Thursday, June 02, 2011

இறைவனிடம் கையேந்துங்கள்....((ராஜஸ்தான் பயணத்தொடர் 19)

ராஜபுதன கட்டிடக்கலையில் இருக்கும் முகப்பு வாசலைக் கொஞ்சம் அசுவாரஸியத்தோடு பார்த்துக்கொண்டே நுழைஞ்ச எனக்குக் கண்ணெதிரில் இருந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி! தமிழ்நாட்டுக் கோபுரம் ஒன்னு அஞ்சு நிலையில் தந்தத்துலே செஞ்சு வச்சதுபோல் ஜொலிக்குது! வடகலை நாமம் வேற!
கோவிலின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. இந்த முகப்பு வாசலில் இருந்து கண்ணில் படுவதை படம் எடுத்துக்கலாமாம். கெமெராவை அங்கே இருந்த செக்யூரிட்டி வசம் கொடுத்துட்டுப் போகணும்.
வாசலில் இருந்து கோவிலுக்குள் போக நல்ல கடப்பைக்கல் தரை என்ன? அதுலே அழகழகாப் போட்டுருக்கும் கோலம் என்ன? ஆஹா...... ஒரு பத்துபனிரெண்டு படியேறி உள்ளே நுழையணும். படிகளில் எல்லாம் புள்ளி வச்ச கோலங்கள். கோபுர வாசலில் நுழைஞ்சதும் கொடிமரம், தங்கத்தகடு போர்த்தி இருக்கு. கண்ணெதிரில் பெரிய சதுர மேடைப்போல் மண்டபம் ரெண்டு பக்கங்களிலும் படிக்கட்டுகளுடன். ரெண்டு படிகளுக்கும் இடையில் பெரிய திருவடியின் சந்நிதி. இவருக்கு நேர் எதிரா மண்டபத்தின் மறுகரையில் அர்த்தமண்டபம். அதன்பின்னே கருவறை. மஹாவிஷ்ணு வைகுண்டத்தில் எப்படி இருப்பாரோ அதே போல் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்!

நாம் கோவிலுக்குள் நுழையும் சமயம் கோவில் மணி டாண் டாண்ன்னு ஒலிக்க நித்ய பூஜை (சாயரட்சை) ஆரம்பம். நாங்களும் வேகமாய் ஓடி முன்மண்டபத்துலே நின்ன கூட்டத்தில் கலந்தோம். பூஜை முடிஞ்சு சடாரி, தீர்த்தம் எல்லாம் ஆனதும் படிகளில் இறங்கி உள் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம். தாயார், கோதாம்பாள் ( எல்லாம் நம்ம ஆண்டாளம்மாதான்) ரங்கநாதர், ரகுநாதர் (ராமர் ) சுதர்ஸனர், லக்ஷ்மி நரசிம்ஹர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ வேதாந்த தேசிகர். ஆழ்வார்கள் இப்படித் தனித்தனி சந்நிதிகள். அஹோபிலத்தில் இருந்து லக்ஷ்மி நரசிம்ஹர் சிலையைத் தூக்கி எடுத்து நடந்தே வந்துருக்காங்க ஒரு குழுவினர். ஆறு மாசம் ஆச்சாம்!

எல்லா சந்நிதிகளுக்கும் யார் என்ன என்ற விவரம் வாசல் நிலையில் ஹிந்தியில் எழுதி வச்சுருக்கு. ஒரு அறை வாசலில் மட்டும் 'உள்ளே வர அனுமதி இல்லை' என்று தமிழில்:-))))) என்ன ஏதுன்னு இல்லாம சட்னு நுழையும் மக்களுக்கான தனி அறிவிப்பு! தமிழேண்ட்டா..........



மறுபடி வைகுந்த நாதனை தரிசிக்கலாமேன்ற ஆசையில் மீண்டும் படி ஏறி மூலவர் சந்நிதிக்குப் போனோம். ஹப்பா........... என்ன ஒரு அழகான திரு உருவம்! பார்த்து மனசுலே வச்சுக்கிட்டால் 'அங்கே' போகும்போது குழப்பம் இல்லாமல் இருக்கும், இல்லை!!!!!

அப்போ அங்கே வந்த பட்டர் எந்த ஊருன்னு கேட்டார். சென்னை! உடனே தமிழில் பேச ஆரம்பிச்சார். அட! தமிழா !!! நமக்கும் ரொம்ப நல்லதாப் போச்சு. இந்தக் கோவிலைக் கட்டி நிர்வாகம் செய்வது ஸ்ரீ சிமெண்ட்ஸ் உரிமையாளர்களாம். எல்லாப் பட்டர்களுமே தமிழ்நாட்டுலே இருந்து வந்தவங்களாம். மொத்தம் பத்துப்பேர். நல்ல சம்பளம். சாப்பாடு, தங்குமிடம் எல்லாம் இலவசம். வருசத்துக்கு ஒரு மாசம் லீவு. முறை போட்டுக்கிட்டு லீவு எடுத்துக்கணுமாம். (அட! இது நல்லா இருக்கே!)

பெருமாளுக்குத் தளிகை எல்லாமே தனியா இங்கேயே செய்யறாங்களாம். அதுக்கும் ஏழெட்டுப்பேர் இருக்காங்க. தினமும் காலையும் மாலையும் நைவேத்தியம் முடிஞ்சவுடன் பிரசாதமாக் கொடுத்துருவோம். நீங்க எங்கே தங்கி இருக்கீங்கன்னார். புஷ்கர் பேலஸ். அப்போ எட்டரைக்கு வந்துருங்கோ..... பிரசாதம் வாங்கிக்குங்கோன்னார்.

எல்லா உற்சவங்களும் பூஜைகளும் முறை தவறாமல் நடத்தறோம் . இன்னிக்குக்கூட பெருமாள் வீதி உலா அங்கே பழைய கோவிலில் நடந்துண்டுருக்கு. இப்ப உடனே போனால் நீங்களும் கலந்துக்கலாம் என்றார். எந்தப் பழைய கோவில்? எங்கே? பழைய ரங்ஜி மந்திர் இருக்காம். 'அவ்வளவு தூரமில்லை'ன்னார். இருட்டினபிறகு புது இடத்துலே என்னன்னு தேடிப் போறது?
இப்போ இதை எழுதும்போது வலையில் தேடினால்...... அடடடா..... என்னமா இருக்கு அந்த பழைய கோவில்!!! மிஸ் பண்ணிட்டோமேன்னு மனசு அடிச்சுக்குது:(

இந்தப் புதுக்கோவில்(!) கட்டியே 91 வருசம் ஆகுது! 1920 லே கடைக்கால் போட்டு அஞ்சு வருசத்துலே கட்டி முடிச்சுருக்காங்க. ஸ்தபதிகள் எல்லாம் தமிழ்நாட்டுலே இருந்து வந்து தங்கி வேலையை முடிச்சுருக்காங்க. வெளிப்பிரகாரத்துலே சுத்துவட்டமா ஏகப்பட்ட வீடுகள். இதுதான் இப்போ பட்டர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள் தங்கும் விடுதிகளா இருக்கு.

ரொம்பவே பெரிய இடம்தான் இந்த வளாகம். மொத்தம் 28800 சதுர மீட்டர்கள். உள்ளுர் கணக்குலே சொன்னால் 20 பிகா(Bigha). 'தோ பிகா ஜமீன்'னு ஒரு ஹிந்திப்படம் அந்தக் காலத்துலே வந்துச்சு.

இன்ன பூஜைக்கு இன்ன கட்டணம், இதுக்கு இந்த சார்ஜ்ன்னு ஒன்னுமே இங்கே இல்லை. எல்லாச் செலவுகளையும் ஸ்ரீ சிமெண்ட்ஸ் பார்த்துக்கறாங்க. வருசத்துக்கு முப்பது லட்சம் உத்தேசமான செலவாம். நாம் செய்யவேண்டியதெல்லாம் உள்ளே போய் கண் நிறைய தரிசனம் செஞ்சுட்டு (டைம்லே போய்) பிரசாதத்தை வயிறு நிறைய சாப்பிட வேண்டியதுதான் போல!

நிறைய யாத்ரீகர்கள் வந்து தரிசனம் செய்யறாங்க. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் கூட ஒரு மூவாயிரம் பக்தர்களோடு இங்கே வந்து உபன்னியாசம் கூடச் செய்தார் என்ற விவரமும் கிடைச்சது.

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கேன்னு அறைக்குத் திரும்பினோம். அப்படியே வரும் வழியில் இருந்த கடைக்குள்ளே நுழைஞ்சு (பேரம் பேசி) எனக்கொரு ஸல்வார் செட். குஜராத்தி Tடை அண்ட் Dடையில் ராஜஸ்தான் பர்ச்சேஸ். கோபாலின் 'வாங்கித் தரும் ஆசை'யைக் கெடுக்கவேணாமேன்னு வாங்கிக்கிட்டேன். என் தலை சுற்றல் மயக்கம் போன இடம் தெரியலை! குளக்கரை முழுசும் விளக்கேத்தி வச்சு ஜிலுஜிலுன்னு இருக்கு! நம்ம வெராந்தாவுலே இருந்து பார்த்தால் வராஹ காட் முழுசும் எக்ஸ்ட்ரா அகல்ஸ் ஜொலிக்குது. மனசுக்குள்ளே சாந்தி வந்து மணை போட்டு உக்காந்தாப்புலே இருக்கு! என்னதான் சொல்லுங்க..... இந்த அகல் விளக்குகளின் மினுக் மினுக் வெளிச்சம் தரும், அழகுக்கு வேற எந்த மின்சார விளக்குகளும் ஈடாகாது.


எட்டரைக்கு அஞ்சு நிமிசம் இருக்கும்போது மீண்டும் ரங்ஜி கோவில். வெளிப் பிரகாரத்துலே நடைபாதையை விட்டுட்டு ரெண்டு பக்கமும் சுத்திவரப்போட்டுருக்கும் மணல் வெளியில் ஏதோ பீச்சுக்கு வந்துட்ட மாதிரி குழந்தை குட்டிகளோடு அப்படி ஒரு கூட்டம். கோபுரவாசல் ஒருக்களிச்சுச் சாத்தி இருக்கு. பிள்ளைகள் ஓடியாடி உருண்டு புரண்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க. பெண்கள் கூட்டம் கூட்டமா குடும்பம், தோழியர் இப்படி கதை பேசிக்கிட்டே பிள்ளைகளை ஓரக்கண்ணால் கவனித்தபடி....... நல்ல மீட்டிங் ப்ளேஸ்! பதின்ம வயதுக்காரர்கள் அவர்களுடைய நட்பு வட்டத்தில்! இடைக்கிடையே செய்தித்தாள் துண்டுகளை ஒருத்தொருக்கொருத்தர் கொடுப்பதும் வாங்குவதுமாய்...... பிட் நோட்டிஸா என்ன?

கோபுர வாசலுக்கு வெளியில் இருந்த சின்ன மணிக்கூண்டில் இருந்த மணி ஒலிக்கத் தொடங்கியது. அதை அடிக்கும் பணியாளர் கோபுரவாசல் கதவில் ஒருக்களிச்சுச் சாய்ஞ்சவாறே கயிறை இழுத்து அடிக்கிறார். மணி அடிக்க பிள்ளைகளுக்குப் பொதுவாவே ஆர்வம் இருக்கு பாருங்க..... ஒன்னு ரெண்டு ஓடிப்போய் கயிறை வாங்கி அதும்பாட்டுக்கு இழுத்து இழுத்து அடிக்க..... டாண் டாண் ன்னு அந்தப் பிரதேசம் முழுவதும் ஒலி பரந்து பரவுது!

பத்து நிமிசம் இடைவிடாத மணி ஓசை! கோபுர வாசல் திறந்துச்சு. மக்கள் கூட்டம் உள்ளே குபீர்ன்னு பாய்ஞ்சாங்க. நாங்களும் கோவிலுக்குள்ளே போய் இன்னொருக்கா மூலவரைச் சேவிக்க மண்டபத்துப் படிகளில் ஏறிப் போயிட்டோம். நாங்க ரெண்டு பேர் மட்டுமே நிக்கிறோம். ஏகாந்த ஸேவை! கூட்டம் எங்கே போச்சு?

உள்பிரகாரத்தின் இடப்பக்கம் எதிரும் புதிருமா ரெண்டு வரிசையா பந்தியில் உக்காந்துருக்காங்க எல்லாரும். அந்தக் கோடியில் ஆரம்பிச்சு நாலைஞ்சு பேர் பிரசாதம் விளம்பிக்கிட்டே வர்றாங்க. மக்கள்ஸ், நியூஸ் பேப்பரை நீட்டி அதுலே வாங்கிக்கறாங்க. ஆஹா.... இதுக்குத்தானா? பேப்பர் ப்ளேட்ஸ்!!!!!

நாங்க ரெண்டு பேரும் போய் வெறுங்கையுடன் பந்தியின் 'வாலில்' உக்கார்ந்தோம். கருப்புக் கொண்டைக்கடலை சுண்டல், வடை, கல்தோசை, அப்பம், புளியோதரைன்னு ஒன்னொன்னா வரவர கையேந்தி வாங்கிக்கிட்டோம். நமக்குப் பக்கத்தில் இருந்த ஒருத்தரைப்பார்த்துக் காப்பி அடிச்சதுதான். அதுவுமில்லாம குருத்வாராக்களில் இரு கையும் ஏந்தி ரொட்டிகளை வாங்கத்தான் பழக்கப்பட்டுருந்தோமே!!!

'கையேந்த வச்சுட்டானேம்மா'ன்னு கோபால் புலம்பிக்கிட்டு இருந்தார்:-) சாமி பிரஸாதம், கூப்பிட்டுக் கொடுக்கறான். கை ஏந்துனா தப்பே இல்லை. சரணாகதின்னு இருப்பதுதான் சிறந்தது'' ன்னு நான் சின்னதா லெக்சர் அடிச்சுக்கிட்டு இருக்கேன். அதுவுஞ்சரிதான். கடவுளுக்கு முன்னே தாழ்மையாத்தான் இருக்கணுமுன்னு ஒத்துண்டார்............:-))))
(சினிமா விடுதா பாரு)

கடைசியா ததியன்னம் வருமுன்னு என்னிடம் கோபால் சொன்ன அடுத்த விநாடி........கல்லெறிஞ்ச காக்கைக்கூட்டம் போல மக்கள்ஸ் எல்லாம் எழுந்து ஓடிட்டாங்க. கடை மூடியாச்! உள்ளூர் மக்கள்ஸ்க்கு எல்லாம் நல்லாத் தெரியுது, எது ஆரம்பம் எது முடிவுன்னு.....!!!

பந்தியில் இருந்து எழுந்து நிற்பதிலும் நாந்தான் கடைசி. கை கழுவலாமுன்னா..... குழாய் இருக்கும் இடம் எங்கே? நல்லவேளையா எதுவுமே கையில் ஒட்டலை. கிருஷ்ணார்ப்பணமுன்னு சொல்லி ரெண்டு கைகளையும் பரபரன்னு உரசி ட்ரைக்ளீன் செஞ்சாச்சு. சும்மா இருந்தவளைக் கூப்பிட்டு சாப்பாடு போட்ட 'தாதா' வை இன்னொருக்கா பார்த்துட்டு நன்றி சொல்லலாமுன்னு மீண்டும் மூலவரைப் பார்க்கப் போனோம். முக்கியஸ்தர்கள் சிலர் நின்னுக்கிட்டு இருக்காங்க. பட்டர்களின் கவனிப்பு பார்த்தால் அப்படித்தான் இருக்கு. ஸ்ரீ சிமெண்ட்ஸ் குடும்பமோ என்னவோ? தடுப்பைத் திறந்து அவுங்களை அர்த்தமண்டபத்துள் விட்டாங்க. ஒதுங்கி இருந்த நமக்கும் உள்ளே வாங்கன்னு அழைப்பு!

ஆரத்தி எடுத்து சடாரி தீர்த்தம் எல்லாம் ஆச்சு. வயித்துக்கும் மனத்துக்கும் நிறைவைத் தந்துட்டான்! "பெருமாளே நீர் நல்லா இரும்"

'இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லையென்று சொல்வதுமில்லை' என்ற நாகூர் ஹனிஃபாவின் பாட்டு மனசுக்குள் வந்து போச்சு.

கோவில் மூடும் நேரம் வந்தாச்சு! அறைக்குத் திரும்பும் வழியில் தெருவில் நடந்து போகும் வெள்ளைப் பெண்மணிகள் தெருநாய்களைக் கொஞ்சிக்கொண்டு இருக்க நாய்களும் கூழைக்கும்பிடு போட்டு வாலை ஆட்டுதுகள். நம்ம பங்குக்கு நாமும் நாய்களைக் கொஞ்சிட்டுப் போனோம். அதான் ஓடிவந்து காலை முட்டி நிக்குதுகளே:)

'நீ பாட்டுக்கு சாப்பிட்டுட்டே....வயித்துக்கு ஏதாவது ஆகிடப்போகுது'ன்னார் கோபால். 'பெருமாளே கூப்பிட்டுக் கொடுத்தான். ஒன்னும் ஆகாதுன்னு நினைக்கிறேன்'னேன். ஒன்னும்தான் ஆகலை!



PIN குறிப்பு: கோடை விடுமுறைக்குப் பள்ளிக்கூடம் பத்து நாள் லீவு:-)
சி.செ. அழைக்கிறது!!!

22 comments:

said...

அட துளசி தளத்தில் கோடை விடுமுறையா.... சி.செ.அழைப்பதனாலோ...

இறைவனிடம் கையேந்துவதில் எந்தத் தவறும் இல்லையே... அழகாய் இருக்கிறது கோவிலும் அதன் விளக்கங்களும்...

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கொடுங்கோடையில் இருந்து வெறும் கோடைக்கு:-)

சென்னை வெய்யில் எவ்வளவோ தேவலை. சண்டிகரில்.....ஐயோ:(

பொழுது விடியும்போதே 38 டிகிரி வீட்டுக்குள்ளே:(

said...

டீச்சர் கூடவே உக்காசுண்டு பிரசாதம் எல்லாம் ஸ்வீகரிச்சுண்ட மாதிரி திருப்தியா இருக்கு. காரசாரமான புளியோதரையோட ஆர்பாட்டம் இல்லாத தத்யான்னம் சாப்பிட்ட மாதிரி அழகான பதிவு டீச்சர்!..:))

said...

'இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லையென்று சொல்வதுமில்லை' என்ற நாகூர் ஹனிஃபாவின் பாட்டு மனசுக்குள் வந்து போச்சு.
//

அதே ஹனீபா கலைஞரிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை என்றும் பாடியுள்ளார் இது வாழ்வின் கசப்பான நகைச்சுவையாகக் கருதினால் போதும்

said...

வாங்கோ தக்குடு கோந்தே!

தச்சுமம்மு கொடுக்கலையேப்பா....:(

போ(க)ட்டும். திருப்தியா இருந்தாச் சரி:-)

said...

வாங்க செந்திலான்.

அட ராமா...... இப்படியெல்லாம் பாடிட்டாரா?

ஆதாயம் தேடித்தானே? ?

அரசியல்வியாதிகளை இப்படித் தலைக்கு மேல் தூக்கித் தூக்கிதான்.....

வியாதிகள் இத்தனை எல்லாம் அட்டகாசம் செய்யறாங்க.ப்ச்:(

said...

அழகாய் இருக்கிறது கோவிலும் அதன் விளக்கங்களும். A class.

said...

'இறைவனிடம் கையேந்துங்கள்'. ராஜஸ்தான் தொடர் 19 நன்றாக உள்ளது. குறிப்பாக கோவிலின் முழு உருவப் புகைப்படம் நன்றாக உள்ளது. தமிழ்நாட்டுக் கோயில் கோபுர அமைப்பும் ..(ராஜஸ்தானி) (Muhal Architecture) கட்டிட அமைப்பு முறையும் கலந்து அழகாக உள்ளது..

said...

'இறைவனிடம் கையேந்துங்கள்'. ராஜஸ்தான் தொடர் 19 நன்றாக உள்ளது. குறிப்பாக கோவிலின் முழு உருவப் புகைப்படம் நன்றாக உள்ளது. தமிழ்நாட்டுக் கோயில் கோபுர அமைப்பும் ..(ராஜஸ்தானி) (Muhal Architecture) கட்டிட அமைப்பு முறையும் கலந்து அழகாக உள்ளது..

said...

"தமிழேண்டா" ம்.ம்.நல்லாத்தான் புரிஞ்சி எழுதி இருக்கிறார்கள்!!!!

said...

Dear food. thats from perumaal.
Thanks Thulasi. ivvalavu azhakaa vera yaaralayumezhutha mudiyumaanu theriyalai.

said...

"வைகுந்த நாதா" மனமும், வயிறும் நிறைந்தது.

"கோடைவிடுமுறை" சுற்ற நாங்கள் ரெடி :))

said...

"கண்ணெதிரில் பெரிய சதுர மேடைப்போல் மண்டபம் ரெண்டு பக்கங்களிலும் படிக்கட்டுகளுடன். ரெண்டு படிகளுக்கும் இடையில் பெரிய திருவடியின் சந்நிதி. இவருக்கு நேர் எதிரா மண்டபத்தின் மறுகரையில் அர்த்தமண்டபம். அதன்பின்னே கருவறை. மஹாவிஷ்ணு வைகுண்டத்தில் எப்படி இருப்பாரோ அதே போல் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்!"

எனக்கும் கண்ணெதிரே பார்ப்பது போலான உணர்வு , உங்களின் வார்த்தைகளில் காட்சிகள் தெரிகிறது அம்மா

"ஒரு அறை வாசலில் மட்டும் 'உள்ளே வர அனுமதி இல்லை' என்று தமிழில்:-))))) என்ன ஏதுன்னு இல்லாம சட்னு நுழையும் மக்களுக்கான தனி அறிவிப்பு! தமிழேண்ட்டா.........."

தமிழர்களின் தனித்துவம்

"ஆரத்தி எடுத்து சடாரி தீர்த்தம் எல்லாம் ஆச்சு. வயித்துக்கும் மனத்துக்கும் நிறைவைத் தந்துட்டான்! "பெருமாளே நீர் நல்லா இரும்"

'இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லையென்று சொல்வதுமில்லை' என்ற நாகூர் ஹனிஃபாவின் பாட்டு மனசுக்குள் வந்து போச்சு."

"ரசிகன்"கள் ரசிக்கவேண்டிய ரசனையான ஆன்மீகப் பதிவு அம்மா நன்றி

said...

உங்களின் பயண அனுபவங்கள் நன்றாக இருக்கின்றது. அதுசரி நியூசிலாந்துப் பக்கம் போறதில்லையா?.

said...

வாங்க குமார்.


க்ளாஸில் class சொன்னதுக்கு நன்றி:-))))

said...

வாங்க சிவஷன்முகம்.

தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க பத்மாசூரி.

இதுதான் பாம்பின் கால்......பாம்பறியும்:-)))))

said...

வாங்க வல்லி.

இதுதானே............. உசுப்பி உசுப்பித்தான் உடம்பே ரணமாக் கிடக்கு:-)))))

said...

வாங்க மாதேவி.

இதை முடிச்சுட்டுக் கோடை விடுமுறை எழுதுவதற்குள் குளிர்காலம் வந்துரும்போல இருக்கேப்பா;-)))))

said...

வாங்க ஏ ஆர் ஆர்.

ரசிகன் என்பதை நிரூபிச்சுட்டீங்களே!!!!!!

said...

வாங்க அரவிந்தன்.

நலமா?

நியூஸிப்பக்கம் போக வேண்டிய தருணம் சமீபத்தில் நிக்குது. அரௌண்ட் த கார்னர்:-)))))

கொஞ்சநாள் இந்திய வாசம் கோபாலின் தயவால்!

said...

விடுமுறை முடிஞ்சு வகுப்பு தொடங்கியாச்சு.

மாணவர் (கூட்டம்!) வகுப்புக்குத் தவறாமல் வர அன்புடன் அழைக்கின்றேன்:-)