Wednesday, March 09, 2011

உடண் கட்டோலா ஏறினால் சாமிகிட்டே போகலாமாம்!!!!

நெசமாவா சொல்றாங்க? எந்தப்பொருளில்? ஒருவேளை டைரெக்ட்டா........... ஐயோ!

(அவசரத்தில், தலைப்பை யாரும் உடன் கட்டை என்று படிக்க வேண்டாம்!)

மன்ஸா தேவி கோவில், இந்த ஹரிபௌரிக்குப் பின்பக்கம் இருக்கும் மலைமேலே இருக்கு. தேசிய நெடுஞ்சாலை 58 இல் வரும் நாம் நகருக்குள் நுழையும் போது, வரும் பெரிய ரவுண்டபௌட்லே இருந்து இடது கைப்பக்கமா போகணும். பைபாஸ் சாலை ஒன்னு வரும். அதுலே பயணிக்கணும். சொல்றதுதான் ரொம்ப தூரமாத் தோணுதே தவிர கங்கா ஆரத்தி நடக்கும் ஹரிகி பௌரியில் இருந்து ஒரு மூணரை கிலோ மீட்டர்தான் மொத்த தூரம். பயணிகளுக்கான பொருட்கள் குறிப்பா குளிருக்குத் தோதான கம்பளி ஆடைகள், போர்வைகள் விற்கும் கடைவீதி ஜேஜேன்னு இருக்கு. அதுலே இடதுபக்கம் சட்னு திரும்பும் பாதையில் நுழையணும், மலை ஏற ரோப்கார் ஆரம்பிக்கும் இடத்துக்கு. நொறுக்குத்தீனியா பானிபூரிகளை அழகா அடுக்கி வச்சு விக்கறார் இளைஞர் ஒருவர். கடைவீதிக்குள் வண்டியை நுழையவிடாமல் ஓரங்கட்டிப் பார்க்கிங் ஏரியாவைக் காமிக்கிறாங்க காவலர்கள். அதே முப்பது ரூபாய்தான் இங்கேயும் பார்க்கிங் சார்ஜ்.
கீழே இருக்கும் படத்தில் உள்ளது ஒரு வகையான கொட்டையை உடைச்சால் உள்ளே இருக்கும் சமாச்சாரம். இது ஃபிஜித்தீவுகளிலும் கிடைக்குது. நியூஸியில் கூட சிலசமயம் ஃபிஜி இந்தியர்கள் கடைகளில் கிடைக்குதுங்க. வேகவச்சு சாப்பிடணும். பெயர்தான் நினைவில் இல்லை. தெரிஞ்சவங்க சொல்லுங்க.
மலைமேலிருக்கும் கோவிலுக்கு நடந்தும் போகலாம். அருமையான சாலை வசதி இருக்கு. நமக்கோ நேரப் பற்றாக்குறை! ரோப்காரில் ஏறி மலைக்குப்போய்ச் சேர்ந்தோம். பயண தூரம் 540 மீட்டர்கள்தான். ஒரு கூண்டில் நாலுபேர் போகும் ஏற்பாடு. மலைச்சரிவுகளில் ஏராளமான மரங்கள் அடர்த்தியா நிக்குது. இது ஷிவாலிக் மலைத்தொகுதிகளில் இருக்கும் பில்வ பர்வத் (இது வில்வ மலையில் ஒரு குன்று. வடக்கர்களுக்கு வ எல்லாம் ப தான்) மேலே ரோப்கார் ஸ்டேஷனை சமீபிக்கும்போது சரிவு முழுசும் விதவிதமான நிறங்களில் பூக்கள் நிறைஞ்ச போகெய்ன்வில்லாச் செடிகள். ரோப்கார் ஸ்டேஷன் கோவிலைக் கடந்து இன்னும் மேலே இருக்கு. சமதளத்தில் இருந்து 178 மீட்டர் உயரம். அங்கே இறங்கி ஒரு அம்பது அறுவது படிகள் கீழே இறங்கிக் கோவில் வாசலுக்குப் போறோம்.


பெரிய ஹால் போன்ற அமைப்பில் கோவில்கடைகள் நிறைஞ்சு இருக்கு. விசேஷநாட்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி தரிசனம் செஞ்சுவைக்க கம்பிபோட்ட வரிசைகள். நல்லவேளை இப்போ விசேஷம் ஒன்னும் இல்லை நாம் இங்கே வந்ததைத் தவிர:) தப்பிச்சோம்.


மன்ஸா தேவியை தரிசிக்கும் வாசலில் நுழைஞ்சவுடன் இடதுபக்கம் இருந்த சின்ன சந்நிதியில் இருந்த பண்டிட் இங்கே வாம்மான்னு அன்பா(?) கூப்பிட்டு குங்குமம் தந்தார். வாங்கிக்கிட்டு நகரும்போது, பிரசாதம் வாங்கிக்கிட்டு அப்படியே போகக்கூடாது. மாதாவின் அருளைப்பெற காணிக்கை போடணும் என்று இன்னும் அன்பா(?) சொன்னார். கையில் கேமெராவைத்தவிர வேறொன்னும் இல்லை. நம்ம கோபாலுக்கு ஒரு (கெட்ட) வழக்கம். திடுதிடுன்னு முன்னாலே போய்க்கிட்டே இருப்பார். ஓடிப்போய் அவரைப்பிடிச்சுப் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டுவந்து தட்டில் போட்டேன். அடுத்து ஒரு ஹோமகுண்டம். லேசாய் புகை வந்துக்கிட்டே இருக்கு,. அங்கே இருப்பவர் வாம்மான்னதும் உஷாராகிட்டேன். வலம் போனால் மன்ஸா தேவியின் சந்நிதி. கேட்டவரம் கொடுக்கும் சித்தி பீடம். ஆடை ஆபரணங்களோடு மின்னும் பளிங்குச்சிலை. மூணு வாயும் அஞ்சு கைகளுமா இருக்கும் உருவம். (ஆமாமாம். பெண்ணுக்குத் தேவையாத்தான் இருக்கு!) அடுத்தபக்கம் இருக்கும் சந்நிதியில் எட்டு கைகளோடு (அஷ்டபுஜ) இன்னொரு பளிங்குச்சிலை. அழகான கருணை பொழியும் தெய்வீக முகம்!

இதுவும் ப்ராச்சீன் மந்திர்தான். ஆனால் அவ்வப்போது பழுதெல்லாம் சீர்படுத்தி நல்லா வச்சுருக்காங்க. பக்தர்கள் மட்டுமில்லாம வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஏராளமா வந்து போறாங்க.

நம்ம தெற்குப்பக்கம் அம்மன் கோவில்கள் எல்லா ஊர்லேயும் இருப்பதைப்போல் வடக்கே மன்ஸா தேவி கோவில்கள். இங்கே சண்டிகரிலும் மணிமாஜ்ரா என்னும் இடத்தில் ஒரு அழகான கோவில் இருக்கு. அதைப்பற்றி இங்கே!

நம்ம வாசுகியை உங்களுக்கு நினைவிருக்கா? பாற்கடலைக் கடைஞ்சப்ப கயிறாகப் பயன்படுத்திய நாகம். அவர் மனைவிதான் இந்த மன்ஸா தேவின்னு சொல்றாங்க. கஷ்யப முனிவரின் மானசீக புத்ரி.

வெளியே வந்து கோவில் முற்றத்தில் நின்னு பார்த்தால் கீழே ஹரித்வார் நகரமும் ஹரிகிபௌரியும் கங்கையும் மசமசன்னு தெரியுது. பனிமூட்டம் வர ஆரம்பிச்சுருச்சு. அடர்ந்த மரங்கள் உள்ள காடு. இந்த மரங்களில் ருத்திராட்ச மரம் இருக்கும். ஆனா எங்கே? ஐயோ சிறுமுயற்சியின் செல்நம்பரை எழுதிக்கிட்டு வரலையேன்னு ஏக்கம். ரெண்டரைநாள் பயணம் என்பதால் மடிக்கணினியை எடுத்துக்கிட்டுப் போகலை:(
தரிசனத்தை முடிச்சுக்கிட்டு மறுபடி கேபிள்கார் ஏறி தரைதளத்துக்கு வந்தோம். இந்த பில்வபர்வத் குன்றுக்கு நேரெதிரா நகருக்கு அடுத்தபக்கம் ஷிவாலிக் மலைகளின் கிழக்குப்பகுதியில் நீல்பர்வத் என்னும் மலைக்குன்றில் சண்டிதேவிக்கு ஒரு கோவில் இருக்கு. தேசிய 2 நெடுஞ்சாலை 58 இல் வரும் ஹரித்வார் நகரத்துக்குள் நுழையும் ரவுண்டபௌட்டில் இருந்து வலதுகைப்பக்கம் திரும்பணும். ஒரு ரெண்டு ரெண்டரை கிலோமீட்டர் தூரம். சாலை மலைப்பாதையா இருக்கு.
இந்தக் கோவிலுக்குப் போகவும் ரோப்கார் வசதி செஞ்சுருக்காங்க. ஒரே கம்பெனிதான் இந்த ரெண்டையும் நடத்துது. இந்த ரெண்டுக்கும் சேர்த்தும் டிக்கெட் வாங்கிக்கலாம். நல்ல டிஸ்கவுண்டு கிடைச்சிருக்கும். ஏதோ ஆஸ்ரமத்துக்குள் போறமாதிரி தோட்டமும் புல்குடிலுமா ஒரு கட்டிடம்தான் ஸ்டேஷன். டிக்கெட் வாங்கிக்கிட்டுக் காத்திருக்கும்படியா ஆச்சு. ஏதோ பழுது பார்த்துக்கிட்டு இருக்காங்களாம். இருட்டுமுன்னால் போனால் நல்லது.
208 மீட்டர் உயரத்தில் இருக்கு நாம் போய் இறங்கவேண்டிய இடம். பயணதூரம் 767 மீட்டர். அஞ்சு நிமிசத்தில் போயிடலாம். குரங்குத்தொல்லை உண்டு . கவனமா இருங்கன்னு அங்கங்கே எச்சரிக்கை வச்சுருக்காங்க. பந்தரோ(ன்) ஸே சாவதான்...............ஆமாம்.........நாம் பார்க்காத குரங்கா???? மெத்தனம்:(
மேலே போய் இறங்குனதும் இந்தப்பக்கம் 100 மீட்டரில் சண்டி, அந்தப் பக்கம் 100 மீட்டரில் அஞ்சனின்னு அறிவிப்பு. ஆஹா..... அஞ்சனியே முதலில் போகலாம். நம்ம நேயுடுவின் தாய் அல்லவான்னு அந்தப் பக்கம் பாய்ஞ்சேன். .
இங்கே தேங்காய் உடைக்கணுமாம் அதுதான் ரொம்ப விசேஷம்னு பேனர் கட்டி வச்சுருக்காங்க. இப்பெல்லாம் பயணங்களில் ஸ்வாமி தரிசனத்துக்குப் போகும்போது தேங்காயோ மற்ற பூஜைப்பொருட்களோ வாங்கறதில்லை. பயணம் தொடரும்போது தேங்காய்களையும் கோவில் பிரஸாதங்களையும் கையோடு கொண்டுபோய் வண்டியில் வச்சுக் கடைசியில் வீடு திரும்பும்போது எல்லாம் கெட்டுக்கிடக்கும். சாமி சமாச்சாரமுன்னு குற்ற உணர்வோடு அதைத் தூக்கிப்போடணும். இந்த வம்பெல்லாம் எதுக்கு? அதனால் கோவில் உண்டியலில் கொஞ்சம் காசு போடுவதோடு சரி. .

மலையின் ஓரத்தில் மண்பாதை. கடந்தால் ஒரு வளைவில் கோவிலுக்கு ஏறும் படிகள். ஒரு பத்துப்பதினைஞ்சு படிகள்தான். ஹனுமனுக்கு ஒரு தனிச்சந்நிதி. அதுக்கு எதிரில் வடக்குப் பார்த்த சந்நிதியில் குழந்தை ஹனுமனைக் மடியில் ஏந்தி உக்கார்ந்துருக்கும் அஞ்சனா தேவி. வடஇந்திய வழக்கப்படி செந்தூரம் குழைச்சுப்பூசி இருக்கும் திருவுருவம். குழந்தை க்யூட்டா இருக்கு.
இந்த மலைமேல் 'அழகி அஞ்சனி' உலாத்திக்கிட்டு இருக்கும்போதுதான் வாயு பகவான் பார்த்து மோகித்தானாம். ஒரிஜனலா அஞ்சனா தேவி ஒரு தேவலோகத்து அப்ஸரஸ். ஒரு ரிஷி(?) யின் கோபத்துக்கு ஆளாகி சபிக்கப்பட்டு வாநரமா பூமிக்கு வந்துட்டாங்க. ரூபம் மாறினாலும் அழகு மாறலை. அப்போதான் வாயு பகவான் அஞ்சனையைப் பார்க்க நேரிட்டது. ஆசையை அடக்கமுடியலை அவனுக்கு. காற்றாக அவளைத் தொட்டான். யாரடா துஷ்டனே.... என்னைத் தழுவுவதுன்னு கோபமாய்க் கேட்ட அஞ்சனையை , உன்னை மாசு படுத்தவில்லை. மானஸீகமா உன்னைத் தொட்டேன். ஆசையால் தூண்டப்பட்டு இந்தக் காரியத்தைச் செஞ்சுட்டேன். என்னை மன்னிக்கணும். ஆனாலும் என் மானஸ தீண்டலால் உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் என்னைப்போலவே பலமும் வீர்யமும் உள்ளவனாகவும், நிகரற்ற பராக்கிரமமும் புத்தியும் கொண்ட வாநரனாக இருப்பான்னு சொன்னார். அப்படிப் பொறந்த புள்ளைதான் நம்ம ஆஞ்ச'நேயடு' ! அசகாய சூரன் அஞ்சன குமாரன்,
அஞ்சனி மூலவர் சந்நிதி

இவர் சந்நிதிமுன்னே நின்னு 'இப்போதைய' தேசிய விளையாட்டை விளையாடுறேன்னு வேண்டிக்கிட்டதுபோல ரெண்டுமூணு பேர் பக்தர்களுக்கு இடைஞ்சலா ஒரு க்ரிக்கெட் பந்தை வச்சு திறமையைக் காமிச்சுக்கிட்டு இருந்தாங்க:(

தரிசனம் முடிச்சு வெளியே படி இறங்கும் இடத்தில் கோவில் ப்ரசாதம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. சின்னதா வெட்டிய தேங்காய்த் துண்டுகள். ரெண்டோ மூணோ கையில் கிடைக்குது. நான் வாங்கிக்கிட்டு நகரும்போது, திரும்பி என்னைக்கூப்பிட்டு ரெண்டு கைகளாலும் வாரி எடுத்து கொடுத்தாங்க. 'நாம் என்ன ஸ்பெஷல் பக்தையோ'ன்னு நினைச்சுக்கிட்டே, கோவில் பிரசாதத்தை மறுக்க வேணாமேன்னு எல்லாத்தையும் வாங்கிக்கிட்டேன். ஒரு முழுத்தேங்காய் அளவு! முன்னே போயிட்ட கோபால் திரும்பிப் பார்த்து 'எதுக்கு இவ்வளவு?'ன்னார். 'கொடுத்தாங்க'ன்னேன்.

தொடரும்.......................:-)


25 comments:

said...

இந்த கெட்டப்பழக்கம் இருக்கே அது எங்க வீட்டிலும் உண்டு.. சில்லறை அஞ்சுபத்து நாம் கேமிரா வைக்கிற பேக் ல தான் வச்சிக்கனும். :)

said...

ஆகா ஆகா நல்லதொரு - பயனுள்ள தகவல்கள் நிறைந்த இடுகை. அன்பாக் காணிக்கை கேட்டா போடறதுக்கு கோவாலைத் தேடற நிலைமைதானா ? எங்க வூட்ல - ஹேண்ட் பேகில பத்து ரூபா - புதுக் கட்டு ( சிவகாசில அடிச்சதுல்ல ) - வச்சிருப்பாங்க - ரொம்பத் தாராள மனசு - நான் வுட்டுட்டேன்.

ஆனாலும் இந்த காசு புடுங்கறதுல வடக்கே எல்லாம் எங்களூக்கு மன வருத்தம் தான். கயாவுல - விஷ்ணு பாதம் கோவிலில - சாமி கும்பிட்டுட்டு கேஷுவலா வெளியே வரும்போது - சடார்னு ஒருத்தன் தலயப் பிடிச்சு ஒரு அழுத்து அழுத்தி அஙகே தூண்ல இருந்த சாமி பாததுல வச்சிட்டான். திமிறி எழுந்த உடனே - தட்சன் டாலோ தட்சன் டாலோ - உருப்படாதவன் - ஒரு மாலைய வேற கழுத்துல போட்டுட்டான். - அப்புறம் அவன கத்த நான் கத்த ( வெவ்வேறு மொழில ) - கடசியா 10 ரூபா பேசி - காசு கொடுக்க நினைச்சா எல்லாம் நூறு ரூபாயா இருக்கு - எங்க தங்க்ஸ் கோபால் மாதிரி முன்னாடி போயிட்டாங்க - அத எடுத்துக் கியிலே வச்சிக்கிட்டு - 90 ரூபா கொடுத்தாத்தான் தருவேன்னு சொல்ல -அவன் சடக்குன்னு பிடிங்கிக்கிட்டி - சாமிக்குத்தானே = கொடுன்னு சொல்ல - ஒரே சண்டை - கடசில 90 வாங்கிக்கிட்டு அவனைத் திட்டித் தீத்துட்டு வந்தேன்.

சிறுமுயற்சி - எண் மனசில இருக்க வேணாமா ?

said...

அருமையான படங்களுடன் சுவாரசியமான பதிவுங்க.

said...

//கோபால் திரும்பிப் பார்த்து 'எதுக்கு இவ்வளவு?'ன்னார். 'கொடுத்தாங்க'ன்னேன்//

புதையல் படத்துல வர்ற கவுண்டமணி,அர்விந்த்சுவாமி காமெடிதான் ஞாபகம் வருது :-))))

said...

கலக்கல் ட்ரிப் போல.

நிறைய்ய விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன்.

நன்றி

said...

இந்த கெட்டபழக்கம் எங்கூட்லயும் இருந்தது. இப்பல்லாம் கவலைப்படறதேயில்லை. நாந்தான் சரிபாதியை பிடுங்கிடுவேனே.. நான் காசைச்சொன்னேன் :-)))))

said...

அட கேபிள் கார் கூட இருக்கா.
தேங்காய்த்துண்டு பத்ரமா இருந்ததா:) இல்லை நேயடு சந்ததியினர் கேட்டாங்களா..
இந்த புருஷர்கள் எல்லாம் முதலில் ஓடுவதை விசாரிக்கணும்பா. ஏதோ சைக்காலஜி அதில இருக்கு.
மத்தபடி அஞ்சனா தேவி கதை நல்லா இருந்தது. ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு கதை. ஹ்ம்ம்.

said...

ஓசியில ஒலகம் சுத்திக்காட்டறீங்க துள்சி.

உடன்கட்டைன்னு தான் வாசிச்சுத்தொலைச்சேன்.

படத்தைப் பார்த்து நாவில்.....ம்ம்ம்ம்ம்... ருசி இழுக்குது.

வாசுகி பெண்பெயர் இல்லியா?????
வள்ளுவரின் மனைவி வாசுகி???

எனில், இது பொதுப்பெயரா. ரொம்ப நாளூ (மாசம், வருஷம்??) கழிச்சு ஊட்டுக்கு வந்திருக்கேன். விருந்து குடுத்து அனுப்புங்க பொன்ணுக்கு:)

said...

அது உதான் கட்டோலா பா:)
நீங்க வேற.
யாருக்கும் அந்த ஐடியா இப்ப சத்திக்கு இருக்கற மாதிரி தெரியல;)

said...

ஒரு டூர் போன எபஃக்ட் அப்படியே இருக்கு... நன்றி

said...

//அடுத்து ஒரு ஹோமகுண்டம். லேசாய் புகை வந்துக்கிட்டே இருக்கு,. அங்கே இருப்பவர் வாம்மான்னதும் உஷாராகிட்டேன்.//
:-)))

//கடைசியில் வீடு திரும்பும்போது எல்லாம் கெட்டுக்கிடக்கும். சாமி சமாச்சாரமுன்னு குற்ற உணர்வோடு அதைத் தூக்கிப்போடணும். இந்த வம்பெல்லாம் எதுக்கு? அதனால் கோவில் உண்டியலில் கொஞ்சம் காசு போடுவதோடு சரி. .//

மீ டூ

புகைபடங்களுக்கும் , ஆஞ்ச'நேயடு' கதைக்கும் நன்றி

said...

"மூணு வாயும் அஞ்சு கைகளுமா இருக்கும் உருவம். (ஆமாமாம். பெண்ணுக்குத் தேவையாத்தான் இருக்கு!)" ஹா..ஹா

ரோப் கார் ஆசையைக் கிளப்பிட்டீங்கள்.

said...

வாங்க கயலு.

உள்ளூர் சுத்தலில் முக்கால்வாசி நாள் நான் வெறுங்கைதான். வேணுங்கறதெல்லாம் கோபாலின் பேண்ட் பாக்கெட்டில் போட்டுடறதுதான்.

இங்கே கொடு. அதான் நான் கூட வரேனேம்பார்.

said...

வாங்க சீனா.

எளிதாகக் கிடைக்கும் 500 ரூ சலவைத்தாள்தான் நம்ம கைப்பையில்.
அரிதாகக் கிடைக்கும் அழுக்குப்பத்து ரூபாய்த்தாள்கள் எல்லாம் கோபாலின் பர்ஸில். இப்பக் கணக்குப் புரிஞ்சுருக்குமே:-)))))

வடக்கே எல்லாம் ஒரு கேங்காத்தான் செயல்படறாங்க இந்தக் கோவில் விஷயங்களிலும்!

said...

வாங்க சித்ரா.

அப்ப இது வெட்டிப்பேச்சு இல்லைங்கறீங்களா:-)))))))))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

நம்மளைத்தான் சினிமாவில் காப்பி அடிக்கிறாங்கபோல!

பெருசு எனக்கும் சிறுசு அவருக்குமுன்னு முடிவு பண்ணியாச்சுங்களே:-)

said...

வாங்க புதுகைத்தென்றல்.

அப்பாடா......வெறும் மொக்கை இல்லைன்னு சொல்லிப்பேன்:-)

said...

வாங்க வல்லி.

கூடவே வந்தா வாங்கித்தரும்படியா போயிருமோ என்ற உள்ளுணர்வோ?

எல்லா இடத்துக்கும் 'கதை' இருக்குப்பா. நின்னு கேக்கத்தான் நேரம் இல்லை:(

said...

வாங்க மது.

திடீர்னு இங்கே இடியுடன் கூடிய மழை! என்னடான்னு பார்த்தால் நீங்க வந்துருக்கீங்க!!!!!!!

ஆமாம். ராமாயணத்துலே சபரி பெண்ணின் பெயர்தானே?

நம்ம கயலுவின் மகன் பெயர் சபரி. அதனால் இதுவும் பொதுப்பெயராக இருக்கணும் ரமணி மாதிரி!

நேரில் வந்து விருந்துண்ண வேண்டுகிறேன். சீக்கிரம் கிளம்பிவாங்க.

said...

வல்லி.

இனிமே எல்லாமே பொது நீதிதான்ப்பா:-)

said...

வாங்க கருன்.

முதல் வரவா? வருகைக்கு நன்றி.

நிறைய இடங்களுக்கு கூட்டிப்போயிருக்கேன். இப்போ ஹரித்வார்!

said...

வாங்க லோகன்.

கருணைப் பார்வையுடன், அன்பு குடிகொண்ட குரலில் ஆதரவா அழைக்கும்போது 'சட்'னு அதை மதிக்கத்தோணுது.

ஆபத்தெல்லாம் அதுக்கு அப்புறம்தான்:-))))

said...

வாங்க மாதேவி.

எத்தனை கைகள் இருந்தென்ன......... வேலை அடங்கறதில்லையேப்பா. என்னிக்காவது ஒரு நாள் எல்லாத்தையும் முடிச்சோம் என்ற நிலை இருக்கா? நெவர்:(

said...

அன்பு தோழி,

"குமுதம் சினேகிதி" December 16--31, 2010 இதழ் பக்கம் 81 பார்க்கவும்.--பத்மாசூரி

said...

வாங்க பத்மா.

சண்டிகரில் இருந்துக்கிட்டு சிநேகிதிக்கு எங்கே போவேன்?

முடிஞ்சால் ஸ்கேன் செஞ்சு அனுப்புங்க என் மெயில் ஐடிக்கு.