மக்கள்ஸ், பயணக்கட்டுரைகளுக்கு நடுவே கொஞ்சம் உள்ளூர் சமாச்சாரத்தைச் சொல்லிக்கறேனே ப்ளீஸ்.........
நிலநடுக்கம் வந்து நகரமே அழிஞ்சு போன நிலையில் ஊரையே புதுப்பிச்சுக் கட்டும் அவசர நிலமையில் கிடக்கோம். நாங்களும் இந்தியாவில் இருந்து மீண்டும் வந்து இப்போ சரியா ஒரு வருசமும் ஒரு வாரமும் ஆகி இருக்கு.
புதுப்பிக்கும் முயற்சியில் அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்குதுன்னு இங்கே வந்தவுடனே பதிவு செஞ்சு வச்சுருந்தேனே. பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். ( நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குதோ? )
எல்லார்கிட்டேயும் ஐடியாக்களைக்கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட சிட்டிக் கவுன்ஸில் அவுங்க பணியாளர்களையும் நிபுணர்களையும் வச்சு ஒரு திட்டம் தீட்டி(??) புதிய நகரின் ப்ளூ ப்ரிண்ட் வெளியீடு போனவாரம் நடந்தது. பிரதமர் வந்து வெளியிட்டுத் திட்டத்தைத் துவக்கி வச்சார்.
இன்னும் குறைஞ்சது 10 வருசங்கள் ஆகுமாம். நகரின் பல இடங்களில் இப்போ பொட்டல் காடு. லொட்டுலொட்டுன்னு இடிச்சுத் தள்ளிக்கிட்டே இருக்காங்க. ஊர் முச்சூடும் க்ரேன்களே!
இதுக்கிடையில் ரேடியோ நெட்வொர்க் நியூஸ்டாக் கட்டிடத்தைச் சுத்தி இருக்கும் கட்டிடங்கள் எல்லாம் போய் இப்போ அந்த இடம் க்ளியர் பண்ண வேண்டிய நிலை. இத்தனைக்கும் இந்தக் கட்டிடம் 1986 லே கட்டப்பட்டதுதான். போன வருசம் வந்த 6.3 இதை விட்டு வைக்கலை. வயசு வெறும் 25!
குண்டு வச்சுத் தகர்த்துடலாமே எதுக்கு இப்படி இவ்வளோ நாளெடுத்து இடிச்சுக்கிட்டு இருக்காங்கன்னு நாங்க பேசிக்குவோம். எப்படியோ இது முக்கியப்பட்டவர்கள் காதுலே விழுந்திருச்சு!!!!
இந்த நாட்டின் சரித்திரத்தில் முதல்முதலா இப்படி இடிக்கப்போறோமுன்னு ரெண்டு மூணு மாசமா ஊதிக்கிட்டே இருந்தாங்க. ஒரு பொத்தானை அமுக்குனதும் பொலபொலன்னு இடிஞ்சு விழுந்துரும் இல்லே? எத்தனை படத்துலே பார்த்துருக்கோம்!
நியூஸி சரித்திரமுன்னு பார்த்தால் சமூகத்துக்கு எதாவது புது விஷயம் வருதுன்னா அதை எங்க ஊரான கிறைஸ்ட்சர்ச்சுலேதான் முதலில் அமுல்படுத்துவாங்க. ஏன்? இதுதான் வெள்ளைக்காரர் முதல்முதலா நியூஸிப் பயணத்துலே வந்து இறங்கிய இடம். மெயின்லேண்ட்!!
அதுக்கேத்தமாதிரி நிலநடுக்கத்தால் ஒரு முழு நகர மையமும் இடிஞ்சு விழுந்தததும் இந்த மெயின்லேண்டுலேதான்:(
யார் அந்தப் பொத்தானை அமுக்கப் போறது? அப்படிப்பட்ட வி ஐ பி யார்? வம்பு வேணாம். பேசாம ஏலத்துலே விடலாம் யார் அதிகக்காசுக்கு ஏலம் கேக்கறாங்களோ அவுங்க அமுக்கட்டும். ஏலத்தொகையை நகர நிர்மாண நிதியில் சேர்த்தால் ஆச்சு. நல்ல ஐடியா இல்லே? ஒரே கல்லில் ரெண்டு மாம்பழம். (எனக்கு மாங்காய் அவ்வளவாப் பிடிக்காது)
ட்ரேட் மீலே ( Trade Me) எட்டு டிமாலிஷன் கம்பெனிகளால் ஏலத்தொகை உயர்ந்துக்கிட்டே போய் 26 ஆயிரத்துக்கு வந்து நின்னுச்சு. ஏலம் எடுத்தவங்க சொன்னாங்க.... நாங்க பொத்தானை அமுக்க மாட்டோம். எங்க சார்பில் ஒரு சின்னப்புள்ளே இதைச் செய்யப்போகுதுன்னு!
புற்றுநோய் காரணம் ரொம்பவே உடம்பு சரி இல்லாமல் இருக்கும் 6 வயசுப்பையன் Jayden Halliwell, பொத்தானை அமுக்கப்போறார்.Child Cancer Foundation இவரைத் தெரிவு செஞ்சுருக்கு. லைஃப் டைம் ஆப்பர்ச்சூனிட்டி.
நகர நிர்மாணத்தில் பாரம்பரியக் கட்டிடங்களுக்கான நிதிக்கு எவ்வளோ பணம் யார் கொடுத்தாலுமே நியூஸி அரசு அதே அளவுக் காசை டாலர் ஃபார் டாலர் தரேன்னு வாக்குக் கொடுத்துருப்பதால் இன்னொரு 26 ஆயிரம் வரவுன்னு வச்சுக்கலாம். (எத்தனை பில்லியன் கொடுத்தாலுமே சரித்திரச் சம்பந்தமுள்ள அந்தப் பாரம்பரியக் கட்டிடங்கள் போல இப்ப ஒன்னு கட்ட முடியுமான்ற ஏக்கம் ..... ஹூம்ம்.... )
நாள் குறிச்சாங்க. ஆகஸ்ட் 5 ஞாயிறு. எங்கூர் மக்கள் இனி எங்கே பார்க்கப்போறோமுன்னு ரெண்டு வாரமா இந்தக் கட்டிடத்தைப் பார்க்கப் படையெடுப்புதான். அதிலும் நேத்து (ஆகஸ்ட் 4) இனி போனா வராதுன்ற கடைசி நாள். நாங்களும் ஓடுனோம். கடும்பனி காலமாக இருந்தாலும் நகரத்துக்குள்ளே எப்பப்போனாலும் இடிபாடுகளைப் பார்த்துக்கிட்டும் படங்கள் எடுத்துக்கும் இருக்கும் மக்கள் பலரை குறைஞ்சது ஏழெட்டுப்பேரைப் பார்ப்பது கேரண்டீ! (நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க!)
'மனசு கேக்காமத்தான் எல்லோரும் சான்ஸ் கிடைச்சால் ஓடி வந்து பார்க்கறாங்க. இப்போ நாம் வரலையா?' கோபால் சொல்வார்.
14 மாடிக்கட்டிடம். இந்த எண்ணிக்கை எப்பவும் நம்ம எல் ஐ சி யை நினைவுபடுத்தும். அந்தக் காலத்துலே மொத்த தமிழ்நாட்டுக்கும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு எல்லோரையும் கழுத்து வலிக்கத் தலையை உசத்திப் பார்க்க வச்ச கட்டிடம். சினிமாவில் கூட சென்னைன்னு காமிக்க (முந்தி செண்ட்ரல் ஸ்டேஷனைக் காட்டுவதை விட்டுட்டு ) எல் ஐ சி. பில்டிங்கைக் காமிப்பாங்க.
Mark Loizeaux என்ற நிபுணர் ( President Controlled Demolition Inc CDI அமெரிக்காவிலிருந்து இதுக்காகவே வந்துருந்தார். கட்டிடத்தைப் பரிசோதிச்சுப் பார்த்துட்டு பயங்கர ஸ்ட்ராங்கா கட்டி இருக்கீங்க. எப்படிப்பட்ட நிலநடுக்கத்துக்கும் ஈடு கொடுக்கும்படியான ரீ இன்ஃபோர்ஸிங். நாங்க ரொம்ப ப்ளான் பண்ணிக்கணும்ன்னு சொல்லி இருக்கார்!!! ஆனாலும் இது எப்படி ஆபத்தான கட்டிடமுன்னு பெயர் வாங்குச்சுன்னு தெரியலையே:(
இடிக்க ஆகும் செலவு ஒரு மில்லியன்! இதை இன்ஷூரன்ஸ் கம்பெனி தருது.
எங்கூர் மக்களின் ஆர்வத்தைபற்றி உள்ளூர் காவல்துறை நிபுணர்களுக்குத் தெரியாதா என்ன? யாரும் வர்றவேலை வச்சுக்காதீங்க. கட்டிடத்தைச் சுத்திவர இருக்கும் ரெண்டு தெருக்கள் வரை யாரையும் அனுபதிக்கமாட்டோம். பலத்த காவல் போட்டுருவோம்.
உனக்கென்ன இடிஞ்சு விழுவதைப் பார்க்கணும். அம்புட்டுதானே? பேசாம வீட்டோடு கிட. நாங்களே அது இடிஞ்சு விழும் அழகை வலை மூலமா லைவா காமிக்கப்போறோம். டிவி நியூஸி சைட்லேயும் வீடியோவாப் போடப்போறோம். அப்போ பார்த்து மகிழ்ந்துக்கோ. எதுன்னாலும் காலை எட்டு மணிக்கு முடிஞ்சுரும்னு தகவல்.
அப்படியும் நிறையப்பேர் அந்த ரெண்டாந்தெருவரை போய் கூடி இருந்தாங்க. குழந்தை பொத்தானை அமுக்கியதும் ஆறே விநாடிகளில் முழங்காலை மடிச்சமாதிரி சரிஞ்சு விழுந்துச்சு கட்டிடம். கைதட்டல் ஒலிகளும் காங்க்ரீட் பொடியால் கிளம்பின புகை மண்டலமும் ஒருசேரக் கிளம்புச்சு.
மொத்தம் 63 கிலோ வெடி மருந்து. அங்கங்கே துளைகள் போட்டு மருந்தை ரொப்பி இருக்காங்க. புகை அடங்கவே அஞ்சு நிமிசம்போல ஆச்சுன்னு நானும் வீடியோவில்தான் பார்த்தேன். கோபால் மட்டும் லைவா காமிச்சதைப் பார்த்துட்டு இடிச்சுட்டாங்கம்மான்னு சொன்னார்.
இடிக்குமுன் தொலைகாட்சி செய்தியில். Jayden க்கு என்ன செய்யணுமுன்னு சொல்றாங்க.
இடிஞ்சபோது வீடியோ!
அதுக்குப்பிறகு எங்க நியூஸி டிவியிலே பலமுறை போட்டுக் காமிச்சுட்டாங்க. செய்தி அறிக்கைகளிலும் இதுதான் தலைப்புச் செய்தி. ஒலிம்பிக் இருக்கட்டும் ஒரு மூலையில் இப்போதைக்கு!
பை த வே எங்களுக்கு இதுவரை ஏழு ( 3 தங்கம், 4 வெங்கலம்) கிடைச்சுருச்சு.
நாங்களும் பகல் சாப்பாடுக்குப்பிறகு கிளம்பிப்போனோம். நேத்து கம்பீரமா நின்னது இன்னிக்குப் பரிதாபமா கீழே விழுந்து கிடக்கு. வெறும் காங்க்ரீட் தூளா இடிபாடுகள் கிடக்கும். சட்னு வாரிப்போட்டுருவாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால்..... இரும்புத்தூண்களும் கம்பிகளுமா ஒரே மெஸ்ஸியாக் கிடக்கு.
எல்லாத்தையும் அள்ளிப்போட்டு இடத்தைக் காலி செய்வது ஒரு கடினமான காரியமாகத்தான் இருக்கப்போகுது. அதுக்கு எத்தனை நாள் செல்லுமோ!
புள்ளையும் குட்டியும் செல்லங்களுமா வயசு வித்தியாசம் இல்லாம மக்கள்ஸ் வந்து பார்த்துக்கிட்டுப் போறாங்க.
'ரொம்ப நீட் ஜாப். இனிமேல்பட்டு இடிக்கவேண்டியவைகளை இப்படியே இடிச்சுக்கலாமு'ன்னு பெருந்தலைகள் சொல்லுதாம்!

28 comments:
நான் முதல் போணியா!
நல்லாத்தானே இருக்குது?ஏன் 25 வருடம் கெடு வச்சாங்க?
நல்ல (கெட்ட)ஒரு அனுபவத்தை விவரித்தீங்க.சிறுகதை போல இருந்தது சகோதரி.
பதிவிற்கு நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
வாங்க ராஜ நடராஜன்.
முதல் போணி நீங்கதான். பின்னூட்டம் வாங்கற தங்கக் கையால் ஆரம்பிச்சு வச்சுருக்கீங்க:-)
பின்னூட்டத்துக்குப் பின்னூட்ட இடுகை, அதுக்கொரு பின்னூட்ட இடுகைன்னு உங்க பதிவு போய்க்கிட்டே இருக்கப்போகுது. நீங்க ஆரம்பிச்சு வச்ச சமாச்சாரம் அப்படி!!!!
பார்க்க நல்லாத்தான் ஒரு சின்னப்பழுதும் இல்லாம நிக்குது. ஆனால் உள்ளே நிறைய டேமேஜ்ன்னு நிபுணர்கள் சொல்றாங்க.
போன 2011 ஃபிப்ரவரி நிலநடுக்கத்தால் நகரத்தில் பாதி அழிஞ்சு போச்சு எங்க ஊருலே! நகர மையப்பகுதி சிட்டி செண்டர் முழுசும் காலி:(
தெரிஞ்சுருக்குமுன்னு நினைச்சேன்.
கட்டிடம் சரிவதைப் போல
சாதாரண்மாக எடுத்துக் கொள்ள்முடியவில்லை
நீங்கள் படங்களுடன் சொல்லிப்போனவிதம்
ஒரு சாம்ராஜ்ஜியத்தின் சரிவைத்தான்
நினைவுபடுத்திப்போனதுஇந்தக் கட்ட்டிட
நினைவும் சில நாட்களில் ஜீரணிக்கப்பட்டுவிடும்
வேறு வழி ?
வாங்க வேதா.
எல்லா அனுபவமும் கிடைக்கட்டும்.நல்லா அனுபவின்னு அந்த ஆண்டவன் எழுதி அனுப்பிட்டான் என் தலையில்!
ஆக்கம் பார்த்தால் இருக்கும் ஆனந்தம் அழிவு பார்க்கும்போது இருப்பதில்லை:(
வருகைக்கு நன்றிகள்.
வாங்க ரமணி.
கண் முன்னே ஒரு நகரம் அழிவதைப் பார்ப்பது கொடுமை!
நியூஸியின் புத்தம் புதிய நகரமாக எங்க ஊர் இருக்கப்போகுதுன்னு என்னதான் சமாதானம் செஞ்சுக்கிட்டாலும், 25 வருசமா வசிக்கும் ஊர் மனசோடு ரெண்டறக் கலந்து போச்சு என்பதே உண்மை.
வருகைக்கு நன்றிகள்.
நாங்களும் தொலைக்காட்சியில் காட்டும்போது பார்த்துத் தெரிஞ்சுகிட்டோம். கண்முன் ஒரு கட்டடம் இடிந்துவிழுவதைப் பார்க்க கஷ்டமாதான் இருக்கு. எப்படியெல்லாம் பார்த்துப் பார்த்துக் கட்டியிருப்பாங்க! எந்த விஷயத்தை எடுத்தாலும் தெளிவா அழகா சொல்லி புரியவச்சிடறீங்க. பாராட்டுகள் மேடம்.
கட்டிடம் கட்டி முடிக்க எத்தனை பாடுபட்டிருப்பார்கள். நிறைய மக்களின் உழைப்பு, நேரம் இவையெல்லாமே ஒரு சில நிமிடங்களில் அழிந்து விட்டதே... வருத்தம் தான்.
வெளியே பார்க்க நன்றாக இருந்தாலும், உள்ளே நிறைய பிரச்சனைகள் என்று சொல்லியிருப்பதால் மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.
6 வயசுக் குழந்தைக்குக் கேன்சரா! என்ன கொடிய கடவுள்!
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஆஸ்பித்திருக்குப் போயிருந்தென். அங்க பாத்தா அப்பா, அம்மா (35-36வயசிருக்கும்) நண்டும் சிண்டுமா மூனு பசங்க. எல்லாரும் மொட்டை போட்டிருந்தாங்க. என்னடான்னு உத்துப் பாத்தப்புறந்தான் தெரிஞ்சது, அந்த நண்டுகள்ள ஒரு நண்டுக்குக் கேன்சர்னு. அவர் தலைக்கும் மத்தவங்க தலைக்கும் வேறுபாடு தெரிஞ்சது. பாத்ததுமே மனசுக்குக் கஷ்டமாயிருச்சு. கும்பிட்டாலும் திட்டினாலும் நமக்கு முருகன் தானே. கொஞ்சம் ஆச தீர வஞ்சுட்டேன். கடவுள்னா அர்ச்சனை செய்யனுமாமே. அதான் நல்லா அர்ச்சனை பண்ணியாச்சு.
ஒரு கட்டிடத்த இடிக்குறதுக்கு இந்தப் பாடான்னு கேக்கலாம்னுதான் தோணுச்சு. நம்மூர்ல நாளைக்கு நாலு கட்டிடம் இடிக்குறாங்க. நூறு கட்டிடம் கட்டுறாங்க. பழைய வீடுகளை வாங்குறதும், இடிக்கிறதும், அங்க அப்பார்ட்மெண்டுகளைக் கட்டுறதும்னு தீயா நடந்துக்கிட்டிருக்கு.
ஆனா எல்.ஐ.சி கட்டிடத்தை இடிக்கிறாங்கன்னா நம்மாளுங்க கண்டிப்பாப் போய்ப் பாப்பாங்க. சுனாமி வருதான்னு ஆண்களும் பெண்களும் போய் எட்டிப் பாத்த எத்தர் கூட்டம் நம்ம கூட்டம் :)
அச்ச்சோ.....பாவம்....
இடிப்பதையும் அழகாக எழுத பாட்டியினால் மட்டுமே முடியும்.................
ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை,.. அழிக்கிறவனுக்கு ஒரு நாள் வேலைன்னு நம்மூர்ல சொல்லுவாங்க.. அதான் ஞாபகம் வருது :-(
படங்களைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கின்றது என்ன செய்வது பூமித்தாய் ஆட்டிவிட்டதே.
தொலைக் காட்சியிலும் இடிக்கும்போது எடுத்த படம் பார்த்தேன்.
நேத்து இங்கே செய்திகளில் இந்த வீடியோ பார்த்தோம்.
மேடம் உங்கள் புக் பற்றி பேசியது இன்று மக்கள் டிவியில் வெளியாகி விட்டது; உங்கள் பூனைகள் போட்டோ அனுப்பியும் அவர்கள் அவற்றை காட்டலை. இணையத்தில் இருந்து எடுத்த பூனைகளே காட்டி விட்டனர்
வருத்தப்படும் சம்பவம்...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
வாங்க பழனி.கந்தசாமி ஐயா.
வருகைக்கு நன்றி.
வாங்க கீதமஞ்சரி.
இதுவாச்சும் மாடர்ன் கட்டிடம். இதைப்போல மீண்டும் கட்ட முடியும். ஆனால்.... சரித்திர முக்கியத்வம் உள்ள கலையழகு மிகுந்த கட்டிடங்கள் இடிஞ்சுபோனதுதான் இன்னும் மனசை வலிக்கச் செய்யுது:( ப்ச்.....
பாராட்டுகளுக்கு நன்றிகள்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
எங்க சிட்டிக்கவுன்ஸிலும் எர்த்க்வேக் கமிஷனும் தேவைக்கு அதிகமாகவே பயந்து போயிட்டாங்க.
ஒரு கட்டிடம் (சி டி வி பில்டிங்) இடிஞ்சு 115 பேர் பலியானவுடன், சின்ன ரிப்பேர் இருந்தாலும் எதுக்கு வம்புன்னு இடிச்சுத் தள்ளுறாங்களோன்னு சம்ஸயம்:(
இப்ப 115 பேருக்கு பதில் சொல்லுன்னு அந்தக் கட்டிடம் கட்டுனதில் வேலை செஞ்ச எல்லாரையும் தனிநீதிமண்றம் காய்ச்சிக்கிட்டு இருக்கு.
வழக்கு முடியட்டுமுன்னு இருக்கோம். அப்ப அதைப்பற்றிப் பேசலாம்.
வாங்க ஜீரா.
குழந்தை டெர்மினலி இல்:( கிட்னி கேன்ஸராம்:(
கடவுளுக்கு இப்பெல்லாம் வேடிக்கையும் விளையாட்டும் அதிகமாப்போச்சு:(
வாங்க நான்.
இடிச்சுட்டுக் கட்டப்போவதையும் ஒருநாள் எழுதப்போறேன் ஆமா:-)
வாங்க அமைதிச்சாரல்.
40 விநாடி பூமி ஆடுனதுலே ஊரே காணாமப் போயிருச்சேப்பா:(
அதாலே வந்த வினைதானே இதெல்லாம்..... என்னன்னு சொல்லி அழ?
வாங்க மாதேவி.
ஊரைப் பார்க்கப்பார்க்க வயித்துக்குள்ளே ஒரு சங்கடம்தான்:(
இடிபாடுகளுக்கிடையில் முளைச்சு பூத்திருக்கும் செடிகள் நமக்கு நிறைய பாடம் சொல்லுது!
வாங்க மோகன் குமார்.
காலை வணக்கத்தில் நீங்கள் பேசியதைப் பார்த்தேன். நல்ல இயல்பான பேச்சு நடை. நம்ம கோகி இப்ப டிவி ஸ்டார்ன்னு கொஞ்சம் பெருமை வந்துருச்சு எங்களுக்கு.
அனைத்துக்கும் நன்றிகள்.
வாங்க தனபாலன்.
வருகைக்கு நன்றிகள்.
உங்க இடுகை அருமை!!!!
உங்க ஊரு டிவி'ல மட்டுமில்லை, ஆசியப் பகுதியின் எல்லா டிவிலயும் காட்டிட்டாங்க..
ஆனாலும் இந்த கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு நுட்பம் வந்துச்சோ இல்லையோ,எம்மாம் பெரிய கட்டடமுன்னாலும் பட் படார்னு இடிச்சு அள்ளிடறாங்க..
ஆனாலும் மனித எத்தனமும் நேரமும் நிறையக் குறையுது இல்லையா?
தொழில் நுட்பத்தின் சாதக அம்சங்களை வேகமாகப் பயன்படுத்தும் நாடுகள்தான் மக்கள் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்துறாங்கன்னு எனக்குத் தோனுது..
ஆக்கம் பார்த்தால் இருக்கும் ஆனந்தம் அழிவு பார்க்கும்போது இருப்பதில்லை:
வாங்க அறிவன்.
நலமா? இங்கே உங்களைப் பார்த்து நாளாச்சே!
// உங்க ஊரு டிவி'ல மட்டுமில்லை, ஆசியப் பகுதியின் எல்லா டிவிலயும் காட்டிட்டாங்க.//
அட!!!
அண்டை நாட்டுலே காமிப்பாங்கன்னு நினைச்சேன். ஆசிய நாடுகள் முழுசும் காமிச்சாங்களா!!
மக்கள் நலனைக் கவனிக்கும் அரசு, இங்கே இருப்பது உண்மைதான். இல்லாட்டா.... கொஞ்சம் நல்லா இருக்கும் கட்டிடங்களைக்கூட எதாவது ஆபத்து வந்து இடிஞ்சு, மனித உயிர்கள் போயிருமோன்னு பயந்துக்கிட்டு ......
நகரத்தையே சமதளமாக்கி புதுசா நிர்மாணிக்கப்போறாங்க.
வாங்க இராஜராஜேஸ்வரி.
உண்மைதான். பிறப்புலே இருக்கும் மகிழ்வு இறப்பில் இல்லையே:(
வருகைக்கு நன்றிகள்.
Post a Comment