Tuesday, June 14, 2011

ஸ்ரீநாத்ஜி.... உன் வாசல்வரை வந்தும் ..... ((ராஜஸ்தான் பயணத்தொடர் 21)

இந்தக் கோவிலில் தரிசனம் ஒரு நாளைக்கு எட்டே முறைதான். எங்க கண்ணன் சின்னப்பையன். அவனால் ரொம்ப நேரம் நின்னு தரிசனம் கொடுக்க முடியாது. கால் வலிக்கும். அதனால் கொஞ்சம் கொஞ்சம் நேரம் மட்டுமே அவனைக் காமிப்போமுன்னு சொல்றாங்களாம் பண்டிட்டுகள், நம்ம வேளுக்குடியார்தான் ஒரு சமயம் தொலைக்காட்சியில் சொன்னார்.
காலையில் அஞ்சரைக்குக் கோவில் திறந்தால் ஆறே காலுக்குத் திரை போட்டுருவாங்க. முக்கால் மணி நேரம். அப்புறம் அலங்காரம் முடிச்சு ஏழேகாலில் இருந்து ஏழே முக்கால் அரைமணி. அப்புறம் மாடு மேய்க்கப் புறப்படும் நேரம் ஒன்பதே காலில் இருந்து ஒன்பதரை. வெறும் கால் மணி. கிளம்பும் அவசரத்தில் இருப்பான் போல! அப்புறம் ராஜ்போக் (விருந்து) பதினொன்னேகால் முதல் பனிரெண்டேகால். ஆக ஒரு மணி நேரம் அவன் சாப்பிட ! இதோடு முற்பகல் தரிசனம் முடிஞ்சது. நம்ம நேரம் ..... ஹூம்...............கோவில் மூடுன இருபதாவது நிமிசம் ஆஜராகறோம்:(

என்ன சின்னப்பையனோ? தினமும் ராத்திரி முழுக்க விருந்தாவனில் 'ஆடு ஆடு'ன்னு கோபியருடன் ஆடித் தீர்க்கிறானாமே! அப்போ கால் வலிக்காதாமா?

இதுக்குப்பிறகு மூணரை மணி நேரம் ரெஸ்ட். பிற்பகல் மூணே முக்காலுக்குத் திறந்து நாலு வரை. கால் மணியில் மூடிடறாங்க. அப்புறம் நாலு நாப்பதுக்குத் திறந்து அஞ்சு அஞ்சுன்னு இன்னொரு கால் மணி தரிசனம். அப்புறம் அஞ்சரை முதல் ஆறேகாலுன்னு முக்கால் மணி நேரம் ஆரத்திக்கு. கடைசியா சயனம். அதுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லைன்னு நினைக்கிறேன்.

இப்படி டிமாண்ட் உண்டாக்கி வச்சுருப்பதால் டைம் டைம் பார்த்து வாசலில் நின்னால்தான் தரிசிக்க முடியும். மேலே சொன்ன அத்தனையும் பண்டிட்களின் வசதிக்காக ஏற்பாடு செஞ்சமாதிரி இருக்கு:( லஞ்சுக்குப் பிறகு மூணரை மணி நேர ரெஸ்ட்??????

நாம் இன்னும் மூணு மணி நேரம் காத்திருந்தால் அந்த காமணி தரிசனம் கிடைக்கும். நடக்கற காரியமா? எங்கும் நிறைந்த பரம்பொருள் அங்கிருந்தே நம்மைப் பார்த்திருப்பான்தானே?

புஷ்கரில் தேமேன்னு கோவிலுக்குப் போனவங்களைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு தரிசனம் கொடுத்து, (அதுவும் ஏகாந்த சேவையாக்கும் கேட்டோ! ) வயித்துக்கு சாப்பாடு போட்டு மனசைக் குளிர வச்சவன் இங்கே பாரா முகமா இருக்கான்! அதென்ன லீலையோ?

இவனும் பதினேழாம் நூற்றாண்டில் இங்கே வந்தவன் தான். ஔரங்கஸேப்பின் கோவில் இடிப்பு வைபவத்துக்கு பயந்து மதுரா விருந்தாவனத்தில் இருந்தவனை ஒளிச்சு எடுத்து ஒரு மாட்டுவண்டியில் வச்சுக் கொண்டுவந்துக்கிட்டு இருக்காங்க. இப்போ கோவில் இருக்கும் இடம் வந்ததும் வண்டி சகதியில் மாட்டி நின்னு போச்சு. எவ்வளவோ முயற்சி செஞ்சும் நகர்த்த முடியலை. அப்பதான் இவனுக்கு இங்கேயே தங்க ஆசைன்னு தோணுது கொண்டுவந்த மக்களுக்கு. அங்கே அதே ஊரில் கோவில் கட்டி இவனை உள்ளே வச்சுட்டாங்க.

மூடியிருந்த வெள்ளிக்கதவுகளிடமும் அங்கே சுவத்தில் இருந்த நம்மாளிடமும்
'நான் வந்துட்டுப்போனதுக்கு நீங்களே சாட்சி'ன்னு சொல்லிட்டு கோவில் கடை ஒன்னில் ஒரு ஸ்ரீநாத் படம் வாங்கிக்கிட்டுக் கிளம்புனோம். கோவர்தனகிரியைத் தூக்கின நினைவு போல! இடக்கையை அப்படியே தலைக்கு மேல் உயர்த்தியபடியே இருக்கான்.
இப்போ கார் பார்க்வரை நடக்கணுமே! ரெண்டு தெரு நடந்து தப்பான பாதையில் திரும்பி ஆட்டோ ஒன்னைப் பிடிச்சு, கார்பார்க்குன்னு சொல்லி ஏறி, சரியான பாதையில் போன ஆளை..... இந்தப் பக்கம் இல்லை அந்தப் பக்கமுன்னு சொல்லி திசை திருப்பி, கொஞ்சதூரம் போனதும் 'ஙே' ன்னு முழிச்சு ஐயோ இந்த வழியா நாங்க வரலைன்னு சொல்லித் திட்டு வாங்கி சரியான இடத்துக்கு அந்தாளே கொண்டுவந்து விட்டதும் பேசுன முப்பது ரூபாயை மட்டும் வாங்கிக்கிட்ட ஆட்டோ ட்ரைவருக்கு 'தன்யவாத்' சொல்லி நம்ம வண்டியை அந்த பட்டியில் கண்டுபிடிச்சு..... அப்பப்பப்பா........ உதய்பூர் சாலையில் போய்க்கிட்டு இருக்கோம்.
கோவிலருகில் பக்தர்கள் கூட்டமும் பிரஸாத விநியோகமும்

ஒன்னேகால் மணி நேரத்தில் உதய்பூருக்குள் நுழைஞ்சோம். மதியம் ரெண்டு மணி. நாம் தங்குமிடம் மேவார் ஹவேலி. இந்த இடத்தையும் இணையத்தில் பார்த்துதான் தெரிவு செஞ்சுருந்தோம். ரெண்டு நாள் தங்கல். அதுலே ஒரு நாளுக்கு ரூம் வித் லேக் வ்யூ. இன்னொரு நாளுக்கு ரூம் வித் சுவர் வ்யூ:-)

ஹவேலிக்கு செல்லடிச்சு ஊருக்குள்ளே வந்துட்டோம் வழி சொல்லுங்கன்னா.........ஜகதீஷ் மந்திர்ன்னு கேளுங்க. அதுக்குப் பக்கத்தில் இருக்குன்னாங்க. வாயிலே இருந்துச்சு வழி. இந்த சாலையில் நேராப்போய் இடப்பக்கம் திரும்புன்னார் ட்ராஃபிக் போலீஸ்காரர்.. இடப்பக்கம் திரும்புனா..... நிறையப் படிக்கட்டுகளுடன் உயரமா ஒரு கோவில் கம்பீரமா நிக்குது!
இன்னொருவரை லால் காட் (Lal Ghat) எங்கேன்னு கேட்டால் எந்த ஹவேலிக்குப் போகணும் என்றார். மேவார் ஹவேலின்னதும் இப்படியே நேராப்போய் ரைட்டில் வரும் முதல் சந்தில் நுழைஞ்சுரு, ரைட், அப்புறம் இன்னொரு ரைட். அப்புறம் லெஃப்ட். அதே போல் ரைட் லெஃப்ட் போட்டு ஹவேலி வாசலில் நின்னோம். மூலையில் உள்ள கட்டிடம். இங்கிருந்து லெஃப்ட் போனா நிமிச தூரத்தில் லால் காட்.
ரொம்பப் பழைய நகரமுன்னு சந்தின் (இல்லே தெருவா?) அகலமே சொல்லிருது. குதிரை வண்டிக்குன்னே அளவெடுத்து வச்ச அகலம். இதுலே திடுக் திடுக்குன்னு ஏத்தமும் இறக்கமுமா..... குதிரைகளே ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கும், பாவம்:(
அறைக்குப் போனோம். ரெண்டாவது மாடி. ஜன்னல் திரைச்சீலையைத் தள்ளினதும் மூச்சு நின்னது எனக்கு. ஒன்னு கவனிச்சு இருப்பீங்க..... இந்தப் பயணத்தில் அடிக்கடி எனக்கு மூச்சு நின்னே போயிருது:-))))))
ரெண்டரை மணியாச்சே...ரெஸ்ட்டாரண்டு திறந்துருக்கான்னு கேட்டால்...........பிரச்சனையே இல்லை எப்ப வேணுமுன்னாலும் போய் சாப்பிட்டுக்கலாமுன்னு சொல்றாங்க. பிரதீப் தங்க இடம் இல்லை. அதனால் வாசலில் வண்டியை நிறுத்திட்டு அதுலேயே தூங்குவேன்னதும் இது சரி வராதேன்னு தோணுச்சு. வேற எங்காவது அறையைத் தேடணும்.
அதுக்குள்ளே பகல் சாப்பாட்டை முடிச்சுட்டு வரச்சொல்லி அனுப்பினோம்.
ரெஸ்டாரண்ட் மூணாவது மாடியில். லிஃப்ட் இருக்கு. இங்கே மொத்தமே பதினொரு அறைகள்தான். முதல் மற்றும் ரெண்டாம் தளங்களில் அறைகள். மூணாவது முழுசும் அடுக்களையும் சாப்பாட்டுக் கூடமும். மொட்டை மாடியில் ரூஃப் டாப் ரெஸ்ட்டாரண்ட்!!!! கீழே சாப்பிட போரடிச்சால் மாடிக்குப்போய் சாப்பிடலாம். பிச்சோலா ஏரியும் அதில் இருக்கும் மாளிகைகளும் தோட்டமும், ஊரைச்சுத்தி இருக்கும் ஆரவல்லி மலைத்தொடர்களும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!

அநேகமா அக்கம் பக்கம் எல்லா மாடிகளிலுமே ரெஸ்ட்டாரண்டுகள்தான். அதான் ஜன்னலில் பார்த்தாலே அக்கம்பக்கம் தெரியுதே! அதே போல சின்னச்சின்னக் கட்டிடங்கள் எல்லாமே ஹவேலி ஹொட்டேலா மாற்றப்பட்டிருக்கு. காலத்துக்கேத்த வியாபாரம். சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை இப்போ கூடுதலா ஆகிக்கிட்டு இருக்கு பாருங்க.

இந்த ஹவேலிகூட ஒரு ஹொட்டேலா மாறி ஏழு வருசம்தான் ஆச்சாம். பழைய வீட்டை வாங்கி உட்புறமெல்லாம் நல்லாக்கி வடிவமைச்சு இருக்காங்க. இங்கே இலவச காலை உணவு கிடையாது. அது பரவாயில்லை. அறை வாடகை குறைவுதான். ரொம்ப நியாயமான ரேட்.
ரெஸ்டாரண்டின் ஒரு பக்கத்தில் திண்ணை அமைப்பு அதுலே மெத்தைகள், திண்டுகள் போட்டு அதுலே உக்கார்ந்து வெளிப்புற ஏரியைப் பார்த்தபடி சாப்பிடலாம். அதுக்குன்னே சின்ன குள்ள மேசை வேற. அப்படியே அந்த மெத்தையில் அடங்கி ஆடாமல் உக்கார்ந்துக்குது! சாப்பிட்டு முடிச்சவங்க அப்படியே அதுலேயே படுத்து ஓய்வெடுத்துக்கறாங்க. சிலர் தூக்கம், சிலர் படிப்புன்னு அவுங்கவுங்களுக்குத் தகுந்த மாதிரி. நான் பார்த்தவரை அங்கே எப்பவுமே ஜோடிகளா இடம் புடிச்சுக்கறாங்க. எந்த சமயம் போனாலும் ஒரு வெள்ளைக்கார ஜோடி அங்கே இருப்பது கேரண்டீ:-)

தொடரும்.................:-)

16 comments:

said...

ஸ்ரீநாத்ஜி.... ரொம்ப தான் விளையாட்டு காமிச்சிட்டார் போல.... விருந்தாவனில் கூட இப்படித்தான் இந்த பண்டிட்ஜிக்கள் அவங்க சௌகரியப்படி திறப்பாங்க, நம்மள பார்த்தவுடனே திரை போட்டு மூடிடுவாங்க... தட்டுல போட வேண்டியது போட்டவுடனே தானா திறக்கும் திரைச்சீலைகள்... :) அங்கயும் லஞ்சம் விளையாடுது... எனக்கு திரையிலேயே கிருஷ்ணர் தெரியராரேன்னு சொல்லிட்டு வெளியே வந்துட்டேன்.. :)

லேக் வியூ அட்டகாசம்...

பகிர்வுக்கு நன்றி.

said...

"" அதுலே ஒரு நாளுக்கு ரூம் வித் லேக் வ்யூ. இன்னொரு நாளுக்கு ரூம் வித் சுவர் வ்யூ:-)""
ரசித்தேன் உங்களின் இந்த வரிகளை
கண்ணனின் அழகே தன் பக்தர்களுக்கு குழந்தையாகவும், ஆபத்பாண்டவனாகவும் இருப்பதுதான் , அதை உங்களின் உரிமையான கேள்விகளால் நிருபனமாக்கி இருக்கீங்க மேடம்
அசத்தல்

said...

அடடே! எங்களுக்கும் இதே அனுபவம்!
அந்த வெள்ளி கதவு மேலே சாய்ந்து கொண்டு, காத்திருந்த பெண் பக்தர்கள் கூட்டத்தை பார்த்து, கொஞ்சம் மனம் தளர்ந்தோம்.(அட்லீஸ்ட் 350 )

கடவுள் விருப்பம் என்று , வேறு வாசலை கடக்கும் போது, ஒரு நண்பர் தற்செயலாக சந்தித்தார். 'ஒரு 50 ரூபாய் தளர்த்தினால் வேறே வழியாகப் போகலாம் ' என்றார். !!!

மனம் ஒப்பாமல் ஒரு விக்ரகம் வாங்கி கொண்டு திரும்பி வந்தோம்.

அழகிய உதய்ப்பூர் பக்கங்களை ஆவலுடன் வரவேற்கிறேன்.

said...

நல்ல பகிர்வு. தொடர்ந்து கொண்டே வருகிறேன்.

Anonymous said...

Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.

http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html

Thank you.

Anamika

said...

விவரங்களும் படங்களும் பிரமாதம். சைன் போர்ட் மேலே வெள்ளை நாய், நாய் தானே?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நல்லாவே ஆட்டிவைக்கிறான்!!!!

லஞ்சம் ஆரம்பிச்சதே கோவில்களில்தானோ?

said...

வாங்க ஏ ஆர் ஆர்.

அதென்னமோங்க ....ஸ்வாமியைத் தனியாப் பிரிச்சுப் பார்க்க முடியமாட்டேங்குது.

கோவிலுக்குப் போனால் கூட 'எப்படிடா இருக்கே? அம்மா வந்துருக்கேண்டா'ன்னு என்னையறியாமல் சொல்லிடறேன்.

அதுவும் சண்டிகர் முருகன் கோவில் ஹனுமன் ரெண்டரை அடி உசரத்தில் குட்டியாச் செல்லம் போல் நிற்பதைப் பார்த்தால்.. சட்னு குழந்தையை வாரி எடுத்து உச்சி மோந்து இடுப்புலே தூக்கி வச்சுக்கலாமான்னு இருக்கும்.

கொஞ்சநேரம் அவனோடு பேசிட்டுத்தான் வருவேன்.

என்ன அஞ்ஞானமோ..........

said...

வாங்க வெற்றி மகள்.

இங்கே பெண்களுக்குத்தான் முன்னுரிமையாம். கதவு திறந்ததும் முதலில் பெண்கள் கூட்டத்தை உள்ளே அனுப்புவாங்களாம்.

நமக்குக் கொடுத்து வைக்கலைன்னுதான் நினைச்சேன்.

உதய்பூர் வரும் திங்களன்று தொடரும்.

மனசுலே இருப்பதைக் கொட்டலைன்னா சாந்தி இல்லைன்னு திருமலைப்பயணம் ஒன்னு இன்னிக்குப் போட்டுருக்கேன். மூணு நாள் தொடர்ச்சியா இது வரும்.

வந்து பார்த்துட்டு எதாச்சும் சொல்லிட்டுப் போங்கப்பா.

said...

வாங்க கோவை2தில்லி.

உங்க அன்பும் ஆதரவும் என்னைக்கும் இப்படியே தொடரணும்ப்பா.

இது பேராசையா?

said...

வாங்க அனாமிகா துவாரகன்.

புரிகிறது. எனக்கு வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. நாலு பேருக்குப் போய்ச்சேரட்டும்.

said...

வாங்க அப்பாதுரை.

ஆமாம்... அது Pபொம்மு:-)

ரொம்ப க்யூட்டா இருக்குல்லே?

said...

அன்பு துளசி, அங்கேயே அவனோட பழியாய்க் கிடக்கணும்னு எதிர்பார்க்கரனூ என்னவோ. போகட்டும் படத்தோட வீட்டுக்கு வந்துட்டான் இல்லையா.

ஹவேலி

ஹோட்டல் நல்லாவே இருக்கு.

நான் கூட ரெண்டு வெளிநாட்டவரைப் பார்த்தேன்:)

வியூ அட்டகாசம்.

said...

வாங்க வல்லி.

நீங்க பார்த்தவர்கள் வேறு வகை, ஈஷிண்டு இருக்கறவங்களைப் பார்க்கணும்,ஆமா:-)

said...

"ரொம்பநேரம் நின்றால் கால் வலிக்கும்" :)

said...

வாங்க மாதேவி.

கட்டாயம் கால் வலிக்கத்தான் செய்யும் பண்டிட்களுக்கு:-)