ராத்திரி திடீருன்னு தூக்கத்தில் இருந்து விழிப்பு. அறைக்கதவைத் திறந்து வெராந்தாவுக்கு வந்தால் அப்படி ஒரு அமைதி. 'எதிரில் மௌனத்தை விட அமைதியா இருக்கும் குளம்'. மெல்லிய வெளிச்சதோடு தூரே தெரியும் கோவில்களின் கோபுரங்கள். சாயுங்காலம் ஏற்றி வச்ச அகல்களுக்கு இன்னும் யாராவது எண்ணெய் ஊத்திக்கிட்டே இருக்காங்களா என்ன? அதுபாட்டுக்கு எரிஞ்சுக்கிட்டே இருக்கே! மணி பார்த்தால் ரெண்டு. வெராந்தாவில் போட்டிருந்த இருக்கைகளில் உக்கார்ந்து அமைதியை ரசிச்சுக்கிட்டு இருந்தேன். குரங்காட்டம் போடும் மனசுகூட என்னமோ அதிசயமா அடங்கி இருந்துச்சு. பொறுக்கலை போல இந்த கொசுக்களுக்கு............:(
இந்த ஊருக்கு ஒரு நாள் போதாது. முழுசா ஒரு நாள்கூட நாம் இருக்கப்போறதில்லை. காலையில் எட்டுமணிக்கு ஊரை விடணும். 285 கிலோ மீட்டர் பயணம் காத்துருக்கு. சந்தர்ப்பம் கிடைச்சால் பேசாம ஒரு முழு வாரம் இங்கே வந்து தங்கி அமைதியை ரசிக்கணும். பார்க்கலாம்.
அறை வாடகையில் நமக்கு ப்ரேக் ஃபாஸ்ட் சேர்ந்துருக்கு. ஏழுமணிக்கு டைனிங் ரூம் போனோம். அரச இலச்சினையுடன் கூடிய பீங்கான்கள். வெள்ளி கட்லெரிகள். அளவுக்கு மீறிய பணிவுடன் ஓசையே எழுப்பாமல் பேசும் தலைப்பாக் கட்டிய பணியாட்கள். ஐயோ..... இதெல்லாம் நமக்கு ஆகவே ஆகாது.
க்ராய்சண்ட், குட்டி பன், ப்ரெட் ரோல்ஸ் எல்லாமும் கூட கொண்டுவந்து அடுக்கிட்டாங்க. டோஸ்ட் அண்ட் காஃபி போதுமுன்னு சொன்ன பிறகும் சுடச்சுட சமோசாக்களைக் கொண்டுவந்து வச்சுட்டு பூரி கொண்டுவரட்டுமான்னு கேட்டால்.....காலங்கார்த்தால் எண்ணெய் பதார்த்தம் வேணாமுன்னு தலை அசைச்சுட்டு ப்ரெட் டோஸ்ட்டும் காஃபியும் மட்டும் சாப்பிட்டோம்.
மணி ஏழரைகூட ஆகலை.. கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம்மான்னார் கோபால். நோ ஒர்ரீஸ்.... கோவிலுக்குப் போயிட்டு வந்து ஊரை விட்டுக் கிளம்பலாமுன்னு அன்னநடையில் ஆடி ஆடி நிதானமா நடந்தும் நாலு நிமிசத்தில் கோவில் வந்துருச்சு. நுழைவு வாசலில் காலெடுத்து வைக்கும்போது, சட்னு உள்ளே போங்க. கதவை மூடப்போறாங்கன்னார். ஓடிப்போய் மூச்சிறைக்க பெருமாள் முன்னே நின்னோம். என்ன ஆச்சுன்னே தெரியலை...இப்பவும் ஏகாந்த சேவை! கண்ணில் நீர் தளும்ப 'அவனை'க் காணவேண்டியதாப் போச்சு!
கோபுரவாசல் கதவை மூடஆரம்பிக்கிறார் ஒரு பணியாளர். தரிசனம் கிடைச்ச திருப்தியில் இன்னொருக்கா வைகுந்தவாசனை நமஸ்கரிச்சுட்டு வெளியே வந்தோம். ஏழரை முதல் ஒன்பது வரை நடை சார்த்தப்படுமாம். நித்யபடி பூஜை நடத்தி, சாமிக்கு அமுது செய்விக்கணும். ப்ரேக் ஃபாஸ்ட்!
சரியான சமயத்துலே வந்துட்டோம். முந்தி நினைச்ச மாதிரி செக்கவுட் செஞ்சுட்டுப் போகும் வழியில் கோவிலுக்குப் போலாமுன்னு இருந்திருந்தால்..........ஐயோ!!!!!!!!
கோவில் இடதுபுறம்
வலதுபுறம்
நுழைவு வாசலருகில் நின்னு பகல் வெளிச்சத்தில் சுத்துமுத்துமா வெளிப்பிரகாரத்தையும் கோபுரத்தையும் க்ளிக்கிக்கிட்டு இருந்தேன். கோபுரத்துக்குப் பின்னால் சூரியன் இருக்கான். பளிச்சுன்னு படம் எடுக்க முடியலை. (இல்லேன்னா மட்டும்................?)
புஷ்கர் போகலாமுன்னு முந்தா நாள் முடிவு செஞ்சப்பவே பார்க்க வேண்டிய கோவில்களை வலையில் தேடி லிஸ்ட் போட்டு வச்சுருந்தேன்.. அதுலே ராம வைகுந்த் கோவிலுன்னு ஒன்னு இருந்துச்சு. உடம்பு சரியில்லாமப் போன கலாட்டாவில் நேரம் வீணாப் போயிருச்சு. இல்லேன்னா அந்தக் கோவிலைப் பார்த்துருக்கலாமுன்னு கோபாலிடம் நேத்து இரவு கொஞ்சமா புலம்பிக்கிட்டே இருந்தேன்.
அங்கே பாருன்னு கோபால் காமிச்ச இடத்தைப் பார்த்ததும்......ஆஹா.....ன்னு இருந்துச்சு. இதுதாங்க அந்த ராம வைகுந்த் கோவில்!!!! தெருவில் ரங்ஜி மந்திர்ன்னு போர்டு பார்த்துட்டு இது ரங்ஜின்னே இருந்தேன். நேத்து இரவு இருட்டுலே இதையெல்லாம் சரியாவே பார்க்கலை!
அறைக்குத் திரும்பும் வழியில் இருக்கும் கடைகள் சில அப்பதான் கண் முழிச்சுப் பார்க்குது! நிறைய யானைகள்! சுவத்துலேயே இருக்கட்டும்.! இதுக்குள்ளே நம்ம ப்ரதீப்பும் கேம்ப் ஹொட்டேலில் போய் குளிச்சுட்டு, காலை உணவையும் முடிச்சுக்கிட்டு வந்துருந்தார். பெட்டிகளை எடுத்துக்கிட்டு புஷ்கர் குளத்தை இன்னும் கொஞ்சம் க்ளிக்கிட்டுப் புறப்பட்டோம்.
அதிகாலை குளம்
இருக்கும் அம்பத்தி இரண்டு படித்துறைகளும் (காட்ஸ்) இப்படி நெருக்கியடிச்சுக்கிட்டே இருக்கே!
வரஹா காட்டில் பக்தர்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க. பூவராஹன் சந்நிதி இருப்பது இங்கே தான்.
எல்லாம் திட்டப்படி நடக்குது! எட்டுமணிக்குக் கிளம்ப வேண்டியவுங்க ரெண்டு நிமிசம் முன்னாலேயே ஸ்தலம் விட்டு. நேரா உதய்பூர்தான். ஆனால் உதய்பூருக்கு ஜஸ்ட் ஒரு அம்பத்திரெண்டு கிலோ மீட்டர் இருக்கும்போது நாத் த்வாரா (Nathdwara) போய் ஸ்ரீநாத்தைக் கண்டுக்கிட்டுப் போகணும். சாலை நல்லா இருக்கு. இருநூத்து முப்பத்து மூணு கிலோ மீட்டரை எப்படியும் மூணரை மணியிலே கவர் பண்ணிடலாமுன்னு மனக்கோட்டை கட்டி மகிழ்ந்தது தப்பாப் போச்சு. ஒன்னரை மணி பயணத்துலே ஒரு மேம்பாலத்துலே கட்டுமான வேலை நடக்குதுன்னு பாதையை மாத்தி விட்டுருந்தாங்க. அங்கேதான் பிழைபட்டுப் போச்சு.
நமக்கு முன்னே வேறெந்த வண்டியும் இல்லை. நாங்க பாட்டுக்குக் கீழே இருந்த பாதையில் போனவங்க ஒரு சின்னக் கிளைப்பாதையில் தப்பா திரும்பி இருக்கோம். என்னதான் De tour என்றாலும் மாற்றுச்சாலை வரப்பு மேலேயா போகும்? ரெண்டு பக்கமும் விளைஞ்சு அறுவடைக்குத் தயாரா நிற்கும் கோதுமை வயல்கள் பொன்னிறத்துலே ஜொலிக்குது. கண்ணுக்கு எட்டின தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லை. திரும்பிடலாமுன்னா வண்டியைத் திருப்பக்கூட இடம் இல்லை. அவ்வளவு குறுகலான பாதை. திருப்பினால்...... ஒன்னரை அடி தாழ்வா இருக்கும் கோதுமை வயலில் போய் விழுவோம்!
கவுத்துட்டியேடா பெருமாளே........கொஞ்ச தூரத்தில் ஒரு ட்ராக்டர் வந்துச்சு. அவுங்க கிட்டே வழி கேட்டால் இதுலேயே போங்க மெயின் ரோடு வந்துரும். அதோ பாருங்க அதுதான்னாங்க. அந்த 'அதோ' வைப்போய்ப் பிடிக்க இன்னும் வளைஞ்சு நெளிஞ்சு சுத்த வேண்டியதாப் போயிருச்சு. பத்து கிலோமீட்டர் வேகத்துலேதான் போயாகணும்:( பாதை அந்த அழகு.
முட்டிமோதி மெயின் ரோடுக்கு வந்தப்ப மணி 11.10! ஹூம்.... அந்த ஸீரோவை எடுத்துட்டால் ரொம்பப் பொருத்தமா இருக்கும். போட்டுட்டான் நெத்தியிலே! இன்னும் 77 கி.மீ போகணும் ஸ்ரீநாத்தைப் பார்க்க. ஒருவழியா நாத் த்வாரா போய்ச் சேர்ந்தால்...... ஊருக்குள்ளே நுழைஞ்சதும் கப்பம் வாங்க ஓடி வந்த மக்கள், காசை வாங்கிக்கிட்டு பக்கத்துத் தெருவில் கைகாட்டி கார் பார்க்கிங் அங்கே இருக்கு. அங்கிருந்து கோவில் பக்கம்தான்னாங்க.
காம்பவுண்டு போட்ட ஒரு இடத்தில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல கார்களை அடைச்சு நிறுத்தி இருக்கு. அதுக்குள்ளே நாமும் வண்டியை நிறுத்தணுமாம். என்ன ஏதுன்னு ஒழுங்கு முறை இல்லை. வண்டி பாதுகாப்பா இருக்குமான்னும் நிச்சயமில்லை. நான் வண்டியில் இருக்கேன். நீங்க போயிட்டு வாங்கன்னு ப்ரதீப் சொல்லிட்டதால் நாங்க இறங்கி ஓடறோம். வெய்யில் பொளக்குது. கூட்டமான கூட்டமும் நெரிசலும். கோவில் எங்கே இருக்குன்னே தெரியலை. எவ்வளவு தூரம் இன்னும் ஓடணும்? ஒரு ஆட்டோ பிடிச்சுப் போயிருக்கணுமோ? அதுவும்தான் பயன் இல்லை:( கோவிலுக்கு ரெண்டு தெரு முன்னாலேயே ஆட்டோக்களுக்குத் தடை.
மதுராவில் நாம் பங்கி பிஹாரி கோவில் போனோம் பாருங்க அதே மாதிரி சின்னச்சந்தா இருக்கும் தெருவில் நுழைஞ்சு அங்கே இங்கே கேட்டு, கோவில் வாசலில் போய் நின்னப்ப மணி 12.35.:(
தொடரும்......................:-)
Monday, June 13, 2011
பகலிலும் ஒரு முறை ...((ராஜஸ்தான் பயணத்தொடர் 20)
Posted by துளசி கோபால் at 6/13/2011 02:44:00 PM
Labels: அனுபவம் Pushkar Rajasthan
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நலமா,
வருகையை பதிவு செஞ்சுக்கோங்க
நானும்..ப்ரசண்ட் டீச்சர்!
படித்த வரை அருமை!
முழுசும் படிச்சிட்டு வாரேன்.
சற்று இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்கள் பகிர்வு. நலம்தானே?
படித்தேன்... ரசித்தேன்... தொடர்கிறேன்..
'எதிரில் மௌனத்தை விட அமைதியா இருக்கும் குளம்'
மனதில் பல கேள்விகளை தூண்டும் வர்ணனை
ஆண்டவனை தரிசித்த பாக்கியம்
உங்களின் பதிவினால்
அன்மீக பதிவை எத்தனை அனாயாசமாக எழுதுகிறீர்கள்
நன்றி தரிசனம் தந்ததற்கு
எப்ப மதுரை சந்திப்பு பற்றி பதிவு எழுதப் போறீங்க?
வாங்க புதுகைத் தென்றல்.
சென்னையில் இருந்தப்ப உங்க நினைவு வந்துச்சுன்னு சொன்னால் நம்புங்க.
உறவினர் ஒருவரின் மகள் இப்போ இருப்பது உங்க ஹைதையிலாம்.
வாங்க நானானி.
நோ ஒர்ரீஸ். எப்போ முடியுதோ அப்போ:-)))))
வாங்க வெங்கட் நாகராஜ்.
நலமே நலம்.
ச்சும்மா ஒரு பத்து நாள் லீவுதான்:-)))))
சென்னை வெய்யில் பாழாகுதேன்னு ஒரு சுத்து!
வாங்க ஏ ஆர் ஆர்.
தங்கள் தொடர் வருகை மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சிதானே?
வாங்க ஜோதிஜி.
பதிவுலக மதுரைப் பெருந் தலை/தகைகள் நான் வர்றேன்னதும் 'எஸ்' ஆகிட்டாங்க. அதனால் சந்திப்பு வேறொரு அதி முக்கிய ஆளுடன் தானாக்கும்:-)
//சென்னை வெய்யில் பாழாகுதேன்னு ஒரு சுத்து!//
:))) சென்னை வெய்யில் + சென்னை எனக்கு ஆகாது. அதனாலத்தானே நினைச்சீங்க.
:)))
துளசி
ஆன்மீகத்துக்கு என்ன அர்த்தம் நு யோசிச்சேன். ஆத்மார்த்தமா
எழுதுவது,மத்தவங்களையும் கடவுளைப் பற்றி யோசிக்கவைப்பது எல்லாமே
ஆன்மீகம்தான்.
அந்த வழியிலுங்கள் பதிவுகள் எல்லாமே அற்புதம்.
ஸ்ரீநாத்ஜி மந்திர் போநீங்கலானு மனசு பதைக்கிறது:)
புஷ்கர் மௌனம் அருமை.
good thankyou
வாங்க புதுகைத் தென்றல்
சென்னைன்னாவே லவ் அண்ட் ஹேட் ரிலேஷன்ஷிப்தான்:-)))))
வாங்க வல்லி.
ஆஹா..... பெரியவங்க சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரியாமே!!!!
அப்ப....இது கண்டிப்பா ஆன்மீகம்தான்.
புது லேபிள் கொடுத்துடலாமா?
ஏம்ப்பா...ஆன்மீகமுன்னால் பரிகாரம் சொல்ல வேணாமா?
தினம் துளசிதளம் வலம் வந்து ரெண்டு ப்ளஸ் ஓட்டுப் போடணுமுன்னு சொல்லலாமா?:-)))))
வாங்க குணா.
வருகைக்கு நன்றி.
Post a Comment