Monday, February 11, 2013

பூனை மீசை !

வடை வாசனை மூக்கைத் துளைக்குது தெருவுக்குள் நுழையும்போதே!  நாலுமணிக்கு  வர்றோமுன்னு தகவல் கொடுத்துருந்தேன். போற வழியில்  ஊருக்குள்ளே  நுழையும் இடத்தில் செர்ரிப்பழங்களை வித்துக்கிட்டு இருந்தாங்க. பழம் வாங்க வந்தவரின் வண்டியில் திடீர்னு எஞ்சினில் எதோ தகராறு.  நம்ம சார்பில் கொஞ்சம் தள்ளிவிட்டோம்..... பழக்கடைக்காரருக்கு நம்ம செயல் பிடிச்சுப்போச்சு போல!  எழுதிப்போட்ட விலையில் இருந்து  20% தள்ளுபடி கொடுத்தார்.


அரசு விடுமுறை என்பதால் ஊரே இன்னும் கொஞ்சம் ஜிலோன்னு  கிடந்துச்சு. நம்ம நியூஸியில் வருசத்துக்கு 11 நாட்கள் அரசு விடுமுறை. இதுலே  நியூ இயர், ஈஸ்ட்டர், கிறிஸ்மஸ் இப்படி மத சம்பந்தமான  மூணு சமாச்சாரங்களுக்கும்   ரெண்டு நாட்கள் தொடர்ந்து லீவு விடுவாங்க. ஹேங்க் ஓவர் லீவா இருக்குமோன்னு எனக்கு சம்ஸயம்:-) இந்த நாட்கள் சனி ஞாயிறாப் போயிருச்சுன்னால்  அடுத்த நாட்களான திங்கள் செவ்வாய் லீவு கிடைக்கும். அய்யய்யோ   ஞாயித்துக்கிழமையா அமைஞ்சு  ஒரு நாள் விடுமுறை போச்சே.... ன்ற  கதை இல்லையாக்கும் கேட்டோ:-)


நம்ம கெஸ்ட் ஹவுஸில் கூட ஹவுஸ் கீப்பிங் இந்த  விடுமுறைகளுக்கு  இருக்காது. நீங்களே சமாளிச்சுக்குங்கன்னு  நோட்டீஸ் போட்டுருந்தாங்க.  அதனால் எங்கும் ஒரே அமைதிதான். எல்லா சர்ச்சுகளும் சொல்லிவச்ச மாதிரி மூடிக்கிடந்தன.




மசால் வடை!  கூடவே சில கேக்குகளும் சாயாவும்.

 பூனையார் உருவாகிக்கிட்டு இருந்தார்.  லிக்கொரிஸ் மீசையை ஒட்டிக்கிட்டு இருந்தாங்க தோழியின் மகள். Licorice வாசனை பிடிச்சுப் போச்சுன்னா.... திங்கறதை நிறுத்தவே முடியாது. இது ஒரு செடியின் வேரில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு. மாவு, இன்னும் கொஞ்சம் சீனி எல்லாம் சேர்த்து  முட்டாய்களா பண்ணறாங்க. சின்னச் சின்ன முட்டாயா இல்லாம  நீளமா ரோல் செஞ்சு  கயிறுத்துண்டுகள் மாதிரியும் கிடைக்கும். வெவ்வேற நிறங்கள் சேர்த்து  எல்லா கலர்களும் ரெடி.


மீசைக்கு வெட்டுனது போக மீதி இருந்த லிக்கொரிஸை ஒரு கை பார்த்துக்கிட்டு இருந்தது வாண்டு. மறுநாள் அதுக்குப் பொறந்த நாள். ரெண்டு வயசு.  ஒரு பக்கம் காத்து நிறைச்ச பலூன்கள் ! என்னமோ நடக்குதுன்ற  பரபரப்பில் குழந்தை  இங்குமங்குமா ஓடித் திரிஞ்சது. நிஷா, யூ ஆர் ஒன் டுடே , டு டுமாரோன்னதும்  எல்லாம் புரிஞ்சதுபோல ஒரு சிரிப்பு.

நேத்து புதுவருசத்தை முன்னிட்டுக் கொலை பண்ணப் போயிருந்தார் குழந்தையின் அப்பா. தொழில் முறையில் இவர் வெட்.  ஆனால் உபதொழில் கொலை!!!!! இந்தப்பக்கங்களில் முயல் தொல்லை அதிகமுன்னு  விவசாயிகள்  செய்யும் ஏற்பாடு இது. ஷூட்டிங் விருப்பம் உள்ளவர்களைக் கூப்பிட்டு போட்டுத் தள்ளிடுறாங்க,  ஐ மீன் முயல்களை.  Pest வகையாம் :(


தமிழ் சினிமாப்புகழ் குவீன்ஸ் டவுனுக்கு  அருகில் போயிருக்கார்.  158 கிலோ மீட்டர் இங்கிருந்து. அங்கேயும் விடாமல் மழையாம்.  சூட்டிங்கை  பகலோடு  நிறுத்தறாங்களாம்.  இன்றைக்கு இரவு விருந்தில்  கலந்துக்கக் கட்டாயம் வந்துருவேன்னு  சொன்னதால் நாங்கள் அவருக்காக (மசால்வடைகளைத் தின்னுக்கிட்டே) காத்திருந்தோம்.


முதல்நாள் நாங்க போன இடத்தைப்பற்றி விசாரிச்ச ஃபிலிப், நாங்க ஸ்டெவர்ட் ஐலேண்ட் போனோமுன்னதும் .... அங்கே அஞ்சு வித பெங்குவின், ஆல்பி எல்லாம் பார்த்தீங்களான்னார். பார்த்தேன். இன்னும் பலவித பறவைகளையும்  பார்த்தேன் என்றதும் அவருக்கு  ஏற்பட்ட மகிழ்ச்சியை என்  அடுத்த சொல்லால்  இன்னும் அதிகமாக்கினேன். அவரும் அந்தப் பக்கமெல்லாம் இன்னும் போகவே இல்லையாம். இங்கேயே பிறந்து வளர்ந்தவர்!


பார்த்தேன். இன்னும் பலவித பறவைகளையும் ஒன்னுவிடாமப்  பார்த்தேன்  ம்யூஸியத்திலே!


என்ன மழை என்ன மழை ! தண்ணியைத் தவிர எதாவது கண்ணில் பட்டால்தானே?  இப்பக்கூடப்பாருங்க மழை நின்னபாடில்லை:(
ஆமாம்.... இங்கே எப்பவும் குறிப்பா விண்ட்டனில் (தோழி வசிக்கும் ஊர்) மழையே இருக்காது. என்னவோ தெரியலை. இந்த வாரம்தான் இப்படின்னு......... மன்னிப்பு கேக்கும் குரலில் தோழி சொன்னதும்.....  ஹாஹா.... காரணம் தெரியலையாமே:-))))))

ஆறே முக்காலுக்கு வந்து சேர்ந்தார் மருமகன்.  நேத்து இரவு  பத்து மணிக்கு  ஆரம்பிச்சு  பகல்வரை 900 கொலைகள்.  நல்ல இருட்டில்  ஓசைப்படாமல் நின்னு  பளீரென்று வெளிச்சம் அடிச்சவுடன், மிரண்டு போய்  திகைச்சு நிற்கும்  முயல்களை.......... ரெடி ஷூட்:(  இதை விவரிக்கும்போது குரலில் என்னவொரு உற்சாகமுன்னு  நினைக்கிறீங்க!!! எனக்குத்தான் ஐயோ பாவம்ன்னு இருந்துச்சு. ஐ மீன் முயல்களை நினைச்சு.


" ஓ  டுல்ஸி, என்னைப் பார்த்தால் கொலைகாரன் மாதிரியா இருக்கு?"

இல்லையா பின்னே............


இந்தப் பக்கங்களில் DOC ( Department of Conservation)   நேடிவ் பறவைகளைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில்  அவைகளுக்கான எதிரிகளை(Predater, Pest) போட்டுத்தள்ள  தன்னார்வலர்களை உதவிக்குக் கூப்பிட்டுக்கும்.  ஆனால் ஒரு இனத்தைக் காப்பாத்த இன்னொரு இனத்தை அழிப்பதை என் மனசு ஏத்துக்கமாட்டேங்குது:(


ஒருவழியாக சாப்பாடு ஆரம்பிச்சு முடிஞ்சது.  இங்கெல்லாம் சின்னக்குழந்தைகளுக்கு பெட் டைம் ஏழரை. எனக்கே பாவமா இருக்கும். டே லைட் ஸேவிங்ஸ்  வேற இருக்குதா.... (உண்மை நேரம்  6.30தான் ஆகி இருக்கும்)  நல்ல வெளிச்சம் இருக்கும் மாலைப்போதில்  படு படுன்னா அதுகள் என்ன பாடு படும் சொல்லுங்க?


குழந்தையைக் குளிப்பாட்டி...( இங்கே குளியல் கூட இரவு படுக்கைக்கு முந்திதான், கேட்டோ)  எங்களுக்கெல்லாம் குட் நைட் சொல்ல வச்சுட்டு உள்ளே கொண்டுபோய் தூங்க வைச்சாங்க  மகள். கால்மணியில் ஓசைப்படாம எங்களோடு வந்து கலந்துக்கிட்ட தாயின் பின்னே மெல்லடி எடுத்து வச்சு சேர்ந்துக்கிட்டது பிஞ்சு:-)))))


நாங்களும்  டாடா பைபை சொல்லிட்டு கிளம்பினோம்.  திரும்ப உள்ளே போன பிஞ்சு, வண்டியை இவர் ஸ்டார்ட் செஞ்சதும் ஓடிவந்து   ரெண்டு கைகளையும் நீட்டி  தாதா தாதான்னு  அழ ஆரம்பிச்சதும் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டுக் கொஞ்சியதும் கவிதை! குழந்தைகள்  செயல் ஒரு அழகுதான் இல்லை!!!!!! அதிலும் அடுத்தவர்கள்  குழந்தைன்னா.... இன்னும் அருமை!!!!!


மறுநாள் எங்களுக்கு  காலை ஒன்பதே முக்கால் ஃப்ளைட்.  சிம்பிளான  ப்ரேக்ஃபாஸ்ட்.

 அறையைப் பூட்டிச் சாவியை  வரவேற்பில் இருந்த பெட்டியில் போட்டுட்டு கார்காரருக்கு  சேதி சொல்லிட்டு  கார்காரர் ஆஃபீஸுக்குப் போனால் நல்ல நல்ல வண்டிகள் வெளியே நிறைய இருக்கு. ஆறமர அவைகளைக் கழுவிக்கிட்டு இருக்கார்.  இவ்ளோ நல்ல வண்டிகளை வச்சுக்கிட்டு நமக்குக் கொடுத்ததைப் பற்றிக்கேட்டால்.... எல்லாம் நேத்து இரவுதான் திரும்பி வந்தனவாம். நம்பித்தானே ஆகணும்?  ரெண்டு நிமிசம் பொறுங்க. தோ வந்துடறேன் கை வேலையை முடிச்சுக்கிட்டுன்னார்.  இது  சொந்த வண்டிதான் சந்தேகமே இல்லை:-)


அஞ்சு நிமிச ட்ரைவ் ஏர்போர்ட்.  செல்ஃப் செக்கின் செஞ்சுக்கிட்டு பைலட்டும் ஏர்ஹோஸ்டஸும் வரட்டுமுன்னு காத்திருந்தோம்.  சின்ன ஏர்ப்போர்ட் என்றாலும் அழகா அமைதியா இருந்துச்சு.  மழையில் நனைஞ்சபடியே விமானத்துக்கு சிசுருஷை செஞ்சுக்கிட்டு இருந்தார் ஒருவர். மெயிண்டனென்ஸ்? லக்கேஜ்களை ட்ராலியில் வச்சு இழுத்துப்போய்  விமானத்தில் வயித்தில் ரொப்புனாங்க.  நமக்குத்தான் நேரம் கிடக்கே! அதுவரை வேடிக்கைதான்.


பத்து நிமிசம் இருக்கும்போது 'வந்து ஏறிக்கோ' ன்னதும்  போய் உக்கார்ந்தோம். காலநிலை சரி இல்லாததால்  விடுமுறையை ரத்தாக்கிட்டு வந்த  சோகம் பல முகங்களில். விமானம் கிளம்பி அரை மணி நேரத்தில் மழையைக் காணோம்..காக்கா ஊஷ்...




மலைச்சிகரங்களில் பனி .  எங்கள் கோடைகால(மா)ம் இது!!


எங்கூருக்கு அடையாளமான கட்டங்கட்டமான வயல்களுடன் கேண்டர்பரி ப்ளெய்ன்ஸ்.


பெட்டிக்காக காத்திருந்தபோது  நமஸ்தே சொல்லுச்சு  ஏர்நியூஸிலேண்ட்  பல மொழிகளுக்கு நடுவில். ம்ம்ம்..இருக்கட்டும்........

வீடுவந்து சேர்ந்ததும் வழக்கமான வேலைகள்.  ரஜ்ஜு ஓடி வந்தான்.

சௌத்லேண்ட் பயணம் முடிந்தது. கூட(வே) வந்த அனைவருக்கும்  நன்றிகள்.



21 comments:

said...

கன்னமா...? பட்டுக்கின்ணமா...?

அடுத்த பயணக் கட்டுரை...waiting...

said...

பூனை மீசை, சூப்பர். படங்கள் எல்லாம அற்புதமாக இருக்கு மேடம்.

உங்க கூடவே இத்தனை நாள் பயணப்பட்டதில், இவ்வளவு சீக்கிரமாக முடிந்துவிட்டதே பயணத் தொடர் என்று இருக்கிறது.

said...

அதுக்குள்ள முடிச்சுட்டீங்களா? இன்னும் தொடர்ந்திருக்கலாமே அம்மா?!

said...

குழந்தைகள் செயல் ஒரு அழகுதான் இல்லை!!!!!! அதிலும் அடுத்தவர்கள் குழந்தைன்னா.... இன்னும் அருமை!!!!!

கவிதை !!!!

said...

ரசித்தேன்.

said...

நம்ம நியூஸியில் வருசத்துக்கு 11 நாட்கள் அரசு விடுமுறை. இதுலே நியூ இயர், ஈஸ்ட்டர், கிறிஸ்மஸ் இப்படி மத சம்பந்தமான மூணு சமாச்சாரங்களுக்கும் ரெண்டு நாட்கள் தொடர்ந்து லீவு விடுவாங்க. ஹேங்க் ஓவர் லீவா இருக்குமோன்னு எனக்கு சம்ஸயம்:-) இந்த நாட்கள் சனி ஞாயிறாப் போயிருச்சுன்னால் அடுத்த நாட்களான திங்கள் செவ்வாய் லீவு கிடைக்கும். அய்யய்யோ ஞாயித்துக்கிழமையா அமைஞ்சு ஒரு நாள் விடுமுறை போச்சே.... ன்ற கதை இல்லையாக்கும் கேட்டோ:-)//

லிஸ்ட் ஆஃப் ஹாலிடேஸ் கொடுப்பதற்கு பதிலா லிஸ்ட் ஆஃப் வொர்க்கீங் கொடுன்னு அயித்தானை அவங்க பாஸ்கள் கேட்கும் அளவுக்கு ஒரு நாட்டில் ஆனந்தமா இருந்தது நினைவுக்கு வருது. அங்கேயும் அப்படித்தான்.

said...

மழைக்கான காரணம் எங்களுக்குத்தெரியுமே..:)

ஆமா நீங்க என்ன பாட்டா பாடினீங்க பாப்பாவுக்கும் பொம்மைக்கும்?

said...

துள்சிக்கா பாடும் தாலாட்டில் பாப்பாவும் பொம்மையும் மெய் மறந்து தூங்குது :-))

said...

//என்ன மழை என்ன மழை ! தண்ணியைத் தவிர எதாவது கண்ணில் பட்டால்தானே? இப்பக்கூடப்பாருங்க மழை நின்னபாடில்லை:(//

ம்ஹூம்.... அனல் மூச்சுதான் வருகிறது.

கருடப் பார்வையில் பனிமலை ('பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரில் திருக்குறள் படிக்கட்டுமா' என்று ஒரு எஸ் பி பி பாடல் இருக்கிறது!) படம் அழகு.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பட்டுப்போன்ற கன்னம்!!!!

பயணக்கட்டுரைக்கா பஞ்சம்? கேட்டுட்டீங்கல்லெ..... பாதியில் நின்னதை முதலில் முடிக்கலாம்.

திங்கள் முதல் காண.... படிக்கத் தவறாதீர்கள்:-))))

said...

வாங்க ரமாரவி.

நாலுநாள் பயணம் 15 இடுகைகள்.

மழை வந்து புண்ணியம் கட்டிக்கிச்சு:-)))))
இல்லேன்னா கதறவச்சுருக்கமாட்டேனா!!!!

said...

வாங்க ராஜி.

தொடரலாமுன்னா இந்த

மழை சுருக்கிருச்சுப்பா:-)))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

கொஞ்சுவதோடு நம்ம கடமை முடிஞ்சுருது பாருங்க. அதுவே ஒரு கவிதை:-)))))

said...

வாங்க பழனி. கந்தசாமி ஐயா.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

சில நாடுகளில் வேலை செய்வது(ம்)ஒரு ஆனந்தம்தான்.

போலி மரியாதை காமிச்சுக் கூழைக்கும்பிடு போடவேணாம் பாருங்க!

said...

வாங்க கயலு.

பாட்டா? விஷப்பரிட்சை செய்யும் எண்ணமில்லை கேட்டோ:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

அப்படியே கடிச்சுத்தின்ன ஆசைன்னதும் கண்ணை மூடிக் காத்திருக்கு பிஞ்சு:-))))

said...

வாங்க ஸ்ரீராம்.

பாட்டு வீட்டுக்குள்ளே இருந்து கேட்டால் ஆனந்தம். அதைப்போல செஞ்சால்....
Hypothermia தான் கேட்டோ:-))))

said...

குழந்தைகள்?little angels..

said...

அருமையான பயணக் கட்டுரையாக இருந்தது. குழந்தையின் கன்னம் ஆப்பிள் போல இருக்கு...:)) கடிச்சு தான் தின்னுடலாம் போல...

அடுத்த தொடர் விரைவில் ஆரம்பமாகட்டும்...

said...

பயணமுடிவில் விருந்தில் நாமும் கலந்துகொண்டோம். இனிய பயணம்.

நன்றி.