Monday, March 21, 2011

தமிழருக்கு மட்டும் ஒரு ரகசிய அறிவிப்பு:-)

பொறுப்பை 'ராம்' வசம் கொடுத்துட்டதால் வெறும் வேடிக்கையில் இருந்த எனக்கு இண்டியன் டெம்பிள் அசுரமுகம் பார்த்ததும் நேத்து இரவு இருட்டிலே இங்கே அல்லாடினோமே..... எதுக்கு இங்கே மறுபடின்னு பார்த்தா...... தெரு முழுக்க ஆசிரமங்களும், அதைச்சார்ந்த கோவில்களும், முன் கேட்டுலே வரவேற்கும் யானைகளுமா நல்லாத்தான் இருக்கு. கொஞ்ச தூரத்தில் உள்ள சாதாரண கேட்டுக்கு முன் ராம் ஆட்டோவை நிறுத்தி' உள்ளே போய் பார்த்துட்டு வாங்க'ன்றார். பரமார்த் ஆஸ்ரமம். இதுவும் ரிஷிகேஷில் நாம் பார்த்த பரமார்த் நிகேதனும் ஒன்னான்னு தெரியலை.

யானைக்காரிக்குன்னே, முதலில் கஜேந்திர மோட்சம் உள்ளே நுழைஞ்சதும். ஆக்ச்சுவலாப் பார்த்தால் கஜேந்திரனைக் காப்பாத்திட்டு முதலைக்குத்தானே மோட்சம் கொடுத்தார் கருடனில் ஏறிப்பாய்ஞ்ச மஹாவிஷ்ணு! நாம் ஏன் கஜேந்திர மோட்சமுன்னு சொல்றோம்?

படம் ஒரு ஃப்ரேமில் அடங்காது. பறந்து வரும் கருடனும் முதலை கழுத்தில் சக்கரமும் யானை கண்ணுலே கண்ணீரும் பாருங்க! பார்த்துப்பார்த்துச் செஞ்சவுங்க கஜேந்திரனின் தந்தத்தை விட்டுட்டாங்க. ஒருவேளை வீரப்பன் அபேஸ் பண்ணிட்டாரோ?

வளாகத்தின் உள்ளே ரெண்டு பக்கமும் கண்ணாடி போட்டச்சின்னச்சின்ன மாடங்களில் அடுக்கடுக்கா முனிவர்கள், கடவுள்கள், அவதாரங்கள் இப்படி சிலைகள். அப்புறம் தனித்தனிச் சந்நிதிகளாய் கண்ணாடிச்சுவர்கள் வச்சு சாமிகள். ராமரும், சீதையும் அனுமனுமாய் ஒரு சந்நிதி. லக்ஷ்மணன் மிஸ்ஸிங்!!! இன்னொரு தனிச்சந்நிதியில் சகஸ்ரலிங்கம். நாமே தொட்டுப் பூஜிக்கலாம்.

கொஞ்சம் பழசான கட்டிடங்கள் என்றாலும் ஒரு தும்பு தூசு இல்லாம எல்லாம் படு சுத்தமா இருக்கு. சுத்திப்பார்த்துட்டு வெளியே வருமுன் அங்கிருந்த கரும்பலகையைச் சுட்டி காமிச்சார் கோபால். ஆஹா....... தமிழர்களுக்கான ஸ்பெஷல் அறிவிப்பு! ரகசிய மொழியில் எழுதி வச்சுருக்காங்க. வாசிக்கத் தெரிஞ்சவர்கள் மட்டும் பயன்படுத்திக்கலாம்.
எனக்கும் முழங்கால் வலி இருக்கே. படியேற முடியாதே..... போகலாமா?
கேட்டுக்கு வெளியே வந்தால் கண்ணெதிரில் பாரத்மாதா மந்திர்! வைஷ்ணவோ தாபா, தீனிக்கடைகள், துணிக்கடைகள்ன்னு அந்த தெருவில் ஏகப்பட்டவை. அஞ்சு நிமிசத்துலே சப்தரிஷி ஆஸ்ரமம் வந்தோம். நிழற்கூரை போட்ட பாதையின் ரெண்டு பக்கமும் செடிகள் வச்சுப் பசுமையா இருக்கு. ஒரு பக்கம் கீர்த்தி ஸ்தம்பம் வச்சுருக்காங்க. உச்சியில் பறவை எச்சத்தால் அரசமரம் முளைச்சுருக்கு. உடனே அகற்றலைன்னா அபகீர்த்தி ஆகப்போகுது:(

காஷ்யபர், பரத்வாஜர், அத்ரி, கௌதமர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், ஜமதக்னி என்ற ஏழு மகரிஷிகளும் இந்த இடத்தில் இருந்து தவம் செஞ்சுருக்காங்க. வானத்திலே நட்சத்திரக்கூட்டங்களில் சப்தரிஷிமண்டலம் கேள்விப்பட்டுருப்பீங்களே......... அவுங்களேதான் இவுங்க.
இவுங்களுக்காகவே இங்கே கங்கை ஏழு கிளைகளாப் பிரிஞ்சு பாய்கிறாள். கொஞ்சதூரம் ஓடி மீண்டும் ஒன்னாச் சேர்ந்து ஓடுகிறாளாம்.
சப்தசரோவர் என்ற பெயர் இந்த இடத்துக்கு ரொம்பப் பொருத்தம்!
வரிசைவரிசையா யாககுண்டங்கள், ஹனுமன், ராதாகிருஷ்ணர், கங்கேஷ்வர் மஹாதேவ் அவரைச்சுற்றி பிரகாரத்தின் மூன்று பக்கமும் சப்தரிஷிகள் இருக்காங்க. அருந்ததி, குருநானக், சரஸ்வதி, ராமர் பட்டாபிஷேகம், திருப்பதி பாலாஜி, மகாவிஷ்ணு இப்படி ஏராளமான தனித்தனிச்சந்நிதிகள்.
புள்ளையாருக்குத் தனிக்கோவிலா கணேஷ் மந்திர். கண்ணாடிக்கோவில் புகழ் பரவி அங்கங்கே வந்துக்கிட்டு இருக்கு! செயற்கைக்குளத்தின் நடுவில் மனுஷ்யரூப சிவன். பண்டிட் மதன் மோஹன் மாளவியா அவர்கள் முயற்சியால் புனரமைச்சுக் கட்டுன கோவில். 'செய்நன்றி மறவேல்'ன்னு அவர் சிலையும் வச்சுருக்காங்க.
பக்தர்கள் தங்க சின்னச்சின்னதா நாற்பது குடில்கள். பார்த்ததும் எனக்கு ரொம்பவே ஆசையா இருந்துச்சு. சுற்றிவர மரங்கள் அடர்ந்த வளாகம். நல்லா ஜில்லுன்னு கோடையின் தாக்கம் தெரியாம இருக்கலாம். ஏகப்பட்ட மாமரங்கள். மாமரத்துக் கட்டைகள்தான் யாகத்துக்குச் சிறந்ததாம். மரக்கட்டைகளை சிலர் ரம்பம் வச்சுத் துண்டுகளா வெட்டிக்கிட்டு இருந்தாங்க.

ஆஸ்ரமத்துக்கு முன் கங்கை ஓடும் இடத்துக்குப் போகாம வந்தது ரொம்பத் தப்பாப் போச்சு.அங்கே பஞ்சபாண்டவர்களுக்கு கோவில்கள் இருக்கு. 'எல்லாம் முடிந்து' தேவலோகம் நோக்கி நடந்துபோகும் ஸீன் சிலைகளாச் செஞ்சு வச்சுருக்காங்க(ளாம்). தருமர் கூடவே ஒரு நாயும் நடந்து போச்சுன்னுவாங்களே............. அந்த நாய்கூட இங்கே இருக்கு.

வேதம் படிக்கும் மாணவர்களுக்கான தங்குமிடங்கள், பாடசாலைக் கட்டிடங்கள் எல்லாம் அழகா அம்சமா குருகுலம் அமைச்சுருக்காங்க. புராணகாலத்துக்கே போனமாதிரி இருந்துச்சு. முக்கிய இடங்களையெல்லாம் பார்த்த திருப்தியில் அறைக்கு வந்து சேர்ந்தோம்.

ஹரிகிபௌரியைப் பகல் நேரத்தில் பார்க்கணும் என்ற வேண்டுதல் பாக்கி இருக்கு. பேசாம கிளம்பிப் போகும் வழியில் பார்த்துக்கலாமுன்னு, செக்கவுட் செய்ய ஹோட்டேல் ரிஸப்ஷன் போனால், மேனேஜர் இருந்தார். வசதி எப்படின்னு விசாரிச்சார். கிடைச்ச சான்ஸை விடாம 'ரூம் வசதி ஓக்கே. ஆனால் ரெஸ்ட்டாரண்டுதான் திராபை'ன்னேன். என்ன சாப்பிட்டீங்க எப்போன்னு விசாரிச்சு உடனே செஃப்பைக் கூப்பிட்டு எங்கள் முன் நிறுத்திட்டார்.

வாயிலே வைக்க வழங்காத வெஜிடபிள் பிரியாணிக்காக ஒரு டோஸ் சின்னதா விட்டால் மனுஷர் திருதிருன்னு முழிக்கிறார். பாவம்...... அவர்தான் என்ன செய்வார்? 'ரொம்ப காலத்துக்குப் பிறகு' சமைக்கச் சொன்னால் எப்படி? காம்ப்ளிகேட்டடா கேட்ட டிஷ்ஷுக்குத் தேவையான பொருட்கள் இருந்துருக்காதோ என்னவோ? ஸ்டோர்கீப்பரும் என்னத்தைக் கண்டார்? திடீர்னு கெஸ்ட் வர்றாங்கன்னு அவருக்கு ஜோசியமா தெரிஞ்சுருக்கும்? போகட்டும் விட்டுடலாம்.........
பகல் நேரத்தில் ஹரி கி பௌரி ஜே ஜேன்னு இருக்கு. பயங்கரக்கூட்டம். பிர்லா மணிக்கூண்டு இருக்கும் 'மால்வியாத் தீவு;ப்பகுதிக்குப் பாலத்தின் வழியாப் போனோம். இங்கே காலணி எல்லாம் கழற்ற வேண்டியதில்லை, போட்டுக்கிட்டே போகலாம்.அங்கங்கே பண்டிட்டைச் சுத்திச் சின்னச்சின்ன கும்பல். வைதீக கர்மா செய்யும் குடும்பங்கள். தண்ணீரில் இறங்கி (செயினைப் பிடிச்சுக்கிட்டுத்தான்) முங்கி எழும் பக்தர்கள்.

ஹைய்யோ.... நாமும் போய் ஒரு முழுக்கு போடலாமான்னு இருந்துச்சு. இவ்வளவு பேர் தண்ணியில் முங்கி எழும்போது நமக்கென்ன கேடு? அட்லீஸ்ட் கோபாலையாவது முங்கிவரச் சொன்னால்.... அந்தப் புண்ணியத்தில் பாதி கிடைச்சுடுமே என்ற நப்பாசை. ஊஹூம். அசையலை ஆள். ரெண்டுநாளா ஷவரில் குளிச்சதும் கங்கைதானே. எல்லாம் அது போதுமுன்னு ....................... ஆமாமாம். இந்த ஊரில் 'எல்லாத்துக்குமே' கங்கைதான்!!!!

மனுஷ்யர் மட்டுமில்லாமல் காளை, பசு , கன்னுக்குட்டின்னு கங்கையில் குளிக்க வந்துருக்குங்க. பெரிய மூங்கில் தட்டுகளில் குவிச்சு வச்சுருக்கும் சாமந்திப் பூக்களை ஏதோ குரங்கு கையில் பூமாலை கொடுத்தாப்லெப் பிச்சுபிச்சுக் குவிக்கிறார்கள் சில பூ வியாபாரிகள். அதுலே கொஞ்சம் எடுத்து இலைக்கூடையில் பூஜைப்பொருட்களுடன் சேர்த்து விக்கறதுக்காம். முழுசாப்போடாமல் இப்படிப்போட்டால் கலர்ஃபுல்லா கூடை நிறைச்சு பூ இருக்கும் தோற்றம் கிடைச்சுருது பாருங்க.
புதுசா உண்டாக்குன பழைய காசுகள், கலர்கலரான பாசிமணி, பாட்டிலில் வச்சு வளர்க்கும் செடிகள், கங்கை கொண்டுபோக ப்ளாஸ்டிக், செம்பு, எவர்சில்வர்னு பலதரப்பட்ட கேன்கள், கூஜாக்கள் விற்கும் நடைபாதைக் கடைகள்னு ஏராளம். படிகளின் ஓரங்களில் வரிசையா இடைவெளி இல்லாம உக்கார்ந்துருக்கும் யாசகர்கள் நாள் முழுசும் கங்கையைப் பார்த்தபடி..........................
இன்னொருமுறை ஹரிகிபௌரி படிக்குப் பக்கம் இருக்கும் 'கங்கா கோவில்' தரிசனம் செஞ்சுட்டுக் கிளம்பிட்டோம். அந்தப்பக்கம் போனால் காலணிக்கு அனுமதி இல்லை. "பெருமாள் பாதம் இருக்கு செருப்பைக் கழட்டி இங்கே வச்சுரு. ஃப்ரீதான்'னு ஓடிவந்து சொல்றாங்க.
மணிவேற ஒன்னு. நமக்கு சாப்பாடு போறவழியில் பார்த்துக்கலாம். ட்ரைவர் சாப்பிடட்டுமேன்னு சொன்னால்..... 'பரவாயில்லை. அப்புறம் பார்த்துக்கலாமு'
ன்னு ப்ரதீப் சொன்னதால் ஊரைவிட்டுக் கிளம்பி ரெண்டு மணி நேரத்துலே, முந்தாநாள் போகும்போது சாப்பிட்ட அதே சாகர் ரத்னாவுக்குப்போய்ச் சேர்ந்தோம். உக்கார இடமில்லைங்க. அப்படி கூட்டம். இத்தனைக்கும் மணி மூணு!

ஒருவழியா இடம் கிடைச்சுச் சாப்பாடானதும் வண்டியை விரட்டிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தப்ப மணி சரியா ஏழரை! இது மணியாவே இருக்கட்டும். நம்மைப் பிடிக்காமல் இருந்தால் சரி:-)

சந்தர்ப்பம் கிடைச்சால் இன்னொருக்கா போய் வரணும். முங்கிக் குளிக்கணுமுல்லெ!!!! ரிஷிகேஷில் கூட்டம் கம்மி. அங்கே போகலாம்.


கூடவந்த நட்புகளுக்கு நன்றி.

பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!

என்றும் அன்புடன்,
துளசி

28 comments:

said...

நல்ல பயணக்கட்டுரை. ஹரித்வார்-ரிஷ்கேஷ் எத்தனை முறை போனாலும் எதாவது புதிதாகத் தென்படும். :)

said...

எப்படியாவது ஒரு முறை சென்று வரணும்.. பார்ப்போம் :-)

தகவல்களுக்கு நன்றி

said...

எனக்குக் கூட வாரணாசி போகிற போது கங்கையில குளிக்க மனசு வர்ல்லை, ஒரே கலீஜ்!

http://kgjawarlal.wordpress.com

said...

அட நீங்களும் அப்பறம் குளிக்கலாம்ன்னு வந்தவங்க தானா.. ஆமா ரிஷிகேஷிலேயே குளிக்கலாம்..அப்பறமா :))

said...

Teacher,

Sooper padhivu, Travel and Living Channel parthamadhari yerukku...

Kalachiteenglae, Gajendran saarukku dantham nella perisavae yerukku... white backgroundlae seriya theriyalae...

- Sri :)

said...

ஆசைதீர கங்கா தரிசனம் ஆச்சு.. மனக்கண்ணால் :-))

said...

அருமையான பயணக்கட்டுரை.

said...

//அசையலை ஆள். ரெண்டுநாளா ஷவரில் குளிச்சதும் கங்கைதானே. எல்லாம் அது போதுமுன்னு ....................... ஆமாமாம். இந்த ஊரில் 'எல்லாத்துக்குமே' கங்கைதான்!!!!//

:-)

மிகச் சிறந்த பயணக் கட்டுரையாக அமைத்தது.

//ரிஷிகேஷில் கூட்டம் கம்மி. அங்கே போகலாம்//

தங்கள் முழு பதிவை படித்ததும் அதன் தாக்கம் அதிகமாகி உள்ளது .

//பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால்
பயணம் செய்வீர்!!!//

"பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால்
குடும்பத்துடன் பயணம் செய்வீர்!!!"

இப்படி எழுதினா புதிய திருக்குறள் 1331

said...

மீண்டும் படிக்க வரேன்.

said...

எப்போது எந்த சூழ்நிலையில் செல்லக்கூடிய வாய்ப்பு அமையப் போகின்றதோ?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மைதான். இன்னும் பார்க்காம விட்டது நிறையத்தான் இருக்கும்.

said...

வாங்க கிரி.

நம்பிக்கையோடு இருங்க. கிடைக்கும்.

said...

வாங்க ஜவஹர்.

காசிக்குப்போகணுமுன்னு மனசுக்குள்ளெ இருந்தாலும்....கலீஜை நினைச்சுத்தான் பயமா இருக்கு:(

said...

வாங்க கயலு.

குளிச்சுட்டு உடைமாற்றச் சரியான இடம் இல்லைப்பா. அதான்.........

போகட்டும். கங்கையைக் கண்ணுலே பார்த்தால் புண்ணியம் கிடைக்கும். அது போதும்.

said...

வாங்க ஸ்ரீநி.

கண்ணீரைப் பார்த்துக் கவலைப்பட்டதில் மற்றதைக் கவனிக்கலை. ஆனாலும் தந்தம் இருக்கும் இடம் தப்பா இருக்கோன்னு........

சுட்டியதுக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

மனக்கண்ணில் கண்டது விரைவில் நிஜக்கண்ணில் காண என் ஆசிகள்.

said...

வாங்க கோவை2தில்லி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க லோகன்.

புதுக்குறள் அருமை.

பயணத்துலே ஒரு கூட்டு வேணும். தனிமை சரி இல்லை. அட்லீஸ்ட் நல்லா இருப்பதை நல்லா இருக்குன்னு சொல்லி மகிழ்ச்சியைப் பங்குபோட ஒரு பேச்சுத்துணை வேணும்!

said...

வாங்க வல்லி.

கங்கை ஓடிக்கொண்டே இருக்கிறாள்.

said...

வாங்க ஜோதிஜி.

கிடைக்கும் என்பது கிடைக்காமல் போகாது!

எனக்குக் கொஞ்சம் லேட். உங்களுக்கு சீக்கிரம் அமைய வாழ்த்துகின்றேன்.

said...

படங்கள் சிறப்பாக இருந்தன நன்றி.
நாங்கள் ரிஷிகேஷ் சென்று சுழிதோடும் நீரில் சங்கிலிகளப் பிடித்தபடி மூழ்கி எழுந்த நினைவுகளில் மூழ்கினோம்.
நன்றி.

said...

இனிதே கங்கையில் மூழ்கி எழுந்தாயிற்று.

தேவலோகம் பார்த்துவிட்டோம்.:)

said...

Photographs ae excellent,perhaps article too.

thanks

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

எல்லாம் பசுமை நிறைந்த நினைவுகளே!!!!

வருகைக்கு நன்றிப்பா

said...

வாங்க மாதேவி.

அங்கே குவிச்சு வச்சுருந்த புண்ணியத்தில் ஒரு கை அள்ளிக்கிட்டுப்போனீங்களா? :-))))

said...

Walajabalaji,

Thanks for visiting . Please keep coming:-)

said...

நல்ல பதிவு. நிறைய படங்கள்.
நன்றி அம்மா.

said...

வாங்க ரத்னவேல்.

தொடர்ந்த வருகைக்கு நன்றிகள்.