Holly tree
இந்த மரத்துக்கு ஒரு விசேஷம் உண்டு.இதன் அடியில் நின்னு காதலர்கள் முத்தமிட்டுக் கொண்டால் , கல்யாணம் உறுதியாகிருமாம். அதுக்காக ஒரு மரக்கிளையை உடைச்சு கையில் பிடிச்சுக்கிட்டு, கையை தலைக்கு மேல் தூக்கி வச்சுக்கிட்டு (மரத்தடியில் நிக்கறமாதிரின்னு ) உண்மைக்காதலர்கள் கிஸ் பண்ணிக்குவாங்க. நம்ம வீட்டு மரத்தில் அப்பப்ப கிளைகள் ஒடிஞ்சுருப்பதைப் பார்த்தால் இது நெசம்தான் போல!!!!
வெள்ளையும் பச்சையும் கலந்த இலைகள். பச்சை இலையில் வெள்ளை பார்டர் ! இலைகளில் ஓரத்தில் முள் இருக்கும் கேட்டோ! அழகு அவ்வளா இல்லாத சாதாரண வெள்ளைப்ப்பூக்கள். ஆனால் இதுலே வர்ற பழங்கள்தான் கண்ணைக் கவரும் விதத்தில் இருக்கும். மிளகு சைஸில் சிகப்பு நிறத்தில் . ஏராளமான பறவைகள் பழத்துக்காகவே வந்து அம்மும்.
கிறிஸ்மஸ் விழா அலங்காரத்தில் இந்த மரத்தின் ஒரு கிளையை சாஸ்த்திரத்துக்கு வைக்கறாங்க(ப்ளாஸ்டிக் செயற்கை கிளை) சம்ப்ரதாயமான கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளில் இதன் இலைகள் தவறாமலிடம் பெறும். கிறிஸ்மஸ் ரீத் இந்த இலைக்கொத்துகளை வச்சுத்தான் கட்டுவாங்க.
நம்ம வீட்டு மரம் நான் நட்டது இல்லை. இந்த இடத்தின் பழைய ஓனர் நட்டு வச்சு வளர்த்தது. ஆனால் அவுங்களுக்கு மரத்தடி எபிஸோடில் நம்பிக்கை இல்லையோ என்னமோ கடைசிவரை கல்யாணம் கட்டாமல் வாழ்ந்து தன் 80 வது வயசில் எங்களுக்கு வீட்டை வித்துட்டு முதியோர் இல்லம் போயிட்டாங்க. பழைய வீட்டில் 95 % இடம் தோட்டமாகவும் நடுவில் ரெண்டு அறையுள்ள வீடுமா இருந்துச்சு. நாங்க எல்லாத்தையும் எடுத்துட்டு வீட்டுக்கு 32 %ம்தோட்டத்துக்கு 68% வச்சுருக்கோம்.
இது மல்லி வகைகளில் ஒன்னு. நல்ல வாசம் இருக்கு. ஆனால் சட்ன்னு வாடிரும். தொடுத்துவச்சால் ஒரு மணி நேரத்தில் புளியம்பூ:(
Lobelia இதுவும் பலவகை நிறங்களில் இருக்கு.
hollyhock இதுலேகூட 60 வகைகள் இருக்காம். அசப்புலே வெண்டைச்செடி இலைகள் பூக்கள் போல இருக்குன்னு இதன் மேல் எனக்கு அலாதியா ஒரு ஆசை. நெடுநெடுன்னு 12 அடி உசரம்வரை வளரும் தண்டில் வரிசை பூக்கள் ஒரு அழகு! கம்பத்தில் லௌட் ஸ்பீக்கர் கட்டி வச்சாப்லெ:-))))
Pansy . இதுக்கு நான் வச்ச பெயர் நாய் மூஞ்சு. பொமெரெனியன் நாய் முகம் என்று எனக்குத் தோணும். அதே சிரிச்ச முகம். இதுவும் பல நிறங்களில் உண்டு. முகம் இல்லாத ப்ளெய்னும் உண்டு.
Flemingo plants இதிலும் ஒவ்வொரு மகரந்தத்தண்டையொட்டி வரும் இலைகளே பூவாகிருது. அந்த குறிப்பிட்ட இலை மட்டுமே சிகப்பு நிறமா மாறிடும். நம செடியில் இப்போதான் நிற மாற்றம் உண்டாகுது. நம்ம ராமலக்ஷ்மி, குடியரசு தின மலர்க்கண்காட்சியில் பார்பி டால் ட்ரெஸ் Anthurium என்று சொன்னவைகளே இவை.
Petunia கொஞ்சம் சுலபமா வளர்க்கக்கூடியவை. இதிலும் ஒரு 35 வகை இருக்கு. ஒன்னோட நிறுத்திக்க முடியாதாமா இந்த இயற்கைக்கு:-)
Lily பல நிறங்கள் உள்ளன. கிறிஸ்மஸுக்கு பூ வேணுமுன்னா சரியா 100 நாளைக்கு முன் lily Bulb நட்டுவச்சால் போதுமாம். தண்ணீர் தேங்கி நிற்காத நிலம் என்றால் ஒரு வருசம் நட்டுவச்சது தொடர்ந்து வருசாவருசம் பூத்துரும்.
Helianthus 52 வகைகள். நமக்கெல்லாம் ரொம்ப பரிச்சயமான பூக்கள்தான். சன் ஃப்ளவர் என்று பெயர்:-) சூரியகாந்தி. நெடுநெடுன்னு வளர்ந்து போகும் தண்டின் உச்சியில் ஒரு பெரிய பூ ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு வருது. தினம் தினம் அதன் வளர்ச்சியைக் கவனிச்சு வியந்தேன். மொட்டு இதழ்விரியுமுன் கண்ணாமூச்சிக்குக் கண் பொத்தி வைப்பதைப்போல இதழ்கள் எல்லாம் ஒன்னையொன்னு அணைச்சு சேர்த்து மூடிபோட்டு வைக்குது.
இதில் டெட்டிபேர் வகைச் செடிகள் குள்ளமா இருந்தாலும் கிளைவிட்டு வளர்ந்து ஒரு செடியில் ஏழெட்டு பூக்கள் வரை முளைக்குது. ஆரம்பத்தில் மையப்பகுதி வழக்கமான சூரியகாந்தி போல மேத்தமெடிக்கல் டிஸைன் நடுவில் இருந்தாலும் பூ முழுசுமா மலர்ந்த பிறகு பார்த்தால் செண்டுப்பூ போல இருக்கு.
Hibiscus. செம்பருத்தி. பல நிறங்களில் உண்டு. நமக்கு கிடைச்சது இவைகளே. அதிலும் ஒன்னு மட்டும் நம்மோடு ஒத்துழைக்கலை. பேபிச் செடியா வாங்கினதுதான், பார்த்தால் செம்பருத்தி மாதிரி இருக்கேன்னு ..... மொட்டு வந்து பூவின் நிறம் தெரியுமுன் உதிர்ந்து போகுது. சாமிக்குத்தம் ஆகிருச்சோ?
பீச் கலரில் இப்போ ஒரு மொட்டு . காத்திருக்கிறேன்,க்ளிக்க.
Bougainvillea கிட்டத்தட்ட 18 வகைகளிருக்காமே! ஒரு சமயம் கோவை விவசாயக்கல்லூரி சுற்றுச்சுவரை ஒட்டி பல நிறங்களில் காகிதப்பூ பார்த்த நினைவு. இப்பவும் இருக்கான்னு தெரிஞ்சவுங்க (நம்ம பழனி.கந்தசாமி ஐயா) சொன்னால் தேவலை.
நம்ம வீட்டில் ஒரு ரெண்டு வகை இருக்குன்னு சொல்லிக்கறேன்.
இந்த பக்கங்களில் பூச்செடிகள், தோட்ட சம்பந்தமான பொருட்களும், செல்லங்களுக்கு சாப்பாடுவகைகளும் (Pet Foods) பில்லியன் டாலர் பிஸினெஸ்கள். ஹார்ட் வேர் கடைகளில்கூட சாஃப்ட் வேரா பூச்செடிகளை விக்கறாங்கன்னா பாருங்க. நாம் விதைகளை வாங்கி விதைச்சு வருமா வராதான்னு தேவுடு காக்க வேண்டாம். அதெல்லாம் ரகம் ரகமா பூ, கனி, காய் விதைகள் ஏராளமா கிடைக்குதுன்னாலுமே.... குளிரில் சரியா முளைச்சு வருவது கஷ்டம்தான். நோகாம கார்டன் சென்டர்களில், மார்கெட்டுகளில் பேபி ப்ளான்ட்ஸ் வாங்கினால் மலிவு. என்னை மாதிரி கொஞ்சம் சோம்பேறிக்கு இன்னும் வாகா கொஞ்சம் வளர்ந்த செடிகள், மொட்டு பிடிச்சு வரும் சமயம் கிடைப்பதை வாங்கிக்கலாம். விலை கொஞ்சம் அதிகம், ஆனால் ரொம்ப மெனெக்கெட வேணாம். என்ன நிறமுள்ள பூன்னும் தெரிஞ்சுக்கலாம்:-)))
சிலசமயம் Exotic plants, Tropical Plants வகைகள் அபூர்வமா கிடைக்கும். நம்ம வீட்டு வாழை, கருவேப்பிலை, காஃபிச் செடி, செம்பருத்தி, போகெய்ன்வில்லா எல்லாம் அப்படி வாங்குனதுதான்.
கட்டக்கடைசி கட்டித்தங்கம் நம்ம தாமரை! இந்த வருசம் நிறைய பூக்கள். ஆனா ஒரு பூ பூத்த பிறகு தினம் இரவில் மூடிப் பகலில் திறந்தாலும் நாலு நாட்கள்தான் ஆயுள்:(
இடம் போதாது. அடுத்தவருசம் பொழைச்சுக்கிடந்தால் ( ஐ மீன் நான் ) வேற ஒரு பெரிய தொட்டிக்கு ஏற்பாடுகள் செய்யத்தான் வேணும். மகாலக்ஷ்மி இல்லையோ!!!!
இன்னும் சில வகை பூக்களை அப்பாலிக்கா எப்பவாவது பார்க்கலாம். இப்ப எதுக்கு நம்மூட்டு சமாச்சாரமுன்னா..... நாளைக்கு எங்கூர் மலர்க் கண்காட்சி தொடங்குது. அதையும் போய் க்ளிக்கிட்டு வரத்தான் போறேன். ஆனால் அரசனைப் பார்த்த கண்ணுக்கு புருசனைப் பிடிக்காமப்போயிருச்சுன்னா?
அதான் முந்திக்கிட்டேன்:-))))
அடுக்களை ஜன்னல் வழியாக:-)
எல்லாம் சேர்ந்து நில்லுங்க ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுக்கலாம். ரெடி ஸ்டடி....க்ளிக்!!!!!

30 comments:
கண் கொள்ளாக் காட்சி...
இத்தனை அருமையா பிள்ளையைப் போல பராமரிக்கிறவங்களைக் கண்டா அவங்க தோட்டத்தில் இடம் பிடிக்க பக்கத்து வீட்டுப்பூவுக்கும் ஆசை வரும் போலிருக்கு. வேலி தாண்டுதே :-))
புதுக்காமிரா பிடிச்சு வந்த படங்களெல்லாமே ஜூப்பர்....
நீங்க சொன்ன மல்லிப்பூவை நாங்க "பிச்சிவெள்ளை"ன்னு சொல்லுவோம். தோவாளையில் வெளையும் பிச்சி உலகப்புகழ் பெற்றது. இந்தப்பூ இருந்தா நான் மதுரை மல்லியா இருந்தாலும் வேணாம்ன்னு சொல்லிருவேன். வாசனை அவ்ளோ பிடிக்கும் எனக்கு :-)))
கண்ணும் மனசும் நிறஞ்சு போச்சு மேடம்.
ஒரு ஊட்டி நகரப்பூங்காவையே உங்க வூட்டுக்குள்ளே வச்சு இருக்கீங்களே !!
சபாஷ்.
அது சரி... ஐ மீன் நான் அப்படின்னா என்ன ?
ஐ என்றாலே நான்.
அப்பறம் மீன் வேற நடுவிலே ஏன் வந்து மாட்டிக்குது ?
என்ன இருந்தாலும் துவக்கத்துலே அந்த மரம் கிளை சமாசாரம் சுவாரசியமா இருக்குது.
80 வயசு வரைக்கும் கலியாணம் கட்டாமலே இருந்தாகளா ?
ஆச்சரியமா இருக்குதே !! அந்த தம்பதியரின் பொறுமைக்கு ஒரு நோபல் பரிசு தரலாமே !!
எங்க வூட்டு வாலன்டைன் செலிப்ரேஷன் பாத்தீகளா ?
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
எல்லாமே சூப்பர் டீச்சர்.
PANSY, PETUNIA, TULIP இவையெல்லாம் முகல் கார்டனில் கொட்டிக் கிடக்கும். இந்த வருடம் பார்க்க முடியாமல் போய்விட்டது:(
மல்லியை நான் ஜாதிப்பூ மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். மதுரை பக்கம் பிச்சிப்பூன்னும் இங்க திருச்சியில் இருவாச்சின்னும் சொல்வாங்களே அதுவா? இல்லை இது எல்லாமே வேற வேறயா?
உங்க தோட்டத்தை பார்க்கும் போது ஆசையா இருக்கு...:) சுத்தி போட்டுடுங்க டீச்சர்..
வண்ணமலர்கள் அனைத்தும் கண்சிமிட்டுகின்றன.
லஷ்மி நான்கு நாட்கள் வாழ்ந்தாலும் கொள்ளை அழகு.
பூக்களின் அழகைச் சொல்லுவதா, இல்லை அவற்றை உங்கள் பாணியில் அழகாய் விவரித்ததைச் சொல்லுவதா, எதைச் சொல்லிப் பாராட்டுவது என்று தெரியவில்லை! அத்தனை அழகு! குறிப்பாய் அந்த ஊதாப் பூவும் வயலட் பூவும் மிக அழகு! உங்களின் ' நாய் மூஞ்சு' கற்பனை அதையும் விட அழகு!
கண்களையும் மனதையும்
நிறைத்தன மலர்கள்...
ஒவ்வொரு பூவாக இரசித்தேன்.
அழகோ அழகு.
முதலில் வீட்டுக்கும், தோட்டத்துக்கும் இட ஒதுக்கீடு (38%, 62%) செய்ததற்கு பாராட்டுகள்.
கண்ணுக்கும், மனதுக்கும் இதமான பதிவு இது.
நாங்களும் இந்த வண்ண வண்ணப் பூக்ககளைப் பார்த்து கிறுகிறுத்து போயி 'கிறுக்கு' ஆகிட்டோம்!
ப்பா !!!!!! எவ்ளோ அழகு . மிகவும் கொடுத்து வைத்தவர் நீங்கள் . ஒவ்வொரு பூவும் அவ்ளோ அழகு . என்ன கலர் .அடடா !!!! மிக்க நன்றி பதிவிற்கு .
"இந்த மரத்துக்கு ஒரு விசேஷம் உண்டு.இதன் அடியில் நின்னு காதலர்கள் முத்தமிட்டுக் கொண்டால் , கல்யாணம் உறுதியாகிருமாம். அதுக்காக ஒரு மரக்கிளையை உடைச்சு கையில் பிடிச்சுக்கிட்டு, கையை தலைக்கு மேல் தூக்கி வச்சுக்கிட்டு (மரத்தடியில் நிக்கறமாதிரின்னு ) உண்மைக்காதலர்கள் கிஸ் பண்ணிக்குவாங்க"
நல்ல வேளை இது போல மரங்கள் நம்ம ஊர்ல இல்ல... மரம் எப்பவுமே மொட்டையா தான் இருக்கும் :-)
நீங்க பூக்களை கட் செய்யாமல் எடுத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.. பூக்கள் மட்டுமல்ல மற்றவற்றை எடுக்கும் போதும். ரொம்ப நாளா உங்க கிட்ட சொல்லனும்னு தோன்றியது இன்னைக்கு சொல்லிட்டேன் :-)
உங்கள் உழைப்பிலும் பராமரிப்பிலும் உவகையுடன் சிரிக்கின்றன மலர்கள். கண்பொத்தி நிற்கும் மலர் மிக அழகு.
மலர் கண்காட்சிப் பகிர்வுக்காகக் காத்திருக்கிறேன்.
ஆஹா நல்ல மலர் கண்காட்சியில் இருந்தது போல ரசித்தேன்.அழகு
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ஆஹா.... கருத்துக்கு நன்றிகள்.
வாங்க அமைதிச்சாரல்.
நோஸியா இருக்க பூவுக்கும் பிடிக்குதேப்பா:-))))
பிச்சிப்பூ வச்சவுடன் மனம் பிச்சியாகப்போகுமே:-)
தெலுகுலேயும் பிச்சிதின்னா (தமிழ்) பிச்சிதான்:-)
இருவாட்சின்னு கூட ஒரு மல்லி வகை இருக்குல்லே?
படங்கள் நல்லா இருக்குன்னா எண்ட்ரி லெவல் மாஸ்டர் பண்ணிட்டேன்னு அடுத்த மாடலுக்கு அடி போடவா????
வாங்க ரமா ரவி.
எனக்கு(ம்) மனநிறைவான பின்னூட்டம். நன்றீஸ்.
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
அதானே.... மீன் முள் மாட்டிக்குமுன்னு சொல்வாங்க. இங்கென்னன்னா மீனே வந்து மாட்டிக்குதே:-))))
//80 வயசு வரைக்கும் கலியாணம் கட்டாமலே இருந்தாகளா ?
ஆச்சரியமா இருக்குதே !! அந்த தம்பதியரின் பொறுமைக்கு ஒரு நோபல் பரிசு தரலாமே !!//
அடடா.... பாட்டி தனி ஆளாவே கடைசி வரை இருந்துட்டாங்களே.... ஸ்பின்ஸ்டர்!
இங்கே(யும்) கொஞ்சம் பழைய ஆட்கள் வாழ்க்கை முறை வேற மாதிரிதான். பொத்தாம் பொதுவா நாம் நினைப்பது போல் இல்லையாக்கும் கேட்டோ!!!
உங்க செலிப்ரேஷன் சூப்பர்! இப்பதான் பார்த்தேன்.
அன்னிக்கு ஸ்பெஷல், வாழைக்காய் பஜ்ஜியா!!!!!
வாங்க ரோஷ்ணியம்மா.
இங்குள்ள எல்லாவித மலர்களும் தில்லியிலும் சண்டிகரிலும் இன்னும் வடக்கே போகப்போக எல்லா இடங்களிலும் இருக்கே!!!
அதுவும் முகல் கார்டனில் அழகுக்குக்குக் கேக்கணுமா???
இருவாட்சி மொட்டுக்கு இந்த வெளிர்சிகப்பு நிறம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.
சுத்திப்போட்டாலும் தோட்டத்துக்குள்ளேதான் போடணும்:-))))
ரசிப்புக்கு நன்றிகள்.
வாங்க மாதேவி.
லக்ஷ்மி லேசுப்பட்டவள் இல்லை!
நாலு நாளைக்குள்ளே கொடுத்தால்தான் ஆச்சுன்னு பிடிவாதம் பிடிச்சு வாங்கிக்கணும் நாம்:-))))
வாங்க மனோ.
பூக்கள்தான் மனசுக்கு எவ்ளோ மகிழ்ச்சியைத் தருது,இல்லை!!!!
வீட்டை அதிக செலவில்லாமல் அழகு படுத்தணுமுன்னா பூச்செடிகள் நாலு வச்சால் போதுமே!
ரசிப்புக்கு நன்றிகள் மனோ!
வாங்க இராஜராஜேஸ்வரி.
ரசனைக்கு நன்றிகள்.
வாங்க டொக்டர் ஐயா.
வணக்கம். நலமா? ரொம்ப நாளாச்சே உங்களை இங்கே பார்த்து!!!!
இந்த மலர்களுக்கு நன்றி சொல்லணும் நான்.
வாங்க ரஞ்சனி.
நம்ம ஊர் நியூஸியின் தோட்ட நகரம் என்பதால் சிட்டி கவுன்ஸிலின் கட்டுப்பாடு உண்டு.
நிலத்தின் அளவில் ஒரு லெவல் வீடு என்றால் 40% தான் கட்டிடம் . 60% தோட்டத்துக்கு விடணும். வெறும் புல்வெளின்னாலும் போதும்.
மாடி வீடென்றால் 35 % தான் கட்டிடம். ஆனால் நம்ம மாடியின் / கூரையின் நிழல் பக்கத்து வீட்டு எல்லைக்குள் விழக்கூடாது. தஞ்சை ப்ரஹதீஸ்வரர் கோவில்தான் ஒவ்வொரு வீடும்:-))))
மனக் கிறுக்கு பதிவர்க்கழகு:-)))
வாங்க சசி கலா.
ரசனையான பின்னூட்டத்துக்கு நன்றிப்பா.
வாங்க கிரி.
ஏற்கெனவே மக்கள் தொகை பெருகிவழியும் நிலையில் இம்மரங்கள் இல்லாததே நல்லது!
கெமெராவில்தான் பூக்களை வெட்டுவேனே தவிர நிஜத்தில் ஒரு பூவைக்கூட வெட்டமாட்டேன்.
சாமிக்கு ஒரு பூ வையேன்னு கோபால் கெஞ்சுவார். செடியில் இருந்தால்தான் சாமிக்குப் பிடிக்குமுன்னு என் பதில்:-)
கொத்துப்பூக்களை வெட்டாமல் எடுக்க முடியலையேங்க:(
வாங்க ராமலக்ஷ்மி.
வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி!!!!
ஃபெஸ்டிவல் ஆஃப் ப்ளவர்ஸ்தான் போனவாரம் ஆரமபிச்சு நடந்துக்கிட்டு இருக்கு.
இண்டர்நேஷனல் ஃப்ளவர் ஷோ மார்ச் 6 முதல் 10வரை. அதுக்குப்போய்வந்த பிறகுதான் இதைப்பற்றி எழுதணும்.
படம் ஒழுங்கா வரணுமேன்னு இருக்கு!
வாங்க மின்னல் நாகராஜ்.
உங்கள் வருகையால் பதிவே பளீர்ன்னு இருக்கு.
முதல் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.
பேஸ்புக்கில் லிங்க் பார்த்துவிட்டு ஓடி வந்தேன். ஆஹா என்ன அழகு. காண கண் கோடி வேண்டும். மிக நிதானமாக ஒவ்வொரு பூவையும் ரசித்துப்பார்த்தேன்.
அழகான அந்த பிச்சி பூவுக்கு ஏன்தான் அவசரமோ சீக்கிரம் வாடிபோகுது ! petunia ல மூணு கலர் வீட்டுல வச்சிருந்தேன், நிறைய பூக்கள் பூக்க ஆரம்பித்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, ஆனா என்னாச்சுனு தெரியல கொஞ்சம் கொஞ்சமா வாடி கருகிப் போய்டுச்சு. :-(
ஒவ்வொன்றை பற்றிய உங்களின் விவரிப்பு அழகாக இருக்கிறது உங்கள் வீட்டுப் பூக்களைப் போலவே.
வாழ்த்துக்கள்
Post a Comment