உஸ்.............அப்பாடா...... என்ன இப்படி ஒரு கடும் வெய்யில். வீட்டில் இருக்கும் நாலு ஏஸிக்களையும் போட்டுவிட்டாலும் கொதிப்பு அடங்கலையேன்னு ஏழெட்டாயிரம் கொடுத்து ஒரு ஏர்கூலர் வேறு வாங்கியாந்து முகத்துக்கு முன்னாலே வைக்கும்படி ஆனது. அப்ப வீட்டுக்காரம்மா சொன்னாங்க.... இங்கே வெயிலும் அதிகம், குளிரும் அதிகம்.
ஆமாம் போ(ங்க) நாம் பார்க்காத குளிரா? இதெல்லாம் ஜூஜுபி. என் மரமண்டைக்குச் சரியா யோசிக்கத் தெரியலை. குளிர் ஆரம்பிச்சது. 28 தான்னு மிதப்பாய் இருந்தப்ப, தலைக் குல்லாவோடு வந்த பணிப்பெண்ணைப் பார்த்து மனசில் ஒரு இளக்காரம். டிசம்பர் கடைசி வாரம் சென்னைக்குப் போய்வர வாய்ப்பு கிடைச்சதும்தான்.... பனிமூட்டத்தால் விமானங்கள் சரியான நேரத்துக்குப்போறதில்லை என்ற தகவலைக் கவனிக்க ஆரம்பிச்சேன்.
நல்ல வேளையாக கிளம்பிப்போன தினம் எல்லாம் சுகமே! மறு நாளில் இருந்து அடுத்துவந்த மூணு நாட்களிலும் ஃப்ளைட்டுகள் பலதும் கேன்சலாச்சுன்னு தெரிஞ்சதும் (அதான் தினமும் சண்டிகர் விஷயங்களை வலைமூலம் படிச்சுக்கிட்டு இருந்தோம் பாருங்க) நம்ம அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். நாம் கிளம்புன நாள் குழப்பம் இல்லாம இருந்துச்சுன்னு அல்ப மகிழ்ச்சி. சூலம் ஒன்னும் இல்லை போல:-)
புதுவருசம் முடிஞ்சு மறுநாள் இங்கே சண்டிகர் வந்து சேர்ந்தோம். விமானம் தரை தொட்டதும் குளிரின் தாக்குதல். ஏணியில் இறங்கித்தான் நடந்து கட்டிடத்துக்குள்ளே வரணும். பத்தே நாளில் ப்ளேட்டைத் திருப்பிப் போட்டுருக்கு காலம். வீட்டுக்குளே நுழைஞ்சதும் முதுகுத்தண்டில் ஒரு சிலிர்ப்பு..
நியூஸி போன முதல் வருசம் முதல் குளிரில் கார்பார்க்கிலே இருந்து மால் கட்டிடத்துக்குள் போய் புகுந்துக்கும் இடைவெளியில் அடிமைப்பெண் எம்ஜிஆர்' ஆக்ட் கொடுத்தது நினைவுக்கு வருது. காரில் இருக்கும் ஹீட்டரால் உடம்பைக் காப்பாத்தி வீட்டுக்குள் நுழைஞ்சதும் ஃபயர் ப்ளேஸ் மட்டுமே கதின்னு இருந்த காலம். பக்கத்துலே தொலைக்காட்சிப்பெட்டி. அதுக்குத் தொட்டுக்க நொறுக்குத்தீனின்னு குண்டடிச்சது அப்பதான். அது வாடகை வீடுதான்னாலும் சமையலறை, குளியலறை தவிர எல்லா இடங்களிலும் தரைவிரிப்பா கார்பெட் போட்டுருக்கும்.
சொந்தவீட்டுக்கு வந்ததும் மனம்போல் ஹீட்டர்ஸ்கள் எல்லா அறைகளிலும். விதவிதமாய். லிவிங் ஏரியாவில் கட்டைபோட்டு திகுதிகுன்னு எரியவிடும் ஃபயர் ப்ளேஸ். படுக்கை அறைகளுக்கு ஃபேன் ஹீட்டர்ஸ், ஆயில்காலம்(ன்) ஹீட்டர்ஸ், ஹீட்டிங் ராட். ஹால்வேக்களுக்கு ஸ்பேஸ் ஹீட்டர்ஸ் இப்படி ஜமாய்ச்சோம். நம்மவீட்டில் தலைவருக்கு போடத்தான் தெரியும் அணைக்கத்தெரியாது:( இதனாலேயே நாளொரு சண்டையும் பொழுதொரு விவாதமும் சூடாக இருக்கும். சொல்லிச்சொல்லி மாளலைன்னு வீட்டு வாசல் கதவில் " 'ஹீட்டரை அணைச்சாச்சா?' ன்னு பெரிய எழுத்து அறிவிப்பை ஒட்டி வச்சேன். எண்ணி மூணுநாள் (மட்டும்) அது ஒர்க்கவுட் ஆச்சு. அப்புறம்..... வீட்டில் இருக்கும் பல பொருட்களில் அதுவும் ஒன்னு! ஹூ கேர்ஸ்:(
புதுவீடு கட்டும்போது, அப்போ மார்கெட்டில் புதுசாக இருந்த பலவித ஹீட்டர்ஸ்களை ஆராய்ஞ்சு ஹீட் பம்ப் எனப்படும் சுவரில் மாட்டும் ஹீட்டர்களை எல்லா அறைகளுக்கும் பொருத்தினோம். இவைகள் குளிர்காலத்துக்கு சூடான காற்றையும் கோடையில் (!!) குளிர்காற்றையும் கொடுக்கும் வகை. அடுக்களை, குளியலறை போன்ற ஈரம் உள்ள இடங்களுக்காக அண்டர் ஃப்ளோர் ஹீட்டிங் அமைச்சோம். வீடுமுழுக்க நல்ல உயர்தரத்திலான கம்பளி விரிப்பு. கண்ணாடி ஜன்னல்கள் கதவுகள் எல்லாமே டபுள் க்ளேஸிங்க். குழாயைத் திறந்தா நமக்கு வேண்டிய சூட்டில் நிற்காமல் பொழியும் சுடுதண்ணி இப்படி........
சிறிய விளம்பர இடைவெளி! ( வீடு வா வாங்குது என்ற தொடரில் விஸ்தாரமா எல்லாத்தையும் எழுதி இருக்கேன். )
குளிர் விட்டுப்போச்சு எனக்கு. 'நியூஸிக் குளிரே, ஹௌ ஆர் யூ?'ன்னு மிதப்பாக் கேட்காத குறை:-)))
சண்டிகர் வீட்டுக்காரமா சொன்னதன் பொருள் இப்பத்தான் உரைக்குது. எக்ஸ்ட்ரீம் கோல்ட். அதுசரி. ஏன் இங்கே வீடுகளில் உஷ்ணம் கூட்ட வசதி ஏதுமில்லை?
'மழை பெய்கிறது ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள் எருமைகளைப்போல் எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள். ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல். ஈரத்திலேயே உணவு உலர்ந்த தமிழன் மருந்துக்கும் கூட அகப்படமாட்டான்." இப்படித் தமிழனைத் திட்டுவது நம்ம பாரதியார்தான்.
தமிழனுக்கு மழைன்னா வடக்கனுக்குக் குளிர்!
எதுவும் பழகிப்போனால் இப்படித்தான் போல. சட்டை செய்யமாட்டோம்:(
ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் மின் இணைப்பு வராத புது வீட்டில் சிலமாதங்கள் வசித்தோம். எல்லா அறைகளிலும் சிம்னி விளக்கு. அண்ணன் அறைக்கு மட்டும் ஹரிகேன் லேம்பு. படிக்கிற புள்ளையில்லெ! வீட்டின் கடைக்குட்டி என்பதால் எனக்கு அதிலும் முன்னுரிமை. அண்னனிடம் இருந்து பறித்த லாந்தரைக் கையில் பிடிச்சுக்கிட்டே அலைவேன் . இப்போ அதைப்போலத்தான் சின்ன ஹீட்டர் ஒன்னு வாங்கிவச்சுக்கிட்டு இங்கே அறைஅறையாத் தூக்கிட்டு நடக்கேன்:(
கோவிலுக்குப் போனாலும் கடவுளர்கள் அனைவரும் குளிரில் நடுக்கத்துடன். போனவாரம் வெண்ணைக்காப்பு அனுமனைக் காப்பாத்த வெந்நீர் அபிஷேகம் நடத்தவேண்டியதாப் போச்சு. குளிர் காலத்துலே மக்கள் வருவதில்லையாம். சாமிகள் அப்படியெல்லாம் விட்டுட்டுப்போக முடியுமா? போக்கிடம் ஏது? குருக்களும் கம்பளி உடுப்பில் கண்ணைமட்டும் காட்டிக்கிட்டு இருக்கார். தீபம் காட்டிய தட்டை நீட்டினால் நாமே விபூதி குங்குமத்தைத் தொட்டு எடுத்துக்கணும். பளிங்குத்தரையில் கால்பதிச்சு வலம் வரும்போது ..........
போனவாரம் விமானநிலையத்தை இழுத்துச் சாத்திப் பூட்டே போட்டாச்சு. ரயிலு இருக்கேன்னா.... அதுவும் அஞ்சு அடிக்கு முன்னால் இருக்கும் பாதையைக் காமிக்கலை. அவ்வளவு பனிமூட்டம். 'நடந்துபோகும் 'வேகத்தில்' ஓட்டி தில்லி போக நாலுநாள்:(
இங்கே எல்லாமே வெய்யில் காலத்திற்காகக் கட்டப்பட்ட வீடுகள். மார்பிள் தரைகள். வெய்யிலின் உக்கிரத்தில் மொட்டைமாடியில் பிரதிபலிக்கும் வெய்யிலின் கடுமை பயணப்பட்டு வீட்டுக்குள்ளும் வந்துருது. எதுக்கு அநாவசியமா மார்பிள் தரை? தாஜ்மஹலா பாழாப்போறது?
குளிர் காலம் இங்கே இந்த வருசம்தான் முதல்முறையா? வருசாவருசம் திருவிழாபோல் அதுவும் ஆரம்பத்துலே இருந்தே இருக்கே. பின்னே ஏன் அதுக்கான பாதுகாப்புடன் வீடுகளைக் கட்டுவதில்லை? குறைஞ்சபட்சம் ஒரு கணப்படுப்பு வைக்கக்கூடாதா?
பயங்கர ஃபேஷன், தமிழ்சினிமாவுக்கு நாயகிகளை அள்ளி அள்ளி சப்ளை பண்ணும் மாநிலம் இப்படி எல்லாமே அப் டு டேட்டா இருக்கும் இடத்தில் ஏன் யாருக்குமே குளிர்கால ஏற்பாடுகளைச் செஞ்சுக்கணுமுன்னு தோணலை????? போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு சொல்லாமக்கொள்ளாம அப்பப்ப கரண்டு போயிருது.
வீட்டு வேலைக்கு வரும் உதவியாளர்கள் பாடு இன்னும் மோசம். அடுக்களையில் இருக்கும் கீஸரை எப்பவும் போட்டு வச்சுருக்கேன். தினம்தினம் தரையைத் துடைக்கவேணாமுன்னும் சொல்லியிருக்கேன். மார்பிள் தரையின் கெட்ட சுபாவம், துடைச்சுத் துடைச்சு வச்சாலும் ஏகப்பட்ட அழுக்கு. நம்ம சரோஜோ நல்ல நாளிலேயே நாழிப் பால்.!
இது புலம்பல்ஸ் காலம். இன்னும் ரெண்டு மாசத்துக்கு நம் வாழ்க்கை இந்த மார்ச்சுவரியில்தான்:(
சமர்ப்பணம்: தில்லி வாழ் பதிவுலக நட்புகளுக்கு.
Monday, January 10, 2011
ஜனவரிக்கும் ஃபிப்ரவரிக்கும் முன்பே மார்ச்சுவரி வந்துருது!
Posted by துளசி கோபால் at 1/10/2011 07:43:00 PM
Labels: அனுபவம் Chandigarh
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
வட இந்தியாவின் குளிர் பற்றிய உங்கள் மார்ச்சுவரி பதிவு - சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. இத்தனை ஆண்டு காலம் குளிர் இருந்தாலும், இன்னமும் ரூம் ஹீட்டர்களையும், ப்ளோயர்களையும் நம்பியே இருக்கிறோம். இப்பத் தான் ஓரிரண்டு சில எண்ணைய் ஹீட்டர்கள் வந்து இருக்கு. ஒவ்வொரு வருடமும் ”இந்த வருடமும் குளிர் அதிகம் இல்ல?” என்று சொன்னபடியே காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம்.
//சமர்ப்பணம்: தில்லி வாழ் பதிவுலக நட்புகளுக்கு.// :) நன்றி.
நேற்றுத்தான் தம்பியிடம் சொன்னேன்.. உங்கூர்ல பனியே ஒன்றரை அடிக்கு கொட்டுது நீயோ ஒரு பனியனோட வெப்கேமில் தெரியரே ஹாயா..
நாங்க பாரு 7 டிகிரி குளிருக்கு.. குல்லாவும் ஸ்கார்ஃபுமா கண் மட்டும் தெரிய முகம் காட்டறோம்... என்ன ஒரு முரண் ந்னு..
இங்க எப்பயாச்சும் ரூம் ஹீட்டர் முன்னாடி உக்காருவதோட சரி .. அதையே நம்பியொன்ன்னும் இருப்பதில்ல.. எப்படியோ பழகிப்போயிடறோம் கொடுமையான குளிருக்குங்கறது தான் ஆச்சரியம்..
வெங்கட் சொன்னமாதிரி குளிர் அதிகம் இல்ல .. வெயில் அதிகம் இல்லன்னு பேசிப் பேசியே ஓட்டிடறோம்..
இப்படிக்கு நடுங்கியபடியே..
கயலு..:)
இந்தக்குளுர்லதான் கல்யாணம்,.. அதுவும் விடியவிடிய நடக்குது :-)
தோழியின் மகனுக்கு லக்னோவில் கல்யாணம் நடந்துச்சு.. வீடியோவில் பார்க்கச்சே, பொண்ணு மாப்பிள்ளை, பண்டித்ஜி தவிர, தரையெங்கும் துணிமூட்டைகளா கிடந்துச்சு. க்ளோசப்ல பார்த்தப்பதான்.. கம்பளிமூட்டைகளுக்குள்ள ரெண்டு கண்கள் மினுங்கிக்கிட்டிருந்தது தெரிஞ்சுச்சு. எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ :-))))
ஹீட்டர் இல்லையென்றால் குளிரை சமாளிப்பது கடினம்தான் டீச்சர்.இந்தியாவிற்கு விடுமுறையில் சென்றுவந்தாலே அந்தவருடம் இங்கு குளிர் கடுமையாக தெரிவதுபோல் இருக்கும் டீச்சர்.
பணம் கொட்டிக்கிற சண்டிகருக்கே இந்தக் கதின்னால், ஏழை பிஹாரிஸ்,யு பிக் காரங்க என்ன செயவாங்களோ:(
உங்க பதிவைப் பார்த்ததில் எனக்கு ஜுரமே வந்துட்டதுப்பா.
இது புலம்பல்ஸ் காலம். இன்னும் ரெண்டு மாசத்துக்கு நம் வாழ்க்கை இந்த மார்ச்சுவரியில்தான்:(
.....புலம்பல்ஸ் கூட கலக்கல்ஸ் ஆக இருக்குதே....
வீட்டு விளக்குக்கே மின்சாரம் கொடுக்க அரசாங்கம் திணறது இதில் ஹீட்டர் வேறா? சம்பளத்தில் பாதி கரண்டுக்கே போய்விடும் அதனாலேயே பல வீடுகளில் ஹீட்டரை பார்க்கமுடியவில்லை அதோடு சுவர்கள்/தரைகள் எல்லாம் அதற்கு தகுந்த மாதிரி வடிவமைக்கப்படவில்லை என்பது தான் நிஜம்.
எனக்கு பிடிக்காத காலம் குளிர்காலம் டீச்சர் ;)
ரசிக்க ரசிக்க எழுதுகிறீர்கள்.
இப்படிப்பட்ட தில்லிக்குளிரை 50 வருடங்கள் தொடர்ந்து அணுஅணுவாக அனுபவித்திருக்கிறேன். நானல்லவோ பென்குயின் Penguin!
குளிர் என்னை படுத்துவதேயில்லை!!
பாரதி மணி
இவ்வளவு குளிரா..நாம தப்பிச்சோம்:)
இங்கு மழை அதிகம் பலபகுதிகளில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.:(
பதிவுக்கு மிக பொருத்தமான தலைப்புதான்
பதிவுக்கு மிக பொருத்தமான தலைப்புதான்
வாங்க வெங்கட் நாகராஜ்.
மூணு மாசம் பல்லைக்கடிச்சுட்டு ஓட்டிட்டால் அப்புறம் 9 மாசங்களுக்கு மறதிதான்.
இந்த மறதி மக்களுக்கு இருப்பதால்தான் அரசியல்வியாதிகளும் பொழைக்க முடியுது.
வாங்க கயலு.
காலநிலைஅப்படியே மனுசனை மடக்கிப்போட்டுருது.
SAD ( Seasonal affective disorder)அப்படின்னு ஒரு நிலையில் மக்கள்ஸ் பாதிக்கப்படுறாங்க. மன அழுத்தம் வர இதுவும் ஒரு காரணமாம்.
அலங்காரத்தையும் ஆடம்பரத்தையும் விட நம் வாழ்க்கைக்கு வசதிகள் என்னன்னு முதலில் பார்க்கணுமில்லே?
வாங்க அமைதிச்சாரல்.
இங்கேயும் கல்யாணங்கள் இப்படித்தான் நடக்குது. அதுவும் பராத் வந்து சேரும்போது நடு ராத்திரி 12 மணி.
பொண்ணு நடுங்குனாலும் பளபள உடுப்பை மறைச்சு ஜாக்கெட்டெல்லாம் போட்டுக்க முடியாதுப்பா. எம்மாம் காசு அதுக்கு செலவு செஞ்சுருக்காங்க பாருங்க:(
வாங்க சுமதி.
உண்மைதான். நியூசி போன முதலிரண்டு வருசக்குளிரை இப்போ நினைச்சாலும் 'பகீர்'தான்.
ஆனால்...... மால் உள்ளே போயிட்டால் மால் வாக் நடத்தி உடம்பை ஃபிட்டா வச்சுக்கலாம். உடற்பயிற்சி முக்கியம்:-)
வாங்க வல்லி.
கொட்டிக்கிடக்கும் பணத்தை எதுக்கு செலவு செய்யறோம் என்பது முக்கியம்.
ஹீட்டர் டிஸைனில் நெக்லெஸ் வந்தால் நல்லது:-)))) 2 இன் 1
சாலை ஓர வாசிகளை நினைச்சால் ... பரிதாபம்தான்:(
வாங்க சித்ரா
ஸூப் கிச்சன், ஓவர் நைட் தங்க ஷெல்ட்டர்ஸ் என்ற ஒன்னும் இங்கே இல்லை பாருங்க.
அந்த மார்ச்சுவரியிலும் தரையில் உருட்டிப்போட்டு வச்சுடறாங்கப்பா:(
வாங்க குமார்.
வீட்டு வடிவமைப்பு..... நீங்கள் சொல்வது சரிதான்.
இந்த மார்பிள் தரை எதுக்கு? அதுவும் குளியலறையில் கூட.
அப்பத்தானே சீக்கிரம் வழுக்கி விழுந்து மோட்சம் போகலாம் என்பதற்காகவோ என்னவோ?
வாங்க கோபி.
நெசத்தைச் சொன்னால் குளிர்காலம் போல அழகான காலம் வேற இல்லை. அதுக்குண்டான பாதுகாப்புக் கவசங்களோடு இருந்தால் கொண்டாட்டம்தான்.
வாங்க பாரதி மணி ஐயா.
உங்க 'பென்குயின்' நிலை கண்டுதான்
ஆண்கள் பொல்லாதவர்களான்னு எழுதி இருந்தேனே.
http://thulasidhalam.blogspot.com/2009/02/blog-post_04.html
பெண் குயின்கள் வாழ்வு எவ்வளவோ தேவலாம்:-)
50 ஆண்டு தில்லி வாசம் புகையுடனே கழிஞ்சுருக்கும் இல்லே:-))))
(தப்பா நினைக்கமாட்டீங்க என்ற அதீத நம்பிக்கை எனக்கு)
வாங்க மாதேவி.
குளிரோ வெயிலோ மழையோ எதுவுமே அளவோடு இருக்கணும்.
தண்ணிக் கஷ்டம் இருக்கும் ப்ரிஸ்பேனிலே 150 வருசத்துக்குப்பிறகு வெள்ளம் வந்து 12 பேர் போயிட்டாங்க.
வாங்க ராஜி.
வணக்கம். நலமா?
முதல் வருகைக்கு நன்றி.
தலைப்பு மட்டும்தாங்க அப்பப்ப நல்லா அமைஞ்சுருது:-))))
Post a Comment