வருசாவருசம் டிசம்பர் ஒன்னு. குளிரோ மழையோ 'டான்' னு நியூஸி சம்மர் ஆரம்பிச்சுரும். மூணு மாசம் கோடை காலம். டிசம்பர் முழுக்க, வரப்போகும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகள் ஷாப்பிங் பரிசுப்பொருட்கள் இப்படி அநேகமா எல்லோரும் தலையை பிச்சுக்குவாங்க.
சர்ச்சுக்குக் கட்டாயம் போகணும் என்ற நிர்பந்தம் ஒன்னுமில்லை. அவரவர் விருப்பம். ஆனால் இது ஃபேமிலிக்குண்டான விழா. முக்கியமா குடும்பம் முழுசும் கூடியவரையில் ஒன்னா சேர்ந்து பகல் லஞ்சு சாப்பிடணும். முதியோர் இல்லத்தில் இருக்கும் பெற்றோர், மாமனார் மாமியார் எல்லோரும் இன்னிக்கு வீட்டுலே ஆஜர். வேறஎதாவது காரணத்துக்காக மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கும் பிரச்சனை இல்லை. வீட்டுக்கு விடுவாங்க அன்னிக்கு.
மறுநாள் பாக்ஸிங் டே. அரசு விமுறை. அதுக்காக குத்துச்சண்டையெல்லாம் போடமாட்டோம். பழங்காலத்தில் கிறிஸ்மஸ் விருந்து நடந்து முடிஞ்ச மறுநாள் மீந்து போன உணவு வகைகளையும் கேக்கு வகைகளையும் பெரிய அட்டைப்பெட்டிகளில் நிரப்பி ஆதரவற்ற பெரியோர், குழந்தைகள் உள்ள இடங்களுக்கு அனுப்புவாங்களாம். பாக்ஸ் அனுப்புவதால் இது பாக்ஸிங் டே! எங்க நியூஸியில் கிறிஸ்மஸ் அன்னிக்கே சிட்டி மிஷன், விழாக்கொண்டாட முடியாத ஏழ்மையில்(!) இருப்பவர்களுக்கு கிறிஸ்மஸ் லஞ்ச் ஏற்பாடு பண்ணிருது. சமையல், பரிமாறுதல் எல்லாம் வாலண்டியர்களே! அட்டகாசமான விருந்துணவு. பிள்ளைகளுக்கு பரிசுப்பொருட்கள் என்று ஜமாய்ச்சுருவாங்க.
அஞ்சே நாளில் புதுவருசம் வந்துருது பாருங்க. டிசம்பர் முடிஞ்சது.மீதி இருக்கும் கோடை காலத்தை மகிழ்ச்சியாக் கொண்டாடி மனசில் நிரப்பிக்கிட்டால் வரப்போகும் குளிரை சமாளிக்க ஒரு தெம்பு வந்துருதுல்லே? கோடை காலத்துக்குன்னு சில சம்பிரதாயங்கள், சாஸ்த்திரங்கள் சடங்குகள் உலகெங்கும் இருக்கே! பாட்டு, நடனம் நாடகம், ப்ளவர் ஷோ, கோஸ்ட் டு கோஸ்ட் (Coast to Coast) சைக்கிள் போட்டி, ட்ரயத்லான் , பஸ்கர்ஸ் ஃபெஸ்டிவல் இப்படி பலவகைகளை அடுத்துவரும் எட்டு வீக் எண்ட்களில் கொண்டாடி முடிச்சுக்கணும். மார்ச் ஒன்னு முதல் ஆட்டம்! Autumn. இலையுதிர் காலம்.
இந்தக் கொண்டாட்டங்களில் ஒன்னுதான் மணல்கோட்டை போட்டி.
போனவருசம் போட்டியை மழை வந்து கெடுத்துருச்சு. ஆனாலும் ஏற்பாடுகள் என்ற வகையில் அருமை. இதுக்கு மட்டும் கொஞ்சம் தங்கமணல் ! ஆனா...எங்கூரு கடற்கரை கருப்பு மணலால் ஆனது. போகட்டும் போன்னு இருக்கவேண்டியதுதான். நியூஸியின் அதிகாரபூர்வமான கலர் கூட கருப்புதானே!
'சமீபத்தில்' தான் ரக்பி ஆட்டத்தில் உலகக்கோப்பையை நியூஸி ஆல் ப்ளாக் டீம் ஜெயிச்சுருந்ததால் அவுங்களும், நிலநடுக்கம் வந்து நகர் அழிஞ்சுபோன சம்பவம் நடந்து ஒரு வருசம்கூட முடியாததால் அதுவும்தான் மெயின் தீமா பலர் கையாண்டு இருந்தாங்க. நாங்க போறதுக்குள்ளே மழையும் காற்றும் சிதைச்ச மீதிகளைத்தான் க்ளிக்கிட்டு வந்தோம்.
மேலே உள்ள படங்கள் எல்லாம் போனவருசம் எடுத்தவை.
இந்த வருசம் கால நிலை ஓக்கே. வெய்யில் இருந்த தினம்.(சம்மர் பாருங்க!!!)
காத்தாடிகள் பல டிஸைன்களில்.
பயங்கரக்கூட்டம். சொன்னா நம்பமாட்டீங்க! கடற்கரை ஜேஜேன்னு இருக்கு! இந்த வருசம் 30 குழுக்கள் பங்கேற்றாங்க. ஒவ்வொன்னுக்கும் கம்பு நட்டு மூடி போட்ட ஒரு ப்ளாஸ்டிக் வாளி தொங்கவிட்டுருந்தாங்க இந்த முறை. சிற்பம் பிடிச்சுருந்தால் ஓட்டு போடவச்சுருக்கும் ஏற்பாடு. அதிக ஓட்டு கிடைச்சவங்களுக்கு பரிசு உண்டு. ஆனால் பரிசு ஒன்னும் பெருசா இருக்காது. எங்கியாவது ரெஸ்ட்டாரண்டில் ரெண்டு பேருக்கோ இல்லை குழுவுக்கோ சாப்பாடுன்னு இருக்கும். பரிசா நமக்கு முக்கியம்? பெயர் இல்லையோ!!!! ஆனால் ஓட்டுச்சீட்டும் பேனாவும் எங்கே? பீச்சுக்குப்போறவன் பேனாவும் பேப்பருமா கொண்டு போவான்? ஒரு கேமெரா போதாதோ?
பல சிற்பங்கள் ரொம்பவே சுமார் ரகங்கள். எனக்குப்பிடிச்சதுன்னா ரெண்டே ரெண்டுதான்.
குரங்கும் குட்டியும்.
இடிஞ்ச கோவிலில் சிவலிங்கமும்
( அப்படித்தான் நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.! ஆனால் இது டொமட்டோ சாஸ் வரும் பாட்டிலும் பொட்டேட்டோ (ஃபிங்கர்) சிப்ஸுமாம்!!!!)
கெமெராவுக்கு தப்பான லென்ஸைக் கொண்டு போனதால் க்ளோஸ் அப் படங்கள் பல சரியா வரலை. பதிவில் போட மகள் எடுத்த படங்களை இரவல் வாங்கினேன்!
இந்த வருசம் முதலிடம் பெற்ற மணல் சிற்பம் இது. Taniwha என்று மவொரி கதைகளில் வரும் கடல் மிருகம்!
ஆமாம்.....மணல் கோட்டை ( சேண்ட் காஸில்) போட்டின்னுட்டு மணல் சிற்பம் செஞ்சால் எப்படி? பொருட்குற்றம் வந்துருக்கோ!!!!
பார்த்து முடிச்சுட்டு எதிரில் இருக்கும் ஓப்பன் மாலுக்கு வந்தால் மார்கெட் டே! நம்ம ஹரே க்ருஷ்ணா ஆட்கள் இலவச உணவு கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அங்கே சாப்பிடணுமுன்னா தட்டு. டேக் அவே கொண்டு போகணுமுன்னா அழகான பாலிஸ்டைரீன் பேக். கோவிலே இடிஞ்சு விழுந்து அதைத் திருப்பிக்கட்ட நிதிக்காக ஒரு பக்கம் தவிச்சுக்கிட்டு இருந்தாலும் அன்னதானத்தை நிறுத்தலை பாருங்க! நல்லா இருக்கட்டும்!
32 comments:
நல்லா இருக்கு.
என்னே கைவண்ணம்...!
அத்தனை சிற்பங்களும் அழகு. வடித்த கைகளுக்குப் பாராட்டுகள்!படம் எடுத்த கைகளுக்கும்:)! இளம்பச்சை ஆக்டபஸ் காத்தாடி அசத்தல். பகிர்வுக்கு நன்றி.
அழகழகு சிற்பங்கள்ளை கண்களை கவரும் விதமாக படம் எடுத்து பகிர்ந்து பரவசப்படுத்திவிட்டீர்கள்.
உடனே மணலுக்குப் போய்க் கோட்டை கட்ட ஆசை வருதே!!
பட்சிக் காற்றாடி அருமை.
கஷ்டப்பட்டு செய்து இருக்காங்க இல்ல. அதுக்காக வங்க எல்லாருக்குமே பரிசு கொடுத்திடலாம்.
எங்க ஊர்ல டொனேஷன் கேக்கறாங்க. உங்க ஊர்ல அன்ன தானம் செய்யறாங்க. HMMM.
படங்கள் அனைத்தும் மிக அழகு.
//.எங்கூரு கடற்கரை கருப்பு மணலால் ஆனது. போகட்டும் போன்னு இருக்கவேண்டியதுதான். நியூஸியின் அதிகாரபூர்வமான கலர் கூட கருப்புதானே!//
கருப்பே அழகு, காந்தலே ருசி என்று சொல்வதில்லையா?? கருப்பும் அழகுதான்.
பரிசு பெற்ற சிற்பம் மிக சிறப்பு. அந்த மிருகத்தின் உடலில் காணப்படும் செதில் போன்ற பகுதிகள் அழகாக செய்துள்ளார்கள்.
ஆஹா மணல் கோட்டை ரொம்ப நல்லாருக்கு!
நல்லாத்தான் இருக்கு..............?
நான் நிறைய மன(ல்)க் கோட்டை கட்டியிருக்கேன்...!!
அருமையான மணல் சிற்பங்கள். செஞ்சவங்களுக்கு நிச்சயம் நிறைய பொறுமை தேவைப்பட்டிருக்கும்...பாராட்டுகள். படம் எடுத்தவர்களுக்கும் பாராட்டுகள்.
காத்தாடி அழகாக இருந்தது. உடைந்த கோவிலும் லிங்கமும், சாஸும் பிங்கர் சிப்ஸும்....ஹா...ஹா..ஹா...
ஆனால் இது டொமட்டோ சாஸ் வரும் பாட்டிலும் பொட்டேட்டோ (ஃபிங்கர்) சிப்ஸுமாம்!!!!)//
இதுதான் பொருத்தமா இருக்கு :/}}
அங்கயும் ஓசி சாப்பாடுன்னா க்யூதான் போல.
மலேஷியாவுல சைனீஸ் புதுவருசம் ரொம்ப நல்லா கலர்ஃபுல்லா இருந்தது. காமரதான் கொண்டு போகலை.
காத்தாடி,மணல் சிற்பங்கள எல்லாமே நன்றாக இருக்கின்றது.
இங்கும் விருந்தா :))) அருமை.
மணல் சிற்பங்கள் அனைத்துமே அருமை.....
சிறப்பான கொண்டாட்டங்கள் தான்!
//இது டொமட்டோ சாஸ் வரும் பாட்டிலும் பொட்டேட்டோ (ஃபிங்கர்) சிப்ஸுமாம்!!//
"சிந்தையில் நினைத்தால் வந்து நிற்பான் சிவனே"ன்னு மணலிக்கோட்டைச் சாமியார் மண்ணாறு.. ச்சே.. மன்னாரு, அன்றே உரைத்திருக்கிறார் துள்சிக்கா :-))
காத்தாடி... ஆத்தாடி!! அழகாருக்கு.
மணல் கோட்டை
மனம் கவர்ந்தது ...
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
ரசிப்புக்கு நன்றி.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
அதே அதே!!!!!
வாங்க ராமலக்ஷ்மி.
மகள் கைகளோடு என் கைகளையும் பாராடியதற்கு நன்றிகள்:-))))
வாங்க ஸாதிகா.
பெருமையில் முக்கால்வாசி மகளுக்கு!!!!
தேங்ஸ்ப்பா.
வாங்க வல்லி.
ரெண்டு வாரம் முன் கைட் ஃபெஸ்டிவல் இருந்துச்சுப்பா. எனக்குத்தான் போக முடியலை. அதிலும் இன்னும் விதவிதமான பட்டங்களைப் பற்றவிட்டார்கள். உள்ளுர் தினசரியில் படம் பார்த்தேன்.
சின்னப்புள்ளைகளுக்கான பொம்மை மற்ற விளையாட்டுப்பொருட்கள் பகுதியில் மணலில் விளையாடன்னே சின்னதா ஸ்பேடு, பக்கெட் எல்லாம் செட்டா விக்கறாங்க. கோட்டை கட்ட தனி டிஸைன் உண்டு. அந்த பக்கெட்டில் ஈரமணலைப்போட்டு அமுக்கிட்டு கவிழ்த்தால் ...டடா..... கோட்டை வந்தாச்:-)
வாங்க ரமா ரவி.
உண்மைதான்ப்பா.... செதிளை செதுக்கவே நிறைய நேரமாகி இருக்கும்! மேலும் இது மவொரி சமாச்சாரம் என்பதால் மதிப்பு(ம்) கூடுதலே:-)))
ரசனைக்கு நன்றிகள்.
வாங்க உஷா.
முதல் வருகை போல இருக்கே!!!!!
வணக்கம். நலமா?
அடிக்கடி வந்து போங்க உஷா.
நீங்க(ளும்) டீச்சரா?????
வாங்க நான்.
ரசிப்புக்கு நன்றி.
வாங்க வக்கீலைய்யா.
மனக்கோட்டைக்கென்ன பஞ்சம். நான் கட்டாததா:-)))))
வாங்க ரோஷ்ணியம்மா.
ஒரு ஈவண்ட்டுன்னா கஷ்டம் பார்த்தால்முடியுமோ!!!!!
காலையில் ஆரம்பிச்சு பகல் 12 மணிக்கு முடிச்சுட்டாங்களாம். சிலதெல்லாம் 6மணி நேரம் எடுத்ததாம்.
ரசிப்புக்கு நன்றிகள்ப்பா. மகளிடம் சொன்னேன்.மகிழ்ந்தாள்.
கம்போடியா பயணத்தில் பார்த்த இடிஞ்ச கோவில்கள் மனசின் அடித்தளத்தில் தங்கிருச்சு போல!!!!
வாங்க டிபிஆர் ஜோ.
இன்னிக்கு மாலைதான் இங்கே நம்மூரில் சைனீஸ் புதுவருச விழா நடக்கப் போகுது. நானும் கேமெராவும் கையுமா கிளம்பிட்டே இருக்கேன்.
சீனர்களின் ஒற்றுமை உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதொன்றுதான்.
சாப்பாடுன்னு இல்லை இங்கே எல்லாத்துக்கும் க்யூ தான். நாலு பேர் கூட்டம் என்றாலும் கூட:-))))
வாங்க மாதேவி.
ரசிப்புக்கு நன்றிப்பா.
பேசாம நானும் ஒரு டேக் அவே வாங்கியாந்துருக்கலாம் இல்லே?
ராத்திரி சமையல் வேலை மிச்சமாகி இருக்கும்:-))))
வாங்க வெங்கட்.
விட்டதைப்பிடிக்கணுமுன்னு இதோ இன்னும் மூணு வார இறுதிகள் கொண்ட்டங்களே!!!!
ரசனைக்கு நன்றிகள்.
வாங்க அமைதிச்சாரல்.
கடைசிவரை சிவன் என்றுதான் நினைச்சேன்ப்பா!!!! மகளைக் கேட்டுருந்தால் 'உண்மை'சொல்லி இருப்பாள்.
அப்புறம் உள்ளுர் பத்திரிகையில் பார்த்தால் அது சிவனில்லை:(
வாங்க இராஜராஜேஸ்வரி.
ரசிப்புக்கு நன்றிப்பா!
டீச்சர், ஒங்க வலைப்பூவில் ஓப்பன் ஐடி வெச்சு கமெண்ட் போடமுடியல. :( நான் இப்ப வேர்டுபிரஸ்தான் பயன்படுத்துறேன். கொஞ்சம் ஓப்பன் ஐடிகளையும் அனுமதியுங்களேன். கமெண்ட் மாடரேஷன் இருக்குதுல்ல. இது ஒரு வேண்டுகோள்தான். உங்க வசதிப்படி செய்யுங்க :)
பழைய வலைப்பூ ஆட்களான வல்லியம்மா டி.பி.ஆர்.ஜோசப் சாரெல்லாம் வந்திருக்காங்க போல. ரொம்ப மகிழ்ச்சி. ரெண்டு பேருக்கும் வணக்கம். :)
மணற்சிற்பங்கள் நல்ல முயற்சி. நீங்களும் சிவலிங்கம்னு சொன்னதும் நம்பிட்டேன். அப்பிடியிருந்தது. ஆனா டொமோட்டோ கெட்சப் பாட்டில் தக்காளி வடிவத்தில் என்று சொன்னதும் அதை ரசித்தேன்.
வாங்க ஜீரா.
ஒருசமயம் பட்ட கஷ்டத்துலேதான் ஓப்பன் ஐடி ஒன்னும் வச்சுக்கலை.
இப்ப இதுவே பழகிப்போச்சு. அதான்.....
கமெண்ட் மாடரேஷன் இருந்தாலும் கண்டதெல்லாம் கண்ணில் படும்படி ஆகிருதே:(
பழைய மக்கள்ஸ் வரும்போது மகிழ்ச்சி கூடுதல் என்பது உண்மை.
ரசிப்புக்கு நன்றி.
Post a Comment