Friday, August 03, 2012

பக்தி உலா ஸ்பெஷல்...... ( ப்ரிஸ்பேன் பயணம் 23)

பக்தியோடு பாவக்காய் சட்டியோடு வேகுதாம் இப்படி ஒரு பழமொழியைச் சின்னப்புள்ளையா இருக்கும்போது கேட்டுருக்கேன், இன்னிக்கு அதே பாவக்காயா நான் இருக்கப்போறேன்னு தெரியாமலேயே!!! இவர் கிளம்புனதும் நானும் கிளம்பினேன்.

 இன்னிக்கு முதல் விஸிட் ஹொட்டேலின் எதிரே தரிசனம்தரும் கோவிலுக்கு! நம்ம பக்கங்களில் குறிப்பாக வட இந்தியாவில் கோவிலுன்னு உள்ளே போனால் சிவன், விஷ்ணு, பிரம்மா, காளி, சரஸ்வதி, துர்க்கை புள்ளையார், ஹனுமன் இப்படி எல்லோரையும் கும்பிட்டுவரலாம். பெரும் ஆள் வித்தியாசம் எல்லாம் பார்க்கறதில்லை. உள்ளே வந்துட்டே.... இஷ்ட தெய்வத்தைக் கும்பிட்டுக்கோன்னு சொல்றதுதான்.

 இதைப்போலத்தான் இந்த ஆல் செயிண்ட்ஸ் சர்ச்சும் இருக்கு. 1862 ஸ்தாபிதம். குவீன்ஸ்லாந்து ஹிஸ்டாரிக்கல் பாரம்பரியம் உள்ளவைகளில் சேர்க்கப்பட்டுருக்கு. முக்கியத்தும் சிறப்பான கட்டிடக்கலைக்காகவாம். திருச்சபை ஆரம்பிச்சு ஏழு வருசம் ஆகி இருக்குக் கட்டி முடிக்க. 

ரெண்டு நாளைக்கு முன் இந்த ஹொட்டேலுக்கு இடம் மாறுனப்ப ஒரு எட்டு கோபாலுடன் வந்து கண்டுக்கிட்டு ஓடுனேன். நின்னு பார்க்க அப்போ நேரமில்லை. அதான்.... இன்னைக்கு ......

 ஒரு விண்ட்மில் பார்த்தோம் பாருங்க அது இதே ஏரியாதான். 1856 இல் இங்கேதான் இந்த சர்ச்சு கட்டிக்க முதலில் இடம் கொடுத்தாங்க. சின்னதாக் கட்டியும் முடிச்சு சர்வீஸ் நடந்துக்கிட்டு இருந்துச்சு. மக்கள் தொகை கொஞ்சம் கூட ஆரம்பிச்சவுடன் இடம் பத்தாதேன்னு கொஞ்சம் பெரிய கோவிலா இருந்தாத் தேவலாமேன்னு தோணிப்போச்சு. இந்தச் சின்னக்கோவிலை இடிச்சுட்டு இதே கல்லையும் சேர்த்துவச்சுக் கட்டிக்கலாமுன்னு தீர்மானம். அப்போதான் ரயில்பாதை இங்கே போட்டுக்கிட்டு இருக்காங்க.

சரியா சர்ச் நிலத்துக்கு அடியிலே சுரங்கப்பாதையில் ரயில் ஓடப்போகுது. அந்த அதிர்வுக்கு இந்தக் கற்கள் (Original Tabernacle Stone Blocks) தாங்குமான்னு பரிசோதனைகள் செஞ்சு பார்த்துட்டு சரிவருமுன்னு நிபுணர்கள் கொடுத்த அறிக்கையின் படி இந்தக் கற்களையும் ஆட்டத்துக்கு சேர்த்துக்கிட்டு 400 பேர்கள் கொள்ளூம் அளவுக்குக் கட்டி இருக்காங்க. அப்பதான் இதுக்கு ஆல் செயிண்ட் சர்ச்சுன்னு புதுப்பெயரும் வச்சாங்களாம்.

 பூக்கள் அலங்காரம் செஞ்சுக்கிட்டு இருந்த ஒரு பெண்மணியைத்தவிர அங்கே யாரும் இல்லை நான் போனபோது. சின்னப்பேச்சில் தெரிஞ்சது அவுங்க நியூஸிக்காரவுஹன்னு! சக கிவியைப் பார்த்த மகிழ்ச்சி எங்க ரெண்டு பேருக்கும். உள்ளூர் ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை. இன்னிக்கு டே ஆஃப். கடவுளுக்கு ஊழியம் செய்ய வந்துருக்காங்க. ஞாயித்துக்கிழமை பூசைக்குள்ள ஏற்பாடு.

 ஒரு அஞ்சு வருசமாச்சாம் ஆஸி வந்து. கணவருக்கு வேலை கிடைச்சதுன்னு இவுங்களும் வந்துருக்காங்க. இந்தப் பக்கங்களில் நர்ஸ் வேலைக்கு ரொம்ப டிமாண்ட் இருக்கு. நியூஸி ஆஸின்னு மாறிமாறி வேலைக்குப் போய்க்கலாம். கணவர் இன்னும் நாலு வருசத்துலே ரிட்டயர் ஆகிருவார். அப்போ நியூஸிக்கே வந்துருவோம். ஹேமில்டன் ஆஸ்பத்திரிக்குப்போய் வேலையில் சேர்ந்துக்குவேன்னாங்க. குடும்பம் நியூஸியிலேதான் இருக்கு. அடுத்தவாரம் போய் ஒரு பத்து நாள் இருந்துட்டு வருவேன்னாங்க. மகள் எங்கூருக்குப் பக்கம்தான். தொலைபேசி எண், அட்ரஸ், மெயில் ஐடி எல்லாம் பரிமாறிக்கிட்டோம்.

வெவ்வேற நாடுன்னாலும் இந்த ஆஸி, நியூஸி ரெண்டு நாட்டு குடிமக்களும் விஸா இல்லாமலேயே இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கேன்னு போய் வரவோ, அங்கே போய் நிரந்தரமா தங்கிக்கவோ, வேலை செய்யவோ, சொத்துபத்து வாங்கிக்கவோ எந்த ஒரு தடையும் இல்லை! கண்டம் முழுசும் ஒரே நாடு, அதுவும் எங்க நியூஸியைவிட பலமடங்கு பெருசு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால் இங்கத்து மக்கள் அங்கே வேலைக்குப்போறது சகஜம். நியூஸி குளிர் போதும் இனி ஓய்வு காலத்தைக் கொஞ்சம் குளிர் இல்லாத ஊரில் கழிக்கலாமுன்னு அங்கே போறவங்களும் இருக்காங்க.  'எங்களுக்குக் குளிர் நல்லா இருக்கு. ஆனாலும் அங்கே போய் வசிக்க ஆசை' ன்னு இருப்பவர்களுக்கும் ச்சாய்ஸ் இருக்கு. (மெல்பெர்ன் நகரம் எங்க கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்கு சிஸ்டர் சிட்டி) ஆஸியில் பலவித காலநிலைகள் உள்ள பகுதிகள் நிறையவே இருக்கு. அதான் சொன்னேனே முழுசா ஒரு கண்டமுன்னு:-)

 நல்ல அழகான அம்சமான கோவில் இது. உள்ளே இருக்கும் கண்ணாடிச்சித்திரங்கள் எல்லாம் ஸெயிண்ட் பால்ஸ்க்கு கண்ணாடிச்சித்திரம் தயாரிச்ச அதே கம்பெனி! ப்ரிஸ்பேன் நகரில் இருக்கும் மூத்த கண்ணாடி ஜன்னல்கள் இவை! ஆல்ட்டரின் இருபுறமும் இருக்கைகள் போட்டு, சுவர் ஓரங்களில் பரிசுத்தர்களின் சந்நிதிகள் வச்சுருக்காங்க.
குழந்தை யேசுவைத் தூக்கி வச்சுருக்கும் மேரி, யேசுவின் தந்தை ஜோசஃப் இப்படி. செயிண்ட் தெரெசா ஆஃப் அவிலா எனக்குப் புதுசு. படவிவரத்தில் இருக்கும் கடைசி பாராவைப் பாருங்க!!!!!!!!!!!! 

 ஒவ்வொரு சந்நிதி முன்னாலும் மண்டியிட்டு வணங்க சின்னதா, ஒரு மரத்திலான ஒரு ஸ்டேண்ட் அமைப்பு. ஆல்ட்டருக்கு வலப்பக்கம் தனிப்பட்ட ஜெபங்கள் செஞ்சுக்க இன்னொரு இடம். பார்க்க அழகா உப்பரிகை மாடம் போல இருக்கு! மேற்கூரை உத்திரங்கள், மரவேலைப்பாடுகள் எல்லாம் அபாரம். Hammer Beam Roof constructions. very rare in Australia


 இந்த வருசம் கோவில் கட்டி 150 வருசங்களானதுக்கு விசேஷ பூஜைகள் நடத்துனாங்களாம். அதுக்கான ஸ்பெஷல் மெழுகுவத்திகள் அங்கங்கே வச்சுருந்தாங்க. வெளியே வரும்போது கோவில் வாசலில் ஷூட்டிங். டாக்குமெண்ட்ரிக்காக எடுக்கறாங்களாம். ஆன் தெருவில் இறங்கி வந்தப்ப எதிர்ப்பக்கத்தெருமுனையில் ஒரு சர்ச். எல்லாம் நம்மூருலே தெருவுக்கு நாலு கோவில்கள் இருக்கும் கணக்குதான். இது செயிண்ட் ஆண்ட்ரூஸ் யுனைட்டிங் சர்ச். இது என்னடாப் புதுப்பெயரா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு அப்புறம் பார்த்துக்கலாமேன்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்:-(நேத்து இரவு  பார்த்தபோது   அழகா இருந்துச்சு.

 நியூஸி வந்த புதுசுலே நம்ம வீட்டுக்கு எப்படியும் வாரம் ஒரு முறை ரெண்டு லேடீஸ் நம்ம வாசலில் வந்து, செவந்த் டே அட்வெண்டிஸ்ட் சர்ச்சுலே இருந்து வர்றோம்னு சொல்லி நிப்பாங்க. நானும் என்னத்துக்கு இந்த ஊர்க்காரர்களோடு வெறுப்பை காமிப்பது? அதுவும் நம்ம நாட்டு விருந்தோம்பல் பண்பாடு குறைஞ்சுடுமோன்ற பயத்தில் உள்ளோ கூப்பிட்டு உக்காரவைப்பேன். கஷ்டமில்லாம சொர்க்கம் போக வழி சொல்லுவாங்க இவுங்க. எதுக்குக் கல்லைக் கும்பிடுடறே? எங்க சாமியைக் கும்பிட்டா உனக்கு நல்லது. ஜட்ஜ்மெண்ட் டேலே உனக்கு நல்ல தீர்ப்பு வரும்பாங்க.


 எனக்கோ மத விரோதம் ஒன்னும் இல்லை. எல்லா சாமியும் ஒன்னுதான் எனக்கு. . சர்ச்சுக்குள்ளே போய் உக்காந்து எம்பெருமாளைக் கும்பிட்டு வருவேன். சர்ச்சும் கோவில்தானே? ஆனால் நான் வளர்ந்த மதம் வேற இல்லையா? என் மதத்துலே தன்னை எந்த ரூபத்தில் வழிபட்டாலும் அது எனக்கே வந்து சேருமுன்னு எஞ்சாமி சொல்லி இருக்கார்.


 எரிச்சலை அடக்கிக்கிட்டு, எங்க மதம் எங்களுக்குத் தாய். நம்ம அம்மா அழகா இல்லைன்னு அடுத்தவங்க அம்மாவை நம்ம அம்மான்னு சொல்லமுடியுமாம்பேன். இவ சரிப்பட்டு வரமாட்டான்னு ஒரு சின்ன புத்தகத்தைக் காமிச்சு இதுலே எல்லா விவரமும் இருக்கும்பாங்க. அந்த புத்தகம் அம்பது செண்ட். நானும் போனாப்போகுது வாசிக்க ஆச்சுன்னு வாங்கிக்குவேன். கோவில் உண்டியலில் காசு போட்ட நினைப்பு! 
 ஆனாலும் மனசைக் குடையும் கேள்வி, நமக்கு ஆயிரத்தெட்டு சாமிகள், ஆயிரெத்தெட்டு கோவில்கள். இவுங்களுக்கு யேசு ஒருத்தர்தான் சாமி. அப்போ எதுக்கு ஆயிரத்தெட்டு வகைச் சர்ச்சுகள்? கேக்கவும் செஞ்சேன். எத்தனை வகை இருந்தென்ன? நாங்கதான் உண்மையான கிறிஸ்துமதச் சர்ச்சைச் சேர்ந்தவர்கள். ஞாயித்துக்கிழமைகளில் சர்ச்சுலே வாரப்பூஜை நடப்பது கொஞ்சமும் சரி இல்லை. பைபிளில் என்ன சொல்லி இருக்கு? ஆறுநாளில் படைப்புகளில் பிஸியா இருந்த கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்துக்கிட்டார்ன்னுதானே? அந்த ஏழாம் நாள் சனிக்கிழமைதான். அன்னிக்குத்தான் நாங்க கோவிலில் கூடி சாமி கும்பிடுவோம் எங்களுதுதான் உசத்தி. 


 போச்சுடா..... சாமி ஓய்வு கூட எடுத்துக்குவாரா?


 ஒருநாள் நானும் இவருமா வீட்டைப் பெயிண்ட் பண்ணிக்கிட்டு தலை முழுசும் சிதறுன பெயிண்ட்த்தூளா, அவதாரமா இருக்கும்போது வந்தாங்க. நாங்க பிஸியா இருக்கோமுன்னு கோபால் சொன்னதைக்கேட்டுட்டு இன்னொரு நாள் வர்றோமுன்னு போனாங்க. இவர் என்னன்னா இவுங்களை எல்லாம் ஏன் உள்ளே விடறேன்னு கத்தறார். நம்ம வீட்டில் வந்து உக்கார்ந்துக்கிட்டு நாம் கும்பிடும் சாமியை கல் கட்டைன்னு சொல்றதை ஏன் கேக்கணும் என்ற ஞானோதயம் அப்பதான் எனக்கும் ஏற்பட்டுச்சு. (பாருங்க எவ்ளோ அப்பாவியா அப்போ இருந்துருக்கேன்னு! ) 


 இன்னொரு நாள் வந்தப்ப வாசலிலேயே நிக்கவச்சு நான் வேலையா இருக்கேன். மன்னிக்கணுமுன்னு சொல்லிட்டு உள்ளே வந்துட்டேன். அதுக்குப்பிறகு அவுங்க ரெகுலர்ரா வர்றது நின்னு போச்சு:-) 


 வேற வீட்டுக்கு வந்தபின் அதே சர்ச்சுக்காரங்க இளவயது ஆட்களை அனுப்ப ஆரம்பிச்சுருக்காங்க. பொதுவா ஒரு வெள்ளைக்காரரும் ஒரு சீனருமா ஆணும் பொண்ணுமா வருவாங்க. அட்டகாசமா உடையில் நீட்டா கோட் ஸீட் எல்லாம் போட்டுக்கிட்டு. இதுக்குள்ளே நான் தேறி இருந்தேன். வாசலிலேயே நிக்க வச்சு, கடவுளைப்பற்றி சில வார்த்தைகள்ன்னு ஆரம்பிக்கும்போதே , ஸாரி. நான் வேற ஒரு மதம் ப்ராக்டீஸ் பண்ணறேன். ஹேவ் அ குட் டே 'ன்னு முந்திக்குவேன். இப்படித்தான் இன்னமும் நடக்குது:-) 

 இந்த யுனைட்டிங் என்னவா இருக்குமுன்னு நினைச்சுக்கிட்டே ஆன் தெருவில் போய்க்கிட்டே இருந்தேன்

 தொடரும்...............:-)

22 comments:

said...

எங்க மதம் எங்களுக்குத் தாய். நம்ம அம்மா அழகா இல்லைன்னு அடுத்தவங்க அம்மாவை நம்ம அம்மான்னு சொல்லமுடியுமாம்பேன்.//

சுருக்கமாகச் சொல்லி இருந்தாலும்
மிக மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்
படங்களும் அதற்கான விளக்கங்களும் நேரடியாகப்
பார்ப்பதைப் போன்ற உணர்வினை ஏற்படுத்திப்போகின்றன
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

said...

நல்லதொரு பயண பகிர்வு...
படங்கள் அருமை...

தொடர வாழ்த்துக்கள்...
நன்றி...

said...

//இன்னொரு நாள் வந்தப்ப வாசலிலேயே நிக்கவச்சு நான் வேலையா இருக்கேன். மன்னிக்கணுமுன்னு சொல்லிட்டு உள்ளே வந்துட்டேன். அதுக்குப்பிறகு அவுங்க ரெகுலர்ரா வர்றது நின்னு போச்சு:-) //

முழுக்கப் படிக்கக் படிக்க கண்ணீர் எட்டிப்பாத்துட்டு, சிரிச்சு மாழவில்லை.

:)

said...

Ecstasy of Teresaன்னு ஐரோப்பிய சர்ச்சுகளில் நிறைய படங்களும் சிற்பங்களும் பாத்திருக்கேன். அவங்கதான் இவங்களா?

சர்ச்சுக்குப் போறது எனக்கும் பிடிக்கும். ஏசுநாதரும் மேரியம்மாளும் எனக்கும் பிடித்த சாமிகள்தான்.

என்னைப் பொருத்தவரையில் ஒரே அரிசி எப்படி சோறா, இட்டிலியா, பிட்டா, ஆப்பமா, பிரியாணியா வேகுதோ, அதுபோல ஒரே இறைவன் நமக்குப் பிடிச்ச மாதிரியெல்லாம் வந்து காப்பாத்துறான். மத்தவங்க என்னவாச்சும் நெனச்சுக்கட்டும். :)

எங்க வீட்டுல சாமி அறையில் குழந்தை ஏசுவை மரியில் வைத்திருக்கும் மேரிமாதாவும் இருக்கிறார். அவருக்கு Black Madona என்று பெயர்.

said...

எங்க மதம் எங்களுக்குத் தாய். நம்ம அம்மா அழகா இல்லைன்னு அடுத்தவங்க அம்மாவை நம்ம அம்மான்னு சொல்லமுடியுமாம்பேன்...........

same pinch......same feel..
ayyyo.....ayyo...

said...

சர்ச் ரொம்ப அழகா இருக்கு டீச்சர்.candle நல்லா இருக்கு.நான் படிச்சா christian கான்வென்ட்ல இதே கதை தான் சொல்லுவாங்க,உங்க சாமி கல்லு,எங்க சாமி உசத்தி நு,இவங்களுக்கு வேற வேலையே கிடையாது.

said...

வாங்க ரமணி.

வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.

பயணக்கட்டுரைகள் விருப்பம் என்றால் நம் தளத்தில் ஏராளமானவை உண்டு.

said...

வாங்க கோவியாரே.

எத்தனை நாளுக்குத்தான் நல்லவ போலவே நடிப்பது? :-)))))

said...

வாங்க ஜீரா.

ஆஹா.... அரிசிக்கு எப்படியெல்லாம் பயன் இருக்கு பாருங்க:-)))))
நம்மூட்லேயும் ஒரு ஆப்ட்ட மேரிமாதா இருக்கு! கையில் குழந்தை மிஸ்ஸிங்:(

சாமி அறையில்தான் வச்சுருக்கேன்.

said...

வாங்க நான்.

பாட்டி சொல்லைத் தட்டாதே:-)))))

said...

வாங்க விஜி.

நானும் கிறிஸ்துவப்பள்ளியில்தான் படிச்சேன். ஆனால் அப்போ இந்தக் கல் மண் எல்லாம் சொல்லமாட்டாங்க.

சர்ச் கொயர்லே பாடுவேன். பொட்டு வச்சுக்கிட்டு.

கொயர் டீச்சர் பொட்டை எடுக்கச் சொன்னப்ப, மாட்டேன். கொயரில் இருந்து விலகிக்கறேன்னேன்.

எனக்கு நல்லாத் தெரியும் என்னை விட்டால் ஸோலோ பாட அப்போ எங்க க்ரூப்பில் யாரும் இல்லை என்பது.

பரவாயில்லை பொட்டு வச்சுக்கோன்னுட்டாங்க:-))))

said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. நானும் இங்கு வந்த புதிதில் அவங்களை மாதிரி ஆட்கள் வீட்டுக்கு வந்து பேச ஆரம்பிக்கும்போது எப்படி முகத்திலடித்தது போல் சொல்வது என்று நினைத்து நிறைய நேரத்தை வீணடித்திருக்கிறேன். இப்போ உங்களை மாதிரிதான். நல்லதொரு பகிர்வு. படங்கள் அற்புதம்.

said...

அழகான சர்ச்...
அருமையான பகிர்வு....

பதிவினையும் படங்களையும் ரசித்தேன் டீச்சர்.

said...

சர்ச் ரொம்ப அழகு துளசி. நம்ம ஊர்லயும் கோயம்பத்தூர்ல அவிலா கான்வெண்ட் இருக்கு.
20 வருஷங்களுக்கு முன்னால் நம் வீடு இருக்கும் நான்முனை சந்திப்பில் நின்று கொண்டு ''பாவிகளே''என்று பிரசங்கம் ஆரம்பிப்பார். அவரைத் துரத்த நிறைய ஏற்பாடுகள் செய்து இப்போது யாரும் வருவதில்லை.

said...

துளசி இங்க எங்க நெருங்கின உறவினர் பெருமாளுக்கு சரணாகதி செய்துகிட்டேன்னு சொல்லி மத்த சாமி எல்லாம் திரும்பிப்பாக்கமாட்டேன்னு ப்ரசங்கம் செய்யராங்க..அவங்களுக்கு பதில் சொல்லியே எனக்கு முடியமாட்டேங்குது..
திருப்புகழில் தேவாலயந்தனில் வாழும்ன்னு வர்ர வரிக்கு எங்க டீச்சர் தேவாலயத்தில் இருக்கும் பெருமாள் முருகன்னு சொல்வாங்க..:)))

said...

சர்ச் அழகாக இருக்கின்றது.

said...

வாங்க கீதமஞ்சரி.

அதாங்க நாம் கொஞ்சம் மரியாதை கொடுத்துப் பழகலாமுன்னா.... அதையே உணராம நம்ம முகத்துக்கு முன்னாலேயே அதுவும் நம்ம வீட்டில் உக்காந்துக்கிட்டு கல் மண்ணு மரமுன்னு சொன்னால் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையா இருக்க முடியும்?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் கருத்துக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

அட! கோவையில் அவிலாவா? இதுவரை தெரியாதுப்பா.... தகவலுக்கு நன்றி.

தெருமுனை பிரசங்கங்கள் இப்ப இல்லை போல இருக்கே! நம்ம தோழி ஒருத்தர் வீட்டுக்கு முன்னால் பெரிய ஹாலில் மைக் கட்டிக்கிட்டு பிரசங்கம் நடப்பதை ஒரு நாள் பார்த்தேன்.

தோழி மேல் பரிதாபம் வந்துச்சு:(

said...

வாங்க கயலு.

வைஷ்ணவத்தில் சரணாகதி தத்துவம் ரொம்பவே முக்கியம்தான். எங்க பாட்டிகூட பெருமாள் கோவிலைத்தவிர வேறெங்கும் போகமாட்டாங்க.

மறந்தும் புறம் தொழாதவர்! இதுவும் ஒருவகைக் கற்பு!!!!

சாமி என்ற ஒன்றை நமக்கிஷ்டமான பெயர்களில் கூப்புட்டுக் கொஞ்சறோம். இப்ப அடுத்த வீட்டு ரஜ்ஜுவை (ராஜலக்ஷ்மி) கொஞ்சுவதுபோல:-)

அவுங்க வீட்டுக்குத் தெரியாது அவனுக்கு இப்படி ஒரு பெயர் பக்கத்துவீட்டுலே வச்சுருக்காங்கன்னு! இவன் சொல்லிக்கூட இருக்கமாட்டான்:-)))))))

said...

வாங்க மாதேவி.

சர்ச்சுகள் அழகாத்தான் இருக்கு. அதுலே இருக்கும் சிலர்தான்........ ப்ச்:(