஸ்ட்ராலியாவில்  அவுங்க ஸெரிமனியை எட்டரைக்கு ஆரம்பிச்சுட்டாங்க.  எங்களுக்கும் அவுங்களுக்கும் ரெண்டு மணி நேர வித்தியாசம் இருக்கு. ரெண்டு நாடுகளும் சேர்ந்து நடத்துவதால்  எல்லாம் டபுள் டபுள் கேட்டோ:-)

ஸ்கை ஸ்போர்ட்ஸ் சானல் தான் இந்த ஒளிபரப்பு உரிமையை வாங்கி இருக்கு.  நாட்டுக்கே பெருமைன்னு  முழங்கிக்கிட்டு இதை காசுச்சேனலுக்குக் கொடுத்ததை  மக்கள்ஸ் விரும்பலை.

எல்லோருக்கும் வீட்டுக்கு வெளியேதான் பொதுவான ஸ்கை.   நாட்டுமக்களில்  பாதிப்பேர் வீட்டுக்குள்ளும் ஸ்கை வச்சுருக்காங்க  என் மகளைப்போல:-)  என்னைப்போல டிவி பார்க்காத மக்களும் இருப்பாங்கதானே?

ஆமாம்....   வெள்ளிக்கிழமை மாலை இந்த நிகழ்ச்சியை நடத்தி இருந்தால்  வீக் எண்ட் காரணம் இன்னும் நிறையப்பேர் வந்திருப்பாங்களே! மறுநாள் சனி என்பதால் கொஞ்சம் ரிலாக்ஸாகவும் இருந்துருக்கலாம் இல்லையோ?  ஏன் வியாழனுக்கு வச்சாங்க?

கேள்விக்குப் பதிலை கோபால் ஷவரில் இருந்தபோது கண்டுபிடிச்சுட்டார்.
யுரேகா!!!!!


"இன்று தேதி 13. வெள்ளிக்கிழமை.  அதான் ப்ளாக் ஃப்ரைடேன்னு ஒருநாள் முன்னால் வச்சுட்டாங்க"

வெள்ளைக்காரன் கூட இப்படி பஞ்சாங்கம் பார்க்க ஆரம்பிச்சாச்சா:-))))))

22 comments:

said...

//எனக்கென்னமோ இவ்ளோ சொதப்பலான ஓப்பனிங் ஸெரிமனி வேறெங்கும் பார்த்த நினைவே இல்லை.// அடாடா. சொதப்பிட்டாங்களா?

போட்டோக்களெல்லாம் மிக அருமை.

said...

எவ்ளோ ஃபோட்டோஸ்! கலர்ஃபுல்!

said...

பஞசாபி என்றாலே கோதுமை நிறம் தானோ? கூல்

said...

அருமை!

said...

ஆரம்பமே சொதப்பலா...? குளிர் எந்தளவு என்று உங்களின் புகைப்படம் சொல்கிறது...

said...

இத்தனை குளிரில் எப்படி வெளியே வந்தீர்களோ!
புகைப்படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது!
கொடியை இப்படிப் பண்ணிட்டாங்களே!

said...

வணக்கம்


இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_15.html?showComment=1423961203036#c2363193222159569920

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

said...

இன்றைய வலைச்சரத்தை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள். நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்.
http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_15.html

said...

இந்த உலகக் கோப்பைக்காக இந்தியாவில் எல்லோரும் அலைந்து கொண்டிருப்பார்கள். அதுவும் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும். உங்க பதிவிலேயே அந்த ஜோர் இல்லை.உத்சாகம் காணோம். படங்கள் அத்தனையும் ஜோர். அமிதாப கமெண்டரி கொடுக்கப் போவதாகச் சொன்னார்களே.

said...

நான் என் இளைய மகன் வீட்டில் இருந்தபடியே ஆஸ்திரேலிய ஓப்பெனிங் செரிமனியைப் பார்த்தேனே.

said...

வாங்க ரமா ரவி.

இங்கே மறுநாள் நிகழ்ச்சி எப்படி இருந்ததுன்னு மக்களிடம் கேட்டபோது 75% சனம், போரிங்ன்னு சொல்லி இருக்குன்னா பாருங்களேன்!

said...

வாங்க ஸ்ரீராம்.

நாம் மாய்ஞ்சு மாய்ஞ்சு ஒரு பக்கம் எழுதுவதை ஒரு படம் சொல்லிருதாமே!

அந்தக் கணக்கில் ஒரு முப்பது பக்க சமாச்சாரம் இங்கே போட்டாச்சு, இல்லே:-)))

said...

வாங்க ஜோதிஜி.

தமிழ்சினிமாவில் நடிக்கவரும் பஞ்சாபிகள்தான் கோதுமை நிறமாகவும் கூலாகவும் இருப்பாங்க.

ஆனால் நேரில் அங்கே போய்ப் பார்த்தால் கோதுமை ஒரு 50%தான் தேறும். பாக்கி நம்மாட்கள் போலவேதான்,கேட்டோ:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இன்னும் நல்லாப் பண்ணி இருக்கலாமேன்ற ஆதங்கம்தான். 185 வகை (எத்னிக்) இனத்தில் எங்கூர் மக்கள் இருக்காங்க. அதுலே பாதிப்பேர் பங்குபெற்றிருந்தால் கூட வகைவகையான கலர்ஃபுல் நிகழ்ச்சிகள் கிடைச்சிருக்கும்.

குளிர்.... முதல் கேம் இங்கே நடந்ததினம் 12 டிகிரிதான். என்ன சம்மரோ!

said...

வாங்க ரஞ்ஜனி.

வீட்டு விசேஷமாப்போச்சு.அதான் விட்டுக்கொடுக்க முடியலைப்பா.

ஒட்டைச்சிவிங்கியில் இந்தியக்கொடி தலைகீழா இருந்துச்சு. இதுலே என்னன்னா பிறை, தலைகீழ்!

பொது அறிவு அவ்வளவா போறாதுதான்:(

said...

வாங்க ரூபன்.

வணக்கம்.

தகவலுக்கு நன்றி.

said...

@ரஞ்ஜனி.

மனம் நிறைந்த நன்றி.

இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.

said...

வாங்க வல்லி.

மேட்ச் ஃபிக்ஸிங் காலம் வந்தவுடன் க்ரிக்கெட்டில் இருந்த ஆர்வம் போச்:(

இப்பக்கூட நம்ம கோபாலுக்குக் கம்பெனி கொடுக்கணுமேன்னுதான்....

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

நான் இன்னும் அஸ்ட்ராலியா ஓப்பனிங் ஸெரிமனி பார்க்கலை.

ஆனால் அது ரொம்பவே நல்லாத்தான் இருந்துருக்கணும்.

கொஞ்சம் பெரிய நாடு என்பதால் அமர்க்களமாச் செலவு செய்வாங்கதான்!

said...

படங்கள், காணொளிகள் என நாங்களே கலந்து கொண்ட உணர்வு.....

தொலைக்காட்சியிலும் நான் பார்க்கல!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இன்னும் பார்க்கலையா? யூ ட்யூபில் வந்துருக்குமே!