Friday, January 21, 2011

பேச்சு...... எங்கள் மூச்சு.

அடையார் அனந்த பத்மநாபனிடம் கொஞ்சம் 'பெர்ஸனலா பேசிக்கிட்டு' இருந்தப்ப....தோழி ஃபோன் செஞ்சு 'இன்னும் கிளம்பலையா?ன்னாங்க. 'வந்துக்கிட்டே இருக்கேன்"'னேன். சந்திப்புக்கு நொறுக்ஸ் வேணுமான்னப்ப..... நான் கிராண்ட் ஸ்வீட்ஸ் போய் கொஞ்சம் 'சமாச்சாரங்கள்' வாங்கிக்கணும் அப்படியே நொறுக்ஸ் எதாவது வாங்கினால் ஆச்சுன்னேன்.
திருவான்மியூர் மாமி வீட்டுக்குப்போய் கொஞ்சம் கதையடிச்சு (நாட்டு நிலவரம் தெரிஞ்சுக்க வேணாமா?) இன்றைய மற்ற எங்கேஜ்மெண்ட்களைச் சொன்னப்ப.... 'முந்திமாதிரி எல்லாம் நம்பர் வாங்கிக்கிட்டுக் காத்திருக்கவே வேணாம். வேணுங்கறதைச் சட்னு வாங்கிக்கலாம். அக்காதங்கை ரெண்டு பேரும் கடையை பாகம் பிரிச்சுக்கிட்டாங்க. ஒருத்தர் இனிப்பு வகைகளும் ஒருத்தர் காரப்பலகாரமுமா இருக்காம். ஆனா தயாரிப்பு எல்லாம் ஒரே இடத்தில் செஞ்சு வருது. க்ராண்டின் சரித்திர நிகழ்வு விளங்குச்சு.
குழிப்பணியாரம், அடை செய்யும் தனிச்'சந்நிதி'யின் பக்கத்தில் ஜிலேபி அடுப்பு ஒன்னு புதுசா முளைச்சுருக்கு. வியாபாரம் நடக்கும் பெரிய ஷெட் ரெண்டாய் தடுப்பு சுவர் வச்சு பிரிக்கப்பட்டு அடுத்த பகுதியில் மேஜை நாற்காலிகள் எல்லாம் போட்டு சாப்பிடும் வகையில் உரு மாற்றம்.
என்னதான் வீட்டுச்சமையல் 'மாதிரி'ன்னாலும் அடுப்படியைக் கொஞ்சம் நீட்டா வச்சுக்கக்கூடாதா என்ன?

புளிக்காய்ச்சல் ரெண்டு பாட்டில், பருப்புப்பொடி ஒரு பாட்டில் . நம்ம ஷாப்பிங் ஆச்சு. இப்போ சந்திக்கப்போகும் நண்பிகளுக்காக நொறுக்ஸா கொஞ்சம் கை முறுக்ஸ்.
திருவான்மியூருக்குப் புறப்பட்ட நிமிசம் முதல் 'எனக்கு சரியா ரோடுங்க தெரியாது மேடம். இதுக்கு முன்னே கம்பெனிக்கு வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன்'னார் ட்ரைவர். கோடி அர்ச்சனையின் பயன்! 'இது நம்ம பேட்டை. நான் வழி சொல்றேன்' னு நேரா, இடது வலதுன்னு வழி சொல்லிக்கிட்டே பெஸண்ட் நகரில் ஒரு வேலையை (என்ன பொல்லாத வேலை? தமிழ்ப்படங்கள் டிவிடி விக்கும் தள்ளுவண்டியில் பர்ச்சேஸ். சண்டிகரில் படங்கள் ஒன்னும் கிடைக்கறதில்லை) முடிச்சுக்கிட்டு திருவான்மியூர், அடையார், காந்திநகர்னு சுத்தி 'செம்மொழிப் பூங்கா'வுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

இப்போதைய ஸ்பெஷல்? தோழியருடன் ஒரு சந்திப்பு. இங்கே வர்றதுக்குள்ளே ரெண்டு மூணு முறை அலைபேசி அழைப்பு. வந்தாச்சா? எங்கே இருக்கே? முன்னாடியே இருங்க. வந்துக்கிட்டே இருக்கேன். குடும்பத்தோடு வர்றேன் கூட்டம் அதிகமா இருக்கு. நான் டிக்கெட் வாங்கி வச்சுடவா? இப்படித் தகவல் பரிமாற்றம். இடம் என்னவோ வழக்கமா பதிவர் சந்திப்பு நடந்துக்கிட்டு இருந்த உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் தான். புது வேஷம் போட்டுருக்கு இப்போ. அதனால் எப்படி இருக்குமோ என்ற ஆர்வம் எங்களுக்கு.

ஜே ஜேன்னு கூட்டம். வண்டியைப் பார்க் பண்ணிட்டு வந்து சேர்ந்துக்குங்கன்னு கோபாலிடம் சொல்லிட்டுத் தோழிகள் கும்பலில் கலந்தேன். குடும்பத்துடன் வந்த தோழியின் குடும்பத்துடன் இவர் தோட்டம் சுத்திப் பார்க்க எஸ் ஆகிட்டார் ஒரு சுத்துப் பார்த்துட்டு அறைக்குப் போயிடுவார். நான் அப்புறமா என் 'பேச்சை முடிச்சு(?) ஆட்டோ பிடிப்பேன். தோழி ஒருவருக்கு கால்மூட்டுப் பிரச்சனை என்றபடியால் அவரை அலையவிடாமல் முன்பகுதியிலேயே காத்துருந்து அவரைப் பிடிச்சோம். அங்கேயே ஒரு இடத்தில் உக்கார்ந்தாச்சு. மேடைமேடையாச் சுவர் வச்சுக் கட்டி இருக்காங்க. அந்தக் குட்டிச்சுவர்லே எதிரும் புதிருமா உக்காந்துக்கிட்டோம். முகம் பார்த்துப் பேசணுமுல்லெ? செயற்கை நீரூற்றுகள், லைட்டிங் எல்லாம் நல்லாவே இருக்கு.

என்னைத்தவிர மற்றவர்கள் உள்ளூர்வாசிகள்தான். ஆனாலும் சந்திக்க நேரமில்லாம ஓடும் மக்கள். இதுலே இன்னொரு தோழி வந்துக்கிட்டே இருக்கேன்னு அரைமணிக்கொரு தடவையா ரெண்டரை மணி நேரமாச் செல்லிக்கிட்டே இருக்காங்க. இதுக்கிடையில் நம்ம சீனா சார் 'செல்'லினார். 'வெளியே இருக்கேன். அறைக்குப் போனதும் பேசறேன்'னு சொன்னேன்.

ஏழரை ஆனதும் கைப்புள்ளெக்காரி நெளிய ஆரம்பிச்சாங்க. பொழுதோட வீட்டுக்குப் போய்ச் சேரணுமே. கடமைகள் காத்திருக்கே. வந்துக்கிட்டு(??) இருந்த தோழி இன்னும் வந்தே சேரலை. 'எல்லோரும் கிளம்பும் சமயம். இனிமே வந்தா ........... பூங்காவின் வாசலைத்தான் பார்க்கணும். திரும்பிப்போங்க'ன்னு சேதி சொல்லிட்டுக் கிளம்பிட்டோம். ரெண்டரை மணி நேரம் 'பேசோ பேசோ'ன்னு பேசித் தீர்த்துருக்கோம். ஆனாலும் என்னமோ சொல்ல விட்டுப்போனமாதிரி இருக்கு!

நம் தேசிய குணம். விட்டுட முடியுமா? நாடு முழுக்க ஒரு நாள் பேசத் தடா போட்டால் மக்கள் தொகை அம்பது சதம் அவுட் ஆகிரும். பேசாமயே செத்துருவோம்லெ!


இந்த கலாட்டாவில் பூங்காவைப் படம் எடுக்கணும் என்பதே சுத்தமா மறந்துபோச்சு. சுத்திப்பார்க்கப் போனவரிடமாவது கெமெராவைக் கொடுத்து அனுப்பி இருக்கலாம்:(

அதான் இருட்டிப் போச்சேன்னு சமாதானம் செஞ்சுக்கிட்டேன்.
சுட்ட படம். சென்னை ஆன்லைனுக்கு நன்றி.

பதிவர் செந்தில்குமார் எடுத்த செம்மொழிப் பூங்கா படங்கள் இங்கே. அருமையா இருக்கு. அவருக்கு என் நன்றிகள்.


அறைக்கு வந்து சீனா சாரைக் கூப்பிட்டால் 'சென்னைக்கு வந்துருக்கோம். உங்களை சந்திக்க ஆவல்'ன்றார்! மறுநாள் பகல் மூணு மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கியாச்சு.

தினம்தினம் வெளியிலே சாப்பாடு அதுவும் ஒரே ரெஸ்ட்டாரண்டுன்னா உண்மையிலேயே போரடிச்சுத்தான் போகுது. வெங்கட நாராயணா ரோடு சரவணபவன் இந்தப் பயணத்துக்கு வாய்ச்சது. பாண்டி பஸாரை விட இங்கே கொஞ்சம் சுத்தமாவே இருக்கு. இரவு சாப்பாடுக்கு அவ்ளோதூரம் போகணுமான்னு ஒரு நாள் சோம்பல். அடுத்து இருந்த அமராவதியில் 'டேக் அவே' வாங்கினோம். ஆர்டர் செய்ய உள்ளே போனப்ப எல்லா இடமும் காலியாக் கிடந்துச்சு. பத்து நிமிசம் காத்திருந்து வாங்கிவந்தோம். மெனுகார்டில் போட்டுருந்த விலைப்படி 210. ஆனால் நம்மகிட்டே வாங்கினது 325. அது பழைய மெனு கார்டாம். அம்பது சதமானம் விலை ஏற்றம்? கொள்ளைதான் போங்க:(

கொள்ளைன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது. சுற்றும் தூரம் அதிகமுன்னா ட்ராவல்ஸ் வண்டி. அக்கம்பக்க்க்க்க்க்க்ம் மட்டுமுன்னா ஆட்டோன்னு இருந்தோம். அதிலும் மலைக்குப்போக மாலை போட்டுருக்கும் ஆட்டோக்காரகள் கொள்ளை அடிப்பதில் ரொம்பவே தீவிரமா இருந்தாங்க. ஒரு கிலோ மீட்டர் தூரம் போகக்கூட அம்பது. வேணாமுன்னு தலை அசைச்சதும் பின்னாலேயே வந்து நிக்கும் சாதாரண ஆட்டோக்காரர் முப்பதுன்னுவார். ஒருமுறை தி நகர் க்ளோபஸ்லே இருந்து லஸ் சர்ச்சுக்கு 200 கேட்டார் ஒருத்தர்! அதனாலே 'மாலை போட்ட ஆட்டோ'ன்னா........ வேணவே வேணாமுன்னு வெறுப்பா இருந்தது.26 comments:

said...

பகிர்விற்கு நன்றி

said...

அண்ணா நகர் லே க்ரான்ட் ஸ்வீட்ஸ் போன வாரம் போன போது உங்களை
யும் கோபால் ஸாரையும் நினைச்சுகிட்டேன். நீங்களும் அடையாருக்குப் போய்
அனந்த பத்மனாபன் சேவை அப்படின்னு சொல்லிண்டு அங்க கடைக்கிற காராசேவை,
முறுக்கு, திருப்பதி லட்டு, குலோப்ஜாமுன், மிக்சர்,இத்யாதிகளை வாங்கினேன்னு
சொல்லி, எங்களை மாதிரி கிழங்களையும் இன்னொரு தரம் திருவான்மியூர் கிரான்ட்
ஸ்வீட்ஸுக்கு போ போ என்று டெம்ப்ட் பண்ணுவது தர்மமா !!
உங்கள் பதிவு படித்தபின்னே அப்படியே தூங்கிப்போய்விட்டேன். அப்ப‌
நான் கண்ட தைக் காண இங்கே வாருங்கள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

said...

செம்மொழிப் பூங்காவில கொசு அதிகமாமே அப்படியா? நல்லா பகல் வேளைல சுத்திப் பார்க்கணும்.க்ராண்ட் அண்ணாதம்பி கடைன்னு நினைத்தேன்.
அக்கா தங்கச்சியா:)

said...

நல்ல பகிர்வு. நன்றி.

said...

உட்லண்ட்சில் ஏற்கனவே இருந்த மரங்களை சிதைக்காமல், இந்த பூங்காவை உருவாக்கியிருக்காங்களாம். பாராட்டப்படவேண்டிய செயல்..

said...

அப்றம் எப்டி இந்தப் பாட்டு ஹிட்டாச்சு "பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ....". டீச்சர் எப்டியோ உங்க அர்ச்சன(ட்ரைவர்)பலிச்சுருச்சு ...

said...

பகிர்வுக்கு நன்றி.

said...

நாங்களும் இங்கு வரும்போது எல்லாம் பருப்பு பொடியும், புளிகாய்ச்சலும் வாங்கிவருவது உண்டு டீச்சர்:))))

said...

உங்களுக்கு ஆட்டோவுக்கும் ஏதோ பெரிய பந்தம் போலருக்கு..!

said...

ஆகா...டீச்சர் நீங்களும் பார்த்துட்டிங்களா பூங்காவை ;))

எனக்கு ஒரு ரொம்ப நாள் ஒரு கேள்விக்கு விடை வேணும்...கேள்வியை அனுப்புரேன் பதில் சொல்லுங்க ;)

said...

Thanks for sharing

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

//காராசேவை,
முறுக்கு, திருப்பதி லட்டு, குலோப்ஜாமுன், மிக்சர்,//

இதெல்லாம் என்ன? புதுத் தின்பண்டங்களா??????????

கனவில் ஏன் குப்பை (மட்டும்) வருது? துளசிதளத்தின் எஃபெக்ட் கூடிப்போச்சு:-)

said...

வாங்க வல்லி.

கொசுவை நான் கவனிக்கலையேப்பா........

எங்க கடிகள்(அதைவிட)கூடிப்போனதாக இருக்கலாம்:-)

எல்லாத்துலேயும் ஆணாதிக்கமுன்னா இங்கேயுமா?????????

அக்கா தங்கைன்ற (சரித்திர) உண்மைகளை இப்பவாச்சும் தெரிஞ்சுகிட்டீங்கதானே???

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அட! அப்படியா??

போனமுறை மர அடையாளம் வைக்காம வந்துட்டேனே:(

said...

வாங்க குலோ.

விதின்னு ஒன்னு இருந்தால் விலக்குன்னும் ஒன்னு இருக்குமாம்:-)

said...

வாங்க கோவை2தில்லி.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சுமதி.

இது ரெண்டும்தான் பெஸ்ட்:-)

அந்தக் காரக்குழம்பு வகையறா எல்லாம் ரொம்பவே சுமார்.

said...

வாங்க பொற்கொடி.

மஞ்சள் டாக்ஸிகள் எல்லாம் காணாமல் போச்சேப்பா:(

ஒரு கிலோ மீட்டருக்கு ட்ராவல் வண்டி எதுக்குன்னுதான்............

said...

வாங்க கோபி.

பூங்காவின் முன்வாசலை நல்லாப் பார்த்துட்டேன்.

சொந்தக் காசுலே செஞ்சுவச்சுருக்காங்க போல! உள்பக்கம் பெயர் பொறித்தல் நல்லாவே இருக்கு.

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

வருகைக்கு நன்றி.

said...

பூங்கா மரங்கள் எல்லாம் பேச்சைக்கேட்டே வளர்ந்திருக்கும் :)

said...

செம்மொழிப்பூங்கா எங்கே இருக்கு? கிண்டி/அடையார் போற வழியில இருந்ததை பேர் மாத்திட்டாங்களா?

க்ரேன்ட் ஸ்னேக்ஸ் போகணும் - லிஸ்ட்ல எழுதியாச்சு. அங்கே மோர் மிளகாய் கிடைக்கும். குழம்பு வடாம் என்று பெரிய சுண்டைக்காய் சைசில் மோல்ட் வச்சு அளந்து செய்த மாதிரி கிடைக்கும். எல்லாம் மறந்தே போச்சு!

said...

வாங்க மாதேவி.

தண்ணீர் விட்டு வளர்க்க முடியாதவை அவை:-))))

said...

வாங்க அப்பாதுரை.

ஜெமினி ஃப்ளைஓவர் பக்கத்துலே இருந்த வுட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் ரெஸ்டாரண்ட் இருந்த இடம்தான் இப்போ செம்மொழிப் பூங்கா.

சட்னு புரியணுமுன்னா.... ஸ்டெல்லாமேரிஸ் பக்கம்:-)

இன்னும் அடையாளம் மறக்காமல் இருக்க வேணுமுன்னா.... பூங்காவின் பெயர்பலகையின் (அலங்கார வாசல் உள்புறம்) பார்க்கவும். யாருதுன்னு தெரியும்:-))))))