மாதேவி சொன்னாங்க பாருங்க...அது பலிச்சுருச்சு. அதுவும் எப்போ? சொன்ன ஒன்னுரெண்டு நாளுலேயே! அவுங்க வாயிலே சக்கரையைப் போட்டுக்கச் சொல்லணும்:-)
வெள்ளி தொடங்கி செவ்வாய் வரை அஞ்சு நாளைக்கு சண்டிகர் ஆர்ட்ஸ் அண்ட் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல் நடக்குது. ட்ரைபல் நடனம், உஸ்தாத் அம்ஜத் அலிகான் சரோட், உஸ்தாத் ரஷீத் கான் பாட்டு, பரதநாட்டியம், நாடகம், கூடவே ஆர்ட் வொர்க்ஷாப் இப்படி.............
முதல் நாளுக்கு நார்த்ஸோன் கல்ச்சுரல் செண்டர் சண்டிகரில் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செஞ்சுருந்தாங்க. செக்டர் 17 இல் உள்ள ப்ளாஸாவில். இது ஷாப்பிங் ஏரியாவிலேயே இருக்கு. செயற்கை நீரூற்றுகள் எல்லாம் வச்ச பெரிய இடம்தான். மாலை 7 மணிக்கு ஆரம்பம். சங்கு ஊதி (!) ஆரம்பிச்சாங்க! சீப்ப்ப்ப்ப் கெஸ்ட்டுகள் வரவுக்காகக் கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதாப் போச்சு. லேட்டா வந்து ஒரு பத்தே நிமிசத்துலே கிளம்பிப் போயிட்டாங்க பூங்கொத்துகளை வாங்கிக்கிட்டு:(
மணிபுரி, நாகாலாந்து, மேகாலயா, அஸ்ஸாம்ன்னு பழங்குடிகள் நடனம். ஏற்கெனவே ரெண்டுமூணுமுறை பார்த்ததுதான். அப்புறம் ஒடிஸாக்காரர்களின் துர்கை நடனம் அட்டகாசமா இருந்துச்சு. பெரிய சைஸ் நாய்கள்(?) ரெண்டும் அதோட குட்டி ஒன்னுமா தாடிக்காரத் தாத்தாவுடன் ஒரு நடனம். சைனீஸ் ட்ராகன் டான்ஸ் நினைவுக்கு வந்துச்சு.
மேடை ஒளி அமைப்பு மகா மட்டம். இவ்வளவு மோசமான ஒன்னை நான் இதுவரை பார்த்ததே இல்லை. வெளிச்சம் மேடையில் ஆடுறவங்களுக்குப் போடாம பார்வையாளர்கள் கண்களைப் பதம் பார்த்துக்கிட்டே இருக்கு. என்னதான் இருக்கைகள் போட்டு சுத்திவரக் கயிறு கட்டி வேலி போட்டுருந்தாலும் தப்பிச்சுப் போயிருவோமோ என்ற பயமாவும் இருக்கலாம். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு சரியா எனக்கு முன் ஸீட்டுலே ஒரு சர்தார். பஞ்சாப் பக்கம் வந்துட்டு இப்படி டர்பனுக்குப் பயப்படும்படியா ஆயிருச்சு என் நிலைமை.
கேமெராவைப் போகஸ் செய்வது படா முஷ்கில் த்தா:( கோபால்கிட்டே கொடுத்துட்டேன். அவர் பங்குக்கு கெடுப்பதைக் கெடுத்து வச்சார்:-)))) அதிலும் தப்பிப்பிழைச்சதில் சில உங்கள் பார்வைக்கு. அதிவேக நடனமா இருக்கே எல்லாம்!!!!
ராஜஸ்தானி போ(ல்)க் டான்ஸ் நல்லாவே இருந்துச்சு. அதில் ஒரு மயில் நடனம் கண்ணனும் ராதையும் கோபிகைகளுமா அட்டகாசம் போங்க! இதுலே கண்ணன் ஒரு தாம்பாளத்தைக் கையில் வச்சுச் சுழற்றிக்கிட்டே இருக்கார்(விஷ்ணு சக்கரம்?) ராதை காலமுக்கி விடும்போது கூட!!!
கண்ணைக் கூசவைப்பது ஒரு பக்கமுன்னா காதைக்கிழிப்பது இன்னொரு பக்கமுன்னு விடாது நடந்த யுத்தத்தில் நான் தோத்துப்போய் சீக்கிரம் கிளம்பிட்டேன்:(
ஃபோட்டோக்காரர்கள் இம்சை ஒரு பக்கம். குறுக்கும் நெடுக்குமா முன்னாலே பாய்ஞ்சு பாய்ஞ்சு படம் எடுத்து........ மறுநாள் தினசரியில் ஸ்டாம்ப் அளவு படம் போட்டுக் கடமையை ஆத்திடறாங்க.
கீழே ஹவுஸ் ஓனர் வீட்டு நாக்குட்டி பிக்ஸி நடுவில் மூணு மாசமா சொந்தக்காரர் வீட்டுப் பண்ணையில் போய் நல்லொழுக்கம் எல்லாம் படிச்சுட்டுத் திரும்பி வந்துருக்கார் .. குழந்தைத்தனத்தையெல்லாம் சட்னு கழட்டிப்போட்டு பெரியமனுசனா வந்துருக்கு இந்த அஞ்சு மாசக் குழந்தை. கோபால்தான் ஓடிவந்து சொன்னார் அவன் வந்துட்டான்னு!! என்னிடம் நாய் பூனையெல்லாம் இனி வளர்க்கவே கூடாதுன்னு வாக்கு வாங்கிக்கிட்டு இப்போ பிக்ஸியைக் கொஞ்சறார் பாருங்க!
பிக்ஸி அன்றும்
அடுத்த வீட்டுக் குழந்தையைக் கொஞ்சினால் பிரச்சனை இல்லையாம்!!!! நானும் அப்பப்ப பேபி ஸிட் பண்ணுவேன். அவனோட அம்மாவை ஒரு வேலையும் செய்ய விடலைன்னு மாடிக்குக் கொண்டுவந்து கொஞ்சநேரம் விட்டுவைப்பாங்க. போய்ப் பார்த்தால் கூப்டவுடன் ரொம்ப பொலைட்டா வந்து காலருகில் உக்கார்ந்தான். வெயிலா இருக்கே தண்ணி குடிப்பாட்டுங்கன்னா......... லஸ்ஸிதான் குடிப்பானாம். 100% அஸ்லி பஞ்சாபி:-))))
பிக்ஸி இன்றும்
பிரபல எழுத்தாளர்ன்னா நாய் இருக்கணுமாம்:-))))))))))))) நான் சொல்லலைப்பா. கோபால் வாக்கு.
Monday, March 28, 2011
உள்ளூர் சமாச்சாரம் ஒன்னுரெண்டு
Posted by துளசி கோபால் at 3/28/2011 06:20:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
//பிக்ஸி//
உங்க ஜிகே நிறத்தில் இருப்பதால் உங்க இரண்டு பேருக்கும் சட்டுன்னு புடிச்சுப் போச்சு போல
பிக்ஸி - சூப்பரு ;)
\\பிரபல எழுத்தாளர்ன்னா நாய் இருக்கணுமாம்:-))))))))))))) நான் சொல்லலைப்பா. கோபால் வாக்கு.\\
ஆகா..! ;))
வெல்வெட் பொம்மை மாதிரி இருக்கு பிக்ஸி..
படம் தெளிவா வந்துருக்கு. ஊரில் இருந்தவரைக்கும் உள்ளே நாலைந்து இருந்தது. வருடவருடம் குட்டி போட்டு அதை பலரும் எடுத்துக் கொண்டு......
என்னமோ தெரியல இது பிராணிகள் வளர்ப்பு எனக்கு சற்று அலர்ஜியாக உள்ளது. ஆனால் கிராமங்களில் நான் பார்த்த நாய்களுக்கு கவனிப்பு குறைப்பு. ஆனால் அந்த நாய்கள் காட்டும் விசுவாசம் அதிகம்.
வயலில் திருட வந்தவனை அவனின் தொடைக்கறியை கொத்தாக சுவைத்த பாண்டியன் என்ற நாயை நாங்கள் பயத்துடன் தான் கடைசி வரைக்கும் பார்த்தோம். பாதுகாத்தோம்.
பிக்ஸிக்கு லஸ்ஸி ம்ம்ம்ம்
//இதுலே கண்ணன் ஒரு தாம்பாளத்தைக் கையில் வச்சுச் சுழற்றிக்கிட்டே இருக்கார்(விஷ்ணு சக்கரம்?) ராதை காலமுக்கி விடும்போது கூட!!!//
செம சிரிப்புத்தான் போங்க :)
பிக்ஸி கியூட்டா இருக்கு. கண்ணு பட போது. சுத்திப் போடுங்க டீச்சர்.
ஆப்பிட்டிடுச்சு :))
ரொம்பநல்லாக இருக்கிறது நடனங்கள்.
சிரமத்தின் மத்தியில் எங்களுக்காகப் படங்கள் எடுத்துப் போட்டதற்கு நன்றிகள்.
பிக்ஸியுடன் படம் சூப்பர்.
பிரபல எழுத்தாளரை யாராச்சும் எதாச்சும் சொன்னா கடிச்சி வைக்கவா இருக்கும்.. பட் உங்களுக்கு அதெல்லாம் தேவை இல்லையே..:)யாரும் எதும் சொல்லமாட்டாங்க..
//பிரபல எழுத்தாளர்ன்னா நாய் இருக்கணுமாம்:-))))))))))))) நான் சொல்லலைப்பா. கோபால் வாக்கு.//
நாய் மட்டும் இருந்தா போதுமா ? கொஞ்சம்
வாயும் இருக்கணும். அப்பப்ப
பாயும் புலி போலவும் இருக்கோணும் ..
சுப்பு ரத்தினம்.
அக்கா நீங்களா??
உங்க பிக்ஸி சூப்பரா இருக்கு...
photos எல்லாம் அருமை!
அப்படியா. இப்பவே ஒரு நாய்க்குட்டி வாங்கிடறேன். ஏம்ப அது கறுப்பாத்தான் இருக்கணுமா.
அழகோ அழகு. அதென்ன அப்படி சமத்தா போஸ் கொடுக்கறது:)
ராதா கிருஷ்ணா ஜோர். மயில் அதைவிட ஜோர்.
வாங்க கோவியாரே.
//உங்க ஜிகே நிறத்தில் இருப்பதால் உங்க இரண்டு பேருக்கும் சட்டுன்னு புடிச்சுப் போச்சு போல//
இருக்குமோ!!!!!!!!!!!!!
வாங்க கோபி.
மூணு மாசம் கழிச்சுப் பார்த்தாலும் நம்மை மறக்கலை!!!!!
வாங்க அமைதிச்சாரல்.
ஆமாம். முகத்தில் சிரிப்பு கம்மி:-)
வாங்க ஜோதிஜி.
என்னைப்பொருத்தவரை இந்த உணர்வு பூர்வ ஜென்ம பந்தம். நான் முன்னாறு பிறவிகளில் பூனையா மூணும் நாயா மூணுமா இருந்துருக்கேன்.
வாங்க புதுகைத் தென்றல்.
பெயர் பொருத்தம்!!!!!!!!!
வாங்க சுசி.
சிரிப்பு உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது:-))))))
பஞ்சாபி முறையில் சுத்திப்போட்டால் ஆச்சு!!!!!
வாங்க மாதேவி.
ஆ காட்டுங்க......இனிப்பு கொஞ்சம் வாயிலே போடறேன்:-)
வாங்க கயலு.
கடிச்சு வைக்கப் பழக்கணுமா என்ன!!!!!!!!!!!!
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
ஆல் பாய்ண்ட்ஸ் நோட்டட்:-)
வாங்க மேனகா.
//உங்க பிக்ஸி......// நல்லவேளை....வீட்டுக்கார அம்மாவுக்குத் தமிழ் தெரியாது:-)
இருவதாயிரம் கொடுத்தவங்க!
வாங்க அப்பாதுரை.
வருகைக்கு நன்றிங்க.
வாங்க வல்லி.
கறுப்புதான் ****க்குப் பிடிச்ச கலரு:-)
கொம்ப்ளீட் ப்ளொக் வேணும் கேட்டோ!!!!
ஆட்டம் முடிஞ்சு இப்போ அடங்கி வந்துருக்கு.அதான் சமர்த்துப்போஸ்!
Post a Comment