ஊரெல்லாம் நின்ன ஒட்டைச்சிவிங்கிகளை ஜனவரி 25லில் கொட்டாய்க்குள் கொண்டு வச்சது, இப்படி.
ஞாயிற்றுக்கிழமை எல்லோரையும் ஓட்டிவந்து ஒரு இடத்தில் நிக்க வச்சுட்டாங்க. எங்கே ஓடிப் போகுமோன்னு காலைக் கட்டிப்போட்டாச்சு. நல்லதுதான். திடீர்னு பூமி குலுங்குனா.... அதான் எப்போ எங்கேன்னு தெரியாம நாலரை வருசமா ஆடிக்கிட்டேத்தானே இருக்கு:(
பத்துமணி முதல் காட்சிக்கு என்றபடியால் கொஞ்சம் சீக்கிரமாவே போனோம். போன நேரம் ரொம்பச்சரி. அதன் பிறகு வந்தவங்கஒரு முக்காமணி போல வரிசையில் காத்திருக்க வேண்டியதாப் போச்சாம்.
பெரியவங்களை மூணு பக்கமும் நிக்கவச்சு நடுவிலே பிள்ளைகளை அடுக்கி இருந்தாங்க. பள்ளிக்கூடப் பசங்க அலங்கரிச்சது என்பதால் பிள்ளைகள் கூட்டம் இங்கேதான் மொய்ச்சுக்கிட்டு இருந்துச்சு. அப்பாம்மா, தாத்தாபாட்டிக்கு தங்கள் கைவேலைகளைக் காமிச்சுக்கிட்டு இருந்தாங்க.
இந்தியாவை இப்படி 'உள்ட்டா' பண்ணி இருக்க வேணாம்:(
காலத்துக்கேத்த மாதிரி:-)
எடுத்த 217 படங்களில் ஒரு 157 எடுத்து ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டுருக்கேன். விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்:-)
அந்த சுட்டி வேலை செய்யலைன்னா கீழே இருப்பதைப் பாருங்க.
நம்மாட்கள் எல்லோருமே முகநூலில் இருப்பதால் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்.
https://www.facebook.com/gopal.tulsi/media_set?set=a.10203739811678337.1073741827.1309695969&type=3&uploaded=157
இன்றைக்குத்தான் ஏலம் விடறாங்க. பதிவு எழுதும் இந்த நிமிஷம் ஏலம் முடிஞ்சு போச்சு!
ஏலத்தில் கிடைச்ச மொத்தத் தொகை $475,650 டாலர்கள். ஏறக்குறைய அரை மில்லியன்! தர்மகாரியங்களுக்குப்போகுது இந்தத்தொகை!
வரிகுதிரை வேசம்போட்ட ஒட்டைச்சிவிங்கிதான் அதிகபட்ச விலைக்குப் போயிருக்கு! $ 17,000 !
எங்கூர் மக்களிடம் 'வாங்க, இன்ன சமாச்சாரம் இன்னிக்கு இங்கிருக்கு'ன்னு ஒரு சேதி சொன்னாப் போதும். கிளம்பிருவோம்.
எங்கூருக்கே ஒரு பெரிய நிகழ்ச்சியா க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் நடக்கப்போகுது. 1974 லில் காமன்வெல்த் கேம்ஸ் நடந்துச்சு இங்கே. அதன்பின் நாப்பது வருசம் கழிச்சு வந்தபெரிய நிகழ்வு.
ஊரெல்லாம் ட்ராஃபிக் ஸைன்ஸ் வச்சு போக்குவரத்தை சமாளிக்கிறாங்க.
இதைத்தவிர வேறு பேச்சு இல்லை. போனவார மணல்கோட்டை போட்டியில் கூட இப்படி ஒன்னு:-))))
இன்னிக்கு மாலை 6.30க்கு விழா ஆரம்பம்.கலை நிகழ்ச்சிகள் 8.30க்குத் தொடங்கும்.
இண்டியன் க்ளப், இண்டியன் கல்ச்சுரல் க்ளப், கேரளா க்ளப் இப்படி நம்மாட்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள்.
உலகம் முழுசும் ஒளிபரப்பாகும் நிகழ்வு. காணத்தவறாதீர்கள்!
நாங்களும் போறோம். ஊரே அங்கேதான் இருக்கப்போகுது. சுமார் 4 லட்சம் மக்கள் கூடப்போறாங்க!!!!

14 comments:
முகநூலே தவம்... கண்டிப்பாக பிரச்சனையே இருக்காது...
நன்றி...
நாளைக்கு விழாவின் காணொளி போடுங்க...
//எங்கூர் மக்களிடம் 'வாங்க, இன்ன சமாச்சாரம் இன்னிக்கு இங்கிருக்கு'ன்னு ஒரு சேதி சொன்னாப் போதும். கிளம்பிருவோம்.//
ஹா, ஹா.
நீங்க ஒரு சிவிங்கி வாங்கிக்கலையா?
படங்கள் அனைத்தும் அருமை.
கலர்கலராக கண்ணைகவர்கின்றார்கள் சிவிங்கியார்கள்.
அருமையான படங்கள். மதியம் உலகக் கோப்பைத் தொடக்க நிகழ்ச்சிகளை வீட்டில் ரசித்துக் கொண்டிருந்தார்கள். நான் இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்!
நீங்க ஓடியோடிப் பார்த்ததை நாங்க உக்காந்த இடத்துலேர்ந்தே பார்த்துட்டோம். ஒவ்வொண்ணும் அழகு. முதல் படம் எடுத்த விதம் அருமை.
வரிச்சிவிங்கி அட்டகாசமா இருக்கு. தோட்டத்துல நிறுத்தினா நல்லாத்தான் இருக்கும். செடிகளை மேய்ஞ்சுருமோ??
சிவிங்கிகள் அனைத்தும் அருமை. உட்கார்ந்த இடத்திலேயே நாங்களும் ரசித்து விட்டோம். நன்றி டீச்சர்.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
சின்னச்சின்ன காணொளிகள் ரெண்டு போட்டுருக்கேன்:-)
வாங்க ரமா ரவி.
யானைன்னா ஒருவேளை வாங்கி இருப்பேன்:-)))
வாங்க மாதேவி.
ரசிப்புக்கு நன்றீஸ்ப்பா.
வாங்க ஸ்ரீராம்.
இன்னும் ரெண்டே வாரம்தான் சம்மர் முடிய. அதுக்குள் எல்லாக் கொண்டாட்டங்களையும் அனுபவிக்கும் அவசரத்தில் ஊர் இருக்கே!
வாங்க சாந்தி.
அடி ஆத்தாடீ..... என்ன ஒரு கேமெராக் கண்ணு?
சுட்டபடம் மாத்திரம் டக்ன்னு தெரியுதே!!
தோட்டத்தில் வச்சா,குளிர் தாங்காது !
வாங்க ரோஷ்ணியம்மா.
ரசிப்புக்கு நன்றீஸ்ப்பா.
அனைத்தும் ஒருங்கே.... அழகு.
படங்களை முகப்புத்தகத்திலும் பார்த்தேன்.....
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி டீச்சர்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
நம்ம உ.த.வின் பரிந்துரையால் முகப் புத்தகத்திலும் சேதியைச் சொல்லிக்கறேன் இப்பெல்லாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment