நம்ம சிங்கை எழுத்தாளர் சித்ராவின் வருசாந்திர சென்னை விஸிட் மறுநாள் முடியப்போகுது. கட்டாயம் சந்திச்சுக் கதை பேசணும்.முழுக் குடும்பமுமே நமக்கு நட்பு என்பதால் அப்படிச் சும்மா விடமுடியாது:) சித்ராவும் அவர் கணவர் ரமேஷும் மரத்தடி கால எழுத்தாளர்கள். அறைக்கு வந்து பேசியும் இன்னும் பேச்சு பாக்கி இருக்கேன்னு வெளியே கிளம்பினோம். எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ (மால்) நாங்க யாரும் இன்னும் பார்க்கலையேன்னு.........போய்ச் சேர்ந்தோம். நல்லாதான் இருக்கு. இன்னும் அழுக்காக்கலை நம்ம மக்கள்ஸ். பெரூசா ஒரு கிறிஸ்மஸ் மரம் நடுவாந்திரமா....சூப்பர். முன்னைக்கு இப்போ கொண்டாட்டங்கள் பெருகிவருவதற்கு சாட்சி.
எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ
அந்தக் காலத்துலே கிறிஸ்துவர்களின் வீடுகளில் மட்டும் நட்சத்திர வடிவத்தில் உள்ளெ ஒரு பல்பு வச்சு வாசலில் எரிய விடுவாங்க.
பிரமாண்டமாத்தான் கட்டி இருக்காங்க. சென்னைவாசிகளுக்குக்கு முக்கியமா தமிழ்நாட்டை விட்டு வெளியே எங்கும் போகாத மக்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் கடைகள். ஆனால் ஏறக்குறைய இதே ரேஞ்சுக் கடைகளை அரும்பாக்கம் பக்கத்தில் இருக்கும் ஸ்கைவாக் மாலில் பார்த்த நினைவு வருது.
ஸ்கை வாக் மால்
முதலில் வயிற்றுக்கு ஈயலாமுன்னு ஃபுட் கோர்ட்டைப் பார்த்தால் ஒன்னும் சரிவரலை. மாடியில் இருக்கும் சங்கீதாவுக்குப் போனோம். சாப்பாடுதான். சோகம் என்னன்னா..... அறையை விட்டுக்கிளம்பும்போது பேச்சு மும்முரத்தில் சார்ஜ் செய்யப் போட்டுருந்த கேமெராவை எடுத்துப்போக மறந்துட்டேன்:(
தரம் பிரமாதமுன்னு சொல்ல முடியாது. ஆனாலும் கூட்டம் என்னவோ அம்முது.
கீழ்தளத்தில் ஆண்ட்டீக் பொருட்கள் விற்கும் கடை என்னை இழுத்துச்சு. ஸ்ரீரங்கா ஜுவல்லர்ஸ். பண்ருட்டிக்காரர்கள். ஸ்ரீ ரங்கா மஹால், ஸ்ரீ ரங்கா லாட்ஜ். அப்புறம் நெய்வேலியில் ஸ்ரீ ரங்கா தியேட்டர். நெய்வேலி டவுன்ஷிப்பில் ஒரு ஸ்ரீ ரங்கா ஜுவல்லர்ஸ் ப்ராஞ்ன்னு வியாபாரத்தில் வெளுத்துக் கட்டுறாங்க. இங்கே எக்ஸ்ப்ரெஸ் அவென்யூவில் இருக்கும் கடை ரொம்ப விசேஷமானதுன்னு உள்ளே நுழைஞ்சதும் புரிஞ்சுபோச்சு.
எல்லாம் இருநூறு முன்னூறு வருசப் பழங்கால நகைகள், வெள்ளிச்சாமான்கள். நல்ல பெரிய சைஸில் ஒரு வெள்ளிக் காமதேனு...... ஆஹா...... என் மனசை அப்படியே அள்ளிக்கிட்டுப் போயிருச்சு. விலைகூட அதிகமில்லை வெறும் ரெண்டரை லட்சம்தான்! நாலைஞ்சு அங்குல உசரமுள்ள வெள்ளி விக்கிரஹங்கள், சின்னச்சின்னதா அலங்காரப் பொருட்கள், பாக்குவெட்டிகள், குங்குமச்சிமிழ் விளக்குகள் இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் நகைப்பிரிவில் அசல் கெம்புக்கல், மரகதம், நீலம் எல்லாம் வச்சு அட்டிகையும் பதக்கமும் ஹைய்யோ..... எதைச் சொல்ல எதைவிட? (நன்றி சிவசங்கரி)
அதுலேகூட சின்னதா மாங்காய், நீண்ட மணி, பந்துபோல உருண்டை இப்படி சுத்திவரக் கெம்புக்கற்கள் பதித்த உருவங்கள் எல்லாம் ஒரே அளவில் செஞ்சு அதை ஒரு கறுப்பு நூலில் கோர்த்து வச்ச நெக்லெஸ் படுபிரமாதம். கிராம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய்தான்! பொற்கிண்ணங்கள் வரிசை என்னை அவ்வளவாக் கவரலை:(
சித்ராவுக்கு அங்கே இருந்த வெள்ளிக் கிடுக்கி ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அதுக்கு மேட்ச்சா வெள்ளிக் குக்கர் வாங்கிக்கணும் முதலில் இல்லையா? அவுங்க ரங்க்ஸ்ம் கோபாலும் வரப்போகும் ஆபத்தை ஏற்கெனவே உணர்ந்த நிலையில் கடைக்குள்ளே எட்டிக்கூடப் பார்க்காமல் வெளியே தளத்தின் மறுகோடியில் மும்முரமான பேச்சில். எங்க ஆர்வம் பார்த்துட்டுக் கடைக்காரர் இருவர் (ஓனராம்) எல்லாத்தையும் எடுத்துக் காமிச்சாங்க. நானும் ஹா.... ஹூ......ன்னு மனம் திறந்து பாராட்டினேன். அழகை அழகுன்னு சொல்வதில் என்ன தப்பு? நேரம் இருந்து அந்தப்பக்கம் போகும் ச்சான்ஸ் கிடைச்சால் நீங்களும் ஒரு பார்வை பார்த்துட்டு வாங்க. பழங்காலச் செல்வச்சிறப்பு எப்படி இருந்துருக்கும் என்பதின் சரித்திர சாட்சி இவை.
வியாபாரம் எப்படிப் போகுதுன்னு கேட்டால் இப்போதான் லேசா 'பிக்கப்' ஆகுதாம். வெளிநாட்டு மக்கள்தான் சிலசமயம் எதாவது வாங்குறாங்களாம். ஆமாமாம், நம்ம மக்கள்ஸ்க்கு பழம்பொருட்களின் அருமை தெரிவதில்லை. அதுவும் இந்த கிராம் இருவதாயிரம் அப்படியே கவுத்துருது. எங்கிட்டே மட்டும் 'அந்த' லட்சத்து எழுபத்தைய்யாயிரம் கோடி இருந்தால் கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்.
'காமதேனு' இருந்தும் கேட்டது கிடைக்கலை பாருங்களேன்:-)))) நம்ம ரசனையைப் பார்த்து சந்தோஷப்பட்டக் கடைக்காரர் எங்களுக்கு கேலண்டர் கூடக் கொடுத்தார். இருக்கட்டுமுன்னு வாங்கிக்கிட்டோம்.
சில குடும்பங்களில் தாலியில் கோர்க்கும் மாங்காய் தேங்காய் வாழைப்பழ சீப்பு (எல்லாம் தங்கம்) பழக்கம் பற்றி சித்ராவிடம் சொன்னதுக்கு அவுங்களாலே அதை நம்ப முடியலை. சின்ன சூப்பர் மார்கெட்டா? ன்னாங்க. இல்லை ஒரு வகை அஞ்சறைப் பெட்டின்னேன்:-)
மாலுக்குள் வந்து ரெண்டு மணி நேரம் ஆன நிலையில் சுத்துனது போதுமுன்னு கீழே கார்பர்க்கில் இருந்த காரைக் கொண்டுவரச்சொல்லி ட்ரைவருக்கு செல்லினோம். பார்க்கிங் சார்ஜ் 150 ரூபாய் ஆச்சு. இதென்னடா பகல் கொள்ளை. மணி நேரத்துக்கு 75 ரூபாயா? ச்சீச்சீ.... இல்லவே இல்லை. மணிக்கு அம்பதுதான். ஆனால் மினிமம் மூணு மணிக்கு 150 கட்டிட்டு மேற்கொண்டு ஆகும் நேரத்துக்கு மணிக்கு அம்பதே ரூபாய். இந்த சார்ஜ் கீழே அண்டர்கிரவுண்ட் கார்பார்க்குக்கு மட்டுமே. நம்ம வண்டிகளைப் பத்திரமாக் காப்பாத்தி வச்சுருக்காங்கல்லே அதுக்கு!!!!!
எதுக்கும் சித்ரா அப்பாவிடம் இந்த கார்பார்க் சார்ஜ் பத்தி மட்டும் 'நான்' மூச் விடக்கூடாதுன்னு தீர்மானம் எடுத்தோம்:-) எனக்கோ ஓட்டை வாய். இந்த வாரத்துலே ஒருநாள் அவுங்க வீட்டுக்குப் போய்வரணும், சித்ரா ஊரில் இல்லைன்னால்கூட. அப்படி ஒரு நட்பு ஏற்பட்டுப்போச்சு அந்தக் குடும்பத்துடன்.
சந்திக்கப் போகுமுன் தொலைபேசியில் கூப்பிட்டு 'நான் வரலாமா, நீங்க ஃப்ரீயா?'ன்னு கேட்பதும், 'இது என்ன கேள்வி? இது உன் வீடு. எப்ப வேணுன்னாலும் வா'ன்றதும் வழக்கமான கேள்வி பதில்.
இன்னொரு நாள் படமெடுக்க வரணுமுன்னு நினைச்சு முடியாமல் போச்சு. நம்ம ஜாக்கி சேகர் உதவி செஞ்சார். அப்படியே நான் படம் எடுத்தாலும் ஒரு ப்ரொஃபஷனலை பீட் பண்ண முடியுமா???? அவர் பதிவில் போட்டுருக்கும் படங்களை ஒரு எட்டு போய் பார்த்துருங்க. ஸ்கைவாக் மால் பற்றியும் அவரோட ஒரு படப்பதிவு இருக்கு. அதையும் பாருங்க. சென்னையில் பெருகிவரும் மால் கலாச்சாரம் என்ற தலைப்பில் ஆராய்ச்சிகூட செஞ்சுக்கலாம்.
ஜாக்கியின் ஸ்கைவாக் மால்
ஜாக்கியின் எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ
சாயங்காலம் ஒரு நாள் நம்ம வெங்கியை எட்டிப் பார்க்க வெங்கடநாராயணா சாலைக்குப்போய் தரிசனம் முடிச்சுட்டு சுத்திவந்தால் ஒரு கவுண்டர் முன்னால் சின்னதா ஒரு வரிசை. எல்லாத்துலேயும் ஒரு ஒழுங்கு இருக்கனும் என்ற என் கொளுகை மனசுலே எட்டிப் பார்க்க சட்னு நானும் வரிசையில் இணைந்தேன். ஏன்? எதுக்கு? என்ன கொடுக்கறாங்க? கேள்விகள் பல. பதில் ஒன்னே ஒன்னு. அது(தான்) யாருக்குத் தெரியும்!!!!
'நீங்க வாங்கப் போறீங்களா?' கேட்டது வரிசையில் இல்லாத ஒருத்தர். 'ஆமாம். என்ன விக்கிறாங்க?' டயரின்னு கையில் இருக்கும் மூணைக் காமிக்கிறார். ஓ..... வாங்கத்தான் போறேன். மூணா? இல்லை ஒன்னு. அப்ப உங்க கோட்டாவில் எனக்கு ரெண்டு வாங்கித்தாங்கன்னு ரெண்டு நூறை கையில் திணிச்சுட்டுக் காணாமப் போயிட்டார்! ஒருவேளை பெருமாளா இருக்குமோ? யார் கண்டா? அதிகபட்சம் ஆளுக்கு மூணுன்னா பெருமாளே ஆனாலும் .....இப்படித்தான்.
'நீ ஏம்மா வரிசையில் நிக்கறே? நான் வாங்கி வர்றேன். நீ போய் வேடிக்கை பாரு'ன்னார் கோபால். பதிவுக்கு மேட்டர் தேத்துவது இவருக்கு வேடிக்கையாப் போச்சு! ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறார் என்பது நெசம்தான்:-)
திருப்பதி கோவிலில் நடக்கும் சேவைகள், கட்டண விவரம், தங்கும் வசதி, ரெயில் நேர அட்டவனை, திருமலையில் பார்க்க வேண்டியவை, செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, கோவிந்த நாமாவளி, இப்படி ஏகப்பட்டவை அடங்கி இருக்கு. தவிர நாளுக்கு ஒரு பக்கம் எழுதித்தள்ள. வேதமும் விற்பன்னர்களும் சொல்லும் நல்ல விஷயங்கள் நாளுக்கொன்னு. பட்டுப்பட்டாக் கண்ணுலே ஒத்திக்கிறமாதிரி இருபத்தியெட்டுப் படங்கள். சூப்பர்ம்மா........... ஜிலேபிஜிலேபியா இருக்கும் தெலுகு எழுத்துக்களைப்பற்றிக் கவலையே வேணாம். தாராளமா இங்கிலீஷும் புழக்கத்திலிருக்கு!
மறக்காம இந்த வருசம் டயரி எழுத ஆரம்பிக்கணும் என்ற புதுவருடத் தீர்மானம் எடுத்தேன். வழக்கம்போல் வருசம் பொறந்ததும் மறந்தும் போச்சு:(
பதிவு மொட்டையா இருக்குதேன்னு ஜாக்கியின் படங்கள் ரெண்டைச் சுட்டுருக்கேன்.
நன்றி ஜாக்கி.
Wednesday, January 12, 2011
மாலின் விஸ்வரூபம்!
Posted by துளசி கோபால் at 1/12/2011 05:30:00 PM
Labels: அனுபவம் Chennai Malls
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
எங்கிட்டே மட்டும் 'அந்த' லட்சத்து எழுபத்தைய்யாயிரம் கோடி இருந்தால் கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம்.///
எல்லாக்கோடிகளையும் நீங்களே வாங்கி குவிச்சா எப்படி. பின்னூட்டம் போடுறதையே கர்மசிரத்தையா செய்யற எங்களுக்கெல்லாம் ஒரு கோடி, ரெண்டு கோடி ன்னு கொடுக்க மாட்டீங்களா.
அடுத்த முறை இந்தியா வரும் போது, அங்கே செல்லும் ஆவலை தூண்டி இருக்கிறீர்கள்.
ஹும்ம்ம்ம்..! பெருமூச்சு தான் என்னால விட முடியும். :(
//எல்லாக்கோடிகளையும் நீங்களே வாங்கி குவிச்சா எப்படி. பின்னூட்டம் போடுறதையே கர்மசிரத்தையா செய்யற எங்களுக்கெல்லாம் ஒரு கோடி, ரெண்டு கோடி ன்னு கொடுக்க மாட்டீங்களா//
துளசியக்கா அதெல்லாம் நமக்காகத்தான் வாங்கறாங்களாக்கும்.. அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி??..
எனக்கு காமதேனுவை கிஃப்டா கொடுத்துடுங்க :-)))))
பன்ரூட்டி ஸ்ரீரங்காவா? அவர்கள் கடை நெய்வேலி டவுன்ஷிப்-ல் மிகப் பிரபலம். ஒரு ஹோட்டல் கூட நடத்தினார்கள் நெய்வேலியில் - அது அவ்வளவாக வருமானம் தரவில்லை என ஒத்திக்கு விட்டு விட்டனர்.
மாலின் விஸ்வரூபத்தினை அழகாய் விவரித்து இருக்கீங்க சகோ. மிக்க நன்றி.
இன்னிக்குப் புதன் கிழமை நல்ல செல்ஸ் போகுமாம் அங்க. போய்ப் பார்க்கணும். அந்த நெக்லஸ் வாங்கிடலாம்னு இருக்கேன்.:)
நான் என்னவோ திருமாலின் விஸ்வருபம் போல. படிச்சு புண்ணியம் சேத்துக்கலாம்னு நெனைச்சு வந்தேன்.
வாங்க தமிழ் உதயம்.
கோடி கொடுக்கலாம். வேணுங்கறவங்க ஆயிரத்தை கோபால் கையில் கொடுத்துட்டு டோக்கன் வாங்கிக்குங்க.
பின்னாலே குழப்பம் வரக்கூடாது பாருங்க:-))))
வாங்க சித்ரா.
இப்படித்தான் இந்தியா வரும்போது, சென்னை போகும்போதுன்னு நிறைய பட்டியல் போட்டு வச்சுக்குவேன்.
அதுலே பாதி தேறுனாலே லாபம்தான்:-)
வாங்க பொற்கொடி.
எதுக்குங்க பெருமூச்செல்லாம்?
கடைகள் ஒன்னும் ப்ரமாதமா இல்லை. அங்கே ஃபேஷன்னு சொல்லி வச்சுருக்கும் உடுப்புகளும்...... ப்ச்.
வாங்க அமைதிச்சாரல்.
காமதேனு மட்டும் போதுமா? வெள்ளி இடுக்கி வேணாமா? ;-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
அவுங்களேதான். என்கூட இருந்த எழுத்தாளர் சித்ராவும் நெய்வேலிக்காரவுஹதான்.
அங்கே விண்டோ ஷாப்பிங் கூட செஞ்சுக்க முடியாத ஏழைபாழைகளை நினைச்சால்..... இவ்வளோ ஆடம்பரம் தேவையான்னு இருக்கு:(
வாங்க வல்லி.
அதுலே பாதி எனக்குப்பா. இப்பவே சொல்லிட்டேன். மீதிக்கு இருக்கவே இருக்கு கருப்புக் கயிறு:-)))))
வாங்க சிவகுமாரன்.
மால் சுற்றினாலும் புண்ணியம் உண்டாம். அதான் போய்வந்தேன். காலம் இப்போ கலிகாலம்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!
//வெள்ளி இடுக்கி வேணாமா? ;-)//
அதையும் மேட்சிங் வெள்ளி குக்கரையும் காமதேனுவே கொடுத்துடுமே :-))
நானும் திருமால் என நினைத்துக்கோண்டுதான் வந்தேன்.
இது அதைவிட பிரமாதமாக இருக்கிறதே :)
//நானும் திருமால் என நினைத்துக்கோண்டுதான் வந்தேன்.//
Reeppeeeettttuuuu!!!
ok god is every where - now - here!
good one
வாங்க அப்துல்காதர்.
உங்களுக்கு எங்கள் வாழ்த்து(க்)களும்.
பிந்திப்போச்சு. குடியரசு தினத்துக்கு வச்சுக்கலாமா?
அமைதிச்சாரல,
விவரமாத்தான் இருக்கீங்க:-))))))))))))
வாங்க மாதேவி.
வாங்க சிவமுருகன்.
திருமால் ஒரு மால்.
நமக்கோ உலகெங்கும் பல மால்கள்.
தீவிர வீர சைவரும் 'மாலை' விட்டுட முடியாது:-))))
Post a Comment