Monday, January 17, 2011

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

மக்களே எல்லோரும் நலமா? இன்று காணும் பொங்கல். அதான் உங்களைக் கண்டுக்கிட்டு அப்படியே ஒரு சமாச்சாரம் சொல்லிப்போக வந்துருக்கேன்.

ரெண்டு வாரங்களுக்கு முன் சென்னை போயிருந்தபோது பதிப்பகத்தினரோடு நடந்த உரையாடலில் ஒரு அற்புத ஐடியா வந்துருக்கு.......... உலகின் பல இடங்களிலும் பரவி வாழும் தமிழர்களைப் பற்றியும் எந்தக் காலத்தில் எப்படி அங்கெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து போயிருப்பாங்க? முதல் முதலில் போனவர்கள் யாராக இருந்திருப்பாங்க?

அங்கே போய் செட்டில் ஆனதும் நம்ம கலாச்சாரங்களை, கடவுள்களையெல்லாம் எப்படிக் கொண்டு போயிருப்பாங்கன்னு .....

ஏற்கெனவே ஃபிஜித்தீவு கரும்புத்தோட்டத்திலே என்னும் புத்தகத்தில் ஃபிஜித் தமிழர்களைப் பற்றி கொஞ்சம் ஆராய்ஞ்சு எழுதி இருக்கேன். இதைப்போலவே மற்ற இடங்களில் உள்ளவர்களைப்பற்றித் தெரிஞ்சுக்க என்ன செய்யலாமுன்னு......

'கவலையே படாதீங்க. எங்க பதிவர்கள் இப்போ உலகின் பல மூலைகளில்கூட பரவி இருக்காங்க.. அவுங்களையே கட்டுரை எழுத வைக்கலாம். கொஞ்சம் சரித்திர நிகழ்வுகளில் ஆர்வம் இருந்து அந்தந்தப் பகுதிகளில் கொஞ்சம் 'துப்பறிந்து' எழுத நிறையப்பேர் இருக்காங்கன்னு உங்கள் மீதுள்ள அதீத நம்பிக்கையால் நான் வாக்குக் கொடுத்துட்டேன்.

நீங்கள் அனுப்பும் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 'உலகில் தமிழர்கள்' என்ற தலைப்பில் ( அல்லது இன்னும் பொருத்தமான வேறு தலைப்புகள் கிடைத்தாலும் சரி) ஒரு புத்தகமாக வெளிக்கொண்டு வரும் எண்ணம் வந்துருக்கு.


வெளிநாடுகளில் மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களுக்குப் போயிருக்கும் தமிழர்களைப் பற்றியும் நீங்கள் எழுதலாம். இப்பவே சொல்லிட்டேன் சண்டிகர் தமிழர்களைப்பற்றி நான் எழுதறேன். இவுங்க 1957 இல் இங்கே வந்தவுங்க.

கட்டுரைகளை உங்கள் பதிவில் வெளியிட்டு அதன் சுட்டியை இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். பின்னூட்டங்கள் மூலமா பலசமயங்களில் இன்னும் பலபுதிய தகவல்கள் கிடைக்கும் வாய்ப்புகளும் உண்டு. புத்தகத்தொகுப்பில் சேர்க்கும்போது நாம் பின்னூட்டம் மூலமாக அறிந்து கொண்டவைகளையும் சேர்த்து நம் கட்டுரைகளை கொஞ்சம் ரீரைட் செஞ்சுக்கலாம்.

நாளைக்கே அனுப்பணும் என்ற அவசரம் இல்லை. நமக்கு வரலாறு முக்கியம் அமைச்சரே! கொஞ்சம் இதைப்பற்றி ஆலோசிச்சு தரவுகள் தேடி எடுத்து, ஆங்காங்கே அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் மூத்தோரைக் கண்டுபிடிச்சுப் பேசி (அவுங்ககிட்டே கேட்டால் ஏகப்பட்ட விஷயங்கள் கிடைக்கும்)சேகரிச்சவைகளை சுவையான கட்டுரைகளா எழுதுங்க.

அடுத்த புத்தகத்திருவிழாவில் வெளியிடணும். ஆகஸ்டு மாசக்கடைசிவரை நேரம் இருக்கு. அதுக்கு அடுத்த மூணு மாதங்களில் மற்ற வேலைகளை முடிச்சு திருவிழாவுக்கு நம்ம புத்தகம் தயாராகிடும்.

என்ன சொல்றீங்க? உங்கள் கருத்துகளைத் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.

என்றும் அன்புடன்,

துளசி.


27 comments:

said...

நல்ல ஐடியாவே இருக்கே!

said...

நல்ல ஐடியா,

ஹைதையைப்பத்தி விஷயங்கள் தொகுத்து ட்ரை செய்யறேன்.

பாம்பேல நிறைய்ய இருக்காங்க. செம்பூர், மாடுங்கா, வசாயில் தமிழ்ச்சங்கமே இருக்கு. முடிஞ்சா வசாய் தமிழர்கள் பத்தியும் எழுதறேன். அம்ச்சி வசாய். :))

said...

சிறந்த பணி. சரியானப்படி அமைய இப்போதே வாழ்த்துவோம்.

said...

இந்தத் தமிழ்ச் சேவைக்குப் பதிவு ரத்னா விருது இப்பவே கொடுத்துடறேன் துளசி.
ஆவல்லோடு எல்லாப் பதிவுகளையும் படிக்க நானிருக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.:)

said...

தமிழகத்தில் இருந்த தமிழர்கள் என்ன ஆனார்கள் என்ற துப்பறியும் நாவல் அடுத்ததா? :-)

said...

நல்ல முயற்சி. வெற்றி பெறட்டும் இந்த முயற்சி...

said...

வாழ்த்துகக்ள்

said...

sooper teacher

said...

A good job.....
wishing you ALL THE BEST.

said...

வரலாறு முக்கியம் அமைச்சரே?

படித்தவுடன் சிரித்துவிட்டேன்.

நாந்தான் இப்படி ஒவ்வொன்னா தேவையில்லாத விசயங்கள் என்று ஒதுக்கப்பட்டத யோசிச்சுக்கிட்டேயிருந்தா நீங்க இப்ப ஒரு குழுவையே யோசிக்க வைக்கிறீங்களா?

ம்ம்ம்ம்.... நடக்கட்டும்.

நல்லது தானே?

1600 முதல் 1700 வரைக்கும் ஆங்கிலேயர்கள் காலத்தில் இயற்கையாக மற்றும் செயற்கையாக உருவான உருவாக்கப்பட்ட பஞ்சத்தில் இருந்து தான் புலம் பெயர்தல் நடக்கத் தொடங்கியது என்று வரலாற்று அமைச்சர் சொல்கிறார்.

பார்க்கலாம் எத்தனை பேர்கள் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்று.?

வல்லிசிம்ஹன் அதுக்குள் ஒரு விருதே கொடுத்துட்டாங்களே?

said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

said...

நல்ல முயற்சி டீச்சர் ;-)

said...

சிறப்பான முயற்சி...

வாழ்த்துகள் அம்மா...

said...

நல்லதொரு முயற்சி மேடம்.

நிச்சயம் சிறப்பாக நிறைவேறும். என் வாழ்த்துக்கள்!

said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

said...

Thulsi teacher,
nalla idea. appudiyae en veetukum adikadi vaanga.

said...

நல்ல முயற்சி துளசியக்கா..

said...

நல்ல முயற்சி.

வாழ்த்துக்கள்.

said...

மிகவும் நன்று வாழ்த்துக்கள்.

said...

மிக நல்ல யோசனை. சிறப்பாக நிறைவுற வாழ்த்துகிறேன்.

said...

முயற்சி வெற்றி பெற வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல.

வாழ்த்தியதோடு நின்னுடாதீங்க. இது ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்,

கூடவே வாங்க. அக்கம்பக்கம் பார்த்து சேதிகள் சேகரிச்சு நீங்களும் எழுதத் தொடங்குங்க.

அச்சாரம் போட்ட புதுகைத் தென்றலுக்கு அனைவரின் சார்பில் நன்றிகள் பல.

எதிர்பார்ப்பில் காத்திருக்கேன்.

said...

மிகவும் சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள்

said...

மிகவும் சிறப்பான முயற்சி. நானும்
கடந்த 50 வருடங்களாக வடமானிலங்களில் தான் வசித்து வருகிரேன்.

said...

http://kalachuvadu.com/issue-133/page47.asp
http://kalachuvadu.com/issue-132/page64.asp

பிஜி மற்றும் கம்போடியா குறித்த சில தகவல்கள் கொண்ட
இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் பகிர்கிறேன்.

said...

வாங்க மலைக்கோட்டை மன்னன்.

வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்களும் அக்கம்பக்கத்து நண்பர்களுக்குச் சொல்லி வைக்கணும்.

said...

வாங்க லக்ஷ்மி.
அம்பது வருசம் அனுபவம் ஏராளமா இருக்குமே.

நீங்களும் இதில் கலந்துக்குவீங்கதானே?

said...

வாங்க விருட்சம்.

சுட்டிகளுக்கு நன்றி.

ஃபிஜித்தீவு மறுபதிப்பு வரட்டும்:-)

கம்போடியாவை மனசில் வச்சுக்கறேன். புத்தகமாக வெளிவரும்பட்சத்தில் இந்தச் சுட்டி (ஒருவேளை) பயன்படலாம்.