Thursday, March 03, 2011

சோகத்தில் பெரியது? புத்திர சோகமாத்தான் இருக்கணும்:(

பரதன் கோவில் ஒன்னு இருக்காம். 'ஜல்தி சலோ'ன்னு ஓடுனோம். ராமாயண பரதனாக்கும் என்று நினைச்சேன். ஆனால்...இல்லை. உண்மையாவே ப்ராச்சீன் மந்திர்தான். கேதார் கந்த ஸ்கந்த புராணத்தில் இந்தக் கோவிலைப்பற்றிய விவரம் இருக்குன்னு தலபுராணம் சொல்லுது.

ரைப்ய ரிஷியும் ஸோமசர்மாவும் கங்கைக்கரையில் தவம் செஞ்சப்ப, மகாவிஷ்ணு அவர்கள் முன்னே தோன்றினார். ரைப்யரின் வேண்டுகோளுக்காக விஷ்ணு தன் அவதாரங்களையெல்லாம் மாயையின் மூலம் காண்பித்தார். எல்லா உயிர்களும் மாயைக்குக் கட்டுப்பட்டிருக்கே. அவைகளை விடுவிக்கணுமுன்னு மீண்டும் வேண்டினார். 'ஆகட்டும் பார்க்கலா'முன்னு சொன்ன விஷ்ணு, இந்த இடம் ரிஷிமுனிவர்களின் தவத்தால் ரொம்பப் புண்ணியம் அடைஞ்சுருக்கு. இந்த இடத்துக்கு ரிஷிகேஷ்ன்னு பெயர் வச்சுட்டேன்னார்.

'கலியுகத்துலே பரத் என்ற பெயரில் நான் தோன்றி இங்கே கோவில் கொள்வேன். அப்போது ரிஷிகேஷில் வந்து வாழ்ந்து மாயாகுண்ட் என்னும் படித்துறையில் கங்கையில் முங்கி, நியமம் மாறாமல் சடங்குகள் செய்து, இந்த பரத் கோவிலை வலம்வந்து என்னை வழிபட்டோருக்கு மாயையில் இருந்து விடுதலை கிடைக்கும்' என்றார்.
எட்டாம் நூற்றாண்டில் ( 789 வது ஆண்டு) வஸந்த பஞ்சமி தினத்தில் ஆதி சங்கரர் இங்கே விஜயம் செஞ்சு, மூலவர் திருவுருவை மீண்டும் பிரதிஷ்டை பண்ணினார். அந்த வருசம் முதல் ஒவ்வொரு வருசமும் பெருமாளின் சாளக்கிராமச் சிலையை வெளியில் எடுத்து மாயாகுண்டத்தில் நீராட்டி பூஜைகள் செய்து மீண்டும் கோவிலுக்குள் கொண்டு போய் வைக்கும் சடங்கு தவறாமல் நடக்குது. அக்ஷ்ய த்ரிதியை தினத்தன்று (தங்கம் வாங்க ஓடாமல்) இங்கே வந்து மாயாகுண்டத்தில் நீராடி கோவிலை 108 முறை வலம் வந்தால் பத்ரிநாராயணனை ஸேவிச்ச பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைக்கு இன்னும் ஒரு விசேஷம் என்னன்னா மூலவர் ரிஷிகேஷ் நாராயணனின் மலர்களால் மூடப்படாத திருவடிகளை 'ஊனக்கண்ணால் ' பக்தர்கள் பார்க்கலாம்.நாங்க போகும்போது கோவில் மூடி இருந்துச்சு. தரிசன நேரம் காலை 5 முதல் 11. அப்புறம் பகல் 1 முதல் 9 வரை. இப்போ மணி 11.30. அரைமணி லேட்டா வந்துருக்கோம். இன்னும் ஒன்னரை மணி காத்திருக்க முடியாதுன்னு ரெண்டுங்கெட்டான். வெளியே இருந்தே கும்பிடு போட்டுட்டுக் கிளம்பணும். கோவில் படு சுத்தமா இருக்கு. சந்நிதி வாசலில் வயசான ஒரு மரம் ஆலும் அரசுமாப் பின்னிப்பிணைஞ்சு வேரும் விழுதுமா நிக்குது. கோவில் கோபுரம் புடைப்புச்சிற்பங்களுடன் புதுமாதிரியா இருந்துச்சு.
த்ரிவேணி காட் அடுத்த ஸ்டாப். இங்கே வரணும் என்பதுதான் இந்த மொத்தப் பயணத்தின் முக்கிய நிகழ்ச்சி. மனசு ஒரே பாரமாவும் துக்கமாவும் இருந்துச்சு. என் குழந்தைகள் இருவரின் அஸ்திகளை இத்தனை வருசங்களா வச்சுக் காப்பாற்றி வந்தது, கங்கையில் கரைக்கணும் என்ற ஒரே வேண்டுதலுக்காகத்தான். காசியைவிட இங்கே ஹரித்வாரில் கங்கை சுத்தமாக இருக்கு. ரிஷிகேஷிலோ இன்னும் படு சுத்தம். சாஸ்த்திர முறைப்படி சடங்கு செய்ய வேண்டாம். குழந்தைங்க நம்மிடம் காமிச்ச உண்மையான அன்புக்கு இதுவாச்சும் செய்யணுமுன்னு 'என் செல்லச்செல்வங்கள் கப்புவுக்கும் கோகிக்கும்' முடிவு நிச்சயமானபோதே மனசுலே நினைச்சுக்கிட்டதுதான். நியூஸியில் வேற எந்தச் செல்லங்களுக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம் இவனுங்களுக்குக் கிடைக்குதேன்னு மனசுக்குள்ளே ஒரு வியப்பு. புண்ணிய ஆத்மாக்களா முற்பிறவியில் இருந்துருப்பாங்களோ என்னவோ!
த்ரிவேணி காட்

இந்த படித்துறையில் மூன்று நதிகள் சங்கமிக்கலை. இந்த இடத்துக்கு த்ரிவேணி காட் என்ற பெயர். அவ்ளோதான். இங்கேயும் 'பித்ரு கர்மம்' செய்ய ஏராளமா ஆட்கள் வந்து போவதால் நதிக்கரையையொட்டி பெரிய விசாலமான இடத்தைக் காங்க்ரீட் தரையாப் போட்டு வச்சுருக்காங்க. அமாவாசை தினங்களில் நல்ல கூட்டம் இருக்குமாம். கீதோபதேச சிற்பம், கங்கையைத் தாங்கும் சிவன், அவருடைய ரிஷப வாகனம், பார்வதி இப்படி செஞ்சு வச்சுருக்காங்க. தரையைக் கடந்து ஒரு எழுபது , எம்பது மீட்டர் தூரத்தில் கங்கை. வெள்ளப்பெருக்கு வரும்போது காங்க்ரீட் தரையெல்லாம் முழுகிருமாம்.
உச்சிவெயிலில் தகதகன்னு மின்னிக்கிட்டு ஓடுறாள். நிறைய பசங்க தண்ணிரில் என்னமோ தேடிக்கிட்டு இருக்காங்க. ஒரு பொண்ணு கையில் ஒரு பெரிய கண்ணாடிச்சில்லை வச்சுக்கிட்டு தண்ணிமேலே வச்சுப் பார்த்துட்டு , தண்ணிக்குள்ளே கையை விட்டு என்னமோ எடுக்குது. எனக்கு இருந்த மனநிலையில் என்ன ஏதுன்னு சரியா கவனிக்கலை. அப்புறம் கோபால்தான் சொன்னார் உருண்டைக் கற்களை எடுக்குறாங்க. சாளக்ராமம்னு சொல்லி விக்கறாங்கன்னு.
மௌனமாப் பிரார்த்தனை செஞ்சுக்கிட்டே என் குழந்தைகளின் அஸ்தியை கங்கையில் கரைச்சேன். தாங்க முடியாத துக்கத்தாலே நெஞ்சடைச்சுக் கண்ணீர் அடங்கமாட்டேங்குது. என்ன கீதை படிச்சு என்ன பயன்? அஞ்ஞானம் விட்டு விலகுதா? 'போகட்டும்மா. பசங்களுக்கு நல்ல கதி கிடைக்கட்டும். இத்தனை வருசமா அந்த ஆத்மா எங்கே போறதுன்னு தெரியாம திகைச்சு நின்னுருக்குமே'ன்னார் கோபால்.
நான் காவல் இருக்கேன். நீ பதறாமல் நல்லாத் தூங்குன்னு அங்கே ரெண்டு செல்லங்கள்.

நம்ம கௌஷலேந்திர சிங்கை மெயின் ரோடுக்குப் பக்கத்தில் இறக்கி விட்டுட்டு இவ்வளவு நேரம் நம்கூடவே இருந்து வழிகாட்டுனதுக்கு ஒரு தொகையைக் கொடுத்தோம். அவரோட பொண்ணுக்குக் கல்யாணம் வச்சுருகாருன்னு அவரோடு பேசிக்கிட்டு வந்ததுலே தெரியவந்துச்சு. எதிர்பாராத வருமானத்துலே மனுசர் கொஞ்சம் திகைச்சுத்தான் போயிட்டார். உடனே சமாளிச்சுக்கிட்டு, 'ஒரு பத்து ரூபாய் சில்லறையா இருந்த தாங்க'ன்னார்:-))))) திரும்பிப்போக ஷேர் ஆட்டோவுக்காம்.

ஹரித்துவார் சாலையில் வண்டியைத் திருப்பி வந்துக்கிட்டு இருந்தப்ப, 'உன் அஸ்தியைக்கூட இதே இடத்துலே கொண்டுவந்து கரைச்சுடவா?'ன்னார் கோபால். 'வேணாம் அவ்வளோ புண்ணியம் செய்யலை. நம்ம வீட்டுலே இருக்கும் ரோஸ் செடிகளுக்குக் கீழே தூவி விட்டுருங்க. அதுவே போதும்'னேன்.

ரிஷிகேஷில் இருந்து திரும்பி வரும் வழியில் ஹனுமன் காம்பவுண்டு சுவரைத்தாண்டி எட்டிப்பார்க்கிறார். என்னைத்தான் தேடறாரோன்னு ஸம்சயம். பாபா ஸ்ரீ நீம் கரோலி மஹராஜ் ஆஸ்ரமம். பெரிய ரெட்டை கேட்டுக்கு நேரா புள்ளையார் கோவில். கோவிலை ஒட்டி பெரிய சிவன்,லிங்கரூபம். அடுத்து நின்ற கோலத்தில் ஹனுமன். புதுசா வர்ணம் தீட்டும் வேலை நடக்குது.சொந்த ஆஸ்ரமம் தொடங்கும் எண்ணத்தை மட்டும் அப்படியே விட்டுடக்கூடாது. ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் பூனைச்சாமியாரிணி பற்றிய சேதியைத் தெரிஞ்சுக்கத்தான் போறீங்க!

தொடரும்.......................:-)

24 comments:

said...

பிள்ளைகளை நற்கதி சேர்த்ததுக்கு கோடி புண்ணியம். அதுகளுக்கும் உங்களுக்கும் ஏதோ ஜன்ம தொடர்பு இருந்ததாலதான் அதுகள் உங்க கிட்ட வந்திருக்குப்பா. அம்மா நம்மளைக் கரையேத்திடுவான்னு.
கீதை படிக்கிறது கேட்கறது நல்லது. அது என்னிக்கு மனசில ஏறப் போகிறதுங்கறதுதான் இங்க கேள்வி.

said...

ப்ரஸண்ட்

said...

இந்த கோகிப்பையன் இன்னும் கொஞ்சநாள் உங்ககூட இருந்திருக்கலாம்.. என்ன அவசரமோ!!

said...

//'வேணாம் அவ்வளோ புண்ணியம் செய்யலை. நம்ம வீட்டுலே இருக்கும் ரோஸ் செடிகளுக்குக் கீழே தூவி விட்டுருங்க. அதுவே போதும்'னேன்.//

:((((

said...

//குழந்தைங்க நம்மிடம் காமிச்ச உண்மையான அன்புக்கு இதுவாச்சும் செய்யணுமுன்னு 'என் செல்லச்செல்வங்கள் கப்புவுக்கும் கோகிக்கும்' முடிவு நிச்சயமானபோதே மனசுலே நினைச்சுக்கிட்டதுதான்//

இந்த பேராவை படிக்கும் பொழுது மனம் கனத்தது.

//சொந்த ஆஸ்ரமம் தொடங்கும் எண்ணத்தை மட்டும் அப்படியே விட்டுடக்கூடாது. ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் பூனைச்சாமியாரிணி பற்றிய சேதியைத் தெரிஞ்சுக்கத்தான் போறீங்க!//

:-)))))))))))

said...

nalla nadai... vaalththukkal

said...

\\வேணாம் அவ்வளோ புண்ணியம் செய்யலை. நம்ம வீட்டுலே இருக்கும் ரோஸ் செடிகளுக்குக் கீழே தூவி விட்டுருங்க. அதுவே போதும்'னேன்.\\


கீதை படிக்கிறதின் பலன் இங்க தெரியுதே டீச்சர். ;)

அம்மாக்களுக்கு எப்போதும் பெரிய மனசு ;)

said...

செல்லச்செல்வங்கள் ...மனம் நெகிழ்ந்தது.

said...

வாங்க வல்லி.

எல்லா சொந்தங்களும் விட்ட குறை தொட்ட குறையாத்தான் இருக்கும்போல!!

இப்பப்பாருங்க வலை உலகில் எத்தனையெத்தனை சொந்தம் நமக்குக் கிடைச்சுருக்குன்னு!!!!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

பதிஞ்சாச்சு.

said...

வாங்க அமைதிச்சாரல்.

பெருமாளின் பாற்கடலுக்குக் காவல் தேவைப்பட்டு இருக்கலாம். அதான் சீக்கிரமா கூட்டிண்டு போயிட்டார்.

said...

வாங்க சுசி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க லோகன்.

புரிதலுக்கு நன்றி.


இன்னிக்கு இப்போ ஒரு பத்து நிமிசம் முன்னால் ஆஸ்ரமம் அமைப்பது இன்னும் உறுதி ஆகி இருக்கு.

புதுசா ஒரு சாமியாரிணி நம்ம கோவிலுக்கு விஜயம் செஞ்சுருக்காங்க.

நான் இதுவரை கேள்விப்படாதவர்.

மாதாஜி விதம்மா ஆஃப் ஸ்ரீ பொத்தை!

said...

வாங்க மதுரை சரவணன்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

said...

வாங்க கோபி.

அம்மாக்களுக்குப் பெரிய மனசுதான். இல்லாமலா நாப்பத்தி ஒன்னு!!!!!!

said...

வாங்க மாதேவி.

நினைவு வந்தாலே மனசு பூஞ்சைதான்ப்பா:(

said...

ஜல்தி சலோவா... என்ன இந்தில இப்படி வெளுத்து வாங்குறீங்க!
குத்தா போட்டோ அழகு (எங்களுக்கும் இந்தி வரும்ல?)

பரதனுக்குக் கோவில் இப்போது தான் கேள்விப்பட்டேன். தகவலுக்கு நன்றி. வழக்கம் போல் சுவையான விவரங்கள், புகைப்படங்கள்.

said...

சகுந்தலா பிள்ளையைத் தவிர மிச்ச பரத்தெல்லாம் விஷ்ணு தானே? (சந்தேகம், அதான்)

said...

சொந்த ஆசிரமத்துல சமையல் வேலைக்கு (தொண்டுக்கு) ஆள் வேணும்னா சொல்லுங்க.. நல்லா சமைப்பேன்.

said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

said...

வாங்க அப்பாதுரை.

ஹிந்தி இவ்வளவு சுலபமா வருது பாருங்க:-)))))

இது ராமாயண பரதன் இல்லை. ஆனால் ராமாயண பரதன் விஷ்ணுவின் சங்கு இல்லை சக்கரத்தோட அம்சம் என்று கேள்வி.

நம்ம ஆஸ்ரமத்துலே அட்லீஸ்ட் சமையல் ருசி ரொம்ப நல்லா இருப்பதுக்கு கேரண்டி கொடுத்துடலாம்:-)))))

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

செஞ்சுருவோம்:-))))))

said...

எல்லா சொந்தங்களும் விட்ட குறை தொட்ட குறையாத்தான் இருக்கும்போல!!

இப்பப்பாருங்க வலை உலகில் எத்தனையெத்தனை சொந்தம் நமக்குக் கிடைச்சுருக்குன்னு

said...

வாங்க பத்மா.

உண்மைதான். இப்போ ஏகப்பட்ட சொந்தங்கள்!!!!!