Friday, February 01, 2013

தேவையா உனக்கு இதெல்லாம் .:-)

கடிகாரமுள் நகரமாட்டேங்குதே, நின்னுபோச்சா என்ன? வாய் வலிக்க ஸாண்ட்விச் தின்ன ஆரம்பிச்சு பழத்தோடு லஞ்சை முடிக்க வெறும் பத்து நிமிசம்தான் ஆகி இருக்கு. மழை ஓயாது. பேசாம நடையைக் கட்டலாம்னு ஹாஃப் மூன் பே நடுப்பகுதிக்கு வந்தோம். வர்ற வழியில் கை நீட்டி அணைக்க தயாரா இருந்தார் மரஆள்:-)
வார்மெமோரியல் முன்னே நிக்கும்போது இடமா வலமான்னு கேள்வி. வலம் போவது நல்லதுன்னு பத்து எட்டு நடந்தால் தபால் நிலையம். கராஜ் போல பெரிய ஷெட்டும் அதுக்குள்ளே மெயில் பாக்ஸஸ் இருக்கு. தபால்காரர் வீடுகள் தோறும் போய் விநியோகம் பண்ணமாட்டார் போல. பொட்டி எண் வாங்கி வச்சுக்கிட்டு இந்தப்பக்கம் போகும்போது திறந்து பார்த்து உள்ளே கடிதாசு இருந்தாலெடுத்துக்கணும். மழைக்கோட்டுடன் நாயை வாக் கூட்டிவந்தவர் அவர் பொட்டியைத் திறந்து பார்த்துட்டு தலையை ஆட்டிக்கிட்டார். ரெண்டு நிமிசம் கவுண்ட்டரில் இருந்தவருடன் சின்னப்பேச்சு. மழை இன்னிக்கு நிக்காது. இன்னும் நாலுநாளைக்கு இப்படித்தான்.

தபால் அலுவலகம், இன்னும் சில சமாச்சாரங்களுக்கும் சேர்த்துதான் சேவை செய்யுது போல. இந்தத் தீவு விமான சர்வீஸுக்கும் இங்கேதான் செக்கின் பண்ணிக்கணும். பொட்டிகளை வாங்கிக்கிட்டு போர்டிங் பாஸ் கொடுத்துடறாங்க. பிக்கப் வேன் வந்து எல்லோரையும் வாரிக்கிட்டு ஏர் ஸ்ட்ரிப்லே கொண்டு போய் விட்டுருது.

அங்கே இருந்த கண்டாமுண்டா சாமான்களுக்கிடையில் உக்கார்ந்திருந்தப்ப ' இது உனக்குத் தேவையா? ' ன்னு வடிவேலுபாணியில் மனசு கேட்டது. போச்சு...வருசாபிறப்பன்னிக்கு இப்படி அடைமழையில் லோலோன்னு தெருத்தெருவாத் திரிஞ்சால்.....வருசம் முழுசும் அலையத்தான் போறேனா? ஙே.......

இந்த அழகில் நேத்து டிக்கெட் பதிவு செய்யும்போது காலையில் முதல் படகுலே போய் மாலை கடசிப்படகுலே வரலாமுன்னு கோபாலிடம் சொன்னப்ப...மனுசர் என் பேச்சைக் கேக்கலையே!!! 'படகுத்துறைக்கு வர அரைமணிநேரம் கார் பயணம். அரை மணி முன்னாலே வரணுமுன்னு வேறசொல்றாங்க. காலை எட்டுமணி படகு வேணாம். கொஞ்சம் நிதானமாத்தான் வரலாமே' ன்னுட்டார். பேச்சைக்கேக்காததுகூட நல்லதாப்போச்சு இப்போ:-)))

 கடலுக்கு முகத்தைக்காட்டிக்கிட்டுதான் எல்லா கட்டிடங்களும் ! ஹாஸ்டலிங் இண்டர்நேஷனல். பேசாம இங்கே ஒரு நாள் தங்கி இருந்துருக்கலாமோ?

 பெங்குவின் இருக்கு போர்டு. அட! எங்கே இருக்குன்னு சுத்தும்முத்தும் பார்த்தால் இருந்துச்சு அந்த போர்டுலேயே:-) வழிகாட்டிப் பலகைகள் சொல்லும் ஏஞ்சலிக்கன் சர்ச்சையோ இல்லி அந்த அப்ஸர்வேஷன் ராக்கையோ போய் பார்க்கும் உத்தேசமில்லை இப்போதைக்கு./ கொட்டும் மழையில் ஏற்றத்தில் ஒரு கிலோ மீட்டர் நடக்க என்னாலாகாது.

 அதுக்குப் பதிலா திரும்பி படகுத்துறைக்கு போகும் வழியில் ஒரு சர்ச் தெரியுது பாருங்க அங்கே போகலாமுன்னேன். பொடிநடையா நடந்து சரிவுப்பாதையில் ஏறிப்போனோம். அழகான சின்ன கட்டிடம். பக்கத்தில் தொட்டடுத்து ஒரு அறை. அங்கிருந்தவர் எங்களைப் பார்த்ததும் வெளியே வந்து வரவேற்றார். சர்ச்சைப் பார்க்க வந்திருக்கோமுன்னு சொன்னதும் அவருக்கு பயங்கர மகிழ்ச்சி. பாவம் வேறு மனுஷ அரவமில்லாமல் போரடிச்சுக்கிடந்துருப்பார் போல!

 இவர் பாதிரியார் இல்லை. இந்தப் பக்கங்களில் பாதிரியாருக்கு அடுத்த படியில் உள்ளூர் பெருமக்கள் சிலர் சர்ச்சைப் பார்த்துக்கும் பொறுப்பேத்துக்கறாங்க. இவுங்களை எல்டர்ஸ்ன்னு சொல்றாங்க. பெரிய சர்ச்சா இருக்குமிடத்தில் எல்லாம் சம்பிரதாயப்படி வழிபாடுகள் நடக்குது. எல்டர்ஸ் கூடமாட உதவி செய்யறாங்க. ஆனால் இதுபோல ஆளரவமில்லாத சின்ன இடங்களில் எல்டர்ஸே வழிபாடு நடத்தறதுமுதல் சர்ச்சைக் கவனிப்பதுவரை செய்யறாங்க.

 இந்த ஓபான் சர்ச்சுலேயும் மூணு எல்டர்ஸ் இருக்காங்க. வாரம் ஒருத்தர்ன்னு முறை போட்டு ஆண்டவனுக்கு சேவை செய்யறாங்க. மெயின் லேண்டுலே இருந்து வர்றவங்கதான் எல்லோருமே. ஆனால் இப்படி ஒரு வாரம் முச்சூடும் மோட்டுவளை பார்த்து உக்கார்ந்துருந்தா என்னதான் அழகான இடம் என்றாலுமே மனுஷனுக்கு போரடிச்சுத்தான் போகும்!

 இந்த சர்ச்சுக்கு இப்போ வயசு 109. சண்டே சர்வீஸுக்கு ஒரு இருபதுபேர் வந்தால் அதிசயம். சர்வீஸ் முடிஞ்சதும் காஃபி, டீ, ஸ்நாக்ஸ் எல்லாம் (பிரசாதமா) கொடுத்தாலுமே.......

 ஆறுவரிசை பெஞ்ச் இருக்கைகள் போட்டு அம்சமா இருக்கு உள்ளே! சின்னதா ஒரு ஆல்ட்டர். கிறிஸ்மஸ் அலங்காரங்கள் இன்னும் அப்படியேதான் வச்சுருக்காங்க.. எப்பவும் புது வருசம் பொறந்து கொண்டாடினபிறகுதான் அலங்காரங்களை அடுத்த வருசத்துக்கு வேணுமேன்னு பத்திரமா எடுத்து வைப்பாங்க. நாமும் நம்ம வீட்டில் அப்படித்தானே செய்யறோம். நான் ஜன்னலில் வச்ச அலங்காரங்களை முந்தாநாள்தான் எடுத்து பத்திரப்படுத்தினேன்.

 நேடிவிட்டி ஸீன். பெரிய மரத்தொட்டிலில் வைக்கப்புல்லுக்கிடையில் பெரிய சைஸில் குழந்தை யேசு. ஆல்டருக்கு முன்புறம் உல்லன் நூலால் பின்னிய உடுப்புகளுடன் நேடிவிட்டி ஸீன். அந்த மூன்று ராஜாக்கள் அசப்புலே பார்த்தால் பஞ்சாபிகள் மாதிரி இருக்கு. அச்சு அசல் சர்தார். ஒரு உருவம் அப்படியே சர்தாரிணி. கழுத்தில் துப்பட்டா (போல) கூட இருக்கு.

எல்டர் ஜோவிடம் சர்ச்சைப்பற்றியும் உள்ளுர் மக்களைப்பற்றியும் கொஞ்சம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இந்தியாவிலிருந்தா வந்துருக்கீங்கன்னு வியந்தார். ஆமாம்.... ஆனால் கிறைஸ்ட்சர்ச்சில் வசிக்கிறோமுன்னு சொல்லி ஆர்வத்தை அணைச்சேன். விஸிட்டர்ஸ் புத்தகத்துலே எழுதிருங்கன்னார். நமக்கென்ன எழுதத்தெரியாதா.:-))))

அங்கங்கே மதங்களுக்கிடையில் சண்டை, ஒரே மதத்தில் இருக்கும் பிரிவுகளுக்கிடையில் சண்டைன்னு உலகம் அமர்க்களமா இருக்கும்போது இந்த சர்ச்சில் உள்ளுர் ரோமன் கத்தோலிக் பிரிவினர் அவுங்க திருச்சபை நடத்திக்க மாசம் ஒரு ஞாயிறு , இங்கே இதே சர்ச்சில் இடம் கொடுத்துருக்காங்க இவுங்க. அதுக்கே ஆட்கள் வந்துட்டாலும்............


சண்டை சச்சரவுகள் இல்லாததுக்கு முக்கிய காரணம் ஒன்னுதான் , மக்கள் கூட்டம் குறைவு. ஆளில்லாத ஊருலே யாரோடு சண்டை போட? அவுங்கவுங்களுக்கு அவரவர் மதநம்பிக்கை. இருந்துட்டுப் போகட்டுமே! மனுசனை சகமனுசனா பார்க்கத் தெரிஞ்சா எதுவுமே பிரச்சனை இல்லை.

கொஞ்ச நேரம் அங்கே தியானம் செஞ்சுட்டு கடவுளே எல்லோரையும் காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டேன். இன்னும் இரண்டு பேர் சர்ச்சைப் பார்க்க வந்தாங்க. எல்டர் அவர்களை வரவேற்றார்.

கோவில் முற்றத்தில் இருந்து கடலும் படகுமா காட்சி அருமை! இறங்கிவரும் வழியில்தான் கண்ணில்பட்டது இங்கே தியேட்டர் ஒன்னு இருக்கும் சமாச்சாரம். லோக்கல்'ஸ் டெய்ல் என்று ஒரு ஷோ நடக்குதாம்.

 ப்ச்... நேரம் கடத்திட்டோமேன்னு இருந்துச்சு எனக்கு. கதை நாயகனை நேரில் காணும் சான்ஸ் போயே போச்:( தினமும் பகல் 1 மணி, 4, 6 ன்னு மூணு ஷோ. ஞாயிறு மட்டும் அந்த ஆறுமணி ஷோ கிடையாது. 40 நிமிசம் ஓடும் படம். உள்ளூர் ஆட்களையும் சரித்திரங்களையும் நகைச்சுவையோடு காமிக்குதாம் . Photos of Bunkhouse Theatre, Stewart Island
This photo of Bunkhouse Theatre is courtesy of TripAdvisor

சாப்பாடானதும் நேரே போய் படம் பார்த்துட்டு இங்கே வந்துருக்கலாம். கோட்டை விட்டுட்டோம். ஆனா.... தகவல் எதுவும் இதுக்கு முந்தி நம்ம கண்ணில் படலையே.:( இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த் என்பது சரிதான்! நமக்கு மூணரை மணி படகுக்குப் போயாகணும்.

 டாக் ஆஃபீஸுக்குப் போய் கொஞ்ச நேரம் போக்கிட்டு மூணுமணிக்கு படகுத்துறைக்கு வரலாமான்னு கோபாலுக்கு தோணுது. ச்சும்மா சும்மா மழையில் இங்கேயும் அங்கேயும் திரிய வேண்டாம். பேசாம படகுத்துறைக்கே போய் உக்காரலாமுன்னு எனக்குத் தோணுது.

 கடல் ஓரமா தண்ணீரில் நிக்கும் டெர்மினலுக்கு வந்தோம். முழுக்க முழுக்க மரத்தால் கட்டப்பட்ட து. கீழே படகுத்துறைக்கான ஆஃபீஸ், மாடியில் ஒரு கேஃபே. செக்கின் செஞ்சு போர்டிங் பாஸ் வாங்கியதும் மாடிக்குப்போனோம். மூணுபக்கமும் அகல ஜன்னல்கள் வச்சு அருமையான வ்யூ!

 ஒரு மணிநேரம் வேடிக்கை பார்ப்பதும் காஃபி குடிப்பதுமாப் போச்சு. இதுக்கிடையில் நம்ம படகு வந்தது. லக்கேஜ் ஏற்ற ஆரம்பிச்சாங்க. குட்டியா ஒரு க்ரேன். பயணிகளின் ஸூட்கேஸ்களை அடுக்கி, நல்ல டார்ப்பாலின் போட்டு மூடிக்கட்டிய பெரிய உலோகப்பொட்டிகள் ஒன்னொன்னா தளத்துலே அடுக்கினாங்க.

 மூணேகாலாச்சேன்னு கீழே வந்தால் எக்கச்சக்கமான கூட்டம். அடுத்துவரும் நாலைஞ்சு நாட்களும் மழையைத்தவிர வேறொன்னுமில்லைன்னு ஆகிப்போனதால் எல்லோரும் தீவைவிட்டுக் கிளம்பிட்டாங்க. சும்மா தேவுடு காத்து என்ன பயன்?

 படகு முழுசும் நிறைஞ்சு வழிஞ்சது மக்கள் திரளால்! வரும்போது இருந்த ஆட்டமும் தூக்கிப்போடுவதும் காணோம். அப்படியே தன்ணீரைக் கிழிச்சுக்கிட்டு அனக்கம் இல்லாம போகுது. நோ டேஷ் எனக்கு:-)

 நாலரைக்கு ப்ளஃப் வந்து சேர்ந்தோம். என் தென்துருவக் கனவை கிடப்பில் போட்டு வச்சேன். வாய்க்கும்போது வாய்க்கட்டும்.

 எங்கநாட்டு பிரதமருக்கு போனவாரம் வாய்ச்சது. நம்ம ஸ்காட் பேஸ் இப்போ தன்னுடைய 56 வது பிறந்தநாளைக்கொண்டாடுது. அண்டார்க்டிகாவுக்கும் நியூஸிலாந்து மவோரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள உறவை உறுதிப்படுத்தும் வகையில் அங்கே ஒரு நினைவுச்சின்னத்தை திறந்து வைக்கப்போனார். இது இவருடைய ரெண்டாவது விஸிட். (போனமுறை இவர் எதிர்கட்சித்தலைவரா இருந்தபோது (2007) ஒரு ச்சான்ஸ் கிடைச்சது) ஆனால் இந்தமுறை துருவத்தின் மையப்புள்ளியைத் தொட்டுடணுமுன்னு இவருக்கு ஆசை(யாம்) கொடிய பனிக்காற்று காரணம் ரெண்டு நாள் தள்ளிப்போட்டுட்டு அப்புறம் துருவ மையப்புள்ளிக்குப்போய் வந்துட்டார். இதுவரை ரெண்டே ரெண்டு பிரதமர்கள்தான் அண்டார்க்டிகா போய் வந்தது. 2007 இல் ஹெலன் க்ளார்க் போய் வந்தாங்க. 

இந்தப்பக்கம் எப்போ இனி வரப்போறோமோன்னு இன்னொருக்கா 'குமரி அம்மன்' கோவிலையும் ஸைன்போஸ்ட்டையும் (காருக்குள் இருந்தபடியே) தரிசனம் செஞ்சுட்டு இன்வெர்கார்கில் வந்து சேர்ந்தோம்.

 எதிரில் இருக்கும் சினிமா தியேட்டரில் ஒரு படம் பார்க்கலாமான்னு போனால்.... ரெண்டு பேரின் ச்சாய்ஸும் ஒத்து வரலை. அவருக்கு Life of Pi எனக்கு Hobbit. பேசித்தீர்த்துக்க முடியலைன்னு சினிமா போவதை ஒத்திப்போட்டோம். இப்படியாக புது வருசத்தின் முதல் நாள் முடிஞ்சது.

நாளைக்கு வேற இடங்களைப் பார்க்கலாம். நல்லா ஓய்வெடுங்க.

 தொடரும்........:-)

28 comments:

said...

வடிவேலு பாணி போஸ் நல்லாருக்கு:)! உங்கள் மூலமாக எல்லா இடங்களையும் நாங்களும் பார்க்கிறோமே. தேவைதான்.

தென் துருவக் கனவு விரைவில் நிறைவேறட்டும்.

யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து படம் பார்த்திருக்கலாமே:)?

said...

வாங்க ராமலக்ஷ்மி.


விட்டுக் கொடுத்துப் படம் பார்த்துருக்கலாம். ஆனால் மறுபாதி படத்தை ரசிக்காமல் போரடிச்சு உக்கார்ந்துருந்தால் இன்னும் கொடுமையா இருக்காதா?
அதான் நோ நோ:-)

said...

:))
வேணாம் வேணாங்க ஜனவரி ஒன்னாம் தேதி ஷாப்பிங்க் கூட்டிட்டுபோய் எங்க வீட்டில் ஒரு ஆள் இதே போஸ் ல தேவையா ந்னு தன்னைக்கேட்டுக்கிட்டிருக்காங்க..

said...

வடிவேலு போஸைப் பார்த்துட்டு சிரிப்பை அடக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஏற்கனவே உங்க இடுகைகளைப் படிக்கிறப்ப அடிக்கடி சிரிச்சு வெச்சு 'நல்ல பேர்' வாங்கிக்கிட்டிருக்கேன். இப்பல்லாம் வீட்டுல உள்ளவங்களுக்கு பழகிப்போச்சு :-)))

அடுத்தடுத்த ஷோவா ரெண்டு படங்களையும் பார்த்திருக்கலாமே. வருஷ ஆரம்பம் விட்டுக்கொடுத்தலுடனும் சகிப்புத்தன்மையுடனும் ஆரம்பிச்சுருக்கும் :-)

said...

புது வருசத்தின் முதல் நாள் அமர்க்களம் ..!

said...

படங்களும் பகிர்வும் அருமை டீச்சர். நாங்களும் படகில் ஏறி வந்துகிட்டு இருக்கோம்....

said...

வாழ்த்துகள் உங்களுக்கு! நலம்தானே!

said...

விளக்கங்களுடன் நல்ல படங்கள்... நேரம் கிடைக்கும் போது தொடர்கிறேன்...

said...

சுறறிவந்தோம் மகிழ்ச்சியாக.

said...

hahah!!!! vadivelu pose - hilarious.. :D

said...

நீங்க தெனாலி ரசிகையா? எப்பப் பார்த்தாலும் "டேஷ்,டேஷ்" னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க.

நான் தெனாலி சிடி வச்சிருக்கேன். போர் அடிச்சா அதப் போட்டுப் பார்ப்பேன். ரொம்பவும் பிடிச்ச படம்.

said...

வடிவேல் போஸ் :) சிரிப்பை வரவைத்தது!

சிறப்பான படங்கள்...

said...

ஏன்பா கிடங்குல இப்படி போஸ் கொடுக்கறீங்க. நல்லா இருக்கு:)
லைஃப் அஃப் பை பார்த்திருக்கலா. புதுவருஷம் இப்படி மழையில் கரைஞ்சதா.

சிலோன்னு இருக்கு ஊர்ப்படங்கள். ஆனாலும் அழகாத்தான் இருக்கு.
டாஷுக்கு மருந்தப் போட்டுக்க வேண்டியதுதானஏப்பா.
கோபால் சாப்பிடறது மஃபினா:)

said...

//என் தென்துருவக் கனவை கிடப்பில் போட்டு வச்சேன்.//

அந்தக்கனவு சீக்கிரமே நிறைவேற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.(எங்களுக்கு ஒரு அருமையான பயணக்க்ட்டுரை கிடைக்குமே! அதுக்குதான்.)

வடிவேலு போஸ் சூப்பர்.படங்களும் பதிவும் சிறப்பாக இருக்கு.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அநேகமா கனவு நிறைவேறாது. ஃபிட்னெஸ் இல்லையேப்பா:(

படம்... ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்ததால்தான் பார்க்க முடியலை:-))))))

said...

வாங்க கயலு.

ஹாஹாஹாஹா:-))))

வீட்டுக்கு வீடு.... வாசப்படிகளும் வடிவேலுகளும்:-)))

said...

வாங்க அமைதிச்சாரல்.

நமக்குதான் வருசம்பூராவும் வருசப்பிறப்புகள் வருதே. அப்புறம் ஆங்கிலத்துக்கு அவர், தெலுங்குக்கு நான், தமிழுக்கு அவர், குஜராத்திக்கு நான் இப்படிமாறிமாறி விட்டுக் கொடுத்துக்கிட்டே இருக்கணும்:-)))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அமர்க்களம்தான்ப்பா:-)))))

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

படகில் ஏறுமுன் டேஷ் மாத்திரை போட்டுக்கிட்டீங்க தானே?????

said...

வாங்க தேவன் மாயம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

நலமே நலம். நீங்களும் நலமென்று நம்புகின்றேன்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நோ ஒர்ரீஸ்!!! ஆனால் மறக்காம ஒரு வரி உங்க கருத்தையும் சொல்லிருங்க.

said...

வாங்க மாதேவி.

கூடவே வர்றதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க பொற்கொடி.

ஆஹா.... நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குதா:-))))))))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நம்ம வீட்டுலே நானும் மகளும் கமல் படங்களை விரும்பிப் பார்ப்போம்.
எனக்கு கமல் அண்ட் க்ரேஸி மோகன் காம்பினேஷன் ரொம்பப்பிடிக்கும். சிரிக்கணும். அதுக்காகவே மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.

மகளுக்கு ஒருகாலத்தில் மைக்கேல் மதன காமராஜன் வசனங்கள் அத்துப்படியாக்கும் கேட்டோ:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எல்லோரும் சிரித்து மகிழ்வதும் எனக்கு மகிழ்ச்சிதான் :-))))

said...

வாங்க வல்லி.

இதுக்கெல்லாம் கவலைப்படலாமாப்பா? எல்லாமே ஒரு ஃபன் அண்ட் அனுபவம்தான்!!!

கோபால் மஃப்பின் பிரியர் இல்லை. அதெல்லாம் என் ச்சாய்ஸ்.

அவர் பழம் கண்ட பின்னாலும்.... தின்னுகிற கோபால்......

விடமாட்டார்ப்பா. அது(டாக்குட்டரைத் துரத்தும்) ஆப்பிள்:-))))

said...

வாங்க ரமாரவி.

ஒருவேளை அடுத்த பிறவியின் ஆரம்பத்துலேயே போயிட்டு வந்துரணும். இப்போ ஃபிட்னெஸ் ஃபெயில்டு:(((((

said...

நீங்க பார்த்துட்டு சொல்வது எங்களுக்கு எளிமையா இருக்கு போகும்போது உபயோகமான தகவலை இருக்கும்