Friday, January 07, 2011

கீரைவடையும் உறியடியும் .குழலிசையும்

கிருஷ், கீரை வடை சாப்பிடாமலா இருந்துருப்பார்?
மனுசனுக்கு வயிறு ரொம்பினா.............. கேளிக்கை மீதே நாட்டம். தூக்கமா இல்லை பாட்டான்னு டாஸ் போட்டு இசையே வென்றது. மூணுமணிக்கு மானஸி. மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்லே. ஓடுன வேகத்தில் முதல் நிகழ்ச்சி முடிய இன்னும் 10 நிமிசம் இருக்கும்போதே உள்ளே போயாச்சு. சுபிக்ஷா ரங்கராஜன் பாடிக்கிட்டு இருந்தாங்க. கேட்டது சுமார்தான். நல்லதை முன்னாலேயே பாடி முடிச்சுருப்பாங்க போல..

மானஸியின் குரலும் உச்சரிப்பும் அட்டகாசமா இருக்கும். ஆளும், அமைதியான அழகோ அழகு. போனவருசம் காவ்யாவின் நடன நிகழ்ச்சியில் முதல்முதலா அவுங்க பாட்டைக் கேட்டோம். நேரம் இருந்தால் இங்கே பாருங்களேன்.


இதுவரை பார்க்காத கேட்காத நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமைன்னு ஒரு கொள்கை வச்சுருந்தாலும்... நம்ம மானஸிக்கு விதி விலக்கு:-) இசைவிழாக் காலத்துலே பகல் நேரக் கச்சேரிகள் எல்லாம் இலவசம் என்பது ஒரு போனஸ். ஆனாலும் சபை என்னவோ நிறைவதில்லை:(

நமக்கு அரசின் இலவசம் ஒன்னும் கிடைக்காத ஏமாற்றத்தில் இதையும் விடமுடியுதா? சித்தி விநாயகம் ஆரம்பம் அருமை. சீதாபதே...நா...மனசுனா, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, பங்கஜ லோசன எல்லாமே அழகுதான். ஆனால் நீலாம்பரியை மத்தியான வேளையில் எடுத்துக்கலாமோ? ராக ஆலாபனையை விஸ்தரிக்காமல் இருந்தால் நல்லது. சத்தமே இல்லாமல் நிசப்தமா இருக்கும் சபா, (வரிசைக்கு ஒன்னோ ரெண்டோ மனுஷர்கள்!) உண்ட களைப்பு . கண்ணை அப்படியே இழுத்துண்டு போறதே!!!!! ராமா....... துக்கடாக்களைப் பாடினால் நல்லதுன்னு தோணல். இதுலே வயலின் வேற இழைஞ்சு இழைஞ்சு.... தாய்ச்சுக்கோன்னு ..........! சபாஷ், ஜெயந்தி கேஷவ். மிருதங்கம் டொரண்டோ கௌரிஷங்கர். அழகா வாசிச்சார். அவர் மட்டுமே 'என் கண்ணைத் திறக்க' வச்சார் என்றதுதான் நிஜம். கொஞ்சம் நடந்தாத் தேவலைன்னு கோபால் எழுந்து மேடைக்குப் பக்கத்தில் போய் படம் எடுத்துவந்தார்.
மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் இசைவிழாவுக்கு இது 59 வது வருசம். அங்கே இருந்த நம்ம பார்த்தசாரதியின் பெரிய சைஸ் படம் பார்த்துட்டு அப்படியே பொங்கிட்டார். மயிலை கபாலிக்கு வக்காலத்து, ஏன் இடம் கொடுக்கலைன்னு. 'தெரியாமப் பண்ணிட்டேன். அடுத்த வருசம் கபாலியை இஸ்த்துகினு வரேன்'னு சமாளிச்சேன். உலகில் நடக்கும் சகல (கெட்ட) காரியங்களுக்கும் நாந்தான் அத்தாரிட்டின்னு நினைப்பு இவருக்கு!

சரியா ஒன்னரை மணி நேரம். நாலரைக்கு எழுந்து கேண்டீனுக்குப் போனேன். தூக்கக் கலக்கம் போக ஸ்பெஷல் காஃபி வேண்டித்தான் இருக்கு. காசி அல்வா கீரை வடை பணியாரம் காஃபி (என்ன காம்பினேஷனோ!!) சுத்தமா இருக்கு இடம். சுவையும் ஓக்கே! மீனாம்பிகா கேட்டரர்ஸ். படம் எடுத்ததைப் பார்த்ததும் உரிமையாளர் பாஸ்கர் அறிமுகம் செஞ்சுக்கிட்டார். சுவை நல்லா இருக்குன்னு பாராட்டினேன். காசா பணமா?

தகதக காசி அல்வா. எனக்குக் காரம் சாப்பிட்டால் ஆகாது. இனிப்பு நோ ப்ராப்ளம்:-)
பாஸ்கர்

அப்போ...மானஸி அந்தப் பக்கம் வந்தாங்க. சின்னதா ஒரு பாராட்டு அவுங்களுக்கும் 'சப்ளை' பண்ணினேன்.

ஆறுமணிக்கு விசாகா ஹரியாம். மானஸி முடியுமுன்னே(யே) ஹாலின் இருபக்க வெராந்தாவுலேயும் அடுக்கடுக்கா ஏகப்பட்ட நாற்காலிகளைப் போட ஆரம்பிச்சு இருந்தாங்க. நீள வரிசை காத்திருக்கு இப்போ. எல்லா டிக்கெட்ஸும் ஸோல்ட் அவுட்டாம். அப்பாடா..... டிக்கெட் இல்லை அதனால் நான் போகலை. வெரி சிம்பிள்:-)

மறுநாள் மாலை பழைய தோழிகளுடன் ஒரு 'சிறப்பு சந்திப்பு'க்கு ஏற்பாடு செஞ்சு ஒருத்தரைத் தவிர, எல்லோருக்கும் டெக்ஸ்ட் மெஸேஜ் கொடுத்தாச்சு அந்த ஒருத்தர் இந்த சபாவுக்குப் பக்கத்துத் தெரு. திரும்பிப்போகும்போது நேரில் சொன்னால் ஆச்சு. சந்துப்பாதையில் நுழைஞ்சு போனால் சர்ச் வருது. அதிசயமா நடந்து போறோமே.... தலையைக் காட்டலாமுன்னு நுழைஞ்சால் உறியடி நடக்குது!!!!
உறியடி

கண்ணைக் கட்டிக்கிட்டுக் கையால் இருந்த சின்னத்தடியால் பையன் தட்டித்தடுமாறிக் குறி 'பார்த்து' அடிச்சுட்டான். பானை உடைஞ்சு கொஞ்சம் காசுகள் சிதறியது. அடுத்த புதுப்பானையை உடனே கட்டித் தூக்கினாங்க.
Krish and Christ ரெண்டும் ஒன்னுதான். அவருக்கு 12 ஆழ்வார்கள்ன்னா இவருக்கு 12 அப்போஸ்தலர்கள்! லஸ் சர்ச்சு, லஸ் சர்ச்சுன்னு சொல்றோமே....அந்த சர்ச்சு இந்தச் சர்ச்சுதான். என்னிக்காவது பெயர்க் காரணம் 'தேடி' போக எனக்குத் தோணுச்சோ? இன்னிக்கு தோழியால் கிடைச்ச தரிசனம்! 1516 வது வருசம் கட்டி இருக்காங்க.
சர்ச் உள்ளே சின்னதா அளவா நீட்டா இருக்கு. அந்தக் காலத்துலே இங்கிருந்த வெள்ளைக்காரகள் (ப்ரிட்டிஷ்காரன்னு தனியா இல்லை. வெள்ளைத்தோல் இருக்கும் யூரோப்பியர்கள் எல்லாமே நமக்கு வெள்ளைக்காரந்தானாக்கும், கேட்டோ)எண்ணிக்கைக்கு யதேஷ்டம். கத்தோலிக் சம்பிரதாயம். யஷோதா கிருஷ்ணனைத் தூக்கி வச்சுருப்பது போல மேரியம்மா கிறிஸ்ஸைத் தூக்கி வச்சுருக்காங்க.
வெவ்வேற தேவாலயங்களில் குடும்பத் திருவிழாவாம் இந்த வாரம். இங்கே இன்னிக்கு தேரோட்டம் நடக்குது மாலை ஆறு மணிக்கு. போனவருசம் முதல் இந்தத் தேர்த்திருவிழா ஆரம்பிச்சு இது ரெண்டாம் வருசம்.

பதினைஞ்சாம் நூற்றாண்டு கடைசியில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 'வாஸ்கோ ட காமா' தன்னுடைய கடற்பயணத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி கள்ளிக்கோட்டை, இந்தியா( அப்போ பாரதமுன்னு பெயர் இருந்துருக்கணும்) வந்து பார்த்துட்டுப் போயிருக்கார். அந்தக் காலத்துலே கடல் தண்ணி அப்படியே தொடுவானத்தோடு முடிஞ்சுருமுன்னு நினைச்சாங்களாம். இவர் தன் நாட்டுக்குத் திரும்பிப்போய் சேதி சொன்னதும் 1500 வது ஆண்டு மார்ச் 9 தேதிக்கு, லிஸ்பன் நகரில் இருந்து மிஷனரிகள் எட்டுப்பேர் அடங்கிய ஒரு குழு 'சரி' பார்க்க வந்துருக்கு. அதே கள்ளிக்கோட்டையில் வந்து இறங்குனாங்க. ஆடி அசைஞ்சு வந்து சேர எட்டு மாசமாகி இருக்கு. நவம்பர் 16 ஆம்தேதி.. அங்கே இருந்த மக்களுடன் (மொழிபுரியாத காரணம்?) நேர்ந்த 'வாக்குவாதம்' சண்டையா மாறி மூணு பேர் அவுட். பாக்கி இருந்தவங்க உயிர்தப்பி கரையோரமாவே போய் இருக்காங்க. பத்து நாளில் (நவம்பர் 26)கொச்சியைக் கடந்து சுத்திப்போய் கிழக்குக் கடற்கரை ஓரமாவே போனபோது புயல் காத்து, இருட்டு, மழைன்னு தடுமாறி மேரி மாதாவை பிரார்த்திச்சு வணங்குனதும் கொஞ்ச தூரத்துலேயே வெளிச்சம் கண்டு கரை ஒதுங்குனாங்க. போர்ச்சுக்கல் நாட்டில் கத்தோலிக் மதம். இவுங்கெல்லாம் மேரி மாதாதான் வழி காமிச்சுட்டாள்ன்னு வெளிச்சத்தை நோக்கி காலியாக் கிடந்த நிலத்துலே வர்றாங்க. ஒர் இடத்துலே வெளிச்சம் சட்னு மறைஞ்சு போச்சு. நன்றி தெரிவிக்கும் விதமா அங்கேயே மேரிக்கு ஒரு ஆலயம் கட்டி இருக்காங்க. அவர் லேடி ஆஃப் லைட் சர்ச். பிரகாசமாதா தேவாலயம். கட்டாதேன்னு ஸ்டே ஆர்டர் எல்லாம் யாரும் வாங்கலை. இடம் இருக்கு என்ன வேணுமுன்னாலும் செஞ்சுக்கோதான்.

இந்தக் கோயிலும் கோல்கொண்டா படையெடுப்பால் 1662 முதல் 1673 வரை அழிவுக்குள்ளாச்சு. சுமாராப் பழுது பார்த்து வச்சும் ஹைதர் அலி படையெடுப்பால் மறுபடி (1780 - 1782) இடிக்கப்பட்டு பலவருசங்களுக்குப்பிறகு திருப்பி புனரமைக்கப்பட்டுருக்கு. போர்ச்சுகீஸ் மொழியில் LUZ ன்னா light (வெளிச்சம்) என்று பொருளாம்.
இப்பதான் சர்ச்சைச் சுத்தி வீடுகளும் தெருக்களும் சந்துகளுமா இருந்து சர்ச்சு உள் அடங்கிப்போயிருக்கு. அந்தக் காலத்துலே வெறும் காடா இருந்ததால் இந்தக் கோவிலை 'காட்டுக்கோவில்' னு தமிழர்கள் சொல்லிக்கிட்டு இருந்தாங்கன்னு தேவாலய ஆவணம் சொல்லுது.
வெளியே கலகலன்னு இருக்கும்போது மூணு சிறுமிகள் ரொம்பப் பொறுப்பா உள்ளே விளக்கேத்திக்கிட்டு இருந்தாங்க. வெளியே வலப்பக்கமா ஒரு சந்நிதி. தமிழ் மலையாளம், ஆங்கிலமுன்னு ,மூணு மொழிகளில் தகவல் பலகை. பரிசுத்த ஜூட். இவர் யேசுவின் சகோதரர் என்று சொல்றாங்க. ஒன்பது நாள் இவரை ஜெபிச்சு வணங்கினால் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கை. 9 நாள் 9 முறை. நவம் நவம். ஆங்கிலத்துலே நவநாளைப்பற்றி ஒன்னும் இல்லை. தமிழனுக்கு மட்டும் நாள் கணக்கு போல! இருந்துட்டுப் போகட்டும். நவதிருப்பதி, நவகிரஹம்முன்னு நவம் நமக்கெல்லாம் தெரிஞ்ச எண்தானே?
தோழி வீட்டில் ஆள் இல்லை. அறைக்கு வந்து ஃப்ரெஷப் பண்ணிட்டு வாணி மஹால் போயாச்சு. ஸ்ரீ தியாக ப்ரம்ம கான சபா. லய மதுரா நிகழ்ச்சி. மிருதங்கம் என்ஸம்பில். அசுவாரசியத்தோடு கோபாலின் ஆசைக்காகப் போனேன். எல்லாம் நூறே போதும். அடராமா..... நான் ரூபாயைச் சொன்னால்..... ஆட்களுமா? கீழே உள்ள பெரிய ஹால். ஆனால் எண்ணினால் நூறுதான் தேறும். சீஸன் டிக்கெட் ஆட்களாவது வரக்கூடாதா?
திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கம். திருப்பூணித்துறை ராதாகிருஷ்ணன் கஞ்சிரா, மைசூர் சுரேஷ் மோர்சிங், மைசூர் சந்தன் குமார் புல்லாங்குழல். வெங்கடேசன் நாதஸ்வரம். சந்த்ரஜித் தப்லா, கடம் வாசிச்சவர் பேரைக் கவனிக்காமல் கோட்டைவிட்டுட்டேன்:( கூட ரெண்டு பேர் தாளம் போட! மேடையில்தான் நல்ல கூட்டம்.
ஆறரைக்கு ஆரம்பிச்சு ஒன்பதுக்கு டாண்ன்னு முடிச்சுருவேன்னு வாக்குக்கொடுத்த பக்தவத்சலம், அதைக் காப்பாத்தவும் செஞ்சார். அவருக்குப்பின்னே ஒரு வெள்ளைக்கார அம்பி. சிஷ்யப்பிள்ளை!

அந்த ரெண்டரை மணி நேரம் எப்படிப்போச்சுன்னு இன்னும் எனக்கு விளங்கலை. ப்ளூட்டும் நாதஸ்வரமும்...இப்படி ஒரு காம்பிநேஷனை என் வாழ்நாளில் கேட்டதே இல்லை!

குழல்காரர் சந்தன் குமார், மைசூர் சௌடைய்யா (வயலின்) அவர்களின் கொள்ளுப்பேரன். இசை ஞானம் குடும்பச் சொத்து!!. விளையும் பயிர் முளையிலேன்னு குழந்தையா இருக்கும்போதே அற்புதமா வாசிச்சு............ வரம் வாங்கிவந்தவர்.Child Prodigy. பொதுவா... வீணைதான் பேசுமுன்னு சொல்வாங்க. இதென்ன இவரோட குழல் இப்படி பேசி, பாடி, நின்னு நிமிர்ந்து, ஆடி அசைஞ்சு சக்கைப்போடு போடுது! நில்லுன்னா அப்படியே அந்தரத்தில் நிக்குதுங்க, ஒரு தேர்ந்த சர்க்கஸ் வித்தைமாதிரி!!! ஒரு பிசிர், ஒரு காத்து....ஊஹூம்..... ரெண்டரை மணி நேரத்தில் 'தனி' யைத்தவிர (அது ஒரு அரைமணி) முழுக்க முழுக்க இவர் ஆட்சிதான். நாதஸ்வரம் சோடை போகலை. சரிக்குச் சரி. சபாஷ்..........

உடனே கோபாலுக்கு ஒரு நன்றியைச் சொன்னேன், என் பேச்சைக் கேக்காமல் இருந்ததுக்கு:-))))
குழலை எடுத்து பையில் வச்சவர் நமக்காகக் கொடுத்த போஸ்!

ஞனாம்பிகை கேட்டரர்ஸ். இட்லி எனக்கு. கோபாலுக்கு இட்லியும் தோசையும். சாப்பாட்டு மேசை வெவ்வேற உருவம் எடுப்பதை இன்னொரு சமயம் கண்டேன்.


19 comments:

said...

கலக்குறீங்க மேடம்

said...

ஆஹா.. கீரை வடைங்கறது இப்படியா இருக்கும்..? நான் என்னவோ மெதுவடைக்கும் கட்லெட்டுக்கும் இடைப்பட்டதா இருக்கும் இன்னும் கொஞ்சம் chubbyஆ இருக்கும்னு எல்லாம் கற்பனை பண்ணி வெச்சுருந்தேனே.. :(

said...

தகவல் பகிர்வுக்கு நன்றி. கீரை வடை, ஸ்வீட்... அச்சச்சோ இப்பவே சென்னைக்குப் போய் சாப்பிடணும்னு தோணுதே.... என்ன பண்ணலாம்?

said...

கீரை வடை புதுமையா இருக்கு.
புகைப்படங்களுடன் அருமையான பதிவு..
பகிர்வுக்கு நன்றி

said...

Very Good Running commentary Madam.

said...

"மேடையில்தான் நல்ல கூட்டம்" சிரித்துவிட்டேன்.

"ப்ளூட்டும் நாதஸ்வரமும்..."
கேட்க முடியலை என்று வருத்தமாக இருக்கிறது.

said...

காசி அல்வாவும்,கீரை வடையும் நல்லருக்கு டீச்சர். மேடையில்தான் கூட்டம் அதுவும் நல்லாருக்கு டீச்சர்:))))

said...

அல்வாவும், கீரைவடையும் தவிர மத்ததெல்லாம் காணாமப்போனதன் மாயமென்ன :-)))

கீரைவடை டயட்டுல இருக்கோ!!!.. ரொம்பவே மெலிஞ்சுகிடக்கு :-))

said...

ஹ்ம்ம். கீரை வடையை மிஸ் செய்துட்டேனா:)
அதென்ன உங்க தோழி இப்படிச் செய்துட்டாங்க.:(
லஸ் கோவிலைப் பற்றி இவ்வளவு விவரம் எனக்கு த் தெரியவைத்ததற்கு ரொம்ப நன்றி துளசி.

திரைப்படங்கள் கூட இங்கே எடுத்து நான் பார்த்திருக்கிறேன்.
யூடியூபில இந்தக் குழலும் நாதஸ்வர்மும் கிடைக்கிறதான்னு பார்க்கிறேன் மா.

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

கருத்துக்கு நன்றி-)))))

said...

வாங்க பொற்கொடி.

இன்னும் கூட இளைச்சு மொறுமொறுன்னு கூடக் கிடைக்கும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தில்லிக்காரவுகளே இப்படிச் சொன்னா....
சண்டி என்ன செய்வாள்? இங்கே சரவணபவன்கூட இல்லை:(

வடக்கீஸ் பண்ணும் 'bபரா' தான் கிடைக்குது வசக் வசக்ன்னு:(

said...

வாங்க ஜிஜி.

கீரைவடை பழையதுங்க. பண்டைய இலக்கியத்துலேகூட இருக்கலாம்.

said...

வாங்க ரத்னவேல்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க மாதேவி.

நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மைன்னு சொல்லிக்கறேன்:-)))))

said...

வாங்க சுமதி.

உங்க பின்னூட்டம்கூட நல்லாருக்குப்பா:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

விலைவாசி ஏற ஏற 'சைஸ்' இளைப்புத்தானாக்கும்!

மூணே மூணு பணியாரம். கேமெராவை ஆன் செய்வதற்குள் உங்க அண்ணன் ஸ்வாஹா....:-)

said...

வாங்க வல்லி.

கோவிலை வடை வெற்றி கொண்டதுப்பா!!!!

மன்மதன் அம்பு பாடல் காட்சி ஒன்னு டிவியில் பார்த்தேன். அதுலே இந்த சர்ச்சு வருது. கமல் கல்யாணம் கட்டுறார் இங்கே!

said...

ஆமா நானும் பாத்தேன், ஒடனே நீங்க பதிவுல எழுதினது ஞாபகம் வந்தது குறிப்பா அந்த வருஷம் 1516! அரும!