Wednesday, January 05, 2011

சாரதியும் பாரதியும்!!

ஆர்ப்பாட்டம் அதிகம் இல்லாமல் நாள் எங்காவது கடக்குமா? காலையில் எழும்போதே கோபாலுக்குக் காய்ச்சல். ஒருவேளை நேற்றைய ஷாப்பிங் அதிர்ச்சியோ என்னவோ..............

டாக்டரைப் பார்த்தோம். ஊசி அண்ட் மருந்து. அதென்னமோ எல்லா வியாதியும் டாக்டர் முகம் பார்த்ததும் சட்னு ஒரு பத்து சதவீதம் குறையுமுன்னாலும் கோபாலுக்கு வீத விகிதம் வேற! அவருக்கு 50 சதம்., பாதி போயே போச்! இட்ஸ் கான்!

அறையிலே அவரைவிட்டுட்டு ஒரு விஷயமா பதிப்பாளரைப் பார்க்கப் போனேன். அவர் கேட்ட முதல்கேள்வி. "நீங்க வீட்டுலே சமைக்கறதே இல்லையா?"

"ஏன் இல்லாம? ரெண்டு மாசத்துக்கு ஒரு நாள் சமைக்கத் தோணும். அப்போதான்............உடம்பைப் பார்த்தா அப்படியா இருக்கு:-))))))"

அறைக்கு வந்தால் இவர் தூங்கி எழுந்து ஃப்ரெஷா இருந்தார். மீதமிருந்த 50 சதம் போயே போயிந்தி! ஊசியின் மகிமை. நியூஸியில் ஊசி என்பது கட்டக்கடைசி மருத்துவமுறை!

தாம்பரத்துக்குக் கிளம்பிப்போனோம் உறவினர்கள் சந்திப்பு. ரசம் அருமை. வீட்டுச் சாப்பாட்டுக்கு இணை இல்லைதான். 81 வயதான அத்தையுடன் ஆன்மீகப்பேச்சு. இந்த வயசிலும் கோவில் விவரங்களை நாக்கு நுனியில் வச்சுருப்பாங்க., சுருக்கத்தில் சொன்னால் 'எங்காத்து வேளுக்குடி' அவுங்கதான். திரும்பும் வழியில், பார்க்கும்போதெல்லாம் போகணும் என்று நினைக்கும் ஸ்ரீ ராமாஞ்சநேயர் கோவிலுக்கு வண்டியைத் திருப்பினால்..... மூடி இருக்கு. நான் பார்க்கலைன்னா என்ன ....'அவன்' பார்த்திருப்பான்! அழகான க்ரீம் கலர் கோபுரம்!

சென்னை விமான நிலையக் கட்டிட வேலைகள் நடப்பதைப் பகல் வெளிச்சத்தில் பார்த்தோம். காஃபிக்குப்போன தி,நகர் வெங்கட்நாராயணா சாலை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாசலில் நீராவியில் அவிச்ச வேர்க்கடலை ஸ்டால். முந்தி திரைஅரங்குகளில் இருந்தது இப்போ தெருவுக்கு வந்திருக்காம். பாத்திரத்தை ரெண்டாத்தடுத்து வெந்ததும் வேகாததும்:-) ஆரோக்கிய உணவு. ஆனால் அதில் தூவ ஏகப்பட்ட ஆரோக்கியக் கேடான சமாச்சாரங்கள்:( தமிழருக்கு உப்பு ரொம்பவே பிடிக்குமாம்:( Bபட் நோ குட்.

வேலை உண்டு

ஏகப்பட்ட மசாலா

அவிச்சதும் அவிக்காததும்

வேலைக்கு ஆட்கள் தேவையாம். போலாமான்னு ஒரு யோசனை. மழை வேறு லேசாத் தூற ஆரம்பிச்சது. நல்லார் ஒருவர் உளரே/றேல் அவர் பொருட்டாக இருக்கலாம்:-) கிரி ட்ரேடிங். புத்தகம் (எல்லாம் ஆன்மீகப்பா) தேடும்போது விளக்கு போய்வந்துச்சு. ச்சேச்சே......நேரம் சரி இல்லை. வாசலில் ஒரு பக்கம் சின்னதா ஒரு மேடை. இசைவிழா. குட்டி நட்சத்திரங்கள் ஜொலிப்பு. ஒரு பனிரெண்டு பதிமூணு வயசுச் சிறுமி பாட. இன்னொரு சிறுவன் மிருதங்கம். ஊக்குவிக்கத்தான் வேணும்.
கிரி விழா

பெட்ரோல் விலை ஏறிப்போச்சு. இப்பெல்லாம் மினிமம் முப்பது கேட்பது வழக்கமாம் ஆட்டோவுக்கு. கொஞ்சம் தூரமுன்னா 120. பேரத்தில் 100 படியலாம்! ஆட்டோ ஓட்டுனர் மலைக்கு மாலை போட்டுருந்தால் மினிமம் அம்பது. கொஞ்ச தூரம் அதிகமுன்னால் இருநூறு:( கடவுளுடன் சேர்ந்து கூட்டுக்கொள்ளை! அதனால் 'சாமி ஓட்டும் வண்டி வேணாம். நானென்ன அர்ஜுனனா? சாமி ஓட்டும் வண்டியில் ஏற? இன்னிக்கு இதுக்குப் பொருத்தமா பாரதிக்கும் பாசாதிக்கும் ஒதுக்கிய நாள். கோவில் முன் இறங்கி வழக்கம்போல் மண்டபத் தூண்களை ரசிச்சுட்டுக் கோவிலுக்குள் நுழைஞ்சோம். இன்னிக்கு இங்கே உண்டியல் எண்ணும் நாள்! அதென்ன போற இடத்தில் எல்லாம் காசைக் கொட்டிவச்சுக் காமிக்கிறான்!!!! காசே தான் கடவுளடா..............ன்னு சூசகமான அறிவிப்போ?
முன் மண்டபத் தூண்களில்

சிம்சுபா விருட்சத்தின் கீழ் சீதை. (கீதா சரியான உச்சரிப்பா? ) மரம் கொஞ்சம் புள்ளையார் மாதிரி இருக்கே!!!!


தர்மதரிசனம் போதும். பிரகாரம் வலம் வந்தபோது மேற்குவாசல் வந்ததும் வெளியே போய் எட்டிப் பார்த்தேன். 'பாரதி வீடு இங்கே இருக்கு'ன்னு நம்ம அதியமான் சொல்லி இருந்தார். எங்கேன்னு வாசலில் நின்னவரிடம் கேட்டால் அவர் அதோன்னு கை காட்டினார். எதிர் வரிசையில் நாலைஞ்சு வீடு தள்ளி! அட! இவ்வளவு பக்கத்திலா? எத்தனை முறை 'தில்லக்கேணி' பார்த்தசாரதி தரிசனத்துக்கு வந்துருக்கோம். பின்வாசல் எட்டிப்பார்க்கத் தோணலையே............

கோவில் வாசலில் இருந்து பாரதி வாழ்ந்த வீடு.எதிர்ப்புறம் வலக்கோடி.


பாரதி வீட்டில் இருந்து கோவில் வாசல்.


வலத்தைப் பாதியில் விட்டு வாசல் வழியா அப்படியே அங்கே போனோம். வீட்டின் முன் வெராந்தாவில் சுவரில் இருந்த அந்தக் காலப் புகைப்படங்களை க்ளிக்கினேன். படம் எடுக்கத் தடையாம்! போகட்டும். அறியாமல் செஞ்சதை மன்னிச்சுக்கலாம். பதிவில் போட்டுட்டால் எல்லோருமா அந்தஒ பிழையைப்' பகிர்ந்துண்ட மாதிரியும் ஆச்சு:-))))) ரெண்டு மூணு மேசைகள் போட்டு தினசரிகளை வச்சுருக்காங்க. சிலர் வந்து வாசிச்சுக்கிட்டும் இருந்தாங்க.

பழைய வீடு

இடைப்பட்ட காலத்தில் முன்பக்கம் மாத்தி இருக்காங்க.

வீட்டினுள் நுழைஞ்சதும் இடைக்கழி மேடையில் பாரதியின் மார்பளவு உருவச்சிலை. பின்பக்கம் முப்புறமும் ஓடும் தாழ்வார நடுவில் சின்னதான திறந்தவெளி முற்றம். 'விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவியைப்போல.....' இங்கேதானோ? வலப்பக்கம் கூடம். அதனுள் ஒரு அறை. சுவரெங்கும் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு நட்புகளுடன், விருந்தினருடன் பாரதி. பெண்விடுதலை (மாதர்களின் சுதந்திரங்கள்) விரும்பியவனின் பாடல்கள் சுவரில் சட்டம் போட்டு மாட்டிய கண்ணாடிச் சிறையில். 'இனி ஒரு விதி செய்வோம், மனதில் உறுதி வேண்டும், நல்லதோர் வீணை செய்தே, ஆசை முகம் மறந்து போச்சே........' கையெழுத்து நல்லாவே இருக்கு. ஆனால்.........

எட்டையபுரம் சமஸ்தானத்தில் பாரதி என்ற பட்டம் கிடைச்சதுன்னு எங்கியோ படிச்ச நினைவு. இந்த பட்டம் சிவஞானி யோகிகளால் வழங்கப்பட்டதுன்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்.

மனசில் ஊறிப்போனதை எடுத்துக் கடாசணும் போல !

காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப்பயல்.னு பாடினாராம், காந்திமதி நாதனை வெறுப்பேத்த..... பொல்லாத புலவன்:-))))

குறுகலான படிகளில் ஏறிப்போனால்....மாடியில் நூலகம் ஒன்னு, யாரும் இல்லாமல் ஜிலோ ன்னு இருக்கு. விளக்குமாற்றால் சுத்தம் செய்யும் பெண்மணி (யசோதா) ரெக்கார்ட் ரூம் க்ளர்க்.. பத்துப்பேர் வேலை செய்த இடத்தில் இப்போது மூன்றே பேராம். அதிலும் இன்னிக்குத் துப்புரவாளர் வரலையாம்:(

மாடியில் இருந்து முற்றத்தைப் பார்த்தபோது...... மனசில் ஒரு சின்ன வலி செல்லம்மா அந்தக்கூடத்தின் தூணைப் பிடிச்சுக்கிட்டு கலங்கிய கண்ணுடன் நிற்பதும் பாரதி, முறத்தில் இருக்கும் அரிசியை வாரிச் சிட்டுகளுக்குத் தூவி விடுவதுமா......... குழந்தைகளின் பசியை நினைத்து வருந்தும் ஒரு குடும்பத்தலைவி:( ப்ச்..........போங்கப்பா...................

வெறும் முப்பத்தியொன்பதே வருட வாழ்க்கை. நாப்பதில் நாய்க்குணம் வந்துருமோன்னு சீக்கிரம் ஏறக்கட்டிட்டார் போல:(
நினைவு இல்லம்


ரொம்ப அழகான முறையில் கட்டிடத்தைப் புதுப்பித்து இருக்காங்க. 1993 வது ஆண்டு புரட்டாசிமாதம் 16 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுன்னு 'கல்வெட்டு 'சொல்லுது. வாசலில் ஒரு பக்கம் கரும்பளிங்குப்பலகையில் பாரதிக்கு ஒரு கல்வெட்டு..

மறுபடி கோவிலுக்குள்ளே நுழையும்போது யோகநரசிம்மன் திரை போட்டுச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். ஒரு ரெண்டு மூணு நிமிசம் காத்திருந்தோம். திரை விலக புன்சிரிப்புடன் சிங்கம். விட்ட வலம் தொடர்ந்தால்.....ஆண்டாள் சந்நிதி திறந்திருக்கு! மார்கழியில்லையோ? மஞ்சள் காப்பு மஞ்சளை நீங்களே எடுத்துக்கலாம்ன்னார் பட்டர். மனசுக்குள் தூமணி ஆச்சு. பிரசாத ஸ்டாலில் ரெண்டே ரெண்டு அதிரசம். கோபால் அவரோடதை சாப்பிட்டார். நான் அப்புறமுன்னு எடுத்துக் கைப்பைக்குள் வச்சேன்.


வெளியே மண்டபத்தினருகில் இளநீர் கிடைச்சது. 20 ரூ முழு இளநி. எனக்கு வழுக்கை வேணாம். மொட்டைத்தலை எனக்கு ஆகாது:-) கொஞ்சம் தேங்காயும் வேணும். குடிச்சு முடிச்சு தேங்காய் கிடைச்சப்ப 'அண்ணாமலை' வந்தான். தேங்காய் பிடிக்குமான்னா ஆமாவாம். ஆளுக்குப் பாதி. அவன் முடிச்சதும் அங்கே வந்த சின்னப் பையன் ஒருவனுக்கு தின்ன எதாவது வேணுமாம். அதான் அதிரசம் இருக்கே! 'தானே தானே பர் லிக்கா ஹை கானே வாலா கா நாம்'. ரொம்பச்சரி.

தனி ஒருவனுக்காக என்னால் ஜெகத்தை எல்லாம் அழிக்க முடியாது:(

நம்ம கோபாலுக்குக் காய்ச்சல் என்ற விவரம் அறிஞ்ச கவிஞர் மதுமிதா நாலைஞ்சு முறை செல்லில் கூப்பிட்டு அவுங்க வீட்டில்தான் பகலுணவுன்னதும் போய் வெட்டினோம்.

அப்புறம்?

இருங்க, சொல்றேன்.

37 comments:

said...

ஆஹா! திருவல்லிக்கேணி! எங்ங்ங்க பார்த்தசாரதி.

கோயிலை / தூணை / விமர்சனத்தைப் பார்த்ததுமே கண்களில் நீர். இத்தோட நிறுத்திக்கறேன்.

டீச்சர் வாழ்க!

said...

பார்த்தசாரதியுடன் நல்லதோர் வீணை....மனத்தில் இசைக்கிறது.

said...

//அதென்னமோ எல்லா வியாதியும் டாக்டர் முகம் பார்த்ததும் சட்னு ஒரு பத்து சதவீதம் குறையுமுன்னாலும்//

இதை எங்கவீட்டுல தட்சணை வைக்கிறதுன்னு சொல்லுவோம் :-)))))

கோபுரதரிசனம் கோடிப்புண்ணியம்ன்னு சொல்லுவாங்க.பாரதியார் கணக்குல ரொம்பவே வரவாகியிருக்கும் போலிருக்கு..

நிறைவான இடுகையிது.

said...

வர வர புகைப்படத்தை எடுக்கும் சிரத்தையைப் பார்க்கும் போது கோடம்பாக்கம் ஒரு பெண் ஒளிப்பதிவாளரை இழந்துவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

said...

அட சென்னையிலதான் இருக்கேன். மிக அழகா விவரிச்சு இருக்கீங்களேப்பா..

said...

கடவுளுடன் ஒரு கவியின் தரிசனம். அருமை.

said...

பயணம் முழுவதும் உங்கள் கூடவே வந்ததோர் உணர்வு. பார்த்தசாரதி, பாரதி - அருமை...

said...

kulo has left a new comment on your post "சாரதியும் பாரதியும்!!":

paachcha manasai kollai konda bachcha. bharathi maathiri vivekanandarum 39 leyie inda olaguththukku joot vittavaru. vivekanandar sonnaaraam "ungalukku 500 varushaththukku thevayaanadai koduththirukken"nu" evvalavu periyavangu nam naattil thondri irukkaanga.

said...

rathna kape poneengala????

said...

Arumai Amma

said...

வாங்க ச்சின்னப்பையன்.

இப்படித்தான் சில சமயம் ஹோம்சிக் வந்து பாடாய்ப் படுத்திரும்.

தொலைக்காட்சியில் பாடல் காட்சிகளில் நியூஸி வரும்போது..... எனக்கும் ஒரே ஃபீலிங்க்ஸ்தான்.

said...

வாங்க மாதேவி.

ரெண்டு தரிசனமும் அருமைதான் அன்னிக்கு!

said...

வாங்க அமைதிச்சாரல்.

நம்மூட்டுலே போன ஜென்மக்கடன் தீர்த்தல் அது:-)

கோபுரம் பார்த்து தேடுன புண்ணியம்தான் சீக்கிரம் சாமிகிட்டே கொண்டு போயிருச்சு.

said...

வாங்க ஜோதிஜி.

ஐயோ..... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்...... உடம்பே.....ரணகளமாப் போயிருக்கு:-)))

said...

வாங்க தேனே.

உங்களைத்தான் சந்திக்க இயலாமல் போச்சு:( அடுத்தமுறை கட்டாயம்.

நான் சென்னையில் 10 மாசம் இருந்தும் போக முடியலை. அந்தக்குறையைத்தான் இப்போ தீர்த்துவச்சேன்.

உள்ளூர் சமாச்சாரமுன்னா.... அசட்டை வந்து ஒட்டிக்குது. அப்புறம் போனால் போச்சுன்னு...:(

said...

வாங்க தமிழ் உதயம்.

கடவுள் அண்ட் கவி ரெண்டு பேருமே பெரிய மீசைக்காரரால்லே இருக்காங்க!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணத்துலே கூடவே கூட்டிப்போறதுதான் நம்ம ஸ்பெஷலாக்கும்:-)))))

தனியாப்போனா பயமா இருக்காதா!!!!

said...

வாங்க குலோ.

ரொம்பநாள் இந்த தங்லீஷ் வேலைக்கு ஆகாது. சட்னு கலப்பையைப் பிடியுங்க.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ரத்னாவையெல்லாம் வெளியே இருந்து கண்ணால் கண்டதோடு சரி:(

said...

வாங்க ரத்னவேல்.

தொடர்ந்து வாங்க. நன்றி.

said...

நானும் பார்த்தசாரதி கோவிலுக்கு பெற்றோர்களுடன் வந்தபோது பாரதியார் வீட்டிற்கு சென்று இருக்கிறேன் டீச்சர்.சென்னையை பாதி பார்த்தாச்சு டீச்சர்.

said...

ஆமாமா மாத்திரை வாங்கபோக லேட்டானகூட டாக்டரை பாத்துட்டா பாதி சரியாகிடும் உண்மை.:)


வீட்டில சமைக்கிறது பற்றிய இடம் எனக்கு புரியல..

said...

//நீங்க வீட்டுலே சமைக்கறதே இல்லையா?"//

உங்க பதிவுகளின் எண்ணிக்கையைப்பார்த்து இப்படி ஒரு டவுட்டு வந்துட்டுதோ என்னவோ :-)))))

அவிச்ச கடலையில மசால் போட்டுக்கொடுக்கிறது எனக்கென்னவோ,... கப் கார்ன் மாதிரியே இருக்கு :-)))

said...

சென்னை விமான நிலையக் கட்டிட வேலைகள் நடப்பதைப் பகல் வெளிச்சத்தில் பார்த்தோம்
நாங்க தான் செய்கிறோம்.

said...

படங்கள் அருமை. சுவைக் கூட்டுகின்றன. வாழ்த்துக்கள்

said...

Madam. vanakkam. I'm venkatesh, was a driver, worked for u, and now in singapore. please send me one copy, if possible, of ur new book(fiji island) for me madam. Thanks. My address:
No.89, Pandan Loop,
Singapore-128300

said...

வாங்க சுமதி.

பாரதி வீட்டு விவரம் சரியாக் கொடுத்திருக்கேனா?

பார்த்தவுங்க நீங்க சொல்லணும்.

said...

வாங்க கயலு.

அமைதிச்சாரல் பாயிண்டைக் 'கப்'ன்னு புடிச்சுட்டாங்க பாருங்க:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

உதவுனதுக்கு நன்றிப்பா.
கப் கார்ன் எல்லாம் வாங்கிச் சாப்பிடலை.

வாழ்க்கையின் சுவைகளை கோட்டை விட்டுக்கிட்டு இருக்கேன்:(

said...

வாங்க குமார்.

ஆஹா..... அது உங்க வேலைதானா!!!!

சட்னு முடியுங்க. திரும்பப் போறதுக்குள்ளே பார்த்துட்டுப்போறேன்.

said...

வாங்க மதுரை சரவணன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

said...

வாங்க வெங்கடேஷ்.

உங்களை துளசிதளம் வாசகர்களுக்குத் தெரியும். அதான் நாய் கடிச்சுருச்சே!

http://thulasidhalam.blogspot.com/2009/12/blog-post_03.html

அதென்ன சொல்லாமக் கொள்ளாம சிங்கப்பூர் போயிட்டீங்க? உங்களுக்குப்பிறகு வந்த ட்ரைவர்கள் யாரும் சரியில்லைன்னு உங்க கம்பெனி லீஸையே வேண்டாமுன்னு சொல்லிட்டோம்.

நலமா இருக்கீங்களா?

இன்னும் புத்தகம் என் கைக்கு வரலை. வந்தவுடன் அனுப்பட்டுமா?

said...

as u wish mdm. tks.

said...

நல்ல பதிவு...சென்னை வீட்டிலாவது நாலு பேர் இருந்தாங்க. எட்டயபுர வீட்டில் யாருமே இல்லை.

said...

சரிங்க வெங்கடேஷ்

said...

வாங்க கலாநேசன்.

வாசல் வெராந்தா ரீடிங் ரூமா இருப்பதிலே..... நாலு பேர் வந்துபோகத்தான் செய்யறாங்க.

அங்கேயும் இப்படி ஒரு பயன் இருந்தால் கொள்ளாம்.

said...

வெங்கடேஷ்,

நாளை சிங்கைக்கு வருகின்றேன். உங்கள் செல்ஃபோன் எண்ணைத் தெரிவிக்கவும். வந்தவுடன் பேசுவேன்.
இங்கேயே பின்னூட்டமாகச் சொல்லுங்கள்.