Monday, August 13, 2012

கிருஷ்ணார்ப்பணம் 1

எதா இருந்தாலும் வீக் எண்டுக்குன்னு நேர்ந்து விட்டுருவோம். இதுலே ஒன்னே ஒன்னு மட்டும் அடங்காது.  'அவுங்க ' சனி ஞாயிறு வேலை செய்ய மாட்டாங்க. அச்சானியமா இருக்குன்னு நினைச்சுக்குவீங்கன்னுதான் பெயரைச் சொல்லலை:-)

 இந்த வீக் எண்டுக்கு ரெண்டு ஈவெண்ட். 

1. இந்திய சுதந்திர தின விழா.

 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு டின்னரோடு ஆரம்பிச்சது. பூரி, சாதம், உருளைக்கிழங்கு கறி, பீன்ஸ் கூட்டு,  ரெய்த்தா, அப்பளம். ஊறுகாய், கேசரி, காஃபி, டீ, குளிர் பானங்கள் இப்படி ஒரு மெனு. உள்ளூர் ஸ்வாமி நாராயண் கோவில் அடுக்களையில் தயார் செய்யப்பட்டு வந்து இறங்குச்சு. கடவுளின் ஆசிகளோடு வந்த சாப்பாட்டை முடிச்சோம். எட்டு மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பம்.




 இந்த ஆண்டு பெண் ஜனாதிபதி எங்களுக்கு. ஃபிஜி இந்தியர் ப்ரமீளா. தேர்தல் நடந்தப்பத்தான் தெரிஞ்சது மூணு வருசமா க்ளப் கதிகேடாப் போயிருந்துச்சுன்னு:(

 காரணம் ரொம்பவே சிம்பிள்... சாட்டை எடுக்க இண்டியன் க்ளப்பின் தந்தை நாட்டில் இல்லை:(



 நிலநடுக்கம் காரணம் மக்கள் மன அழுத்தத்தில் ஆழ்ந்துட்டாங்க. நோ மோர் சோஸியலைஸிங்:( ஊரை விட்டு வேறு ஊர்களுக்கும் நாட்டுக்கும் புலம் பெயர்ந்துட்டாங்களாம்!

 ஹேய்.... ஜுஜுபி..... நொண்டிச் சாக்குகள்! 


 புறக்கணிப்புக்கு எல்லாத்தையும் விட முக்கியமான ஒரு காரணம்.....

 இந்தியனாக இருக்கணும் என்றால் நாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் குண அம்சமான அங்கிங்கெனாதபடி பாதாளம் வரை வேர்பரப்பி நிற்கும் ஒரு சமாச்சாரத்தில் எந்தவகையிலாவது சம்பந்தப்பட்டு இருக்கணும். இருந்தாங்க..... :(

 பொறுக்க முடியாமக் கேள்வி கேட்டவங்களுக்கு எந்த ஒரு தனி மரியாதை கிடைக்குமோ அது(வும்) கிடைச்சது. அதனால் கொந்தளிச்சுப்போய்க் கிடந்தாங்க.

க்ளப்பின் எந்தையும் தாயும்  மகிழ்ந்து குலாவி ..............


 ஃபாதர் ஆஃப் த க்ளப் திரும்பி வந்ததும் ரெண்டு குழுவும் தனித்தனியா வந்து கண்டுக்கிட்டு ஒப்பாரி எல்லாம் வச்சாங்க. ஃபாதரும், மதரும் ரெண்டு பக்கத்தையும் நின்னு கேட்டு உண்மை எதுன்னு கண்டு பிடிச்சதும்....

 கட்டாயம் இதுக்குப் புத்துயிர் கொடுக்கலாமா? இல்லை போஸ்ட்மார்ட்டம் பண்ணிக்கிட்டு ஒழியட்டுமுன்னு விட்டுட்டு இன்னொரு குழந்தையை பெத்துக்கலாமான்னு உக்கார்ந்து யோசிச்சு, கடைசியா ஒரு முறை ஐ யூ ஸியிலே இருப்பதைக் கவனிச்சு உயிர் ஊட்டிப் பார்க்கலாம். பொழைச்சு எழும்போல இருந்தால் மேற்கொண்டுன்னு...... மீட்டிங் ஒன்னு போட்டால் 100 குடும்பங்களை விட்டுட்டுப்போன (குடும்பத்துக்கு ரெண்டு பேர் என்று வச்சாலும் 200 பேர் இருக்க வேண்டிய) இடத்தில் எண்ணி மூணே மூணு அங்கத்தினர் ஊழல் கட்சியிலும், எதிரிகளாக ரெண்டே ரெண்டு பேரும் வருகை தந்தாங்க! இன்றைக்கு ஏ ஜி எம் நடத்தனுமுன்னு ஏற்பாடு! கிழிஞ்சது போ:( 

 மூணு வாரத்தில் எல்லா அங்கத்தினருக்கும் தகவல் அனுப்பி இன்னொரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கன்னு ஃபாதர் சொல்லிட்டார். அங்கத்தினர் லிஸ்ட் எங்கேன்னு கேட்டால்..... ஊழலோடு சேர்த்து அதையும் ஸ்வாஹா பண்ணி இருக்காங்க:(

 நண்பர்கள் லிஸ்ட் அவுங்கவுங்ககிட்டே இருக்கும் பாருங்க அதை வச்சு எல்லோருக்கும் தகவல் அனுப்பி மூணு வாரம் முன்னறிவிப்பெல்லாம் விதிப்படி கொடுத்து இன்னொரு ஏ ஜி எம் கூட்டம் ஏற்பாடாச்சு. கொஞ்சம் முன்னேற்றம்!!!   கடந்த ஆண்டுகளில் கிடைச்ச மரியாதையை நினைச்சு பழைய அங்கத்தினர் யாரும் தலை காட்டலை:(    ஆனால் புதுசா நாலு பேர் வேடிக்கை பார்க்க வந்துருந்தாங்க.

 சட்ன்னு அவுங்களைப்பிடிச்சுப்போட்டு பழைய இந்தியப் பெருச்சாளிகளை உள்ளே வரவிடாமல் சங்கத்தைக் காப்பாத்த ஃபிஜி இண்டியர் ஒருவரை ஜனாதிபதி ஆக்கினோம்:-) அப்படியும் ஒரு பெருச்சாளி வேற ஒரு போஸ்ட்டில் இடம் பிடிச்சாச்சு. சரி. போகட்டும் திருந்துமான்னு பொறுத்துப் பார்க்கலாம். வழக்கமா ஏழு பேர் நிர்வாகிகள். ஆனால்..... நாலு பேர் இருக்கும் க்ளப்புக்கு ஏழு நியாயமா? மூணே ஜாஸ்தி இல்லையோ?

 1997 சுதந்திர தின பொன்விழா ஆண்டுதான் நம்ம க்ளப் ஆரம்பிச்சு முதல் விழாவைக் கொண்டாடுச்சு. 15 வருசத்துக்குப்பின் இந்த சுதந்திர தின விழாவில் மறு உயிர். புது ஜனாதிபதி நல்லா ஊக்கத்தோடு உழைச்சு ஆட்களைச் சேர்த்துருந்தாங்க. பயந்துக்கிட்டேதான் போனேன்...... தனியா உக்கார்ந்து சாப்பிடும்படி ஆகிருமோன்னு!

 இந்த வருசத்தின் முதல் ஒன்று கூடல் என்பதால் இதையே புது அங்கத்தினர்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சியா வச்சுக்கணும். நம்மாட்களுக்கு இலவசமாக் கிடைச்சால்தான் வரவும் செய்வாங்க. இன்றைக்கு மெம்பர்ஷிப் எடுத்தால் எல்லாம் இலவசம். நல்லா ஒர்க்கவுட் ஆகிருச்சு:-))))

 நாங்களும் ஒரு அஞ்சு பேரைப்பிடிச்சுப் போட்டோமுன்னு வையுங்க:-)))))

 கூடியவரை மேடையை அலங்கரிச்சுக்கிட்டு இருந்தாங்க. இப்போதைக்கு இது யதேஷ்டம்:-)

 கடவுள் வணக்கம், கஸல் பாடல்கள். ஃபாதரின் சிறப்புரை, எத்னிக் கவுன்ஸில் அங்கத்தினரின் பேச்சு, ரெண்டு நடனம் இப்படி நிகழ்ச்சிகள். மேடை நிகழ்ச்சியின் கடைசியில் இந்திய தேசிய கீதம்,  கஸல் குழுவினரால் பாடப்பட்டது. ராகம் வேற ஒரு வர்ஷன்னு வச்சுக்கலாம். இசைக்குழு முழுசும் ஃபிஜி மக்கள்ஸ்.




 நம்மூர் ஹரே க்ரிஷ்ணாவில் சாமி பாட்டுகளையெல்லாம் வழவழா கொழகொழான்னு பாடுவது நினைவுக்கு வந்துச்சு. வெள்ளைக்கார நாவில் பெங்காலிமொழி படும் பாடு:-)

 எனெக்கென்னவோ...வந்தேமாதரம் பாட்டுதான் தேசிய கீதமா இருக்கணும் என்ற விருப்பம். 

 அப்புறம் டான்ஸ் ஆரம்பிச்சது. தாண்டியா! ஆக மொத்தம் இங்கே ரெண்டே வகைதான். பஞ்சாபிகள் ஆக்ரமிச்சால் பல்லே பல்லே  பாங்க்ரா இருக்கும். குஜராத்திகள் என்றால் தாண்டியா.

 நமக்கு ஒரு விரோதமும் இல்லை. எப்படியோ ஜனங்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியா இருந்தாச் சரி.

  அனைவருக்கும் இந்திய சுதந்திர நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

35 comments:

said...

கொண்டாட்டங்களை
நேரடியாகப் பார்ப்பதைப்போலவே இருந்தது
படங்க்களுடன் விளக்கங்க்களும் அருமை
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

said...

வாங்க ரமணி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

said...

கோபால் சார் என்ன பாடினார்?
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்நாடே பாடினீர்களா?

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

said...

அருமையான படங்களும் பகிர்வும்.

said...

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்! என்ஜாய்!

said...

சந்தோஷமா இருக்கு.

said...

இவ்வளவு கூட்டம் வரும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. :-)

said...

இந்தியான்னாலே ஊழல்னு மக்கள் நிரூபிக்கிறாங்க. :)

போனவாரம் டிரைவிங் லைசன்ஸ் அட்ரஸ் சேஞ்சுக்காக நோ அப்ஜெக்‌ஷன் சர்ட்டிபிகேட் வாங்கப் போனேன்.

ஆர்.டி.வோ ஆபீசில் தெக்கும் புரியல. வடக்கும் புரியல. ஃபார்ம் வாங்கி எழுதனுமா? நம்மளே லெட்டர் எழுதிக் கேக்கனுமா? ம்ஹூம்.. சொல்றதுக்கு ஒருத்தருமே இல்ல.

வெளிய ஏஜெண்ட் கூட்டம் இருக்கு. நோ அப்ஜெக்‌ஷன் ஃபார்ம் மட்டும் பத்து ரூபா. மத்த ஃபார்மெல்லாம் வெல கூட.

அத வாங்கி எழுதி, பணத்தக் கட்டிக் குடுத்தா வாங்கி வெச்சிக்கிட்டாங்க. அடுத்தநாள் வந்து வாங்கிக்கச் சொன்னாங்க. இந்த ஃபார்ம எங்க குடுக்குறதுன்னு தெரியாம சுத்திச் சுத்தி ஜன்னல் ஜன்னலா அலஞ்சதச் சொன்னா அவமானம்.

சரி. அடுத்த நாள் வரச்சொன்னாங்களேன்னு நெனச்சா, அன்னைக்கு மதியமே புரட்சித் தலைவி தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கோகுலாஷ்டமியை முன்னிட்டு அரசாங்க விடுமுறை கொடுத்தருளினார்.

சரி. அதுக்கு அடுத்த நாள் போய்க் கேட்டா, குடுக்க முடியாதுன்னு சொல்லீட்டாங்க. ஒரிஜினல் லைசன்ஸ் வேற அவங்க கிட்டயிருக்கு. ஒரு முந்நூறு ரூவாயத் தள்ளிய பின்னாடிதான் நோ அப்ஜெக்‌ஷன் சர்ட்டிபிகேட் கைக்கு வந்தது.

இப்படிப் பட்ட அரசாங்க ஊழியர்களை மனிதர்கள்னு எப்படிச் சொல்றது? தப்பு செஞ்சா பாவம் வரும்னு சொன்னா யாருக்குப் புரியுது. தப்பு செஞ்சா பணம் வரும்னு நமக்கு புத்தி சொல்றாங்க.

ஆண்டவன் இருக்கான். என்னைக்கு வேணும்னாலும் தோசையைத் திருப்பிப் போடுவான்னு பயம் இல்லை. ஆண்டவனுக்கு உண்டியல்ல துட்டைப் போட்டா எல்லாம் சரியாயிரும்னு நெனைக்கிறாங்க.

எதையோ சொல்ல வந்துட்டு எதையோ சொல்லி முடிச்சிருக்கேன். ஹிஹிஹி.

said...

டீச்சருக்கும் சாருக்கும் இந்திய சுதந்திர நாள் வாழ்த்துக்கள் முன்னாடியே ;))

said...

பதிவு படங்களுடன் இருப்பதால் நாங்களும் கலந்து கொண்ட மாதிரி மகிழ்ச்சி சார்...

(அட்வான்ஸ்) இந்திய சுதந்திர நாள் வாழ்த்துக்கள்

தொடருங்கள்... நன்றி…


அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

said...

விருந்தும் கொண்டாட்டமும் அருமை. முன் கூட்டிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள் அனைவருக்கும்.

அந்தப் புதுப்பொண்ணுக்கும் வாழ்த்துகள் :-)

said...

இந்திய சுதந்திர நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

said...

துளசி மேடம் எப்படி இருக்கிங்க? நீண்டா நாட்களாக இங்கு வரவில்லை.
வாவ் ஆட்ட்மும், பாட்டும் ஒரே ஜாலியா இருக்கு. நன்றாக இருக்கு.
நானும் இதில் கலந்துகொண்ட ஒரு சந்தோஷமா இருக்கு.
அட்வான்ஸ் சுதந்திரதின வாழ்த்துக்கள்

said...

இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள் மேடம். பிஜி இந்தியர்கள் கலாச்சாரத்திலும் சரி, எந்த ஒரு நிகழ்விலும் இந்தியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி முன்னிறுத்திக்கொள்வதிலும் சரி, எப்போதுமே இந்திய இந்தியர்களை விட ஒரு படி முன்னால் நிற்பது வியப்பாகத்தான் உள்ளது. அவர்களுள் பலர் இந்தியாவையே பார்த்திராதவர்கள். படங்களுடன் விவரங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

said...

"தாண்டியா ஆட்டமும் ஆட......" ஆடினீர்களா :)))

விருந்து ஆட்டம் பாட்டு என மகிழ்வான கொண்டாட்டம் எங்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி நிற்பது :)))அருமை. வாழ்த்துக்கள்.

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

said...

தந்தையும் தாயும் நீங்க ரெண்டு பேருமா..மஹா பொறுமை. பேசாம நம்ம ஊருக்கு வந்து எல்லாவற்றையும் சரி செய்யுங்க. நல்ல சுதந்திரம் கிடைக்கும்.

said...

வாங்க கோமதி அரசு.

என்னைப்பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றுமுன்னு பாடி இருக்கணும் நியாயமா:-)

எப்படி இருந்த க்ளப் இப்படி ஆயிருச்சேன்னு புலம்பல் பாட்டு பாடலை நல்லவேளை!

said...

வாங்க ஸாதிகா.

எல்லாம் உள்ளது உள்ளபடி:-)))

said...

வாங்க ஸ்ரீராம்.

நில நடுக்க ஆஃப்டர் ஷாக்கில் ஊர் ஆடும் ஆட்டத்துக்கு நாங்களும் எதிராட்டம் ஆடுவோமே:-)))

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

வாழ்க்கையின் நோக்கமே சந்தோஷம்தான்:-)

said...

வாங்க குமார்.

நானும்தான்:-))))

said...

வாங்க ஜீரா.


சென்னை ஆர்டி ஓ பண்ணர அழும்புக்கு எல்லையே இல்லை.

கோபால் இந்திய லைசன்ஸ் எடுத்தது இங்கே :-)

http://thulasidhalam.blogspot.com/2009/12/blog-post_15.html

அதுக்கப்புறமும் இந்தியாவில் காரோட்டத் துணிஞ்சுருவாரா என்ன? :-))))

said...

வாங்க கோபி.

இன்னிக்கு இப்போ அங்கே சுததிரநாள்தானே!

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வரவுக்கும் மகிழ்வுக்கும் நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

புதுப்பொண்ணு சீமா ஃப்ரம் பட்டிண்ட்டா. என் கைகளைப் பற்றிண்டாள். வாழ்த்துகளைச் சொல்லிடறேன்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க விஜி.

இன்னிக்கும் ஒரு கொண்டாட்டம் இருக்கு பாருங்க:-))))

said...

வாங்க கீதமஞ்சரி.

நீங்க சொன்னது உண்மைதான். நாங்க ஃபிஜி போன புதுசுலே சந்திக்கும் இந்தியர்கள் எல்லாம் (முக்கியமாகத் தமிழர்கள்,) ஊர்க்காரவங்களா? நல்லா இருக்கீங்களா ஊருலே எல்லோரும் நல்லா இருக்காங்களான்னு கேக்கும் போது கண்ணிலே ஒரு ஏக்கம் தெரியும். இத்தனைக்கு அவுங்க மூணாம் தலைமுறை!

ஊருலே அவுங்களுக்கு யாரையுமே தெரியாது என்பதே நிஜம்:(

said...

வாங்க மாதேவி.

சும்மாவே கிடந்து ஆடுவேன்.... இதுலே ஆட்டமுன்னு வந்துட்டால்....விடமுடியுதா;-)))))

said...

வாங்க வல்லி..

தந்தை மகா பொறுமைசாலி. புளியமரத்தில் ஏறுனவர் 38 வருசமா இறங்கவே இல்லை:-)))

said...

டீச்சர், என் கமெண்ட் விட்டப் போச்சோ அல்லது எனக்கும் அறியாமல் ஏதாவது தவறாக டைப்பி விட்டேனா??

:)

ஜஸ்ட் ஒரு க்ளாரிபிகேஷன்...

:))

said...

வாங்க அறிவன்,

அடடா..... நட்சத்திரத்தின் பின்னுட்டத்தை இப்படி காகா ஊஷ் பண்ணிருச்சே:(

ச்சும்மா....:-)

இதுதான் இந்த இடுகைக்கு உங்களிடமிருந்து வந்த முதல் பின்னூட்டம்.

அனுப்ப நினைச்சு அனுப்பாததில் என்ன எழுதி இருப்பீங்க??????

said...

சுதந்திர தின நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்கள் அருமை....

இனிய பகிர்வு...

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

படங்கள் அனைத்தும் நேரில் கண்டது போல அருமை! வாழ்த்துக்கள்!