ஜல்ஜல் ஜலக்கு ஜல் ஜல்.......தங்கச் சரிகைச்சேலை...... சேலெ....ஏஏஏஏஏஏஏ.......சினிமாத் தெருக்கூத்தைப் பார்த்துருக்கேன். அம்மன் கோவில் தீமிதித் திர்விளா(?)க்கு விரதம் இருக்கறவங்களும் வந்த சனமும் ராத்திரி முச்சூடும் தூங்காம இருக்கக் கூத்து கட்டறதையும் பார்த்திருக்கேன். இது இல்லாம ரெண்டு வர்சம் முந்தி 'திவாலி'க்கு நியூஸியில் நடந்த தெர்க்கூத்தும் ஓக்கே. ஆனா..... நெசத் தெருக்கூத்து எப்பத்தான் கிடைக்குமுன்னு இருந்தேனா......
ஸ்ட்ரீட் ப்ளே( தெருக்கூத்து) நடக்கபோகுது, எல்லாரும் ஓடியாங்கன்னு ரெண்டு நாளா தினசரியில் கூவிக்கினு இர்ந்தாங்க......
இண்டியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் (இதுவரைக்கும் சரி). இதோட கூட்டு யாருன்னா..... ஸ்ரீ அரியக்குடி ம்யூஸிக் ஃபவுண்டேஷன். ஆஹா.....
கோபால்தான் சொல்லிக்கிட்டே இருப்பார், இந்த தமிழ்க் கலாச்சார நடனங்களையெல்லாம் ம்யூஸிக் அகாடெமியிலும், நாரத கான சபாவிலும் வச்சால் என்னன்னு? எப்பவும் இல்லைன்னாலும் இசை நடன நாடக விழா சமயத்திலாவது வைக்கணுமாம். காலம் போகப்போக மாற்றங்கள் வரலாமுன்னு சொல்லிவச்சேன்.
கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரைன்னு நையாண்டி மேளத்தோடு ரசிக்கணுமாம். மருதை.... அப்படித்தான் பேசும். முந்தி ஒரு காலத்துலே மவுண்ட் ரோடு (அப்ப இப்படித்தான் பெயர்) சஃபயர் தியேட்டரில் ஏன் தமிழ்ப் படம் காமிக்கலைன்னு கலகம் ஆரம்பிச்சு, கன்னித்தாய்(ன்னு நினைக்கிறேன்) படம் போட்டு, தியேட்டர் எல்லாம் வெத்தலை பாக்குத் துப்பிக் கலீஜாப்போச்சுன்னு ஒரு சேதி இருந்துச்சு.
இசைவிழா முடிஞ்சதும் சென்னைப் பூங்காக்களில் தமிழக நாட்டுப்புறக் கலைகள் விழா நடக்குது(அதான் நம்ம கனிமொழி பொறுப்பேத்து நடந்தறாங்களேங்க. அதுக்கு என்ன பேரு? மனசுலே இருக்கு. சட்னு எழுதும்போது நினைவுக்கு வரலை பாருங்க) இது முற்றிலும் இலவசம். யார் வேணுமுன்னாலும் போய் ரசிக்கலாம். சபாக்களில் வச்சா டிக்கெட் அது இதுன்னு கறந்துருவாங்களேன்னு என்னவோ சமாதானமாச் சொல்லி வச்சேன். சபாக்களில் அப்படியே வச்சாலும் எவ்வளவு ஆதரவு இருக்குமுன்னு தெரியலையே.....
கவலையே படவேணாம். மக்களுக்கு எல்லாமே பிடிக்குதுன்னு சொல்றாப்போல ஆர். கே. ஸ்வாமி ஆடிட்டோரியம், மயிலையில் கூத்துக்கு ஏற்பாடே ஆகிப்போச்சு. கூத்துப் பட்டறை முத்துசாமி ஐயா ( 32 வருசமாச்சு இவர் கூத்துப்பட்டறை ஆரம்பிச்சு. இவர் யாருன்னு அப்புறமா அவர்கிட்டேயே பெயர் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்) ஒரு சின்ன அறிமுகம் கொடுத்தார். ஆர்சுதிப்பட்டு ஆளுங்க, எங்கூருக்கு வந்து பாருங்கன்னு சொன்னதும் போய்ப் பார்த்தாராம். பிரகலாத சரித்திரம். 'எல்லாம் ரெவ்வெண்டு. நரசிம்மத்தைத் தவிர'ன்னார். அது சாமியாச்சே. அதனால் 'ஒன்னே ஒன்னு'. (அட! சிம்பிளாச் சொல்லிட்டாரு பாருங்க)
அசுரகுல குரு சுக்ராச்சாரியர் புள்ளையாருடன் கைகோர்த்துப் பாடுனார்.
ம்யூசிக் பார்ட்டி
திரை விலகுனதும் புள்ளையார் வந்தார். தீப ஆராதனை ஆச்சு. கட்டியங்காரன் கதை சொல்ல ஆரம்பிக்க, பின்பாட்டு முன்பாட்டு, ஸ்டேண்ட் வச்ச ஹார்மோனியம், மிருதங்கம், ஜால்ரான்னு கூத்து, களை கட்ட ஆரம்பிச்சது. இரண்யன்(கள்) வந்து பெஞ்சுக்கு மேலே போட்டுருந்த சிம்மாசனத்தில் தாவி ஏறி 'ஜங்'ன்னு இடியோசையுடன் உக்கார்ந்தாங்க. ஒவ்வொருமுறை எழுந்தோ, இல்லை குதிச்சோ உக்காரும்போதும் மறக்காமல் பாதங்களை ஒரு தட்டுத் தட்டி 'ஜல் ஜங்!
ஹிரண்யன்ஸ்
ப்ரகலாத் ஜோடி 1
பிரகலாதன்(கள்) வந்தாங்க அரசவைக்கு. (இனி எல்லாத்துக்கும் 'கள்'' போட்டுக்குங்க நீங்களே) ஹிரண்யாய நமோ என்று சொல்லச் சொன்னால் கொஞ்சம்கூட அசராமல் கடைசிவரை நாராயணாய நமோ சொல்லி அடிச்சு ஆடுனாங்க. குலகுரு கெஞ்சிப் பார்த்தும் மசியலை. குச்சியை வச்சு விளாசுறார்.(இவர் நடிப்பு அட்டகாசம்.) அரசனும் என்னென்னவோ 'கொடுமைகள்' செஞ்சும் ஒன்னுமே ஆகலை. ஹிரண்யனின் மனைவி வந்து மகனைக் கெஞ்சுகிறார், மிஞ்ச முடியலை. வாயில் தீயோடு காளி வந்து வீராவேசமா ஆடி, பெற்றோர்கள் பெயர் சொல்வதுதான் பிள்ளைகள் கடமைன்னாலும்....ஊஹூம்....
மனைவீஸ் ஆஃப் ஹிரண்யன்ஸ்
நாலு உபாயங்களும் பயன்படுத்தியாச்சு. 'இந்த நாராயணந்தான் நமது பரம விரோதி. என் அண்ணந்தம்பிகளைக் கொன்னுட்டு எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டான். அறுபதினாயிரம் ஆட்களை அனுப்பித் தேடவிட்டும் கிடைக்கலை. இப்போ, மகனே பிரகலாதா.....நீ நைஸா அவனை இங்கே கொண்டுவந்துட்டே'ன்னு பாராட்டுனது ஜோர்!
காளி
கதையில் ஒன்றிப்போனால் குழந்தைப் பிரகலாதன் 'இங்கே' இளைஞனா இருப்பதை மறந்துறலாம்:-) கடைசியில் தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த நாராயணன் மேடையிலும் வந்தார். நரசிம்மம் ஆவேசமாக வந்து நிற்கமுடியாமல் துள்ளுது. சாமி வேசம் கட்டுனா, .ஆ'வேசம்' வந்துருமாம். பக்கத்து இருக்கை ஆர்சுதிப்பட்டுக்காரர் சொன்னார். காளியே ஒரு மார்க்கமா நின்னு ஆடுனதும் இதனால்தானோ!!!! ரெண்டு ஆட்கள் அமுக்கிப் பிடிசாலும் சிம்மம் அடங்கலை. இன்னும் ரெண்டு ஆட்கள் குடலை(?) முறுக்கிப் பிடிச்சுக்கிட்டு நின்னாங்க. வதம் முடிஞ்சது. நரசிம்மத்தினை அனைவரும் வணங்கி ஆசி பெற்றாங்க. கற்பூராதனை நடந்துச்சு. பார்வையாளரில் பலரும் மேடைக்குப்போய் நரசிம்மத்தைக் கும்பிட்டுக்கிட்டாங்க. கொஞ்ச நேரம் ஆக ஆக சாமி மலை ஏறுச்சு.
அமுக்கிப்பிடி....ஆவேசம் அதிகமாகுது.....
எல்லாம் ரெவ்வெண்டா இருப்பதால் ஒருத்தர் மாற்றி மற்றொருத்தர்ன்னு பாடி ஆடிக் கதையை நகர்த்திக்கிட்டுப் போறாங்க. தொய்வில்லாம பாட்டுகள் வந்துக்கிட்டே இருக்கு. கூத்துக் கட்டுன எல்லோருக்குமே பாடாந்தரம் ஒன்னுபோல நினைவில் இருக்கு என்பதுதான் ஆச்சரியமா இருக்கு. அவுங்க பகுதி முடிஞ்சதும் உள்ளே போயிறாமல் ம்யூசிக் பார்ட்டிக்குப் பக்கம் நின்னு கூடவே பின்பாட்டுகள் பாடறாங்க நடிகர்கள் இதுலே 'ஆலாபனை' வேற! எல்லாரும். யார் வேணுமுன்னாலும் எந்தப் பகுதியை வேணுமுன்னாலும் செஞ்சுக்கலாம் என்ற அமைப்பு! நடுவிலே பிரகலாதனா இன்னொருத்தர் வந்து இடம் மாத்துனதை யாரும் பொருட்படுத்திக்கலை! எல்லாமே தமிழ்ப் பாட்டுகள். இலக்கண வரைமுறைக்குட்பட்ட சங்கீதமுன்னு முழுக்கச் சொல்ல முடியாட்டாலும் தாளம்போடவே வைக்குது. (பாடறியேன்....படிப்பறியேன்.....)
பிரகலாதன் ஜோடி 2
கோயில் திருவிழாச் சமயங்களில் பத்து நாள் நடக்கும் கூத்துக்களாம். இப்போ மூணு நாளாச் சுருங்கிப்போயிருச்சுன்னு வருத்தப்பட்ட இயக்குனர், இப்போ நமக்காக ரெண்டே மணி நேரத்துலே 'எல்லாத்தையும்' சொல்லி ஆடுவதில் உள்ள சிரமத்தைச் சொன்னார். நியாயம்தான்!
கூத்து இயக்குனர்
ஆடை ஆபரணங்கள் எல்லாம், தேவைக்கும் சௌகரியத்துக்கும் தகுந்தபடி. போட்டுருக்கும் பேண்ட்ஸ் மேலே ஜிலுஜிலுத்துணியைச் சுத்துனாலும் ஆச்சு! நரசிம்மத்தின் முகமூடி ஏகப்பட்ட கனமா இருக்குமோன்னு ஒரு எண்ணம். சரிவரத் தலையில் பொருத்திக்க முடியாம இருக்கு.
வதம் முடிஞ்சது
கனம் குறைஞ்சதா லேசான பேப்பர்மேஷேயில் செஞ்ச முகமூடிகள், தோளாபரணங்கள், க்ரீடங்கள் இருந்தால் வேசங்கட்டும் மக்களுக்குக் கஷ்டமில்லாம இருக்கும். இப்பத்தான் எத்தனையோ புது டெக்னிக் எல்லாம் வந்துருக்கே. (கோபாலின் ஐடியா) இதுக்குக் கூடுதலா ஆகும் செலவுகளைச் சமாளிக்கக் கலை மேம்பாட்டுத்துறை உதவலாம். மேடையில் இப்படி அப்படின்னு உதவ உலவும் மக்களுக்கும் ஒரு ஜிலு ஜிலு உடையைப் போட்டுவிட்டால் கண்ணை உறுத்தாம இருக்கும். இதையெல்லாம் கிராமங்களில் பொருட்படுத்தமாட்டாங்கன்னு சொன்னாலும்.............. ஸீனோட ஒன்றிப்போவது மக்களுக்குச் சுலபமா இருக்கேன்னுதான்.....
ஆங்............முக்கியமா, வெள்ளைக்குடலை எடுத்துட்டு ஒரு சிவப்புக் குடலை வைக்கலாம்:-))))
ICCR ரீஜனல் டைரக்டர் & கூத்துப்பட்டறை என்.முத்துசாமி
கூத்துக் கட்டுன ஆர்சுதிப்பட்டுக் கலைஞர்களுக்கும், நகரமக்களுக்காக இதை இங்கே ஏற்பாடு செஞ்ச ICCR Chennai இலாக்காவினருக்கும், கூத்துப்பட்டறை என்.முத்துசாமி ஐயா அவர்களுக்கும் நம் தமிழ்மண வாசகர் சார்பில் நம் ந்ன்றிகளை இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.
Friday, November 27, 2009
ரெவ்வெண்டா வந்து இப்படிக் கூத்தடிச்சா?
Posted by துளசி கோபால் at 11/27/2009 04:57:00 PM
Labels: அனுபவம் தெருக்கூத்து, கூத்துப்பட்டறை
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
சென்னை போனாலும் போனீங்க நல்லா கூத்து ட்ராமான்னு எஞ்சாய் பண்றீங்க. சபால இதுமாதிரி கூத்து வைக்க என்னைக்கு ஒத்துக்கிட்டு இருக்காங்க. ஒருவேளை சீக்கிரமே அது நடக்கலாம்.
அத்தனைப் பாட்டுகளையும் மனப்பாடம் செய்து மேடைல பாடறதுக்கே கைதட்டலாம்.
ப்ரஹ்லாதன் சின்ன வயசுப் பிள்ளயப் போட்டா மனப்பாடம் செய்ய முடியாதுன்னு வளர்ந்த பையனைப் போட்டுட்டாங்க போலிருக்கு.
மெலட்டூர் பாகவத மேளாவில தான் ஆவேசம் வரும்னு கேள்விப் பட்டு இருக்கேன்.
நரசிம்ஹன் வேஷம் போட்டாக்கூட கோபம் வந்திருமோ:)
சிவஸ்வாமி கலாலயா நம்ம பொண்ணு படிச்ச ஸ்கூலு.
வாங்க சின்ன அம்மிணி.
பொழைப்பே கூத்தாப் போயிருச்சுப்பா:-))))
வாங்க வல்லி.
நாடகத்துக்கு 'அண்டர் ஸ்டடி'ன்னு இருப்பாங்க. இங்கே எல்லாருமே அண்டர் ஸ்டடி என்பதுதான் வியப்பு.
நரசிம்மனுக்குக் கோபம் ஸ்பெஷாலிட்டி இல்லையா?
பொண்ணோட ஸ்கூலா? பேஷ் பேஷ்.
// துளசி கோபால் said...
வாங்க சின்ன அம்மிணி.
பொழைப்பே கூத்தாப் போயிருச்சுப்பா:-))))//
:)))) yes teacher
தூர்தர்ஷனில் கீசக வதம் பாத்திருக்கேன்.
புகைப்படங்களும், விவரிச்சிருக்கற விதமும் அருமையா இருக்கு.
//கூத்துக் கட்டுன ஆர்சுதிப்பட்டுக் கலைஞர்களுக்கும், நகரமக்களுக்காக இதை இங்கே ஏற்பாடு செஞ்ச ICCR Chennai இலாக்காவினருக்கும், கூத்துப்பட்டறை என்.முத்துசாமி ஐயா அவர்களுக்கும் நம் தமிழ்மண வாசகர் சார்பில் நம் ந்ன்றிகளை இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்//
எங்களையும் வாழ்த்துல சேத்துக்கிட்டதுக்கு நன்னி.
கூத்தும், நீங்க விவரிச்சிருக்கும் விதமும் அருமை அம்மா.
//கூத்துக் கட்டுன ஆர்சுதிப்பட்டுக் கலைஞர்களுக்கும், நகரமக்களுக்காக இதை இங்கே ஏற்பாடு செஞ்ச ICCR Chennai இலாக்காவினருக்கும், கூத்துப்பட்டறை என்.முத்துசாமி ஐயா அவர்களுக்கும் நம் தமிழ்மண வாசகர் சார்பில் நம் ந்ன்றிகளை இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.//
கூத்து பார்க்கக் கூட்டிப் போனதுக்கு உங்களுக்கும் நன்றி :)
superuuu..
வாங்க மிஸஸ். தேவ்.
அரிதாரம் மட்டும்தான் பூசிக்கலை!
வாங்க புதுகைத் தென்றல்.
சென்னையில் கிடைக்கும் சுகங்களில் இப்படியெல்லாம்கூட இருக்கு. அதான் ....நான் பெற்ற இன்பம்.....உங்க எல்லாருக்கும்:-)
வாங்க கவிநயா.
நீங்கன்னா....கவிதையா நாலே வரி எழுதி இருந்துருப்பீங்க!
கூடவருவதற்கு நன்றிப்பா.
வாங்க கலகலப்ரியா.
நன்றிப்பா.
டீச்சர்! பிரகலாதன்ஸ் அப்படின்னா றன் பிரதர்ஸ்ஸா:-)))
நம்ம தஞ்சை ப்பக்கம் வாங்க. ஆடி மாசம் வாக்கிலே. நிறைய தெரு கூத்தும், ஆடிகூழுக்கும் பஞ்சமே இருக்காது. என்ன ஒன்னு கெஸ்ட்டா வர்ரவங்க பூ மிதிக்கனுமாம்:-))
வாங்க அபி அப்பா.
பிகலாதன் x 2 ன்னு இருக்கணுமோ:-))))
என்னது 'பூ' மிதிக்கணுமா?
இந்த ஆட்டத்துக்கு நான் வரலை!
ஹோஸ்ட் தான் மிதிக்கணுமுன்னு புதுசா நிபந்தனையை மாத்திட்டாங்களாம்:-))))
oops......
'ர' விட்டுப்போச்சு!
பிகலாதன் = பிரகலாதன்.
சின்ன வயசில் மதுரையில் சித்ரா பௌர்ணமி திருவிழால நையாண்டி மேளம், கரகாட்டம்,கூத்து பாத்திருக்கேன். ராமநாதபுர பார்ட்டி வந்து PERFORM பண்ணுவாங்க . நையாண்டி மேளம் தான் என் FAVOURITE. சினிமா கலப்படம் இல்லாம இன்னும் அந்த கலையை வளர்க்கறதுக்கே அவாளை பாராட்டணும். நல்ல வேளை சினிமா ஃபேமஸ் பாட்டியம்மா வந்து பாடலை:))வில்லுப்பாட்டு?கிடையாதா?
கனிமொழி நடத்துவது சென்னை சங்கமம்
வாங்க ஜெயஸ்ரீ.
சினிமாப் பாட்டி, பாட்டுலே ரொம்ப 'பிஸி':-)))அதுவுமில்லாம டிவி சமையல்வேற செய்ய்றாங்க:-)
வில்லுப்பாட்டு அநேகமா தை மாசம் கிடைச்சாலும் கிடைக்கும்.
ஹ்ர்ம், ப்ர்ம்ன்னு உ(ரு)றுமி மேளம் பிடிக்காதா?
வாங்க வித்யா.
ஆஹா.... சங்கமம்!!!
எடுத்துக்கொடுத்ததுக்கு நன்றிப்பா.
படங்களும் பகிர்வும் மிக அருமை மேடம்.
நல்ல பகிர்வு
சுட்டி கொடுத்தமைக்கு நன்றிங்க
வாங்க ராமலக்ஷ்மி.
கூத்து பார்க்க வந்ததுக்கு நன்றிப்பா:-))))
வாங்க கதிர்.
உங்களுக்குத்தான் நன்றி சொல்லனும். பதிவுக்கு மறுவாழ்வு:-))))
Post a Comment