Wednesday, August 22, 2012

காசுச் சத்தம் கேக்குதைய்யா.... காசுச் சத்தம்.... காசுச் சத்தம்... (ப்ரிஸ்பேன் பயணம் 28)

தகதகன்னு வெளிச்சம் போட்டு மினுங்கும் செண்ட்டர் கோர்ட் முழுசும் நிறைய மக்கள்ஸ். பாட்டும் கூத்துமா இருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை லேட் நைட் ஸ்பெஷலா எதாவது இருக்குமுன்னு போய்ப் பார்த்தால் வால்லபீஸ் கூட்டம். Australian national rugby union team . Wallabies என்ற அஃபிஸியல் செல்லப்பெயர். 1883 ஆண்டு சதர்ன் ரக்பி ஃபுட்பால் யூனியன் என்ற பெயரில் ஆரம்பிச்சது.



 ஆஸியில் The Australian National Rugby League Team என்று ஒரு லீக் கங்காரூஸ் ( Kangaroos) என்ற பெயரில் இருக்கு, அவுங்க ஊரின் விசேஷ உயிரினங்கள் பெயரைப் பெருமைப்படுத்தும் விதமாத்தான் வச்சுக்கிட்டு இருக்காங்க.

 நாங்க சும்மா இருக்கமுடியுமா? NZ Rugby League என்னன்னா New Zealand Kiwis என்று வச்சுக்கிட்டு இருக்கு. 1908 ஆம் ஆண்டுமுதல் விளையாடிக்கிட்டு இருக்காங்க. NZ Rugby Unionக்கு செல்லப்பெயரா ஆல் ப்ளாக்ஸ்ன்னு இருக்கு. எங்க தேசிய நிறம் கருப்பு என்பதை இங்கே சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த ரக்பி யூனியன் எங்க ஊரான கிறைஸ்ட்சர்ச்சில்தான் முதன்முதலில் கிறைஸ்ட்சர்ச் ஃபுட்பால் க்ளப் என்ற பெயரில் 1863 ஆம் ஆரம்பிச்சுருக்கு. என்ன இருந்தாலும் இதுதானே மெயின் லேண்ட் ஆஃப் நியூஸி..

 வெள்ளையர்கள் நியூஸி வந்து குடியேறுமுன்பே உள்நாட்டு மவொரி மக்கள் பந்துபோல ஒன்னை வச்சுக்கிட்டு( ரக்பி பந்து, நீளவட்டமா ஓவல் ஷேப்பிலே இருப்பது உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்தானே? ) கி ஓ ராஹி ki-o-rahi என்ற விளையாட்டு விளையாடிக்கிட்டு இருந்துருக்காங்க. இந்த விளையாட்டின் விதிகள் ஏறக்கொறைய அஸ்ட்ராலியன் ஃபுட் பால் விளையாட்டைப்போலவே இருந்துருக்கு. ஆனால் அப்போ அடுத்த நாட்டைப் பற்றிய விவரங்கள் இங்கே தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லைதானே?

 க்ளப் ஆரம்பிச்சு ஒரு ஏழு வருசம் போல தாங்களே சில நியமங்களை உண்டாக்கிக்கிட்டு வெள்ளையர் ஆடிக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் 1870 ஆண்டுதான் ரக்பி ஃபுட்பால் நியமங்கள் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டன.

மத்த நாடுகளோடு விளையாடுனாலும் எங்களுக்கு ஆஸிகளை ஜெயிப்பதுதான் வாழ்வின் நோக்கம். கேம் நடக்கும் சமயங்களில் பார்த்தீங்கன்னா.... வெறி பிடிச்சு அலையும், ஒரு கூட்டம்! ரத்த பூமி!!! ரொம்ப விஸ்தரிக்காமல்  'சுருக்'ன்னு சொல்லணுமுன்னால் இந்தியா பாகிஸ்தானோடு விளையாடும் க்ரிக்கெட்டை நினைச்சுக்குங்க.

 மாட்சிமை தாங்கிய மகாராணியம்மாவின் குடிகள் என்றாலும் எங்க நாட்டில் க்ரிக்கெட் & ரக்பியை ஒப்பிட்டால் ரக்பி விளையாட்டு ஒரு மாத்து அதிகம்தான். என்னதான் சொல்லுங்க இது உள்ளூர் விளையாட்டில்லையோ!!!! இந்த டீம்களில் எப்பவும் நிறைய ஐலண்டர்ஸ் இருப்பாங்க. ஆட்டத்துக்கு ஏத்த உடல்வாகு அவுங்களுக்கு இருக்கே!
 Saia Faingaaவுக்கு சின்ன வயசு விசிறிகள் ஏராளம்.



 போஸ்டர்கள் விநியோகிச்சுக்கிட்டும் ஆட்டோகிராஃப் போட்டுக்கிட்டும் இருந்த விளையாட்டு வீரர்களைக் கிளிக்கவே ஃபொட்டோக்ராஃபர்களின் பெரும் கூட்டம் படை எடுத்துருந்துச்சு. கையில் ஒன்றையணாக் கெமெராதான் இருக்குன்னு நான் சும்மா இருக்க முடியுமா? க்ளிக் க்ளிக்.



மகளுக்கு பிடிக்குமுன்னு ரெண்டு போஸ்டர்கள் வாங்கி அதைப் பத்திரமாக் கொண்டுவந்து காமிச்சவுடன், யக் 'என்றாள், அசல் கிவி!


சில ஊர்களுக்குப் போகும்போது குறிப்பிட்ட சிலதைச் செய்ஞ்சு முடிக்கலைன்னா பயணம் போன திருப்தியே எனக்கு இருக்காது. ரிச்சுவல்ஸ் முக்கியம். இங்கே அது கஸீனோ. ஒரு பயணத்துலே ஜஸ்ட் ஒரு முறைதான் . பெரிய எதிர்பார்ப்பு ஒன்னும் இல்லை. நிறைய காசும் செலவு செய்ய மாட்டேன். ஆனா...போகணும். போனேன்.

மாலின் கோடிவரை நடந்து சாலைக்கு எதிர்ப்புறம் வண்ண விளக்கொளியில் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியா இருக்கு கஸீனோ கட்டிடம். உள்ளே போனோம்.

முதல் ஹாலில் Roulette Poker Blackjack இப்படி i2 வகைகள். பெரிய மேசைகளில் ஆட்டம் நடக்க சின்னக்குன்றுகள் போல் சிப்ஸ் குவிச்சு வச்சு ஆடுறாங்க மக்கள்ஸ். நாம் என்ன பரம்பரை கேம் ப்ளேயர்ஸா என்ன? ஸ்லாட் மெஷீன்கள் இருக்கும் ஹால்கள் பகுதிக்குப்போய் மினிமம் ஒரு செண்ட் கேம் மெஷீன்களில் ரெண்டைப் பிடிச்சோம்.

 சொன்னால் நம்ப மாட்டீங்க.....எங்க கிறைஸ்ட்சர்ச் நகரில் நிலநடுக்கம் வந்து நகர மையமே அழிஞ்சு போனப்ப, தப்பிப்பிழைச்ச சில கட்டிடங்களில் எங்கூர் கஸினோவும் ஒன்னு. சின்னதா எங்கூருக்கும் ப்ரிஸ்பேனுக்கும் சின்னதா ஒரு ஒப்பீடு செய்தால் ப்ரிஸ்பேன் கஸீனோ ரொம்பப் பெருசு. எங்க ஊரில் 500 ஸ்லாட் மெஷீன்கள் இங்கே 1300. எங்கூரில் குறைஞ்சது 20 வயசு இருந்தால்தான் உள்ளே அனுமதி. இங்கே 18 வயசு.

 நான் கை பை கொண்டுவரலை. கோபாலிடம் பர்ஸ் வாங்கிப்பார்த்தால் சில்லறையா ஒரு ஒன்பது டாலர்கள்தான் இருக்கு. எப்பவும் என்னோட லிமிட் 20 என்பதால்..... நோட்டை எடுத்துக்கிட்டுப்போய் சில்லறை வாங்கிக்கணும். முதலில் இந்த ஒன்பது காலியாகட்டும். அப்புறம் சில்லறை மாத்தலாமுன்னு ஆளுக்கொரு மெஷீனில் ஆட ஆரம்பிச்சோம். சின்னச்சின்ன வெற்றியும் தோல்விகளுமா ஆடிக்கிட்டே இருக்கோம். திடீருன்னு கலகலன்னு  'காசு மழை'  கொட்டும் ஓசை! என்னதான் சொல்லுங்க பணத்தின் ஓசை ஒரு தனி இனிமைதான் இல்லையா? எனக்கு அடுத்த மெஷீனில் விளையாடும் பெண்ணுக்கு அதிர்ஷ்டம் மெஷீனைப் பிய்ச்சுக்கிட்டு கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. அவுங்க ரெண்டு மெஷீனைப் பிடிச்சுக்கிட்டு ரெண்டு கையாலும் பாய்ஞ்சு பாய்ஞ்சு விளையாடுறாங்க.

 அங்கங்கே காசு விழும் சத்தம் கேட்டாலும் மழை இல்லை. நாம் மட்டும் சும்மா இருக்கலாமான்னு  'கலெக்ட் கேஷ்' பட்டன் அமுக்குனதும் லொட்ன்னு ஒரு டாலர் விழுந்துச்சு:-)))) திருப்பி அதை மெஷினில் நுழைச்சேன். சரியா ஒன்னரை மணி நேரம் அதே ஒன்பது டாலரை வச்சே விளையாடினோமுன்னு வையுங்க. போய் வந்து போய்வந்து போய்வந்துன்னு பலமுறைகள் ஆகி பூஜ்யம் வந்ததோடு கிளம்பிட்டோம்.

 சிங்கையில் கஸினோவுக்குள் நுழைய உள்ளுர் வாசிகளுக்கு 100 டாலர் கட்டணம். வெளிநாட்டவர் பாஸ்போர்ட் காமிக்கணும். இங்கே எங்க பக்கங்களில் அதெல்லாம் ஒன்னும் இல்லை.

 என் மனக்குறை என்னன்னா..... கஸீனோ உள்ளே படம் பிடிக்க அனுமதி இல்லை:( ப்ச்......





வெளியே வாசல் முற்றத்தில் நிறைய சாப்பாட்டுக்கடைகளின் கூடாரங்கள்.   மும்முரமான வியாபாரத்தில் இருக்கு. நமக்கும் பசி. ஆனால் இந்தக் கூடாரங்களில் நமக்கு ஒன்னும் வாகா இல்லை என்பதால் மாலில் இருக்கும் ஏகப்பட்ட ஃபுட்கோர்ட்டுகளில்,   நமக்குக்கிட்டே இருக்கும் ஒன்னில் நுழைஞ்சோம்.

 ஹரே க்ருஷ்ணா வெஜிடேரியன் ஸ்டாலில் போண்டாமாதிரி ஒன்னை சாம்பிள் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. பரவாயில்லையே. நல்லாத்தானே இருக்குன்னு அங்கேயே சாப்பாட்டுக்கு ஆர்டர் செஞ்சோம்.

 ஐயோ..... இப்படித் தூண்டிலில் போண்டாவை வச்சுப் பிடிச்சுட்டாங்களேன்னு புலம்ப வேண்டியதாப் போச்சு. சோம்பல்படாம பக்கத்துத் தெரு இஸ்கான் கோவிந்தாசுக்கே போயிருக்கலாம். விதி யாரை விட்டது?


 கெட்டுப்போன நாக்கை பழைய நிலைக்குத் திருப்ப மாலில் இருந்த ஸ்விஸ் ஐஸ்க்ரீம் கடையில் டபுள் ஸ்கூப் ஐஸ்க்ரீம் வாங்கித்தின்னுட்டு அறைக்குப் போக பொடி நடையில் கிளம்பினோம். போற போக்கில் சாயங்காலம் பார்த்து வச்சுருந்த ஷர்ட்ஸ் வாங்கிக்கணுமேன்னு மறுபடி அந்தப் பெரிய கடைக்குள்ளே நுழைஞ்சதும் கோபாலின் கால்கள் வேகமெடுத்து ஸூட் கேஸ் மாடிக்குப் போயிருச்சு. பை வாங்கலையோ பை.. பழிக்குப்பழின்னு நானும் கிச்சன் கேட்ஜெட்ஸ் இருக்கும் மாடிக்குப் போயிட்டேன்:-)

 லேட் நைட் முடியும் சமயம் (மணி ஒன்பதாகப்போகுது) ஒருவரை ஒருவர் கண்டுபிடிச்சோம். யாரும்  எதுவும் வாங்கலை. ஆனா பார்த்து வச்சுருக்கு. நாளைக்கு சனிக்கிழமைதானே. இவருக்கு வேலை இல்லை. காலையில் வந்து வாங்கிக்கணும்.

 தொடரும்............:-)

16 comments:

said...

//பணத்தின் ஓசை ஒரு தனி இனிமைதான் இல்லையா?//

ஐயோ, ஐயோ, அது மாதிரியான இசை வேற எதுனாச்சும் உண்டா? அதே மாதிரி லாட்டரியில வந்த நோட்டுக் கட்டுக்களை வச்சு எண்ணுகிற சுகம் இருக்கே, அலாதிதான் போங்க. சோறு தண்ணி வேண்டாமுங்க.

எனக்கு அந்த சுகம் எப்ப கிடைக்குமோ?

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

இந்த காசு என்னும் மோஹினி எப்படி மயக்கறா பாருங்க!

இவள் வலையிலே மாட்டிக்கிட்டுத்தான் மீளமுடியாமல் கிடக்கு மனுச இனம்:(

said...

அருமையான படங்களுடன் விளக்கம் அருமை... வாழ்த்துக்கள்...

'டணால்' தங்கவேலு ஒரு படத்தில், தினமும் பணத்தை தன் மேல் அபிசேகம் செய்து கொள்வது ஞாபகம் வந்தது...

நன்றி...

said...

paatti super

said...

வாங்க தி,தனபாலன்.

காசேதான் கடவுளடான்னு உலகம் இருக்கே!

அந்த சத்தம் காதுகளுக்கு ரொம்பவே பழக்கப்பட்டது. எங்காவது போகும்போது காசு கீழே விழும் ஓசை , மனுசரைத் திரும்பித் தரையைப் பார்க்க வைக்கும் இல்லையா?

said...

வாங்க நான்.

உங்களுக்காக இன்னும் ஒன்னு:-))))


கீழே இருப்பது போன பயணங்கள் ஒன்றில் நடந்தது:-))))


கையிலே வெறும் எட்டு டாலர்தான் இருக்கு. உள்ளே மணி மெஷின் இருக்கும் அதுலெ எடுத்துக்கலாமுன்னு இருந்துட்டோம். அங்கே எல்லாரும் க்ரெடிட் கார்டு போட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க. சில பாட்டிகள்கேஸினோ அங்கத்தினர் அட்டைகளை வச்சுத் தாளிச்சுக்கிட்டு இருக்காங்க. அஞ்சு செண்ட், ரெண்டு செண்ட், ஒருசெண்டுன்னு வெவ்வேற இயந்திரங்களில் இருக்கற எட்டை வச்சே விளையாடிக்கிட்டு இருக்கோம். நமக்கு அதிர்ஷ்டம் இருக்கற நாள் போல. அப்பப்பக் காசைக் கலெக்ட் பண்ணிக்கறேன். த சவுண்ட் ஆஃப் மணி ( ஃப்ரம் பக்கத்து மெஷின் பாட்டி) இஸ் கூல்!!! இப்பக் கையிருப்பு அஞ்சு டாலர். நிறுத்திக்கலாமுன்னு தோணுச்சு. கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் ரெண்டு மணி நேரம் ரெண்டுபேரும் விளையாடி இருக்கோம். மூணு டாலருக்கு இதைவிட மலிவான பொழுதுபோக்கு வேற எங்கே கிடைக்கும்? ஆனா நம்ம லிமிட் நமக்குத் தெரிஞ்சிருக்கணும். அது முக்கியம்:-)

said...

உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் :) சூப்பர்.

said...

//லேட் நைட் முடியும் சமயம் (மணி ஒன்பதாகப்போகுது) ஒருவரை ஒருவர் கண்டுபிடிச்சோம். யாரும் எதுவும் வாங்கலை. ஆனா பார்த்து வச்சுருக்கு//
இப்படி இல்ல இருக்கணும்

ரக்பி ஒரு முரட்டு ஆட்டம்னுதான் நினச்சு கிட்டிருந்தேன்..

said...

”காசி”னோவுக்கு ”காசி”ருந்தாத்தான் போக முடியும். அப்படிப் போறவங்களுக்கு காசி”நோ” சொல்லும். வெகுசிலருக்கே வெல்லும்.

இந்தக் காசினோவைப் பின்னணியா வெச்சு நெறைய ஆங்கிலப் படங்கள் வந்திருக்கு. அதுல எனக்கு ரொம்பப் பிடிச்சது ஓஷன்ஸ் 13. அதுல வில்லன் ஒரு சூதாட்ட விடுதி தொடங்குவான்.

அந்த விடுதியை மொத நாள்லயே மண்ணாக்குறதுக்கு ஒரு கூட்டம் திட்டம் போட்டு நடத்திக் காட்டுறதுதான் கதை. செண்டிமெண்ட், காமெடின்னு எல்லாம் கலந்து கலகலப்பாப் போகும்.

said...

காசினோ பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ல முடிந்தது... உங்க லிமிட் 20 டாலர். சரிதான்... லிமிட்டுக்கு மேலே போனாதான் பிரச்சனையே...

said...

வாங்க மாதேவி.

நம்ம எல்லை நமக்குத்தெரிஞ்சால் எங்கேயும் பிரச்சனையே இல்லை:-)))))

said...

வாங்க முரளிதரன்.

முதல் வருகைக்கு நன்றி.

ஆரம்ப காலத்தில் இது முரட்டு விளையாட்டுதான். உள்ளூர் ஆதி மனிதர்களின் பந்து, எதிரிகளின் தலை!

தலையைப் பந்த்தாடினான்னு வாசிச்சுருப்போமே.... அதெல்லாம் மெய்தான் போல!!!!

said...

வாங்க ஜீரா.

காஸினோவுக்கு அடிமையனவர்களும் இருக்காங்க. பிள்ளைகளை வண்டியில் கார்பார்க்கில் விட்டுப்போய் விளையாட்டில் ' மெய் ' மறந்தவர்களையெல்லாம் பொலீஸ் பிடிச்சுருக்கு!

சமீபத்துலே பாண்டு படம் ஒன்னு வந்துச்சே கஸீனோ ராயல்ன்னு.
அந்த டிவிடியை கோபால் ஹாங்காங்கில் இருந்து வாங்கியாந்தார்.

குறைஞ்ச பட்சம் சீன மொழியா இருக்கப்டாதோ? ரஷியன் மொழியில் இருந்துச்சு!

அப்ப...சீனமொழி தெரியுமான்னு கேக்கப்பிடாது கேட்டோ:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணம் நல்லா அமைஞ்சதுங்களா?

அரீயர்ஸ் எல்லாம் முடிச்சுட்டீங்க போல!!!!

உண்மையே. எல்லை முக்கியம். அப்பதான் நோ பிரச்சனை:-)

said...

பயணம் இனிமையாகவே இருந்தது. சென்ற புதன் அன்று தில்லி திரும்பினேன்....

said...

நல்லது. பயணப்பதிவை எதிர்பார்க்கிறோம் வெங்கட்.