Thursday, February 14, 2013

கலர் கிறுக்கு....

எனக்குக் கொஞ்ச நாளா ஒரே கலர் கிறுக்கு பிடிச்சிருக்கு. என்னமோ இப்பவே அனுபவிச்சுறனுமுன்னு ஒரு வேகம்.  ஒருசீஸன் மட்டுமோ இல்லை  சிலபல ஆண்டுகள் வாழும் வகைகளோ எதா இருந்தாலும் இப்போதைய ஆசை கலர்ஸ் மட்டுமே!


சம்மர் உள்ளபோதே 'கண்டு'  அனுபவிக்கலைன்னா காலம் போயே போச் என்பதால்  கொஞ்சம் மெனெக்கெடத்தான் வேண்டி இருந்துச்சு. கோபாலும் அவர் பங்குக்குக் கொஞ்சம் (!!!) ஒத்துழைத்தார் என்பதால் அவருக்கும்  என் நன்றிகள்.


அடுக்களை ஜன்னலில் இருந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரியணும் என்பதுதான் ஒரே கண்டிஷன்.


சரி. வாங்க கலர்ஸ் பார்க்கலாம்.

நம்ம காக்டெஸ் கன்ஸர்வேட்டரியில் பூத்தவை இவை.




பச்சை நிறமே பச்சை நிறமே.....

நம்மூர்லே புரட்டாசிமாசம் கிடைக்கும் சாமந்திப்பூக்கள் வகைதான். ஆனால் நிறம் பச்சை:-) Chrysanthemum




கிறிஸ்மஸ்  பண்டிகைக்கான பூச்செடி இது. இலைகளே பூவாக ஆகிருது.
.
 Poinsettia செடி.

Saxifraga  இதுலே மட்டும் 440 வகை இருக்கு(தாம்)





Zinnia   மலர்களில்  20  வகை. பலவித நிறங்களில்.


லாவண்டர் இது.



Foxglove   நரிக்கான  குளிர்கால ஏற்பாடோ!


Fuchsia இது  பர்ப்பிள் அண்ட் ரெட்,  பிங்க் அண்ட்ரெட், டபிள்கலர்களில்  அட்டகாசமா இருக்கு. நம்மூட்டுலே இது இப்படி.


Impatiens மலர்கள். வெறும்  ஆறு செடிகள் வாங்கலாமுன்னு போனா.... மல்ட்டி மிக்ஸ் 40 செடிகள் ஸேலில் இருக்கு. விடமுடியுதா?  இந்தச்செடிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் வகைகள் இருக்காம்.! 









பின்குறிப்பு: ரொம்ப  விசேஷமானவை நாளை!

தொடரும்  ..........:-)))))))))) 

35 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... ஒவ்வொரு மலரும் அற்புதம்...

Joe Mom said...

Super

Siva said...

Superb collection

அமுதா கிருஷ்ணா said...

சான்சே இல்லை.என்ன அழகு..எத்தனை அழகு..குட்டி குட்டி செடிகளில் எவ்ளோ பூக்கள்..

மாதேவி said...

மலர்களே ....மலர்களே:) மலர்ந்தது நெஞ்சம்.

இராஜராஜேஸ்வரி said...

மலர்கள் மனம் மகிழ்வித்தன ..

Unknown said...


தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

RAMA RAVI (RAMVI) said...

அற்புதமாக இருக்கு மேடம்.

ADHI VENKAT said...

எல்லாமே கொள்ளை அழகு... எதைச் சொல்ல எதை விட....

ராமலக்ஷ்மி said...

பூவாக அதிரும் இலைகள் மட்டுமா, பதிவே அதிருது அழகால்:)! வீட்டுக் கண்காட்சி கண்கொள்ளாக் காட்சி. எத்தனை வண்ணங்கள்.. வகைகள்..

Poinsettia பெயருக்கு நன்றி. ஃப்ளிக்கரிலும் பதிந்து கொண்டேன்.

Avargal Unmaigal said...

//எனக்குக் கொஞ்ச நாளா ஒரே கலர் கிறுக்கு பிடிச்சிருக்கு//

நான் என்னவோ நீங்க குழந்தையாய் மாறி சுவற்றில் எல்லாம் நல்லா கிறுக்கி அதை படமாக எடுத்து போட்டிருக்கிறீர்களோ என்று நினைச்சேன்....ஏமாத்திட்டிங்களேம்மா


///சரி. வாங்க கலர்ஸ் பார்க்கலாம்.///

ஆஹா அழகு அழகாக சேலை கட்டி பூ வைத்த பெண்களைதான் பார்க்க கூப்பிடிகிறீர்களோ என்று நினைச்சேன்...மீண்டும் ஏமாத்திட்டிங்களேம்மா


///பின்குறிப்பு: ரொம்ப விசேஷமானவை நாளை!//

நாளை மீண்டும் வருகிறேன்.

இறுதியாக படங்கள் அனைத்தும் அருமை எப்படி எடுத்து போடுவதற்கு மிகவும் பொறுமை வேண்டும்

ஸாதிகா said...

ஆஹா..அழகு கண்களைப்பறிக்கின்றது.

G.Ragavan said...

டீச்சர், சத்தியமாச் சொல்றேன். கண்ணு கொள்ளல. எவ்வளோ அழகு. சில நாட்களுக்கு முன்னாடி ட்வீட்டர்ல,

வீட்டிலொரு தோட்டம்
ஒரு நீர்க்கிணறு
மா பலா வாழை தென்னை
பசுக்கள் கோழிகள் ஆடுகள்
காவலுக்கு நாய்கள்
என் கனவு வீடு-ன்னு எழுதுனது நினைவுக்கு வருது. முருகன் ஒங்களுக்கு அந்தக் கனவை நனவாக்கியிருக்கான். வாழ்க வாழ்க :)

லேவண்டரெல்லாம் ஐரோப்பால பாத்தது. மறுபடியும் கண்ணுக்குக் காட்டிட்டீங்க :)

சாந்தி மாரியப்பன் said...

பிங்க் கலர் கத்தாழை பார்க்க வெல்வெட் மாதிரி இருக்குது, அசத்தல்.

லேவண்டர் பூக்களைப் பார்க்கறப்பல்லாம் "பாய்ஸ்" படத்துல லேவண்டர் தோட்டத்து நடுவுல பாடும் டூயட்தான் ஞாபகத்துக்கு வரும்.

Muruganandan M.K. said...

உங்கள் "கலர் கிறுக்கு"
எங்களுக்கு அற்புதமாக
கலர் கலராகப் பூக்களைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறது.

Ranjani Narayanan said...

இயற்கையின் அற்புதத்தை அப்படியே உங்கள் காமிராவில் படம் பிடித்து எங்களுக்கும் காண்பித்து மனதை மகிழ வைத்து விட்டீர்கள், துளசி!

ஒவ்வொன்றும் எத்தனை அழகு!
காணக் கண் கோடி வேண்டும்!

கிரி said...

படங்கள் செமையா பளிச்னு இருக்கு.. பக்காவான கேமராவாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-)

நீங்க இன்னும் கோணம் வைத்து எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும்.

துளசி கோபால் said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.

துளசி கோபால் said...

Thanks Joe Mom.

Please keep visiting:-))

துளசி கோபால் said...

Siva,

Thanks. Please visit often,you see!

துளசி கோபால் said...

வாங்க அமுதா.

நல்ல சமாச்சாரங்கள் சின்னவைகளிலும் இருக்கு:-)))

துளசி கோபால் said...

வாங்க மாதேவி.

மலர்கள் மகிழ்வித்ததே!!!

துளசி கோபால் said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

மகிழ்ந்த மனதுக்கு நன்றிகள்.

துளசி கோபால் said...

வாங்க ஜாப் ஃபார் யூ!!!!

நமக்குத் தொழில் எழுத்து. உபதொழில் வீட்டுப் பராமரிப்பு:-)

துளசி கோபால் said...

வாங்க ரமா ரவி.

ரசிப்புக்கு நன்றிகள்.

துளசி கோபால் said...

வாங்க ரோஷ்ணியம்மா.

எனக்கும் எடுத்த படங்களில் எதைப்போட எதை விட என்ற குழப்பம்தான்:-))))

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி.

எல்லாம் உங்கூரைப்பார்த்து தங்கையூர் கற்றுக் கொண்டவைகளே!

வருகைக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க அவர்கள் உண்மைகள்.

ஏமாற்றுவதிலும் ஏமாறுவதிலும் கூடஒரு சுகம் இருக்கே:-))))

துளசி கோபால் said...

வாங்க ஸாதிகா.

இந்த ஆண்டு இப்படி. அடுத்த ஆண்டு வேற கிறுக்கு(ம்) வரலாம்:-))))

துளசி கோபால் said...

வாங்க ஜீரா.

சில ஆண்டுகளுக்கு முன் காணி நிலம் வேண்டுமென்று மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுனது நினைவுக்கு வருது.

தோட்டம் பார்க்க அழகுன்னாலும் வேலை..... அப்பப்பா..... பெண்டு நிமிர்த்திருது.

கருவேப்பிலையும் வாழையும் கொடுத்த முருகன் தென்னையும் மாவும் கொடுக்கலையேப்பா:(

துளசி கோபால் said...

வாங்க அமைதிச்சாரல்.

நம்ம வீட்டுலே ரெண்டு கன்ஸர்வேட்டரி இருக்கு. ஒன்னு காக்டெஸ்க்கு மட்டும். சோம்பேறியின் ஸ்பெஷல் ஃபேவரிட் இது.

மாசத்துக்கு ஒருக்கா தண்ணி காமிச்சால் போதும்:-)

ஆனாலும் பூக்கள் கொள்ளை அழகு!

துளசி கோபால் said...

வாங்க டொக்டர் ஐயா.

கொஞ்சம் மெனெக்கெட்டால் அழகு நம் கைவசம்:-)

ரசிப்புக்கு நன்றிகள்.

துளசி கோபால் said...

வாங்க ரஞ்ஜனி.

பூக்களே அழகுதான். எங்கூர் உங்கூருக்குத் தங்கையாக்கும் கேட்டோ!!!!

சம்ஸயம் என்றால் இங்கே பாருங்க:-)

http://thulasidhalam.blogspot.com/2005/02/blog-post_03.html

துளசி கோபால் said...

வாங்க கிரி.

அப்படி ஒன்னும் நல்ல கேமெரா இல்லை. முந்தி இருந்ததுக்கு இது பரவாயில்லை ரகம்தான்.

Canon 1100D entry-level model. Twin lens kit.

இதுலே எடுத்துக்கிழிச்சால் இன்னும் நல்லது கிடைக்கலாம்:-))))

கோபாலின் அருள்வாக்கு!

கோணம் பார்க்க நேரம் இல்லையாக்கும்!!!!

minnal nagaraj said...

நீயூசி வாழ்வதற்கு சிறந்த நாடு என கேள்விபட்டிருக்கிறேன் அது உண்மைதானென்று உங்கள் பதிவுகளை படிக்கும்போது புரிந்தது நன்றி