Monday, February 25, 2013

தில்லையில் அவள் பெயர் சிவகாமி. திருக்கடையூரிலே அபிராமி

ரொம்ப வெய்யிலுக்கு முன்னே கிளம்பினால்  நல்லது. ஏழரைக்கு  கீழே டைனிங் ரூம் போனால் பளிச்!  அருமையான மர நாற்காலிகளும் மேசைகளுமா அட்டகாசமா இருக்கு. இவ்ளோ நல்ல ஃபர்னிச்சரான்னு  வியப்போடு சுவரை அலங்கரிச்ச சில படங்களைப் பார்த்தால்.... அட! நம்ம சிவாஜி! இந்த ஹொட்டேலுக்கு  திறப்புவிழா  நடந்த சமயம் எடுத்த படங்கள்.  இன்னும் ரெண்டே வாரத்தில்   அம்பது வயசு நிறையப்போகுது  வாண்டையார் மேன்ஷன் என்ற  இந்த  ஹொட்டேல் பேலஸ்க்கு . (அப்போ அப்படித்தான் பெயர்!.  க்ராண்ட் ஒரு வேளை சமீபத்தில் சேர்த்திருக்கலாம்)


அறை வாடகையோடு காலை உணவும் தர்றாங்க.  ஆனால் நம்மைத்தவிர வேற யாரும் நேற்று இரவு தங்குனமாதிரி தெரியலை. வரவேற்பிலும் சரி, டைனிங்  ஹாலிலும் சரி  எதிர்ப்பட்ட  பணியாட்கள் யாருமே  உற்சாகத்தோடு இல்லை:(  மெனுவைப்பார்த்து  பூரி உருளைக்கிழங்கு கேட்டதுக்கு  ஒரு  கால்மணி நேரம் கழிச்சு  ரொம்பவே சூடாகிட்ட எண்ணெயில்போட்டு பொரித்த 'கரும்பூரி'  வந்துச்சு.  காஃபிக்கு சொன்னோம்.  அதுக்கு ஒரு பத்து நிமிசம்.  அக்கம்பக்கத்துலே வேறெங்கியோ  இருந்து வாங்கி வர்றாங்களோ என்னமோ?  பக்கத்துலேயே ரயில்வே ஸ்டேஷன் கேண்டீன் இருக்கே!

அடுக்களையைப் பார்க்கலாமான்னு  பூரி  பரிமாறின அபுல்ஸன்  கிட்டே கேட்டதும்  ஒருமாதிரி முழிச்சார்.  ஸம் திங் இஸ் நாட்  ரைட் தேர்:(

அரை நூற்றாண்டு பழசுக்கு பராமரிப்பு வேலைகள்  நடந்துக்கிட்டு  இருக்கு போல!  ஆனா மொத்தத்துலேயும் பெஸ்ட் அந்த டைனிங் ஹால்தான். செகண்ட் பெஸ்ட் ஃபோயர் சுவரில் இருக்கும் சாமிப் படங்களும் குத்துவிளக்கும். கண்ணாடியில் மீன் தொட்டியும். தேர்ட் பெஸ்ட், மாடிப்படிகள் முடியும் ஒவ்வொரு தளத்திலும் இருக்கும்  அரைவட்ட டிஸைன் லேண்டிங். தோட்டம் பார்க்கும் வகையில் கண்ணாடி அமைப்பு.

அபி அம்மா சொன்னபடி  தில்லை அம்மன்கோவிலுக்குப்போய்க்கிட்டு இருக்கோம் இப்ப. தங்கிய இடத்தில் இருந்து  மூணு  கிமீ தூரம் இருக்கும்.  பெரிய கோவிலைத் தாண்டிப்போகும்போது ராத்திரி வரமுடியலையேன்னு  என்மேல் எனக்கே  பரிதாபமா இருந்துச்சு. டூர் பஸ்கள்  வரிசைகட்டி நின்னுருக்கு.  ஊரின் வடகிழக்குப்பகுதி.அருள்மிகு தில்லை காளி அம்மன் திருக்கோவில் நுழைவு வாயில், ரெண்டு பக்கமும் கூரைவீடுகளும்  திறந்த சாக்கடையும்,  பராமரிப்பு இல்லாத  தெருவுமா.....   கோடியில்  பாழாகிக்கிடக்கும் திருக்குளத்தின் எதிரே கோவில்.

முன்மண்டபத்தின் நடுவிலொரு  பலிபீடம்.  குங்குமம் கொட்டி இருக்கும் மேடையில் சில அகல்கள் எரியுது. உள்ளே நுழைஞ்சதும் ஆளுயர அம்மன். சாந்தமான முகங்கள்!  ஆமாம்..... நாலு முகங்களோடு இருக்காள். ரொம்பவே அழகான அமைதியான பாவம்!

நடனப்போட்டியில்  தோத்தவங்க ஊரைவிட்டு விலகி இருக்கணுமாமே..... என்னங்கடா இப்படி ரூல்ஸ்:(  கோபாவேசத்தோடு ஊர் எல்லைவரை வந்தவள்  நின்ன இடம் இது.  இப்படி ஆங்காரமா இருந்தால் , கண்டுக்கிட்டுப்போகலாமுன்னு வர்ற மக்களுக்கு எப்படி இருக்கும்?  கோபம் இருக்கும் வீட்டில் கால்குத்த நாமும் கொஞ்சம் யோசிக்கமாட்டோமா?

ப்ரம்மதேவர்,  அம்பாளைச் சாந்தப்படுத்த முயற்சிகள் எடுத்தார்.  அவரிடம் இருக்கும் நான்கு வேதங்களும் துணை செய்ய  மனசமாதானம் அடைஞ்சவள், வேதங்களைக் குறிக்கும்   நான்கு முகங்களோடு  ப்ரம்ம சாமுண்டீஸ்வரியா செட்டில் ஆனாள்.

நான் கோபமா இருந்தப்ப இப்படித்தான் இருந்தேன்னு சொல்லிக்கலாமுன்னா  அந்தக்காலத்தில்  ஃபோட்டோ புடிச்சு வச்சுக்க  ஏது சான்ஸ்?  சம்பவம் நடந்தது 2000 வருசங்களுக்கு முன்பாக இருக்கணும்.  கோவிலுக்கு வயசு அதேதான்.  ஆக்ரோஷ போஸ் ஒன்னு எடுத்து நின்னாள் அம்பாள்.
பயமா இருக்குல்லே?  ஆத்தா...  உள்ளெ போய் உக்காருன்னதும்  சட்ன்னு உள்ளே போய்  கிழக்கு  பார்த்து உக்கார்ந்தாள்.

கோபத்தில் சிவந்த  முகத்துக்கு குங்கும அபிஷேகம்  செய்வதால் தரையெல்லாம் குங்குமம் சிதறிக்கிடக்கு. இந்த சந்நிதியில் காளியைக் கும்பிட்டுக்கிட்டு  கோவிலை வலம் வர்றோம்.  வலம் வரும் பாதையெல்லாம்  சிகப்பு!  நம் உள்ளங்காலும்  சிவந்துதான் போகுது.  இவ்ளோ கோபம் கூடாதுன்னு மறுபடி சாந்த ஸ்வரூபிணியை சேவிச்சோம்.  வீணை ஏந்திய வித்யாம்பிகையையும்  இப்போபார்த்தேன். கோவில் சமாச்சாரம் விளக்கிச் சொல்ல அங்கே பூசாரிகள் யாரும் கண்ணில் படலை:(   தங்க்ஸ் கோபத்தோடு போனதைப்பார்த்து உள்ளூர ஒரு பயம் இருந்துருச்சோ என்னவோ  தட்சிணாமுர்த்தி இங்கே பெண்வேசங்கட்டிக்கிட்டு கடம்பவன தக்ஷண ரூபிணி என்ற பெயரில் இருக்கார்.

கோவிலை வெளிப்புறம் இருந்து  க்ளிக்கிட்டுக் கிளம்பி  ஒரு மணி நேரப்பயணத்தில்  இன்னொரு ஊருக்குள் நுழைந்தோம்.  அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்குப்போகும் வழியிலேயே  ஊரின் பிரசித்தி ஹொட்டேல்கள் பெயரில்  தெரியவந்தது.  ஹொட்டேல் மணிவிழா, ஹொட்டேல்  சதாபிஷேகம் இப்படி.

கோவில் ஒரே  கல்யாணக்கூட்டம்.  எங்கெ பார்த்தாலும் மாலயும் கழுத்துமா பொண்ணு மாப்பிள்ளைகள். கோவிலுக்கும் நுழைந்ததும்  கண்ணில் பட்டவள் அபிராமி.  இங்கே மூலவர்களைவிட பயங்கர பிஸியில் இருக்காள் இவள். கல்யாணங்கட்ட வந்த ஜோடிகளை ஓடோடி வரவேற்பது முக்கிய தொழில். உபதொழில்  நம்மைப்போல வருபவர்களுக்கு  ஆசிகள் அளிப்பது!

ஒரு நிமிசம்கூட அக்கடான்னு ஓய்ஞ்சு உக்கார நேரமில்லைன்னா பாருங்களேன். இங்கே  கல்யாணம் செய்ய வருபவர்கள் நாள் நட்சத்திரம் திதி ஒன்னும் பார்க்க வேணாமாம். அதனால் வருசம் 365 நாட்களும் ஜே ஜேன்னு இருக்கு கோவில்.

உள்பிரகாரம் சுத்திவர  மணவரைகள்தான்.  செல்விருந்து வருவிருந்து  மாதிரி ஒரு கல்யாணம் முடிஞ்சு மணமக்கள் எழுந்த அடுத்த நிமிசமே புது ஜோடி வந்து  மணையில் உட்கார்ந்துருது.  அக்னி கூட புதுசா  வளர்க்க வேண்டியதில்லை போல. அணையாத்தீதான்.   யாருடைய  கல்யாணத்துக்காவது  நாம் போயிருந்தால் புகை மூட்டத்தில் நம்மை அழைச்ச கல்யாண வீட்டாரையோ, இல்லை  மாப்பிள்ளை பொண்ணையோ கண்டு பிடிப்பதும் கஷ்டம்தான்.  வெவ்வேற கல்யாணத்துக்கு வந்த மக்கள்ஸ் கூட  கலந்துகட்டி நெருக்கியடிச்சு உக்கார்ந்துருக்காங்க. தப்பான ஜோடிக்கு மொய் போயிரும் அபாயம் இருக்கு:-)

மூலவர் அமிர்தகடேஸ்வரர்,  எமனுக்கு டெர்ரர்ரா இருந்தவர்!  மார்கண்டேயர் என்றும் பதினாறாக இருப்பதற்கு இவரே காரணம்.  மார்கண்டேயன் உயிரைப் பறிக்க எமதர்மன் வந்து கூப்பிட்டதும் வரமாட்டேன்னு சொல்லி அவர்  அமிர்தகடேஸ்வரரைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார்.  அப்படியெல்லாம் உயிரை எடுக்காமல் விட்டுட்டுப் போகமுடியாதுனு பாசக்கயிற்றை வீசுனப்ப  அது மார்க்கண்டேயர் கட்டிப்பிடிச்சுருந்த  சிவலிங்கத்தையும் சேர்த்தே சுருக்கு போட்டுருச்சு. அவ்ளோதான்! ' என்னையேவா இழுக்கறே' ன்னு   ஆவேசமா  கால சம்ஹாரமூர்த்தியாக சிவன் தோன்றியதும்  எமனுக்கே பயம் வந்து  மன்னிப்பு கேட்டு அழுதார்.

அப்புறம்  மார்கண்டேயரை  விட்டுட்டுப் போகும்படியாத்தான் ஆச்சு.  இனி லெட்ஜரில்  திருப்பி அவர் பெயரைப் பதிய முடியாமல் போய் , மார்கண்டேயரும் பதினாறாகவே நிலைச்சு நின்னுட்டார்.  எமனின் பாசக்கயிறு விழுந்த அடையாளம் சிவலிங்கத்தின் மேனியிலே இன்னும் இருக்காம். பாலபிஷேகம் செய்யும்போது தடம் நல்லாவே தெரியுமாம்.

மூலவருக்கு முன் இருக்கும்  கொஞ்ச  இடத்தையும் விட்டுவைக்காமல்  அங்கேயும்  கல்யாணங்கள் நடக்குது. ஒரே புகை மூட்டத்தில் எல்லாமே  தேவலோக ஸீன்கள்தான். இதைத்தொட்டடுத்த பிரகாரத்திலும்  திண்ணைகள் ஓடும் அமைப்பில்  கல்யாணத்துக்கு வந்திருந்தவர்களின் கூட்டம்.   மாலையும் கழுத்துமா மக்கள் வெள்ளம்!

இங்கே வந்து  60,  70, 80, 90, 100ன்னு  கல்யாணம் செஞ்சுக்கறவகளுக்கும், ஆயுஷ்ஹோமம்,  ஜாதகரீதியில்கோளாறுன்னு விசேஷ பூஜை செய்யறவங்க  இப்படி எல்லோருக்கும் எம பயம் இல்லாமல் ஆயுசும் ஆரோக்கியமும் நீடிச்சு இருக்கும் என்று ஐதீகம்.  அதான் தமிழ்நாடு முழுவதும்போதாதுன்னு , வெளி மாநிலம்,வெளிநாடுன்னு மக்கள் அறுபதாங்கல்யாணம், எழுபதுக்கு செய்யும் பீமரதசாந்தி, எம்பதுக்கான சதாபிஷேகம், தொன்னூறுக்கான கனகாபிஷேகம், நூறுக்கான பூர்ணாபிஷேகம்ன்னு கொண்டாடி மகிழ திருக்கடையூருக்கு படையெடுக்கறாங்க.

கோவிலுக்குள்ளேன்னு இல்லாமல் பலவித கல்யாண  ஹால்களும்  ஊர் முழுசும்  இருக்கு. எல்லோருக்கு அமோகமா வியாபாரம்!

அபிராமி சந்நிதி தனியா இன்னொரு கோவிலாட்டம் இந்தக் கோயிலுக்குள்ளேயே இருக்கு. அங்கேயும் மக்கள்கூட்டம் அதிகமுன்னாலும் அஞ்சு நிமிசம்  நின்னு தரிசிக்க முடியுது. சக்தி வாய்ந்த அம்மன்.  அபிராமி அந்தாதியே இந்த அம்மனைப் பாடியதுதான்.



கல்யாண விசேஷங்களுக்குக் கோபூஜை பண்ணிக்க வசதியா  கோமாதா குழந்தையுடன் காத்திருக்காள்.  இவளும் பூம்பூம் மாடு போல பழக்கப்படுத்தியவள்தான்.  பயமில்லாம  தொட்டுக்கும்பிட வாகா முதுகை  காமிக்கிறாள்.

இந்தக்கோவிலில் இன்னுமொரு முக்கிய விசேஷம்..... கெமெராவுக்கு டிக்கெட் ஒன்னும் வாங்கிக்க வேணாம். கல்யாணத்தில்   போட்டாகிராஃபர்களுக்கு  என்ன தடை:-))) அதுவும் இப்பெல்லாம் கல்யாணங்களில் டைரக்‌ஷனே  வீடியோக்காரகள்தானே!  தாலி கட்டும் ஸீன் சரியா வரலை ரீ டேக்  இந்தப்பக்கம் பார்த்துச்  சிரிங்க.   ரெடி ஸ்மைல்(  கெமெராவைப்பார்த்து  கையில் தாலியுடன் சிரிச்சால்  பொண்ணு கழுத்து எங்கேன்னு  எப்படி பார்க்க? அதிலும்  மாலையை சரி பண்ணறேன். நெக்லெஸ் சரிஞ்சுருக்கு, தலையை ரொம்பவே குனிஞ்சுட்டாள்ன்னு  சரி செய்ய எத்தனை பெண்கள் மணமகளின் முகத்தருகில் குனிஞ்சு இருப்பாங்கன்னு நினைச்சுப் பாருங்க.

ரொம்ப வயசானவரா இருந்தவரின் ஜோடியை சதாபிஷேகமான்னு கல்யாணம் விசாரிச்சு ,பல்பு வாங்கினபிறகு கப்சுப் ஆனேன். சஷ்டியப்த பூர்த்தியாம். அதுக்குப்பிறகு  எதிர்ப்பட்ட  பல் ஜோடிகளுக்கு  வாழ்த்துக்கள் சொன்னதோடு சரி.எதுக்கும் வாயைத்திறக்கலை:-)))

கோவில்  வாசலில்  வளையல், பூக்கள் மஞ்சள் குங்குமம் என்று மங்கலப்பொருட்கள், பூஜை சாமான்கள்  விற்கும் கடைகளிலும்  கூட்டத்துக்குக் குறைவே இல்லை. அழகழகான மண் உண்டியல்கள் கண்ணைப்பறிச்சது!   தாகத்துக்கு இளநீர் குடிச்சுட்டுக் கிளம்பினோம்.

ஒரு சோக சம்பவம் என்னன்னால்....  இந்த அபிராமி உடல்நலமில்லாமல் போய்  இந்த ஜனவரி 18 காலை (18/1/2013) காலை  சாமிக்கிட்டே போயிட்டாளாம்:(   இத்தனைக்கும் வயசு ஒன்னும் அதிகமில்லை வெறும் 26 தான். நாலு வயசுலே கோவிலுக்கு வந்தவள் . 22 வருசம்  ஓடியோடி உழைச்சுட்டுப் பொழுதோடு போயிட்டாள்:(  ப்ச்.....

இந்நேரம்  புது அபிராமி வந்துருப்பாள் என்றே நினைக்கிறேன். அவளுடைய சேவையும் தேவையும்  அதிகமா இருக்கே!

தொடரும்..............:-)






50 comments:

said...

விசேசமான படங்கள்...

அபிராமி தகவல் வருத்தமாக இருக்கு...

said...

//கெமெராவைப்பார்த்து கையில் தாலியுடன் சிரிச்சால் பொண்ணு கழுத்து எங்கேன்னு எப்படி பார்க்க? அதிலும் மாலையை சரி பண்ணறேன். நெக்லெஸ் சரிஞ்சுருக்கு, தலையை ரொம்பவே குனிஞ்சுட்டாள்ன்னு சரி செய்ய எத்தனை பெண்கள் மணமகளின் முகத்தருகில் குனிஞ்சு இருப்பாங்கன்னு நினைச்சுப் பாருங்க.//

ச்சான்ஸே இல்லை துள்சிக்கா.. அடிபொளி :-))

அபிராமியையும் தில்லைக்காளியையும் ஆனந்தமா தரிசனம் செஞ்சேன். தில்லை வனத்தில் குடிகொண்டதால்தான் அவளுக்கு தில்லைக்காளின்னு பேர். எனக்கும் இஷ்டதெய்வம் இவள்.

said...


திருக்கடையூர் அபிராமி கோயில் பயணக் கட்டுரை ந்ன்கு விரிவாகவும் படிக்க சுவாரசியமாகவும் இருந்தது. தங்கள் பதிவில் சொன்ன ... ... ... ...

//அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்குப்போகும் வழியிலேயே ஊரின் பிரசித்தி ஹொட்டேல்கள் பெயரில் தெரியவந்தது. ஹொட்டேல் மணிவிழா, ஹொட்டேல் சதாபிஷேகம் இப்படி. //

// இங்கே கல்யாணம் செய்ய வருபவர்கள் நாள் நட்சத்திரம் திதி ஒன்னும் பார்க்க வேணாமாம். அதனால் வருசம் 365 நாட்களும் ஜே ஜேன்னு இருக்கு கோவில். //

// இந்தக்கோவிலில் இன்னுஒரு முக்கிய விசேஷம்..... கெமெராவுக்கு டிக்கெட் ஒன்னும் வாங்கிக்க வேணாம் //

போன்ற தகவல்கள், அங்கு புதிதாகப் போகிறவர்களுக்கு உதவும். வண்ணப் படங்கள் அருமை.

said...

அபிராமி பத்திய செய்தி வருத்தமா இருக்கு. இப்படித்தான் நாலு வருஷம் முன்னாடி திருப்பனந்தாளிலேயும், நாங்க படம் எடுத்த ஆனையம்மாவும் திடீர் மரணம். :(((((

said...

அபிராமி படம் ஒண்ணு வாங்கிவரச் சொல்ல மறந்துட்டேனே. சீனு(ட்ரைவர்)உங்களை ரொம்ப விசாரிச்சார். நானும் ஒவ்வொரு பதிவிலும் அவர் பெயர் வருவதைச் சொன்னேன்:)
ஏயப்பா எவ்வளவு ஹோமப்புகை.
தில்லைகாளி பயம் கொடுக்கிறாள். கோவம் வராம இருக்குமா.

அபிராமி யானை பாவம்பா. அங்கேருந்து ஊட்டி வரை நின்னுக்கிட்டே வந்திருக்கு. காலில் வேற அடியாம்.

said...

கல்யாணத்துக்கு வந்த மக்கள்ஸ் கூட கலந்துகட்டி நெருக்கியடிச்சு உக்கார்ந்துருக்காங்க. தப்பான ஜோடிக்கு மொய் போயிரும் அபாயம் இருக்கு:-)//

உண்மை துளசி.
என் கணவரின் அண்ணன் திருமணத்திற்கு வந்த பரிசுப் பொருட்கள் பக்கத்து திருமண பரிசுகளுடன் கலந்து போய் விட்டது.

சுவாமி முன் நடக்கும் திருமணம் முன்பு இரண்டு தான் , அப்போதே பரிசு பொருள் குழப்பம் என்றால் இப்போது கேடகவே வேண்டாம்.. இப்போது 7 என்கிறார்கள் ஒவ்வொரு தூண்களுக்கு இடையில் திருமணம் உறவினர் 10 பேர் தான் உடகார முடியும்.

said...

அபிராமி இறந்து விட்டதால் இப்போது கஜ பூஜை இல்லை.
மாப்பிள்ளை, மணபெண்ணை அழைக்க வரும் வாசலுக்கு இப்போது அதுவும் இல்லை.
அபிராமி இறந்தது வருத்தம் தான்.

said...

எதிர்ப்பட்ட பல் ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னதோடு சரி.எதுக்கும் வாயைத்திறக்கலை:-)))

எதிர்ப்பட்ட அத்தனை ஜோடிகளிடமும் ஆசீர்வாதம் வாங்கினோம் ..

அவர்களுக்குத்தான்
எத்தனை பெருமை ..!

said...

விரிவான பகிர்வு. அருமை.

மணிவிழா, சதாபிஷேகம் என ஹோட்டல்களின் பெயர்கள், சுவாரஸ்யம் அளிக்கின்றன:)!

ஆனை அபிராமி காலமான விவரம் செய்திகளிலும் பார்த்தேன்:(!

said...

படங்கள் அனைத்தும் அருமை.

ப்ரம்ம சாமுண்டீஸ்வரி பற்றிய படம்,தகவல்கள்,அமிர்தகடேஸ்வரர் பற்றிய தகவல்கள் எல்லாம் சிறப்பு.

//கல்யாணங்கட்ட வந்த ஜோடிகளை ஓடோடி வரவேற்பது முக்கிய தொழில். உபதொழில் நம்மைப்போல வருபவர்களுக்கு ஆசிகள் அளிப்பது!//

ஹா.ஹா..

said...

விரிவான பகிர்வு. தகவல்கள் அனைவருக்கும் உதவும்....

அபிராமி :(((((

said...

இங்க சாபம் பெற்ற யமனுக்கு எங்க ஊர் பக்கத்துல இருக்கற கோவில்பாளையம் (15 கி.மீ.) என்கிற ஊர்ல இருக்கிற ஈஸ்வரன்தான் சாப விமோசனம் கொடுத்திருக்கார். காலகாலேஸ்வரன் என்று திவ்ய நாமம்.

இந்தக் கோவிலும் இப்போது உள்ளூரில் பிரபலமாகிக்கொண்டு வருகிறது.

அடுத்த தடவை இந்தப் பக்கம் வர்ரப்போ தகவல் கொடுத்தீங்கன்னா, தரிசனத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணித்தாரேன். கமிஷன் வேண்டாம்.

said...

வணக்கம் மேடம்..
உங்க புக்-ஃபிஜி- கரும்புத் தோட்டத்திலே…படித்தேன். தித்திப்பு. எக்சலண்ட் எக்ஸ்பீரியன்ஸ்.
மத்த கட்டுரைகளையும் படிச்சேன்.. கலக்குறிங்கம்மா..
ஆல் த பெஸ்ட். வாழ்த்துக்கள்.!.
நகைச்சுவையுடன் ஆற அம்ர அட்டகாசமா சொல்லிருக்கிங்க. எங்க ஊர்ல கூட்டாஞ்சோறு சாப்பிடறப்ப கதை கேக்குற மாதிரியே இருந்தது.
மத்தவங்களுக்கு எப்படியோ நான் ரொம்ப ரொம்ப்ப்ப்ப்பவே ரசிச்சு படிச்சேன். ஏன்னா 2 மாசத்துக்கு முன்னாடி தான் பிஜில தமிழ் பட சூட்டிங் முடிச்சுட்டு வந்தோம். என்னால எல்லாத்தயும் சுடசுட ரீவைண்ட் பண்ணி பாக்க முடிஞ்சது.
படத்தோட தலைப்பு— “நாடி துடிக்குதடி.” இயக்குனர் செல்வா. ( தலைவாசல், நான் அவன் இல்லை பட இயக்குனர்) நான் அவர் கிட்ட உதவி இயக்குனரா ஒர்க் பண்றேன்.
எங்களுக்கும் அங்கு நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்கள். 1910ம் வருசம், 15 வயசு பையனா இங்கிருந்து போன துரைசாமி கவுண்டர் என்கிறவரோட குடும்பத்தையும் இந்தியாவுல இன்னைக்கு இருக்கிற அவுங்களோட தலைமுறை உறவுகளையும் ஒண்ணு சேர்த்து வைச்சுருக்கோம். 60 வருடங்களாக தொடர்பு இல்லையாம். எங்களால முடிஞ்ச ஒரு சின்ன உதவி. அது ஒரு பெரிய எமோசலான கதை.
தேங்கஸ் மேடம்.
ரா.குமரன்/திரைப்பட உதவிஇயக்குனர்/சென்னை.-78/26-02-13.

said...

காமிரா கவிஞின்னு ஒங்களத்தான் சொல்லனும். வளைச்சு வளைச்சு படம் பிடிச்சிருக்கிங்க. இதுல வசதி என்னன்னா பதிவைப் படிக்குறப்போ நாங்க அந்த எடத்துலயே போய் நீங்க சொன்னத பாக்குற மாதிரி இருக்குது.

ரயில்வே கேண்டின்ல இருந்து வாங்கிட்டு வந்து விக்கிறாங்களோ! நீங்க சொன்ன மாதிரி உண்மையா இருக்கலாம்.

அன்புடன்,
ஜிரா
gragavanblog.wordpress.com

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பாவம், அபிராமி இல்லை:(

அபிராமியின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

தப்பான கழுத்துன்னா....டேஞ்சரான சூழல் இல்லையா!!!

தில்லை மரங்களைப் பார்க்கவே இல்லைப்பா. என்ன மரம் அது? வேற பெயர் இருக்கா?

said...

வாங்க தமிழ் இளங்கோ.

போற போக்கில் சிலருக்காவது பயன் படுமேன்னுதான் தகவல்கள் சொல்வது.

பயணக்கட்டுரைகள் பிடிக்கு என்றால் . நம் தளத்தில் ஏராளமா உள்நாடு அண்ட் வெளிநாடு பதிவுகள் உண்டு.


வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

said...

வாங்க கீதா.

பாவம்ப்பா.இதுகளுக்கு எவ்ளோ ஸ்ட்ரெஸ் இருக்குமுன்னு அப்பப்ப நினைச்சுக்குவேன். ஜாலியா காட்டுலே சுத்தறதை இப்படிச் சங்கிலி மாட்டி பிச்சையெடுக்க வச்சுடறாங்களே:(

said...

தில்லை மரங்கள் சிதம்பரம் அருகிலுள்ள பிச்சாவரக் காட்டில், உப்பங்கழிகளில் காணக்கிடைக்கும் துளசி. அங்கே படகில் சென்று பார்க்கலாம். நானும் ஒவ்வொரு முறையும் போகணும்னு நினைப்பேன். எங்கே, மேலிடம் அநுமதியே கொடுக்கறதில்லை! அங்கெல்லாம் எதுக்குனு 144 தடை உத்தரவு! :(((

said...

தில்லை மரத்திற்கு Excoecaria agallocha L. என்று புதலியலில் ஒரு பெயர் உண்டு. "அகிலைத் தில்லை" என்று அந்த மரத்திற்கு தமிழ்ப் புதலியற் பெயர் கொடுத்திருக்கிறார்கள். (அகில் மரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், அந்த அகில் என்ற சொல்லும் உள்ளே வருகிறது. http://valavu.blogspot.in/2006/07/1_31.html
வளவு லே போய்ப்படிங்க. அதென்னமோ லிங்க் போகலை. அதான் அப்படியே கொடுத்துட்டேன். :))))

said...

வாங்க வல்லி.

சீனிவாசனைப் பார்த்தால் நான் விசாரிச்சதாச் சொல்லுங்கப்பா.

இன்னொருக்கா அந்தப்பக்கம் போனால் உங்களுக்கு அபியை வாங்கி வர்றேன்.

கோவில் ப்ரகாரம் முழுக்க சினிமாவில் பார்க்கும் தேவலோக ஸீன்தான்.புகை மண்டலம்:-)

அபிராமிக்கு இப்படி அல்பாயுசு பாவம்:(

said...

வாங்க கோமதி அரசு.

அஞ்சுக்கு அஞ்சு இடம் கிடைச்சால் உடனே மணையைப் போட்டுடறாங்க. அப்படி ஒரு நெருக்கடி அங்கே!

கால் வைக்க இடமில்லை நமக்கு!

அடடா.... மைத்துனர்திருமணத்தில் 'மொய்ப்பொருள்' காண்பதரிதாக ஆகிவிட்டதா?

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஏராளமான ஆசிகள் கிடைச்சுருச்சு போல! ஓக்கே! நல்லா இருங்க!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

'புகை'ப் படங்களாகவே எடுக்கும்படியா ஆச்சுங்க:-))))

அபிராமியை நினைச்சால் மனசு வலிக்குதுப்பா:(

said...

வாங்க ரமா ரவி.

ரசனையோடு வாசிச்சதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

அபிராமி...... ரொம்ப சோகம்:(

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

உங்க ஊருக்கு வரணுமுன்னு ஒரு திட்டம் வச்சுருக்கேன்.

பதிவர்சந்திப்பு ஒன்னை நடத்தியே ஆகணும்:-))))

காலகாலேஸ்வரனுடன் ஒரு மீட்டிங் வச்சுக்கணும்.

கமிஷன் வேணாமுன்னு சொன்னது இரட்டிப்பு மகிழ்ச்சி:-))))

said...

வாங்க ரா. குமரன்.

வணக்கம். எதிர்பாராத பின்னூட்டம். மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. பயனுள்ள (அட்லீஸ்ட் உங்களுக்காவது) புத்தகமுன்னு சொல்லிக்குவேன்:-)))

ஃபிஜியில் எந்தெந்த ஊர்களில் படப்பிடிப்பு வச்சீங்க? உங்க படம் பார்க்கும் ஆவல்வருது. அடுத்தமுறை சென்னைப்ப்யணத்தில் டிவிடி கிடைக்குமான்னு பார்க்கணும்.


//எங்களுக்கும் அங்கு நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்கள். 1910ம் வருசம், 15 வயசு பையனா இங்கிருந்து போன துரைசாமி கவுண்டர் என்கிறவரோட குடும்பத்தையும் இந்தியாவுல இன்னைக்கு இருக்கிற அவுங்களோட தலைமுறை உறவுகளையும் ஒண்ணு சேர்த்து வைச்சுருக்கோம். 60 வருடங்களாக தொடர்பு இல்லையாம். எங்களால முடிஞ்ச ஒரு சின்ன உதவி. அது ஒரு பெரிய எமோசலான கதை.//

உண்மைதான். விட்டுவந்த குடும்ப நினைவில்.... ஊர்க்காரவுங்கன்னு நம்மேல் பொழியும் அன்பை என்னன்னு சொல்ல?

நியூஸிலாந்துன்னு ஒரு புத்தகமும் நம்மது வந்துருக்கு. அதையும் பாருங்க. எப்போ இங்கே ஷூட்டிங் வர்றீங்கன்னு சொன்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன்.

உங்கள் இயக்குனர் தொழிலில் மேன்மேலும் சிறப்பாக பணி புரிந்து வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்.

said...

வாங்க ஜீரா.

அந்தப்படத்தில் நம்ம பழைய சிவாஜி முகம் பார்த்தப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. கொழுக் மொழுக்குன்னு அமுல் பேபி முகம்:-))))

விஷுவல் எஃபெக்ட் இருந்தால் நல்லதுதானே:-))))

said...

கீதா,

சுட்டிக்கு நன்றி. அகில் மரமுன்னா... அகில் புகை போடுவாங்களே அந்த மரமா?

பிச்சாவரம் போகலையேப்பா:(

நம்ம வீட்டிலும் நிறைய 144 உண்டு. ஆனா நான் சொன்ன பேச்சைக் கேட்கமாட்டேன்:-)))) அ.பிடாரின்னு தண்ணி தெளிச்சுருவார்!!!

said...

வருடம்பூரா திருமணம் ஆச்சரியம்!.


அபிராமி கவலை தருகின்றது.

said...

கல்யாணமோ கல்யாணம் போல அங்கே.....

ஹோட்டல்களின் பெயரும்....

அபிராமி....:((

said...

நன்றி மேடம். நமாக்கான்ற ( நாண்டி ஏர்போர்ட் பக்கத்துல) ஊர்ல தான் தங்கிருந்தோம். நாண்டி முருகன் கோவில், வைலொலா பீச், பீச் காம்பர், சிகடோக்கா சேண்ட் டியூன்ஸ், சுவா போர்ட்,லொட்டாக்கா பீச், நவாலா வில்லேஜ்,பா டவுன், அப்புறம் சவுசாவு தீவு( அதான் அந்த அனகொண்டா லொகசன்ஸ்- பாம்பு இல்லாத ஊர்ல பாம்பு பத்தின பிரமாண்டமான படம் ) மில்லியனர்கள் மட்டும் தங்ககூடிய ஒரு தீவு,டெனிரான்னு நினைக்கிறேன், நிறைய ரிசார்ட்ஸ்ல சூட்டிங் எடுத்தோம். அந்த துரைசாமி கவுண்டர் பேமிலிய சந்திச்ச்து எல்லாமே இனிமை. ஏப்ரல்-14 ரீலீஸ் பிளான் பண்றோம். மே மாசம் இன்னொரு பட சூட்டிங்கு போற மாதிரி இருக்கோம்.கன்பார்ம் ஆச்சுன்னா சொல்றேன். நாங்க அங்க நடிக்க ஆள் தேடி ரொம்ப கஷ்டப்பட்டோம்.. யாராச்சும் உங்க நெட் ஒர்க்ல- ( தமிழ் கொஞ்சமாச்சும் பேசணும்) இருந்தாங்கன்னா சொல்லுங்க யூஸ் பண்ணிக்கலாம். உங்களோட பிளஸிங்ஸ்க்கு நன்றி.ராகு

said...

http://www.mpbd.info/plants/excoecaria-agallocha.php

தில்லையைப்பற்றிய முழு விவரம் இங்கே இருக்கு. சிதம்பர ரகசியம்ன்னு ஒரு தொடரில் கூட இதைப்பத்திச் சொல்லியிருந்தாங்க.

said...

வாங்க மாதேவி.

நான் ஒரு 42 வருசத்துக்கு முன்னே திருக்கடையூர் போனபோது அங்கே கல்யாணம் ஒன்னுமே பார்க்கலைப்பா.

இதெல்லாம் சமீபத்துலே (!) ஆரம்பிச்சு இப்ப எல்லை கடந்து போய்க்கிட்டு இருக்கோன்னு சம்ஸயம்.

சிலப்பதிகார மாதவியின் ஊர் இது. அவர் வீடும் பாழடைஞ்ச நிலையில் இங்கிருக்குன்னு கேள்வி.

பார்க்கக் கிடைக்கலை:(

அபிராமிகளை நினைச்சால் மனசு கனத்துப்போகுது:(

said...

வாங்க ரோஷ்ணியமா.

கல்யாணங்களோ கல்யாணங்கள்தான் அங்கே!!!

அபியை நினைச்சால்..... ப்ச்:(

said...

வாங்க குமரன்.

பழகிய இடங்களை நீங்க சொல்லியதும் மனசு சடார்னு கொசுவத்தி ஏத்தி வச்சுருச்சு!

நேரம் இருக்கும்போது இங்கே பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2008/08/8.html

அப்படியே நூல் பிடிச்சு மேலே போனால் பயணம் முழுதும் 'பார்க்கலாம்'!!

தகவல்கள் புத்தகத்துலே இருக்குன்னாலும் படங்கள் துளசிதளத்தில்தான்.

புத்தகத்தில் என்னுரையின் கீழே என்னுடைய மெயில் ஐடி இருக்கு பாருங்க. அதுக்கு மடல் அனுப்புங்க. இன்னும் கொஞ்சம் பேசலாம்:-)))

said...

வாங்க அமைதிச்சாரல்.

சுட்டிக்கு நன்றிப்பா.

said...

http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_11.html

மணிராஜ்: கொங்குநாட்டுத்திருக்கடையூர்

படிச்சுப்பாருங்க ..

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பதிவும் படங்களும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!

சுட்டிக்கு நன்றி.

said...

இந்த‌க் கோயிலில் அற‌நிலைய‌த்துறை த‌லையிட்டு, திரும‌ண‌த்த‌ம்ப‌திக‌ளையும், ஓம‌குண்ட‌ங்க‌ளையும் ந‌ல்ல‌ புகை வெளியே போகக் கூடிய‌ ஏதாவ‌து திற‌ந்த‌ ம‌ண்டபத்தைக் க‌ட்டி அங்கு அனுப்பி விட்டு, ச‌ட‌ங்குக‌ளின் முடிவில் த‌ம்ப‌திக‌ளாக‌ உள்ளே வ‌ந்து சிவ‌னைத் த‌ரிச‌ன‌ம் ப‌ண்ணுமாறு செய்ய‌ வேண்டும். அத‌னால் கோயிலையும் க‌ரியிலும், புகையிலிருந்தும் காப்பாற்ற‌லாம், எல்லோரும் நிம்ம‌தியாக‌ சுவாமி த‌ரிச‌ன‌மும் ப‌ண்ண‌லாம்.. ப‌ழமையான, விலைம‌திக்க‌ முடியாத‌ சிற்ப‌வேலைப்பாடுள்ள‌ த‌மிழ்நாட்டுக் கோயில்க‌ளும் பார்ப்ப‌ன‌ர்க‌ள் ப‌ண‌ம் ப‌ண்ணும் வெறும் வியாபார‌த்தல‌ங்க‌ளாக‌ மாறிவிட்ட‌ன‌ என்ற‌ ம‌ன‌வேத‌னை முத‌ல் முத‌லாக‌ த‌மிழ்நாட்டுக் கோயில்க‌ளுக்குப் போகும் உல‌க‌த‌ த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ஏற்ப‌டுவது த‌விர்க்க‌ முடியாத‌து.இதே நிலை தான் திருநாகேஸ்வ‌ர‌த்திலும், செந்தூரிலும் கூட. இந்த‌ வியாபார‌ நெருக்க‌டியில் கோயில்க‌ளின் தெய்வீக‌ம் கெடுகிற‌து. இந்த‌க் கோயிலின் உண்மையான பெய‌ர் திருக்க‌ட‌வூர் தானே, திருக்க‌டையூர் என்ப‌து பிழையான‌ பெய‌ர் என்று தெரிந்தும் ஏன் எல்லோரும் அதையே பாவிக்கிறார்கள்.

said...

//சிதம்பர ரகசியம்ன்னு ஒரு தொடரில் கூட இதைப்பத்திச் சொல்லியிருந்தாங்க.//

அமைதி, சிதம்பர ரகசியம் எழுதியது நானாக்கும். அதான் தொடர்ந்து வந்து விளம்பரம் கொடுத்துட்டு இருக்கேன். :))))

said...

திரு வியாசன் அவர்களின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். மின்சாரம்போயிடுச்சு, பின்னர் வரேன். :(

said...

//அமைதி, சிதம்பர ரகசியம் எழுதியது நானாக்கும். அதான் தொடர்ந்து வந்து விளம்பரம் கொடுத்துட்டு இருக்கேன். :))))//

@ கீத்தாம்மா, முன்னொருக்கா சன் டிவியில் மர்மதேசம்,ருத்ரவீணை வரிசையில் வந்ததே.. அந்த சிதம்பர ரகசியத்தைத்தான் நான் சொன்னேன். நம்ம மாளவிகா கூட நடிச்சிருந்தாங்க. தில்லை இலைகள்லேருந்து ஒரு மருந்து தயாரிக்கறதாவும் அது ஒரு கொடிய நோய்க்கு மருந்தாகறதாவும் போகும் கதை. தொடரில் டைட்டிலில் காமிக்கும் ஒரிகாமிக்காகவே அந்த சீரியலைப் பார்த்தேன் :-)))

said...

//அந்த சிதம்பர ரகசியத்தைத்தான் நான் சொன்னேன்.//

அநியாயமா இருக்கே! :))))))) என்னோட எழுத்தின் மகிமை குறிச்சுப் பூரிச்சுப் போயிருந்தேனாக்கும். :)))))



// நம்ம மாளவிகா கூட நடிச்சிருந்தாங்க. தில்லை இலைகள்லேருந்து ஒரு மருந்து தயாரிக்கறதாவும் அது ஒரு கொடிய நோய்க்கு மருந்தாகறதாவும் போகும் கதை. தொடரில் டைட்டிலில் காமிக்கும் ஒரிகாமிக்காகவே அந்த சீரியலைப் பார்த்தேன் :-))) //

"சிதம்பர ரகசியம்" தொடர் ராஜ் தொலைக்காட்சியிலே வந்ததுனு நினைக்கிறேன். :)))) இப்போ மறு ஒளிபரப்பாக சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு திங்களன்றும் வருது. :)))))

said...

உங்க பதிவுகளின் சிறப்பே படங்கள்தான், படிக்கும்போது நாங்களே அங்கே இருப்பது போன்ற உணர்வு தருகிறது. நீங்கள் ஊர் திரும்பும்போது இதை மனம் மிஸ் செய்வதாய் தோன்றும் பாருங்கள்......அதுதான் இந்தியா !!

said...

வாங்க வியாசன்.

நீங்க சொன்னது ரொம்பச்சரி. புகை மண்டித்தான் கிடக்கு அங்கே! சிறபங்களின் அழகையோ, கலைச்செல்வங்களையோ பற்றிய ஒரு எண்ணமும் மக்களுக்கும் இல்லை. அரசுக்கும் இல்லை.

சிலைகளைச் சுத்தப்படுத்தறோமுன்னு சேண்ட் ப்ளாஸ்ட்டிங் செய்து அருமையான சிற்பங்களின் மூக்கு முழியெல்லாம் கரைஞ்சு போய்க் கிடக்கு.

உதிர்ந்துபோன நிறங்களைச் சரிப்படுத்தறோமுன்னு கண்ட வர்ணங்களைத்தீட்டி நாசமாகி இருக்கு பலகோவில்களில் உள்ள சித்திரங்கள்:(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க சுரேஷ் குமார்.

உண்மைதான். ஒவ்வொரு பயணம் முடிஞ்சு விமானமேறக் காத்திருக்கும் நிமிடங்களில் இனி எப்போ வரப்போறோமோன்னு தோணும்.

ஒருவகை லவ் அண்ட் ஹேட் உறவுதான்:-))))

said...

//'புகை'ப் படங்களாகவே எடுக்கும்படியா ஆச்சுங்க:-))))//

:)))இந்த வாரக் கடைசியில் திருக்கடையூர் (மறுபடி) போகும் சந்தர்ப்பம் இருக்கிறது. அபிராமி யானையைப் பார்க்க முடியாது என்பது வருத்தம்தான்.

said...

வாங்க ஸ்ரீராம்..

புகைப்படங்களை நீங்களும் எடுத்து வருவீர்கள்தானே? :-)

அபிராமி........:( ப்ச்.......