கடைக்குள்ளே நுழைஞ்சால் இளைஞர் ஒருவர் துணிப்பொதிகளுக்கிடையில் முக்கால்வாசி படுத்த நிலையில் கண்ணை எங்கியோ உயரே நட்டமாதிரி கிடக்கார். அவர் கண் போன திசையில் என் கண்ணை ஓட்டினால்...... மேலே உள்புறக்கூரையையொட்டி சின்னதா ஒரு தொலைக்காட்சிப் பொட்டி. படம் ஒன்னும் ஓடலை. ஆஃப் செஞ்சநிலையில் இருக்கு. பொழுதன்னிக்கும் டிவியில் கண்ணு நட்டபழக்கதோஷமாம்! புதன் வரவைக் காத்து இப்படியே கிடப்பாராம்.
சண்டிகரில் பல செக்டர்களில் கடைகள் அறுவதாண்டுப் பழக்கத்தில் உறைஞ்சு கிடக்கு. கடைக்குள்ளே நுழையக் கஷ்டப்படவேணாம். வரிசையாக் கட்டிவிட்ட கடைகள் அதுக்கு முன்னே வெராந்தாபோல ஒரு நடைபாதை. நடக்கும்போதே பக்கவாட்டில் ஒரு காலைக் கொஞ்சம் நீட்டினால் கடைக்குள்ளே இருப்போம். மொத்தம் மூணுபேர் இங்கே. கிடந்தவர் கடை முதலாளியின் மகனாக இருக்கணும்.
"அஞ்சு நூறு இப்ப எட்டாயிரம். இன்னும் ரெண்டு நாளுக்குள்ளே வித்தால்தான் உண்டு."
"ஆனா யாருக்கு வேணும்? நிம்மதியா டிவியிலே பார்த்துக்கலாம். அங்கே போனா தண்ணிகூட காசு கொடுத்துல்லே வாங்கணும். பவுண்டரி, சிக்சர் எல்லாம் அடிச்சால் அங்கே ஒருக்காத்தான் பார்க்கலாம். டிவின்னா நிறையவாட்டி பார்க்கலாம்"
கள்ளப்பணம் 'சம்பாரிச்சு' கண்மண் தெரியாமச் செலவழிக்கும் கூட்டத்தைவிட இப்படி சின்ன வருமானத்துலே வாழ்க்கை நடத்தும் மக்கள் சரியான வழியிலேதான் சிந்திக்கறாங்க.
மொஹாலிப் பக்கமும், தாஜ் இருக்கும் செக்டர் 17 பக்கமும் சாதாரணமா நடமாட முடியாதபடி போலீஸ் கெடுபிடியும், விட்டேனா பாருன்னு முண்டி அடிச்சுப்போகும் கூட்டமுமா நகரே ஒருவிதமாத்தான் கிடக்கு! இன்னும் ரெண்டு நாள் இப்படித்தான்..................... இந்தியா x பாகிஸ்தான்............வாழ்வா சாவா...........
இருநூத்தியம்பதை பத்து மடங்கு வச்சு வித்தாருன்னு (பெயருக்கு) ஒரு ஆளைப் பிடிச்சுருக்கு காவல் துறை. கழுவிவிட்ட கண்ணைத் துடைச்சுக்கணும் நாம்!
ஒரு சில செக்டர்களில் மட்டும் வெளிநாட்டுக்காரர்களுக்குன்னே கடைகள். உள்ளூர் ப்ராண்ட் சாமான் ஒன்னுகூட இருக்காது. குட்டி அமெரிக்கான்னு சொல்லிக்கலாம். இன்னும் சில கடைகளில் உள்ளூர் பணக்காரர்களுக்கு...........பற்பசையில் இருந்து மேக்கப் சாமான்கள் வரை உள்நாட்டுத் தயாரிப்பு ஒன்னுமே கண்ணுலே படாது. ஹைபர் ஸ்டோர்க்குள்ளே நுழைஞ்சு ஹமாம் சோப்பு கேட்டால் முழிக்கிறாங்க!
வீக்கோ வஜ்ரதந்தி இருக்கா? ஆங்..... அப்டீன்னா?
புரிஞ்சு போச்சு. இதெல்லாம் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியக் கடைக்களுக்கான ஸ்பெஷல் ஏற்றுமதிச் சாமான்கள்:-)
ஆனா ஒன்னு இந்தக் கடைகளில் காலடி வச்சுட்டா யாராவது கடைக்காரப்பொண்ணு நம்மை ஒட்டிப்பிடிச்சுக்கிட்டே......... கூடவே வர்றது என்னவிதமான ஸேல்ஸ் டெக்னிக்கோ! எரிச்சல்தான் மிச்சம்:(
எப்பப்பார்த்தாலும் இந்த ரெடிமேடு கலாச்சாரம் என்ன வேண்டிக்கிடக்கு? சின்னக்கடைகள் இருக்கும் செக்டர் ஒன்னில் கடைவாசலில் தைய்யல் மெஷீன் போட்டுத் தைச்சுக்கிட்டு இருக்கும் ஒருத்தர்கிட்டே கோபாலுக்கு ஒரு பேண்ட் துணி அங்கேயே வாங்கித் தைக்கக் கொடுத்தோம். பரிசோதனைதான். ஆனால் அபார வெற்றி. ஆறுபாலில் 36 எடுத்தமாதிரி!
இன்னொரு நாள் ஒரு ஷர்ட் தைச்சுப் பார்க்கலாமுன்னு கொடுத்தோம். அளவு எடுத்துக்கிட்டு இருந்தபோது கால் சரியில்லாத ஒருத்தர் கோபாலைப் பார்த்துச் சிரிச்சமுகத்தோடு சமீபிச்சார். பொதுவா இங்கே பிச்சைக்காரர்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்காங்க. முக்கியமா கோவில் வாசல்களில். அவருக்குக் கொஞ்சம் காசு கொடுத்தார் கோபால். காசு வேணாமாம். சர்ட்டும் பேண்ட்டும் வேணுமாம். நிறைய துணிகள் போடாமலே வீட்டுலே கிடக்கு. ஒன்னு ரெண்டு முறை மட்டும் போட்டவை. அதென்னவோ (ஆளு ஊதாமல்) சட்டைமட்டும் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்னதா ஆகிப்போச்சாம்! நாளைக்குக் கொண்டுவந்து கொடுக்கறேன்னார். 'அதெல்லாம் வேணாம். கஷ்டப்படாதே. இந்தத் தைய்யல்காரரிடம் அளவு கொடுத்துடலாம். புதுத்துணி வாங்கித்தா' ன்றார்! பணக்கார மாநிலமாம், இந்தியாவில் நம்பர் ஒன்னு. அதுக்காக இப்படியா? நகைக்கடைக்குப் போனால்............. எனக்கும் ஒரு செயின் வாங்கிக்கொடுன்னு கேப்பாங்களோ?
மரங்களுக்கு ஒரே சோம்பல். இலை உதிர்காலமுன்னு தனியா ஒன்னு எதுக்கு? புதுசு வரும்போதே பழசைக் கழிச்சாலாச்சுன்னு ஒரு பக்கம் புது இலைகளும் பூக்களும் வரும் வஸந்த காலத்தில் இலையுதிர்காலமும் ஒட்டிக்கிச்சு. ஊர் பூராவும் உலர்ந்த இலைகளின் குப்பை. அடிச்சுப்பத்தன்னே வீசும் காற்று.
மாவும் லைச்சியும் கொல்லுன்னு பூத்தாச்சு!
சோம்பல் மரத்துக்கு மட்டுமில்லை. வீட்டு வேலைக்கு 'உதவும்' மக்களுக்கும்தான். ஒரு நாள் சரோஜ் வரலையேன்னு அடுக்களையைப் பெருக்கினேன். கப்போர்ட் அடியில் வாரியலை விரட்டுனா..........ஐயோ......!
க்ளிக்கிட்டு மறுநாள் அதைக் காமிச்சா............. 'அஞ்சு வருசத்துக்குமுன்னாலே போட்டுருக்காங்க. நான் இப்ப நாலே முக்கால் வருசமாத்தான் இந்த வீட்டுலே வேலை செய்யறேன்'! (மாடி கட்டி வருசம் அஞ்சுதான் ஆகுது)
ஹவுஸ் ஓனர் வீட்டுலே வேலை செய்யறவங்ககிட்டே வேறு ஆள் கிடைக்குமான்னு கேட்டால்..............'தப்பு உங்க மேலேதான். வேலையைச் செய்ன்னு சொல்லிட்டு நீங்கபாட்டுக்கு இருக்கறீங்க. கூடவே போய் பின்னால் நின்னு இதைச் செய், இங்கே துடை, இதைப் பெருக்குன்னு சொல்லிக்கிட்டே நிக்கணும்'னாங்க. வேலை 'வாங்க'த் தெரியலைன்ற கெட்ட பெயரை சம்பாதிச்சுட்டேன்:(
கோபால் ஆஃபீஸ்லே மெஷீன்போட வந்த சீனருக்கும் சமைச்சுப்போடும் நேப்பாளிக்கும் சின்னக் கைகலப்பாம். ராத்திரி ஃபோன் வந்துச்சு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போய் மருந்து போட்டுவிடுங்க. காலையில் வந்து விசாரிக்கிறேன்னு சொன்னார். சமயம் பார்த்து நம்மகிட்டே சொம்பு ஒன்னு இல்லாமப் போச்சு:( ஒரு மேல்துண்டு இருந்தாலும் தேவலாம்.
"போயிட்டு வாங்க ஐயா. ரெண்டு பேரையும் விசாரிச்சு 'ஐயா' தீர்ப்பு சொன்னாச் சரியாத்தான் இருக்கும்!!!"
Tuesday, March 29, 2011
குப்பை கொட்டுவது என்றால்................
Posted by துளசி கோபால் at 3/29/2011 05:26:00 PM
Labels: அனுபவம் Chandigarh
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
வேலை செய்யறவங்களை எல்லாம் விரட்டமுடியாது .. நாமத்தான் அவங்க லீவெடுத்த நாள் வாரியலை விரட்டனும்..:))
இந்த கடைக்காரங்க கூடவே ஒட்டிக்கிட்டு வருவது நமக்கு எரிச்சல் தருவது மாதிரி தான் ..நாமும் மதிச்சு வீட்டில் வருப்வர்கள் பின் போவதில்லை. ஆனால் பரஸ்பரம் நம்பிக்கைக்கு மரியாதை வேணுமே..
ஹையோ...கடைகளில் நம்மை இடிச்சுக்கிட்டே வரும் சேல்ஸ்கேர்லை பார்த்தாலே எரிச்ச்ல்தான் வரும். நான் ரெண்டடி தள்ளியே வரலாமே..நான் எதையும் எடுத்து பையில் போட்டுக்கொள்ளமாட்டேன் என்று சொல்லிடுவேன்.
வேலைக்கரிகாள்ள் எல்லாம் ரோபோக்கள் அல்ல. ப்ரோ.செட் பண்ணிவிட்டால் அதும் பாட்டுக்கு செய்ய. அங்கே சொன்னா மாதிரி தினமும் 'அங்கே தட்டுனையா..இங்கே தட்டுனையா..இங்கே பார் தூசி அங்கே பார் ஒட்டடை.ன்னு மாடு மேய்ச்சாப்போல் 'ஹை..ஹை..'னு விரட்டீட்டே இருக்கணும். சிலசமயம் அவள்ளை உக்கார வைத்துவிட்டு நாமே செய்துடலாம் போல வரும்.
இப்பல்லாம் பின்னாடி நின்னு வேலை செய்ய
சொல்லும்போதே செய்யறாப்பல இருந்து கண்ல மண்ணைத் தூவறாங்க.
நாட்டமை தீர்ப்பு!!! ஹா ஹா ஹா.....
அதென்ன துளசி எழுதுனா முத்துலெட்சுமி, நானானின்னு லேடிஸா மறு மொழி மொதல்ல் போடுறாங்க. ம்ம்ம்ம்ம் - நல்லாருந்துச்சி - இந்த இடுகைக்கு எப்படி புகைப்படம் வருமுன்னு கடசி வரைக்கும் படிச்சுப் பாத்தா - குப்ப எல்லாம் கூட படம் பிடிச்சுப் போட்டு ............அதான் துளசி - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
//எனக்கும் ஒரு செயின் வாங்கிக்கொடுன்னு கேப்பாங்களோ?//
டீச்சர்.. அடுத்த தடவை போகும்போது எனக்கு ஒரு வார்த்தை சொல்லிடுங்க.. :)
//பணக்கார மாநிலமாம், இந்தியாவில் நம்பர் ஒன்னு. அதுக்காக இப்படியா//
பழைய வளையல்,செயினு,ஒட்டியாணம் இருந்தா போடுங்கம்மான்னு குரல்விட்டா எப்படியிருந்திருக்கும்ன்னு கற்பனை செஞ்சேன்.. நல்லாவே இருக்குது
:-))))))
இவ்வளவு குப்பை கொட்டி இருக்கேன் பாருன்னு சொல்லாம விட்டாங்களே.
சிரிச்ச முகம், கேட்பது புதுப் பிச்சை!!
எல்லாமெ அதிசயமா இருக்கேப்பா.
இன்னிக்கு நானே, ஷஷியையும் எதிரில் வைத்துக் கொண்டு வாக்குவம் க்ளீனரைப் போட்டால் அதோ அங்க கூடத் தூசி இருக்குமா''என்று சொல்லிவிட்டுத் துணி உலர்த்தப் போய்விட்டாள்:))0000))))
சில வேலைக்காரங்களுக்கு வல்லிம்மா சொல்லியிருக்கும்படி கேட்டா பிடிக்காது. என் வேலையை செய்ய விடுங்கன்னு! வள்ளுன்னு விழுவாங்க!!
இலங்கை வேலைக்காரங்க அனுதினமும் என் கண் முன்னாடி வந்துபோய்க்கினுதான் இருக்காங்க. நம்ம ஊர்ல அந்த சுத்தமான வேலை சான்ஸ் ரொம்ப கம்மி.
சாரி வல்லிம்மா இல்லை நானானி சொல்லியிருக்கிற மாதிரி
கூடவே போய் பின்னால் நின்னு இதைச் செய், இங்கே துடை
இப்ப புரிஞ்சிருக்கனுமே... கடைக்கு போனா சேல்ஸ் பெண் ஏன் துணைக்கு வராங்க என்று?
முதலில் எல்லாம் உங்கள் துணைவருக்கு ஒரு பத்தி தான் இருக்கும் அது இப்போது ஏறிக்கொண்டெ வருகிறது. :-)
கூடவே போய் பின்னால் நின்னு இதைச் செய், இங்கே துடை
இப்ப புரிஞ்சிருக்குமே கடைக்கு போனா சேல்ஸ் பெண் கூடவே வருகிறார் என்று!
முன்பெல்லாம் துணைவருக்கு ஒரு பத்தி தான் கிடைக்கும் இப்போது அதிகமாகிக்கொண்டு வருகிறதே!! :-)
நல்ல பதிவு.
உங்கள் பதிவு படிக்கும் போது நேரில் இருப்பது போன்ற உணர்வு. நல்ல நகைச்சுவை.
வாழ்த்துக்கள் அம்மா.
'வேலை வாங்குவதே வேலை'ன்னு இருக்கணுமோ..
நல்ல வேலைக்காரி அமைவது இறைவன் கொடுத்த வரம் தானோ!
"மரங்களுக்கு ஒரே சோம்பல்.."
"..வீட்டு வேலைக்கு 'உதவும்' மக்களுக்கும்தான்..."
சுவையான விடயங்கள்.
மூக்கால் வருடமாக வேலை செய்யும் பெண், 5 வருடக் குப்பை.
அருமையாக இருந்தது கதையும் கிண்டலும்.
வாங்க கயலு.
அந்த பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதை எல்லாம் எந்தக் கடையில் கிடைக்குதுன்னு சொல்லுங்கப்பா:-)))))
வாங்க நானானி.
// இடிச்சுக்கிட்டே வரும் சேல்ஸ்கேர்லை......//
இதைவிட அழகுசாதனம் விற்கறேன்னு நம்ம முகத்தை உர்ன்னு உத்துப் பார்த்து **** க்ரீம் போடுங்க மேடமுன்னு சொல்லும்போது.......... ஒரு எரிச்சல் வரும் பாருங்க.....
நீங்க இதைப் போட்டுப் பார்த்தீங்களான்னு கேட்டுப் பாருங்க. இல்லைன்னுவாங்க. அப்ப எந்த தைரியத்தில் இது ரொம்ப நல்லா வேலை செய்யுமுன்னு சொல்றாங்க!!!!
மாடு விரட்டிப் பழக்கம் இல்லை என்றதுதான் என் 'இப்போதைய' கஷ்டம்:(
வாங்க ராஜி.
ஹாஹா உண்மைப்பா.
ஆரம்பகாலத்துலே ஒன்னரை ஒன்னேமுக்கால் மணி நேர வேலை இப்போ முக்கால்மணியில் முடிஞ்சுருது. நாம் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே கண்ணை வெட்டிருவாங்க.
ஒரு நாள் இவர் வீகெண்டில் வீட்டில் இருந்தப்ப "உனக்கு வேலை வாங்கத் தெரியலை. இன்னிக்குப்பார் எல்லா வேலையையும் செய்ய வைக்கிறேன்"னார்.
அன்னிக்கு 40 நிமிசத்துலே வேலை முடிஞ்சுருச்சு:-))))))
ஜன்னலில் அஞ்சு கண்ணாடிப் பேனல்ஸ் இருந்தா முதல் கண்ணாடியில் வச்ச கை அடுத்த நொடி அஞ்சாவதுக்குப் போயிருது.
வேலை செய்யும்போதே நாம் இருக்கோமான்னு ஓரப்பார்வை வேறு:-)))))))))))))))
வாங்க சீனா.
டாபிக் அப்படி :-)))))
வீட்டு வேலை செய்யறவங்களிடம் மாரடிப்பது ஆண்களா?
வாங்க சுசி.
கட்டாயம் சொல்லிடறேன். சென்னை சில்க்ஸ் போகும்போதும் சொல்லவாப்பா? :-)))
வாங்க அமைதிச்சாரல்.
இங்கே தெருவியாபாரிகளும் நம்ம பக்கம்போல் 'கத்தரிக்கா, வெண்டைக்கான்னு நீட்டி முழக்காம ஒரே கமாண்ட்தான்.
பெண்டி லோ, பைங்கன் லோ, மூளி லோன்னு லோலோன்னு சொல்லிக்கிட்டுப் போறாங்க. நாம் பால்கனி போறதுக்குள்ளே ஆள் சைக்கிளை ஓட்டிக்கிட்டு பறந்து போயிருது:-)))))
வாங்க வல்லி.
ஆஹா..... ஷஷியா கொக்கா:-))))))))
வாங்க புதுகைத்தென்றல்.
ஃபிஜியிலும் வீட்டு வேலைக்கு வர்றவங்க நாம் ஒன்னும் சொல்லத்தேவையே இல்லாமல் பளிச்ன்னு செய்வாங்க.
நியூஸியில் ஒரு தம்பதிகள்தான் வீட்டுவேலை. அப்பழுக்கு இருக்காது. அந்த ஆண் கொஞ்சம் சொதப்பிடுவார் அடுக்களை வேலைன்னால். அதுக்காக ஆளாளுக்கு இது அதுன்னு பிரிச்சுச் சுத்தமாச் செஞ்சுருவாங்க:-))))))))))))
சென்னையில் நமக்கு ஒரு நேபாளி பெண். நம் வீட்டு வாட்ச்மேனின் மனைவி. ஒரு வார்த்தை பேச வேண்டாம். பட்டுப்போல் வேலை.
இங்கே சண்டித்தனம் எல்லாம் சண்டிகரில்தான்:(
வாங்க குமார்.
பக்தின்றது தட்டச்சுப்பிழையா பத்தின்னு ஆகி இருக்குமோ? :-)))))
வாங்க ரத்னவேல்.
நம்ம பொழைப்பு இப்படிச் சிரிப்பாச் சிரிக்குதே:-))))))
வாங்க மோகன்ஜி.
கடுஞ்சொல் பேசும் ஆட்களிடம் வாயை மூடிக்கிட்டு வேலை செய்யராங்க. மனுசனை மனுசனா மதிக்கணுமுன்னு இருக்கும் நம்மிடம்தான்.........:(
எப்படியெல்லாம் ஏமாத்தலாமுன்னு அத்துபடி!!!
வாங்க டொக்டர் ஐயா.
பல்லைக் கடிச்சுப் பொறுத்துக்கிட்டு இருக்கேன். வாயெல்லாம் வலி. சிகிச்சைக்கு உங்க மருத்துவமனைக்குத்தான் வரப்போறேன்,ஆமா:-))))
///'தப்பு உங்க மேலேதான். வேலையைச் செய்ன்னு சொல்லிட்டு நீங்கபாட்டுக்கு இருக்கறீங்க. கூடவே போய் பின்னால் நின்னு இதைச் செய், இங்கே துடை, இதைப் பெருக்குன்னு சொல்லிக்கிட்டே நிக்கணும்'னாங்க. வேலை 'வாங்க'த் தெரியலைன்ற கெட்ட பெயரை சம்பாதிச்சுட்டேன்:(///
சீக்கிரமா நல்ல பெயரை சம்பாதிங்க துள்சி. இன்னிக்கு இந்திய ஆட்டம் கெலிக்குமா? இதுக்கும் செம்பும், மேல்துண்டும் வேணுமா?????
:))))
வாங்க மது.
இப்பதான் ட்ரெய்னியா இருக்கேன்:-))))
இந்தியா ஜெயிச்சுருச்சு. இனி இறுதிப்போட்டிக்கு.............சொம்பை யாரோ களவாடிட்டாங்களான்னு தெரியலைப்பா:-))))
வேலை வாங்குவது எப்படி என்று நாம் கிளாஸ்போய் படித்து வரவேண்டும் போலும் :)
வாங்க மாதேவி,
இதுவும் ஒரு வாழ்க்கைக் கல்வி.
படிச்சுத்தேற வாழ்த்துகின்றேன்:-)
Post a Comment