கணக்குச் சரியாச் சொல்லணுமுன்னா திருப்பதியைப் பட்டப்பகலில் பார்த்தே வருசம் 22 ஆகுது. வெளிநாடு போகுமுன் ஒருதடவை போய் டாடா பைபை சொல்லிட்டுப் போனோமா.......... அதுக்குப்பிறகு குழந்தைக்கு மொட்டை அடிக்க 1985 இல் போனோம். தமிழ்நாடு சுற்றுலா வாரியம் நடத்தும் ஒரு நாள் திருப்பதி டூர் அது. போனதும் தெரியலை, முடி இறக்குனதும் தெரியலை. கிடைச்ச ஒரு வாளித் தண்ணியில் அப்பனும்( மொட்டை போட்டுக்கிட்டார் தானாவே முன்வந்து!) மகளுமா தலையை நனைச்சதும் தெரியலை. சாமி தரிசனம் நல்லபடியாவே ஆனதும் தெரியலைன்னு வந்து சேர்ந்தோம். அதிகமாக் கஷ்டப்படாமல்தான் எல்லாமே ஆச்சு.
அதுக்குப்பிறகு டிசம்பர் 1989இல் இந்தியப் பயணத்தில் திருப்பதி போனப்ப, கம்ப்ளெக்ஸ் பில்டிங் எல்லாம் கட்டிவிட்டுக் கட்டம் கட்டமா நகர்ந்துபோய் சாமி தரிசனம் ஆச்சு. மார்கழி மாசக் குளிர் என்பதால் கூட்டமே இல்லைன்னு சொன்னாங்க. ஆனாலும் அதென்ன எப்ப வந்தாலும் ஒரு நிமிசத்துக்கு மேலே கிடைக்கமாட்டேங்குது? மனசுலே ஆதங்கம்:(
பஞ்ச்குலா பாலாஜி கோவிலுக்கு திருப்பதியில் இருந்து வந்தமூலவர்.
அண்ணன் மகளின் திருமணத்துக்காக தொன்னுத்தி நாலில் மீண்டும் இந்தியப்பயணம். போன பயணத்துக்கும் இதுக்கும் இடைவெளி நாலு வருசம், நாலு மாசம், நாலு நாள். இந்த முறை எதாவது ஒரு சேவை பார்க்கணுமுன்னு ஆசை. மெட்ராஸ் ( அப்பெல்லாம் இது மதராஸப் பட்டினம்தாங்க) திநகர் வெங்கடநாராயணா சாலையில் இருக்கும் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட நாளுக்கான தோமால சேவைக்கு பேங்க் ட்ராஃப்ட் எடுத்துக் கொடுத்துப் பதிவு செஞ்சுட்டு தில்லிக்குப் போயிட்டோம். அந்த நாளை விட்டால் நமக்கு வேறு ஏதும் பொருந்தாத நிலை. கிடைச்சால் கிடைக்கட்டும் என்று மாமரத்தில் கல் எறிஞ்சதுதான்.
கிடைக்கவும் செஞ்சது. சாயுங்காலம் கிளம்பி நேரா திருச்சானூர். கோவிலுக்குள் நுழைஞ்சப்ப தாயார் ஊஞ்சல் சேவை. மெல்லிய வெளிச்சத்துலே தகதகன்னு மின்னும் கொட்டைப்பாக்கு சைஸ் வைரமாப் போட்டுண்டு ஊஞ்சலில் இருந்து லேசா ஆடி ஆடி சேவை சாதிக்கிறாள். அந்த ஜொலிப்பு அப்படியே அள்ளிக்கிட்டுப் போனதென்னவோ நிஜம். இன்னும் உத்துப் பார்த்துருந்தால் பார்வை போகும் அபாயம் இருக்கு:-)))))
தரிசனம் முடிஞ்சு கீழ்த்திருப்பதியில் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு திருமலைக்கு ராத்திரி பத்துமணிக்குப் போய்ச் சேர்ந்தோம். கொஞ்சம் அங்கே இங்கேன்னு வேடிக்கை பார்த்துட்டுக் கோவில் எதிரில் உள்ள படிகளில் உக்கார்ந்து இருந்துட்டு ஒன்னரை மணிக்கு இந்த சேவைக்குண்டான வரிசைக்குப் போனோம். சுப்ரபாத சேவை ஆரம்பிச்சுருந்தது. வழக்கமான சுப்ரபாதம் காதில் விழுந்தது. இது ஒரு வைகாசி மாசக் கடைசி. இதுவே மார்கழியா. இருந்துருந்தால்.......நம்மாளு ஆண்டாள் திருப்பாவையைக் கேட்டுக் கண் முழிச்சுருப்பார்!
மொத்தமே 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் அரைமணி நேரத்துக்கு 'அவனை'ப் பார்க்க முடிஞ்சது. துளசிமாலையும் கழுத்துமா படு சிம்பிளா இருந்தார். தரிசனம் முடிஞ்சதும் மலை இறங்கி நேரா மெட்ராஸ் போயிட்டோம். காலை பத்துக்கு வீட்டில் ப்ரேக் ஃபாஸ்ட்.
ஒருதடவை சுப்ரபாதம் சேவை பார்க்கணுமுன்னு அப்பவே ஒரு ஆசை. நான் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? 'அவன்' ஆசைப்பட வேண்டாமோ?
அஞ்சு வருசம் ஓடிப்போச்சு. இப்போ உலகை இடம் வந்து கொண்டு இருக்கோம். நமக்கிஷ்டப்பட்ட ஊர்களில் இறங்கிக்கலாம். ஆனால் பயணம் ஒரு திசையை நோக்கியே இருக்கணும் என்பது கண்டிஷன். ஆறே வாரத்தில் என்ன பார்க்கக் கிடைக்குதோ அது...........ஆனால் அந்த 'அது'வில் இந்தியாவும் வேணும். ததாஸ்த்துன்னது தேவதைகள்!
இப்பவும் கல் எறிஞ்சு பார்த்தோம். .
ஆஆஆஆஆஆ கிடைச்சுடுத்து! அர்ச்சனை -))) மெட்ராஸில் இருந்து மாலை ரயிலில் கிளம்பிப் போனோம். மலைக்குப்போக ஒரு வண்டி கிடைச்சது. ராத்திரி மூணு மணிக்குக் கோவில் வாசலில் இருக்கணுமாம். ஓய்வெடுக்கவும் குளிக்கவும் சென்னையில் தேவஸ்தானம் அலுவலகத்தில் கேட்டதுபோலவே ஒரு விடுதி அறையும் கிடைச்சது. அந்த டாக்ஸிக் காரருக்குத் தெரிய வேணாம் நாம் தங்கும் இடமுன்னு டபாய்ச்சுட்டு வேற ஒரு டாக்ஸியில் ரூமுக்குப் போனோம். அது கொஞ்சம் ஒதுக்குப்புறமான காட்டேஜ்.
சாமான்களை அறையில் போட்டுட்டுச் சும்மாச் சுத்திப்பார்த்துட்டுச் சாப்பிட்டுட்டு வரலாமுன்னு கிளம்பி எதாவது வண்டி கிடைக்குமான்னு பார்த்துக்கிட்டே வந்தால்..... ஆண்ட்டின்னு ஒரு குரல். இங்கே யாருப்பா நமக்குத் தெரிஞ்சவுங்க? ஒருவேளை பெருமாளோன்னு பார்த்தால்............. நாம் யாருக்கு நம்மிருப்பிடம் தெரியக்கூடாதுன்னு டபாய்ச்சமோ அந்தப் பையன்:-))))
காலையில் அங்கப்பிரதக்ஷணம் பண்ணிக்கன்னு அங்கேயே இரவு தங்கிட்டானாம். "இங்கியா இருக்கீங்க? நல்லதாப் போச்சு. உங்களுக்கு ஒதுக்குன இடத்தில் நான் வண்டியை நிறுத்திக்கிறேன். காலையில் தரிசனம் முடிஞ்சு கிளம்பிடலாம்!"
இது எப்படி இருக்கு!!!
காட்டேஜில் குளிச்சு முடிச்சு இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத்தடுமாறி, அங்கங்கே தூக்கம் வராமல் கொட்டுக்கொட்டுன்னு உக்கார்ந்துருக்கும் முக்காட்டு மனுஷர்களிடம் Gகுடி எக்கட Gகுடி எக்கடன்னு கேட்டுக்கேட்டுப் போய்ச் சேர்ந்தோம். இந்த சேவைக்கும் 200 பேருக்கு மட்டுமே அனுமதி. நாங்க போனப்ப இன்னொரு குடும்பம் உள்ளே இருந்தாங்க. நாங்க ரெண்டாவது. நேரம் ஆக ஆக வந்தவங்க எல்லோரும் அங்கங்கே இருந்த இருக்கைகளில் இருந்தாங்க. தோமால சேவை முடிஞ்சு, இந்த கேட் திறந்ததும் பின்னால் இருந்த 193 பேரும் பாய்ஞ்சாங்க. நிமிஷத்தில் மந்திரம் போட்டதுபோல் நாங்க கட்டக் கடைசியா ஆக்கப்பட்டோம்.
என்னடா இது பெருமாளேன்னு கேட்டால்....எல்லாம் .'உன்' நன்மைக்கேன்னான். 197 பேரும் கீழே இருக்கும் இடத்தில் புளி அடைச்சது போல் உக்கார எங்க மூணு பேருக்கும் கடைசியில் நிக்கத்தான் இடம் கிடைச்சது. ஆஹா..... பெருமாளே உன் கருணையே கருணைன்னு கண்ணாடியை நல்லாத் துடைச்சுக் காதுலே மாட்டினேன்.
முழங்கால் மூட்டு வலி இருப்பதால் நின்னால் பிரச்சனை இல்லை. கால் மடக்கி உக்காரத்தான் முடியாது! ஒரு மணி நேரம் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்க...... தரிசனம் ஆச்சு. உண்மையைச் சொன்னால் ஒரு மணி நேரம் நம் உடல்தான் அங்கிருக்கே ஒழிய என்னதான் கவனமா இருந்தாலும் எண்ணங்கள் குவியாமல் மனசு, தன் அடங்காப்பிடாரி வேலையைக் காமிக்கத்தான் செஞ்சது.
வெளியே வந்தப்ப இன்னும் இருள் முற்றிலும் பிரியாத அதிகாலை நாலரை மணி. கோவில் உள்பிரகாரத்துலேயே கொடுத்த லட்டுகளை வாங்கிக்கிட்டு ராவோடு Raw வாக் கிளம்பிட்டோம்.
ஒவ்வொருமுறை திருப்பதி போகும்போதும் சம்ப்ரதாயப்படி கீழே கோவிந்தனையும், மங்காபுரத்தில் தாயாரையும் பார்த்துட்டே மேலே போகணுமுன்னு நினைச்சாலும் ஒன்னும் சரி வர்றதில்லை.
ஒவ்வொருமுறை இந்தியப் பயணம் வாய்க்கும்போதும், கட்டாயம் திருப்பதிக்கு போகணுமுன்னு மனசுக்குள்ளே ஒரு கொதிப்பு வந்துரும். தாய்வீட்டுக்குப் போகும் தவிப்புன்னு வச்சுக்குங்க.
பத்துநாள் இந்தியாவுக்குன்னு முடிச்சுட்டுக் கிளம்பும் முதல்நாள், தற்செயலா ஸ்பென்ஸர் ப்ளாஸாவுக்குப் போகவச்சான் 'அவன்'. எனக்கு சாமி வந்துருச்சு........
இவர் நம்ம வீட்டு சாமி:-)
சாமி வந்தபின்னே இந்த 12 வருசத்தில் பலமுறை இந்தியாவுக்கு வந்தாலும் திருப்பதிக்குப் போகணுமுன்னு தோணவே இல்லை. கொதிப்பு அடங்கிப்போச்சு. அவனே நம்மகூட இருக்கும்போது................வேற தனியா எதுக்கு?
இதோ..... இப்ப இந்த இந்தியப் பயணத்தில் ஒரு விஷயமா ரெண்டு வருசம் சேர்ந்தாப்போல தங்கிட்டோம். முதல்வருசம் சென்னையில் இருந்தப்பவும் போகணுமுன்னு தோணலை. இப்போ அடுத்தமாசம் நியூஸிக்குத் திரும்பறோமுன்னு ஏற்பாடுகள் ஆரம்பிச்சதும் திடீருன்னு போய்வரலாமுன்னு ஒரு எண்ணம் விதைச்சான் அவன்.
PIN குறிப்பு: கடந்த முப்பது வருசங்களில் நடந்த திருமலைப்பயணங்கள் மட்டுமே இப்பதிவுகளில். இந்த முப்பதின் முதல், திருப்பதிக்குப் போய்வந்தேன் நாராயணா ! 'வில்' இருக்கு:-)))))
தொடரும்......................:-)
Thursday, June 16, 2011
சாமிக்கு முன்னுரிமை (திருமலைப் பயணம் மினித் தொடர் பகுதி 1)
Posted by துளசி கோபால் at 6/16/2011 04:17:00 AM
Labels: அனுபவம் Thirupati திருப்பதி
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
மக்கள்ஸ்,
இந்த இடுகையில் ரெண்டு சுட்டிகள் இருக்கு. பால்மாறாம க்ளிக்கிடுங்க. இல்லேன்னா...... கதையைத் திரும்ப வெளியிடுவேன், ஆமா:-)))))))))))
மேடம் போஸ்ட்.
http://ramamoorthygopi.blogspot.com/2011/06/blog-post_16.html
வேங்கடரமணா கோவிந்தா....
ஐ... அடுத்த திருப்பதி தரிசனமா எங்களுக்கு... நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்....
தொடரட்டும்... நானும் பின்னே வருகிறேன்...
திருப்பதிக்கு போகணும்னு அயித்தான் கிட்ட கேட்டாலே ”ஜமதக்னியா” பார்வை வரும். எக்ஸ்பீரியன்ஸ் அப்படி. :)) இலங்கையில் எங்க ஹவுஸ் ஓனர் ஆண்டிக்கு நாங்க திருப்பதி கூட்டிகிட்டு போனதாலத்தான் அவங்களுக்கு பேரக்குழந்தைங்க பொறந்திச்சுன்னு ஒரு ஃபீலிங்க்ஸ். நான் இந்தியா வந்து இறைவனுக்கு நன்றி சொல்லணும், கூட்டிகிட்டு போன்னு சொல்லிக்கினே இருக்காங்க.
அவங்க வந்தா பாக்கனும். நீங்க சொல்லியிருக்கறபடி நாம நினைச்சா போதாது, அவனும் நினைக்கணும்
திருமலைப் பயணம் நாம் நினைக்கும் போது போக முடியாது என்று சொல்வார்கள். அது உண்மை தான்.. ”அவன்” நினைக்க வேண்டும். உங்க வீட்டு சாமி அழகா இருக்குங்க.
துளசி பழைய பதிவுகளையும் படிச்சுட்டுப்புதிய பதிவுக்கு வந்தேன்.:)
கண்கொள்ளாம பார்த்துட்டு வந்தேன்னு சொல்லுங்க
வாங்க கோபி ராமமூர்த்தி.
உங்க 'போஸ்ட்' பார்த்து அப்படியே ஆடிப்போயிட்டேன்:-)))))
நன்றிகள்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
ஆஹா.... லட்டுலே பேர்பாதி உங்களுக்கு:-)))))
வாங்க புதுகைத் தென்றல்.
இனிமே போகவே கூடாதுன்னுதான் இருக்கு இப்போதைக்கு.
ஆனால்...மற்ற கோவில்களைச் சுற்றிப் பார்த்து விவரம் சேகரிப்பதுபோல் இங்கே முடியறதில்லையேப்பா..... என்னா கூட்டம் என்னா கூட்டம்.....
இன்னொருக்காப் போயி......... ஹூம்:-)
வாங்க கோவை 2தில்லி.
அதே அதே. நாமா போகலைன்னாலும் கூப்பிட்டு வைக்கிறானே. ஒரு வேளை ச்சும்மா பேருக்கு அழைப்பு வச்சதும் நாம்தான் துள்ளிக்கிட்டு ஓடுறோமோ????
வீட்டு சாமிகளை என் பொண்ணு எனக்கான பார்பி டால் ன்னு சொல்றாள். தாயாருக்கு விதவிதமான பாவாடைகள் தைச்சு அலங்கரிக்கிறேனாம்.
வாங்க வல்லி.
ஆமாம்ப்பா....கண் 'கொள்ளாமல்' பார்த்தேன்:-))))
இன்னிக்கு ரெண்டாம் பகுதி ரிலீஸ். நாளைக்குக் கடைசிப்பகுதி.
மனசுலே குடைச்சல். அதான் எப்படியாவது கெட் ரிட் ஃப்ரம் த சிஸ்டமுன்னு தினம் ஒன்னுன்னு முடிச்சுட்டு மத்த வேலையைப் பார்க்கணும்:-)))))
இப்பத் தான் இந்தப் பதிவுகளை எல்லாம் பார்த்தேன் டீச்சர்!
அம்மா தாயே! அலர்மேல் மங்கை உறை மார்பா!
மஞ்சள் குங்கும பூஷிதையாய், நித்ய சுமங்கலியாய், அவனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாது இருக்கும் நப்பின்னை நங்காய் திருவே...
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
//டைச்ச ஒரு வாளித் தண்ணியில் அப்பனும் மகளுமா தலையை நனைச்சதும் தெரியலை. சாமி தரிசனம் நல்லபடியாவே ஆனதும்//
ஹா ஹா ஹா
அப்பனும் மகளும் தலை நனைக்க, நீங்க குளிரக் குளிரத் தண்ணி ஊத்தி விட்டீங்களாக்கும்...
திருப்பதிப் பயணம் நினைவுகளை மீட்ட தர்சனம். பகல்தர்சனம்தான் கிடைத்தது.
"சாமிவந்திடுச்சு" கண்டு கொண்டேன்.:)
வாங்க கே ஆர் எஸ்.
ஆஹா....... இப்பவாவது பார்த்தீங்களே!
அதெல்லாம் அவரே குழந்தைக்கும் ஊத்தி அதுலேயே தானும் தலைக்கு ஊத்திக்கிட்டாரு:-)
நான் குழந்தையை வாங்கிக்க துண்டோடு காத்திருந்தேன்:-))))))
வாங்க மாதேவி.
தரிசனம் கிடைச்சவரை மகிழ்ச்சிதானேப்பா!
வராக சுவாமி கோயில் போய் பார்த்த பின் தான் மேல திருப்பதி போகணும் என்று இங்கே அமெரிக்காவில் கேள்விப் பட்டுள்ளேன். நீங்கள் போயிருந்தீர்கள?
//இந்த இடுகையில் ரெண்டு சுட்டிகள் இருக்கு. பால்மாறாம க்ளிக்கிடுங்க. இல்லேன்னா...... கதையைத் திரும்ப வெளியிடுவேன், ஆமா:-)))))))))))//
கிளிக்கி படிச்சும் ஆச்சு ! நன்று.
வாங்க தக்குடு.
சம்ப்ரதாயமெல்லாம் இப்ப மலையேறிக் கிடக்கு. முந்திமாதிரி காலாற நடந்து சந்நிதி சந்நிதியா நடந்து சேவிச்சதெல்லாம் போச்சு:(
ஓட்டமே ஓட்டம். ட்ரைவர் கொண்டு போகும் வழியில் எது கிடைக்குதோ அது!
வாங்க ஷன்முகவேல்.
பால்மாறாமைக்கு ஒரு விசேஷ நன்றி:-)
நானும் ஒரு அஞ்சு வருசமா திருப்பதி போக நினைத்து போகவில்லை. இப்பத்தான் பிப்ரவரி 19ல் என் பிரண்ட் ஒருத்தன் கல்யாணத்துக்குப் போய் அப்படியே மொட்டை தரிசனம் எல்லாம் ஆச்சு.
Post a Comment