Thursday, January 06, 2011

பதிவுலக அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும்.............

புத்தகம் வந்துருக்கு...ஆனால் வரலை.....????அச்சுவேலை முடிஞ்சுருச்சு. இன்னும் புத்தகத் திருவிழா ஸ்டாலுக்கு வரலை. அதான் இந்த முறை ரெண்டுவார விழாவாச்சே. வந்துரும்........வந்துரும். எங்கே போயிறப் போகுது?

சந்தியா பதிப்பகம் வெளியீடு.

'மூணு ப்ளேன் மாத்திப் போகணும்?' நான் சொல்லச்சொல்ல, பக்கத்துவீட்டுப் பொடிசுகளின் கண்களில் மகாவியப்பு. நானும் கொஞ்சம் அடக்கி வாசிக்கணுமேன்னு முகத்தைப் பாவமா வச்சுக்கிட்டு 'ஆமாம்'னு தலையாட்டினேன்.


முதல்வரியை இப்படித்தான் ஆரம்பிச்சு இருக்கேன். இதைப்பற்றி நான் சொல்றதைவிட நம்ம நண்பர் ப்ரான்ஸ் நாட்டு எழுத்தாளர் திரு. நாகரத்தினம் கிருஷ்ணா என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.


=======================================================

கியா ஓரா


முன்னுரையின் தலைப்பு கட்டுரையாளர் உபயம் நியுசிலாந்து மொழியொன்றின்படி வணக்கம் அல்லது நல்வரவு. கட்டுரைகளில் பலவகைகளுண்டு: மொழிசார்ந்த கட்டுரைகள், துறைசார்ந்த கட்டுரைகள், பயணக்கட்டுரைகள், வாழ்வியல் அனுபவங்கள், நீங்காத நினைவுகளென்று அவற்றை நமது சௌகரியத்திற்கொப்ப வகைமைபடுத்தலாம். முதலிரண்டையும் தவிர்த்து பிற கட்டுரைகள் பொதுவாக வெகுசனவாசகர்களை மனதிற்கொண்டது. இங்கே வெகுசனம் என்ற சொல்லாடலுக்கு சராசரிவாசகர்களின் தொகுப்பு என பொருள்கொள்ள வேண்டும். சராசரி என்பதே மேல்-கீழ், வலம்-இடம் இரண்டிற்குமான மையப்புள்ளிதான். ஆக அவசரமாய் கொறிப்பவர்களில் ஆரம்பித்து ஆழமாய் சிந்திக்கிறவர்கள்வரை இங்கே எல்லோரும் வாசகர்கள். கட்டுரையாளர் இதனை ஓரளவு புரிந்துகொண்டே எழுதியிருக்கிறார். துளசி கோபால் இந்திய நகரங்களில் தினசரி விமானம்பிடித்து அச்சத்தையும் சந்தோஷத்தையும் பிரித்தறியாமல் பயணித்து, கற்பனையில் வடித்திருந்த புதிய நாட்டின் நிஜ பிம்பத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கும் இலட்சோப இலட்ச திருமதி இந்தியாக்களில் ஒருவரல்ல. பிஜித் தீவில் குழந்தைக்கு நாப்கின் மாற்றவும், குஜராத்திகளுக்கு இட்டிலி சாம்பார் ரசம் என பிராக்டிகல் வகுப்பெடுக்கவும், கணவருக்கு சமைத்தநேரம்போகவும்... பெண்களுக்கு வேலைக்கா பஞ்சம்... ஆக அவ்வளவுக்கும் நேரம் ஒதுக்கியது போக சுற்றியிருந்த இயற்கையை, புயலை, கரும்பு தோட்டத்தை, சாலையை, மனிதர்களை, அவர்களின் பண்டிகைகளை, மரபுகளை, மூட நம்பிக்கைகளை, சாமர்த்தியங்களை நுணுக்கமாக அவதானித்து வந்திருக்கிறார், இருபது ஆண்டுகள் மனதில் சேமித்து வைத்திருந்து நமக்கு விநியோகித்திருக்கிறார். .



கட்டுரை தொகுப்பு மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. 1982ல் ஆரம்பித்து 1988ம் ஆண்டு பீஜித்தீவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் நியுசிலாந்துக்குத் திரும்புவது வரையிலான அனுபவங்களை முதற் பகுதி பேசுகிறது. இரண்டாவது பகுதியின் தலைப்பு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தொடருகிறது, கோவில் புராணம், தனிமையில் வாடும் இந்திய முதியோர்கள் - குறிப்பாக திராவிடியன் கல்ச்சர்(?) எழுதும் தோழியின் தந்தை( எழுத வேண்டியதுதான்), பீஜிக்களின் அதிகாரத்தின் கீழ் இந்தியர்கள் படும் அவதி என்று நீள்கிற இப்பகுதியில், தீவுக்கு வெள்ளைக்காரர்கள் வந்தவிதம், அதிகார அரசியலின் வளர்ச்சி சொல்லபட்டிருக்கிறது. மூன்றாவது பகுதி இருபது வருடம் கழித்து, வருகை தந்திருந்த குஜராத்தியர் திருமணத்தைப் பற்றிய விவரண பதிவுகள். பிஜித்தீவு குஜராத்தியரின்(?) திருமணத்தைக் குறித்து ஆவணப்படமொன்று தயாரிக்கலாம்.- அவ்வளவு தகவல்கள் கச்சிதமமாக திரைக்கதை அமைத்து சொல்லப்பட்டிருக்கிறது. .



நா(ன்)டி விமானதளத்திலிருந்தே பீஜித் தீவினைப்பற்றிய தகவல்கள் ஆரம்பித்துவிடுகின்றன அது இறுதியில் ராணுவப் புரட்சியில் ஆட்சி கைமாறுவது வரை அவரது பார்வைக்கு, செவிக்கு எட்டிய தகவல்களின் அடிப்படையில் இலகுவாக முன்நகர்த்துகிறார். தமிழர்கள் பீஜித்தீவுகளுக்கு வந்த வரலாறு, இந்து மாக்கடலில் பிறதீவுகளுக்கு காலனி அரசுகள் அவர்களை கொண்டுபோன நிகழ்வுக்கு சற்றும் பிசகியதல்ல என்று புரிந்துகொள்ள முடிகிறது. மொழியை மறந்து, இனத்தை மறந்து மந்த்ராஜிகளாக மாறிப்போன தமிழர்கள் உலகில் பிறநாடுகளிலுள்ள தமிழரினத்தைபோலவே 'ஆடிமாதத்தில் காப்பு கட்டி மாரியம்மனுக்கு நேர்ந்துகிட்டு தீமிதிக்கிறார்கள்' ஊரிலிருந்து முருகனுக்கும், அம்மனுக்குக் சிலைகளும் பிறவும் கொண்டுவருகிறார்கள். தமிழைக் கொண்டுவந்து என்ன ஆகப்போகிறதென நினைத்திருக்க வேண்டும். மாறாக இந்திமொழியை தமிழர்கள் பட்டுமல்ல, தேவை சார்ந்து பூர்விக பீஜிமக்களும் பேசுகிறார்கள். இந்தியர்கள், பூர்வீக பீஜிமக்களென்று இடம்பெறும் நூலில் பண்டிகைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், உணவுமுறைகள், மனிதர்ளின் சமூக அடையாளங்கள் என எல்லாம் வருகின்றன. புயலில் சிக்கித் திணறும் பீஜி தினசரிகூட விறுவிறுப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது.



கட்டுரையாளர் வாசகர்களுடன் நேரடியாக உரையாடுவதுபோல சரளமாக சொல்லப்பட்டிருப்பதால் சோர்வின்றி வாசிக்க முடிகிறது. சில தகவல்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. தகவலை வாசகர்களுக்கு அழுத்தமாய் சொல்லவேண்டுமெனக் கருதி ஆசிரியர் கொடுத்திருக்கலாம் ஆசிரியரிடம் மெலிதான நகைச்சுவை இயல்பாக குறுக்கிடுகிறது. உ.ம்.:


"அழகாச் சின்னதா ஒரு சர்ச். பூஜை தினமும் நடக்குதான்னு தெரியாது. ஆனா கல்யாணத்துக்குன்னே கட்டி விட்டுருக்கு. ஹாலிடேயில் வந்தமா, கல்யாணம் செஞ்சுக்கிட்டு அப்படியே ஹனிமூனையும் முடிச்சுக்கிட்டுப் போகலாமான்னு நல்ல வசதி. ஒரு கோர்ட்டும் இருந்துட்டா வாழ்க்கை இன்னும் நிம்மதியா இருக்கும்"


"முழுசா வெஜிட்டேரியன் சாப்பாடு. அப்பாடா.. இன்னிக்கு மீனுக்கு லீவு. "

வாசகர்கள் கையிலெடுத்தால் முடிக்காமல் கீழே பிரதியை வைக்கமாட்டார்கள் என்பது உறுதி. பாராட்டுக்கள்.



Strasbourg

14-11-2010 நாகரத்தினம் கிருஷ்ணா

===================================

உங்கள் அன்பும் ஆதரவும் வழக்கம்போல் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில்.... இப்படி ஒரு முடிவு:-))))

என்றும் அன்புடன்,
துளசி





77 comments:

said...

நிச்சயம் வாங்குவேன் மேடம்.

said...

வாழ்த்துகள் ரீச்சர்!!

said...

அருமை அருமை..
வாழ்த்துக்கள். :)
சீக்கிரமே விழாவில் கலந்துகொள்ளட்டும் புத்தகம்.

said...

கோபி மட்டும்தான் வாங்குவாரா?????? நாங்களும் வாங்குவம்ல.........

said...

Great news! Congratulations!



HAPPY NEW YEAR !!

said...

வாழ்த்துக்கள் டீச்சர்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

said...

வாழ்த்துகள் மேடம். வாங்கிடுவோம்.

said...

வாழ்த்துகள் அம்மா! புத்தகக் கண்காட்சிக்கு இன்னும் வரலைன்னீங்களே. எப்போ வரும்? எந்த ஸ்டால்?

அப்படியே இனிய புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவிச்சுக்கறேன்!

said...

வாழ்த்துக்கள் துளசியக்கா..

said...

வாழ்த்துகள் அம்மா

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள் மேடம்.

’அக்கா’ எப்போ ரிலீஸ்:)?

said...

வாழ்த்துகள் துளசி மேடம்.

said...

வாழ்த்துகள் துளசியம்மா..

said...

வாழ்த்துகள் மேடம்.

said...

வாழ்த்துக்கள்.

புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வது மேலும் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

said...

பூங்கொத்து மேம்!

said...

வாழ்த்துக்கள். அட்டை மிகவும் வசீகரம்.

சென்னைக்கு வெளியே வசிக்கும் எங்களுக்கு ஆன் லைன் வாங்க வசதி இருக்கம் என்று நம்புகிறேன்.

said...

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துகள். எதிர்பார்ப்புகளை கூட்டிய பகிர்வு.

ஆன்லைனில் வாங்கக் கூடிய வசதி வந்த பிறகு தெரியப்படுத்துங்கள்.

பகிர்வுக்கு நன்றி.

said...

வாழ்த்துகள் டீச்சர்

said...

வாழ்த்துக்கள் டீச்சர்:))))

said...

வாழ்த்துக்கள் டீச்சர்!!

said...

வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் டீச்சர்! :)

said...

வாழ்த்துகள் டீச்சர்.

said...

வாழ்த்துகள் டீச்சர்.

said...

கலக்குங்க டீச்சர் வாழ்த்துக்கள்..

said...

வாழ்த்துக்கள் மேடம்.

said...

நல்வாழ்த்துகள், நூல் அறிமுகமும் சிறப்பாகவே வந்திருக்கிறது.

said...

அட்டைப்படம் கல(ர்)க்கல்

said...

நூல் அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள்!

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

நீங்க்தான் போணி!

நிச்சயமுன்னு சொன்னதுக்கே ஒரு ஸ்பெஷல் நன்றிங்க.

said...

வாங்க கொத்ஸ்.

அச்சச்சோ....Cக்ளாஸ் லீடர் இப்படி ரெண்டாவதா வந்தா எப்படி?????

தமிழில் பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னு நினைக்கிறேன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கயலு.

இந்த முறை ரெண்டு வாரத் திருவிழா.
கலந்துதான் ஆகணும்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க வழிப்போக்கன் - யோகேஷ்.

2 டௌன் அண்ட் 998 டு கோ!!!

நன்றி.

said...

வாங்க சித்ரா.

நன்றிப்பா.

said...

வாங்க ஸ்ரீராம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க வித்யா.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

மூணாவது வித்துருமுன்னு பதிப்பகத்துக்குச் சொல்லிடணும்:-))))

said...

வாங்க கவிநயா.

புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி.உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

புத்தகக்கண்காட்சி ஸ்டால் எண் 64. சந்தியா பதிப்பகம்.
எனி டைம் வந்துருமாம். பைண்டிங்தான் தாமதத்துக்குக் காரணம்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க சாந்தி.


வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க புதுகைத் தென்றல்

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க தருமி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க தமிழ் உதயம்.

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

said...

வாங்க மின்மினி R S

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க செ.சரவணக்குமார்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

வாழ்த்துகளுக்கு நன்றியோ நன்றி.

said...

வாங்க அன்புடன் அருணா.

நீங்கள் அன்புடன் அளித்த பூங்கொத்துக்கு டாங்கீஸ்ப்பா.

said...

வாங்க வெற்றிமகள்.

அட்டை நெஜமாவே நல்லா வந்துருக்கு. எதுக்கெடுத்தாலும் சுமாரா இருக்குன்னு சொல்லும் என் மகள்கூட ரொம்ப நல்லா இருக்குன்னும் பிடிச்சிருக்குன்னும் சொல்லிட்டாள்!!!!

சந்தியாவில் ஆன்லைன் சேவை இல்லை. ஆனால் பணம் அனுப்பினால் அவுங்க அனுப்பித் தருவாங்க. மேலும் இப்பெல்லாம் சென்னை விழா முடிஞ்சதும் வெவ்வேறு ஊர்களிலும் (மதுரை, ஈரோடுன்னு ) புத்தகக்கண்காட்சி நடத்தறாங்களேப்பா. அங்கே கிடைக்கும்.

இல்லைன்னா...தி.நகர் நியூ புக் லேண்ட்ஸ் லே கிடைக்கும். அவுங்களும் தபாலில் அனுப்பி வைக்கிறாங்க.

said...

வாங்க மஹேஸ்வரன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் விழாக்காலத்திற்கான எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க வெங்கட் நாஜராஜ்.

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

ஆன்லைனில் கிடைக்கும் என்றால் கட்டாயம் தெரிவிக்கிறேன்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க சுமதி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க பொற்கொடி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க வடுவூர் குமார்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க வருண்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க பாலராஜன்கீதா.

நலமா?

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ச்சின்னப்பையன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஜாக்கி சேகர்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

கலக்குனது தெளியும் என்ற நம்பிக்கை இருக்கு:-)))

said...

வாங்க உலகநாதன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கோவியாரே.

அறிமுகம் செய்தவர் உலகறிந்தவர். ச்சும்மாச் சொல்லி இருக்கமாட்டாருன்னு நான் நம்பறேன்:-)))))

அனுப்பித் தந்த புகைப்படங்களை வச்சு அட்டகாசமா வடிவமைச்சவருக்குத்தான் பாராட்டுகள்.

said...

வாங்க குலோ.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

நூல்அறிமுகம் அருமை.
வாழ்த்துக்கள்.

said...

வாவ்! வாழ்த்துக்கள்! :)

said...

வாங்க மாதேவி.

அறிமுகம்(மட்டுமே) அருமையா அமைஞ்சுபோச்சு:-))))

said...

வாங்க தெகா.

நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சே! வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாழ்த்துக்கள்.. வெளியீட்டு விவரம் எழுதுங்கள்.

said...

வாங்க அப்பாதுரை.

தனியாக வெளியீடுன்னு ஒன்னும் கிடையாது. புத்தகத் திருவிழாவில் சந்தியா பதிப்பகத்தின் மூலம் வரும் புதிய புத்தகங்களில் இதுவும் ஒன்னு.

said...

வாழ்த்துகள் டீச்சர்..!

said...

வாங்க உண்மைத்தமிழன் .

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

ippathan intha idugaiyai paarkiren :(

said...

வாங்க எல் கே.

அதனால் என்ன? அதான் இப்பப் பார்த்துட்டீங்கல்லே!

said...

நண்பர்களுக்கு,

புத்தகம் இன்று சந்தியா பதிப்பகம் ஸ்டாலில் வந்துவிட்டது என்று சொன்னார்கள் பதிப்பகத்தினர்.

said...

விரைவில் செல்லுவேன். இதை வாங்குறத விட எனக்கு வேறென்ன வேலை?

இங்குள்ள இணையத்தொடர்பு ரொம்பவே படுத்தி எடுக்குது. இதுக்குள்ள வர்றதுக்கு நாலு முறை முயற்சி செய்து உள்ளே வந்தேன்.

said...

வாங்க ஜோதிஜி.

//இதை வாங்குறத விட எனக்கு வேறென்ன வேலை?//

ஆஹா..... இவ்வளோ 'தீவிர ' வாசகரா இருக்கணுமா:-))))))))))