Friday, August 17, 2012

அடடா..... நம்ம மெரினாவில் இப்படி வச்சா நல்லா இருக்காது? (ப்ரிஸ்பேன் பயணம் 26)

மதியச் சாப்பாடு தேடலாமேன்னு,   சர்ச்சுக்கு நேரா சனங்க போய் வந்துக்கிட்டு இருந்த இடைவெளியில் புகுந்தேன். இது தலைமைத் தபாலகத்தை ஒட்டியே இருக்கு. கோட்டைகளில் இருப்பதைப்போல அழகா ஆர்ச் வச்ச பாதை.


 பாதசாரிகள் கடக்க வச்சுருக்கும் க்ராஸிங்கில் பச்சை மனுஷன் வந்ததும் நம்பி கடக்கலாம். எங்கே கவனிக்காமல் போயிருவோமோன்னு டப்டப்ப்ன்னு மெஷின்கன் சுடுவதுபோல ஒரு சத்தம் வேற இந்த ஊரில் வருது. எங்க நியூஸியில் எல்லாம் சைலண்டே!


 வருத்தத்தோடு குறிப்பிடும் ஒரு சமாச்சாரம்....இந்தியாவில் வண்டி ஓட்டிகள் பெடஸ்ட்ரியன் க்ராசிங்கில் பாதசாரிகளுக்காக வண்டியை நிறுத்துவதே இல்லை:( பச்சைமனுஷனை நம்பி நாம் சாலையில் இறங்கினால் சிகப்பு மனுசனா ஆஸ்பத்திரிக்கு போகவேண்டி இருக்கும். சண்டிகரில் இன்னும் ஒரு விசேஷம், எல்லா ரவுண்டபௌவுட்களிலும் ஒரு ஆம்புலன்ஸ் வேற தயாரா நிக்கும். ரைட் ஹேண்ட் ரூல்ஸ் எதுவும் இல்லை. நாலாபக்கங்களிலும் ஒரே சமயத்தில் பாய்ஞ்சு இடிச்சுத்தள்ளிக்கிட்டு வரும் வண்டிகள் முட்டிமோதி யாராவது அடிபட்டா தூக்கிக்கிட்டு ஓடுவாங்களாம்! 

 சரி. ஆர்ச் வாசலுக்கு வருவோம். இது குவீன் தெருவில் வந்து சேருது. எதுத்தாப்போல பரந்த புல்வெளி. போஸ்ட் ஆஃபீஸ் சதுக்கம்.அதுக்கடியிலே ஃபுட் கோர்ட். பத்துப் படிகளோடு எஸ்கலேட்டர் போட்டு வச்சுருக்காங்க. நோகாம நோம்பு கும்பிடலாம். சுத்திவரக் கடைகளும் நடுவிலே இருக்கைகளுமாப் போட்டு வச்சுருக்காங்க. மேலே வட்டமான சீலிங் கண்ணாடி வெளிச்சம் கொண்டுவருது. எல்லா துரித உணவகங்களும் இடம் புடிச்சு உக்கார்ந்துருக்கு. ரெண்டுமூணு இந்தியக்கடைகளும் 'கர்ரி' ' வித்துக்கிட்டு இருக்கு. ஒரு கடையில் 12 மணிக்கு முன்னால் வாங்கினால் சிக்கன் கர்ரி அஞ்சே டாலராம். முழுசா எல்லா கடைகளையும் சுத்திப்பார்த்துட்டு ஸப்வேயில் ஒரு ஆறு இஞ்ச் வாங்கி முழுங்கிட்டு அடுத்த பக்கத்தில் வெளியே வந்தேன். இது அடிலெய்டு தெரு.

 பரந்து கிடக்கும் புல்தரையின் நடுவில் வட்டமான தடுப்பு. இதுக்குள்ளில் இருக்கும் கண்ணாடிதான் அடித்தளத்தில் இருக்கும் ஃபுட் கோர்ட்டின் நடுவில் இருக்கும் கண்ணாடி ஸீலிங். லஞ்சு ப்ரேக் சமயமானதால் ஏகப்பட்ட கூட்டம். ஓய்வா உக்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு அரட்டையடிச்சுக்கிட்டு இருந்தாங்க. மக்களுக்கு உற்சாகம் கொடுக்கத் தெருப்பாடகர்கள் வேற பஸ்கர் என்ற பெயரில். ஒருமாதிரிப் பிச்சைன்னும் வச்சுக்கலாம். நாம் விருப்பப்பட்டுக் காசு போட்டால் சரி. போடலைன்னா அதுக்காக நம்மூர் போல சொற்களால் குதறமாட்டாங்க.

 எனெக்கன்னவோ இந்த பஸ்கர்களைக் கண்டால் கொஞ்சம் பிடிக்காதுதான். நம்மூரில் பொழைக்க வேற வழி இல்லைன்னாதான் பிச்சை எடுப்பாங்க. இங்கெ என்னன்னா எதாவது கலையைக் கத்துக்கிட்டு அதை தெருவில் காட்சிப்படுத்தறாங்க. எங்கூர்லே வருசாவருசம் ரெண்டு வாரத்துக்கு பஸ்கர்ஸ் ஃபெஸ்டிவல் வேற நடக்கும். உலகெங்குமிருந்து தங்கள் திறமைகளைக் காமிக்க பஸ்கர்ஸ் வர்றாங்க. 

 பல சமயங்களில் சூப்பர் மார்கெட் வாசலில் சின்ன, பள்ளிக்கூடப் பசங்க ஒரு வயலினையோ, ரெக்கார்டரையோ வச்சுக்கிட்டு கீங் கீங்ங்கிங்கீன்னு நம்ம காதைத் துளைச்சுக்கிட்டு வாசிப்பாங்க. ஃபண்ட் ரெய்ஸிங்காம். ஸ்கூல் கேம்ப் இப்படி எதுக்காச்சும் போக! 

 எனக்குப் பெற்றோர்கள் மேல்தான் கோபம் பொங்கும். வெல்ஃபேர் டிபார்ட்மெண்டுலே விஷயம் சொல்லிக் கேட்டால் காசு கிடைக்கும். இல்லைன்னா பள்ளிக்கூடமே கூட காசு போட்டுப் பிள்ளைகளைக் கூட்டிப்போகும். பள்ளிக்கூட முதல்வரிடம் ரகசியமாச் சொன்னால்கூடப் போதும். எத்தனையோ பிள்ளைகளுக்கு பகலில் ஸ்கூல் லஞ்ச் கூட எங்கிருந்து வருதுன்னு ரெண்டாம்பேருக்குத் தெரியாம பரிமாறப்படுது. இப்படி இருக்கும் நாட்டில் பிள்ளைகளை சூப்பர்மார்கெட் வாசலில் நிறுத்துவதா? ஏற்கெனவே சோஸியல் வெல்ஃபேர் சிஸ்ட்டத்தில் இருக்கும் பெற்றோர்கள்தான் இப்படியெல்லாம் செய்யறாங்க:( 

 வெல்ஃபேர் சிஸ்டத்தை ஏமாத்தி மக்கள் வரிப்பணத்தைக் கூசாமல் வாங்கிக்கும் பலரில் நம்மாட்கள் கூட இருக்காங்க. அதெல்லாம் தனிக்கதை. என்னமோ போங்க:(  இந்த அண்டர்கிரவுண்ட் ஃபுட் கோர்ட் பார்த்ததும் சென்னை மெரினாவில் இப்படி ஒன்னு அமைச்சுட்டா.... கடற்கரையின் அழகு பாழாகாமல் இருக்குமே. சனம் தின்னு முடிச்ச குப்பைக்கூளம் எல்லாம் நெடூக பரந்த கடற்கரை மணலில் பறந்து சுற்றுப்புறத்தைப் பாழாக்காதேன்னு இருந்துச்சு. இப்ப ஒரு மூணு வருசம் முந்தி மெரீனாவை அழகு படுத்தறோமுன்னு கட்டி வச்சுருக்காங்க பாருங்க. அதுக்கடியிலேயே ஃபுட் கோர்ட் வைக்கலாம். நினைச்சுப் பார்க்கப்பார்க்கப் பெருமூச்சுதான்.

 மெரீனா எவ்வளவு அழகான நீளமான கடற்கரை! இப்படிப் பாழடிச்சு வைக்கும் சனத்தை என்னன்னு சொல்ல:(


 நம்ம வங்கிக்கட்டிடம் ப்ரமாண்டமா நிக்க அதுலே ஒரு நவீன சிற்பம். என்ன சொல்லுதுன்னு தெரியலை. உன் மார்பெலும்புவரை தோண்டிப் பார்த்து இருக்கும் காசை எடுத்துவோம் என்பதா? இல்லை நெஞ்சு பிளந்தாலும் உங்களுக்கு சேவை செய்வோம் என்பதா? இல்லையாம். வங்கி எப்படி தொழில்துறைக்கு உழைக்குதுன்னு காமிக்குதாம். நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்............

குவீன்தெரு டேவிட் ஜோன்ஸுக்குள் நுழைஞ்சு முந்தாநாள் கோல்ட் கோஸ்ட்டில் பார்த்து வச்ச காலணி, இங்கே  என் சைஸுக்குக் கிடைக்குதான்னு நேத்து நோட்டம் விட்டு ரெண்டு அளவுகளில் ரெண்டு ஜோடி எடுத்து வைக்கச் சொன்னதைப் போட்டுப் பார்த்தேன். (டிப்ஸ்: ஷூ வாங்கும்போது சாக்ஸ் போட்டுக்கிட்டு செக் பண்ணிக்கணும். )நேத்து செருப்புப் போட்டுருந்ததால் காலுறை  'கையில்'  இல்லை:-)))))


ஷனால் கடைக்கு வெளியே வரிசைகட்டி நிற்கும் கூட்டம். உள்ளே என்ன ஆடுது? விசாரிச்சால் ஸேல் போட்டுருக்காங்களாம்.  நவ்வாலுபேராத்தான் உள்ளே விடுவதால்  வரிசையில் காத்து நிக்கறாங்களாம்.  இதுலே எல்லாம் யானை விலை. ஆனாலும் ச்சும்மா உள்ளே போய்ப் பார்க்க இம்மாம் கூட்டமான்னு இருக்கு!    காசு இருக்கப்பட்டவன் எதையெல்லாம் வாங்குவான்னு தெரிஞ்சுக்கவும் ஒரு கூட்டம் தயாரா இருக்கு பாருங்க!
 காலுக்குச் சரியா இருந்ததை வாங்கிக்கிட்டு கொஞ்சம் மற்றகடைகளைச் சுத்திவந்தப்ப,  டீக்கடை ஒன்னு கண்ணில் பட்டது. அழகழகான பீங்கான் கப் அண்ட் சாஸர்கள், டீ செட்டுகள் ன்னு அமர்க்களமா இருக்கு. ஏழெட்டுவகை சாயா போட்டு வச்சுருக்காங்க. குடி குடின்னு உபச்சாரம் வேற!

"வேணாம். இப்போதான் லஞ்ச் முடிச்சேன். "

"ஆமாம்...  டீ யைச் ச்சாய் ன்னு சொல்வது இந்திய வார்த்தை. நீங்க எப்படி டீயை அதே பெயரில் சொல்றீங்க? "

 "இது விதவிதமான ஸ்பைஸ்கள் சேர்த்தது அதான் சாய்ன்னு சொல்றோம்."

" அய்ய..... வெறும் டீதான் எங்களுக்கு ச்சாய். நீங்க சொல்வது போல ஸ்பைஸ் எல்லாம் சேர்த்தால் அது மஸாலா ச்சாய். "

" அய்யய்யோ..... அப்படியா? இப்படி ஒரு பெயர் இருப்பதே எனக்குத் தெரியாதே! உங்க மஸாலா சாய்லே என்னென்ன ஸ்பைஸ் போடுவீங்க? "

 "சிம்பிளா வேணுமுன்னா இஞ்சி தட்டிப்போட்டுக்கலாம். இல்லை கூடவே ரெண்டு ஏலக்காய் தட்டிப்போட்டுக்கலாம். இல்லைன்னா டீ மஸாலான்னு ஒன்னு தனியா விக்குது. அது குறுமிளகு, பட்டை, கிராம்பு , ஏலக்காய், சுக்கு எல்லாம் கலந்த பொடி . சாயா தயாரிக்கும்போது இந்த மசாலாப்பொடியில் அரை டீஸ்பூன் சேர்த்துட்டா மஸாலா சாய் ரெடி. ஆனால் ஒன்னு,  நாங்க எந்த டீயா இருந்தாலும் அதுலே பால் சேர்த்துத்தான் குடிப்போம். அதுவும் சூடான பால். "

 லெக்சர் கொடுக்கச் சான்ஸ் கிடைச்சால் விடமுடியுதா?

 " அட! ச்சாயில் இவ்வளோ விஷயம் இருக்கா!! விளக்கமா சொல்லித்தந்ததுக்கு நன்றி. நான் இனி வாடிக்கையாளர்கள் கேக்கும் கேள்விகளுக்கு நல்லா விளக்கத்தோடு பதில் சொல்வேன். லாட்டே ச்சாய்ன்னு பால் சேர்த்த திடீர் சாயா கூட இப்ப வந்துருக்கு. வெறும் சுடுதண்ணி சேர்த்தால் போதும். வேணுமா?  "

  " லிப்டன் டீதானே? பார்த்தேன். வேணாம். நான் டில்மா டீ வச்சுருக்கேன் "

 அம்பாரிவச்ச யானைப்படம் போட்ட லிப்டனை பார்க்காம மிஸ் பண்ண முடியுமா? 

நல்லா விளம்பரம் பண்ணிக்கறாங்க. ஊர் முழுசும் இருக்கும் வாடகை சைக்கிள் எல்லாம் லிப்டன் டீ குடிக்கச்சொல்லுதே!

 1890 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்காரர் தாமஸ் லிப்டன் ஆரம்பிச்ச டீ யாவாரம். இப்ப உலகெல்லாம் கொடிகட்டிப்பறக்குது! வகைவகையான ருசி, மணங்கள்ன்னு தூள் கிளப்புறாங்க. ஐஸ் டீன்னு இப்ப இங்கே லோல்படுது சூப்பர்மார்கெட்டுகளில். ரெடி டு ட்ரிங்.


 " கடையைப்படம் எடுக்கலாமா? "

 " பொதுவா எடுக்கக்கூடாது. நீங்க எனக்கு இவ்வளோ விஷயம் சொல்லிக்குடுத்துட்டீங்க. நான் அந்தப்பக்கம் போயிடறேன். நீங்க படம் எடுத்துக்குங்க. நான் பார்க்கலை:-) "

 அட! பேரம் படிஞ்சுருச்சே:-)))))).

 பொடி நடையில் அன்ஸாக் சதுக்கம் தாண்டி நடந்து அறைக்குப்போய்ச் சேர்ந்தப்ப மணி ரெண்டேகால்:-)

 கொஞ்ச நேரத்துக்கு வலை மேயலாம். கட்டுன காசு வீணாகலாமோ?

 தொடரும்.............:-)

46 comments:

said...

பதிவு அருமையாக இருக்கு. எனக்கு ஒரு சைக்கிள் வேணுமே? அங்கேயிருந்து லவட்டிட்டு வர முடியுமா?

said...

படங்கள் மிகவும் அருமை... தொடருங்கள்... கூடவே வந்து கொண்டிருக்கிறோம்... வாழ்த்துக்கள்... நன்றி...

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

இந்த சிட்டி ஸைக்கிள் சிஸ்டம் இந்தியாவுக்கு லாயக்கில்லைன்னு சொல்லாம சொல்லிட்டீங்களே:-))))))))))))))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தொடர் வருகைக்கு நன்றிகள்.

said...

-முதல் படத்தில் இரண்டு கட்டடடங்களுக்கு இடையே விழுந்து சிக்கிக் கொண்டதைப் போல ஒரு (இணைப்பு) அறை (?) பார்க்கக் கற்பனைகளைத் தூண்டி விடுகிறது!

-பாதைக்கடியில் ஃபுட் கோர்ட்... என்ன அழகு? இந்தியாவில் இப்படியெல்லாம் பார்க்க முடியுமா?

-டீக் கடைல புதுசா (அவங்களுக்கு) வியாபாரம் செய்ய இன்னொரு டீ வகை சொல்லிக் கொடுத்துட்டீங்கன்னு சொல்லுங்க! பதில் 'மொய்'யாக படமெடுக்க அனுமதியா!


said...

அசத்தலான படங்களுடன்
அருமையான விளக்கங்களுடன்
பதிவு மிக மிக அற்புதம்
தங்கள் தயவால் இருந்த் இடத்தில் இருந்து
செலவில்லாமல் இதையெல்லாம்
கண்டு மகிழ்கிறோம்
பல விஷயங்களைத் தெரிந்தும் கொள்கிறோம்
மிக்க நன்றி
தொடர வாழ்த்துக்கள்

said...

''இப்படி இருக்கும் நாட்டில் பிள்ளைகளை சூப்பர்மார்கெட் வாசலில் நிறுத்துவதா? ஏற்கெனவே சோஸியல் வெல்ஃபேர் சிஸ்ட்டத்தில் இருக்கும் பெற்றோர்கள்தான் இப்படியெல்லாம் செய்யறாங்க:( ///

இதைப்போல பயித்தியக்காரத்தனமான பேச்சை கேட்டதில்ல்லை.
இங்கே அப்படி பிள்ளைகளை விடக்காரணம் அவர்களுக்கு பணம், அதனைச் சம்பாதிக்கும் வழிமுறைகள், ஒரு பொருளை விற்பனை செயும் திறன், ஒரு டாலரைச் சம்பாதிக்க எவ்வலவு நேரம் எடுக்கிறது அதனை எவ்வளவு தூரம் ’இழுக்கலாம்’ ...போன்ற இன்னோரன்ன விடயங்களை பயிற்றுவிக்கும் முறையே இது.
ஏதோ பெற்றோர்கள் பிச்சை எடுக்க விடுகிறார்களாம்..அவர்களுக்கு இந்த கவர்ன்மெண்டில் கேட்கத் தெரியாதாம். கதை விடுகிறார் துளசி!

said...

வாங்க ஸ்ரீராம்.

கற்பனையைத் தூண்டிய படமா??? ஆஹா.......
வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரமணி.

நம்ம பயணக்கட்டுரைகள் ஃபார் ஆர்ம் சேர் ட்ரவலர்ஸ்ன்னு சொல்வது உண்மையாப் போச்சே:-)))

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஊர்சுற்றி.

அட! இப்படி ஒரு கோணம் இருக்கா?

இதைத்தான் சொல்றாங்க போல எத்தனை கோணம் எத்தனை பார்வைன்னு!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

அடாடா... எனக்கும் இங்க பச்சை மனிதனை மதிக்காம வண்டி ஓட்டறவ்ங்களையும். சிக்னல்ல நம்பர் 6ல இருக்கறப்பவே பின்னாலருந்து ஹாரன் அடிச்சு, வேகமா போகச் சொல்லி என்னையும் பாவியாக்கறவங்களையும் கண்டா கோபம் கோபமா வரும். நீங்க சொல்லியிருக்கற அண்டர்க்ரவுண்ட் ஃபுட் கோர்ட்... ஹுஊஊஊம்! பெருமூச்சுதான் இங்க. இங்க இருக்கற சிச்சுவேஷன்ல சைக்கிள் விடவே உண்மைல பயமாத்தான் இருக்கு.

said...

அண்டர் க்ரவுண்ட் ஃபுட் கோர்ட் நல்லாத்தான் இருக்கு. ஆனா நம்மூர்க்காரங்களுக்குத்தான் எதையும் சுத்தமாப் பராமரிக்கத் தெரியாதே :-(

பச்சை மனிதனை மும்பையின் சில பகுதிகளிலும் நவி மும்பையிலும் ஓரளவு மதிக்கிறாங்க. புற நகர்ப்பகுதிகள்தான் மோசம்.

said...

கட்டுரையில் முத ஸ்பீட் இல்ல பிறகு விருவிருப்பு இருந்தது..............

said...

நெஞ்சாங்கூட்டில் பயங்கரம்ம்மால்லா நிக்குது!!

சீராய் கிளம்பி போட்டிக்கு இங்கிருந்துதானா வந்தன சைக்கிள்கள்:)?

said...

உ.சு.து.
.
.
உசு. துளசி.


.

. உலகம் சுற்றும் துளசி வாழ்க....

said...

எனக்கு கால் செருப்பு அமையவே மாட்டேங்குதே. எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வர்றதுக்கென்ன துள்சிம்மா...

போட்டோஸ் எல்லாமே லைக் லைக் லைக்:)
said...

உலகம் சுற்றும் துளசி வாழ்க வாழ்கவே

said...

உலகம் சுற்றும் துளசி வாழ்க வாழ்கவே

said...

செலவில்லாமல் ஒரு சுற்றுலா போனா அனுபவம் .. கலக்கல் .. தொடருங்கள்

said...

/ எங்கே கவனிக்காமல் போயிருவோமோன்னு டப்டப்ப்ன்னு மெஷின்கன் சுடுவதுபோல ஒரு சத்தம் வேற இந்த ஊரில் வருது./

This is more for the blind people to realize that they can cross the road as they cannot see the green man.

It is there in most newer traffic lights in the US and UK as well.

said...

These cycles are sponsored by Barclays in London. Same concept. Have not seen that in NYC. May be it is there in SFO.

said...

பால கனேஷ் சொல்கிற மாதிரி மாட்டுக்கும் மனுஷனுக்கும் ஒரே மாதிரி ஹாரன் தான். சாலையில் நடக்கவே “சே” என்று இருக்கு சென்னையில்.மொத்த வண்டிகளின் ஹாரனையும் பிடிங்கிவிடலாமா என்ற அளவுக்கு கோபம் வருது.

said...

மனம் சஞ்சலப்படும் போதெல்லாம் இந்த தளத்திற்கு வந்து படங்களை மட்டும் அப்படியே புரட்டி பார்த்துக் கொண்டேயிருந்தாலே இந்த உலகம் எத்தனை பெரிது என்பது உணர்ந்து கொள்ள முடிகின்றது,

said...

சாக்ஸ் போடாமயா செருப்பு போடுவீங்க? என்னமோ சொல்றிங்க கேட்டுக்கறோம்.:)

said...

பிரமிப்பாக இருக்கிறது துளசி.
வளம் இருக்கிற நாட்டிலேயே திருட்டுத் தனமும் இருக்கிறதா.

பதிவு நிறைத்த படங்கள் அத்தனையும் ரொம்பவே அழகு. உங்கள் கண்ணால் ப்ரிஸ்பேனை பார்ப்பது சுவாரஸ்யம்.

said...

// இந்தியாவில் வண்டி ஓட்டிகள் பெடஸ்ட்ரியன் க்ராசிங்கில் பாதசாரிகளுக்காக வண்டியை நிறுத்துவதே இல்லை:( பச்சைமனுஷனை நம்பி நாம் சாலையில் இறங்கினால் சிகப்பு மனுசனா ஆஸ்பத்திரிக்கு போகவேண்டி இருக்கும். //

இந்தியாவுல இந்த சிக்னலெல்லாம் தேவையேயில்ல. நீங்க பாட்டுக்கு ரோட்டுல எறங்கி தாண்டி அந்தப் பக்கத்துக்குப் போயிட்டேயிருக்கலாம். ஒங்களுக்காக எல்லாரும் நின்னிருவாங்க. 99.99% சக்சஸ்.

// போஸ்ட் ஆஃபீஸ் சதுக்கம்.அதுக்கடியிலே ஃபுட் கோர்ட். பத்துப் படிகளோடு எஸ்கலேட்டர் போட்டு வச்சுருக்காங்க. நோகாம நோம்பு கும்பிடலாம். //

பத்துப் படிகளுக்கு எஸ்கலேட்டர் தேவையா? அதான உங்க பாயிண்ட். இல்லைதான். ஆனா ஒரு வயசுக்கு மேல உள்ளவங்களுக்கும் உடம்புக்கு முடியாதவங்களுக்கும் தேவைதான். ஆனா நல்லாயிருக்குறவங்களும் அதுலதான் போவாங்க.

இன்னைக்கு சரவணபவன்ல சாப்பிடப் போனோம். வயசானவங்க நிக்கிறாங்களேன்னு யோசிக்காம வெயிட்டிங் சேர்கள்ள இளவட்டங்கள். வயசானவங்களுக்கு எழுந்து எடங்குடுக்கனுங்குற எண்ணம் இப்போ இல்லாமலே போயிருச்சு.

// எனெக்கன்னவோ இந்த பஸ்கர்களைக் கண்டால் கொஞ்சம் பிடிக்காதுதான். //

இவங்கள ஐரோப்பாலயும் பாக்கலாம். விதவிதமா மாறுவேடம் போட்டு முன்னாடி கப் வெச்சுக்கிட்டு நிப்பாங்க. வயலின் வாசிப்பாங்க. பக்கத்துல ஒரு நாய் இருக்கும். இல்லைன்னா சின்னக் குழுவா உக்காந்து வாத்தியங்களை வாசிப்பாங்க. இல்லைன்னா மியூசிக் பிளேயரை ஓட விட்டு அக்ரோபேட்டிக் டான்ஸ் ஆடுவாங்க. விதவிதமா இருக்கு. நம்மூர்ல இருக்கும் கழைக்கூத்தாடிகளும் இந்த வகைதானே.

//இந்த அண்டர்கிரவுண்ட் ஃபுட் கோர்ட் பார்த்ததும் சென்னை மெரினாவில் இப்படி ஒன்னு அமைச்சுட்டா.... கடற்கரையின் அழகு பாழாகாமல் இருக்குமே.//

உண்மைதான். இத மட்டும் செஞ்சுட்டா, பீச்சுல கூட்டமேயிருக்காது. மொத்தக் கூட்டமும் அண்டர் கிரவுண்ட் சாப்பாட்டுக் கடைகள்ளதான் இருக்கும். பீச்சு பளிச்சுன்னு இருக்கும். ஒங்களுக்கு அரசியல் தொடர்புகள் இருந்தா முதல்வரம்மா காதுல இதப் போடுங்க. செயல்படுத்துனாலும் செயல்படுத்துவாங்க.

said...

கேட்க நல்லா இருக்கு. எப்ப இந்த மாதிரி எல்லாம் வரும் இல்லை வருமா? கடவுளுக்கு தான் வெளிச்சம்.

said...

கலர் கலராக ரீகப் நல்ல வேளை படத்தில் வாங்க முடியாதே :))
படத்தைப் பார்த்து ரசித்தேன்.

said...

வாங்க பால கணேஷ்.

சைக்கிள் விடனுமுன்னா நீங்க எங்கூருக்கு வந்துருங்க. இங்கே சைக்கிள் லேன் ஒன் னு தனியா போட்டு வச்சுருக்காங்க. நல்ல மெரூன் கலரில் பளபளப்பா மின்னுது. பஸ்ஸுக்கும் தனி லேன் பச்சைக்கலரில் சில இடங்களில் போட்டு இருக்கு.

said...

வாங்க அமைதிச்சாரல்.

பச்சையை மதிக்கலைன்னா உடனே லைசன்ஸ் ரத்து. சட்டம் வந்தால் அடங்கலாம். இல்லைன்னா அதை வச்சும் கண்டுக்காம லஞ்சம் வாங்கிக்கிட்டு விட்டுருவாங்க. ஊழல் பெருக இன்னொரு வழி:(

said...

வாங்க நான்.

விருவிருப்பு = விறுவிறுப்பு.

டீச்சர்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அதென்ன மாடர்ன் ஆர்ட்டோ..... எக்ஸ்ரே எடுத்து வரைஞ்சதுபோல இருக்குல்லே:(

பிட் டீச்சருங்க எங்களை இப்படி ஆக்கிட்டீங்களே..... எங்க போனாலும் பிட்டுக்குத் தோதான படங்கள் கிடைக்குமான்னு கண்ணு அலையுதுல்லே:-))))

said...

வாங்க தருமி.

உ.கு. ஏதும் உண்டா? :-))))

said...

வாங்க கவிதாயினி.

கால் செருப்பு அமைவது இறைவன் கொடுக்கும் வரம்.

நான் சின்ன புள்ளையா இருந்தப்ப, அடுத்தமுறை வரும்போது எனக்கு செருப்பு வாங்கிவரேன்னு சொல்லி ஒரு காகிதத்தின் மேல் நிக்க வச்சு பாத அளவை வரைஞ்சுக்கிட்டுப் போனார் அப்பா.

நான் 'அங்கே' போனதும் என்னாச்சுன்னு கேக்கணும் அவரை:-
))))

உங்க லைக் லைக் எனக்கும் லைக் லைக்.

வாழ்க கோஷம் வாழ்க, வளர்க:-)

said...

வாங்க என் ராஜபாட்டை ராஜா.

செலவு இல்லாமலா? எப்படி?

இதோ பில் அனுப்பி வைக்கறேன்:-))))

said...

வாங்க கொத்ஸ்.

ஆஹா.... பார்வை இழந்தவர்களுக்கா?
ரொம்ப நல்ல விஷயம்.

போன சிலமுறை பயணத்துலேயும் இதைக் கவனிச்சுருக்கேன்.இங்கே நம்மூரில் இல்லை:(

ஆனால் அவுங்க நம்மைவிட எல்லாத்தையும் சூட்சமமா கவனிப்பாங்க. ட்ராஃபிக் சத்தம் நின்னதும் தெரிஞ்சுரும் பச்சை மனுசன் வந்துட்டான்னு !

ப்ரிஸ்பேன் முழுசும் சிட்டி சைக்கிள்ஸ், லிப்டன் டீ ஸ்பான்ஸர் செஞ்சுருக்கு. மக்கள் சரியா பயன்படுத்தினா, இது அருமையான திட்டம்.

said...

வாங்க குமார்.

நம்மூரில் ஹார்ன் கேட்பதே அபூர்வம். ரொம்ப தேவைன்னா சின்னதா ஒரு அமுக்கு.

இங்கே ஹார்ன் அடிச்சுப் பழக்கமே இல்லாததால் ஒரு சமயம் நம்மைப் பார்க்காமல் ரிவர்ஸ் வந்த வண்டியை எச்சரிக்க நினைச்சப்ப ஹார்ன் எங்கே இருக்குன்றதுகூட நினைவுக்கு வரலை:-)))))

said...

வாங்க ஜோதிஜி.

அப்ப ... இது படம் பார்த்துக் கதை சொல்:-)))))

தகவல்துறை, விமானப்பயணம் போன்றவைகளால் உலகம் சுருங்கிட்டதா நினைச்சுக்கறோம் இல்லை!!!!

said...

வாங்க குறும்பன்.

நீங்க, இந்திய செருப்புகளுக்கு (ஓப்பன் ஸாண்டல்ஸ்) சாக்ஸ் போட்டுக்குவீங்களா?

நான் ஷூஸ் போட்டால்தான் சாக்ஸ் பயன்படுத்துவேன்.

said...

வாங்க வல்லி.

பல சமயம் குணங்கள் கூடவே வருது!

said...

வாங்க ஜீரா.

அங்கே வீல்சேர், ப்ராம், ஸ்ட்ரோலர், படி இறங்கி ஏறி நடக்க முடியாதவர்கள் இப்படிப்பட்டவர்களுக்காக லிஃப்ட் வச்சுருக்காங்க. இங்கெல்லாம் இது கட்டாயத் தேவை.

பொதுவா லஞ்சு டைமுலே ரெகுலரா ஃபுட் கோர்ட் வந்து சாப்பிடும் மக்கள் முக்கால்வாசி இளவயதினரே!

என்னைப்போல சில முதிய சுற்றுலாப்பயணிகளும் உண்டுதான்:-)))))

உடல் முழுசும் அலுமினியக்கலர் பெயிண்ட் அடிச்சுக்கிட்டுச் சிலையா நிற்பவர்களும் உண்டு. கிடைக்கும் காசு பெயிண்டைக் கழுவி எடுக்கவே சரியாப்போகுமான்னு சம்சயம்:(

எனக்கு நம்ம சென்னையிலேயே தி நகர்லே சாலையைக் கடக்க முடியாது. பத்து ரூ கொடுத்து ஆட்டோவிலே அந்தப்பக்கம் போய் இறங்கி இருக்கேன்.

said...

வாங்க விஜி.

அடுத்த தலைமுறை மக்கள் சுத்தமா வச்சுக்குவாங்கன்னு இன்னும் நம்பறேன் இப்போதைக்கு!

said...

வாங்க மாதேவி.

ரசிப்புக்கு நன்றி.

சில கோப்பைகள் பெரிய கொள்ளளவு!!!

said...

மெரீனா மட்டுமல்ல, இந்தியாவில் பல இடங்களில் இப்படி வைக்கலாம்... கொஞ்சமாவது சுத்தமா இருக்கும்... ம்ம்.. நம்ம கற்பனை தான் பண்ணனும்.. நடக்கறது நிச்சயம் கஷ்டம்....

நல்ல பகிர்வு... டீ கப் எல்லாம் பார்க்க அழகா இருக்கு!

said...

வாங்க வெங்கட்.

மக்கள் தொகை அதிகம் இருக்கும் நாடுகளில் தரையடி இடத்தையும் பயன்படுத்திக்கறதுதான் நல்லது இல்லையா?

said...

படங்கள் மிகவும் அருமை.