Monday, August 20, 2012

Buy Now or Cry Later... (ப்ரிஸ்பேன் பயணம் 27)

இப்ப வாங்கு இல்லைன்னா பின்னாளில் (உக்காந்து) அழுன்னு எங்கே பார்த்தாலும் மாட்டி வச்சுருக்கு.

 "என்ன சமாச்சாரம்? எதுக்கு அப்புறமா அழணும்? இப்பவே வாங்குறதை வாங்கிக்கிட்டு அழுதால் என்ன? "

 " எதுக்கும்மா வாங்கிக்கிட்டு அழணும்? "

 "என்னைச் சொல்லலைங்க..... நான் வாங்கிக்கிட்ட பிறகு பில் வரும்போது நீங்க தான் உக்காந்து அழணும். அதைத்தான் சொல்றாங்க."

 இங்கே பெரிய ஸேல் நடக்கும் காலமாம் இது. இவுங்க வணிகத்துக்கான நிதியாண்டு ஜூனோட முடியுது. அதனால் கடையில் இருக்கும் சரக்குகளையெல்லாம் வித்துத் தொலைச்சுட்டு அடுத்த வருசம் புதுக்கணக்கு ஆரம்பிக்கவாம்!

 உண்மையைச் சொன்னால்.... கடைகளில் ஸேல் என்று போட்டுருக்கும் விலையிலேயே குறைஞ்சது நூறு சதமானம் லாபம் இருக்கத்தான் செய்யும். சீஸன் ஆரம்பிக்கும்போது புதுசா அறிமுகப்படுத்தும் பொருட்களையும் துணிமணிகளையும் குறைஞ்சபட்சம் நானூறு சதம் லாபம் வச்சுத்தான் விப்பாங்க. (எப்படித் தெரியுமுன்னு கேக்கப்பிடாது. நானும் ஒரு யாவாரத்தை ஆறு மாசம் நடத்திப்பார்த்துருக்கேனே) 

 மக்கள்ஸ்க்கு புதுசா வந்தவைகளை உடனே வாங்கிப்போட்டுக்கிட்டே ஆகணும். அதிலும் இந்த யங் பீப்பிள்ன்னு சொல்லும் இளைய சமூகம் இருக்கே.... அப்பப்பா.... வாங்கலைன்னா அந்த ஸோ கால்ட் நண்பர்கள் குழுவிலிருந்து விலக்கப்படும் அபாயம் இருக்கு(ன்னு இவுங்களாவே நினைச்சுக்கறதுதான்) 

அதனால் கடைகளில் யாவாரம் கொடிகட்டிப்பறக்கும். முதல் ஒரு சில மாசங்களிலேயே போட்ட பணத்தை எடுத்துருவாங்க. அப்புறம் வருசம் பூராவும் எதாவது ஒரு பெயரில் நடக்கும் ஸேல்களில் கொஞ்சம் கொஞ்சமா விலை குறைப்பு நடந்துக்கிட்டு இருக்கும்.

 ஃபேஷன் மாறிக்கிட்டே இருக்கு பாருங்க. கடைசியிலே ஸ்டாக் டேக்கிங் ஸேலுன்னு அடிமாட்டு விலை. பை ஒன் கெட் 2 ஃப்ரீன்னு வருமுன்னா பாருங்க.

 இங்கே புத்தகக்கடைகளிலும் இப்படித்தான். புதுப்புத்தகம் ரிலீஸ் ஆனதும் ரொம்பப்புகழ் வாய்ந்/த்த எழுத்தாளருன்னா அநியாயத்துக்கு 79.95ன்னு ஆரம்பிப்பாங்க! 99.95 எல்லாம்கூட சர்வசாதாரணம். அப்புறம்...? 

கழுதை தேய்ஞ்சு கட்டெறும்புதான்.... திடுக்குன்னு ஒரு நாள் பார்த்தா.... ஒரு ப்ளாஸ்டிக் பை அஞ்சு டாலருன்னு போட்டுருக்கும். அதாவது அந்தப் பையை வாங்கிக்கிட்டு, அது கொள்ளும் அளவுக்கு ஸேலில் போட்டுருக்கும் புத்தகங்களை நிறைச்சுக்கலாம். வழிய வழிய நிறைப்பது நம் சாமார்த்தியம்! நல்லநல்ல புத்தகங்களாத் தேடி நிதானமா எடுக்கலாம். ஆனா..... பையைத் தூக்க முடியாமல் சூப்பர்மார்கெட் ட்ராலியில் வச்சுத் தள்ளிக்கிட்டு(ம்) வந்திருக்கேன்

 சொன்னா நம்ப மாட்டீங்க எங்க ஊருலே தங்க நகைகூட அம்பது சதம் கழிவுன்னு அறிவிப்பாங்க. என்ன ஒன்னு, ஒம்போது காரட் என்பதால் நமக்கு அவ்வளவா ஆர்வம் இருக்காது. அப்படியும் விடமுடியுதா? வைரப்பெண்டண்ட் ஒன்னு இப்படி அரைவிலையில் வாங்குனேன். தங்கத்துக்கு மதிப்பில்லை. ஆனா வைரக்கல்லுக்கு இருக்கே! 

 இன்னொருக்கா , இந்த ஊருக்கு வந்த புதுசுலே ஒரு ஒம்பது கேரட் தங்கத்துலே கோபாலுக்கு (சர்ப்பிரைஸ்) பர்த்டே கிஃப்ட்டா இருக்கட்டுமுன்னு ஒரு ப்ரேஸ்லெட், (அப்பவும் அரைவிலைதான்) வாங்கினேன்.

 சில வருசத்துக்கு முன்னே இவர் சென்னைக்குப் போன சமயம் சரவணா தங்கநகைக்கடையில் உறவினர்களுக்கு நகை வாங்கப்போன சமயம் அவுங்க வாங்கப்போற தங்கத்தின் தரம் பார்க்க கம்ப்யூட்டர் மெஷீன் இருக்குன்னு அதுலே வச்சுப்பார்த்தப்ப, இவரும் தன்னுடைய ப்ரேஸ்லெட்டைக் கழட்டி மிஷீனுலே வச்சாராம். சீச்சீ.... வெளியே எடு. இது தங்கத்தை மட்டுமே தரம் பார்க்குமுன்னு மெஷீன் காறித்துப்பி, மானம் போச்சுன்னு சொன்னார்:-) 
ஒன்பதுக்கு நம்மூரில் இவ்ளோதான் மதிப்பு:( 

 கடந்த பல வருசங்களில் கவனிச்சது என்னன்னா..... ஃபேஷன் ஃபேஷன்னு ஆண்களுக்குள்ள உடுப்பு வகைகள் ஏராளமா வர்றதும். பெண்களைவிட ஆண்கள் இதுலே கிறங்கிப் போயிருப்பதுமா இருக்கு! உடுப்புன்னு இல்லை அலங்காரச்சாமான்களும் ஆம்பிளைகளுக்கு இப்போ எக்கச்சக்கம். நான் சம்பாரிக்கிறதையெல்லாம் மனைவிக்கும் பிள்ளைகளுக்குமே செலவு செய்யும் தியாகியா இருக்கேன்னு ஒரு காலத்துலே ஃப்லிம் காமிச்சுக்கிட்டு இருந்தவங்க எல்லாம் இப்ப வரம்பு மீறி தங்களுக்காகவும் செலவு செஞ்சுக்கிட்டு இருக்காங்க என்பதுதான்.

 இதுலே என்ன ஆறுதல்ன்னா.... நாளை மறுநாள் க்ரெடிட் கார்ட் பில் வந்தவுடன் மனைவிமேல் மட்டும் குற்றம் சாட்டமுடியாது என்பதே:-)))))

 சொல்லிவச்ச மாதிரி எல்லா பெரிய கடைகளிலும் உள்ளே நுழைஞ்சவுடன் தரைத்தளத்துலே  மேக்கப் சாமான்கள்தான்.  விதவிதமான பெயர்களில்  அழகுசாதனத் தயாரிப்பாளர்களின் தனித்தனி கவுன்ட்டர்கள்.   ஒவ்வொன்னிலும் யாரையாவது உக்காரவச்சு அழகுபடுத்திக்கிட்டே இருக்காங்க.  துல்லியமா முகம் பார்க்க  பெரிய உருப்பெருக்கும் கண்ணாடி.  எப்பேர்ப்பட்டவர்களுக்கும்  அதுலே பார்க்கும்போது கட்டாயம் ஏதோ  தன் முகத்துலே குறை இருப்பதாத் தோணிப்போகும்!

இந்தக் கடைகள் எல்லாம் குறைஞ்சது  ஏழெட்டு மாடிகளில் இருக்கு. ஒவ்வொரு தளமும்  அலங்காரம், ஆண்கள், பெண்கள் , குழந்தைகள், வீட்டு அலங்காரம், கட்டில்மெத்தை படுக்கைவிரிப்புகள், பாத்திர பண்டங்கள்.,  டிவி , கெமெரா, கம்ப்யூட்டர்ன்னு எலெக்ட்ரானிக்ஸ்,  ஸூட் கேஸ்கள்ன்னு  தனித்தனி தளத்தில் வச்சுடறாங்க.  கஷ்டமில்லாமல்  ஏறிப்போக எஸ்கலேட்டர்ஸ்.

சென்னையில்கூட லைஃப் ஸ்டைல் கடை ரெண்டு மூணு மாடிகளில் இருக்குல்லே? 

ஏகப்பட்ட விற்பனையாட்கள், உதவியாளர்கள்ன்னு பெரும்படை.  இம்மாம் பெரிய அடுக்கு மாடிகளை ஒரே சீதோஷ்ணத்தில் வச்சுக்கணுமுன்னா பவர் பில் எவ்ளோ ஆகுமுன்னு நினைச்சுக்குவேன்.  அதையெல்லாம் யாரு கட்டுவாங்க?  வாடிக்கையாளர்கள் தலையில்தான் இல்லே? அதான் எல்லா சாமான்களும் யானை விலை!


அம்பது டாலருக்கு மூணு அரைக்கை ஷர்ட். நூறு டாலருக்கு மூணு முழுக்கை பிஸினெஸ் ஷர்ட்டுன்னு கொட்டி வச்சுருக்கு. கடைக்குள் ஒரு மாடி முழுசும் ஆண்களுக்கான ஆடைஅலங்காரங்கள். நிறைய mannequins புது உடைகளைப்போட்டு மினுக்கிக்கிட்டு இருக்குதுங்க. இந்த மாடல்கள் எல்லோருக்கும் 100% பெர்ஃபெக்ட் பாடி! நல்ல உயரமா, தொப்பை இல்லாமல் கச்சிதமா மிடுக்கா நிக்கறாங்க. முந்தி எல்லாம் வெள்ளை இனத்து மாடலாகவே இருந்தது போய் இப்போ கலர்களுக்கு ஆதரவா கருப்பு நிற மாடல்களும் வச்சுருக்காங்க.

 ஆதிகாலத்துலேயே ( 15 ஆம் நூற்றாண்டு) மாடல் பொம்மைகள் செய்வது வழக்கத்துக்கு வர ஆரம்பிச்சுருக்கு. ஃப்ரான்ஸ் நாட்டிலே உடுப்புகள் டிஸ்ப்ளே செய்ய மாடல்கள் உண்டாக்குனப்ப நார் , மெல்லிய பிரம்பு எல்லாம் வச்சு உண்டாக்குனாங்க. 1835 லே கம்பி சுத்தி வச்சு பொம்மைகள், அதுக்கப்புறம் காகிதக்கூழாலேதான் செஞ்சாங்களாம். அப்புறம் நல்ல வழுவழுப்பு, ஷார்ப் ஃபீச்சர் இருக்கணுமுன்னு மெழுகுலே செய்ய ஆரம்பிச்சு, இப்ப ப்ளாஸ்டிக், லேடக்ஸ்ன்னு வந்து நிக்குது.

 மருத்துவத்துறை, ராணுவத்துறை, உடுப்புத்தயாரிக்கும் தொழில்துறைன்னு இப்ப ஏகப்பட்ட இடங்களில் இந்த mannequins பயன்படுத்தறாங்க.

 இன்னொரு விஷயம் நான் கவனிச்சது ...பத்திரிக்கைகளில் விளம்பரத்துக்கு உண்மை மனிதர்களை மாடலாப் பயன்படுத்திப் படம் எடுக்கும்போது பெண்கள் என்றால் குழைவு, சிரிப்புன்னு உணர்ச்சிக்குவியலான முகங்களும் ஆண்கள் மாடலாக இருக்கும்போது ஒரு அலட்சியமா நிற்பது போலவும் இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் கோபமான உணர்வைக் காமிச்சு ரூடா நிற்பதுபோலவும்தான் போடறாங்க. எதுக்கு இந்த ஆள் இவ்ளோ கோபமா பார்க்கறாருன்னு நினைச்சுக்குவேன். அப்படி இருந்தால்தான் ஆண்மைன்னு இருக்கோ என்னவோ?


 இங்கே பல பொம்மைகளுக்கு முகமே இல்லை. வெறும் தலை மட்டும் உடம்போடு இருக்கு! அப்பாடா.... கோபம் இல்லைன்னா மூஞ்சே இல்லை:-))))) இதுவும் நல்லாத்தான் இருக்கு. நமக்குப்பிடிச்ச முகத்தை வச்சுப் பார்த்துக்கலாம்,இல்லை!

 விதவிதமான எண்கள் போட்டுக் குமிஞ்சு கிடக்கும் ஷர்ட் மலைகளில் நமக்கு வேண்டியதைத் தேடிக்கிட்டு இருந்தோம். நீங்க என்ன வேணா சொல்லுங்க..... ஆண்களுக்குக் கலர் ச்சாய்ஸ் ரொம்பக் கம்மிதான். அழுக்குக்கலர்தான் அதிகம். இல்லைன்னா ஒரே சோகையான நிறம். அதுவும் இல்லைன்னா கட்டம், கோடு. இப்படி ....... ஆஃபீஸுக்குப் போடறதுன்னா வெள்ளை இல்லாட்டா நீலம்.

 நமக்கு வேணும் என்ற அளவுன்னு நினைச்ச ஒரு சட்டையை எடுத்துக்கிட்டுப் போட்டுப் பார்க்கணுமுன்னு கேட்டால், அதே அளவுள்ள (போட்டுப் பார்க்கறதுக்குன்னே வச்சுருக்கும் ) ஒரு சட்டையைக் கொடுத்தாங்க. இவர் ட்ரெஸ்ஸிங் ரூமில் போய் போட்டுவந்து காமிச்சப்ப,   'தெனாலி ஆலங்கட்டி மழை கமல்'  ஞாபகம்தான் வந்துச்சு. கைவிரல் நுனியில் இருந்து ஒரு முழம் ஸ்லீவ் கீழே தொங்குது:-))))))))))))))

 மார்பளவு கொஞ்சம் லூஸா இருக்கட்டுமேன்னுதான்....

 நிறைய ஆண்களுக்கு, மறுபாதி அப்ரூவ் பண்ணாதான் திருப்தி போல! ட்ரெயல் ரூம் வாசலில் மறுபாதிகள் காத்துக்கிட்டு இருந்தோம்.

 எப்பவும் பயணசமயத்துலே கைப்பையில் வச்சுருக்கும் இஞ்சு டேப் (அதெல்லாம் நான் ரெண்டாயிரம் துணி கெடுத்த முழு டைலராக்கும் கேட்டோ!! ) எடுத்துக் கையை அளந்தால்..... நம்மளவர் கை சின்னதா போச்சா என்ன? கடையில் உதவியாளரிடம் சொன்னால்..... காலர் சைஸும் ஸ்லீவ் சைஸும்தான் ஷர்ட்ஸ்லே பார்க்கணுமாம்.

 எப்பப்பார்த்தாலும் ரெடிமேட் வகைகளில் ஸ்மால் மீடியம் லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜுன்னே வாங்கிப் பழக்கப்பட்டுட்டோம் நியூஸியில். இதே மாதிரி சீனாவில் லார்ஜ் வாங்கினால் தொலைஞ்சோம். அது குழந்தைப்பிள்ளை போடுவதா இருக்கும். அங்கே வாங்கினால் ஏழெட்டு எக்ஸ் சைஸு வாங்கிக்கணும்:-))))) 

 அதுவும் ஸ்லீவ் அளக்கும்போது தோள்ப்பட்டையில் இருந்து விரல் நுனிவரை அளக்காமல் பின்னங்கழுத்து நடுவில் (தண்டுவட முதல் எலும்பில்) இருந்து கைவிரல் நுனி வரையாம்!

 அடராமா..... இந்த விஷயம் தெரியாமலே டெய்லரா இருந்துருக்கேனே:( பரவாயில்லை. இப்பத் தெரிஞ்சு போச்சுல்லே.... இனி லேடீஸ் அண்ட் ஜென்ட்ஸ் டெய்லர்ன்னு போட்டுக்கலாம்:-)))))

 தொடரும்............:-))))




31 comments:

said...

ஒருபோதும் அழக்கூடாதுன்னா இந்த மாதிரிக் கடைங்களுக்குப் போகாதீங்க.

said...

நல்ல அலசல்.

ஒன்பது கிராமை நம்ம ஊரில் திரும்பியும்தான் பார்க்க மாட்டார்கள்:). ட்ரெயல் ரூம் காத்திருப்பு சரி. பெற்றோரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

said...

நான் வாங்கிக்கிட்ட பிறகு பில் வரும்போது நீங்க தான் உக்காந்து அழணும். அதைத்தான் சொல்றாங்க."

நல்லாதான் சொன்னீங்க !!!


http://jaghamani.blogspot.in/2012/08/blog-post_19.html

செல்லப்பிராணிகள் !

said...

/சொல்லிவச்ச மாதிரி எல்லா பெரிய கடைகளிலும் உள்ளே நுழைஞ்சவுடன் தரைத்தளத்துலே மேக்கப் சாமான்கள்தான். /

கடையில் எது எங்க வைக்கணும் என்பது சயன்ஸ். அதற்கென கன்சல்டென்சிகள் இருக்கின்றன. தரைத்தளத்தில் வாசனையான மேக்கப் சாமன்கள் என்பது நம்மைத் தூண்டி உள்ளிழுக்கவே.

/நிறைய ஆண்களுக்கு, மறுபாதி அப்ரூவ் பண்ணாதான் திருப்தி போல! /

திருப்தியா? அதைச் செய்யாமல் இருந்தா எம்மாம் பெரிய ரிஸ்கு.

said...

ஆஹா... பை நிறைய புத்தகங்களை அள்ளிக்கலாமா.. ட்ராலில வெச்சுல்லாம் தள்ளிட்டு வந்ததுண்டா... துளசி டீச்சர். ஒரு டிராலிய வர்ற மாசம் எனக்காக இந்தியாவுக்குத தள்ளிட்டு வந்துருங்களேன், ப்ளீஸ்!

said...

எப்படித் தெரியுமுன்னு கேக்கப்பிடாது. நானும் ஒரு யாவாரத்தை ஆறு மாசம் நடத்திப்பார்த்துருக்கேன


அது என்ன கத?


சேல்ஸ் ரொம்ப நன்னா இருந்ததது பாட்டியம்மா...

said...

படங்கள் மூலம் நல்ல அலசல்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

நன்றி…

said...

எந்த ஊரு மால் மாதிரி இதுவும் பிரம்மண்டம இருக்கு. சிங்கத்துக்கும் இந்த சட்டை விவகாரமும்,ஷூ விவகாரமும் படுத்தி எடுக்கும். இப்ப நல்ல செருப்புக்கரர் கண்டுபிடிச்சுட்டோம்.

said...

//நானும் ஒரு யாவாரத்தை ஆறு மாசம் நடத்திப்பார்த்துருக்கேனே//ஆறு மாசத்துக்கு பெறவு யாவாரத்த மூடுனேங்கறியளே.அந்த ஈமு க்கு அச்சாரம் போட்டது நீங்கதானோ.

said...

நல்ல ஷாப்பிங்.:))

said...

புத்தக வியாபாரம் ஆச்சர்யம். திடீரென்று ஒருநாள் குறைந்து அஞ்சு டாலர் பை மட்டும் வாங்கி நிரப்பும் அளவு புத்தகங்களா... அட!

//இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் கோபமான உணர்வைக் காமிச்சு ரூடா நிற்பதுபோலவும்தான் போடறாங்க.//

கம்பீரம்னு நினைப்போ!

கந்தசாமி சார் மொழிபெயர்ப்பு ரசித்தேன்.

said...

வாங்க பழனி,கந்தசாமி ஐயா.

எங்களுக்கு வேற வழி இல்லீங்களே1 இங்கே இருப்பதில்தானே வாங்கிக்கணும்.

ஆனால் நான் கோபாலை ஒருமுறை கூட அழவச்சதில்லை இந்த 38 ஆண்டுகளில்:(

said...

வாங்க ராமலக்ஷ்மி.

சின்ன வயசுன்னா பெற்றோரும்தான்:-)
ஒன்பது கேரட்டைத்தானே சொல்றீங்க!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

உங்க வால்லபீஸ் சூப்பர்!

said...

வாங்க கொத்ஸ்.

அந்த சயின்ஸ் உண்மையே. சூப்பர் மார்க்கெட்டில் கூட சாமான்கள் அடுக்கும்போது Eye level buy level இருக்காம். ரொம்ப அவசியமானது மேல் அடுக்கில் இருக்கும். எப்படியும் வாங்கத்தானே போறாங்கன்னு:-)

வாசனைகளில் இந்த காஃபி , புதுசா பேக் பண்ணும் பேக்கரி ஐட்டம்ஸ் வாசனையும் வாங்கத்தூண்டும்.

வீடுகள் விற்பனைக்குப்போடும்போது ஓப்பன் ஹோம் வைக்கிறோமில்லையா அப்போ காஃபி மேக்கரில் காபி போட்டு வைப்பது, மஃப்பின் பேக் செஞ்சு முடிச்சதுன்னா அந்த அடுக்களைப்பக்கம் வரும்போது மணம் கவர்ந்திழுக்குமாம்.

ஆனா செஞ்ச ஐட்டத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கவேணாமாம். ஜஸ்ட் வாசனை பிடிச்சுக்கிட்டுப் போகட்டும்:-))))

said...

வாங்க பாலகணேஷ்.

நீங்க இங்கே வரும் சமயம் புத்தக ஸேல் இருக்கணுமுன்னு வேண்டிக்கறேன்.

உங்க சாய்ஸ்க்கு புத்தகங்களை செலக்ட் செஞ்சுக்கலாம்:-)

said...

வாங்க நான்.

அது ப.மு.காலம்.

said...

வாங்க தி. தனபாலன்.

வருகைக்கு நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

செருப்புக்கடைக்கு இன்னொரு வாடிக்கை வருதுன்னு சொல்லி வையுங்க:-))))

கோபாலுக்கு மூணு மாசம் ஒரு ஜோடி தாங்குனா அதிகம்:(

said...

வாங்க சேக்காளி.

நலமா? முதல் வருகைக்கு நன்றி.

நம்ம கடை ஜீவன் இல்லாததுங்க. யாரையும் பட்டினி போடும் தைரியம் எனக்கில்லையே:(

அதுகூட பதிவராகும் முன். இப்போ ஃபுல்டைம் பதிவர். மத்த யாவாரத்துக்கு நேரம் இல்லை பாருங்க :-)

said...

வாங்க மாதேவி.

ஷாப்பிங் செஞ்சுட்டு அப்படியே விட்டுற மாட்டேன்.

அதே பொருளை மத்த இடத்தில் பார்க்கும்போது அங்கே என்ன விலைன்னு க்ராஸ் செக் பண்ணி அல்ப திருப்தி கிடைச்சால்தான் மகிழ்ச்சியே:-))))

said...

வாங்க ஸ்ரீராம்/

கம்பீரம்....? உணமைதானோ?

இந்த வாரம் நீயாநானா பார்த்தபோது,
அலட்சியமா இருக்கும் ஆண்களைப்பிடிக்குமுன்னு ஒரு பெண் சொன்னாங்க!!!!

said...

//பத்திரிக்கைகளில் விளம்பரத்துக்கு உண்மை மனிதர்களை மாடலாப் பயன்படுத்திப் படம் எடுக்கும்போது பெண்கள் என்றால் குழைவு, சிரிப்புன்னு உணர்ச்சிக்குவியலான முகங்களும் ஆண்கள் மாடலாக இருக்கும்போது ஒரு அலட்சியமா நிற்பது போலவும் இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் கோபமான உணர்வைக் காமிச்சு ரூடா நிற்பதுபோலவும்தான் போடறாங்க. எதுக்கு இந்த ஆள் இவ்ளோ கோபமா பார்க்கறாருன்னு நினைச்சுக்குவேன். அப்படி இருந்தால்தான் ஆண்மைன்னு இருக்கோ என்னவோ?//

காலேஜ் பசங்களுக்கான உடைகளின் மாடல்கள் கூட கொஞ்சம் சிரிச்ச முகமா குறும்பு கொப்பளிக்கிற பார்வையோட இருப்பாங்க. இதுவே ஃபார்மல் உடைகளுக்கான வெளம்பரத்துல இப்டித்தான் ரூடா இருப்பாங்க.

எல்லா ஊர்லயும் சேல்ன்னாலே பழசை வாடிக்கையாளர்கள் தலையில் கழிச்சுக் கட்டுவதுதானோ!!

said...

பொதுவாவே இந்த மாதிரி கடைகள் பெண்களை மிகப் பெரிய அளவிலும் ஆண்களையும் மதிச்சு ஒரு அளவிலும் குறி வைச்சுப் பிடிக்கும்.

அதுவுமில்லாம பெண்களுக்கான வகைகள் எக்கச்சக்கம். ஆண்களுக்கு அந்த ஆப்ஷன்கள் குறைவு. மிஞ்சிப் போனா பேண்ட், ஜீன்ஸ், அரை/முழு டவுசர், டீசட்டை. அவ்வளவுதான். ஆணா பெண்களுக்குத்தான் விதவிதமான கலர்கள், டிசைன்கள் எல்லாம்.

என்னது, 400% லாபமா.. ம்ம்ம்.. நம்மால நாலு பேரு சாப்புடுறாங்க. சாப்ட்டு நல்லாயிருந்தா சரி :)

ஒங்களுக்கு ஒரு ஷாப்பிங் டிப்ஸ். சென்னையில் பாலம் சில்க்ஸ் போனீங்கன்னா நல்ல மார்டன் டிசைன்ல சேலைகளும் சுடிதார் பீஸ்களும் கிடைக்கும். பாண்டிபஜார்ல சரவணபவனுக்கு எதிர்ப்பக்கம் இருக்கு. பாக்க சின்னக் கடை மாதிரி இருக்கு. ஆனா எக்ஸ்குளூசிவ் ஃபார் லேடீஸ்.

said...

நீ..ண்..ட பதிவில் ஏறாளமான விசயங்களை அறிந்துகொண்டேன். நன்றி

said...

வாங்க அமைதிசாரல்.

மாடல் மாடல்:-)))))

//எல்லா ஊர்லயும் சேல்ன்னாலே பழசை வாடிக்கையாளர்கள் தலையில் கழிச்சுக் கட்டுவதுதானோ!! //

இங்கே அப்படியும் சொல்ல முடியாது! அறிமுக ஸேல் என்று கூட ஒன்னு வைப்பாங்க.

said...

வாங்க ஜீரா.

பாலம் ஸ்ல்க்ஸ் ஷப்பிங் டிப்ஸ்க்கு நன்றி.

பரவாயில்லையே.... நல்ல கவனிப்பு.

பதிவருக்கு இருக்கவேண்டிய முதல் தகுதியே இதுதான்.

said...

வாங்க கலாகுமரன்.

முதல் வருகைக்கு நன்றி,

அப்ப பயன் உள்ள பதிவுன்னுதானே சொல்ல வந்தீங்க:-)))))

said...

இனிய பகிர்வு... ஆண்களுக்கு என்ன இருந்தாலும் சாய்ஸ் கம்மி தான்... உண்மை டீச்சர். சுத்தி சுத்தி ஒரே மாதிரி ட்ரெஸ் தான்... :)

said...

வாங்க வெங்கட்.

பாவம்...ஆண்கள். அதான் கலர் ஃபுல்லா உடைகள் இல்லையேன்னு 'கலர்' பார்க்கறாங்க போல:-)))))

said...

படங்கள் மூலம் நல்ல அலசல்