Monday, February 04, 2013

மயிலே மயிலே உன் தோகை எங்கே...........


விட்டுப்போனவைகளை இன்னிக்கு மாலை 4 மணிக்குள்ளே பார்த்து முடிக்கணும்.  சோம்பல்பட்டால் ஆகுமா?  சரியா காலை எட்டேகாலுக்கு அறையைப்பூட்டிக்கிட்டு கீழே வந்தாச்சு.  முதல்லே எதிரில் இருக்கும் சரித்திர சமாச்சாரத்தை எட்டிப்பார்க்கணும். பொதுவா அப்புறம் ஆகட்டுமுன்னு சொல்லிச் சொல்லியே   ரொம்பப்பக்கத்தில் இருக்கும்  இடங்(கள் கடைசியில் விட்டுப்போகும் :( பேங்க் ஆஃப் நியூ  சௌத் வேல்ஸ். நாம் தங்கி இருக்கும் இந்தப்பகுதிக்கு  பேங்க் கார்னர் என்ற பெயரே இதை வச்சுத்தான்.  ரெண்டு மேஜர் தெருக்கள்  டீ  (Dee) அண்ட் டே  (Tay) சந்திக்கும்  இந்த  இடத்தில் மூணு பக்கமும்  பெரிய கட்டிடங்கள். ஒன்னு பேங்க்.ஒன்னு சர்ச், இன்னொன்னு டிவி ஸ்டேஷன்.நாலாவது மூலைதான் நம்ம கட்டிடத்துக்கான கார்பார்க்.  மற்ற மூணுக்கும் முன்னால் இது பரிதாபமா நிக்குதேன்னோ என்னவோ இங்கேயும் நெடிதுயர்ந்த  அலங்கார சுவர் ஒன்னை ஷோவா வச்சுருக்காங்க.

புதுவருச விழா முடிஞ்ச இடம் இப்ப(வும்) வெறிச்சுக்கிடந்துச்சு.  சின்னதா ஒரு ரவுண்டு  டீ தெருவில் போயிட்டு குவீன்ஸ்பார்க் போய் சேர்ந்தோம். சரித்திர முக்கியத்துவம் உள்ள  பூங்கா.  கேட்டுலே இருந்தே ஆரம்பிச்சுருது  ஹிஸ்டோரி.  Feldwick Gates.

ஆமாம் ... 1913  வது வருசம் 20.000 ப்ரிட்டிஷ் பவுண்டுக்கு மதிப்பு அதிகம் இருந்துருக்குமில்லே?  பவுனு  பத்து ரூபான்னு பாட்டி சொல்லுவாங்க!

John  Feldwick     சௌத்லேண்ட் டெய்லி  நியூஸ் என்ற பத்திரிகை நடத்தி வந்தவர்.  திருமணமே செய்து கொள்ளாத இவர் தன்னுடைய உயில் பத்திரத்தில்  இந்த பூங்காவை நல்ல பொழுதுபோக்கு அம்சமாக மாத்தணுமுன்னு கோரிக்கை வச்சு  இருபதாயிரம் பவுண்டு எழுதி வச்சுட்டார். இவர் மொத்த சொத்து  அம்பதாயிரம் பவுண்டுகள். அப்போ மாட்சிமை பொருந்திய மஹாராணி விக்டோரியா , அவர்கள் ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்த சமயம்.  இந்தப் பார்க்குக்கு  விக்டோரியா பார்க் என்ற பெயர்தான் இருந்துருக்கு அப்போ.  க்வீன் விக்டோரியான்னு நீட்டி முழக்கிச் சொல்லச் சோம்பல்பட்டோ என்னவோ  முன்பாதியை வச்சுக்கிட்டுப் பின்பாதியை விட்டுட்டாங்க. காசு கொடுத்த புண்ணியவானை கௌரவிக்கும் விதமா  க்வீன் பார்க் கேட்டுக்கு  அவர் பெயரையே வச்சாங்க.


Invercargill's originalCoat ofArms படம் மேலே!  கலப்பை, மக்காச் சோளம், ஆட்டு ரோமம் இதெல்லாம் உள்ளுர்  விளைச்சலுக்கும் இவைகளை கடல்வழி மூலம் ஏற்றுமதி  செஞ்சதால்  பொருளாதார  நிலை உயர்வுக்கும்  சாட்சியா  டிஸைன் செஞ்சுருக்காங்க.




கண்ணுக்கு முன்னால்  ரெண்டுபக்கமும் மரங்கள் வரிசைக்கு நடுவில் நீளமாப்போகும்  பாதை. இதுக்கு காரனேஷன்  அவென்யூன்னு பெயர்.  ரொம்பதொலைவில்  வட்டமா கட்டுமானம் ஒன்னு தெரியுது.  பாதையின் பாதியில்  இடதுபக்கம் ரோஜாத்தோட்டம்.  வலதுபக்கம் கிளை  பிரிஞ்சு   அங்கே வட்ட அமைப்பும் நடுவில்  ஒரு வெண்கலச்சிலையும்.  வனதேவதன்! அவன் காதில் ஓதும் வனதேவதை.  கிளிக்கினது போதுமுன்னு நேர்பாதையில் நடையைக் கட்டுனால் பேண்ட் ஸ்டேண்டுக்கு வந்துருவோம்.

நல்ல விசாலமான பெரிய வட்டம்தான். கச்சேரி செய்ய யாருமில்லைன்னா... கவலைப்படுவானேன்?  மைக் கூட கையிலெயே இருக்கே:-))))


அடர்ந்த மரங்களும் பரந்த புல்வெளியும் நகரின் சந்தடி(??!!)  கொஞ்சமும் செவிக்கெட்டாத விதத்தில்  ஒரு ஆழ்ந்த அமைதியை மனசுக்குள்ளே கொண்டுவந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய்  பறக்கும் பறவைகளும் அவைகளின் ஒலியும்.  பேரொலியுடன் பறந்த பறவை ஒன்னு தலைக்கு மேலே:--)





வலதுபக்கம் போகும் பாதையில் நடந்தால் கடல் சிங்கங்களும், கழுகும்,  சிங்கங்களும் சூழ நீர்நிலையின் நடுவில் சிறுவனின் ஆட்டம்! குழந்தைகள்  பகுதி.  ஒரு பக்கமாக விளையாட்டுக்கான அத்தனை அம்சங்களும் நிறைஞ்சு வழியுது. பூங்காவின் இந்தப்பகுதியில் இருக்கும் வெங்கலச் சிற்பங்கள் அனைத்தையும்   மாட்சிமை தாங்கிய மஹாராணி இரண்டாம்  எலிஸபெத்தின்  அம்மா (குவீன் மதர்) திறந்து வச்சுருக்காங்க 1966 ஆம் ஆண்டு  நியூஸி வருகையின் போது.


ரசித்துக் கொண்டே அடுத்தபகுதிக்குப்போனால்.... ஹைய்யோ.... மரங்களின் வரிசை. நம்ம பிட் போட்டிக்கு அனுப்பி இருக்கவேண்டியவை!


காக்டெஸ் கன்ஸர்வேட்டரி. ரொம்ப சுமார். எங்க கிறைஸ்ட்சர்ச் பொட்டானிக்கல் கார்டனில் அட்டகாசமாக இருக்கும். இருந்தது. நில நடுக்கத்தின் பின்  அந்தப்பகுதியில் சேதாரம் அதிகமுன்னு சொல்லி மூடி வச்சுருக்காங்க இப்போ:(

அங்கங்கு  மனிதனின் இயற்கை அழைப்புகளுக்கான ஏற்பாடுகள்.!


 விண்ட்டர் கார்டன் பகுதிக்குள் நுழைஞ்சோம்.  அல்லிக்குளம், விசிறி வாழை,  ரப்பர் மரங்கள் இப்படி  அருமையாக இருக்குன்னாலும்.... எங்க ஊர்  தோட்டத்தில் இருக்கும்/இருந்த மாதிரி இல்லை. இதுவும் இப்போ மூடப்பட்டவைகளில் ஒன்னு:(

நம்மூரில் இன்னும் நல்லா இருந்துச்சுல்லேன்னு சொல்லி வாய் மூடலை...கண்ணில் பட்டது  இந்த தகவல். ஆஹா..... இது வேறயா? 1998 வது  வருசத்தில் அமைக்கப்பட்டது.


வாத்துகள் நீந்திக் களிக்கும் ஆற்றின் மேல் இருக்கும் பாலம் கடந்து போனால்..... ஆக்டோபஸ் பெண்  எட்டுக்கைகளாலும் பாறையைப்பிடிச்சுக் கவிழ்ந்து கிடக்கிறாள்! அவளுக்கு என்ன சோகமோ!!!!  இந்தப்பக்கங்களில்  வெண்கலம் மலிவா என்ன? எங்கே பார்த்தாலும் கிண் என்று வெங்கலமே!  நம்மூரா இருந்தா  சிலைகளாவும் பாத்திரங்களாவும் விளக்குகளாவும்  ஜொலிச்சுக் கிடக்குமில்லை?

பஞ்சவர்ணக்கிளிகளும் ,பச்சைக்கிளிகளும் மஞ்சள் கிளிகளும் குருவிகளும் கியா என்னும் நியூஸிப்பறவைகளும் இன்னும் பெயர் தெரியாத சில பறவைகளும்  கம்பிவலை அடிச்ச பெரிய பெரிய  திறந்தவெளி  அறைகளில் இருக்கு. அதுலே ரெண்டு காக்கா கூட பார்த்தேன். அவை  இங்கே வந்த காரணம் கீழே!

 கண்ணாடிக்கூரை போட்ட கன்ஸர்வேட்டரியில்  மாடப்புறாக்கள். கிளிகள் எல்லாம் நம்மைச் சுத்தி இருக்க நாம் செயற்கைப்பாலத்தில் நடந்து போகலாம்.  பறவைகளை க்ளிக்கும்போதெல்லாம் நம்ம கல்பட்டார் நினைவுதான்.

ஜாப்பனீஸ் கார்டன்.  அமைதியான அழகு.  ஆனால் கிட்டே போக முடியாது.  தடுப்புக்கு இந்தப்புறம் இருந்து பார்க்கனும்.  இந்த இன்வெர்கார்கிலுக்கு ,  Kumagaya  (Japan ) நகரோடுள்ள  அக்காதங்கை உறவை உறுதிப்படுத்தி கௌரவிச்சது இப்படி.

கொட்டும் மழையில் குடையோடுள்ள நடையில்  அடுத்த பகுதியான பண்ணைவீட்டுப் புழக்கடை (ஃபார்ம்யார்ட் ) போனால்.....   விதவிதமான கோழிகள்!  கொஞ்சம் தொலைவில்  தகர வீட்டில் இருந்து எட்டிப்பார்க்கும் மயில்!!!



'மழை வந்தால் மயில் ஆடணுமே... நீ ஏண்டா ஆடலை'ன்னு கேட்டேன்.

" அபூர்வமா எப்பவாவது மழை வந்தால் ஆடவேண்டியதுதான். இப்படி வாரக்கணக்கா  அடாத மழைன்னால்....  என்னத்தை ஆடறது?  வேணுமுன்னா நீ ஆடிக்கோ.... ஒரு மாறுதலுக்கு நான் பார்க்கிறேன்.  "

"என்னாப் பேச்சு பேசறேடா மயிலா!!!!!"

உழவு வேலைக்கான மரச்சாமான்கள் கலப்பை, மாட்டுவண்டின்னு இன்னபிற  பண்ணைச் சாமான்களுடன் சில  கொட்டகைகள்.  செயற்கை சேற்றில் உழலும் பன்றிகள்,  சில கங்காரு இனங்கள்  நெருப்புக்கோழிகள் இப்படிப் பலதும்  காட்சிக்கு இருக்கு. நகர்புறக்குழந்தைகள் பார்த்துப் படிச்சுக்க எளிது.


இந்தப்பூங்கா.... 200 ஏக்கர் பரப்பளவு.  எங்கூர் பூங்கா இதைவிட கிட்டத்தட்ட ரெண்டு படங்கு! 397 ஏக்கர். ஆனாலும் இவ்வளவு அழகான சமாச்சாரங்கள் ஒன்னுமே இல்லையே:(  இந்த ஊர் மேயர் ரொம்ப கெட்டிக்காரர்ன்னு பாராட்டாமல் இருக்க முடியலை!

இங்கே(யும்)ஒரு பெரிய லேடி பக்.  பர்ட் மன்றோவையும் வீட்டு வைக்கலை:-)வெண்கலமுன்னு தனியாச் சொல்லணுமா!!!!


18 குழி கோல்ஃப் விளையாட்டுக்கான புல்வெளி. க்ரிக்கெட் ஆட்டத்துக்கான  இடம் இப்படி  பரந்து விரியும் பார்க்கைச் சுற்றிவர ஒரு முழுநாள் தேவைப்படலாம். நமக்கு   ஒன்னரை மணிக்கு எவ்வளவோ அவ்வளவு!   காலில் சுடுகஞ்சி!


டே தெருவில் இருந்து க்வீன்'ஸ் ட்ரைவ் வழியே  வடக்கே போனால்  ஊரில் உள்ள நாலு  பூங்காவனங்களும் நேர் கோட்டில் !

தொடரும்........:-)














21 comments:

said...

பிரமாதம்...

said...

தகர கொட்டகையிலிருந்து எட்டிப்பார்க்கும் மயிலுக்கு தோகையை காணோமே! எப்படி ஆடும்?
நீங்களே மயிலே மயிலே உன் தோகை எங்கே என்று கேட்டுவிட்டீர்கள்.

தோகை இல்லாமல் ஆட வெட்கம் போலும்.
குடை கம்பி மைக் ஆனதே கோபால் சாருக்கு! என்ன பாட்டு பாடினார்?

said...

சுவாரசியமான தகவல்கள். சிறப்பான படங்கள்.

//" அபூர்வமா எப்பவாவது மழை வந்தால் ஆடவேண்டியதுதான். இப்படி வாரக்கணக்கா அடாத மழைன்னால்.... என்னத்தை ஆடறது? வேணுமுன்னா நீ ஆடிக்கோ.... ஒரு மாறுதலுக்கு நான் பார்க்கிறேன். "//

ஹா..ஹா..

said...


'மழை வந்தால் மயில் ஆடணுமே... நீ ஏண்டா ஆடலை'ன்னு கேட்டேன்.

" அபூர்வமா எப்பவாவது மழை வந்தால் ஆடவேண்டியதுதான். இப்படி வாரக்கணக்கா அடாத மழைன்னால்.... என்னத்தை ஆடறது? வேணுமுன்னா நீ ஆடிக்கோ.... ஒரு மாறுதலுக்கு நான் பார்க்கிறேன். "

"என்னாப் பேச்சு பேசறேடா மயிலா!!!!!"
:)))))))))))))))))))))))))))))))))

said...

பஞ்சவர்ணக்கிளிகளும் ,பச்சைக்கிளிகளும் மஞ்சள் கிளிகளும் குருவிகளும் கியா என்னும் நியூஸிப்பறவைகளும் ////இவைகளை எல்லாம் உங்கள் கேமராவுக்குள் சிறைபடுத்தி எங்களிடன் காட்டாமல் விட்டு விட்டீர்களே துளசிம்மா.படங்களும்,வர்ணனையும் அருமையாகா உள்ளது.

said...

பளிச் பளிச் படங்களும் பகிர்வும் அருமை. மயில் அழகு. மைக் மண்டபம் போலவே கப்பன் பார்க்கில் ஒன்று உண்டு. 4 வருடம் முன் முதல் பதிவர் சந்திப்பில் எல்லோரும் மேல்படியில் அமர்ந்து படம் எடுத்துக் கொண்டிருந்தோம். இப்போ சமீபத்தில் பார்க்கையில் அந்த மண்டபம் பராமரிப்பு சரியில்லாமல் பரிதாபமாய் நின்று கொண்டிருந்தது. மரங்கள் போட்டிக்கு நீங்கள் அனுப்பிய படமும் பிரமாதமான ஒன்றே.

said...

என்ன பராமரிப்பு!! இடங்கள் அவ்வளவும் துப்புரவாக இருக்கு.

said...

இந்த படங்களை பார்க்கும்போது அங்கே நான் சென்று வந்தது போல இருந்தது, நன்றி......தொடரட்டும் உங்கள் பயணம் இனிதாக !!

said...

ஊர்ல சண்டை ஏதும் வந்துருச்சா ?.........................................................................ஒரு மனுஷாள கூட காணும்?

said...

நல்ல விசாலமான பெரிய வட்டம்தான். கச்சேரி செய்ய யாருமில்லைன்னா... கவலைப்படுவானேன்? மைக் கூட கையிலெயே இருக்கே:-))))

நல்ல பதிவுக்கச்சேரி ..!

said...

பளிச்ன்னு இருக்கு படங்கள். அதிலும் அந்த மர வரிசை அள்ளிக்கிட்டுப்போகுது.

said...

படங்களைப் பார்க்கும்போதே அங்கே சென்று விட ஆசை வருகிறது டீச்சர்.....

சிறப்பான விளக்கங்கள்.. தொடரட்டும் பயணம்.

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் டீச்சர். இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் இனியதாய் அமைய எல்லாம் வல்லவனைப் பிரார்த்திக்கிறோம்......

வெங்கட்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி.....

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள், மேடம்.

said...

மயிலார் துளசியின் பிறந்தநாள் அன்றுதானாம் ஆடுவாராம் :))) அருமையான இடம். படங்கள் அருமை.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க நலமுடன்.

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், டீச்சர்..
அநியாயத்துக்கு யாரையுமே காணோம்? வந்தா உங்க பிறந்தநாளுக்கு பரிசு குடுக்கணுமேன்னு ஓடிட்டாங்களா?

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் துள்சிக்கா.

said...

மனம் நிறைந்த
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டீச்சர்.

கார்னேஷன் அவென்யூ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மயிலின் அருகில் முட்டைகள் இருக்கின்றனவே....பாதுகாக்கணும்னு ஆடலையோ...:)

said...

வெண்கலச்சிலைகளைப் பார்ப்பதற்கு அழகாயிருக்கிறது நீங்கள் மயிலுடன் மாட்லாடுவது இனிமை

said...

நட்புகளே!

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.மறுநாள் பதில் எழுத வருமுன் துன்பியல் சம்பவம் ஒன்னு நடந்துபோச்சு. எதையும் சிந்திக்கவும் கூட மனம் செயலிழந்து போயிருச்சு.

பதிவுலக நண்பர் ஒருவரின் திடீர் மரணம்:(

உங்கள் கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த இனிய நன்றிகள்.